மே – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மேஎம் 1
மேக 1
மேகம் 1
மேகமே 1
மேதக்க 1
மேதைக்கு 1
மேதைகள் 1
மேதையின் 1
மேதையும் 1
மேதைஆய் 1
மேம்பட்ட 1
மேம்பட 1
மேய் 2
மேய்ந்த 2
மேய்ந்தார் 1
மேய்ந்து 1
மேய்ப்பு 1
மேயாது 1
மேயிருந்த 1
மேயினும் 1
மேயும் 3
மேல் 142
மேல்வரினும் 1
மேல்வருங்கால் 1
மேல்வாரா 1
மேலது 1
மேலர் 1
மேலவாம் 1
மேலாய் 2
மேலாய்விடும் 1
மேலாய 1
மேலாயர் 1
மேலாயவர் 1
மேலாயார் 2
மேலாயோர் 1
மேலும் 6
மேலே 4
மேலேகொண்டு 1
மேலேம் 1
மேலை 5
மேலொடு 1
மேலோரை 1
மேவது 1
மேவல் 3
மேவலரை 1
மேவற்க 1
மேவன 1
மேவாதார் 1
மேவாதாரோடு 1
மேவாது 1
மேவார் 3
மேவாரை 3
மேவான் 1
மேவின் 1
மேவும் 2
மேற்கொண்டவர் 1
மேற்கொண்டார் 1
மேற்கொண்டாரின் 1
மேற்கொண்டு 6
மேற்கொள்பவர் 1
மேற்கொள்பவற்கு 1
மேற்கொள்வது 2
மேற்கொள்ளார் 1
மேற்கொளின் 1
மேற்கொளீஇ 1
மேற்கோள் 1
மேற்செல்கிற்கும் 1
மேற்சென்றதனால் 1
மேற்சென்று 2
மேற்பட்ட 1
மேற்பட 1
மேற்றா 1
மேற்றாம் 1
மேற்று 2
மேற்றே 1
மேன்மக்கள் 2
மேன்மேல் 3
மேன்மேலும் 1
மேன்மை 2
மேன்மைக்கண் 1
மேனி 22
மேனியர் 1
மேனியாய் 1
மேனியாள் 1
மேனியான் 1
மேனியை 1
மேனிஆயினும் 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மேஎம் (1)

மேஎம் துணை அறியான் மிக்கு நீர் பெய்து இழந்தான் – பழ:7/2

TOP


மேக (1)

மெலியார் மேல் மேக பகை – குறள்:87 1/2

TOP


மேகம் (1)

மேகம் தோய் சாந்தம் விசை திமிசு காழ் அகில் – திணை150:28/1

TOP


மேகமே (1)

மேகமே சேர் கொடி வேந்து அமிர்து சேவகனும் – சிறுபஞ்:2/3

TOP


மேதக்க (1)

காதலார் என்பார் தகவு உடையார் மேதக்க
தந்தை எனப்படுவான் தன் உவாத்தி தாய் என்பாள் – நான்மணி:42/2,3

TOP


மேதைக்கு (1)

விதையாமை நாறுவ வித்து உள மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு – சிறுபஞ்:20/3,4

TOP


மேதைகள் (1)

மேதைகள் ஆகுறுவார் – ஆசாரக்:8/3

TOP


மேதையின் (1)

மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை – முது:1 3/1

TOP


மேதையும் (1)

முந்நீர் திரையின் எழுந்து இயங்கா மேதையும்
நுண் நூல் பெரும் கேள்வி நூல் கரைகண்டானும் – திரி:35/1,2

TOP


மேதைஆய் (1)

அணி மேதைஆய் நல்ல வீட்டு நெறியும் – ஏலாதி:81/3

TOP


மேம்பட்ட (1)

நல் அவையுள் மேம்பட்ட கல்வியும் வெல் சமத்து – திரி:8/2

TOP


மேம்பட (1)

மன்னரின் மேம்பட செய்யற்க செய்பவேல் – ஆசாரக்:85/3

TOP


மேய் (2)

நாவகம் மேய் நாடின் நகை – சிறுபஞ்:10/4
ஓர்த்து ஒரு பால் மறைத்து உண்பான் மேய் ஓர்த்த – சிறுபஞ்:65/2

TOP


மேய்ந்த (2)

