கொ- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொங்காணியும் 1
கொங்கை-தனில் 1
கொச்சியின் 1
கொஞ்ச 1
கொஞ்சக்காரிக்கு 1
கொட்டால் 1
கொட்டி 2
கொட்டுக்கும் 1
கொட்டைப்பாக்கன் 1
கொடி 1
கொடிகள் 1
கொடியிலே 1
கொடியை 1
கொடுக்கும் 1
கொடுங்கள் 1
கொடுத்தான் 1
கொடுத்துப்பார்த்தால் 1
கொடுத்தே 1
கொடுத்தேன் 1
கொடுப்பார் 2
கொடை 1
கொண்ட 1
கொண்டல் 2
கொண்டாடிக்கொண்டு 1
கொண்டாடும் 1
கொண்டாடுவது 1
கொண்டார் 1
கொண்டாரே 1
கொண்டான் 3
கொண்டீர் 1
கொண்டு 19
கொண்டுவந்தான் 1
கொண்டுவருவேன் 1
கொண்டே 2
கொண்டையினும் 1
கொண்டையும் 2
கொண்டையை 1
கொத்தடியானுக்கு 1
கொத்து 1
கொப்பத்தில் 1
கொப்புளித்தாலும் 1
கொம்பனை 1
கொம்பு 3
கொம்பு_அனார் 1
கொம்புசுற்றி 1
கொல்லை 2
கொலை 2
கொழியல் 1
கொழு 2
கொழுதி 1
கொழுந்தி 1
கொழுந்தியார் 1
கொழுப்பாய்ச்சுவேன் 1
கொள்ள 2
கொள்ளலாய் 1
கொள்ளாய் 1
கொள்ளும் 3
கொன்ற 1
கொன்றான் 2
கொன்றே 1
கொன்றை 2
கொன்னைத்தாண்டி 1

கொங்காணியும் (1)

தக்க தோணியை துறையில் சிக்கென கட்டும் படல் தாழைக்குடை கொங்காணியும் வேளைக்கே வேண்டும் – முக்-பள்ளு:36/2

மேல்

கொங்கை-தனில் (1)

கொங்கை-தனில் நாச்சியாரை சங்கை இல்லாமல் பண்டு – முக்-பள்ளு:162/3

மேல்

கொச்சியின் (1)

செம் சரண படமிடும் கொச்சியின் மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க சிறிய நுதல் பிறை வெண் நீற்று குறி ஒளிவீச – முக்-பள்ளு:8/1

மேல்

கொஞ்ச (1)

கொஞ்ச பேச்சுகள் சொல்லாதே வாய் தண்ணீர் குடித்தாலும் கொப்புளித்தாலும் ஆமே – முக்-பள்ளு:99/2

மேல்

கொஞ்சக்காரிக்கு (1)

கொஞ்சக்காரிக்கு அஞ்சுவேனோ முக்கூடல்பள்ளி இன்னும் – முக்-பள்ளு:158/3

மேல்

கொட்டால் (1)

சுருதி எண்ணெழுத்து உண்மை பெரியநம்பியை கேளா துட்டர் செவி புற்று எனவே கொட்டால் வெட்டுவேன் – முக்-பள்ளு:11/2

மேல்

கொட்டி (2)

காவுக்கு இறைவனாகும் இந்திரன் ஏவல் பணிகொண்டு எழுந்த கார் கடலில் படிந்து திருவில் கொட்டி அடல் முக்கூடல் அரியுமாய் – முக்-பள்ளு:38/1
முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை – முக்-பள்ளு:44/1

மேல்

கொட்டுக்கும் (1)

வரத்தினை மீறும் செலவுக்கு தரித்திரம் ஏறும் பேய் கொடை மட்டுக்கட்டு இல்லான் கூத்துக்கும் கொட்டுக்கும் நல்லான் – முக்-பள்ளு:86/1

