வ – முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்கணை 1
வகிர்ந்த 1
வகுத்து 2
வகுந்து 1
வகுப்பும் 1
வகை 9
வகை-தனிலே 1
வகைக்கு 2
வகையில் 1
வங்க 1
வங்கமே 2
வசம் 1
வஞ்சகமும் 1
வஞ்சி 2
வட்டத்தில் 1
வட்டமாம் 1
வட்டமும் 1
வட்டவட்டங்களாய் 1
வட்டில் 1
வட்டிலுக்குள் 1
வட 2
வடக்கு 2
வடக்கே 1
வடகரை 4
வடம் 2
வடம்பூட்டி 1
வடமலேந்த்ரன் 1
வடமலேந்திரன் 2
வடமலையப்பர் 1
வடிக்கும் 1
வடிவத்து 1
வடிவழக 4
வடிவழகர் 4
வடு 1
வடுப்படா 1
வடுப்படுமோ 1
வண்டலிட்டு 1
வண்ண 1
வண்ணம் 1
வண்ணனார் 1
வணங்கி 1
வதைக்கும் 1
வந்த 6
வந்தார் 1
வந்தால் 5
வந்தாலும் 1
வந்தாள் 1
வந்தாளே 1
வந்தான் 2
வந்தானே 2
வந்தித்து 1
வந்து 5
வந்துதீரும் 1
வந்துற்றாளே 1
வந்தேன் 2
வந்தேனோ 3
வம்பி 1
வம்புச்சண்டையை 1
வயல் 7
வயலில் 5
வயலிலே 1
வயலும் 1
வயலுள்ளே 3
வயலுளே 1
வயலுற்று 2
வயித்தி 1
வயிற்று 2
வயிறு 1
வயிறும் 1
வர்க்கத்தில் 1
வர்க்கமுடன் 1
வர 4
வரத்தினை 1
வரத்தும் 1
வரம் 1
வரம்பில் 1
வரல் 1
வரவர 1
வராமல் 1
வரால் 1
வராலும் 1
வரி 1
வரிசை 1
வரினும் 2
வரு 2
வருகையில் 1
வரும் 5
வருவது 2
வருவாள் 1
வருவான் 1
வருவேன் 1
வரை 2
வரைக்கும் 1
வரையில் 1
வரையின் 1
வல் 1
வல்ல 1
வல்லாய் 1
வல்லார் 1
வல்லாளன் 1
வல்லி 1
வலம்கொண்டே 1
வலம்செய்யார்-தம் 1
வலி 2
வலித்து 1
வலிய 1
வலுச்சலுகை 1
வழக்கிட்டு 3
வழக்கு 1
வழங்குமாறும் 1
வழி 2
வழியே 1
வழுத்தி 1
வழுதடி 1
வள்ளலாய் 1
வளத்துடன் 1
வளநாட்டு 1
வளநாடும் 1
வளம் 10
வளமை 3
வளமையை 1
வளர் 1
வளர்க்க 1
வளர்க்கும் 1
வளர்ந்த 1
வளை 2
வளைக்கை 1
வளைத்து 1
வளைமேழி 1
வளைவான் 1
வற்றா 1
வன்பால் 1
வன்மத்தை 1
வன்னியடித்திட்டும் 1
வனத்தில் 1
வனத்தை 1

வக்கணை (1)

வக்கணை ஏன் மருதூர் – முக்-பள்ளு:62/3

மேல்

வகிர்ந்த (1)

நெற்றியில் இடும் மஞ்சணை பொட்டும் மற்றொரு திருநாம பொட்டும் நெகிழ்ந்த கரும் கொண்டையும் ரெண்டாய் வகிர்ந்த வகுப்பும் – முக்-பள்ளு:6/1

மேல்

வகுத்து (2)

பத்தாக பெயர்தரும் உயர்தரும் பத்தாளில் பருதியர் சுருதியர் பட்டோலைக்கு எழுதரு முழுது உணர் பா வகுத்து உரைத்தோர் – முக்-பள்ளு:4/3
பந்திப்படுத்தி நிரையை வகுத்து பரவை ஒலி போல் குரவை எழுப்பி பயிர் நெருங்காமல் கலந்து போகாமல் பதியும் பள்ளீரே – முக்-பள்ளு:125/4

மேல்

வகுந்து (1)

உகுந்த தண்டலை நீக்கியே புனல் வகுந்து தண்டு அலை தாக்கியே உப்பளத்தாரை ஓட்டியும் புனல் அ பளத்தாரை ஈட்டியும் – முக்-பள்ளு:48/3

மேல்

வகுப்பும் (1)

நெற்றியில் இடும் மஞ்சணை பொட்டும் மற்றொரு திருநாம பொட்டும் நெகிழ்ந்த கரும் கொண்டையும் ரெண்டாய் வகிர்ந்த வகுப்பும்
பற்றிய கரும்பொன் காப்பும் கையில் வெற்றிலையும் வாயில் ஒதுக்கிய பாக்கும் ஒரு சுருளுக்கு ஒருக்கால் நீக்கும் இதழும் – முக்-பள்ளு:6/1,2

மேல்

வகை (9)

