எ – முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எங்கள் 8
எங்கும் 5
எங்கே 3
எட்டாதவன் 1
எட்டி 1
எட்டிப்பார்க்க 1
எட்டெழுத்து 1
எடுக்கிறா 1
எடுத்தான் 1
எடுத்திடும் 1
எடுத்து 1
எடுப்பார் 1
எண்ணாயிரம் 1
எண்ணி 2
எண்ணிக்கை 1
எண்ணிப்பாராமல் 1
எண்ணெய் 1
எண்ணெய்மீன் 1
எண்ணெயும் 1
எண்ணெழுத்து 1
எத்த 1
எத்திசையும் 1
எதிர் 2
எதிர்கொண்டு 1
எதிர்த்த 1
எதிர்த்து 1
எதிர்ந்த 1
எதிர்ந்ததே 1
எதிர்ந்தால் 1
எதிராய் 1
எதிரும் 1
எந்தை 1
எம்பெருமான் 1
எமது 1
எய்தியது 1
எய்தில் 1
எயில் 1
எயிறும் 1
எயின 2
எரு 2
எருமை 1
எருமையை 1
எருவைச்சு 1
எருவைத்து 1
எருவைத்தே 1
எல்லா 1
எல்லாம் 24
எல்லி 1
எல்லை 2
எல்லோரும் 1
எல்லோருமே 1
எலாம் 1
எவர் 2
எவருக்கும் 1
எவரையும் 1
எழ 3
எழிலினர் 1
எழு 3
எழுதரு 1
எழுதி 1
எழுந்த 3
எழுந்தான் 1
எழுந்தானே 1
எழுந்திருந்து 1
எழுந்து 4
எழுப்பி 2
எழும் 2
எழும்பாமல் 1
எழுவி 1
எள்ளும் 1
எற்றியே 1
எறிந்த 1
என் 17
என்பது 2
என்பதை 1
என்பார் 1
என்பாராம் 3
என்றன் 1
என்றாய் 4
என்றார் 1
என்றால் 6
என்றாள் 2
என்றான் 3
என்று 24
என்றும் 4
என்றே 8
என்றோ 1
என்ன 14
என்னால் 1
என்னாலே 1
என்னும் 1
என்னை 7
என 11
எனக்கு 9
எனக்கே 1
எனவும் 4
எனவே 3
எனின் 1
எனுடன் 1
எனும் 2
எனை 4

எங்கள் (8)

செஞ்சிக்கும் கூடலுக்கும் தஞ்சைக்கும் ஆணை செல்லும் செங்கோல் வடமலேந்த்ரன் எங்கள் ஊரே – முக்-பள்ளு:14/1
அண்டர்நாயகர் செண்டலங்காரர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:19/4
வங்க வாரிதி வெம் கடு உண்ட மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:20/4
ஆதிநாதர் அனாதி ஒருத்தர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:23/4
மத்தம் சூடும் மதோன்மத்தரான மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:24/4
தன்மத்துக்கு இந்த பிழையை பொறும் எங்கள் ஆண்டே முலை – முக்-பள்ளு:104/1
இலங்காபுரியில் முன் நாள் எங்கள் அழகருடன் எதிர்த்த ராவணன் மகன் இந்திரசித்து – முக்-பள்ளு:111/1
பெருமாள் அடியானுக்கு பெண்டு இருந்துமே எங்கள்
பெருமாளை நீ பழித்து பேசலாமோடி – முக்-பள்ளு:171/1,2

மேல்

எங்கும் (5)

சங்கம் மேடைகள் எங்கும் உலாவும் தரங்கமீன் பொன் அரங்கிடை தாவும் – முக்-பள்ளு:20/1
திங்கள் மும்மாரி உலகு எங்கும் பெய்யவே தெய்வத்தை போற்றி வந்தால் கைதரும் காண் – முக்-பள்ளு:32/1
எங்கும் போற்றும் பெருவெள்ளை முன்னம் இராமர் சேனைக்கு உண்டாம்படி ஆச்சு – முக்-பள்ளு:69/1
எங்கும் காப்பு ஒலி பொங்கவே அதற்கு எதிராய் சங்கிலி அதிரவே இலங்கும் முலைகள் குலுங்கவே காதில் இசையும் பணிகள் அசையவே – முக்-பள்ளு:130/3
நிறுவி நிரை தெரிந்தார் நெருங்கி அரிந்தார் நிரப்பி அரிகள் எங்கும் பரப்பினாரே – முக்-பள்ளு:137/4

மேல்

எங்கே (3)

அதிசயம்-தன்னை கேட்கில் முக்கூடல் அழகர் பண்ணைக்கு உழவுமாடு எங்கே
விதிவசம்-தன்னில் ஆயிரமல்லியன் மேல் திசை முகம் சேர்ந்தது காணேன் – முக்-பள்ளு:71/1,2
எங்கே கிடக்கிறான் பள்ளன் நயினாரே ஏறா விண்ணப்பம் ஒன்று உண்டு – முக்-பள்ளு:96/1
எங்கே வந்தாலும் என்ன முக்கூடல்பள்ளி வீட்டில் – முக்-பள்ளு:156/3

மேல்

எட்டாதவன் (1)

பூவலய காவலன் எனவும் பூவை நிற சேவையன் எனவும் போதனும் எட்டாதவன் எனவும் பொய்யா மறை தேர் – முக்-பள்ளு:3/1

மேல்

எட்டி (1)

எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவ குடும்பன் மருமகன் ஈச்ச குடும்பன் பாச்சக்காலை எட்டி முட்டி தட்டியே – முக்-பள்ளு:134/3

மேல்

எட்டிப்பார்க்க (1)

மேடை ஏறி தன் காலை பவுசு விரித்த பீலி மயில் எட்டிப்பார்க்க
பேடை மாங்குயில் வாய் கொண்டு சேவல் பிளந்த வாய்-தனை பேசாமல் மூட – முக்-பள்ளு:17/1,2

மேல்

எட்டெழுத்து (1)

பா மேவு சொல் புரப்பார் பாவலர் என்று எட்டெழுத்து
நா மேவு பத்தர் பத்து நாவலரும் காப்பாமே – முக்-பள்ளு:மேல்

எடுக்கிறா (1)

எத்த துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறா போல கிட்டக்கிட்ட போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:133/4

மேல்

எடுத்தான் (1)

