பொ – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


பொங்கி (1)

துங்க முடி மேல் குடை வெண் சோதி விட பொங்கி எழும் – தமிழ்-தூது:7 240/2
மேல்

பொடிபோட்டு (1)

புக்கு வந்தார்-தம் மேல் பொடிபோட்டு உளம் மயக்கின் – தமிழ்-தூது:8 255/1
மேல்

பொதிசோறு (2)

கூறும் பொதிசோறு கொண்டுவரின் உனக்கு – தமிழ்-தூது:4 183/1
வேறும் பொதிசோறு வேண்டுமோ வீறாக – தமிழ்-தூது:4 183/2
மேல்

பொய் (2)

பொய் அடிமை இல்லா புலவர் என்று நாவலர் சொல் – தமிழ்-தூது:1 13/1
எய்தாமல் அங்கு இருக்க எண்ணாதே பொய் தீர – தமிழ்-தூது:3 168/2
மேல்

பொருக்கென (1)

இருக்கும் சினகரத்துள் எய்தி பொருக்கென போய் – தமிழ்-தூது:5 218/2
மேல்

பொருத்தம் (1)

பொருத்தம் ஒரு பத்து பொருந்தும் உனைத்தானே – தமிழ்-தூது:1 83/1
மேல்

பொருந்தாதோ (1)

பொன்_அனையாள் வீடும் பொருந்தாதோ என்னும் மொழி – தமிழ்-தூது:8 263/2
மேல்

பொருந்தும் (1)

பொருத்தம் ஒரு பத்து பொருந்தும் உனைத்தானே – தமிழ்-தூது:1 83/1
மேல்

பொருள் (8)

உன்னை பொருள் என்று உரைக்கும்-தொறும் வளர்வாய் – தமிழ்-தூது:1 87/1
பொன்னை பொருள் என்ன போதுமோ கன்னமிட்டு – தமிழ்-தூது:1 87/2
என்ன பொருள் உனை போல் எய்தாவே நல் நெறியின் – தமிழ்-தூது:1 88/2
நா திரமா மேவு பொருள் நன்றா அறுபது எனும் – தமிழ்-தூது:3 118/1
அறம் பொருள் இன்பம் வீடு ஆரணர் சொன்னார் அ – தமிழ்-தூது:3 129/1
கற்பார் பொருள் காணார் காசுபணம் காணில் உனை – தமிழ்-தூது:4 184/1
எள்ளிடுவார் சொல் பொருள் கேட்டு இன்புறார் நாய் போல – தமிழ்-தூது:4 185/1
பூண்டாய் நீதானே பொருள் அன்றோ ஆண்ட – தமிழ்-தூது:4 190/2
மேல்

பொருள்கோள் (2)

வாங்கு பொருள்கோள் வகை மூன்றே பெற்றார் நீ – தமிழ்-தூது:1 77/1
ஓங்கு பொருள்கோள் வகை எட்டு உள்ளாயே பாங்கு பெற – தமிழ்-தூது:1 77/2
மேல்

பொருளாய் (2)

நேசர் உனக்கே பொருளாய் நின்றாரோ நீள் மதுரை – தமிழ்-தூது:1 95/1
வாசருக்கு நீ பொருளாய் வந்தாயோ பாசமுறும் – தமிழ்-தூது:1 95/2
மேல்

பொருளும் (1)

நாலே விதையா நனி விதைத்து நால் பொருளும்
மேலே பலன்பெற செய்விக்கும் நாள் மேலோரில் – தமிழ்-தூது:1 65/1,2
மேல்

பொருளே (1)

மன்னர் கவர்ந்தும் வளர் பொருளே கைப்பொருள்கள் – தமிழ்-தூது:1 88/1
மேல்

பொற்பலகை (2)

ஈ அரிய பொற்பலகை இட்டவர் ஆர் மற்று அவன்-தன் – தமிழ்-தூது:3 122/1
பொற்பலகை மேல் இருந்தாய் போதாதோ தற்பரரோடு – தமிழ்-தூது:3 130/2
மேல்

பொற்பாக (1)

கற்பூர தட்டில் கனல் வாய்ப்ப பொற்பாக – தமிழ்-தூது:7 238/2
மேல்

பொன் (9)

பொன் அடிகளே புகலா போற்றினேன் பன்னிய மென் – தமிழ்-தூது:1 16/2
ஒராயிரம் பொன் ஈந்த உலாவும் பராவும் அவன் – தமிழ்-தூது:1 59/2
பொன் அடிக்கு உண்டு என்பது என்ன புத்தியோ என் அரசே – தமிழ்-தூது:1 79/2
ஆயிரம் பொன் இறைக்கும் ஐயரை வீதியிலே – தமிழ்-தூது:1 100/1
என்று என்று இரங்கினேன் என் கவலை எல்லாம் பொன்
குன்று அனையாய் உன்னுடனே கூறுகேன் சென்றாலும் – தமிழ்-தூது:2 112/1,2
ஆக்க அரும் செங்கலை பொன் ஆக்கினாய் மண் முழுதும் – தமிழ்-தூது:4 192/1
கோடி பொன் கொண்டது நின் கொற்றமே தேடி அருள் – தமிழ்-தூது:4 193/2
பொன் கும்ப தீபம் எதிர் போய் வளைய சொற்கு உருகும் – தமிழ்-தூது:7 237/2
பொன்_அனையாள் வீடும் பொருந்தாதோ என்னும் மொழி – தமிழ்-தூது:8 263/2
மேல்

பொன்_அனையாள் (1)

பொன்_அனையாள் வீடும் பொருந்தாதோ என்னும் மொழி – தமிழ்-தூது:8 263/2
மேல்

பொன்வண்ணத்தந்தாதியும் (1)

அன்புறு பொன்வண்ணத்தந்தாதியும் முன்பு அவர் சொல் – தமிழ்-தூது:1 54/2
மேல்

பொன்னனையாள் (1)

பொன்னனையாள் வீடும் புகுந்து இருக்கலாம் எனின் என் – தமிழ்-தூது:8 263/1
மேல்

பொன்னி (1)

தடை உண்டோ ஐயாறு-தன்னிலே பொன்னி
இடை விலங்க சென்றது அறியேனோ இடையிலே – தமிழ்-தூது:4 181/1,2
மேல்

பொன்னே (1)

பொன்னே சுடாது அணிய பூட்டாயோ முன் இறந்தாள் – தமிழ்-தூது:3 165/2
மேல்

பொன்னை (1)

பொன்னை பொருள் என்ன போதுமோ கன்னமிட்டு – தமிழ்-தூது:1 87/2

மேல்