நெ- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெகிழ்ந்த 2
நெஞ்சில் 2
நெஞ்சு 2
நெட்டு 1
நெட்டை 1
நெட்டையன் 1
நெடிதில் 1
நெடு 1
நெடும் 2
நெடுமால் 1
நெடுமூக்கன் 1
நெய் 1
நெய்தல் 1
நெய்தலை 2
நெய்யில் 1
நெரித்த 1
நெரித்தான் 1
நெருக்கு 1
நெருக்கும் 2
நெருங்காமல் 1
நெருங்கி 1
நெருப்பு 1
நெல் 11
நெல்லு 1
நெல்லுடன் 1
நெல்லும் 3
நெளியும் 1
நெற்றி 1
நெற்றியில் 2
நெற்றியை 1
நெறி 1

நெகிழ்ந்த (2)

நெற்றியில் இடும் மஞ்சணை பொட்டும் மற்றொரு திருநாம பொட்டும் நெகிழ்ந்த கரும் கொண்டையும் ரெண்டாய் வகிர்ந்த வகுப்பும் – முக்-பள்ளு:6/1
துடிக்கும் இதழை கடிக்கும் எயிறும் சோர்ந்து விரிந்த கூந்தலும் தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த கிடையும் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:129/4

மேல்

நெஞ்சில் (2)

நெஞ்சில் குறித்த குளம் அஞ்சுக்கும் சக்கரக்கால் நிலையிட்ட நாளில் பண்ணை தலையிட்டேன் நான் – முக்-பள்ளு:14/2
பஞ்சில் பற்றும் நெருப்பு போல் நெஞ்சில் பழம் பகை இன்னும் பற்றவையாதே – முக்-பள்ளு:99/3

மேல்

நெஞ்சு (2)

நெஞ்சு கவர் கன தன மா மத குஞ்சர இணை கோடுகள் அசைய நீல வட கல்லுடன் கோவை தாலியும் இலங்க – முக்-பள்ளு:8/3
மிஞ்சி பேசில் நெஞ்சு அறுப்பேன் அஞ்சி பேசடி – முக்-பள்ளு:157/4

மேல்

நெட்டு (1)

ஆரத்தன பார திரு உற்று ஆசைப்பட ஓசை திரை நெட்டு ஆழிக்கு இசை ஊழி சயனத்து அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:2/2

மேல்

நெட்டை (1)

ஆடி திருநாளுக்கு நெல் ஆறாயிரம் கோட்டை நெட்டை
தாடி பிச்சன் வகையில் நேரும் சம்பாநெல் அளந்தேன் – முக்-பள்ளு:142/1,2

மேல்

நெட்டையன் (1)

எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவ குடும்பன் மருமகன் ஈச்ச குடும்பன் பாச்சக்காலை எட்டி முட்டி தட்டியே – முக்-பள்ளு:134/3

மேல்

நெடிதில் (1)

நெடிதில் சுமை கொண்டு உய்ப்பார் நிலை போர் உயர்ப்பார் நின்ற போரை பிரிப்பார் நிலத்தில் விரிப்பார் – முக்-பள்ளு:138/2

மேல்

நெடு (1)

போல நின்றான் உங்கள் நெடு நீலன் அல்லோடி – முக்-பள்ளு:166/4

மேல்

நெடும் (2)

கரு நெடும் புயல் அழகர் மருவு சந்நிதி கற்பகாலங்கள் விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/4
வீழி இதழ் செங்கமலம் மேவும் அனை வாழி நெடும்
சூழி முக வேழம் அன்று சொன்ன திருப்பேர் வாழி – முக்-பள்ளு:175/1,2

மேல்

நெடுமால் (1)

நன்றிக்கு இணையில்லை நான் நெடுமால் ஆனேனே – முக்-பள்ளு:47/2

மேல்

நெடுமூக்கன் (1)

முத்துவிளங்கி மலைமுண்டன் பொற்பாளை நெடுமூக்கன் அரிக்கிராவி மூங்கில்சம்பா – முக்-பள்ளு:108/2

மேல்

நெய் (1)

சிறைபட்டுள்ளது விண் எழும் புள்ளு திரிபட்டுள்ளது நெய் படும் தீபம் – முக்-பள்ளு:21/2

மேல்

நெய்தல் (1)

காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:46/4

மேல்

நெய்தலை (2)

புகுந்த நெய்தலை மயக்கியே மலர் மிகுந்த நெய்தலை கயக்கியே புடையில் புளினம் சரியவே அதன் இடையில் புள் இனம் இரியவே – முக்-பள்ளு:48/1
புகுந்த நெய்தலை மயக்கியே மலர் மிகுந்த நெய்தலை கயக்கியே புடையில் புளினம் சரியவே அதன் இடையில் புள் இனம் இரியவே – முக்-பள்ளு:48/1

மேல்

நெய்யில் (1)

கூடி நெய்யில் கையிட்டானும் கொண்டல் அல்லோடி – முக்-பள்ளு:162/4

மேல்

நெரித்த (1)

நீறு போல் வெளுத்த ஊளை ஊறு நாசியும் தட்டி நெரித்த மாங்கொட்டை போல் ஈ அரித்த வாயும் – முக்-பள்ளு:53/2