மேல்

கொட்டைப்பாக்கன் (1)

படைப்புப்பிடுங்கி கொட்டைப்பாக்கன் கருமறையன் பசுக்காத்தான் அணிற்காலன் படலைக்கொம்பன் – முக்-பள்ளு:109/3

மேல்

கொடி (1)

வெள்ளானைக்கு இறை போற்றுவார் ஒரு புள் ஆடல் கொடி ஏற்றுவார் வேதம் பரவும் பாதர் வைகுண்ட வீரர் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:131/1

மேல்

கொடிகள் (1)

கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும் – முக்-பள்ளு:19/1

மேல்

கொடியிலே (1)

தறுகி அறுகம் கொடியிலே அடிதட்டி விழுந்தமட்டிலே தலையை தாங்குறா போலே குத்து முலையை தாங்குறான் பள்ளீரே – முக்-பள்ளு:132/4

மேல்

கொடியை (1)

இடை என்றால் வஞ்சி கொடியை போல் வரும் நடை என்றால் இளம் பிடியை போல் இருந்த சாயலுக்கு இப்பால் குருந்தி திருந்தினாள் அடி பள்ளீரே – முக்-பள்ளு:128/4

மேல்

கொடுக்கும் (1)

சூதம் ஒன்றி சுமக்க கொடுக்கும் சூதம் தன் கனி தூங்கும் பலாவின் – முக்-பள்ளு:25/2

மேல்

கொடுங்கள் (1)

பொங்கலும் இட்டு தேங்காயும் கரும்பும் பூலா உடையாருக்கு சால கொடுங்கள்
குங்குமத்தோடு சந்தனமும் கலந்து குமுக்கா உடையார் அய்யர்-தமக்கு சாத்தும் – முக்-பள்ளு:32/2,3

மேல்

கொடுத்தான் (1)

ஆனை குட்டியை போல் எருமையை ஞானிச்செட்டி கைக்கே பணம் பதினைஞ்சுக்கு கொடுத்தான் கொழுந்தியார் குஞ்சுக்கு இட்டெடுத்தான் – முக்-பள்ளு:89/1

மேல்

கொடுத்துப்பார்த்தால் (1)

உங்கள் அடியானுக்கு நான் கொடுத்துப்பார்த்தால் உண்பானோ உண்ணானோ ஆண்டே – முக்-பள்ளு:96/4

மேல்

கொடுத்தே (1)

தாரத்து இருபேரில் கலவி தாகத்தினளாக தருமச்சாலை புவி காலை தடவ தலையணை கொடுத்தே
ஆரத்தன பார திரு உற்று ஆசைப்பட ஓசை திரை நெட்டு ஆழிக்கு இசை ஊழி சயனத்து அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:2/1,2

மேல்

கொடுத்தேன் (1)

கனக நீள் வடம் கோடி கொடுத்தேன் கார் வரைக்கும் உழும் வடம் ஒன்றே – முக்-பள்ளு:74/2

மேல்

கொடுப்பார் (2)

படியில் பகடு அணைப்பார் பிணியில் பிணைப்பார் பிணையல் விட தொடுப்பார் பேர்த்து கொடுப்பார்
பொடி வைக்கோலை தவிர்ப்பார் பொலியை குவிப்பார் பொலி தூற்றி ஆற்றி பொலி பொலி என்று அளப்பார் – முக்-பள்ளு:138/3,4
தினச்சத்திரத்துக்கு என்றும் பெரியநம்பி திருமாளிகைக்கு என்றும் சில நெல்லு கொடுப்பார்
சனக்கட்டளை ஏழு திருப்பதிக்கும் தலத்தார் படிக்கும் சில சாலி அளப்பார் – முக்-பள்ளு:139/1,2

மேல்

கொடை (1)

