மி – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 15
மிக்கது 1
மிக்கவர் 2
மிக்கவர்க்கே 1
மிக்கவரை 1
மிக்கவை 1
மிக்கார் 3
மிக்கார்க்கு 1
மிக்காரால் 1
மிக்காருள் 1
மிக்காரை 2
மிக்கு 7
மிக்குவிடும் 1
மிக 24
மிகப்பட்டு 1
மிகல் 4
மிகவு 1
மிகின் 2
மிகினும் 1
மிகு 7
மிகுகலா 1
மிகுத்து 1
மிகுதி 3
மிகுதிக்கண் 1
மிகுதியான் 1
மிகும் 7
மிகுவதேல் 1
மிகை 6
மிச்சில் 1
மிசை 12
மிசைதல் 1
மிசைதலும் 1
மிசைந்து 1
மிசைவான் 1
மிடா 1
மிடி 1
மிடுக்கு 1
மிடைந்த 1
மிண்டல் 1
மிதப்பு 1
மிதித்த 1
மிதித்தலால் 1
மிதித்து 5
மிதிப்பார்க்கும் 1
மிளகு 1
மிளிர 1
மிளிரும் 1
மிறை 1
மின் 8
மின்னி 2
மின்னின் 1
மின்னு 2
மின்னும் 4
மின்னோடு 2

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மிக்க (15)

மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார் – நாலடி:14 4/2
குப்பை கிளைப்பு ஓவா கோழி போல் மிக்க
கனம் பொதித்த நூல் விரித்து காட்டினும் கீழ் தன் – நாலடி:35 1/2,3
மிக்க மிகு புகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார் – ஐந்50:48/3
மிகை நாடி மிக்க கொளல் – குறள்:51 4/2
மிக்காருள் மிக்க கொளல் – குறள்:73 4/2
மிக்க இரு தேவர் நாளோடு உவாத்திதி நாள் – ஆசாரக்:43/2
அ பூமி காப்பார்க்கு உறுகண்ணும் மிக்க
நில துளக்கு விண் அதிர்ப்பு வாலாமை பார்ப்பார் – ஆசாரக்:47/2,3
புலம் மிக்கவர்க்கே புலனா நலம் மிக்க
பூம் புனல் ஊர பொது மக்கட்கு ஆகாதே – பழ:5/2,3
உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல் போல் மிக்க
இன நலம் நன்கு உடையஆயினும் என்றும் – பழ:11/2,3
இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை இல்லை – பழ:64/3
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு – பழ:64/4
மிக்க வகையால் அறம் செய் என வெகுடல் – பழ:199/3
மிக்க பழி பெரிதும் செய்தக்கால் மீட்டு அதற்கு – பழ:202/1
மிக்க சிறப்பினர்ஆயினும் தாயர்க்கு – பழ:260/3
மிக்க வன முலை புல்லான் பொலிவு உடைத்தா – கைந்:48/2

TOP


மிக்கது (1)

கல்லாதவரிடை கட்டுரையின் மிக்கது ஓர் – பழ:64/1

TOP


மிக்கவர் (2)

மிக்கவர் கண்ட நெறி – ஆசாரக்:27/5
சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே – பழ:198/3

TOP


மிக்கவர்க்கே (1)

புலம் மிக்கவர்க்கே புலனா நலம் மிக்க – பழ:5/2

TOP


மிக்கவரை (1)

புலம் மிக்கவரை புலமை தெரிதல் – பழ:5/1

TOP


மிக்கவை (1)

மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம் – குறள்:16 8/1

TOP


மிக்கார் (3)

மிக்கார் வழுத்தின் தொழுது எழுக ஒப்பார்க்கு – ஆசாரக்:31/2
வளம் மிக்கார் செல்வம் வருந்தா விளை நெல் – பழ:177/2
அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளி கூறல் – பழ:326/3

TOP


மிக்கார்க்கு (1)

நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல் – பழ:169/3

TOP


மிக்காரால் (1)

மிக்காரால் என்று சிறியாரை தாம் தேறார் – பழ:18/2

TOP


மிக்காருள் (1)

மிக்காருள் மிக்க கொளல் – குறள்:73 4/2

TOP


மிக்காரை (2)

