ஊ – முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


ஊசலிடும் (1)

உள்ளத்தில் ஊசலிடும் உல்லாச பார்வை விழி – முக்-பள்ளு:7/1

மேல்

ஊசிக்காம்பு (1)

பக்கமே ஊசிக்காம்பு சுழுக்கு வாய்க்கு இடும் சீலைப்பந்தமும் விளக்கெண்ணெயும் முந்தவே தேடும் – முக்-பள்ளு:36/3

மேல்

ஊட்டினார் (1)

கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர் கஞ்சனார்க்கு ஒரு நஞ்சு_அனார் கடையும் அமுதம் உடையும் திரையில் காட்டி அண்டருக்கு ஊட்டினார்
அடிக்குள் அடங்கும்படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே ஆடிப்பாடி நாற்று முடியை அலைத்து குலைத்து நடச்செய்தே – முக்-பள்ளு:129/1,2

மேல்

ஊட்டுக்கு (1)

உரத்திடும் காளை சுழியன் நரை தலை மோழை புதியவன் ஊட்டுக்கு குறித்தான் வில்லடிப்பாட்டுக்கு பொறித்தான் – முக்-பள்ளு:86/2

மேல்

ஊத்தை (1)

வாய்த்த தடி கம்பை ஊன்றி சாய்த்து பார்ப்பாராம் ஊத்தை வாய்க்கு மெல்ல புகைகுடிக்க தீக்கு போவாராம் – முக்-பள்ளு:54/3

மேல்

ஊர் (4)

அண்டர்நாயகர் செண்டலங்காரர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:19/4
ஆதிநாதர் அனாதி ஒருத்தர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:23/4
முன்றில் குட வளை ஊர் முக்கூடல் ஊரர் செய்த – முக்-பள்ளு:47/1
தன் ஊர் விட்டு உன் போல ஒட்டுச்சாய்ப்பில் வந்தேனோ – முக்-பள்ளு:154/2

மேல்

ஊர்ந்ததே (1)

தகும் தடம் கடல் இறைவனை தொழ மகிழ்ந்திடும் கடன் முறையினில் சார்ந்து சுறவு நேர்ந்து குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே – முக்-பள்ளு:மேல்

ஊரர் (1)

முன்றில் குட வளை ஊர் முக்கூடல் ஊரர் செய்த – முக்-பள்ளு:47/1

மேல்

ஊரார் (1)

அங்கே அவன் வந்தால் என்ன மருதூர்ப்பள்ளி ஊரார்
ஆமக்களை தொடர்ந்து உனை போல் ஆரடி வந்தாள் – முக்-பள்ளு:156/1,2

மேல்

ஊராருக்கு (1)

ஊருக்குள் ஏற்றம் இவன் இந்த சேரிக்குள் நாற்றம் குடும்பு செய்து ஊராருக்கு உழைத்தான் அழகர் சொம் மாறாக பிழைத்தான் – முக்-பள்ளு:88/2

மேல்

ஊரில் (1)

கான குளவி அலையவே மதுபான குளவி கலையவே காட்டு சாதி வேரில் போய் குற மோட்டு சாதி ஊரில் போய் – முக்-பள்ளு:40/3

மேல்

ஊரிலே (1)

உன்னை கொண்டான் என்னை கண்டு என் ஊரிலே வந்தான் – முக்-பள்ளு:155/4

மேல்

ஊருக்கு (1)

காரில் பயிரிட்டு ஊருக்கு அதிகமாய் கதலிவாழை காய்த்த வயலும் கீர்த்தி சேர் நயினாத்தையார் திருத்தும் – முக்-பள்ளு:92/2

மேல்

ஊருக்குள் (1)

ஊருக்குள் ஏற்றம் இவன் இந்த சேரிக்குள் நாற்றம் குடும்பு செய்து ஊராருக்கு உழைத்தான் அழகர் சொம் மாறாக பிழைத்தான் – முக்-பள்ளு:88/2

மேல்

ஊரும் (1)

கங்கமே ஊரும் கடவுளர் முக்கூடலிலே – முக்-பள்ளு:49/1

மேல்

ஊரே (5)

செஞ்சிக்கும் கூடலுக்கும் தஞ்சைக்கும் ஆணை செல்லும் செங்கோல் வடமலேந்த்ரன் எங்கள் ஊரே
நெஞ்சில் குறித்த குளம் அஞ்சுக்கும் சக்கரக்கால் நிலையிட்ட நாளில் பண்ணை தலையிட்டேன் நான் – முக்-பள்ளு:14/1,2
அண்டர்நாயகர் செண்டலங்காரர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:மேல்

ஊழி (1)

ஆரத்தன பார திரு உற்று ஆசைப்பட ஓசை திரை நெட்டு ஆழிக்கு இசை ஊழி சயனத்து அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:2/2

மேல்

ஊளை (1)

நீறு போல் வெளுத்த ஊளை ஊறு நாசியும் தட்டி நெரித்த மாங்கொட்டை போல் ஈ அரித்த வாயும் – முக்-பள்ளு:53/2

மேல்

ஊற்று (1)

வாய்த்த சாராயமும் பனை ஊற்று கள்ளும் வடக்கு வாய் செல்லி உண்ண குடத்தில் வையும் – முக்-பள்ளு:33/2

மேல்

ஊறு (1)

நீறு போல் வெளுத்த ஊளை ஊறு நாசியும் தட்டி நெரித்த மாங்கொட்டை போல் ஈ அரித்த வாயும் – முக்-பள்ளு:53/2

மேல்

ஊன்றி (2)

காலானது ஊன்றி அந்த கால முறை காட்டியதே – முக்-பள்ளு:37/4
வாய்த்த தடி கம்பை ஊன்றி சாய்த்து பார்ப்பாராம் ஊத்தை வாய்க்கு மெல்ல புகைகுடிக்க தீக்கு போவாராம் – முக்-பள்ளு:54/3

மேல்

ஊனுக்கும் (1)

ஊனுக்கும் உயிராம் பூமிக்கும் வானுக்கும் பயிராம் அழகருக்கு உதவும் பள் வேண்டில் அவன் இனி பதனம் காண் ஆண்டே – முக்-பள்ளு:87/4

மேல்

ஊனே (1)

தாவி பறந்து பணிகள் பதுங்க கோவித்து எழுந்த கருடனும் தானே ஆகி உலகுக்கு உரிமை ஊனே ஆகி உயிருமாய் – முக்-பள்ளு:38/3

மேல்

ஊனை (1)

மீனை கொண்டு அளிப்பான் கருவாட்டு ஊனை கொண்டு ஒளிப்பான் நான் சொன்னால் வீம்புகள் அடிப்பான் அவள் சொன்னால் பாம்பையும் பிடிப்பான் – முக்-பள்ளு:89/2

மேல்