ஏ – முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏகிய 1
ஏகினான் 1
ஏங்கி 1
ஏச்சுக்கு 1
ஏசிக்காட்டு 1
ஏடலர் 1
ஏத்தும் 1
ஏது 2
ஏதுக்காய் 1
ஏதுக்கோ 1
ஏதோ 1
ஏந்தி 1
ஏப்பமிட்டே 1
ஏமம் 1
ஏய்க்கிற 1
ஏய்ப்பு 1
ஏர் 1
ஏர்க்கால் 4
ஏர்க்காலை 1
ஏரிடவேணும் 1
ஏரியில் 1
ஏருக்குள் 1
ஏரும் 1
ஏரை 1
ஏவல் 2
ஏவலினாலே 1
ஏவலுறும் 1
ஏவி 1
ஏவிய 1
ஏழு 1
ஏழும் 2
ஏழை 1
ஏற்ற 5
ஏற்றடைக்குதே 1
ஏற்றபடி 1
ஏற்றம் 1
ஏற்றமாம் 1
ஏற்றும் 1
ஏற்றுவார் 1
ஏற 1
ஏறா 1
ஏறாதே 1
ஏறி 5
ஏறிக்கொண்டான் 1
ஏறிட்டும் 1
ஏறியே 1
ஏறு 2
ஏறுபட்டான் 1
ஏறும் 3
ஏன் 3
ஏன 1

ஏகிய (1)

சித்தமுற மூத்தபள்ளி செப்பி மறைந்து ஏகிய பின் – முக்-பள்ளு:91/2

மேல்

ஏகினான் (1)

எதிர் இல்லாத மயிலையும் செட்டி கொண்டு ஏகினான் பெட்டை என்றார் காண் ஆண்டே – முக்-பள்ளு:71/4

மேல்

ஏங்கி (1)

ஏங்கி இரு பள்ளியரும் இவ்வாறு இரங்கிநிற்கும் – முக்-பள்ளு:119/1

மேல்

ஏச்சுக்கு (1)

ஏச்சுக்கு பிறந்தான் வரவர கூச்சத்தை மறந்தான் இளையவள் இளமையை குறித்தான் முதிரும் என் வளமையை பறித்தான் – முக்-பள்ளு:90/1

மேல்

ஏசிக்காட்டு (1)

சட்டைபண்ணாது ஏசிக்காட்டு முக்கூடல்பள்ளி குட்டை – முக்-பள்ளு:159/3

மேல்

ஏடலர் (1)

மணி மரகத சோதியர் ஆதியர் மனு மரபினில் காவலர் கோவலர் மறை முதல்வர் முக்கூடலர் ஏடலர் வாசத்துளவோர் – முக்-பள்ளு:1/1

மேல்

ஏத்தும் (1)

ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே – முக்-பள்ளு:33/4

மேல்

ஏது (2)

ஏது செய்வேன் என்று ஓதிய பள்ளன்-தன் ஏய்ப்பு கேட்டு அந்த பேய் பண்ணைக்காரன் – முக்-பள்ளு:75/1
அழியாத காசு அழியுமோ நான் ஏது செய்வேன் அழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:94/4

மேல்

ஏதுக்காய் (1)

வேதக்கோன் கிடை ஆண்டது ஏதுக்காய் அவன் சாதி வீதி-தொறும் கிடந்த கிடை பேதியான் குடும்பா – முக்-பள்ளு:83/2

மேல்

ஏதுக்கோ (1)

செங்கான் எனக்கு மூத்தவன் ஏதுக்கோ தெய்வத்துக்கு ஆக்கிவைத்தானாம் – முக்-பள்ளு:96/2

மேல்

ஏதோ (1)

கடின பிரவத்தி ஏதோ திரும்பிவர கண்டிலேன் இன்று மூன்று நாள் – முக்-பள்ளு:59/3

மேல்

ஏந்தி (1)