மிக்காரை சேர்தல் மிக மாண முன் இனிதே – இனிய40:16/2
உண்டது கேளார் குரவரை மிக்காரை
கண்டுழி கண்டால் முகம் திரியார் புல்லரையும் – ஆசாரக்:86/1,2

TOP


மிக்கு (7)

நாள் இழந்த எண் மிக்கு நைந்து – திணை150:99/4
மிக்கு அற்றால் நீள விடல் – குறள்:131 2/2
முன் துவ்வார் முன் எழார் மிக்கு உறார் ஊணின்கண் – ஆசாரக்:24/1
மேஎம் துணை அறியான் மிக்கு நீர் பெய்து இழந்தான் – பழ:7/2
மிக்கு பெருகி மிகு புனல் பாய்ந்தாலும் – பழ:11/1
மிக்கு உடையர் ஆகி மிக மதிக்கப்பட்டாரை – பழ:36/1
மிக்கு ஓடி விட்டு திரியின் அது பெரிது – பழ:377/3

TOP


மிக்குவிடும் (1)

தம் சாதி மிக்குவிடும் – பழ:285/4

TOP


மிக (24)

மிக தாம் வருந்தி இருப்பரே மேலை – நாலடி:4 1/3
ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா – இன்னா40:24/1
பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே – இனிய40:1/1
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே – இனிய40:3/2
யானையுடை படை காண்டல் மிக இனிதே – இனிய40:4/1
அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே – இனிய40:7/1
கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே – இனிய40:16/1
மிக்காரை சேர்தல் மிக மாண முன் இனிதே – இனிய40:16/2
காவோடு அற குளம் தொட்டல் மிக இனிதே – இனிய40:23/1
உட்கு இல்வழி வாழா ஊக்கம் மிக இனிதே – இனிய40:26/2
ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே – இனிய40:33/1
வித்து குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே – இனிய40:40/2
குருகு வாய் பெய்து இரை கொள்ளாது உருகி மிக
இன்னா வெயில் சிறகால் மறைக்கும் சேர்ப்ப நீ – திணை150:36/2,3
மென்மை செய்திட்டாள் மிக – திணை150:146/4
மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து – குறள்:83 9/1
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை – குறள்:86 6/1
சிறந்து மிக உண்ணார் கட்டில் மேல் உண்ணார் – ஆசாரக்:23/2
மிக கிழமை உண்டுஎனினும் வேண்டாவே பெண்டிர்க்கு – ஆசாரக்:82/3
மிக்கு உடையர் ஆகி மிக மதிக்கப்பட்டாரை – பழ:36/1
மற்றொன்று அறிவாரின் மாண் மிக நல்லரால் – பழ:50/2
மெய்ம்மையே நின்று மிக நோக்கப்பட்டவர் – பழ:201/1
காப்பின் அகத்து இருந்து காய்வார் மிக உரைத்தல் – பழ:296/3
மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று – முது:9 2/1
மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர் பொய்யே – ஏலாதி:28/2

TOP


மிகப்பட்டு (1)

மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் – குறள்:108 4/2

TOP


மிகல் (4)

மிகல் ஊக்கும் தன்மையவர் – குறள்:86 5/2
மிகல் மேவல் மெய் பொருள் காணார் இகல் மேவல் – குறள்:86 7/1
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு – குறள்:86 8/2
மிகல் காணும் கேடு தரற்கு – குறள்:86 9/2

TOP


மிகவு (1)

தாயானும் தந்தையாலானும் மிகவு இன்றி – பழ:117/1

TOP


மிகின் (2)

ஊர் மிகின் இல்லை கரியே ஒலித்து உடன் – பழ:190/3
நீர் மிகின் இல்லை சிறை – பழ:190/4

TOP


மிகினும் (1)

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் – குறள்:95 1/1

TOP


மிகு (7)

நலம் மிகு கார்த்திகை நாட்டவர் இட்ட – கார்40:26/1
செரு மிகு மள்ளரின் செம்மாக்கும் செவ்வி – கார்40:31/3
மிக்க மிகு புகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார் – ஐந்50:48/3
புகழ் மிகு சாந்து எறிந்து புல் எரி ஊட்டி – திணை50:1/1
மெய்ம் மருட்டு ஒல்லா மிகு புனல் ஊரன்தன் – திணை150:130/3
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம் – குறள்:101 7/1
மிக்கு பெருகி மிகு புனல் பாய்ந்தாலும் – பழ:11/1