வித்து வகை மாட்டு வகை மேழி ஏர்க்கால் முதலாய் – முக்-பள்ளு:66/2
வித்து வகை மாட்டு வகை மேழி ஏர்க்கால் முதலாய் – முக்-பள்ளு:66/2
கொத்து வகை அத்தனையும் கூட்டி வரத்தும் செலவும் – முக்-பள்ளு:66/3
வாய்த்த விதை வர்க்கமுடன் மாட்டு வகை சொன்னானே – முக்-பள்ளு:107/4
வயல் உழும் குத்தி ஒன்று வளைமேழி ஒன்று இந்த வகை ஏழும் அந்த எழு மரத்தால் செய்தே – முக்-பள்ளு:110/3
மலங்காமல் இந்தப்படி வகை எல்லாம் தேடிவைத்தேன் வயலிலே நாளேர் இட வாரீர் ஆண்டே – முக்-பள்ளு:111/4
மறுபடி அவன் சொன்ன வகை நன்று என்ன மள்ளர் பலரும் நாடி வயலில் கூடி – முக்-பள்ளு:137/2
மண்டகப்படி சாத்துக்கு ஒரு வகை ஆயிரம் கோட்டை கட்டை – முக்-பள்ளு:145/1
வகை வந்தால் பள்ளனும் என் வசம் ஆகானோ – முக்-பள்ளு:160/2

மேல்

வகை-தனிலே (1)

முண்டன் நெல் வகை-தனிலே கண்ட முத்துவெள்ளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:145/2

மேல்

வகைக்கு (2)

ஈடிலா வகைக்கு இன்னம் எழுதி இராசவாணனை இரண்டு பங்கிட்டு – முக்-பள்ளு:70/1
வரு பங்குனி திருநாள் படி வகைக்கு ஆயிரம் கோட்டை சின்ன – முக்-பள்ளு:143/1

மேல்

வகையில் (1)

தாடி பிச்சன் வகையில் நேரும் சம்பாநெல் அளந்தேன் – முக்-பள்ளு:142/2

மேல்

வங்க (1)

வங்க வாரிதி வெம் கடு உண்ட மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:20/4

மேல்

வங்கமே (2)

வங்கமே அங்கம் அனல் வங்கமே ஆனேன் வெண் – முக்-பள்ளு:49/3
வங்கமே அங்கம் அனல் வங்கமே ஆனேன் வெண் – முக்-பள்ளு:49/3

மேல்

வசம் (1)

வகை வந்தால் பள்ளனும் என் வசம் ஆகானோ – முக்-பள்ளு:160/2

மேல்

வஞ்சகமும் (1)

கெட்டி கெட்டி பெண்டு ரெண்டு வைத்த குடும்பன் செய்த கெருவமும் வஞ்சகமும் கேளும் பள்ளீரே – முக்-பள்ளு:150/4

மேல்

வஞ்சி (2)

வஞ்சி மருங்கில் அணி பூம்பட்டும் பஞ்சவர்ணத்து அழகும் துலங்க மருதூர்க்கு வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:8/4
இடை என்றால் வஞ்சி கொடியை போல் வரும் நடை என்றால் இளம் பிடியை போல் இருந்த சாயலுக்கு இப்பால் குருந்தி திருந்தினாள் அடி பள்ளீரே – முக்-பள்ளு:128/4

மேல்

வட்டத்தில் (1)

பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே பகட்டு கமலை வட்டத்தில் புனல் தகட்டு கமல குட்டத்தில் – முக்-பள்ளு:46/1

மேல்

வட்டமாம் (1)

வாரத்து உடையானேரி கட்டளையும் வட்டமாம் ஒரு வர்க்கத்தில் ஆந்தைக்குளமும் தோணி நிற்கும் துறை சுற்றும் – முக்-பள்ளு:92/7

மேல்

வட்டமும் (1)

வீரபாண்டியப்பேரி பாய்ச்சலும் நாச்சியார் திருவிடையாட்டமும் சுமைதாங்கி வட்டமும் கடை பத்தித்தடியும் – முக்-பள்ளு:92/5

மேல்

வட்டவட்டங்களாய் (1)

அந்த தொளிக்கு சமைந்த நாற்றை அடுத்த வயலில் பிடுங்கி வேறே அடுக்கி முடிந்து வட்டவட்டங்களாய் குவித்த பின் – முக்-பள்ளு:125/2

மேல்

வட்டில் (1)

வட்டில் வாய்வைக்கும் சட்டி கொண்டு ஓங்கும் மருதூராளை விருதுக்கே வைத்தான் – முக்-பள்ளு:57/3

மேல்

வட்டிலுக்குள் (1)

வட்டிலுக்குள் வாய்வைத்தது எல்லாம் துறை வடிவழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:100/4

மேல்

வட (2)

நெஞ்சு கவர் கன தன மா மத குஞ்சர இணை கோடுகள் அசைய நீல வட கல்லுடன் கோவை தாலியும் இலங்க – முக்-பள்ளு:8/3
கலங்கவே வந்த சிறை கருடனை கண்டு கட்டு கழன்ற பாச வட கயிறு ஆயிரம் – முக்-பள்ளு:111/2

மேல்

வடக்கு (2)

வாய்த்த சாராயமும் பனை ஊற்று கள்ளும் வடக்கு வாய் செல்லி உண்ண குடத்தில் வையும் – முக்-பள்ளு:33/2
பார தென்மருதூரில் பண்ணைக்கே அழகராச்சிப்படைக்கு தெற்கு வடக்கு குளங்கல் மடைக்கும் உள் பற்றும் – முக்-பள்ளு:92/6

மேல்

வடக்கே (1)

திருந்த பேசின வார்த்தையும் கேளாய் நான் தெற்கே பார்த்தால் வடக்கே நீ பார்ப்பாய் – முக்-பள்ளு:98/2

மேல்

வடகரை (4)

வாடை ஓடிவர கோழி கூவும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:17/4
மறைபட்டுள்ளது அரும் பொருள் செய்யுள் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:21/4
மாதுளம் கொம்பு வாழையை தாங்கும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:25/4
மருந்து கள்ளி மருதூரில் பள்ளி வடகரை விட்டு வந்த பிறகு – முக்-பள்ளு:98/1