வரத்தினை மீறும் செலவுக்கு தரித்திரம் ஏறும் பேய் கொடை மட்டுக்கட்டு இல்லான் கூத்துக்கும் கொட்டுக்கும் நல்லான் – முக்-பள்ளு:86/1

மேல்

கொண்ட (1)

திருமுக்கூடல் அழகர்க்கு இளைய தெரிவை நீலியை தேவியாய் கொண்ட
மருதப்பர் கொழு நானூறும் மாணிக்கவாசகன்கிட்ட வாங்கியே கொண்டார் – முக்-பள்ளு:73/1,2

மேல்

கொண்டல் (2)

கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும் – முக்-பள்ளு:19/1
கூடி நெய்யில் கையிட்டானும் கொண்டல் அல்லோடி – முக்-பள்ளு:162/4

மேல்

கொண்டாடிக்கொண்டு (1)

குடை குன்றாய் பசு கிடை நின்றார் முக்கூடல் அழகர் வயலுள்ளே கொண்டாடிக்கொண்டு நடச்செய்தே இன்று கண்டோம் இது என்ன புதுமையோ – முக்-பள்ளு:128/2

மேல்

கொண்டாடும் (1)

கொண்டாடும் கோனேரிக்கோன் வந்து தோன்றினனே – முக்-பள்ளு:81/4

மேல்

கொண்டாடுவது (1)

அங்குமிங்கும் கொண்டாடுவது எல்லாம் அறிவேன் பார கடுக்கன் காண் ஆண்டே – முக்-பள்ளு:69/4

மேல்

கொண்டார் (1)

மருதப்பர் கொழு நானூறும் மாணிக்கவாசகன்கிட்ட வாங்கியே கொண்டார்
விருதுக்கே காரைக்காட்டார் வழக்கிட்டு மேழி சேர முன் வாங்கிக்கொண்டார்கள் – முக்-பள்ளு:73/2,3

மேல்

கொண்டாரே (1)

கூவாய் என்று அந்த குயில் மொழியை கொண்டாரே – முக்-பள்ளு:மேல்

கொண்டான் (3)

பத்திலே பதினொன்றாக வைத்தானில்லை குடும்பன் பண்டே சரடுகட்டி கொண்டான் என்னை – முக்-பள்ளு:13/3
அளந்திடா மகிழ்ச்சி கொண்டான் பண்ணை ஆண்டையை போய் அந்த செய்தி விண்டான் – முக்-பள்ளு:123/2
உன்னை கொண்டான் என்னை கண்டு என் ஊரிலே வந்தான் – முக்-பள்ளு:155/4

மேல்

கொண்டீர் (1)

முப்பாலும் சோறும் உண்ணவே நடத்தி கொண்டீர் மூப்படியானும் புறப்பட்டான் – முக்-பள்ளு:60/1

மேல்

கொண்டு (19)