TOP


மிகுகலா (1)

நிறையான் மிகுகலா நேரிழையாரை – பழ:30/1

TOP


மிகுத்து (1)

சால மிகுத்து பெயின் – குறள்:48 5/2

TOP


மிகுதி (3)

எ காலும் சொல்லார் மிகுதி சொல் எ காலும் – நாலடி:35 6/2
மிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம் – நான்மணி:17/3
மிகுதி வேண்டுவோன் தகுதி தண்டான் – முது:10 6/1

TOP


மிகுதிக்கண் (1)

நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு – குறள்:79 4/1,2

TOP


மிகுதியான் (1)

மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம் – குறள்:16 8/1

TOP


மிகும் (7)

மேல் தொழிலும் ஆங்கே மிகும் – நாலடி:20 3/4
மனம் புரிந்தவாறே மிகும் – நாலடி:35 1/4
இன்றையின் நாளை மிகும் – திணை50:23/4
உண்மை அறிவே மிகும் – குறள்:38 3/2
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் – குறள்:93 8/2
ஊற்று நீர் போல மிகும் – குறள்:117 1/2
காப்பாரின் பார்ப்பார் மிகும் – பழ:259/4

TOP


மிகுவதேல் (1)

முந்திரி மேல் காணி மிகுவதேல் கீழ் தன்னை – நாலடி:35 6/3

TOP


மிகை (6)

மிகை மக்களால் மதிக்கற்பால நயம் உணரா – நாலடி:17 3/2
உற்றார்க்கு உடம்பும் மிகை – குறள்:35 5/2
மிகை நாடி மிக்க கொளல் – குறள்:51 4/2
நிலத்தின் மிகை ஆம் பெரும் செல்வம் வேண்டி – பழ:328/1
மேற்பட்ட கூட்டு மிகை நிற்றல் வேண்டாவே – பழ:333/2
வெள்ளத்தில் தீர்த்தம் மிகை – பழ:401/4

TOP


மிச்சில் (1)

மிச்சில் மிசைவான் புலம் – குறள்:9 5/2

TOP


மிசை (12)

மலை மிசை தோன்றும் மதியம் போல் யானை – நாலடி:3 1/1
தலை மிசை கொண்ட குடையர் நில மிசை – நாலடி:3 1/2
தலை மிசை கொண்ட குடையர் நில மிசை
துஞ்சினார் என்று எடுத்து தூற்றப்பட்டார் அல்லால் – நாலடி:3 1/2,3
நிலவார் நில மிசை மேல் – நாலடி:3 2/4
கற்பு தாள் வீழ்த்து கவுள் மிசை கை ஊன்றி – ஐந்50:10/3
கல் ஏர் புறவில் கவினி புதல் மிசை
முல்லை தளவொடு போது அவிழ எல்லி – ஐந்70:24/1,2
சாந்தம் எறிந்த இதண் மிசை சாந்தம் – திணை150:3/2
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் – குறள்:1 3/1
நில மிசை நீடு வாழ்வார் – குறள்:1 3/2
நில்லார் தாம் கட்டில் மிசை – ஆசாரக்:87/3
நிலைமையான் நேர் செய்திருத்தல் மலை மிசை
காம்பு அனுக்கும் மென் தோளாய் அஃது அன்றோ ஓர் அறையுள் – பழ:349/2,3
மிசை கொல்லார் வேளாண்மை கொல்லார் இசை கொல்லார் – சிறுபஞ்:46/2

TOP


மிசைதல் (1)

பொழிந்து இனிது நாறினும் பூ மிசைதல் செல்லாது – நாலடி:26 9/1

TOP


மிசைதலும் (1)

விலைப்பாலின் கொண்டு ஊன் மிசைதலும் குற்றம் – நான்மணி:100/2

TOP


மிசைந்து (1)

மிசைந்து ஒழியும் அத்தம் விரைந்து – திணை150:86/4

TOP


மிசைவான் (1)

மிச்சில் மிசைவான் புலம் – குறள்:9 5/2

TOP


மிடா (1)

