வா – முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 3
வாக்குவாதம் 1
வாகனமும் 1
வாங்கி 1
வாங்கிக்கொண்டார்கள் 1
வாங்கியே 1
வாச்சிக்கு 1
வாசத்துளவோர் 1
வாசவன் 1
வாசனை 1
வாஞ்சையினால் 1
வாட்டமும் 1
வாடை 1
வாதுக்கே 1
வாய் 9
வாய்-தனை 1
வாய்க்கால் 1
வாய்க்கு 2
வாய்த்த 6
வாய்வைக்கும் 1
வாய்வைத்தது 1
வாயால் 2
வாயில் 1
வாயின் 1
வாயும் 1
வார்த்த 1
வார்த்தை 4
வார்த்தையும் 1
வார்ந்து 1
வார 2
வாரணம் 2
வாரத்து 1
வாரம் 1
வாரமுடன் 1
வாராதோ 1
வாராய் 2
வாரி 3
வாரிதி 1
வாரீர் 1
வாரும் 1
வால் 1
வாலான் 1
வாலியை 1
வாலும் 1
வாழ்த்தி 3
வாழ்த்தியே 2
வாழ்த்தினவர் 1
வாழ்ந்தான் 1
வாழ்ந்திருக்கலாம் 1
வாழ 1
வாழவே 2
வாழி 4
வாழியவே 1
வாழை 2
வாழைத்தண்டை 1
வாழையாய் 1
வாழையை 1
வாள் 1
வாளை 2
வான் 3
வான 2
வானம் 1
வானம்பாடி 1
வானமே 1
வானவர் 1
வானுக்கும் 1

வா (3)

சாத்தி மகள் காத்தி-தன்னை பேத்தி என்பாராம் மெள்ள சன்னையாய் களத்திலே வா பின்னை என்பாராம் – முக்-பள்ளு:54/2
முடுக வா ராசியம் உண்டு குண்டுணிக்காரி மூத்தபள்ளி பார்க்க வருவாள் – முக்-பள்ளு:95/1
மறுகிமறுகி சருவ குடும்பன் மச்சினி கூழைப்பிச்சியை வா என்றான் அவள் போ என்றாள் இவன் மறித்தான் அவள் பின் பிரித்து போய் – முக்-பள்ளு:132/3

மேல்

வாக்குவாதம் (1)

வாக்குவாதம் உண்டாக்கினாள் என்று என்னை வைதாலும் வையும் மெய்தான் இது ஆண்டே – முக்-பள்ளு:56/4

மேல்

வாகனமும் (1)

ஏற ஒரு வாகனமும் இல்லாமையினால் மாட்டில் – முக்-பள்ளு:170/1

மேல்

வாங்கி (1)

தயரத ராமரான தாமரைக்கண் அழகர் தனு வாங்கி மரம் ஏழும் சாய்த்த நாளில் – முக்-பள்ளு:110/1

மேல்

வாங்கிக்கொண்டார்கள் (1)

விருதுக்கே காரைக்காட்டார் வழக்கிட்டு மேழி சேர முன் வாங்கிக்கொண்டார்கள்
கருதி பெண்ணுக்கும் ஆணுக்கும் காமன் கலப்பை முற்றும் செலவிட்டான் ஆண்டே – முக்-பள்ளு:73/3,4

மேல்

வாங்கியே (1)

மருதப்பர் கொழு நானூறும் மாணிக்கவாசகன்கிட்ட வாங்கியே கொண்டார் – முக்-பள்ளு:73/2

மேல்

வாச்சிக்கு (1)

பேச்சிட்டு பாரும் மரக்கணு வாச்சிக்கு தீரும் பயப்பட பிடித்தது பிடியாய் குட்டையில் அடித்திடும் ஆண்டே – முக்-பள்ளு:90/4

மேல்

வாசத்துளவோர் (1)

மணி மரகத சோதியர் ஆதியர் மனு மரபினில் காவலர் கோவலர் மறை முதல்வர் முக்கூடலர் ஏடலர் வாசத்துளவோர்
அணி அரவணை தூயவர் மாயவர் அடியர் மன பூரணர் காரணர் அழகர் பள் இசை பா வளம் நா வளம் ஆக தருவோர் – முக்-பள்ளு:1/1,2