பேடை மாங்குயில் வாய் கொண்டு சேவல் பிளந்த வாய்-தனை பேசாமல் மூட – முக்-பள்ளு:17/2
கோடை போய்விட்ட சோபனம் கொண்டு குளிர்ந்த கொன்றை முறும் தளிர் ஓட – முக்-பள்ளு:17/3
மூத்தபள்ளி முகம் பார்த்து வார்த்தை சொல்வாராம் பெருமூச்சு கொண்டு இளையபள்ளி பேச்சு கேட்பாராம் – முக்-பள்ளு:54/1
வட்டில் வாய்வைக்கும் சட்டி கொண்டு ஓங்கும் மருதூராளை விருதுக்கே வைத்தான் – முக்-பள்ளு:57/3
எதிர் இல்லாத மயிலையும் செட்டி கொண்டு ஏகினான் பெட்டை என்றார் காண் ஆண்டே – முக்-பள்ளு:71/4
தொழுது விடைகொண்டு நீர் சொன்னபடி ஆடு கொண்டு
பொழுது புகும் முந்தி வந்து புறப்படுவேன் ஆண்டே – முக்-பள்ளு:78/1,2
குட்டிகளும் கொண்டு சிறு குடில்களையும் கொண்டு ஆட்டு – முக்-பள்ளு:79/1
குட்டிகளும் கொண்டு சிறு குடில்களையும் கொண்டு ஆட்டு – முக்-பள்ளு:79/1
பட்டிகளும் கொண்டு இன்று பகல் வருவேன் ஆண்டே – முக்-பள்ளு:79/2
கோல் ஒரு கை கொண்டு கடைக்காலும் ஒரு கை தூக்கி கோனேரிக்கோன் ஆட்டு கிடை கொண்டுவந்தான் – முக்-பள்ளு:82/4
பரத்தி கை சுள்ளும் அக்கரை திருத்தினில் கள்ளும் கொண்டு அஞ்சு பசுவையும் விற்றான் மனம்-தனில் அசுவையும் அற்றான் – முக்-பள்ளு:86/3
மீனை கொண்டு அளிப்பான் கருவாட்டு ஊனை கொண்டு ஒளிப்பான் நான் சொன்னால் வீம்புகள் அடிப்பான் அவள் சொன்னால் பாம்பையும் பிடிப்பான் – முக்-பள்ளு:89/2
மீனை கொண்டு அளிப்பான் கருவாட்டு ஊனை கொண்டு ஒளிப்பான் நான் சொன்னால் வீம்புகள் அடிப்பான் அவள் சொன்னால் பாம்பையும் பிடிப்பான் – முக்-பள்ளு:89/2
பூனைக்குட்டியை போல் பதுங்கி சொல் மோனைக்கட்டுடனே அவன் முழுப்பொய் கொண்டு வருவான் சிக்கென வையும் காண் ஆண்டே – முக்-பள்ளு:89/4
சோரமுடன் பள்ளனுக்கு சோறு கொண்டு வந்தாளே – முக்-பள்ளு:97/4
பருந்தாட்டம் கொண்டு கொப்பத்தில் ஆனை பட்டா போல் அகப்பட்டாய் மரத்தில் – முக்-பள்ளு:98/3
உத்தாரம் பண்ணைக்காரன் உரைத்தான் உரையை கேட்ட உடனே குடும்பன் ஏர் கொண்டு உழ சென்றானே – முக்-பள்ளு:113/4
நெடிதில் சுமை கொண்டு உய்ப்பார் நிலை போர் உயர்ப்பார் நின்ற போரை பிரிப்பார் நிலத்தில் விரிப்பார் – முக்-பள்ளு:138/2
குடும்பனை பிணைப்பட்டு கொண்டு மீட்டாய் – முக்-பள்ளு:159/2

மேல்

கொண்டுவந்தான் (1)

கோல் ஒரு கை கொண்டு கடைக்காலும் ஒரு கை தூக்கி கோனேரிக்கோன் ஆட்டு கிடை கொண்டுவந்தான் – முக்-பள்ளு:மேல்

கொண்டுவருவேன் (1)

மாறாமல் ஆடு கொண்டுவருவேன் காண் ஆண்டே – முக்-பள்ளு:77/2

மேல்

கொண்டே (2)

இடையரை கொண்டே வயலில் ஏவி இளையாள் குடிலில் – முக்-பள்ளு:84/1
படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும் பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார் – முக்-பள்ளு:128/1

மேல்

கொண்டையினும் (1)

பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும் பக்க கொண்டையினும் குழையினும் தைக்க குதிக்க – முக்-பள்ளு:8/2

மேல்

கொண்டையும் (2)