பூ நீர் வியல் மிடா போன்ற புனல் நாடன் – கள40:27/3

TOP


மிடி (1)

மிடி என்னும் காரணத்தின் மேல் முறைக்கண்ணே – நாலடி:6 6/3

TOP


மிடுக்கு (1)

மிடுக்கு உற்று பற்றினும் நில்லாது செல்வம் – நாலடி:10 3/3

TOP


மிடைந்த (1)

பொய்யோடு இடை மிடைந்த சொல் – நாலடி:8 10/4

TOP


மிண்டல் (1)

மிண்டல் அம் தண் தாழை இணைந்து – திணை150:61/4

TOP


மிதப்பு (1)

சுரை ஆழ அம்மி மிதப்பு – பழ:125/4

TOP


மிதித்த (1)

தாய் மிதித்த ஆகா முடம் – பழ:299/4

TOP


மிதித்தலால் (1)

செம் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால்
ஒண் செம் குருதி தொகுபு ஈண்டி நின்றவை – கள40:27/1,2

TOP


மிதித்து (5)

மிதித்து இறப்பாரும் இறக்க மிதித்து ஏறி – நாலடி:7 1/2
மிதித்து இறப்பாரும் இறக்க மிதித்து ஏறி – நாலடி:7 1/2
பூம் கண் புதல்வன் மிதித்து உழக்க ஈங்கு – ஐந்70:47/2
நிரல்பட செல்லார் நிழல் மிதித்து நில்லார் – ஆசாரக்:83/1
பூ மிதித்து புள் கலாம் பொய்கை புனல் ஊர – பழ:299/3

TOP


மிதிப்பார்க்கும் (1)

செந்நீரார் போன்று சிதைய மிதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும் – பழ:90/1,2

TOP


மிளகு (1)

மிளகு உளு உண்பான் புகல் – பழ:326/4

TOP


மிளிர (1)

மின் நிரைத்த பூண் மிளிர விட்டு – திணை150:81/4

TOP


மிளிரும் (1)

மின்னு கொடியின் மிளிரும் புனல் நாடன் – கள40:31/3

TOP


மிறை (1)

பெரு மிறை தானே தமக்கு – குறள்:85 7/2

TOP


மின் (8)

மின் ஒளிர் வானம் கடலுள்ளும் கான்று உகுக்கும் – நாலடி:27 9/2
மெல்ல புனல் பொழியும் மின் எழில் கார் தொல்லை நூல் – கார்40:41/2
மின் நிரைத்த பூண் மிளிர விட்டு – திணை150:81/4
கொடும் தடம் கண் கூற்று மின் ஆக நெடும் தடம் கண் – திணை150:115/2
நகுவது போல் மின் ஆட நாணா என் ஆவி – திணை150:122/3
மின் ஒளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும் – ஆசாரக்:51/1
மேவலரை நோவது என் மின் நேர் மருங்குலாய் – பழ:191/3
மின் நேர் இடையார் சொல் தேறான் விழைவு ஓரான் – ஏலாதி:20/1

TOP


மின்னி (2)

செல்வ கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி நல்லாய் – ஐந்50:1/2
இரும் கடல் மா கொன்றான் வேல் மின்னி பெரும் கடல் – திணை150:93/2

TOP


மின்னின் (1)

மின்னின் அனைய வேல் ஏந்தி இரவினுள் – கைந்:10/2

TOP


மின்னு (2)

கரும் கொண்மூ வாய் திறந்த மின்னு போல் தோன்றி – நாலடி:1 8/3
மின்னு கொடியின் மிளிரும் புனல் நாடன் – கள40:31/3

TOP


மின்னும் (4)

மின்னும் அவர் தூது உரைத்து – கார்40:2/4
எ சாரும் மின்னும் மழை – கார்40:7/4
ஒளிறுபு மின்னும் மழை – கார்40:13/4
மின்னும் முழக்கும் இடியும் மற்று இன்ன – ஐந்50:3/1

TOP


மின்னோடு (2)

மின்னோடு வந்தது எழில் வானம் வந்து என்னை – ஐந்70:16/3
ஒருங்கு வால் மின்னோடு உரும் உடைத்தாய் பெய்வான் – திணை150:41/3

TOP