மேல்

நெரித்தான் (1)

மெள்ள புருவம் கோட்டி நெரித்தான் மாட்டை மீளவும் பூட்டி உழ தரித்தான் – முக்-பள்ளு:120/2

மேல்

நெருக்கு (1)

தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3

மேல்

நெருக்கும் (2)

சோதி மா மணி வீதி நெருக்கும் சுரும்பு பாடி இரும்பும் உருக்கும் – முக்-பள்ளு:23/1
சாதி நால் வளம் நீதி பெருக்கும் தடத்து வாளை குடத்தை நெருக்கும்
போதில் மேய்ந்து இள மேதி செருக்கும் புனம் எல்லாம் தண் மலர் விண்டிருக்கும் – முக்-பள்ளு:23/2,3

மேல்

நெருங்காமல் (1)

பந்திப்படுத்தி நிரையை வகுத்து பரவை ஒலி போல் குரவை எழுப்பி பயிர் நெருங்காமல் கலந்து போகாமல் பதியும் பள்ளீரே – முக்-பள்ளு:125/4

மேல்

நெருங்கி (1)

நிறுவி நிரை தெரிந்தார் நெருங்கி அரிந்தார் நிரப்பி அரிகள் எங்கும் பரப்பினாரே – முக்-பள்ளு:137/4

மேல்

நெருப்பு (1)

பஞ்சில் பற்றும் நெருப்பு போல் நெஞ்சில் பழம் பகை இன்னும் பற்றவையாதே – முக்-பள்ளு:99/3

மேல்

நெல் (11)

மை கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து உண்டாக்கும் வடிவழக குடும்பன் நானே ஆண்டே – முக்-பள்ளு:15/4
பெட்டியால் வாரி பட்டடை நெல் எல்லாம் பேய்த்தண்ணீருக்கு தேய்த்தான் காண் ஆண்டே – முக்-பள்ளு:57/4
தங்கும் பேரை குலைவாழை காய்த்தது சற்றுமோ நெல் அரிசி காணாது – முக்-பள்ளு:69/2
ஆடி திருநாளுக்கு நெல் ஆறாயிரம் கோட்டை நெட்டை – முக்-பள்ளு:142/1
திருவன் பயிரிடும் புள்ளியில் செந்தாழை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:143/2
பெற்றா குடும்பன் புள்ளியில் கண்ட பெருவெள்ளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:144/2
முண்டன் நெல் வகை-தனிலே கண்ட முத்துவெள்ளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:145/2
முண்டன் நெல் வகை-தனிலே கண்ட முத்துவெள்ளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:145/2
மூவான் முதல் இட்டமலை முண்டன் நெல் அளந்தேன் – முக்-பள்ளு:146/2
இது அன்றியும் தின பூசை நெல் எண்ணாயிரம் கோட்டை மொண்டி – முக்-பள்ளு:147/1
பொதுவன் புது திருத்தில் கண்ட பூம்பாளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:147/2

மேல்

நெல்லு (1)

தினச்சத்திரத்துக்கு என்றும் பெரியநம்பி திருமாளிகைக்கு என்றும் சில நெல்லு கொடுப்பார் – முக்-பள்ளு:139/1

மேல்

நெல்லுடன் (1)

பிள்ளையார் அடியில் உறை நெல்லும் எடுத்தான் அவள் பெற்ற நெல்லுடன் கலந்து பெட்டியில் வைத்தான் – முக்-பள்ளு:151/2

மேல்

நெல்லும் (3)

மற்ற நெல்லும் விதையும் கட்டிவைத்தேன் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:148/2
பிள்ளையார் அடியில் உறை நெல்லும் எடுத்தான் அவள் பெற்ற நெல்லுடன் கலந்து பெட்டியில் வைத்தான் – முக்-பள்ளு:151/2
தள்ளுமண்ணும் கல்லும் சற்றே நெல்லும் கலந்தே பங்கு தந்தோம் என்று எனக்கு இம்மட்டும் தந்தான் பள்ளீரே – முக்-பள்ளு:151/4

மேல்

நெளியும் (1)

பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன் பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன் – முக்-பள்ளு:50/2

மேல்

நெற்றி (1)

பால் அளையில் உற்ற மணம் மேல் அளைய நெற்றி உடல் பட்டை நாமம் பதினெட்டு நாமம் பெறவே – முக்-பள்ளு:82/1

மேல்

நெற்றியில் (2)

நெற்றியில் இடும் மஞ்சணை பொட்டும் மற்றொரு திருநாம பொட்டும் நெகிழ்ந்த கரும் கொண்டையும் ரெண்டாய் வகிர்ந்த வகுப்பும் – முக்-பள்ளு:6/1
வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/3

மேல்

நெற்றியை (1)

தொல்லை பாடு பண்ணியும் துறுகல்லை பாடு நண்ணியும் தொடுத்து பூவை நெற்றியை தொட மடுத்து பூவை எற்றியே – முக்-பள்ளு:44/3

மேல்

நெறி (1)

பணிவிடைசெய தானவர் வானவர் பழ மகபதி பேரியல் சீரியல் பகர் இளமுறைக்கோன் என வான் நெறி பாலிப்பவரே – முக்-பள்ளு:1/4

மேல்