மழு ஏந்தி நின்றான் உங்கள் மத்தன் அல்லோடி – முக்-பள்ளு:162/2

மேல்

ஏப்பமிட்டே (1)

சறுக்கும்-தொறும் குதிப்பும் சுறுக்கும் தலையசைப்பும் தடி சுற்றி ஏப்பமிட்டே அடிவைப்பதும் – முக்-பள்ளு:10/3

மேல்

ஏமம் (1)

இக்கரை காலில் பொருநை அக்கரை காலின் மழைக்கு ஏமம் என்றும் சாமம் என்றும் நாம் அல்லோ போவோம் – முக்-பள்ளு:36/1

மேல்

ஏய்க்கிற (1)

தூக்குணி பள்ளன் ஏய்க்கிற ஆட்டத்தை துக்குணி கேளும் முக்காலும் சொன்னேன் – முக்-பள்ளு:56/1

மேல்

ஏய்ப்பு (1)

ஏது செய்வேன் என்று ஓதிய பள்ளன்-தன் ஏய்ப்பு கேட்டு அந்த பேய் பண்ணைக்காரன் – முக்-பள்ளு:75/1

மேல்

ஏர் (1)

உத்தாரம் பண்ணைக்காரன் உரைத்தான் உரையை கேட்ட உடனே குடும்பன் ஏர் கொண்டு உழ சென்றானே – முக்-பள்ளு:113/4

மேல்

ஏர்க்கால் (4)

பெருமாள் பதிநூற்றெட்டும் மருவி வலம்செய்யார்-தம் பேய் காலை வடம்பூட்டி ஏர்க்கால் சேர்ப்பேன் – முக்-பள்ளு:11/3
வித்து வகை மாட்டு வகை மேழி ஏர்க்கால் முதலாய் – முக்-பள்ளு:66/2
கயமரம் ஒன்று வளைக்கை ஒன்று நுகம் ஒன்று கழுந்து ஏர்க்கால் ஒன்று சிறு வைக்கோல் ஒன்று – முக்-பள்ளு:110/2
ஏரும் பல விதையும் ஏர்க்கால் முதலான – முக்-பள்ளு:112/1

மேல்

ஏர்க்காலை (1)

எத்த துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறா போல கிட்டக்கிட்ட போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:133/4

மேல்

ஏரிடவேணும் (1)

பத்தர் பணி முக்கூடல் பரமனார் அழகர்-தம் பண்ணைக்கு ஏரிடவேணும் பள்ளா என்றே – முக்-பள்ளு:113/3

மேல்

ஏரியில் (1)

எந்தை திருமுக்கூடல் ஏரியில் நீ ஆடுவைத்து – முக்-பள்ளு:93/1

மேல்

ஏருக்குள் (1)

ஏருக்குள் மாடும் முந்தின காருக்குள் சூடும் தன் கிளை எவருக்கும் பொதுவாம் ஆட்கொள்ளும் அவருக்கும் அதுவாம் – முக்-பள்ளு:88/3

மேல்

ஏரும் (1)

ஏரும் பல விதையும் ஏர்க்கால் முதலான – முக்-பள்ளு:112/1

மேல்

ஏரை (1)

கூத்தன் முதலாய் உள்ள பள்ளர் எல்லாம் குரவையிட்டு ஏரை பூட்டி கூடி உழுதார் – முக்-பள்ளு:114/4

மேல்

ஏவல் (2)

காவுக்கு இறைவனாகும் இந்திரன் ஏவல் பணிகொண்டு எழுந்த கார் கடலில் படிந்து திருவில் கொட்டி அடல் முக்கூடல் அரியுமாய் – முக்-பள்ளு:38/1
சேர செய் பல பேரிட்டு உள்ளது எல்லாம் எருவைத்தே இன்று திரும்பினேன் இன்னம் தேவரீர் ஏவல் விரும்பினேன் ஆண்டே – முக்-பள்ளு:92/8

மேல்

ஏவலினாலே (1)