பிள்ளையார் அடியில் உறை நெல்லும் எடுத்தான் அவள் பெற்ற நெல்லுடன் கலந்து பெட்டியில் வைத்தான் – முக்-பள்ளு:151/2

மேல்

எடுத்திடும் (1)

எடுத்திடும் மடலன் மயல் பேய் தொடுத்திடும் சடலன் களவுகள் இன்னமும் அறியீர் அடியாள் சொன்னதும் குறியீர் – முக்-பள்ளு:85/3

மேல்

எடுத்து (1)

வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/3

மேல்

எடுப்பார் (1)

கடிதில் புரி முறுக்கி கதிர் கட்டி இறுக்கி கட்டின கட்டு எடுப்பார் களத்தில் விடுப்பார் – முக்-பள்ளு:138/1

மேல்

எண்ணாயிரம் (1)

இது அன்றியும் தின பூசை நெல் எண்ணாயிரம் கோட்டை மொண்டி – முக்-பள்ளு:147/1

மேல்

எண்ணி (2)

வெற்றி விழிக்கு எதிர்கொண்டு இரு கோடு உற்ற கருப்பு இன்னும் எதிர்ந்தால் விரிந்திடும் என்று எண்ணி சற்றே சரிந்த தனமும் – முக்-பள்ளு:6/3
இயல்பாய் பதனம்பண்ணி இருப்பது உண்டு அத்தனையும் எண்ணி அறிய வல்லார் எவர் காண் ஆண்டே – முக்-பள்ளு:110/4

மேல்

எண்ணிக்கை (1)

என சொல்வேன் நுகம் எண்ணிக்கை நாலுக்கு இருந்தது ஒன்று உழ தன் நுகம்-தன்னை – முக்-பள்ளு:74/3

மேல்

எண்ணிப்பாராமல் (1)

காமனை மருகன் என்று எண்ணிப்பாராமல் காய்ந்து – முக்-பள்ளு:163/1

மேல்

எண்ணெய் (1)

எண்ணெய் ஆர் பூந்தயிலம் ஏற்ற குழல் மூத்தபள்ளி – முக்-பள்ளு:55/1

மேல்

எண்ணெய்மீன் (1)

பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன் பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன் – முக்-பள்ளு:50/2

மேல்

எண்ணெயும் (1)

இல்லை சாடி எண்ணெயும் அயல் எல்லை சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும் உறை கொள்ளும் அவரை எவரையும் – முக்-பள்ளு:44/2

மேல்

எண்ணெழுத்து (1)

சுருதி எண்ணெழுத்து உண்மை பெரியநம்பியை கேளா துட்டர் செவி புற்று எனவே கொட்டால் வெட்டுவேன் – முக்-பள்ளு:11/2

மேல்

எத்த (1)

எத்த துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறா போல கிட்டக்கிட்ட போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:133/4

மேல்

எத்திசையும் (1)

எத்திசையும் பெய்ய மழையின் குறியுண்டாகியதே – முக்-பள்ளு:34/4

மேல்

எதிர் (2)

காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:46/4
எதிர் இல்லாத மயிலையும் செட்டி கொண்டு ஏகினான் பெட்டை என்றார் காண் ஆண்டே – முக்-பள்ளு:71/4

மேல்

எதிர்கொண்டு (1)

வெற்றி விழிக்கு எதிர்கொண்டு இரு கோடு உற்ற கருப்பு இன்னும் எதிர்ந்தால் விரிந்திடும் என்று எண்ணி சற்றே சரிந்த தனமும் – முக்-பள்ளு:6/3

மேல்

எதிர்த்த (1)

இலங்காபுரியில் முன் நாள் எங்கள் அழகருடன் எதிர்த்த ராவணன் மகன் இந்திரசித்து – முக்-பள்ளு:111/1

மேல்

எதிர்த்து (1)

உதைத்து விசைகொண்டு எதிர்த்து கடலின் உதரம் கீறி அதிரும் நீர் உதயவரைக்கும் பொதியவரைக்கும் ஒத்துப்போகும்படி முற்றும் போய் – முக்-பள்ளு:50/1

மேல்

எதிர்ந்த (1)

எதிர்ந்த கதிர் முளைத்தே இடை பழுத்து ஏற்ற விளைவு தோற்றம் தோற்றியதே – முக்-பள்ளு:136/4

மேல்

எதிர்ந்ததே (1)

சேனை புரவி அழகனார் மருகோனை பரவி அழகு பூந்தினையை வனத்தில் உதிர்த்து பாலை அனைய வனத்தை எதிர்ந்ததே – முக்-பள்ளு:மேல்

எதிர்ந்தால் (1)

வெற்றி விழிக்கு எதிர்கொண்டு இரு கோடு உற்ற கருப்பு இன்னும் எதிர்ந்தால் விரிந்திடும் என்று எண்ணி சற்றே சரிந்த தனமும் – முக்-பள்ளு:6/3

மேல்

எதிராய் (1)

எங்கும் காப்பு ஒலி பொங்கவே அதற்கு எதிராய் சங்கிலி அதிரவே இலங்கும் முலைகள் குலுங்கவே காதில் இசையும் பணிகள் அசையவே – முக்-பள்ளு:130/3

மேல்

எதிரும் (1)

எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும் இருப்பை ஈந்து கள்ளியும் கரை பொருப்பை ஈர்ந்து தள்ளியும் – முக்-பள்ளு:42/1

மேல்

எந்தை (1)

எந்தை திருமுக்கூடல் ஏரியில் நீ ஆடுவைத்து – முக்-பள்ளு:93/1

மேல்

எம்பெருமான் (1)

ஏறு புனல் கண்டதன் பின் எம்பெருமான் முக்கூடல் – முக்-பள்ளு:52/3

மேல்

எமது (1)

வேல் வெள்ளத்து ஆறு எமது மின் இறைக்கும் கார்காலம் – முக்-பள்ளு:41/2

மேல்

எய்தியது (1)

ஏவலுறும் பள்ளியர் வந்து எய்தியது சொல்வேனே – முக்-பள்ளு:5/4

மேல்

எய்தில் (1)

எய்தில் காட்டு நாவி பூனைக்கு இணையாமோடி – முக்-பள்ளு:156/4

மேல்

எயில் (1)

