தே- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தேக்கி 1
தேங்காயும் 1
தேங்குதலை 1
தேட 1
தேடி 7
தேடிடும் 1
தேடிவைத்தேன் 1
தேடினால் 1
தேடும் 2
தேய்த்தான் 1
தேய 1
தேர் 1
தேர்க்காலில் 1
தேர்ந்து 1
தேர்ப்பால் 1
தேர்ப்பால்_அழகர் 1
தேவர் 1
தேவரீர் 2
தேவரை 1
தேவாதிதேவர் 1
தேவியாய் 1
தேளிமீன் 1
தேற்ற 1
தேற்றம் 1
தேற்றுவரே 1
தேறி 1
தேறிய 1
தேறும்படி 1
தேனுக்குள் 1

தேக்கி (1)

குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:44/4

மேல்

தேங்காயும் (1)

பொங்கலும் இட்டு தேங்காயும் கரும்பும் பூலா உடையாருக்கு சால கொடுங்கள் – முக்-பள்ளு:32/2

மேல்

தேங்குதலை (1)

தேங்குதலை வார்த்தை செவியில் புகுதலுமே – முக்-பள்ளு:119/2

மேல்

தேட (1)

தங்கமே தேட தணந்தார் மணந்திலரே – முக்-பள்ளு:49/2

மேல்

தேடி (7)

சேர தளை பூரித்து அசையை சீரை பகர்வாரை கருதி தேடி திசை ஓடி திரிய திறமிலை அதற்கே – முக்-பள்ளு:2/3
சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே மழை தேடி ஒரு கோடி வானம்பாடி ஆடுதே – முக்-பள்ளு:35/3
தினமும் நான் பகல் காணேன் இராத்திரி தேடி பூரம் அடுக்கும் காண் ஆண்டே – முக்-பள்ளு:74/4
செப்பியவாறு ஆயர் மனை தேடி நடந்தானே – முக்-பள்ளு:76/4
நீச்சுக்கு மேலே நிலைப்பு என்ன பேச்சு கையாலே உழ சற்றே நினைப்பதும் இல்லை எனை தேடி கனைப்பதும் இல்லை – முக்-பள்ளு:90/2
அல்லவோ தேடி அடியாள் இங்கே வந்தேன் ஆண்டே – முக்-பள்ளு:103/2
செழும் திருப்பதம் தொழும் தவத்தினர் சித்தம் உருகி நித்தமும் தேடி வரும் முக்கூடல் அழகர் சிற்றாற்று கால் பற்றிலே – முக்-பள்ளு:134/1

மேல்

தேடிடும் (1)

தேடிடும் பள்ளு பிள்ளைக்கு இணை கண்டீர் ஆண்டே இனி – முக்-பள்ளு:105/3

மேல்

தேடிவைத்தேன் (1)

மலங்காமல் இந்தப்படி வகை எல்லாம் தேடிவைத்தேன் வயலிலே நாளேர் இட வாரீர் ஆண்டே – முக்-பள்ளு:111/4

மேல்

தேடினால் (1)

தேடினால் அவர் முன் நின்ற பாதியும் சேர்த்துக்கொள்வர் மகாராசர்தாமே – முக்-பள்ளு:70/3

மேல்

தேடும் (2)

விண்ட பூ மது வண்டலிட்டு ஓடும் வெயில் வெய்யோன் பொன் எயில் வழி தேடும்
அண்டர்நாயகர் செண்டலங்காரர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:19/3,4
பக்கமே ஊசிக்காம்பு சுழுக்கு வாய்க்கு இடும் சீலைப்பந்தமும் விளக்கெண்ணெயும் முந்தவே தேடும்
முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில் பள்ளர் முழுதும் குரவையிட்ட எழு தினம் ஆடீர் – முக்-பள்ளு:36/3,4

மேல்

தேய்த்தான் (1)