கரும் கடல் மேய்ந்த கமம் சூழ் எழிலி – கார்40:37/1
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – குறள்:28 3/2

TOP


மேய்ந்தார் (1)

உடை இட்டார் புல் மேய்ந்தார் ஓடு நீர் புக்கார் – சிறுபஞ்:39/1

TOP


மேய்ந்து (1)

முட்ட முது நீர் அடைகரை மேய்ந்து எழுந்து – கைந்:39/1

TOP


மேய்ப்பு (1)

மேய்ப்பு ஆட்டது என்று உண்ணாள்ஆயினாள் தீ புகை போல் – பழ:285/2

TOP


மேயாது (1)

புல் மேயாது ஆகும் புலி – பழ:119/4

TOP


மேயிருந்த (1)

சென்று உலாம் சேர்ப்ப குழுவத்தார் மேயிருந்த
என்று ஊடு அறுப்பினும் மன்று – பழ:207/3,4

TOP


மேயினும் (1)

போற்ற படாதாகி புல் இன்றி மேயினும்
ஏற்று கன்று ஏறு ஆய்விடும் – பழ:217/3,4

TOP


மேயும் (3)

வரம்பிடை பூ மேயும் வண் புனல் ஊர – பழ:107/3
அழுங்கல் முது பதி அங்காடி மேயும்
பழம் கன்று ஏறு ஆதலும் உண்டு – பழ:108/3,4
கடும் சூளின் தான் கண்டு கானலுள் மேயும்
தடம் தாள் மட நாராய் கேள் – கைந்:50/3,4

TOP


மேல் (142)