விண்ட பூ மது வண்டலிட்டு ஓடும் வெயில் வெய்யோன் பொன் எயில் வழி தேடும் – முக்-பள்ளு:19/3

மேல்

எயிறும் (1)

துடிக்கும் இதழை கடிக்கும் எயிறும் சோர்ந்து விரிந்த கூந்தலும் தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த கிடையும் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:129/4

மேல்

எயின (2)

முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/2
முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/2

மேல்

எரு (2)

போயும் எருமை பதறவே உரம் ஈயும் எரு மை சிதறவே புழுதி சாலை நனைத்துமே குளிர் கொழுதி சாலை அனைத்துமே – முக்-பள்ளு:46/2
மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல் வடிவழகர் வயலில் எரு பொடி உழவில் வைக்கவே – முக்-பள்ளு:82/3

மேல்

எருமை (1)

போயும் எருமை பதறவே உரம் ஈயும் எரு மை சிதறவே புழுதி சாலை நனைத்துமே குளிர் கொழுதி சாலை அனைத்துமே – முக்-பள்ளு:46/2

மேல்

எருமையை (1)

ஆனை குட்டியை போல் எருமையை ஞானிச்செட்டி கைக்கே பணம் பதினைஞ்சுக்கு கொடுத்தான் கொழுந்தியார் குஞ்சுக்கு இட்டெடுத்தான் – முக்-பள்ளு:89/1

மேல்

எருவைச்சு (1)

கோனை கண்டவனோ கோன் தலை பேனை கண்டவனோ போய் அவள் குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான் – முக்-பள்ளு:89/3

மேல்

எருவைத்து (1)

பொய்த்த மொழி பேசி முதல் போன பள்ளன் மீண்டும் எருவைத்து
வயலுற்று வருவது போல் வந்தானே – முக்-பள்ளு:91/3,4

மேல்

எருவைத்தே (1)

சேர செய் பல பேரிட்டு உள்ளது எல்லாம் எருவைத்தே இன்று திரும்பினேன் இன்னம் தேவரீர் ஏவல் விரும்பினேன் ஆண்டே – முக்-பள்ளு:92/8

மேல்

எல்லா (1)

எல்லா கணக்கு உரைத்தும் என் பேரும் என் கணக்கும் – முக்-பள்ளு:149/1

மேல்

எல்லாம் (24)

போதில் மேய்ந்து இள மேதி செருக்கும் புனம் எல்லாம் தண் மலர் விண்டிருக்கும் – முக்-பள்ளு:23/3
நித்தம் சாறு அயர் சித்ரம் படைக்கும் நிதி எல்லாம் தன் பதியில் கிடைக்கும் – முக்-பள்ளு:24/3
மாரி பொருட்டால் வரம் குறித்து மள்ளர் எல்லாம்
சேரி குரவை எழ தெய்வநிலை போற்றினரே – முக்-பள்ளு:31/3,4
பத்தி மறவாத பண்ணை பட்சேரி பள்ளர் எல்லாம்
புத்தியுடன் தெய்வநிலை போற்றிய பின் வான முகில் – முக்-பள்ளு:34/2,3
பண்ணையானோடு உரைத்தாள் பள்ளன் மன கள்ளம் எல்லாம்
வெண்ணெய் ஆர் வாயின் இசை வேய் அழகர் மாயம் இதே – முக்-பள்ளு:55/2,3
பெட்டியால் வாரி பட்டடை நெல் எல்லாம் பேய்த்தண்ணீருக்கு தேய்த்தான் காண் ஆண்டே – முக்-பள்ளு:57/4
அடிமைக்கு நேற்று இரா எல்லாம் உறக்கம் இல்லை அழகர் அறிவார் காண் ஆண்டே – முக்-பள்ளு:59/4
அங்குமிங்கும் கொண்டாடுவது எல்லாம் அறிவேன் பார கடுக்கன் காண் ஆண்டே – முக்-பள்ளு:69/4
கூடினால் கூடும் வல் வித்தை எல்லாம் குருகைமாறனை கேளும் காண் ஆண்டே – முக்-பள்ளு:70/4
மற்றை காளைகள் எல்லாம் நயினார் வடமலையப்பர் பேரிட்டு நிற்கும் – முக்-பள்ளு:72/2
ஆதி நாள் வயல் வீதி கண்ணாறு எல்லாம் ஆடு வைத்து இன்னும் மேடும் திருத்த – முக்-பள்ளு:75/3
உழவு வயல் உள்ளது எல்லாம் உரம்வைப்பேன் ஆண்டே – முக்-பள்ளு:80/2
தேனுக்குள் பாலாய் அவள் மஞ்சள் மேனிக்கு மாலாய் பணம் எல்லாம் சிந்தியே கெட்டான் எனை இன்று சந்தியில் விட்டான் – முக்-பள்ளு:87/2
சேர செய் பல பேரிட்டு உள்ளது எல்லாம் எருவைத்தே இன்று திரும்பினேன் இன்னம் தேவரீர் ஏவல் விரும்பினேன் ஆண்டே – முக்-பள்ளு:92/8
வழியே போகும் களவு எல்லாம் தலையின் மேல் வலித்து இட்டு பற்றுக்குறித்தாள் – முக்-பள்ளு:94/2
வடு வந்தால் மறைக்கப்போமோ வருவது எல்லாம் வந்துதீரும் மருதூர்ப்பள்ளி – முக்-பள்ளு:95/4
வட்டிலுக்குள் வாய்வைத்தது எல்லாம் துறை வடிவழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:100/4
மலங்காமல் இந்தப்படி வகை எல்லாம் தேடிவைத்தேன் வயலிலே நாளேர் இட வாரீர் ஆண்டே – முக்-பள்ளு:111/4
கூத்தன் முதலாய் உள்ள பள்ளர் எல்லாம் குரவையிட்டு ஏரை பூட்டி கூடி உழுதார் – முக்-பள்ளு:114/4
உழுத உழவை கண்டு களித்தான் பள்ளர் உள்ளபேரை எல்லாம் விளித்தான் – முக்-பள்ளு:121/1
தொழுது தெய்வக்கடன் கழித்தான் அந்த தொளியில் விதைகள் எல்லாம் தெளித்தான் – முக்-பள்ளு:121/2
நாறும் துழாய் அழகர் நாட்டில் பழனம் எல்லாம்
ஏறும் பயிர் தரு நாற்று இன்று நடவேணும் என்றே – முக்-பள்ளு:124/1,2
இங்கு வந்தால் உன் சலுகை எல்லாம் தெரியும் – முக்-பள்ளு:153/4
நஞ்சை எல்லாம் உண்டான் உங்கள் நாதன் அல்லோடி – முக்-பள்ளு:169/2