மேல்

வாசவன் (1)

மாரி சீவலப்பேரி தண்ணீர் பாய் கண்ணாறான வாசவன் தொழும் அழகர் பேர் உள்ள கேசவன் திருத்தும் – முக்-பள்ளு:92/1

மேல்

வாசனை (1)

பூ வாசனை சேர் புரி_குழலார் பூங்குயிலை – முக்-பள்ளு:27/3

மேல்

வாஞ்சையினால் (1)

தாரம் இரண்டானாலும் தன் கணவன் வாஞ்சையினால்
வாரமுடன் முக்கூடல் வந்த பள்ளி தந்திரமாய் – முக்-பள்ளு:97/1,2

மேல்

வாட்டமும் (1)

வடிக்கும் மதுவை குடிக்கும் ஆசை மயக்கமும் பெரும் தியக்கமும் வரம்பில் பாய்ந்து பரம்பில் சாய்ந்த வாட்டமும் முக கோட்டமும் – முக்-பள்ளு:129/3

மேல்

வாடை (1)

வாடை ஓடிவர கோழி கூவும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:17/4

மேல்

வாதுக்கே (1)

பூதக்கோன் பொது ஆட்டை வாதுக்கே ஒரு பாம்பும் புலியும் காத்திருக்கும் அது கலி கண்டாய் குடும்பா – முக்-பள்ளு:83/1

மேல்

வாய் (9)

கள்ள புள் வாய் கிழித்த கார் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:12/3
பேடை மாங்குயில் வாய் கொண்டு சேவல் பிளந்த வாய்-தனை பேசாமல் மூட – முக்-பள்ளு:17/2
வாய்த்த சாராயமும் பனை ஊற்று கள்ளும் வடக்கு வாய் செல்லி உண்ண குடத்தில் வையும் – முக்-பள்ளு:33/2
வைச்சுக்கொண்டு அதட்டாதே வாய்
தைச்சுப்போடுவேன் மருதூர் – முக்-பள்ளு:63/2,3
நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட – முக்-பள்ளு:82/2
தீ சுட்டது ஆறும் பழித்திடும் நா சுட்டது ஏறும் அவனை முன் சீயென்று போட்டேன் நான் இனி வாய் ஒன்றும் காட்டேன் – முக்-பள்ளு:90/3
கொஞ்ச பேச்சுகள் சொல்லாதே வாய் தண்ணீர் குடித்தாலும் கொப்புளித்தாலும் ஆமே – முக்-பள்ளு:99/2
விக்கல் வாய் பண்ணை ஆண்டையை கேட்டு என்னை மீட்டுக்கொள்ளடி முக்கூடல்பள்ளி – முக்-பள்ளு:101/4
மட்டி வாய் பண்ணை ஆண்டே நடு கேளாரோ கருமந்தி முக பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/2

மேல்

வாய்-தனை (1)

பேடை மாங்குயில் வாய் கொண்டு சேவல் பிளந்த வாய்-தனை பேசாமல் மூட – முக்-பள்ளு:17/2

மேல்

வாய்க்கால் (1)

சாரல் கறுக்கும் ஈர தூற்றலால் நாற்றுப்பாவும் சன்னை வெட்டியான் வாய்க்கால் போக்கும் வன்னியடித்திட்டும் – முக்-பள்ளு:92/3

மேல்

வாய்க்கு (2)

பக்கமே ஊசிக்காம்பு சுழுக்கு வாய்க்கு இடும் சீலைப்பந்தமும் விளக்கெண்ணெயும் முந்தவே தேடும் – முக்-பள்ளு:36/3
வாய்த்த தடி கம்பை ஊன்றி சாய்த்து பார்ப்பாராம் ஊத்தை வாய்க்கு மெல்ல புகைகுடிக்க தீக்கு போவாராம் – முக்-பள்ளு:54/3

மேல்

வாய்த்த (6)