மேல்

வடம் (2)

கனக நீள் வடம் கோடி கொடுத்தேன் கார் வரைக்கும் உழும் வடம் ஒன்றே – முக்-பள்ளு:74/2
கனக நீள் வடம் கோடி கொடுத்தேன் கார் வரைக்கும் உழும் வடம் ஒன்றே – முக்-பள்ளு:74/2

மேல்

வடம்பூட்டி (1)

பெருமாள் பதிநூற்றெட்டும் மருவி வலம்செய்யார்-தம் பேய் காலை வடம்பூட்டி ஏர்க்கால் சேர்ப்பேன் – முக்-பள்ளு:11/3

மேல்

வடமலேந்த்ரன் (1)

செஞ்சிக்கும் கூடலுக்கும் தஞ்சைக்கும் ஆணை செல்லும் செங்கோல் வடமலேந்த்ரன் எங்கள் ஊரே – முக்-பள்ளு:14/1

மேல்

வடமலேந்திரன் (2)

கோவில் பெரிய வடமலேந்திரன் மாவில் கறுத்து பொழிந்த பின் குளிருகின்றது கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே – முக்-பள்ளு:38/4
மனத்துக்கு இனிய காவை வடமலேந்திரன் மடத்துக்கு வேண்டும் செந்நெல் வாரி குவிப்பார் – முக்-பள்ளு:139/3

மேல்

வடமலையப்பர் (1)

மற்றை காளைகள் எல்லாம் நயினார் வடமலையப்பர் பேரிட்டு நிற்கும் – முக்-பள்ளு:72/2

மேல்

வடிக்கும் (1)

வடிக்கும் மதுவை குடிக்கும் ஆசை மயக்கமும் பெரும் தியக்கமும் வரம்பில் பாய்ந்து பரம்பில் சாய்ந்த வாட்டமும் முக கோட்டமும் – முக்-பள்ளு:129/3

மேல்

வடிவத்து (1)

பத்து வடிவத்து அழகர் பண்ணையான் கேட்டபடி – முக்-பள்ளு:66/1

மேல்

வடிவழக (4)

மறுக்கும் மதுவெறிகொண்டு உறுக்கும் சிரிப்பும் தோன்ற வடிவழக குடும்பன் வந்து தோன்றினானே – முக்-பள்ளு:10/4
மை கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து உண்டாக்கும் வடிவழக குடும்பன் நானே ஆண்டே – முக்-பள்ளு:15/4
வடிவழக குடும்பன் – முக்-பள்ளு:64/2
மாட்டு குறும்பு அடங்க மறிப்பன் எனவே வடிவழக குடும்பன் வந்து மறித்தான் – முக்-பள்ளு:115/3

மேல்

வடிவழகர் (4)

மை புயலே போலும் வடிவழகர் பண்ணை வயல் – முக்-பள்ளு:76/1
மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல் வடிவழகர் வயலில் எரு பொடி உழவில் வைக்கவே – முக்-பள்ளு:82/3
வட்டிலுக்குள் வாய்வைத்தது எல்லாம் துறை வடிவழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:100/4
படுத்த கிடை எழுந்திருந்து கொள்ளாய் வடிவழகர் பாதம் மறவாத பண்ணை குடும்பா – முக்-பள்ளு:118/4

மேல்

வடு (1)

வடு வந்தால் மறைக்கப்போமோ வருவது எல்லாம் வந்துதீரும் மருதூர்ப்பள்ளி – முக்-பள்ளு:95/4

மேல்

வடுப்படா (1)

வடுப்படா மேனி வடுப்படுமோ நன்று நன்று என் வல்லாளன் சமர்த்தும் போய்விடுமோ – முக்-பள்ளு:118/1

மேல்

வடுப்படுமோ (1)

வடுப்படா மேனி வடுப்படுமோ நன்று நன்று என் வல்லாளன் சமர்த்தும் போய்விடுமோ – முக்-பள்ளு:118/1

மேல்

வண்டலிட்டு (1)

விண்ட பூ மது வண்டலிட்டு ஓடும் வெயில் வெய்யோன் பொன் எயில் வழி தேடும் – முக்-பள்ளு:19/3

மேல்

வண்ண (1)

கறுக்கும் கடாய் மருப்பின் முறுக்கு மீசையும் சித்ர கத்தரிகையிட்ட வண்ண கன்ன பரிசும் – முக்-பள்ளு:10/1

மேல்

வண்ணம் (1)

ஆசூர் நல் நாட்டில் மழையும் அந்த வண்ணம் அன்றோ – முக்-பள்ளு:37/2

மேல்

வண்ணனார் (1)

கார் பூத்த வண்ணனார் கண்ணனார் அழகர்படி கட்டளைகள் உயரவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/1

மேல்

வணங்கி (1)

பொதிந்த பொதியை நீட்டி பூட்டி காட்டி புரப்போர் பொன் இணங்கு கை போல் வணங்கி
எதிர்ந்த கதிர் முளைத்தே இடை பழுத்து ஏற்ற விளைவு தோற்றம் தோற்றியதே – முக்-பள்ளு:136/3,4

மேல்

வதைக்கும் (1)

வதைக்கும் மகரம் குதிக்கும் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன் மடந்தை கடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும் பஞ்சலை கருங்கண்ணி – முக்-பள்ளு:50/3

மேல்

வந்த (6)

