மூ – முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


மூக்கன் (1)

பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன் பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன் – முக்-பள்ளு:50/2

மேல்

மூக்கி (2)

நன்னி உடைச்சி சடைச்சி மூக்கி நல்லி பூலி ஆலி வேலி நாச்சி பேச்சி சுந்தி எழுவி நாகி போகிலாள் – முக்-பள்ளு:126/2
முத்த குடும்பன் பெற்ற பொத்தாணி மொண்டி சோரன் மாறனூர் மூக்கி தமக்கை காக்கி கறுப்பி மூவிக்கு இளைய நூவி-தன் – முக்-பள்ளு:133/2

மேல்

மூக்கிலே (1)

போக்கு நீக்கு இல்லை மூக்கிலே கோபம் என் புத்தியும் கேளான் சத்துரு நீலன் – முக்-பள்ளு:56/3

மேல்

மூக்கு (1)

முட்டிக்கால் பண்ணை ஆண்டே நடு கேளாரோ ஆந்தை மூக்கு மூஞ்சி பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/1

மேல்

மூங்கில்சம்பா (1)

முத்துவிளங்கி மலைமுண்டன் பொற்பாளை நெடுமூக்கன் அரிக்கிராவி மூங்கில்சம்பா
கத்தூரிவாணன் காடைக்கழுத்தன் இரங்கல்மீட்டான் கல்லுண்டை பூம்பாளை பால்கடுக்கன் வெள்ளை – முக்-பள்ளு:108/2,3

மேல்

மூஞ்சி (1)

முட்டிக்கால் பண்ணை ஆண்டே நடு கேளாரோ ஆந்தை மூக்கு மூஞ்சி பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/1

மேல்

மூட (1)

பேடை மாங்குயில் வாய் கொண்டு சேவல் பிளந்த வாய்-தனை பேசாமல் மூட
கோடை போய்விட்ட சோபனம் கொண்டு குளிர்ந்த கொன்றை முறும் தளிர் ஓட – முக்-பள்ளு:17/2,3

மேல்

மூடும் (1)

கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டம் தண்டலை நாடும் கனக முன்றில் அனம் விளையாடும் – முக்-பள்ளு:19/1,2

மேல்

மூத்தபள்ளி (7)

முத்தமிழ் நாட்டு அழகர் கொத்தடியானுக்கு ஆன முக்கூடல் மூத்தபள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:13/4
மூத்தபள்ளி முகம் பார்த்து வார்த்தை சொல்வாராம் பெருமூச்சு கொண்டு இளையபள்ளி பேச்சு கேட்பாராம் – முக்-பள்ளு:54/1
எண்ணெய் ஆர் பூந்தயிலம் ஏற்ற குழல் மூத்தபள்ளி
பண்ணையானோடு உரைத்தாள் பள்ளன் மன கள்ளம் எல்லாம் – முக்-பள்ளு:55/1,2
சித்தமுற மூத்தபள்ளி செப்பி மறைந்து ஏகிய பின் – முக்-பள்ளு:91/2
முடுக வா ராசியம் உண்டு குண்டுணிக்காரி மூத்தபள்ளி பார்க்க வருவாள் – முக்-பள்ளு:95/1
முத்தி தரும் மால் அழகர் முக்கூடல் மூத்தபள்ளி
அ திசையில் நின்று பண்ணை ஆண்டவர் முன் சென்றாளே – முக்-பள்ளு:102/3,4
மூத்தபள்ளி சொற்படியே முக்கூடல்பள்ளனை கால் – முக்-பள்ளு:107/1

மேல்

மூத்தவன் (1)

செங்கான் எனக்கு மூத்தவன் ஏதுக்கோ தெய்வத்துக்கு ஆக்கிவைத்தானாம் – முக்-பள்ளு:96/2

மேல்

மூதலிக்கிறாய் (1)

முட்டிவிட்டு குனியும் பழங்கதை மூதலிக்கிறாய் பேதலித்துப்போய் – முக்-பள்ளு:100/1

மேல்

மூதலியடி (1)

மூப்புச்சொம் எனக்கு தந்தால் மூதலியடி
தொண்டைகட்ட கூப்பிடாதே கூப்பிட்டு என்னை வைது – முக்-பள்ளு:152/2,3

மேல்

மூப்படியானும் (1)

முப்பாலும் சோறும் உண்ணவே நடத்தி கொண்டீர் மூப்படியானும் புறப்பட்டான் – முக்-பள்ளு:60/1

மேல்

மூப்பு (1)

மூப்பு இளமை பார்த்து தலைசாய்ப்பார் இல்லையோ – முக்-பள்ளு:173/2

மேல்

மூப்புச்சொம் (1)

மூப்புச்சொம் எனக்கு தந்தால் மூதலியடி – முக்-பள்ளு:152/2

மேல்

மூர்த்தி (1)

முன்பு தள்ளி போனான் உங்கள் மூர்த்தி அல்லோடி – முக்-பள்ளு:167/4

மேல்

மூவகை (2)

முத்தேவில் பெரியவர் கரியவர் முப்பான்மை தொழிலினர் எழிலினர் முக்கூடல் குழகர் மெய் அழகர் பள் மூவகை தமிழ்க்கே – முக்-பள்ளு:4/2
சீவலப்பேரி தமிழ் மூவகை கல்வியும் செல்வமும் பெருகவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/1

மேல்

மூவான் (1)

மூவான் முதல் இட்டமலை முண்டன் நெல் அளந்தேன் – முக்-பள்ளு:146/2

மேல்

மூவிக்கு (1)

முத்த குடும்பன் பெற்ற பொத்தாணி மொண்டி சோரன் மாறனூர் மூக்கி தமக்கை காக்கி கறுப்பி மூவிக்கு இளைய நூவி-தன் – முக்-பள்ளு:133/2

மேல்

மூளி (1)

நானடி பூனை மூளி நாயும் நீயடி – முக்-பள்ளு:157/2

மேல்

மூன்று (1)

கடின பிரவத்தி ஏதோ திரும்பிவர கண்டிலேன் இன்று மூன்று நாள் – முக்-பள்ளு:59/3

மேல்

மூன்றும் (1)

முந்தி தரிசையடித்து மறுத்து முச்சாலடித்திட்டு உழவு நாலும் முழுதும் உழுது திருந்த பரம்பு மூன்றும் தடவியே – முக்-பள்ளு:125/1

மேல்