சிற்றிடையும் செம்பொன் இடைக்கிடை பெற்றிடும் பட்டாங்கும் இலங்க திருமுக்கூடல் வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:6/4
வஞ்சி மருங்கில் அணி பூம்பட்டும் பஞ்சவர்ணத்து அழகும் துலங்க மருதூர்க்கு வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:8/4
வாய்த்த சாராயமும் பனை ஊற்று கள்ளும் வடக்கு வாய் செல்லி உண்ண குடத்தில் வையும் – முக்-பள்ளு:33/2
வாய்த்த தடி கம்பை ஊன்றி சாய்த்து பார்ப்பாராம் ஊத்தை வாய்க்கு மெல்ல புகைகுடிக்க தீக்கு போவாராம் – முக்-பள்ளு:54/3
நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட – முக்-பள்ளு:82/2
வாய்த்த விதை வர்க்கமுடன் மாட்டு வகை சொன்னானே – முக்-பள்ளு:107/4

மேல்

வாய்வைக்கும் (1)

வட்டில் வாய்வைக்கும் சட்டி கொண்டு ஓங்கும் மருதூராளை விருதுக்கே வைத்தான் – முக்-பள்ளு:57/3

மேல்

வாய்வைத்தது (1)

வட்டிலுக்குள் வாய்வைத்தது எல்லாம் துறை வடிவழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:100/4

மேல்

வாயால் (2)

உள்ள பேர் எனக்கு தர கை எழும்பாமல் காலால் உழுது வாயால் அதட்டி உழப்பிப்போட்டான் – முக்-பள்ளு:151/3
வலிய வழக்கு பேசி சுந்தரன் வாயால் அன்று – முக்-பள்ளு:166/1

மேல்

வாயில் (1)

பற்றிய கரும்பொன் காப்பும் கையில் வெற்றிலையும் வாயில் ஒதுக்கிய பாக்கும் ஒரு சுருளுக்கு ஒருக்கால் நீக்கும் இதழும் – முக்-பள்ளு:6/2

மேல்

வாயின் (1)

வெண்ணெய் ஆர் வாயின் இசை வேய் அழகர் மாயம் இதே – முக்-பள்ளு:55/3

மேல்

வாயும் (1)

நீறு போல் வெளுத்த ஊளை ஊறு நாசியும் தட்டி நெரித்த மாங்கொட்டை போல் ஈ அரித்த வாயும்
தாறுமாறாய் மீசையில் அஞ்சாறு மயிரும் தூங்கல் சண்ணை கடா போல் நடையும் மொண்ணை முகமும் – முக்-பள்ளு:53/2,3

மேல்

வார்த்த (1)

மக்கள் ஆணை என் ஆணை உன் ஆணை நீ வார்த்த கஞ்சி குடித்து கிடப்பேன் – முக்-பள்ளு:101/3

மேல்

வார்த்தை (4)

மூத்தபள்ளி முகம் பார்த்து வார்த்தை சொல்வாராம் பெருமூச்சு கொண்டு இளையபள்ளி பேச்சு கேட்பாராம் – முக்-பள்ளு:54/1
இசையாத வார்த்தை சொன்னாய் என்று பண்ணையான் எழுந்து – முக்-பள்ளு:61/3
தேங்குதலை வார்த்தை செவியில் புகுதலுமே – முக்-பள்ளு:119/2
இந்த வார்த்தை முந்த சொன்னால் முக்கூடல்பள்ளி சண்டை – முக்-பள்ளு:173/3

மேல்

வார்த்தையும் (1)

திருந்த பேசின வார்த்தையும் கேளாய் நான் தெற்கே பார்த்தால் வடக்கே நீ பார்ப்பாய் – முக்-பள்ளு:98/2

மேல்

வார்ந்து (1)

தகும் தடம் கடல் இறைவனை தொழ மகிழ்ந்திடும் கடன் முறையினில் சார்ந்து சுறவு நேர்ந்து குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே – முக்-பள்ளு:48/4

மேல்

வார (2)

புதைத்து மணலில் ஒதுக்கி கடலை பொரு நம் அழகர் கருணை போல் பொருநையாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:50/4
சிற்றாறு என்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மன பெருமை போல் சித்திராநதி பெருகி வார சித்திரம் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:51/4

மேல்

வாரணம் (2)

காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:46/4
காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:46/4

மேல்

வாரத்து (1)

வாரத்து உடையானேரி கட்டளையும் வட்டமாம் ஒரு வர்க்கத்தில் ஆந்தைக்குளமும் தோணி நிற்கும் துறை சுற்றும் – முக்-பள்ளு:92/7