நிலவார் நில மிசை மேல் – நாலடி:3 2/4
நேர்ப்பார் யார் நீள் நிலத்தின் மேல் – நாலடி:3 7/4
புல் நுனி மேல் நீர் போல் நிலையாமை என்று எண்ணி – நாலடி:3 9/1
வைகலும் வைகல் தாம் வாழ்நாள் மேல் வைகுதல் – நாலடி:4 9/3
மிடி என்னும் காரணத்தின் மேல் முறைக்கண்ணே – நாலடி:6 6/3
பசைதல் பரியாதாம் மேல் – நாலடி:6 10/4
ஈயும் தலை மேல் இருத்தலால் அஃது அறிவார் – நாலடி:7 1/3
வலியால் பிறர் மனை மேல் சென்றாரே இம்மை – நாலடி:9 5/3
மேல் ஆடும் மீனின் பலர் ஆவர் ஏலா – நாலடி:12 3/2
மெல்லியரேஆயினும் நல் சார்வு சான்றார் மேல்
செல்லாவாம் செற்றார் சினம் – நாலடி:18 8/3,4
கரு நரை மேல் சூடே போல் தோன்றும் கரு நரையை – நாலடி:19 6/2
கொன்று அன்ன இன்னா செயினும் சிறியார் மேல்
ஒன்றானும் தோன்றா கெடும் – நாலடி:19 6/3,4
மேல் தொழிலும் ஆங்கே மிகும் – நாலடி:20 3/4
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருள் மேல்
படாஅ விடுபாக்கு அறிந்து – நாலடி:26 5/3,4
மற்றையர் ஆவார் பகர்வர் பனையின் மேல்
வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும் – நாலடி:26 6/2,3
குன்றின் மேல் கொட்டும் தறி போல் தலை தகர்ந்து – நாலடி:26 7/3
கள்ளி மேல் கை நீட்டார் சூடும் பூ அன்மையால் – நாலடி:27 2/2
நாறா தகடே போல் நல் மலர் மேல் பொன் பாவாய் – நாலடி:27 6/1
மேல் ஆறு பாய விருந்து – நாலடி:27 8/4
கல் ஓங்கு உயர் வரை மேல் காந்தள் மலராக்கால் – நாலடி:29 3/1
கல் மேல் கழூஉம் கண மலை நல் நாட – நாலடி:29 5/3
பூத்து ஒழி கொம்பின் மேல் செல்லாவாம் நீர்த்து அருவி – நாலடி:29 10/2
முகம்புகுதல் ஆற்றுமோ மேல் – நாலடி:31 3/4
எருத்து இறைஞ்சி நில்லாதாம் மேல் – நாலடி:31 4/4
மூப்பு மேல் வாராமை முன்னே அற வினையை – நாலடி:33 6/1
முந்திரி மேல் காணி மிகுவதேல் கீழ் தன்னை – நாலடி:35 6/3
மை தீர் பசும் பொன் மேல் மாண்ட மணி அழுத்தி – நாலடி:35 7/1
மேல் காணம் இன்மையால் மேவாது ஒழிந்தாளே – நாலடி:38 2/3
மேல் ஆறு மேல் உறை சோரினும் மேலாய – நாலடி:39 3/2
மேல் ஆறு மேல் உறை சோரினும் மேலாய – நாலடி:39 3/2
எஞ்ஞான்றும் எம் கணவர் எம் தோள் மேல் சேர்ந்து எழினும் – நாலடி:39 5/1
தோள் வைத்து அணை மேல் கிடந்து – நாலடி:40 4/4
மாலை பரிந்திட்டு அழுதாள் வன முலை மேல்
கோலம் செய் சாந்தம் திமிர்ந்து – நாலடி:40 7/3,4
வழங்க தளிர்க்குமாம் மேல் – நான்மணி:35/4
வரிசையான் இன்புறூஉம் மேல் – நான்மணி:65/4
சிறியார் மேல் செற்றம் கொளல் – இன்னா40:37/4
அறை கல் இறுவரை மேல் பாம்பு சவட்டி – கார்40:17/1
யானை மேல் யானை நெரிதர ஆனாது – கள40:8/1
வரை புரை யானை கை நூற வரை மேல்
உரும் எறி பாம்பின் புரளும் செரு மொய்ம்பின் – கள40:13/2,3
மணி நிற மா மலை மேல் தாழ்ந்து பணிமொழி – ஐந்50:2/2
கோடு உயர் தோற்ற மலை மேல் இரும் கொண்மூ – ஐந்50:5/1
கலந்து இழியும் நல் மலை மேல் வால் அருவி ஆட – ஐந்50:13/3
நீலத்து புக்கு ஒளிக்கும் ஊரற்கு மேல் எல்லாம் – ஐந்50:24/2
வரி புற வார் மணல் மேல் ஏறி தெரிப்புற – ஐந்50:43/2
எக்கர் இடு மணல் மேல் ஓதம் தர வந்த – ஐந்50:48/1
கட்டக முத்தின் புதல்வனை மார்பின் மேல்
பட்டம் சிதைப்ப வரும் – ஐந்70:43/3,4
அச்சு பணி மொழி உண்டேனோ மேல் நாள் ஓர் – ஐந்70:50/3
தணி மணல் எக்கர் மேல் ஓதம் பெயர – ஐந்70:60/3
பண் அமை தேர் மேல் வரும் – ஐந்70:63/4
பெண்ணை மேல் சேக்கும் வணர் வாய் புணர் அன்றில் – ஐந்70:64/2
இவர் திரை நீக்கியிட்டு எக்கர் மணல் மேல்