முத்தி தர வந்த திருமுக்கூடல் மாதவர் தாள் – முக்-பள்ளு:34/1
வந்த பள்ளன்-தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே – முக்-பள்ளு:93/4
வாரமுடன் முக்கூடல் வந்த பள்ளி தந்திரமாய் – முக்-பள்ளு:97/2
மருந்து கள்ளி மருதூரில் பள்ளி வடகரை விட்டு வந்த பிறகு – முக்-பள்ளு:98/1
பள்ளியால் வந்த பொல்லாப்பு காண் ஆண்டே – முக்-பள்ளு:104/4
கலங்கவே வந்த சிறை கருடனை கண்டு கட்டு கழன்ற பாச வட கயிறு ஆயிரம் – முக்-பள்ளு:111/2

மேல்

வந்தார் (1)

வேறு கீறி ஒட்டவைத்த ஏறு காதுமாய் நேமி வீரனார் முக்கூடல் பண்ணைக்காரனார் வந்தார் – முக்-பள்ளு:மேல்

வந்தால் (5)

திங்கள் மும்மாரி உலகு எங்கும் பெய்யவே தெய்வத்தை போற்றி வந்தால் கைதரும் காண் – முக்-பள்ளு:32/1
வடு வந்தால் மறைக்கப்போமோ வருவது எல்லாம் வந்துதீரும் மருதூர்ப்பள்ளி – முக்-பள்ளு:95/4
இங்கு வந்தால் உன் சலுகை எல்லாம் தெரியும் – முக்-பள்ளு:153/4
அங்கே அவன் வந்தால் என்ன மருதூர்ப்பள்ளி ஊரார் – முக்-பள்ளு:156/1
வகை வந்தால் பள்ளனும் என் வசம் ஆகானோ – முக்-பள்ளு:160/2

மேல்

வந்தாலும் (1)

எங்கே வந்தாலும் என்ன முக்கூடல்பள்ளி வீட்டில் – முக்-பள்ளு:156/3

மேல்

வந்தாள் (1)

ஆமக்களை தொடர்ந்து உனை போல் ஆரடி வந்தாள் – முக்-பள்ளு:மேல்

வந்தாளே (1)

சோரமுடன் பள்ளனுக்கு சோறு கொண்டு வந்தாளே – முக்-பள்ளு:மேல்

வந்தான் (2)

நொடியில் வந்தான் – முக்-பள்ளு:மேல்

வந்தானே (2)

வீறு தரும் பண்ணைவிசாரிப்பான் வந்தானே – முக்-பள்ளு:மேல்

வந்தித்து (1)

வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/3

மேல்

வந்து (5)

ஏவலுறும் பள்ளியர் வந்து எய்தியது சொல்வேனே – முக்-பள்ளு:5/4
மறுக்கும் மதுவெறிகொண்டு உறுக்கும் சிரிப்பும் தோன்ற வடிவழக குடும்பன் வந்து தோன்றினானே – முக்-பள்ளு:10/4
பொழுது புகும் முந்தி வந்து புறப்படுவேன் ஆண்டே – முக்-பள்ளு:78/2
கொண்டாடும் கோனேரிக்கோன் வந்து தோன்றினனே – முக்-பள்ளு:81/4
மாட்டு குறும்பு அடங்க மறிப்பன் எனவே வடிவழக குடும்பன் வந்து மறித்தான் – முக்-பள்ளு:115/3

மேல்

வந்துதீரும் (1)

வடு வந்தால் மறைக்கப்போமோ வருவது எல்லாம் வந்துதீரும் மருதூர்ப்பள்ளி – முக்-பள்ளு:95/4

மேல்

வந்துற்றாளே (1)

பள்ளி வர தென்மருதூர் பள்ளியும் வந்துற்றாளே – முக்-பள்ளு:மேல்

வந்தேன் (2)

அத்தனை காலமும்தொட்டு இத்தனை காலமும் கண்டு அடியடி வாழையாய் நான் குடியில் வந்தேன்
பத்திலே பதினொன்றாக வைத்தானில்லை குடும்பன் பண்டே சரடுகட்டி கொண்டான் என்னை – முக்-பள்ளு:13/2,3
அல்லவோ தேடி அடியாள் இங்கே வந்தேன் ஆண்டே – முக்-பள்ளு:103/2

மேல்

வந்தேனோ (3)

தன் ஊர் விட்டு உன் போல ஒட்டுச்சாய்ப்பில் வந்தேனோ – முக்-பள்ளு:154/4
வழக்கிட்டு நான் வந்தேனோ மருதூர்ப்பள்ளி பள்ளன் – முக்-பள்ளு:155/1

மேல்

வம்பி (1)

சின்னி குருந்தி அருதி மருதி செல்லி இருவி எல்லி கலிச்சி திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி செம்பி வம்பி தம்பிச்சாள் – முக்-பள்ளு:126/1

மேல்

வம்புச்சண்டையை (1)

கொழுந்தி பக்கத்தில் விழுந்ததுக்கு அவள் கூடப்பிறந்த மாடன் போய் கொண்டையை பிடித்து இழுக்கிறான் வம்புச்சண்டையை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:134/4

மேல்

வயல் (7)

ஆதி நாள் வயல் வீதி கண்ணாறு எல்லாம் ஆடு வைத்து இன்னும் மேடும் திருத்த – முக்-பள்ளு:75/3
மை புயலே போலும் வடிவழகர் பண்ணை வயல்
அப்படியே தப்பாமல் ஆடு வைக்கவேணும் என்றே – முக்-பள்ளு:76/1,2
உழவு வயல் உள்ளது எல்லாம் உரம்வைப்பேன் ஆண்டே – முக்-பள்ளு:80/2
நாதக்கோன் முக்கூடல் ஆதிக்கோன் பண்ணை வயல் நானடா உரம் ஏற்றும் கோனடா குடும்பா – முக்-பள்ளு:83/4
கோனை கண்டவனோ கோன் தலை பேனை கண்டவனோ போய் அவள் குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான் – முக்-பள்ளு:89/3
வயல் உழும் குத்தி ஒன்று வளைமேழி ஒன்று இந்த வகை ஏழும் அந்த எழு மரத்தால் செய்தே – முக்-பள்ளு:110/3
காரின் உருவ சுருதிக்காரணர் முக்கூடல் வயல்
சீரின் நடு நாற்று நட செய்யினில் நின்று ஓங்கியதே – முக்-பள்ளு:135/3,4