மேல்

வாரம் (1)

மாய கண்டது நாழிகை வாரம் மறுக கண்டது வான் சுழி வெள்ளம் – முக்-பள்ளு:22/2

மேல்

வாரமுடன் (1)

வாரமுடன் முக்கூடல் வந்த பள்ளி தந்திரமாய் – முக்-பள்ளு:97/2

மேல்

வாராதோ (1)

வாராதோ எனக்கு கோபம் முக்கூடல்பள்ளி முந்த – முக்-பள்ளு:172/3

மேல்

வாராய் (2)

சாரங்கெட்ட மருது என்றோ சாதிக்க வாராய் – முக்-பள்ளு:161/3

மேல்

வாரி (3)

பெட்டியால் வாரி பட்டடை நெல் எல்லாம் பேய்த்தண்ணீருக்கு தேய்த்தான் காண் ஆண்டே – முக்-பள்ளு:57/4
மனத்துக்கு இனிய காவை வடமலேந்திரன் மடத்துக்கு வேண்டும் செந்நெல் வாரி குவிப்பார் – முக்-பள்ளு:139/3
நாட்டுக்குள் இரந்தும் பசிக்கு ஆற்றமாட்டாமல் வாரி
நஞ்சை எல்லாம் உண்டான் உங்கள் நாதன் அல்லோடி – முக்-பள்ளு:169/1,2

மேல்

வாரிதி (1)

வங்க வாரிதி வெம் கடு உண்ட மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:20/4

மேல்

வாரீர் (1)

மலங்காமல் இந்தப்படி வகை எல்லாம் தேடிவைத்தேன் வயலிலே நாளேர் இட வாரீர் ஆண்டே – முக்-பள்ளு:111/4

மேல்

வாரும் (1)

ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே – முக்-பள்ளு:33/4

மேல்

வால் (1)

நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட – முக்-பள்ளு:82/2

மேல்

வாலான் (1)

சித்திரக்காலி வாலான் சிறைமீட்டான் மணல்வாரி செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா – முக்-பள்ளு:108/1

மேல்

வாலியை (1)

வாலியை கொன்றான் உங்கள் மாயன் அல்லோடி – முக்-பள்ளு:165/4

மேல்

வாலும் (1)

தான் உட்கை போலும் சளம்செய்து மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையையும் காட்டி எனக்கு ஆசைவலையையும் பூட்டி – முக்-பள்ளு:87/1

மேல்

வாழ்த்தி (3)

ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே – முக்-பள்ளு:33/4
வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/3
மலர் வாழ்த்தி ஆடிப்பாடுவோமே – முக்-பள்ளு:174/4

மேல்

வாழ்த்தியே (2)

மா வளத்துடன் அழகர் தாவளக்குடி வாழ மருதூரை வாழ்த்தியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/2
ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே – முக்-பள்ளு:33/4

மேல்

வாழ்த்தினவர் (1)

வைதவரை வாழ்த்தினவர் வையகத்து உண்டோ – முக்-பள்ளு:172/4

மேல்

வாழ்ந்தான் (1)

கோனை கண்டவனோ கோன் தலை பேனை கண்டவனோ போய் அவள் குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான்
பூனைக்குட்டியை போல் பதுங்கி சொல் மோனைக்கட்டுடனே அவன் முழுப்பொய் கொண்டு வருவான் சிக்கென வையும் காண் ஆண்டே – முக்-பள்ளு:89/3,4

மேல்

வாழ்ந்திருக்கலாம் (1)

சூழ்ந்திருக்க நாமே கூடி வாழ்ந்திருக்கலாம்
பன்னகத்தில் ஆடிய முக்கூடல் அழகர் திருப்பாத – முக்-பள்ளு:174/2,3

மேல்

வாழ (1)

மா வளத்துடன் அழகர் தாவளக்குடி வாழ மருதூரை வாழ்த்தியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/2

மேல்

வாழவே (2)

பார் பூத்த கீர்த்தி பெறும் வைணவரும் தானிகரும் பரிசனமும் வாழவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/3
அருள் பெறும் தரும நிதி சாத்தூரில் பெரியநம்பிஅய்யங்கார் வாழவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/2