கவர் கால் அலவன் தன பெடையோடு – ஐந்70:67/1,2
ஓங்கல் இறுவரை மேல் காந்தள் கடி கவின – திணை50:3/1
மென் முலை மேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல் – திணை50:22/1
பிதிரும் முலை மேல் சுணங்கு – திணை50:28/4
இணை கால நீலத்து இதழ் மேல் சொரியும் – திணை50:32/2
பிறங்கு மணல் மேல் அலவன் பரப்ப – திணை50:48/2
அள்ளி அளகத்தின் மேல் ஆய்ந்து தெள்ளி – திணை150:2/2
பரு விரலால் பைம் சுனை நீர் தூஉய் பெரு வரை மேல்
தேன் தேவர்க்கு ஓக்கும் மலை நாட வாரலோ – திணை150:10/2,3
என்றேன் இரண்டாவது உண்டோ மடல்மா மேல்
நின்றேன் மறுகிடையே நேர்ந்து – திணை150:16/3,4
கரும் கால் இள வேங்கை கான்ற பூ கல் மேல்
இரும் கால் வய வேங்கை ஏய்க்கும் மருங்கால் – திணை150:26/1,2
பண்ணாது பண் மேல் தேன் பாடும் கழி கானல் – திணை150:47/1
திரை மேல் போந்து எஞ்சிய தெண் கழி கானல் – திணை150:48/1
விரை மேவும் பாக்கம் விளக்கா கரை மேல்
விடுவாய் பசும் புற இப்பி கால் முத்தம் – திணை150:48/2,3
வாராய் வரின் நீர் கழி கானல் நுண் மணல் மேல்
தேரின் மா கால் ஆழும் தீமைத்தே ஓர் இலோர் – திணை150:54/1,2
முன்றில் இள மணல் மேல் மொய்த்து – திணை150:56/4
பவள கொழுந்தின் மேல் பொன் தாலி பாஅய் – திணை150:66/3
வண்டல் அயர் மணல் மேல் வந்து – திணை150:70/4
பொடி வெந்து பொங்கி மேல் வான் சுடும் கீழால் – திணை150:92/3
மேல் நோக்கி வெம் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி – திணை150:95/1
போது ஆரி வண்டு எலாம் நெட்டெழுத்தின் மேல் புரிய – திணை150:95/3
விரி உளை மான் தேர் மேல் கொண்டார் – திணை150:113/4
வாடாத தாமரை மேல் செந்நெல் கதிர் வணக்கம் – திணை150:129/1
அணி குரல் மேல் நல்லாரோடு ஆடினேன் என்ன – திணை150:141/1
மணி குரல் மேல் மாதராள் ஊடி மணி சிரல் – திணை150:141/2
புண் கிடந்த புண் மேல் நுன் நீத்து ஒழுகி வாழினும் – திணை150:149/1
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம் – குறள்:23 2/1
ஈவார் மேல் நிற்கும் புகழ் – குறள்:24 2/2
மெலியார் மேல் செல்லும் இடத்து – குறள்:25 10/2
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று – குறள்:33 6/1,2
மேல் பிறந்தார்ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும் – குறள்:41 9/1
கையாறா கொள்ளாதாம் மேல் – குறள்:63 7/2
மெலியார் மேல் மேக பகை – குறள்:87 1/2
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் – குறள்:98 3/1
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் – குறள்:98 3/1
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் – குறள்:98 3/1
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள்:108 9/1,2
கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர் – குறள்:109 7/1
படாஅ முலை மேல் துகில் – குறள்:109 7/2
மேனி மேல் ஊரும் பசப்பு – குறள்:119 2/2
இலங்கிழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து – குறள்:127 2/1,2
மேல் முறையாளர் தொழில் – திரி:2/4
மண்ணின் மேல் வான் புகழ் நட்டானும் மாசு இல் சீர் – திரி:16/1
மெய் நீர்மை மேல் நிற்பவர் – திரி:35/4
மேல் தூய்மை இல்லாத வெம் களிறும் சீறி – திரி:46/2
குற்றம் பிறர் மேல் உரைத்தலும் இ மூன்றும் – திரி:54/3
சிறந்து மிக உண்ணார் கட்டில் மேல் உண்ணார் – ஆசாரக்:23/2
சுடர் இடை போகார் சுவர் மேல் உமியார் – ஆசாரக்:36/1