அழகர் ஏவலினாலே இலங்கை அழித்து மீளும் குரங்கு உள்ளமட்டும் – முக்-பள்ளு:67/3

மேல்

ஏவலுறும் (1)

ஏவலுறும் பள்ளியர் வந்து எய்தியது சொல்வேனே – முக்-பள்ளு:5/4

மேல்

ஏவி (1)

இடையரை கொண்டே வயலில் ஏவி இளையாள் குடிலில் – முக்-பள்ளு:84/1

மேல்

ஏவிய (1)

பத்து தலையும் அரக்கன் புயமும் தத்த கணை ஒன்று ஏவிய பருவ புயலின் உருவத்து அழகர் பண்ணை கண்ணாறு நடச்செய்தே – முக்-பள்ளு:133/1

மேல்

ஏழு (1)

சனக்கட்டளை ஏழு திருப்பதிக்கும் தலத்தார் படிக்கும் சில சாலி அளப்பார் – முக்-பள்ளு:139/2

மேல்

ஏழும் (2)

தயரத ராமரான தாமரைக்கண் அழகர் தனு வாங்கி மரம் ஏழும் சாய்த்த நாளில் – முக்-பள்ளு:110/1
வயல் உழும் குத்தி ஒன்று வளைமேழி ஒன்று இந்த வகை ஏழும் அந்த எழு மரத்தால் செய்தே – முக்-பள்ளு:110/3

மேல்

ஏழை (1)

புலி போல் எழுந்து சிசுபாலன் வையவே ஏழை
போல நின்றான் உங்கள் நெடு நீலன் அல்லோடி – முக்-பள்ளு:166/3,4

மேல்

ஏற்ற (5)

மஞ்சில் கறுப்பு அழகர் தஞ்சை பள்ளனுக்கு ஏற்ற மருதூர் இளைய பள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:14/4
எண்ணெய் ஆர் பூந்தயிலம் ஏற்ற குழல் மூத்தபள்ளி – முக்-பள்ளு:55/1
அனகன் ஆறை வழி நயினாத்தை அழகர் மண்டப தூண் சாரம் ஏற்ற
கனக நீள் வடம் கோடி கொடுத்தேன் கார் வரைக்கும் உழும் வடம் ஒன்றே – முக்-பள்ளு:74/1,2
வீறான முக்கூடல் விளங்கு பண்ணை உரம் ஏற்ற
மாறாமல் ஆடு கொண்டுவருவேன் காண் ஆண்டே – முக்-பள்ளு:77/1,2
எதிர்ந்த கதிர் முளைத்தே இடை பழுத்து ஏற்ற விளைவு தோற்றம் தோற்றியதே – முக்-பள்ளு:136/4

மேல்

ஏற்றடைக்குதே (1)

சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே மழை தேடி ஒரு கோடி வானம்பாடி ஆடுதே – முக்-பள்ளு:35/3

மேல்

ஏற்றபடி (1)

ஏற்றபடி சொன்னாள் இரண்டுபடில் யார் பொறுப்பர் – முக்-பள்ளு:58/2

மேல்

ஏற்றம் (1)

ஊருக்குள் ஏற்றம் இவன் இந்த சேரிக்குள் நாற்றம் குடும்பு செய்து ஊராருக்கு உழைத்தான் அழகர் சொம் மாறாக பிழைத்தான் – முக்-பள்ளு:88/2

மேல்

ஏற்றமாம் (1)

போற்று திருமால் அழகர்க்கு ஏற்றமாம் பண்ணை சேரி புள்ளி பள்ளர் ஆடிப்பாடி துள்ளிக்கொள்வோமே – முக்-பள்ளு:35/4

மேல்

ஏற்றும் (1)

நாதக்கோன் முக்கூடல் ஆதிக்கோன் பண்ணை வயல் நானடா உரம் ஏற்றும் கோனடா குடும்பா – முக்-பள்ளு:83/4

மேல்

ஏற்றுவார் (1)