மேல்

எல்லி (1)

சின்னி குருந்தி அருதி மருதி செல்லி இருவி எல்லி கலிச்சி திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி செம்பி வம்பி தம்பிச்சாள் – முக்-பள்ளு:126/1

மேல்

எல்லை (2)

இல்லை சாடி எண்ணெயும் அயல் எல்லை சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும் உறை கொள்ளும் அவரை எவரையும் – முக்-பள்ளு:44/2
குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:44/4

மேல்

எல்லோரும் (1)

ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே – முக்-பள்ளு:33/4

மேல்

எல்லோருமே (1)

ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே – முக்-பள்ளு:மேல்

எலாம் (1)

குன்று எலாம் தரமில்லை என்று ஆடவர் கொம்பு_அனார் முலை குன்றில் பதுங்க – முக்-பள்ளு:18/2

மேல்

எவர் (2)

இன்றைக்கு இரவில் இவளை எவர் தேற்றுவரே – முக்-பள்ளு:45/2
இயல்பாய் பதனம்பண்ணி இருப்பது உண்டு அத்தனையும் எண்ணி அறிய வல்லார் எவர் காண் ஆண்டே – முக்-பள்ளு:110/4

மேல்

எவருக்கும் (1)

ஏருக்குள் மாடும் முந்தின காருக்குள் சூடும் தன் கிளை எவருக்கும் பொதுவாம் ஆட்கொள்ளும் அவருக்கும் அதுவாம் – முக்-பள்ளு:88/3

மேல்

எவரையும் (1)

இல்லை சாடி எண்ணெயும் அயல் எல்லை சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும் உறை கொள்ளும் அவரை எவரையும்
தொல்லை பாடு பண்ணியும் துறுகல்லை பாடு நண்ணியும் தொடுத்து பூவை நெற்றியை தொட மடுத்து பூவை எற்றியே – முக்-பள்ளு:44/2,3

மேல்

எழ (3)

சேரி குரவை எழ தெய்வநிலை போற்றினரே – முக்-பள்ளு:31/4
முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/2
முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ
பிதிரும் காளை விழியுடன் குடல் அதிரும் காளை மொழியுடன் பெரு மறத்தியர் அல்லவே எனும் கரு மறத்தியர் செல்லவே – முக்-பள்ளு:42/2,3

மேல்

எழிலினர் (1)

முத்தேவில் பெரியவர் கரியவர் முப்பான்மை தொழிலினர் எழிலினர் முக்கூடல் குழகர் மெய் அழகர் பள் மூவகை தமிழ்க்கே – முக்-பள்ளு:4/2

மேல்

எழு (3)

கங்கணம் கட்டியே எழு செங்கடாயும் கரையடி சாத்தா முன்னே விரைய வெட்டும் – முக்-பள்ளு:32/4
முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில் பள்ளர் முழுதும் குரவையிட்ட எழு தினம் ஆடீர் – முக்-பள்ளு:36/4
வயல் உழும் குத்தி ஒன்று வளைமேழி ஒன்று இந்த வகை ஏழும் அந்த எழு மரத்தால் செய்தே – முக்-பள்ளு:110/3

மேல்

எழுதரு (1)

பத்தாக பெயர்தரும் உயர்தரும் பத்தாளில் பருதியர் சுருதியர் பட்டோலைக்கு எழுதரு முழுது உணர் பா வகுத்து உரைத்தோர் – முக்-பள்ளு:4/3

மேல்

எழுதி (1)

ஈடிலா வகைக்கு இன்னம் எழுதி இராசவாணனை இரண்டு பங்கிட்டு – முக்-பள்ளு:70/1

மேல்

எழுந்த (3)

காவுக்கு இறைவனாகும் இந்திரன் ஏவல் பணிகொண்டு எழுந்த கார் கடலில் படிந்து திருவில் கொட்டி அடல் முக்கூடல் அரியுமாய் – முக்-பள்ளு:38/1
தாவி பறந்து பணிகள் பதுங்க கோவித்து எழுந்த கருடனும் தானே ஆகி உலகுக்கு உரிமை ஊனே ஆகி உயிருமாய் – முக்-பள்ளு:38/3
எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவ குடும்பன் மருமகன் ஈச்ச குடும்பன் பாச்சக்காலை எட்டி முட்டி தட்டியே – முக்-பள்ளு:134/3

மேல்

எழுந்தான் (1)

படுத்திடும் பள்ளன் வேலையை கெடுத்திடும் கள்ளன் எனை கண்டு பதறியே விழுந்தான் கைகால் உதறியே எழுந்தான்
எடுத்திடும் மடலன் மயல் பேய் தொடுத்திடும் சடலன் களவுகள் இன்னமும் அறியீர் அடியாள் சொன்னதும் குறியீர் – முக்-பள்ளு:85/2,3

மேல்

எழுந்தானே (1)

பாங்கினொடு முக்கூடல்பள்ளன் எழுந்தானே – முக்-பள்ளு:மேல்

எழுந்திருந்து (1)

படுத்த கிடை எழுந்திருந்து கொள்ளாய் வடிவழகர் பாதம் மறவாத பண்ணை குடும்பா – முக்-பள்ளு:118/4

மேல்

எழுந்து (4)

இசையாத வார்த்தை சொன்னாய் என்று பண்ணையான் எழுந்து
கசையால் அடிப்பன் என்று கண் சிவந்து கூறினனே – முக்-பள்ளு:61/3,4
புத்திசொல்லி உன் சிறை நான் போய் மீட்பேன் என்று எழுந்து
முத்தி தரும் மால் அழகர் முக்கூடல் மூத்தபள்ளி – முக்-பள்ளு:102/2,3
பள்ளன் எழுந்து நிலை தரித்தான் நின்ற பள்ளியர் முகம் பார்த்து சிரித்தான் – முக்-பள்ளு:120/1
புலி போல் எழுந்து சிசுபாலன் வையவே ஏழை – முக்-பள்ளு:166/3