இடர் எனினும் மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார் – ஆசாரக்:36/2
உயர்ந்ததின் மேல் இரார் உள் அழிவு செய்யார் – ஆசாரக்:40/1
நாழி மணை மேல் இரியார் மணை கவிழார் – ஆசாரக்:44/1
மேல் முறை பால் தம் குரவரை போல் ஒழுகல் – ஆசாரக்:61/2
உடுக்கை இகவார் செவி சொறண்டார் கை மேல்
எடுத்து உரையார் பெண்டிர் மேல் நோக்கார் செவி சொல்லும் – ஆசாரக்:75/1,2
எடுத்து உரையார் பெண்டிர் மேல் நோக்கார் செவி சொல்லும் – ஆசாரக்:75/2
கை சுட்டி கட்டுரையார் கால் மேல் எழுத்து இடார் – ஆசாரக்:94/1
செம் நெறி மேல் நிற்ப செயல் வேண்டும் அ நெறி – பழ:8/2
கருமம் உடையாரை நாடார் எருமை மேல்
நாரை துயில் வதியும் ஊர குளம் தொட்டு – பழ:23/2,3
பரந்த திறலாரை பாசி மேல் இட்டு – பழ:34/1
நற்கு எளிது ஆகிவிடினும் நளிர் வரை மேல்
கல் கிள்ளி கை உய்ந்தார் இல் – பழ:36/3,4
பூ மேல் இசை முரலும் ஊர அது அன்றோ – பழ:75/3
நாய் மேல் தவிசு இடுமாறு – பழ:75/4
நெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல் பனையின் மேல்
பஞ்சி வைத்து எஃகிவிட்டு அற்று – பழ:91/3,4
கொல்லி மேல் கொட்டு வைத்தார் – பழ:99/4
நிற்பவே நின்ற நிலையின் மேல் வற்பத்தால் – பழ:119/2
தன் மேல் நலியும் பசி பெரிதுஆயினும் – பழ:119/3
பொரு கடல் தண் சேர்ப்ப பூம் தாமரை மேல்
திருவொடும் இன்னாது துச்சு – பழ:123/3,4
காட்டி கருமம் கயவர் மேல் வைத்து அவர் – பழ:128/1
கல் மேல் இலங்கு மலை நாட மா காய்த்து – பழ:129/3
தன் மேல் குணில் கொள்ளுமாறு – பழ:129/4
தம் மேல் புகழ் பிறர் பாராட்ட தம் மேல் தாம் – பழ:131/2
தம் மேல் புகழ் பிறர் பாராட்ட தம் மேல் தாம் – பழ:131/2
பெரியாரை சார்ந்தார் மேல் பேதைமை கந்தா – பழ:139/1
பரந்தவர் கொள்கை மேல் பால் ஆறும் ஓடார் – பழ:143/1
ஒள்ளியன் அல்லான் மேல் வைத்தல் குரங்கின் கை – பழ:200/3
குன்றின் மேல் இட்ட விளக்கு – பழ:204/4
சுமையொடு மேல் வைப்பு ஆமாறு – பழ:215/4
கரும் தொழிலர் ஆய கடையாயார் தம் மேல்
பெரும் பழி ஏறுவ பேணார் இரும் புன்னை – பழ:262/1,2
வெற்பு அறை மேல் தாழும் விலங்கு அருவி நல் நாட – பழ:270/3
கூன் மேல் எழுந்த குரு – பழ:305/4
பிள்ளைகளை மருட்டும் தாயர் போல் அம்புலி மேல்
ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது – பழ:323/3,4
பைத்து அகன்ற அல்குலாய் அஃதால் அ வெண்ணெய் மேல்
வைத்து மயில் கொள்ளுமாறு – பழ:325/3,4
வினை முதிரின் செய்தான் மேல் ஏறும் பனை முதிரின் – பழ:327/3
தாய் தாள் மேல் வீழ்ந்துவிடும் – பழ:327/4
உலக்கை மேல் காக்கை என்பார் – பழ:328/4
கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி குடிகள் மேல்
கூட்டு இறப்ப கொண்டு தலையளிப்பின் அஃது அன்றோ – பழ:329/2,3
பாற்பட்டு வாழ்வர்எனினும் குடிகள் மேல்
மேற்பட்ட கூட்டு மிகை நிற்றல் வேண்டாவே – பழ:333/1,2
நிகர் ஒன்றின் மேல் விடுதல் ஏதம் நிகர் இன்றி – பழ:382/2
மேல் வரவு அறியாதோன் தற்காத்தல் பொய் – முது:7 5/1
கொல்லான் கொலை புரியான் பொய்யான் பிறர் பொருள் மேல்
செல்லான் சிறியார் இனம் சேரான் சொல்லும் – ஏலாதி:19/1,2
அரங்கின் மேல் ஆடுநர் போல் ஆகாமல் நன்று ஆம் – ஏலாதி:24/3
உடையராய் இல்லுள் ஊண் ஈத்து உண்பார் மண் மேல்
படையராய் வாழ்வார் பயின்று – ஏலாதி:53/3,4
ஏறுமாம் மேல் உலகம் ஓர்ந்து – ஏலாதி:65/4
பற்றுதல் இன்றி விடுதல் முன் சொல்லும் மேல்
பற்றுதல் பாத்து இல் தவம் – ஏலாதி:73/3,4