மேல்

வாழி (4)

வீழி இதழ் செங்கமலம் மேவும் அனை வாழி நெடும் – முக்-பள்ளு:175/1
சூழி முக வேழம் அன்று சொன்ன திருப்பேர் வாழி
ஆழி அருளாளர் அழகர் திருத்தாள் வாழி – முக்-பள்ளு:175/2,3
ஆழி அருளாளர் அழகர் திருத்தாள் வாழி
வாழி திருமுக்கூடல் வைணவர்கள் வாழியவே – முக்-பள்ளு:175/3,4
வாழி திருமுக்கூடல் வைணவர்கள் வாழியவே – முக்-பள்ளு:175/4

மேல்

வாழியவே (1)

வாழி திருமுக்கூடல் வைணவர்கள் வாழியவே – முக்-பள்ளு:மேல்

வாழை (2)

ஓதும் அந்த பலாக்கனி வாழை உளுக்கவே சுமந்து ஒண் குலை சாய்க்கும் – முக்-பள்ளு:25/3
சாயும் உரலும் கரும்பும்தான் அதில் பாயும் முரலும் சுரும்பும்தான் சரிய முதலை முடுக்கியும் வாழை பெரிய முதலை அடுக்கியும் – முக்-பள்ளு:46/3

மேல்

வாழைத்தண்டை (1)

தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3

மேல்

வாழையாய் (1)

அத்தனை காலமும்தொட்டு இத்தனை காலமும் கண்டு அடியடி வாழையாய் நான் குடியில் வந்தேன் – முக்-பள்ளு:13/2

மேல்

வாழையை (1)

மாதுளம் கொம்பு வாழையை தாங்கும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:25/4

மேல்

வாள் (1)

குலங்களுடன் மடிந்த கொலை வாள் அரக்கர் வேலும் கூர்வாளும் சேர்த்து அடித்த கொழு ஆயிரம் – முக்-பள்ளு:111/3

மேல்

வாளை (2)

சாதி நால் வளம் நீதி பெருக்கும் தடத்து வாளை குடத்தை நெருக்கும் – முக்-பள்ளு:23/2
வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன் மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன் – முக்-பள்ளு:51/2

மேல்

வான் (3)

பணிவிடைசெய தானவர் வானவர் பழ மகபதி பேரியல் சீரியல் பகர் இளமுறைக்கோன் என வான் நெறி பாலிப்பவரே – முக்-பள்ளு:1/4
மாய கண்டது நாழிகை வாரம் மறுக கண்டது வான் சுழி வெள்ளம் – முக்-பள்ளு:22/2
வான் பழிக்கு உளாய் தவசி போல மறைந்தே நின்று – முக்-பள்ளு:165/3

மேல்

வான (2)

புத்தியுடன் தெய்வநிலை போற்றிய பின் வான முகில் – முக்-பள்ளு:34/3
வான குருசில் வள்ளலாய் வரை கோனை பரிசு கொள்ளலாய் வழங்குமாறும் புறப்பட்டே புனல் முழங்குமாறும் திறப்பட்டே – முக்-பள்ளு:40/1

மேல்

வானம் (1)

கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும் – முக்-பள்ளு:19/1

மேல்

வானம்பாடி (1)

சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே மழை தேடி ஒரு கோடி வானம்பாடி ஆடுதே – முக்-பள்ளு:35/3

மேல்

வானமே (1)

கோவில் பெரிய வடமலேந்திரன் மாவில் கறுத்து பொழிந்த பின் குளிருகின்றது கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே – முக்-பள்ளு:மேல்

வானவர் (1)

பணிவிடைசெய தானவர் வானவர் பழ மகபதி பேரியல் சீரியல் பகர் இளமுறைக்கோன் என வான் நெறி பாலிப்பவரே – முக்-பள்ளு:1/4

மேல்

வானுக்கும் (1)

ஊனுக்கும் உயிராம் பூமிக்கும் வானுக்கும் பயிராம் அழகருக்கு உதவும் பள் வேண்டில் அவன் இனி பதனம் காண் ஆண்டே – முக்-பள்ளு:87/4

மேல்