மேல்

எழுப்பி (2)

குடிலில் கிடந்த பள்ளனை முக்கூடல்பள்ளி கூப்பிட்டு எழுப்பி முந்தாநாள் – முக்-பள்ளு:59/1
பந்திப்படுத்தி நிரையை வகுத்து பரவை ஒலி போல் குரவை எழுப்பி பயிர் நெருங்காமல் கலந்து போகாமல் பதியும் பள்ளீரே – முக்-பள்ளு:125/4

மேல்

எழும் (2)

சிறைபட்டுள்ளது விண் எழும் புள்ளு திரிபட்டுள்ளது நெய் படும் தீபம் – முக்-பள்ளு:21/2
துள்ளி எழும் காளை தொடர்ந்து பள்ளனை பாய்ந்து – முக்-பள்ளு:116/1

மேல்

எழும்பாமல் (1)

உள்ள பேர் எனக்கு தர கை எழும்பாமல் காலால் உழுது வாயால் அதட்டி உழப்பிப்போட்டான் – முக்-பள்ளு:151/3

மேல்

எழுவி (1)

நன்னி உடைச்சி சடைச்சி மூக்கி நல்லி பூலி ஆலி வேலி நாச்சி பேச்சி சுந்தி எழுவி நாகி போகிலாள் – முக்-பள்ளு:126/2

மேல்

எள்ளும் (1)

இல்லை சாடி எண்ணெயும் அயல் எல்லை சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும் உறை கொள்ளும் அவரை எவரையும் – முக்-பள்ளு:44/2

மேல்

எற்றியே (1)

தொல்லை பாடு பண்ணியும் துறுகல்லை பாடு நண்ணியும் தொடுத்து பூவை நெற்றியை தொட மடுத்து பூவை எற்றியே
குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:44/3,4

மேல்

எறிந்த (1)

கடுக நீ போய்விடு சும்மா சகதியிலே கல் எறிந்த கதை ஆக்காதே – முக்-பள்ளு:95/3

மேல்

என் (17)

பாவலனுக்கு ஆவலன் எனவும் பார் அறிய தாரணைசெயும் என் பாடலில் முக்கூடலின் அழகர் பள்ளேசலிலே – முக்-பள்ளு:3/2
தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:3/4
காவலராம் தேவரை முன் கைதொழுது பின்னரும் என்
ஆவலினாலே அழகர் ஆசூர் வளநாடும் – முக்-பள்ளு:5/1,2
பக்கமே தூர போயும் தக்க சோறு என் வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர் – முக்-பள்ளு:15/3
காயும் பொருப்பு என் களபத்தன பொருப்பே – முக்-பள்ளு:39/2
போக்கு நீக்கு இல்லை மூக்கிலே கோபம் என் புத்தியும் கேளான் சத்துரு நீலன் – முக்-பள்ளு:56/3
இப்பால் அழகர் செய்ததை காணலாம் என்றே இருக்கிறேன் என் செய்வேன் ஆண்டே – முக்-பள்ளு:60/4
பழகினீர் அறிவீர் என் சமர்த்து பயிரிடா கள்ள பள் அல்லவே நான் – முக்-பள்ளு:67/1
ஏச்சுக்கு பிறந்தான் வரவர கூச்சத்தை மறந்தான் இளையவள் இளமையை குறித்தான் முதிரும் என் வளமையை பறித்தான் – முக்-பள்ளு:90/1
மக்கள் ஆணை என் ஆணை உன் ஆணை நீ வார்த்த கஞ்சி குடித்து கிடப்பேன் – முக்-பள்ளு:101/3
தேவரீர் சித்தம் என் பாக்கியம் காண் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:105/4
வடுப்படா மேனி வடுப்படுமோ நன்று நன்று என் வல்லாளன் சமர்த்தும் போய்விடுமோ – முக்-பள்ளு:118/1
சேற்று கால் மள்ளருக்கு தென்றல் கால் என் ஆமோ – முக்-பள்ளு:127/2
எல்லா கணக்கு உரைத்தும் என் பேரும் என் கணக்கும் – முக்-பள்ளு:149/1
எல்லா கணக்கு உரைத்தும் என் பேரும் என் கணக்கும் – முக்-பள்ளு:149/1
உன்னை கொண்டான் என்னை கண்டு என் ஊரிலே வந்தான் – முக்-பள்ளு:155/4
வகை வந்தால் பள்ளனும் என் வசம் ஆகானோ – முக்-பள்ளு:160/2

மேல்

என்பது (2)

சிற்றாறு என்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மன பெருமை போல் சித்திராநதி பெருகி வார சித்திரம் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:51/4
முற்றும் கணக்கு என்னால் சொல்ல முடியாது என்பது அறிவீர் சேரில் – முக்-பள்ளு:148/1

மேல்

என்பதை (1)

கொழியல் அரிசி இட்டாலும் குப்பை கிண்டும் கோழி என்பதை புதுக்கினாள் – முக்-பள்ளு:94/3

மேல்

என்பார் (1)

பக்கமே தூர போயும் தக்க சோறு என் வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர் – முக்-பள்ளு:15/3

மேல்

என்பாராம் (3)

சாத்தி மகள் காத்தி-தன்னை பேத்தி என்பாராம் மெள்ள சன்னையாய் களத்திலே வா பின்னை என்பாராம் – முக்-பள்ளு:54/2
சாத்தி மகள் காத்தி-தன்னை பேத்தி என்பாராம் மெள்ள சன்னையாய் களத்திலே வா பின்னை என்பாராம்
வாய்த்த தடி கம்பை ஊன்றி சாய்த்து பார்ப்பாராம் ஊத்தை வாய்க்கு மெல்ல புகைகுடிக்க தீக்கு போவாராம் – முக்-பள்ளு:54/2,3
காத்திராத பள்ளனை பரமார்த்தி என்பாராம் குச்சில் கண்ணை சாய்ப்பாராம் முக்கூடல் பண்ணைக்காரனார் – முக்-பள்ளு:54/4

மேல்

என்றன் (1)

கட்டி நான் பேசப்போமோ அரண்மனை காரியம் என்றன் கைக்குள்ளே உண்டோ – முக்-பள்ளு:100/3

மேல்

என்றாய் (4)