TOP


மேல்வரினும் (1)

கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் – குறள்:77 5/1

TOP


மேல்வருங்கால் (1)

பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு – குறள்:74 3/1

TOP


மேல்வாரா (1)

நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை – குறள்:34 5/1

TOP


மேலது (1)

பழிபாடு நின் மேலது – ஐந்70:53/4

TOP


மேலர் (1)

துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால் – குறள்:122 8/1

TOP


மேலவாம் (1)

நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார் – குறள்:32 10/1

TOP


மேலாய் (2)

கீழ் மேலாய் நிற்கும் உலகு – நாலடி:37 8/4
மா உதைப்ப மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய்
ஆ உதை காளாம்பி போன்ற புனல் நாடன் – கள40:36/3,4

TOP


மேலாய்விடும் (1)

விண்ணவர்க்கும் மேலாய்விடும் – ஏலாதி:2/4

TOP


மேலாய (1)

மேல் ஆறு மேல் உறை சோரினும் மேலாய
வல்லாளாய் வாழும் ஊர் தன் புகழும் மாண் கற்பின் – நாலடி:39 3/2,3

TOP


மேலாயர் (1)

மெல்லியர் ஆகி தம் மேலாயர் செய்தது – நாலடி:30 9/3

TOP


மேலாயவர் (1)

பேணலர் மேலாயவர் – குறள்:102 6/2

TOP


மேலாயார் (2)

தெற்றவும் மேலாயார் சேர்வு – இனிய40:1/4
வான் பாட்டவர் பகை கொள்ளினும் மேலாயார்
புன் பாட்டவர் பகை கோடல் பயம் இன்றே – பழ:71/1,2

TOP


மேலாயோர் (1)

கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர்
உள்ளத்து கொண்டு நேர்ந்து ஊக்கல் குறுநரிக்கு – பழ:80/2,3

TOP


மேலும் (6)

தோல் போர்வை மேலும் துளை பலவாய் பொய்ம் மறைக்கும் – நாலடி:5 2/1
படும் தடம் கண் பல் பணை போல் வான் முழங்கல் மேலும்
கொடும் தடம் கண் கூற்று மின் ஆக நெடும் தடம் கண் – திணை150:115/1,2
உரல் களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
நடுக்கு அற்ற காட்சியார் நோக்கார் எடுத்து இசையார் – ஆசாரக்:99/1,2
விலக்குவார் மேலும் எழுதல் நிலத்து – பழ:300/2
நகை மேலும் கைப்பாய்விடும் – பழ:304/4
எண்பதின் மேலும் வாழ்வான் – சிறுபஞ்:77/4

TOP


மேலே (4)

தளிர் மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா – நாலடி:36 5/1
கைம் மேலே நின்று கறுப்பன செய்து ஒழுகி – பழ:201/2
தம் மேலே வீழ பனை – பழ:201/4
தொட்டக்கால் மாழ்கும் தளிர் மேலே நிற்பினும் – பழ:279/3

TOP


மேலேகொண்டு (1)

பொய் மேலேகொண்டு அ இறைவன் கொன்றார் குறைப்பர் – பழ:201/3

TOP


மேலேம் (1)

இருக்கை இதண் மேலேம் ஆக பரு கை – திணை150:14/2

TOP


மேலை (5)

மிக தாம் வருந்தி இருப்பரே மேலை
தவத்தால் தவம் செய்யாதார் – நாலடி:4 1/3,4
நினைப்ப கிடந்தது எவன் உண்டாம் மேலை
வினைப்பயன் அல்லால் பிற – நாலடி:11 5/3,4
வாரி சிறிதுஆயின் பெண் ஊரும் மேலை
தவம் சிறிதுஆயின் வினை ஊரும் ஊரும் – நான்மணி:99/2,3
காலை கழிந்ததன் பின்றையும் மேலை
கறவை கன்று ஊர்ந்தானை தந்தையும் ஊர்ந்தான் – பழ:93/2,3
எமர் மேலை இன்னரால் யார்க்கு உரைத்தும் என்று – பழ:116/2

TOP


மேலொடு (1)

பறி ஓலை மேலொடு கீழா இடையர் – திணை150:113/1

TOP


மேலோரை (1)

மேலோரை கீழோர் குறுகி குறைத்திட்ட – கள40:9/1

TOP


மேவது (1)

மேவது நன்று மேவாதாரோடு ஓவாது – சிறுபஞ்:99/2

TOP


மேவல் (3)

மிகல் மேவல் மெய் பொருள் காணார் இகல் மேவல் – குறள்:86 7/1
மிகல் மேவல் மெய் பொருள் காணார் இகல் மேவல்
இன்னா அறிவினவர் – குறள்:86 7/1,2
மேவல் எளிது அரிது மெய் போற்றல் ஆவதன்கண் – ஏலாதி:39/2

