சே- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


சேதம் (1)

அப்பால் அவனுக்கு ஒன்றானால் நயினார் சேதம் ஆமே அடியாளுக்கு என்ன – முக்-பள்ளு:60/2

மேல்

சேர் (4)

மன்றல் சேர் இளவேனில் புறாக்கள் மாங்குயிலுக்கு மாராயம்சொல்லி – முக்-பள்ளு:18/3
பூ வாசனை சேர் புரி_குழலார் பூங்குயிலை – முக்-பள்ளு:27/3
காரில் பயிரிட்டு ஊருக்கு அதிகமாய் கதலிவாழை காய்த்த வயலும் கீர்த்தி சேர் நயினாத்தையார் திருத்தும் – முக்-பள்ளு:92/2
படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும் பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார் – முக்-பள்ளு:128/1

மேல்

சேர்த்த (1)

சேர்த்த மரமும் கழற்றி செய் வரிசை செய்ததன் பின் – முக்-பள்ளு:107/2

மேல்

சேர்த்தானே (1)

வந்த பள்ளன்-தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே – முக்-பள்ளு:மேல்

சேர்த்திருக்கும் (1)

குறுக்கில் வழுதடி சேர்த்திருக்கும் கச்சையும் செம்பொன் கோல புள்ளி உருமாலும் நீல கொண்டையும் – முக்-பள்ளு:10/2

மேல்

சேர்த்து (2)

கரத்தொடு மரமும் பசும் புரை மரத்தொடு கரமும் சேர்த்து இரு காலினில் விலங்கும் பருக்கவே கோலுவீர் ஆண்டே – முக்-பள்ளு:86/4
குலங்களுடன் மடிந்த கொலை வாள் அரக்கர் வேலும் கூர்வாளும் சேர்த்து அடித்த கொழு ஆயிரம் – முக்-பள்ளு:111/3

மேல்

சேர்த்துக்கொள்வர் (1)

தேடினால் அவர் முன் நின்ற பாதியும் சேர்த்துக்கொள்வர் மகாராசர்தாமே – முக்-பள்ளு:70/3

மேல்

சேர்ந்தது (1)

விதிவசம்-தன்னில் ஆயிரமல்லியன் மேல் திசை முகம் சேர்ந்தது காணேன் – முக்-பள்ளு:71/2

மேல்

சேர்ப்பேன் (1)

பெருமாள் பதிநூற்றெட்டும் மருவி வலம்செய்யார்-தம் பேய் காலை வடம்பூட்டி ஏர்க்கால் சேர்ப்பேன்
திருவாய்மொழி கல்லாரை இரு கால் மாடுகள் ஆக்கி தீத்தீ என்று உழக்கோலால் சாத்துவேன் ஆண்டே – முக்-பள்ளு:11/3,4

மேல்

சேர (4)

சேர தளை பூரித்து அசையை சீரை பகர்வாரை கருதி தேடி திசை ஓடி திரிய திறமிலை அதற்கே – முக்-பள்ளு:2/3
பாட்டு வளம் சேர குலப்பத்தனார் மாலிகை பூம் – முக்-பள்ளு:16/3
விருதுக்கே காரைக்காட்டார் வழக்கிட்டு மேழி சேர முன் வாங்கிக்கொண்டார்கள் – முக்-பள்ளு:73/3
சேர செய் பல பேரிட்டு உள்ளது எல்லாம் எருவைத்தே இன்று திரும்பினேன் இன்னம் தேவரீர் ஏவல் விரும்பினேன் ஆண்டே – முக்-பள்ளு:92/8

மேல்

சேரி (3)

சேரி குரவை எழ தெய்வநிலை போற்றினரே – முக்-பள்ளு:31/4
போற்று திருமால் அழகர்க்கு ஏற்றமாம் பண்ணை சேரி புள்ளி பள்ளர் ஆடிப்பாடி துள்ளிக்கொள்வோமே – முக்-பள்ளு:35/4
வளர்ந்த நாற்றை முகம் கண்டான் சேரி மள்ளர் கூட மது உண்டான் – முக்-பள்ளு:123/1

மேல்

சேரிக்குள் (1)

ஊருக்குள் ஏற்றம் இவன் இந்த சேரிக்குள் நாற்றம் குடும்பு செய்து ஊராருக்கு உழைத்தான் அழகர் சொம் மாறாக பிழைத்தான் – முக்-பள்ளு:88/2

மேல்

சேரியில் (1)

முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில் பள்ளர் முழுதும் குரவையிட்ட எழு தினம் ஆடீர் – முக்-பள்ளு:36/4

மேல்

சேரில் (2)

புத்தன் கருங்குறுவை புனுகுச்சம்பாவும் இரு பூவுக்கும் விதை சேரில் போட்டேன் ஆனாண்டே – முக்-பள்ளு:108/4
முற்றும் கணக்கு என்னால் சொல்ல முடியாது என்பது அறிவீர் சேரில்
மற்ற நெல்லும் விதையும் கட்டிவைத்தேன் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:148/1,2

மேல்

சேலை (1)

கற்றை சடை கட்டி மரவுரியும் சேலை தான் பண்டு – முக்-பள்ளு:168/3

மேல்

சேவல் (1)

பேடை மாங்குயில் வாய் கொண்டு சேவல் பிளந்த வாய்-தனை பேசாமல் மூட – முக்-பள்ளு:17/2

மேல்

சேவி (1)

பொன்னி அழகி நூவி சேவி பூவி சாத்தி காத்தி அம்மச்சி பூமி காமி வேம்பி கரும்பி புலிச்சி அங்காளி – முக்-பள்ளு:126/3

மேல்

சேவையன் (1)

பூவலய காவலன் எனவும் பூவை நிற சேவையன் எனவும் போதனும் எட்டாதவன் எனவும் பொய்யா மறை தேர் – முக்-பள்ளு:3/1

மேல்

சேற்றில் (1)

சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே மழை தேடி ஒரு கோடி வானம்பாடி ஆடுதே – முக்-பள்ளு:35/3

மேல்

சேற்று (2)

சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே மழை தேடி ஒரு கோடி வானம்பாடி ஆடுதே – முக்-பள்ளு:35/3
சேற்று கால் மள்ளருக்கு தென்றல் கால் என் ஆமோ – முக்-பள்ளு:127/2

மேல்

சேனை (1)

சேனை புரவி அழகனார் மருகோனை பரவி அழகு பூந்தினையை வனத்தில் உதிர்த்து பாலை அனைய வனத்தை எதிர்ந்ததே – முக்-பள்ளு:40/4

மேல்

சேனைக்கு (1)

எங்கும் போற்றும் பெருவெள்ளை முன்னம் இராமர் சேனைக்கு உண்டாம்படி ஆச்சு – முக்-பள்ளு:69/1

மேல்

சேனைமுதற்கோனை (1)

தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:3/4

மேல்