நாவி என்றாய் பூனை என்றாய் மருதூர்ப்பள்ளி நாவி – முக்-பள்ளு:157/1
நாவி என்றாய் பூனை என்றாய் மருதூர்ப்பள்ளி நாவி – முக்-பள்ளு:157/1
திருமால் அடிமை என்றாய் சால பசித்தால் ஆரும் – முக்-பள்ளு:171/3
முந்த வைதால் வைவேன் என்றாய் மருதூர்ப்பள்ளி சற்றே – முக்-பள்ளு:173/1

மேல்

என்றார் (1)

எதிர் இல்லாத மயிலையும் செட்டி கொண்டு ஏகினான் பெட்டை என்றார் காண் ஆண்டே – முக்-பள்ளு:71/4

மேல்

என்றால் (6)

தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3

இடை என்றால் வஞ்சி கொடியை போல் வரும் நடை என்றால் இளம் பிடியை போல் இருந்த சாயலுக்கு இப்பால் குருந்தி திருந்தினாள் அடி பள்ளீரே – முக்-பள்ளு:128/4
இடை என்றால் வஞ்சி கொடியை போல் வரும் நடை என்றால் இளம் பிடியை போல் இருந்த சாயலுக்கு இப்பால் குருந்தி திருந்தினாள் அடி பள்ளீரே – முக்-பள்ளு:128/4

மேல்

என்றாள் (2)

விடிய போ வேலையில் என்றாள் அவனும் போனான் வெள்ளமும் மேல்வரத்து ஆச்சு – முக்-பள்ளு:59/2
மறுகிமறுகி சருவ குடும்பன் மச்சினி கூழைப்பிச்சியை வா என்றான் அவள் போ என்றாள் இவன் மறித்தான் அவள் பின் பிரித்து போய் – முக்-பள்ளு:132/3

மேல்

என்றான் (3)

விள்ளடா என்றான் – முக்-பள்ளு:132/3

மேல்

என்று (24)

பா மேவு சொல் புரப்பார் பாவலர் என்று எட்டெழுத்து – முக்-பள்ளு:6/3
ஒரு போது அழகர் தாளை கருதார் மனத்தை வன்பால் உழ பார்க்கும் தரிசு என்று கொழுப்பாய்ச்சுவேன் – முக்-பள்ளு:11/1
திருவாய்மொழி கல்லாரை இரு கால் மாடுகள் ஆக்கி தீத்தீ என்று உழக்கோலால் சாத்துவேன் ஆண்டே – முக்-பள்ளு:11/4
குன்று எலாம் தரமில்லை என்று ஆடவர் கொம்பு_அனார் முலை குன்றில் பதுங்க – முக்-பள்ளு:18/2
கூவாய் என்று அந்த குயில் மொழியை கொண்டாரே – முக்-பள்ளு:27/4
வாக்குவாதம் உண்டாக்கினாள் என்று என்னை வைதாலும் வையும் மெய்தான் இது ஆண்டே – முக்-பள்ளு:56/4
துப்பான கலுங்கில் மறுகால் நிலையாது என்று சொன்னார்கள் இன்னது என்று அறியேன் – முக்-பள்ளு:60/3
துப்பான கலுங்கில் மறுகால் நிலையாது என்று சொன்னார்கள் இன்னது என்று அறியேன் – முக்-பள்ளு:60/3
இசையாத வார்த்தை சொன்னாய் என்று பண்ணையான் எழுந்து – முக்-பள்ளு:61/3
கசையால் அடிப்பன் என்று கண் சிவந்து கூறினனே – முக்-பள்ளு:61/4
ஏது செய்வேன் என்று ஓதிய பள்ளன்-தன் ஏய்ப்பு கேட்டு அந்த பேய் பண்ணைக்காரன் – முக்-பள்ளு:75/1
பழிகாரி முக்கூடல்பள்ளி சரடு செய்த பள்ளன் என்று முகம் பாராமல் – முக்-பள்ளு:94/1
சக்களத்தி அவள் என்று உனக்கு சரி சொன்னால் அந்த தாழ்ச்சி உனக்கே – முக்-பள்ளு:101/2
புத்திசொல்லி உன் சிறை நான் போய் மீட்பேன் என்று எழுந்து – முக்-பள்ளு:102/2
கதையோ முன் மலைகளையும் முறித்தாய் அந்த பலம் கண்டிலேன் நான் என்று ஓடி மறித்தாய் – முக்-பள்ளு:117/2
கள்ளால் உற்றது மீறியே நிலைகொள்ளாமல் தடுமாறியே காப்பை காட்டு என்று கையை பிடிக்கும் கோப்பை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:131/4
பொடி வைக்கோலை தவிர்ப்பார் பொலியை குவிப்பார் பொலி தூற்றி ஆற்றி பொலி பொலி என்று அளப்பார் – முக்-பள்ளு:138/4
அளந்த பொலி இத்தனை என்று ஆதாயமும் செலவும் – முக்-பள்ளு:140/2
தள்ளுமண்ணும் கல்லும் சற்றே நெல்லும் கலந்தே பங்கு தந்தோம் என்று எனக்கு இம்மட்டும் தந்தான் பள்ளீரே – முக்-பள்ளு:151/4
மாமன் மகள் என்று என்னை மறித்துக்கொண்டான் – முக்-பள்ளு:155/2
மங்கை ஒரு பங்கு இருக்க யோகி என்று தான் கையில் – முக்-பள்ளு:162/1
காமனை மருகன் என்று எண்ணிப்பாராமல் காய்ந்து – முக்-பள்ளு:163/1
மாமன் என்று பாராமல் முன் கஞ்சனை கொன்றே கண்கள் – முக்-பள்ளு:163/3

மேல்

என்றும் (4)

இக்கரை காலில் பொருநை அக்கரை காலின் மழைக்கு ஏமம் என்றும் சாமம் என்றும் நாம் அல்லோ போவோம் – முக்-பள்ளு:36/1
இக்கரை காலில் பொருநை அக்கரை காலின் மழைக்கு ஏமம் என்றும் சாமம் என்றும் நாம் அல்லோ போவோம் – முக்-பள்ளு:36/1
தினச்சத்திரத்துக்கு என்றும் பெரியநம்பி திருமாளிகைக்கு என்றும் சில நெல்லு கொடுப்பார் – முக்-பள்ளு:139/1
தினச்சத்திரத்துக்கு என்றும் பெரியநம்பி திருமாளிகைக்கு என்றும் சில நெல்லு கொடுப்பார் – முக்-பள்ளு:139/1