TOP


மேவலரை (1)

மேவலரை நோவது என் மின் நேர் மருங்குலாய் – பழ:191/3

TOP


மேவற்க (1)

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து – குறள்:88 7/1,2

TOP


மேவன (1)

மேவன செய்து ஒழுகலான் – குறள்:108 3/2

TOP


மேவாதார் (1)

குய் துவை ஆர் வெண் சோறேஆயினும் மேவாதார்
கைத்து உண்டல் காஞ்சிரம் காய் – நாலடி:22 7/3,4

TOP


மேவாதாரோடு (1)

மேவது நன்று மேவாதாரோடு ஓவாது – சிறுபஞ்:99/2

TOP


மேவாது (1)

மேல் காணம் இன்மையால் மேவாது ஒழிந்தாளே – நாலடி:38 2/3

TOP


மேவார் (3)

மேவார் இலாஅக்கடை – குறள்:106 9/2
தலைக்கு இட்ட பூ மேவார் மோந்த பூ சூடார் – ஆசாரக்:90/1
தொடங்கி பிறர் உடைமை மேவார் குடம்பை – பழ:372/2

TOP


மேவாரை (3)

மேவாரை அட்ட களத்து – கள40:25/4
மேவாரை அட்ட களத்து – கள40:27/4
மேவாரை அட்ட களத்து – கள40:36/5

TOP


மேவான் (1)

பொய்யான் பொய் மேவான் புலால் உண்ணான் யாவரையும் – ஏலாதி:44/1

TOP


மேவின் (1)

மேவின் பரிகாரம் இல் – பழ:320/4

TOP


மேவும் (2)

விரை மேவும் பாக்கம் விளக்கா கரை மேல் – திணை150:48/2
விலங்கேயும் தம்மொடு உடன் உறைதல் மேவும்
கலந்தாரை கைவிடுதல் ஒல்லா இலங்கு அருவி – பழ:122/1,2

TOP


மேற்கொண்டவர் (1)

எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை – பழ:331/2

TOP


மேற்கொண்டார் (1)

பகை மேற்கொண்டார் போல கொண்டார் வெகுடல் – பழ:304/3

TOP


மேற்கொண்டாரின் (1)

கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு – குறள்:56 1/1

TOP


மேற்கொண்டு (6)

மண் பரக்கும் மா இருள் மேற்கொண்டு மண் பரக்கு – திணை150:55/2
தவளையும் மேற்கொண்டு வரும் – திணை150:147/4
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் – குறள்:33 6/1
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து – குறள்:56 1/1,2
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற – குறள்:85 5/1
துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு
வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி – பழ:353/1,2

TOP


மேற்கொள்பவர் (1)

அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் – குறள்:72 3/1

TOP


மேற்கொள்பவற்கு (1)

சான்றாண்மை மேற்கொள்பவற்கு – குறள்:99 1/2

TOP


மேற்கொள்வது (2)

அஃது இலார் மேற்கொள்வது – குறள்:27 2/2
இரப்பவர் மேற்கொள்வது – குறள்:106 5/2

TOP


மேற்கொள்ளார் (1)

இல்வாழ்க்கையானும் இலிங்கானும் மேற்கொள்ளார்
நல் வாழ்க்கை போக நடுவு நின்று எல்லாம் – பழ:208/1,2

TOP


மேற்கொளின் (1)

பேதை வினை மேற்கொளின் – குறள்:84 6/2

TOP


மேற்கொளீஇ (1)

பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து – குறள்:94 8/1

TOP


மேற்கோள் (1)

செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது – முது:4 5/1

TOP


மேற்செல்கிற்கும் (1)

உடைய மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார் – பழ:324/3

TOP


மேற்சென்றதனால் (1)

விழுமியோன் மேற்சென்றதனால் விழுமிய – பழ:62/2

TOP


மேற்சென்று (2)

மேற்சென்று செய்யப்படும் – குறள்:34 5/2
மேற்சென்று இடித்தல் பொருட்டு – குறள்:79 4/2

TOP


மேற்பட்ட (1)

மேற்பட்ட கூட்டு மிகை நிற்றல் வேண்டாவே – பழ:333/2

TOP


மேற்பட (1)

கொள்ளற்க கொள்ளார் கை மேற்பட உள் சுடினும் – நான்மணி:1/2

TOP


மேற்றா (1)