மேல்

வயலில் (5)

பற்றா அயிரை கெண்டை கெளிறு பரு வராலும் அணையிலே பாய காலில் பாய குளத்தில் பாய வயலில் பாயவே – முக்-பள்ளு:51/3
மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல் வடிவழகர் வயலில் எரு பொடி உழவில் வைக்கவே – முக்-பள்ளு:82/3
இடையரை கொண்டே வயலில் ஏவி இளையாள் குடிலில் – முக்-பள்ளு:84/1
அந்த தொளிக்கு சமைந்த நாற்றை அடுத்த வயலில் பிடுங்கி வேறே அடுக்கி முடிந்து வட்டவட்டங்களாய் குவித்த பின் – முக்-பள்ளு:125/2
மறுபடி அவன் சொன்ன வகை நன்று என்ன மள்ளர் பலரும் நாடி வயலில் கூடி – முக்-பள்ளு:137/2

மேல்

வயலிலே (1)

மலங்காமல் இந்தப்படி வகை எல்லாம் தேடிவைத்தேன் வயலிலே நாளேர் இட வாரீர் ஆண்டே – முக்-பள்ளு:111/4

மேல்

வயலும் (1)

காரில் பயிரிட்டு ஊருக்கு அதிகமாய் கதலிவாழை காய்த்த வயலும் கீர்த்தி சேர் நயினாத்தையார் திருத்தும் – முக்-பள்ளு:92/2

மேல்

வயலுள்ளே (3)

குடை குன்றாய் பசு கிடை நின்றார் முக்கூடல் அழகர் வயலுள்ளே கொண்டாடிக்கொண்டு நடச்செய்தே இன்று கண்டோம் இது என்ன புதுமையோ – முக்-பள்ளு:128/2
அடிக்குள் அடங்கும்படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே ஆடிப்பாடி நாற்று முடியை அலைத்து குலைத்து நடச்செய்தே – முக்-பள்ளு:129/2
புங்கவர் தமிழ் சங்கம் மருவும் புலமை தலைமை அழகனார் பொருநை ஆற்று அணை பெருகுங்கால் புனல் பொருத மருதூர் வயலுள்ளே
தங்கள் வேலை நாற்றுக்கும் பள்ளர் அங்கலாய்க்கும் சோற்றுக்கும் தாமதப்படவே மற்றது ஒன்றை சாட்டி மேட்டில் கூட்டமாய் – முக்-பள்ளு:130/1,2

மேல்

வயலுளே (1)

உள்ளூர் பண்ணை வயலுளே தெற்கு வெள்ளூர் பள்ளி வெயிலியும் உளக்குடி பள்ளி உடைச்சியும் மேல களக்குடி பள்ளி சடைச்சியும் – முக்-பள்ளு:131/2

மேல்

வயலுற்று (2)

சோதி முக மள்ளருக்கே தோன்ற வயலுற்று நட்ட – முக்-பள்ளு:9/3
வயலுற்று வருவது போல் வந்தானே – முக்-பள்ளு:91/4

மேல்

வயித்தி (1)

போத்தன் அருதன் கோணப்பூவன் மருதன் பூலான் வயித்தி வேலான் புலியன் கலியன் – முக்-பள்ளு:114/2

மேல்

வயிற்று (2)

உழும் தொழில்படு பழந்தொளி புனல் உடைச்சு முடங்கல் நடச்செய்தே ஒண்டி வயிற்று பண்டி பானை தொண்டி கள்ளை மண்டியே – முக்-பள்ளு:134/2
சட்டி தலை பண்ணை ஆண்டே நடு கேளாரோ தண்ணீர் சால் வயிற்று பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/3

மேல்

வயிறு (1)

சாய்ந்தால் வயிறு அல்லோ தாங்கவேணும் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:104/2

மேல்

வயிறும் (1)

மாறுகண்ணும் பருத்திப்பை கூறு வயிறும் கீரை மத்து போல் தலையும் சுரை வித்து போல் பல்லும் – முக்-பள்ளு:53/1

மேல்

வர்க்கத்தில் (1)

வாரத்து உடையானேரி கட்டளையும் வட்டமாம் ஒரு வர்க்கத்தில் ஆந்தைக்குளமும் தோணி நிற்கும் துறை சுற்றும் – முக்-பள்ளு:92/7

மேல்

வர்க்கமுடன் (1)

வாய்த்த விதை வர்க்கமுடன் மாட்டு வகை சொன்னானே – முக்-பள்ளு:107/4

மேல்

வர (4)

ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே – முக்-பள்ளு:35/1
மின் நீர் வர கான் விளங்கிநின்றவாறேயோ – முக்-பள்ளு:43/2
பள்ளி வர தென்மருதூர் பள்ளியும் வந்துற்றாளே – முக்-பள்ளு:116/4
அடுத்து இதுவும் உனக்கு வர முறையோ மலையின் மேல் ஐயா பூலாவுடையார் குறையோ – முக்-பள்ளு:118/3

மேல்

வரத்தினை (1)