வெள்ளானைக்கு இறை போற்றுவார் ஒரு புள் ஆடல் கொடி ஏற்றுவார் வேதம் பரவும் பாதர் வைகுண்ட வீரர் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:131/1

மேல்

ஏற (1)

ஏற ஒரு வாகனமும் இல்லாமையினால் மாட்டில் – முக்-பள்ளு:170/1

மேல்

ஏறா (1)

எங்கே கிடக்கிறான் பள்ளன் நயினாரே ஏறா விண்ணப்பம் ஒன்று உண்டு – முக்-பள்ளு:96/1

மேல்

ஏறாதே (1)

நாற்றுக்கால் விட்டு நடுகை கால் ஏறாதே – முக்-பள்ளு:மேல்

ஏறி (5)

மேடை ஏறி தன் காலை பவுசு விரித்த பீலி மயில் எட்டிப்பார்க்க – முக்-பள்ளு:17/1
பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவி கமலத்து அயனுமாய் புனலை தரித்து வரையில் ஏறி கனலை தரித்த சிவனுமாய் – முக்-பள்ளு:38/2
பதிந்த நடவு தேறி பசப்பும் ஏறி பசந்து குருத்து மேன்மேல் பரந்து செறிந்து – முக்-பள்ளு:136/1
ஏறி போனான் உங்கள் மத்தன் அல்லோடி – முக்-பள்ளு:164/2
கடல் ஏறி போனான் உங்கள் கண்ணன் அல்லோடி – முக்-பள்ளு:164/4

மேல்

ஏறிக்கொண்டான் (1)

மீதில் ஏறிக்கொண்டான் உங்கள் கீதன் அல்லோடி – முக்-பள்ளு:170/4

மேல்

ஏறிட்டும் (1)

தொட்டியர் காளை மட்டி போல் வெந்து நான் சோறிட்டாலும் கண் ஏறிட்டும் பாரான் – முக்-பள்ளு:57/2

மேல்

ஏறியே (1)

ஏறியே திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி – முக்-பள்ளு:170/2

மேல்

ஏறு (2)

ஏறு புனல் கண்டதன் பின் எம்பெருமான் முக்கூடல் – முக்-பள்ளு:52/3
வேறு கீறி ஒட்டவைத்த ஏறு காதுமாய் நேமி வீரனார் முக்கூடல் பண்ணைக்காரனார் வந்தார் – முக்-பள்ளு:53/4

மேல்

ஏறுபட்டான் (1)

கண்ணில் ஏறுபட்டான் உங்கள் கர்த்தன் அல்லோடி – முக்-பள்ளு:163/2

மேல்

ஏறும் (3)

வரத்தினை மீறும் செலவுக்கு தரித்திரம் ஏறும் பேய் கொடை மட்டுக்கட்டு இல்லான் கூத்துக்கும் கொட்டுக்கும் நல்லான் – முக்-பள்ளு:86/1
தீ சுட்டது ஆறும் பழித்திடும் நா சுட்டது ஏறும் அவனை முன் சீயென்று போட்டேன் நான் இனி வாய் ஒன்றும் காட்டேன் – முக்-பள்ளு:90/3
ஏறும் பயிர் தரு நாற்று இன்று நடவேணும் என்றே – முக்-பள்ளு:124/2

மேல்

ஏன் (3)

வக்கணை ஏன் மருதூர் – முக்-பள்ளு:62/3
மிஞ்சி போனதை ஏன் சொல்லவேணும் விருந்து விட்ட பின் வெட்டினார் உண்டோ – முக்-பள்ளு:99/1
தடுத்து நீ ஏன் மாட்டை தொடர்ந்தாய் முக்கூடல் சதுரி பார்த்து சிரிக்கவோ கிடந்தாய் – முக்-பள்ளு:118/2

மேல்

ஏன (1)

தான களிறு படிந்திட கொலை ஏன களிறு மடிந்திட தழையின் ஆரம் உந்தியும் பசுங்கழையின் ஆரம் சிந்தியும் – முக்-பள்ளு:40/2

மேல்