யார் மேற்றா கொள்ளினும் கொண்டீக காணுங்கால் – பழ:231/3

TOP


மேற்றாம் (1)

விய களி நல்கூர்ந்தார் மேற்றாம் கய களி – நான்மணி:34/3

TOP


மேற்று (2)

மேற்று சிறு தாய காய்வு அஞ்சி போற்று உருவி – ஐந்70:43/2
ஊர் மேற்று அமணர்க்கும் ஓடு – பழ:231/4

TOP


மேற்றே (1)

ஆற்றுவார் மேற்றே பொறை – குறள்:103 7/2

TOP


மேன்மக்கள் (2)

மேன்மக்கள் தம் வாயால் மீட்டு – நாலடி:7 10/4
மற்றும் கண்ணோடுவர் மேன்மக்கள் தெற்ற – பழ:313/2

TOP


மேன்மேல் (3)

மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னை – நாலடி:25 8/3
தவாஅது மேன்மேல் வரும் – குறள்:37 8/2
விரைந்து உரையார் மேன்மேல் உரையார் பொய் ஆய – ஆசாரக்:76/1

TOP


மேன்மேலும் (1)

மேன்மேலும் செய்து விடுதல் அது அன்றோ – பழ:305/3

TOP


மேன்மை (2)

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் – குறள்:14 7/1
மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை – பழ:157/2

TOP


மேன்மைக்கண் (1)

போக்குற்ற போழ்தில் புறன் அழீஇ மேன்மைக்கண்
நோக்கு அற்றவரை பழித்தல் என் என்னானும் – பழ:250/2,3

TOP


மேனி (22)

மேனி தளிர்ப்ப வரும் – கார்40:10/4
செயலை இளம் தளிர் அன்ன நின் மேனி
பயலை பழங்கண் கொள – கார்40:16/3,4
மேனி போல் புல்லென்ற காடு – கார்40:18/4
மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள் – கள40:32/1
பிரிந்தவர் மேனி போல் புல்லென்ற வள்ளி – ஐந்50:8/1
பொருந்தினர் மேனி போல் பொற்ப திருந்திழாய் – ஐந்50:8/2
மாம் தளிர் மேனி வியர்ப்ப மற்று ஆங்கு எனைத்தும் – ஐந்50:15/2
ஊடி இருப்பினும் ஊரன் நறு மேனி
கூடல் இனிது ஆம் எனக்கு – ஐந்50:30/3,4
மேனி பசப்பு கெட – திணை50:4/4
முறி எழில் மேனி பசப்ப அருள் ஒழிந்து – திணை50:15/3
மேனி ஒழியவிடும் – திணை50:35/4
மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர – திணை50:47/2
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம் – குறள்:112 3/1
மேனி மேல் ஊரும் பசப்பு – குறள்:119 2/2
மேனி பசப்பு ஊர்வது – குறள்:119 5/2
பசக்கமன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார் – குறள்:119 9/1
எழு நாளேம் மேனி பசந்து – குறள்:128 8/2
தம் மேனி நோக்கார் தலை உளரார் கைநொடியார் – ஆசாரக்:77/1
மேனி அல்லால் பிற – ஆசாரக்:77/3
முதிர்வு உடையோன் மேனி அணி நல்கூர்ந்தன்று – முது:9 6/1
மேனி சிதையும் பசந்து – கைந்:1/4
ஊர் தரும் மேனி பசப்பு – கைந்:27/3

TOP


மேனியர் (1)

முறி புரை மேனியர் உள்ளம் போன்று யார்க்கும் – நாலடி:32 7/3

TOP


மேனியாய் (1)

மாம் தளிர் மேனியாய் மன்ற விடுவனவோ – ஐந்50:45/3

TOP


மேனியாள் (1)

பொன் மெலியும் மேனியாள் பூம் சுணங்கு மென் முலைகள் – திணை150:21/1

TOP


மேனியான் (1)

பாப்பு கொடியாற்கு பால் மேனியான் போல – பழ:13/1

TOP


மேனியை (1)

பொய் சிதைக்கும் பொன் போலும் மேனியை பெய்த – நான்மணி:21/2

TOP


மேனிஆயினும் (1)

எ மேனிஆயினும் நோக்கார் தலைமகன்தம் – ஆசாரக்:77/2

TOP