மேல்

என்றே (8)

இப்பால் அழகர் செய்ததை காணலாம் என்றே இருக்கிறேன் என் செய்வேன் ஆண்டே – முக்-பள்ளு:60/4
பாதி கேட்பதும் சோதனை செய்வதும் பார்க்கலாம் பின்பு தீர்க்கலாம் என்றே
ஆதி நாள் வயல் வீதி கண்ணாறு எல்லாம் ஆடு வைத்து இன்னும் மேடும் திருத்த – முக்-பள்ளு:75/2,3
அப்படியே தப்பாமல் ஆடு வைக்கவேணும் என்றே
ஒப்பரிய பள்ளன் உவந்து பண்ணை ஆண்டவனார் – முக்-பள்ளு:76/2,3
அடைவுபட்ட செய்தி பண்ணை ஆண்டவனார் கேளும் என்றே
படைதொடுத்து முக்கூடல்பள்ளி முறையிட்டாளே – முக்-பள்ளு:84/3,4
பத்தர் பணி முக்கூடல் பரமனார் அழகர்-தம் பண்ணைக்கு ஏரிடவேணும் பள்ளா என்றே
உத்தாரம் பண்ணைக்காரன் உரைத்தான் உரையை கேட்ட உடனே குடும்பன் ஏர் கொண்டு உழ சென்றானே – முக்-பள்ளு:113/3,4
ஏறும் பயிர் தரு நாற்று இன்று நடவேணும் என்றே
தேறும்படி அறிக்கைசெய்து பண்ணை ஆண்டவனார் – முக்-பள்ளு:124/2,3
பேரினும் மென்மேலும் பெருகுதற்கு சாட்சி என்றே
காரின் உருவ சுருதிக்காரணர் முக்கூடல் வயல் – முக்-பள்ளு:135/2,3
சொல்லாது விட்ட பள்ளன் சூதை இனி கேளும் என்றே
வில்லாளர் முக்கூடல் மிக்க பள்ளி தன் பொருமல் – முக்-பள்ளு:149/2,3

மேல்

என்றோ (1)

சாரங்கெட்ட மருது என்றோ சாதிக்க வாராய் – முக்-பள்ளு:160/4

மேல்

என்ன (14)

காட்டு வளம் என்ன கள மருதூர் செய்வாரே – முக்-பள்ளு:16/4
அப்பால் அவனுக்கு ஒன்றானால் நயினார் சேதம் ஆமே அடியாளுக்கு என்ன
துப்பான கலுங்கில் மறுகால் நிலையாது என்று சொன்னார்கள் இன்னது என்று அறியேன் – முக்-பள்ளு:60/2,3
நீச்சுக்கு மேலே நிலைப்பு என்ன பேச்சு கையாலே உழ சற்றே நினைப்பதும் இல்லை எனை தேடி கனைப்பதும் இல்லை – முக்-பள்ளு:90/2
மத யானை முதல் பிடிக்க வல்லாய் இந்த மாட்டுக்கு மாட்டாமல் போனது என்ன சொல்லாய் – முக்-பள்ளு:117/1
குடை குன்றாய் பசு கிடை நின்றார் முக்கூடல் அழகர் வயலுள்ளே கொண்டாடிக்கொண்டு நடச்செய்தே இன்று கண்டோம் இது என்ன புதுமையோ – முக்-பள்ளு:128/2
மறுபடி அவன் சொன்ன வகை நன்று என்ன மள்ளர் பலரும் நாடி வயலில் கூடி – முக்-பள்ளு:137/2
முண்டை முறையிட்டது என்ன முக்கூடல்பள்ளி உங்கள் – முக்-பள்ளு:152/1
சொன்னால் எனக்கு என்ன பயம் மருதூர்ப்பள்ளி சென்று – முக்-பள்ளு:153/1
சலுகை இல்லாமல் என்ன மருதூர்ப்பள்ளி நானும் – முக்-பள்ளு:154/1
அங்கே அவன் வந்தால் என்ன மருதூர்ப்பள்ளி ஊரார் – முக்-பள்ளு:156/1
எங்கே வந்தாலும் என்ன முக்கூடல்பள்ளி வீட்டில் – முக்-பள்ளு:156/3
அஞ்ச சொன்னது என்னை என்ன மருதூர்ப்பள்ளி உனக்கு – முக்-பள்ளு:158/1
வீறு சொன்னது என்ன மாடுதானும் இல்லாமல் பட்சி – முக்-பள்ளு:170/3
சொன்னால் என்ன நீயும் பொறு நானும் பொறுத்தேன் கிளை – முக்-பள்ளு:174/1

மேல்

என்னால் (1)

முற்றும் கணக்கு என்னால் சொல்ல முடியாது என்பது அறிவீர் சேரில் – முக்-பள்ளு:148/1

மேல்

என்னாலே (1)

என்னாலே ஆகாதது உண்டோ முக்கூடல்பள்ளி பள்ளன் – முக்-பள்ளு:153/3

மேல்

என்னும் (1)

ஆருக்கும் பணியான் சீவலப்பேரிக்குள் கணியான் வில் என்னும் அரிப்பிட்டு போட்டான் பள் வரி தெரிப்பிட்டு கேட்டான் – முக்-பள்ளு:88/1

மேல்

என்னை (7)

பத்திலே பதினொன்றாக வைத்தானில்லை குடும்பன் பண்டே சரடுகட்டி கொண்டான் என்னை
முத்தமிழ் நாட்டு அழகர் கொத்தடியானுக்கு ஆன முக்கூடல் மூத்தபள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:13/3,4
வாக்குவாதம் உண்டாக்கினாள் என்று என்னை வைதாலும் வையும் மெய்தான் இது ஆண்டே – முக்-பள்ளு:56/4
விக்கல் வாய் பண்ணை ஆண்டையை கேட்டு என்னை மீட்டுக்கொள்ளடி முக்கூடல்பள்ளி – முக்-பள்ளு:101/4
தொண்டைகட்ட கூப்பிடாதே கூப்பிட்டு என்னை வைது – முக்-பள்ளு:152/3
மாமன் மகள் என்று என்னை மறித்துக்கொண்டான் – முக்-பள்ளு:155/2
உன்னை கொண்டான் என்னை கண்டு என் ஊரிலே வந்தான் – முக்-பள்ளு:155/4
அஞ்ச சொன்னது என்னை என்ன மருதூர்ப்பள்ளி உனக்கு – முக்-பள்ளு:158/1

