கை- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கை (7)

கட்டின மாட்டை தொட்டு அவிழான் ஒருக்காலும் தான் உழக்கோலும் கை தீண்டான் – முக்-பள்ளு:57/1
கலக வேல் கை திருமங்கை ஆழ்வானை காணேன் மச்சுமுறித்தானை காட்டி – முக்-பள்ளு:68/3
கோல் ஒரு கை கொண்டு கடைக்காலும் ஒரு கை தூக்கி கோனேரிக்கோன் ஆட்டு கிடை கொண்டுவந்தான் – முக்-பள்ளு:82/4
கோல் ஒரு கை கொண்டு கடைக்காலும் ஒரு கை தூக்கி கோனேரிக்கோன் ஆட்டு கிடை கொண்டுவந்தான் – முக்-பள்ளு:82/4
பரத்தி கை சுள்ளும் அக்கரை திருத்தினில் கள்ளும் கொண்டு அஞ்சு பசுவையும் விற்றான் மனம்-தனில் அசுவையும் அற்றான் – முக்-பள்ளு:86/3
பொதிந்த பொதியை நீட்டி பூட்டி காட்டி புரப்போர் பொன் இணங்கு கை போல் வணங்கி – முக்-பள்ளு:136/3
உள்ள பேர் எனக்கு தர கை எழும்பாமல் காலால் உழுது வாயால் அதட்டி உழப்பிப்போட்டான் – முக்-பள்ளு:151/3

மேல்

கைக்குள்ளே (1)

கட்டி நான் பேசப்போமோ அரண்மனை காரியம் என்றன் கைக்குள்ளே உண்டோ – முக்-பள்ளு:100/3

மேல்

கைக்கே (1)

ஆனை குட்டியை போல் எருமையை ஞானிச்செட்டி கைக்கே பணம் பதினைஞ்சுக்கு கொடுத்தான் கொழுந்தியார் குஞ்சுக்கு இட்டெடுத்தான் – முக்-பள்ளு:89/1

மேல்

கைகால் (1)

படுத்திடும் பள்ளன் வேலையை கெடுத்திடும் கள்ளன் எனை கண்டு பதறியே விழுந்தான் கைகால் உதறியே எழுந்தான் – முக்-பள்ளு:85/2

மேல்

கைகேசி (1)

முடியும் சூடாமலே கைகேசி தள்ளவே காட்டில் – முக்-பள்ளு:167/3

மேல்

கைதரும் (2)

செங்கரும்புக்கு கைதரும் போல் வளர் சீவலமங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:26/4
திங்கள் மும்மாரி உலகு எங்கும் பெய்யவே தெய்வத்தை போற்றி வந்தால் கைதரும் காண் – முக்-பள்ளு:32/1

மேல்

கைதொழுது (1)

காவலராம் தேவரை முன் கைதொழுது பின்னரும் என் – முக்-பள்ளு:5/1

மேல்

கையார (1)

கையார கண்ட களவும் பொறுப்பீரே ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:103/3

மேல்

கையாலே (1)

நீச்சுக்கு மேலே நிலைப்பு என்ன பேச்சு கையாலே உழ சற்றே நினைப்பதும் இல்லை எனை தேடி கனைப்பதும் இல்லை – முக்-பள்ளு:90/2

மேல்

கையிட்டானும் (1)

கூடி நெய்யில் கையிட்டானும் கொண்டல் அல்லோடி – முக்-பள்ளு:162/4

மேல்

கையில் (4)

பற்றிய கரும்பொன் காப்பும் கையில் வெற்றிலையும் வாயில் ஒதுக்கிய பாக்கும் ஒரு சுருளுக்கு ஒருக்கால் நீக்கும் இதழும் – முக்-பள்ளு:6/2
பெண்ணை யார் கையில் பிடிப்பார் பிடிப்பாரே – முக்-பள்ளு:55/4
கண்டார் பயப்பட தன் கையில் சுழற்றுதடி – முக்-பள்ளு:81/1
மங்கை ஒரு பங்கு இருக்க யோகி என்று தான் கையில்
மழு ஏந்தி நின்றான் உங்கள் மத்தன் அல்லோடி – முக்-பள்ளு:162/1,2

மேல்

கையை (1)

கள்ளால் உற்றது மீறியே நிலைகொள்ளாமல் தடுமாறியே காப்பை காட்டு என்று கையை பிடிக்கும் கோப்பை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:131/4

மேல்

கைவிரசலாய் (1)

கன்னி பொதுவி அன்னம்பாலி கள்ளியும் கலந்து ஒருவர்க்கொருவர் கைவிரசலாய் நடுகை சமர்த்தை காட்டும் பள்ளீரே – முக்-பள்ளு:126/4

மேல்