நெற்றியில் இடும் மஞ்சணை பொட்டும் மற்றொரு திருநாம பொட்டும் நெகிழ்ந்த கரும் கொண்டையும் ரெண்டாய் வகிர்ந்த வகுப்பும் – முக்-பள்ளு:6/1
குறுக்கில் வழுதடி சேர்த்திருக்கும் கச்சையும் செம்பொன் கோல புள்ளி உருமாலும் நீல கொண்டையும்
சறுக்கும்-தொறும் குதிப்பும் சுறுக்கும் தலையசைப்பும் தடி சுற்றி ஏப்பமிட்டே அடிவைப்பதும் – முக்-பள்ளு:10/2,3

மேல்

கொண்டையை (1)

கொழுந்தி பக்கத்தில் விழுந்ததுக்கு அவள் கூடப்பிறந்த மாடன் போய் கொண்டையை பிடித்து இழுக்கிறான் வம்புச்சண்டையை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:134/4

மேல்

கொத்தடியானுக்கு (1)

முத்தமிழ் நாட்டு அழகர் கொத்தடியானுக்கு ஆன முக்கூடல் மூத்தபள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:13/4

மேல்

கொத்து (1)

கொத்து வகை அத்தனையும் கூட்டி வரத்தும் செலவும் – முக்-பள்ளு:66/3

மேல்

கொப்பத்தில் (1)

பருந்தாட்டம் கொண்டு கொப்பத்தில் ஆனை பட்டா போல் அகப்பட்டாய் மரத்தில் – முக்-பள்ளு:98/3

மேல்

கொப்புளித்தாலும் (1)

கொஞ்ச பேச்சுகள் சொல்லாதே வாய் தண்ணீர் குடித்தாலும் கொப்புளித்தாலும் ஆமே – முக்-பள்ளு:99/2

மேல்

கொம்பனை (1)

ஒற்றை கொம்பனை தாண்டவராயன் உள்ளூர் கோவிலுக்குள்ளே அடைத்தான் – முக்-பள்ளு:72/1

மேல்

கொம்பு (3)

குன்று எலாம் தரமில்லை என்று ஆடவர் கொம்பு_அனார் முலை குன்றில் பதுங்க – முக்-பள்ளு:21/3,4
மாதுளம் கொம்பு வாழையை தாங்கும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:25/4

மேல்

கொம்பு_அனார் (1)

குன்று எலாம் தரமில்லை என்று ஆடவர் கொம்பு_அனார் முலை குன்றில் பதுங்க – முக்-பள்ளு:18/2

மேல்

கொம்புசுற்றி (1)

நேற்றும் இன்றும் கொம்புசுற்றி காற்று அடிக்குதே கேணி நீர்ப்படு சொறி தவளை கூப்பிடுகுதே – முக்-பள்ளு:35/2

மேல்

கொல்லை (2)

முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை – முக்-பள்ளு:44/1
முளைக்கு தண்ணீரை அடைத்திட்டான் கொல்லை முழுதும் மறுநாள் வெட்டி விட்டான் – முக்-பள்ளு:122/1

மேல்

கொலை (2)

தான களிறு படிந்திட கொலை ஏன களிறு மடிந்திட தழையின் ஆரம் உந்தியும் பசுங்கழையின் ஆரம் சிந்தியும் – முக்-பள்ளு:40/2
குலங்களுடன் மடிந்த கொலை வாள் அரக்கர் வேலும் கூர்வாளும் சேர்த்து அடித்த கொழு ஆயிரம் – முக்-பள்ளு:111/3

மேல்

கொழியல் (1)

கொழியல் அரிசி இட்டாலும் குப்பை கிண்டும் கோழி என்பதை புதுக்கினாள் – முக்-பள்ளு:94/3

மேல்

கொழு (2)

மருதப்பர் கொழு நானூறும் மாணிக்கவாசகன்கிட்ட வாங்கியே கொண்டார் – முக்-பள்ளு:73/2
குலங்களுடன் மடிந்த கொலை வாள் அரக்கர் வேலும் கூர்வாளும் சேர்த்து அடித்த கொழு ஆயிரம் – முக்-பள்ளு:111/3

மேல்

கொழுதி (1)