மேல்

என (11)

பூ மேவும் நீல வெற்பில் பொன் நிறமும் உண்டு என
பூ மா மேவும் முக்கூடல் மால் அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:1/3
பணிவிடைசெய தானவர் வானவர் பழ மகபதி பேரியல் சீரியல் பகர் இளமுறைக்கோன் என வான் நெறி பாலிப்பவரே – முக்-பள்ளு:1/4
வென்றல்லோவிடுவேன் என வேள் இருள் வேழம் கூடி மதி குடை தாவ – முக்-பள்ளு:18/1
கதிரும் காலும் போலவே சென்று உதிரம் காலும் சூல வேல் கன்னி முலையில் சுரந்த பால் என முன்னி முலையில் பரந்ததே – முக்-பள்ளு:42/4
நல் நீர் மருதம் என நால் வளம் உண்டாயதுவே – முக்-பள்ளு:43/3
என சொல்வேன் நுகம் எண்ணிக்கை நாலுக்கு இருந்தது ஒன்று உழ தன் நுகம்-தன்னை – முக்-பள்ளு:74/3
கிடை நமக்கு நல்ல கிடை என சென்றான் குடும்பன் – முக்-பள்ளு:84/2
சிந்தை தொட்டுப்பார் என கண் சிவந்து பண்ணைக்காரன் அங்கே – முக்-பள்ளு:93/3
மெத்த நன்று என பார்த்து மேலான வேதியர்கள் மிக்க துலா முகிழ்த்தம் விதித்தார் இன்று – முக்-பள்ளு:113/2
முதிர்ந்த தமிழிசைக்கு முடி அசைக்கும் முதல்வர் என தழைத்து முதல் குழைந்தே – முக்-பள்ளு:136/2

மேல்

எனக்கு (9)

உழவுதான் ஒரு பன்றி உழும் தரை ஒன்று அல்லாமல் இரண்டு எனக்கு இல்லை – முக்-பள்ளு:67/2
தான் உட்கை போலும் சளம்செய்து மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையையும் காட்டி எனக்கு ஆசைவலையையும் பூட்டி – முக்-பள்ளு:87/1
செங்கான் எனக்கு மூத்தவன் ஏதுக்கோ தெய்வத்துக்கு ஆக்கிவைத்தானாம் – முக்-பள்ளு:96/2
உள்ள பேர் எனக்கு தர கை எழும்பாமல் காலால் உழுது வாயால் அதட்டி உழப்பிப்போட்டான் – முக்-பள்ளு:151/3
தள்ளுமண்ணும் கல்லும் சற்றே நெல்லும் கலந்தே பங்கு தந்தோம் என்று எனக்கு இம்மட்டும் தந்தான் பள்ளீரே – முக்-பள்ளு:151/4
மூப்புச்சொம் எனக்கு தந்தால் மூதலியடி – முக்-பள்ளு:152/2
சொன்னால் எனக்கு என்ன பயம் மருதூர்ப்பள்ளி சென்று – முக்-பள்ளு:153/1
வாராதோ எனக்கு கோபம் முக்கூடல்பள்ளி முந்த – முக்-பள்ளு:172/3
இத்தனை உண்டோ எனக்கு புத்தி இல்லையோ – முக்-பள்ளு:173/4

மேல்

எனக்கே (1)

நத்து ஓல குருகையில் வருகையில் நட்பாக புளி நடு வெளிபடு நல் போதத்து அருள் பொழி திருவிழி ஞான வித்து எனக்கே – முக்-பள்ளு:மேல்

எனவும் (4)

பூவலய காவலன் எனவும் பூவை நிற சேவையன் எனவும் போதனும் எட்டாதவன் எனவும் பொய்யா மறை தேர் – முக்-பள்ளு:3/1
பூவலய காவலன் எனவும் பூவை நிற சேவையன் எனவும் போதனும் எட்டாதவன் எனவும் பொய்யா மறை தேர் – முக்-பள்ளு:3/1
பூவலய காவலன் எனவும் பூவை நிற சேவையன் எனவும் போதனும் எட்டாதவன் எனவும் பொய்யா மறை தேர் – முக்-பள்ளு:3/1
பாவலனுக்கு ஆவலன் எனவும் பார் அறிய தாரணைசெயும் என் பாடலில் முக்கூடலின் அழகர் பள்ளேசலிலே – முக்-பள்ளு:3/2

மேல்

எனவே (3)

பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும் பக்க கொண்டையினும் குழையினும் தைக்க குதிக்க – முக்-பள்ளு:8/2
சுருதி எண்ணெழுத்து உண்மை பெரியநம்பியை கேளா துட்டர் செவி புற்று எனவே கொட்டால் வெட்டுவேன் – முக்-பள்ளு:11/2
மாட்டு குறும்பு அடங்க மறிப்பன் எனவே வடிவழக குடும்பன் வந்து மறித்தான் – முக்-பள்ளு:115/3

மேல்

எனின் (1)

பள்ள கணவன் எனின் பாவனை வேறு ஆகாதோ – முக்-பள்ளு:12/2

மேல்

எனுடன் (1)

அசையாமல் பள்ளனை உள்ளாக்கி வைத்துக்கொண்டு எனுடன்
இசையாத வார்த்தை சொன்னாய் என்று பண்ணையான் எழுந்து – முக்-பள்ளு:61/2,3

மேல்

எனும் (2)

பிதிரும் காளை விழியுடன் குடல் அதிரும் காளை மொழியுடன் பெரு மறத்தியர் அல்லவே எனும் கரு மறத்தியர் செல்லவே – முக்-பள்ளு:42/3
நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட – முக்-பள்ளு:82/2

மேல்

எனை (4)

படுத்திடும் பள்ளன் வேலையை கெடுத்திடும் கள்ளன் எனை கண்டு பதறியே விழுந்தான் கைகால் உதறியே எழுந்தான் – முக்-பள்ளு:85/2
தடுத்து எனை ஆளார் அழகரும் நடுத்-தனை கேளார் கடும் சிறைச்சாலையில் போட்டால் வளைவான் வேலையில் ஆண்டே – முக்-பள்ளு:85/4