வரத்தினை மீறும் செலவுக்கு தரித்திரம் ஏறும் பேய் கொடை மட்டுக்கட்டு இல்லான் கூத்துக்கும் கொட்டுக்கும் நல்லான் – முக்-பள்ளு:86/1

மேல்

வரத்தும் (1)

கொத்து வகை அத்தனையும் கூட்டி வரத்தும் செலவும் – முக்-பள்ளு:66/3

மேல்

வரம் (1)

மாரி பொருட்டால் வரம் குறித்து மள்ளர் எல்லாம் – முக்-பள்ளு:31/3

மேல்

வரம்பில் (1)

வடிக்கும் மதுவை குடிக்கும் ஆசை மயக்கமும் பெரும் தியக்கமும் வரம்பில் பாய்ந்து பரம்பில் சாய்ந்த வாட்டமும் முக கோட்டமும் – முக்-பள்ளு:129/3

மேல்

வரல் (1)

மால் வெள்ளத்து ஆறு வரல் இரவு தீர்வாயே – முக்-பள்ளு:41/4

மேல்

வரவர (1)

ஏச்சுக்கு பிறந்தான் வரவர கூச்சத்தை மறந்தான் இளையவள் இளமையை குறித்தான் முதிரும் என் வளமையை பறித்தான் – முக்-பள்ளு:90/1

மேல்

வராமல் (1)

தேற்றம் அரிது அன்றோ சிறுமை வராமல் பெருமை – முக்-பள்ளு:58/3

மேல்

வரால் (1)

மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி முடிக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட – முக்-பள்ளு:115/2

மேல்

வராலும் (1)

பற்றா அயிரை கெண்டை கெளிறு பரு வராலும் அணையிலே பாய காலில் பாய குளத்தில் பாய வயலில் பாயவே – முக்-பள்ளு:51/3

மேல்

வரி (1)

ஆருக்கும் பணியான் சீவலப்பேரிக்குள் கணியான் வில் என்னும் அரிப்பிட்டு போட்டான் பள் வரி தெரிப்பிட்டு கேட்டான் – முக்-பள்ளு:88/1

மேல்

வரிசை (1)

சேர்த்த மரமும் கழற்றி செய் வரிசை செய்ததன் பின் – முக்-பள்ளு:107/2

மேல்

வரினும் (2)

தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும் தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர் – முக்-பள்ளு:3/3
மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கு ஓர் – முக்-பள்ளு:12/1

மேல்

வரு (2)

சீர் பூத்த அருவி வரு திருமலைக்கொழுந்து முகில் செங்கோன்மை ஓங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/4
வரு பங்குனி திருநாள் படி வகைக்கு ஆயிரம் கோட்டை சின்ன – முக்-பள்ளு:143/1

மேல்

வருகையில் (1)

நத்து ஓல குருகையில் வருகையில் நட்பாக புளி நடு வெளிபடு நல் போதத்து அருள் பொழி திருவிழி ஞான வித்து எனக்கே – முக்-பள்ளு:4/4

மேல்

வரும் (5)

தெக்கண விட்டுணுவான முக்கூடலுற்று அழகர் திருவடி வைக்கும் அன்றே வரும் அடியேன் – முக்-பள்ளு:15/2
படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும் பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார் – முக்-பள்ளு:128/1
இடை என்றால் வஞ்சி கொடியை போல் வரும் நடை என்றால் இளம் பிடியை போல் இருந்த சாயலுக்கு இப்பால் குருந்தி திருந்தினாள் அடி பள்ளீரே – முக்-பள்ளு:128/4
செழும் திருப்பதம் தொழும் தவத்தினர் சித்தம் உருகி நித்தமும் தேடி வரும் முக்கூடல் அழகர் சிற்றாற்று கால் பற்றிலே – முக்-பள்ளு:134/1
சாதிப்பது உனக்கு வரும் மருதூர்ப்பள்ளி நரிதான் – முக்-பள்ளு:161/1

மேல்

வருவது (2)

வயலுற்று வருவது போல் வந்தானே – முக்-பள்ளு:91/4
வடு வந்தால் மறைக்கப்போமோ வருவது எல்லாம் வந்துதீரும் மருதூர்ப்பள்ளி – முக்-பள்ளு:95/4

மேல்

வருவாள் (1)

முடுக வா ராசியம் உண்டு குண்டுணிக்காரி மூத்தபள்ளி பார்க்க வருவாள்
நடுவே தெய்வம் சோதிச்சுது ஐயோ பண்ணை நயினார்க்கும் செவி கண்ணாச்சே – முக்-பள்ளு:95/1,2

மேல்

வருவான் (1)

பூனைக்குட்டியை போல் பதுங்கி சொல் மோனைக்கட்டுடனே அவன் முழுப்பொய் கொண்டு வருவான் சிக்கென வையும் காண் ஆண்டே – முக்-பள்ளு:89/4

மேல்

வருவேன் (1)

பட்டிகளும் கொண்டு இன்று பகல் வருவேன் ஆண்டே – முக்-பள்ளு:79/2

மேல்

வரை (2)

வான குருசில் வள்ளலாய் வரை கோனை பரிசு கொள்ளலாய் வழங்குமாறும் புறப்பட்டே புனல் முழங்குமாறும் திறப்பட்டே – முக்-பள்ளு:40/1
குற்றால திரிகூட மால் வரை உற்றே மேகம் பொழிந்த நீர் கூடி பொருநை நாடி திருமுக்கூடல் பதியை வலம்கொண்டே – முக்-பள்ளு:51/1

மேல்

வரைக்கும் (1)

கனக நீள் வடம் கோடி கொடுத்தேன் கார் வரைக்கும் உழும் வடம் ஒன்றே – முக்-பள்ளு:74/2

மேல்

வரையில் (1)

பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவி கமலத்து அயனுமாய் புனலை தரித்து வரையில் ஏறி கனலை தரித்த சிவனுமாய் – முக்-பள்ளு:38/2

மேல்

வரையின் (1)

முந்நீர் அடும் கணையார் முக்கூடல் மால் வரையின்
மின் நீர் வர கான் விளங்கிநின்றவாறேயோ – முக்-பள்ளு:43/1,2

மேல்

வல் (1)

கூடினால் கூடும் வல் வித்தை எல்லாம் குருகைமாறனை கேளும் காண் ஆண்டே – முக்-பள்ளு:70/4

மேல்

வல்ல (1)

ஆற்ற வல்ல மாதர் அழகர் புய மார்பினரோ – முக்-பள்ளு:58/4

மேல்

வல்லாய் (1)

மத யானை முதல் பிடிக்க வல்லாய் இந்த மாட்டுக்கு மாட்டாமல் போனது என்ன சொல்லாய் – முக்-பள்ளு:117/1

மேல்

வல்லார் (1)

இயல்பாய் பதனம்பண்ணி இருப்பது உண்டு அத்தனையும் எண்ணி அறிய வல்லார் எவர் காண் ஆண்டே – முக்-பள்ளு:110/4

மேல்

வல்லாளன் (1)

வடுப்படா மேனி வடுப்படுமோ நன்று நன்று என் வல்லாளன் சமர்த்தும் போய்விடுமோ – முக்-பள்ளு:118/1

மேல்

வல்லி (1)

குறைபட்டுள்ளது கம்மியர் அம்மி குழைபட்டுள்ளது வல்லி அம் கொம்பு – முக்-பள்ளு:21/3

மேல்

வலம்கொண்டே (1)

குற்றால திரிகூட மால் வரை உற்றே மேகம் பொழிந்த நீர் கூடி பொருநை நாடி திருமுக்கூடல் பதியை வலம்கொண்டே
வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன் மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன் – முக்-பள்ளு:51/1,2

மேல்

வலம்செய்யார்-தம் (1)

பெருமாள் பதிநூற்றெட்டும் மருவி வலம்செய்யார்-தம் பேய் காலை வடம்பூட்டி ஏர்க்கால் சேர்ப்பேன் – முக்-பள்ளு:11/3

மேல்

வலி (2)

துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே – முக்-பள்ளு:1/3
துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே – முக்-பள்ளு:1/3

மேல்

வலித்து (1)

வழியே போகும் களவு எல்லாம் தலையின் மேல் வலித்து இட்டு பற்றுக்குறித்தாள் – முக்-பள்ளு:94/2

மேல்

வலிய (1)

வலிய வழக்கு பேசி சுந்தரன் வாயால் அன்று – முக்-பள்ளு:166/1

மேல்

வலுச்சலுகை (1)

வலுச்சலுகை பேசாதே நீ முக்கூடல்பள்ளி உன் போல் – முக்-பள்ளு:154/3

மேல்

வழக்கிட்டு (3)

விருதுக்கே காரைக்காட்டார் வழக்கிட்டு மேழி சேர முன் வாங்கிக்கொண்டார்கள் – முக்-பள்ளு:73/3
வழக்கிட்டு கணக்கிட்டு வந்தேனோ போடி – முக்-பள்ளு:154/4
வழக்கிட்டு நான் வந்தேனோ மருதூர்ப்பள்ளி பள்ளன் – முக்-பள்ளு:155/1

மேல்

வழக்கு (1)

வலிய வழக்கு பேசி சுந்தரன் வாயால் அன்று – முக்-பள்ளு:166/1

மேல்

வழங்குமாறும் (1)

வான குருசில் வள்ளலாய் வரை கோனை பரிசு கொள்ளலாய் வழங்குமாறும் புறப்பட்டே புனல் முழங்குமாறும் திறப்பட்டே – முக்-பள்ளு:40/1

மேல்

வழி (2)

விண்ட பூ மது வண்டலிட்டு ஓடும் வெயில் வெய்யோன் பொன் எயில் வழி தேடும் – முக்-பள்ளு:19/3
அனகன் ஆறை வழி நயினாத்தை அழகர் மண்டப தூண் சாரம் ஏற்ற – முக்-பள்ளு:74/1

மேல்

வழியே (1)

வழியே போகும் களவு எல்லாம் தலையின் மேல் வலித்து இட்டு பற்றுக்குறித்தாள் – முக்-பள்ளு:94/2

மேல்

வழுத்தி (1)

நாவால் வழுத்தி வளநாட்டு இயல்பு கூறிய பின் – முக்-பள்ளு:27/2

மேல்

வழுதடி (1)

குறுக்கில் வழுதடி சேர்த்திருக்கும் கச்சையும் செம்பொன் கோல புள்ளி உருமாலும் நீல கொண்டையும் – முக்-பள்ளு:10/2

மேல்

வள்ளலாய் (1)

வான குருசில் வள்ளலாய் வரை கோனை பரிசு கொள்ளலாய் வழங்குமாறும் புறப்பட்டே புனல் முழங்குமாறும் திறப்பட்டே – முக்-பள்ளு:40/1

மேல்

வளத்துடன் (1)

மா வளத்துடன் அழகர் தாவளக்குடி வாழ மருதூரை வாழ்த்தியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/2

மேல்

வளநாட்டு (1)

நாவால் வழுத்தி வளநாட்டு இயல்பு கூறிய பின் – முக்-பள்ளு:27/2

மேல்

வளநாடும் (1)

ஆவலினாலே அழகர் ஆசூர் வளநாடும்
சீவல நல் நாடும் இசை தேர்ந்து உரைக்க பண்ணை-தனில் – முக்-பள்ளு:5/2,3