பெட்டியால் வாரி பட்டடை நெல் எல்லாம் பேய்த்தண்ணீருக்கு தேய்த்தான் காண் ஆண்டே – முக்-பள்ளு:57/4

மேல்

தேய (1)

தேய கண்டது உரைத்திடும் சந்தனம் சீவலமங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:22/4

மேல்

தேர் (1)

பூவலய காவலன் எனவும் பூவை நிற சேவையன் எனவும் போதனும் எட்டாதவன் எனவும் பொய்யா மறை தேர்
பாவலனுக்கு ஆவலன் எனவும் பார் அறிய தாரணைசெயும் என் பாடலில் முக்கூடலின் அழகர் பள்ளேசலிலே – முக்-பள்ளு:3/1,2

மேல்

தேர்க்காலில் (1)

தான் பசு போல் நின்று கன்றை தேர்க்காலில் விட்டே சோழன்-தன் – முக்-பள்ளு:165/1

மேல்

தேர்ந்து (1)

சீவல நல் நாடும் இசை தேர்ந்து உரைக்க பண்ணை-தனில் – முக்-பள்ளு:5/3

மேல்

தேர்ப்பால் (1)

காவலர்க்கு உயர் பெருமை மேவு தேர்ப்பால்_அழகர் கட்டளைகள் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:மேல்

தேர்ப்பால்_அழகர் (1)

காவலர்க்கு உயர் பெருமை மேவு தேர்ப்பால்_அழகர் கட்டளைகள் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/4

மேல்

தேவர் (1)

தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:3/4

மேல்

தேவரீர் (2)

சேர செய் பல பேரிட்டு உள்ளது எல்லாம் எருவைத்தே இன்று திரும்பினேன் இன்னம் தேவரீர் ஏவல் விரும்பினேன் ஆண்டே – முக்-பள்ளு:92/8
தேவரீர் சித்தம் என் பாக்கியம் காண் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:105/4

மேல்

தேவரை (1)

காவலராம் தேவரை முன் கைதொழுது பின்னரும் என் – முக்-பள்ளு:5/1

மேல்

தேவாதிதேவர் (1)

தேவாதிதேவர் திருமுக்கூடலின் பெருமை – முக்-பள்ளு:27/1

மேல்

தேவியாய் (1)

திருமுக்கூடல் அழகர்க்கு இளைய தெரிவை நீலியை தேவியாய் கொண்ட – முக்-பள்ளு:73/1

மேல்

தேளிமீன் (1)

வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன் மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன் – முக்-பள்ளு:51/2

மேல்

தேற்ற (1)

முறுக விளைந்தவாறு முற்றும் தேற்ற முக்கூடல் பண்ணைக்காரன் முன்பு கூற – முக்-பள்ளு:137/1

மேல்

தேற்றம் (1)

தேற்றம் அரிது அன்றோ சிறுமை வராமல் பெருமை – முக்-பள்ளு:58/3

மேல்

தேற்றுவரே (1)

இன்றைக்கு இரவில் இவளை எவர் தேற்றுவரே
கன்றை கழுத்து அணைத்து கற்றாவை கூவும் அண்டர் – முக்-பள்ளு:45/2,3

மேல்

தேறி (1)

பதிந்த நடவு தேறி பசப்பும் ஏறி பசந்து குருத்து மேன்மேல் பரந்து செறிந்து – முக்-பள்ளு:136/1

மேல்

தேறிய (1)

துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே – முக்-பள்ளு:1/3

மேல்

தேறும்படி (1)

தேறும்படி அறிக்கைசெய்து பண்ணை ஆண்டவனார் – முக்-பள்ளு:124/3

மேல்

தேனுக்குள் (1)

தேனுக்குள் பாலாய் அவள் மஞ்சள் மேனிக்கு மாலாய் பணம் எல்லாம் சிந்தியே கெட்டான் எனை இன்று சந்தியில் விட்டான் – முக்-பள்ளு:87/2

மேல்