போயும் எருமை பதறவே உரம் ஈயும் எரு மை சிதறவே புழுதி சாலை நனைத்துமே குளிர் கொழுதி சாலை அனைத்துமே – முக்-பள்ளு:46/2

மேல்

கொழுந்தி (1)

கொழுந்தி பக்கத்தில் விழுந்ததுக்கு அவள் கூடப்பிறந்த மாடன் போய் கொண்டையை பிடித்து இழுக்கிறான் வம்புச்சண்டையை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:134/4

மேல்

கொழுந்தியார் (1)

ஆனை குட்டியை போல் எருமையை ஞானிச்செட்டி கைக்கே பணம் பதினைஞ்சுக்கு கொடுத்தான் கொழுந்தியார் குஞ்சுக்கு இட்டெடுத்தான் – முக்-பள்ளு:89/1

மேல்

கொழுப்பாய்ச்சுவேன் (1)

ஒரு போது அழகர் தாளை கருதார் மனத்தை வன்பால் உழ பார்க்கும் தரிசு என்று கொழுப்பாய்ச்சுவேன்
சுருதி எண்ணெழுத்து உண்மை பெரியநம்பியை கேளா துட்டர் செவி புற்று எனவே கொட்டால் வெட்டுவேன் – முக்-பள்ளு:11/1,2

மேல்

கொள்ள (2)

கொள்ள தமது குடித்தரங்கள் கூறினரே – முக்-பள்ளு:12/4
பூத்த தலை செஞ்சேவல் சாத்திரத்தாலே புலியூர் உடையார் கொள்ள பலிதானிடும் – முக்-பள்ளு:33/1

மேல்

கொள்ளலாய் (1)

வான குருசில் வள்ளலாய் வரை கோனை பரிசு கொள்ளலாய் வழங்குமாறும் புறப்பட்டே புனல் முழங்குமாறும் திறப்பட்டே – முக்-பள்ளு:40/1

மேல்

கொள்ளாய் (1)

படுத்த கிடை எழுந்திருந்து கொள்ளாய் வடிவழகர் பாதம் மறவாத பண்ணை குடும்பா – முக்-பள்ளு:118/4

மேல்

கொள்ளும் (3)

கஞ்சிக்கும் தன்னிலே தான் கெஞ்சி புகுந்தவள் அல்ல கண்டு ஆசைப்பட்டே கொள்ளும் பெண்டானவள் – முக்-பள்ளு:14/3
இல்லை சாடி எண்ணெயும் அயல் எல்லை சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும் உறை கொள்ளும் அவரை எவரையும் – முக்-பள்ளு:44/2
குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:44/4

மேல்

கொன்ற (1)

சுக்கிரத்தேவர் தாயை சக்கரத்தாழ்வார் கொன்ற துட்ட பிரமகத்தி விட்டுப்போக – முக்-பள்ளு:15/1

மேல்

கொன்றான் (2)

மகனை கொன்றான் உங்கள் தாணு அல்லோடி – முக்-பள்ளு:165/2
வாலியை கொன்றான் உங்கள் மாயன் அல்லோடி – முக்-பள்ளு:165/4

மேல்

கொன்றே (1)

மாமன் என்று பாராமல் முன் கஞ்சனை கொன்றே கண்கள் – முக்-பள்ளு:163/3

மேல்

கொன்றை (2)

கோடை போய்விட்ட சோபனம் கொண்டு குளிர்ந்த கொன்றை முறும் தளிர் ஓட – முக்-பள்ளு:17/3
கொன்றை குழல் பூங்குழலி செவிக்கு ஆகாதே – முக்-பள்ளு:45/4

மேல்

கொன்னைத்தாண்டி (1)

சாத்தன் பெரியான் கொன்னைத்தாண்டி அரியான் சடையான் உடையான் தட்டைச்சங்கன் புங்கன் – முக்-பள்ளு:114/1

மேல்