தூ- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


தூக்கி (1)

கோல் ஒரு கை கொண்டு கடைக்காலும் ஒரு கை தூக்கி கோனேரிக்கோன் ஆட்டு கிடை கொண்டுவந்தான் – முக்-பள்ளு:82/4

மேல்

தூக்குணி (1)

தூக்குணி பள்ளன் ஏய்க்கிற ஆட்டத்தை துக்குணி கேளும் முக்காலும் சொன்னேன் – முக்-பள்ளு:56/1

மேல்

தூங்கல் (1)

தாறுமாறாய் மீசையில் அஞ்சாறு மயிரும் தூங்கல் சண்ணை கடா போல் நடையும் மொண்ணை முகமும் – முக்-பள்ளு:53/3

மேல்

தூங்கும் (1)

சூதம் ஒன்றி சுமக்க கொடுக்கும் சூதம் தன் கனி தூங்கும் பலாவின் – முக்-பள்ளு:25/2

மேல்

தூண் (1)

அனகன் ஆறை வழி நயினாத்தை அழகர் மண்டப தூண் சாரம் ஏற்ற – முக்-பள்ளு:74/1

மேல்

தூயவர் (1)

அணி அரவணை தூயவர் மாயவர் அடியர் மன பூரணர் காரணர் அழகர் பள் இசை பா வளம் நா வளம் ஆக தருவோர் – முக்-பள்ளு:1/2

மேல்

தூர (1)

பக்கமே தூர போயும் தக்க சோறு என் வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர் – முக்-பள்ளு:15/3

மேல்

தூவும் (1)

திங்கள் சோலை மரங்களை ராவும் தெருக்கள்-தோறும் மருக்களை தூவும்
பொங்கரூடு இளம் பைங்கிளி மேவும் பூவை மாடப்புறா இனம் கூவும் – முக்-பள்ளு:20/2,3

மேல்

தூற்றலால் (1)

சாரல் கறுக்கும் ஈர தூற்றலால் நாற்றுப்பாவும் சன்னை வெட்டியான் வாய்க்கால் போக்கும் வன்னியடித்திட்டும் – முக்-பள்ளு:92/3

மேல்

தூற்றி (1)

பொடி வைக்கோலை தவிர்ப்பார் பொலியை குவிப்பார் பொலி தூற்றி ஆற்றி பொலி பொலி என்று அளப்பார் – முக்-பள்ளு:138/4

மேல்