மேல்

வளம் (10)

அணி அரவணை தூயவர் மாயவர் அடியர் மன பூரணர் காரணர் அழகர் பள் இசை பா வளம் நா வளம் ஆக தருவோர் – முக்-பள்ளு:1/2
அணி அரவணை தூயவர் மாயவர் அடியர் மன பூரணர் காரணர் அழகர் பள் இசை பா வளம் நா வளம் ஆக தருவோர் – முக்-பள்ளு:1/2
கோட்டு வளம் கூறிய முக்கூடல் அலங்காரர் திரு – முக்-பள்ளு:16/1
நாட்டு வளம் பேச மணி நா அசைத்தார் பள்ளியர்கள் – முக்-பள்ளு:16/2
பாட்டு வளம் சேர குலப்பத்தனார் மாலிகை பூம் – முக்-பள்ளு:16/3
காட்டு வளம் என்ன கள மருதூர் செய்வாரே – முக்-பள்ளு:16/4
சாதி நால் வளம் நீதி பெருக்கும் தடத்து வாளை குடத்தை நெருக்கும் – முக்-பள்ளு:23/2
பெரு வளம் தரு நாடு திங்கள் மும்மாரியும் பெய்ய மழை வேண்டியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/3
நல் நீர் மருதம் என நால் வளம் உண்டாயதுவே – முக்-பள்ளு:43/3
வளம் தரு தென் முக்கூடல் மாயவனார் பண்ணையிலே – முக்-பள்ளு:140/1

மேல்

வளமை (3)

வாடை ஓடிவர கோழி கூவும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:17/4
மறைபட்டுள்ளது அரும் பொருள் செய்யுள் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:21/4
மாதுளம் கொம்பு வாழையை தாங்கும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:25/4

மேல்

வளமையை (1)

ஏச்சுக்கு பிறந்தான் வரவர கூச்சத்தை மறந்தான் இளையவள் இளமையை குறித்தான் முதிரும் என் வளமையை பறித்தான் – முக்-பள்ளு:90/1

மேல்

வளர் (1)

செங்கரும்புக்கு கைதரும் போல் வளர் சீவலமங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:26/4

மேல்

வளர்க்க (1)

வளைத்து வேலி சூழ நட்டான் நாற்று வளர்க்க நாளும் ஒருப்பட்டான் – முக்-பள்ளு:122/2

மேல்

வளர்க்கும் (1)

வளர்க்கும் பல பெரும் சோலியில் மறவாதிரும் சொன்னேன் – முக்-பள்ளு:141/2

மேல்

வளர்ந்த (1)

வளர்ந்த நாற்றை முகம் கண்டான் சேரி மள்ளர் கூட மது உண்டான் – முக்-பள்ளு:123/1

மேல்

வளை (2)

சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே மழை தேடி ஒரு கோடி வானம்பாடி ஆடுதே – முக்-பள்ளு:35/3
முன்றில் குட வளை ஊர் முக்கூடல் ஊரர் செய்த – முக்-பள்ளு:47/1

மேல்

வளைக்கை (1)

கயமரம் ஒன்று வளைக்கை ஒன்று நுகம் ஒன்று கழுந்து ஏர்க்கால் ஒன்று சிறு வைக்கோல் ஒன்று – முக்-பள்ளு:110/2

மேல்

வளைத்து (1)

வளைத்து வேலி சூழ நட்டான் நாற்று வளர்க்க நாளும் ஒருப்பட்டான் – முக்-பள்ளு:122/2

மேல்

வளைமேழி (1)

வயல் உழும் குத்தி ஒன்று வளைமேழி ஒன்று இந்த வகை ஏழும் அந்த எழு மரத்தால் செய்தே – முக்-பள்ளு:110/3

மேல்

வளைவான் (1)

தடுத்து எனை ஆளார் அழகரும் நடுத்-தனை கேளார் கடும் சிறைச்சாலையில் போட்டால் வளைவான் வேலையில் ஆண்டே – முக்-பள்ளு:85/4

மேல்

வற்றா (1)

வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன் மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன் – முக்-பள்ளு:51/2

மேல்

வன்பால் (1)

ஒரு போது அழகர் தாளை கருதார் மனத்தை வன்பால் உழ பார்க்கும் தரிசு என்று கொழுப்பாய்ச்சுவேன் – முக்-பள்ளு:11/1

மேல்

வன்மத்தை (1)

வன்மத்தை பார்த்தால் அவன் இலக்கு அல்லவே ஆண்டே தென்மருதூரில் – முக்-பள்ளு:104/3

மேல்

வன்னியடித்திட்டும் (1)

சாரல் கறுக்கும் ஈர தூற்றலால் நாற்றுப்பாவும் சன்னை வெட்டியான் வாய்க்கால் போக்கும் வன்னியடித்திட்டும்
கோரை குண்டு ஓடை ஓரத்தில் புரவும் பார்வையான குத்துக்கல்லு குளத்து பற்றும் முத்தன் பகுதியும் – முக்-பள்ளு:92/3,4

மேல்

வனத்தில் (1)

சேனை புரவி அழகனார் மருகோனை பரவி அழகு பூந்தினையை வனத்தில் உதிர்த்து பாலை அனைய வனத்தை எதிர்ந்ததே – முக்-பள்ளு:40/4

மேல்

வனத்தை (1)

சேனை புரவி அழகனார் மருகோனை பரவி அழகு பூந்தினையை வனத்தில் உதிர்த்து பாலை அனைய வனத்தை எதிர்ந்ததே – முக்-பள்ளு:40/4

மேல்