சொ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொரிதரு 1
சொரிந்த 1
சொரிந்து 1
சொரியினும் 1
சொரியும் 3
சொல் 143
சொல்தொறும் 1
சொல்பவோ 1
சொல்மலை 1
சொல்ல 3
சொல்லகிற்பானும் 1
சொல்லல் 5
சொல்லலும் 2
சொல்லற்க 4
சொல்லன் 2
சொல்லா 4
சொல்லாக்கால் 1
சொல்லாட 2
சொல்லாடார் 2
சொல்லாடுவாரையும் 1
சொல்லாடுவானும் 1
சொல்லாதது 1
சொல்லாதார் 2
சொல்லாது 2
சொல்லாமை 5
சொல்லாமையுள்ளும் 1
சொல்லாமையே 1
சொல்லாய் 3
சொல்லாயோ 1
சொல்லார் 9
சொல்லார்க்கு 1
சொல்லாரே 1
சொல்லால் 3
சொல்லாலே 1
சொல்லான் 5
சொல்லானாய் 1
சொல்லி 19
சொல்லிய 5
சொல்லியக்கால் 3
சொல்லில் 3
சொல்லின் 17
சொல்லின்கண் 1
சொல்லினாய் 1
சொல்லினான் 1
சொல்லினும் 4
சொல்லுக 8
சொல்லுங்கால் 3
சொல்லுதல் 4
சொல்லுதலும் 1
சொல்லுபவோ 1
சொல்லும் 24
சொல்லுவ 1
சொல்லுவது 1
சொல்லுவரால் 1
சொல்லுவார் 2
சொல்லுவான் 1
சொல்லே 3
சொல்லேன் 1
சொல்லை 4
சொல்லொடு 1
சொல்லோடு 1
சொல்வற்று 1
சொல்வன்மை 2
சொல்வேன் 1
சொலப்படும் 1
சொலல் 5
சொலவர்க்கு 1
சொலவு 1
சொலற்பால 1
சொலன் 2
சொலா 1
சொலால் 3
சொலான் 2
சொலின் 4
சொலினதே 1
சொலினும் 1
சொலும் 2
சொலை 1
சொற்கண் 1
சொற்கள் 2
சொற்களோடு 1
சொற்கு 1
சொற்செலவு 1
சொற்சோர்வு 1
சொறண்டார் 1
சொறியார் 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சொரிதரு (1)

பவளம் சொரிதரு பை போல் திவள் ஒளிய – கள40:14/2

TOP


சொரிந்த (1)

பாத்தியுள் நீர் சொரிந்த அற்று – குறள்:72 8/2

TOP


சொரிந்து (1)

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் – குறள்:26 9/1

TOP


சொரியினும் (1)

சொரியினும் போகா தம – குறள்:38 6/2

TOP


சொரியும் (3)

கதிர் சுட கண் உடைந்து முத்தம் சொரியும்
வெதிர் பிணங்கும் சோலை வியன் கானம் செல்வார்க்கு – திணை50:18/1,2
இணை கால நீலத்து இதழ் மேல் சொரியும்
பணை தாள் கதிர் செந்நெல் பாய் வயல் ஊரன் – திணை50:32/2,3
சொல்ல சொரியும் வளை – கைந்:7/4

TOP


சொல் (143)

சொல் தளர்ந்து கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய் – நாலடி:2 3/1
காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல்
ஓவாதே தம்மை சுடுதலால் ஓவாதே – நாலடி:7 3/1,2
கல் எறிந்து அன்ன கயவர் வாய் இன்னா சொல்
எல்லாரும் காண பொறுத்து உய்ப்பர் ஒல்லை – நாலடி:7 6/1,2
காதலார் சொல்லும் கடும் சொல் உவந்து உரைக்கும் – நாலடி:8 3/1
பொய்யோடு இடை மிடைந்த சொல் – நாலடி:8 10/4
கொடுத்தார் எனப்படும் சொல் – நாலடி:10 10/4
கல்லாரேஆயினும் செல்வர் வாய் சொல் செல்லும் – நாலடி:12 5/2
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல் – நாலடி:12 5/4
யாஅர் உலகத்து ஓர் சொல் இல்லார் தேருங்கால் – நாலடி:12 9/1
இன நன்மை இன் சொல் ஒன்று ஈதல் மற்று ஏனை – நாலடி:15 6/1
பொறுமின் பிறர் கடும் சொல் போற்றுமின் வஞ்சம் – நாலடி:18 2/2
பெறுமின் பெரியார் வாய் சொல் – நாலடி:18 2/4
சொல் அளவு அல்லால் பொருள் இல்லை தொல் சிறப்பின் – நாலடி:20 5/2
இன்னர் இனையர் எமர் பிறர் என்னும் சொல்
என்னும் இலர் ஆம் இயல்பினால் துன்னி – நாலடி:21 5/1,2
சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன் மெல்ல – நாலடி:26 3/2
தேன் கலந்த தேற்ற சொல் தேர்வு – நாலடி:26 9/4
சொல் பழி அஞ்சிவிடும் – நாலடி:30 7/4
சொல் ஞானம் சோர விடல் – நாலடி:32 1/4
சொல் தாற்று கொண்டு சுனைத்து எழுதல் காமுறுவர் – நாலடி:32 3/1
சொல் பிறரை காக்கும் கருவியரோ இல் பிறந்த – நாலடி:32 10/2
அருளின் அறம் உரைக்கும் அன்பு உடையார் வாய் சொல்
பொருள் ஆக கொள்வர் புலவர் பொருள் அல்லா – நாலடி:33 1/1,2
புறத்து இரு போகு என்னும் இன்னா சொல் இல்லுள் – நாலடி:33 6/3
சொல் நனி தாம் உணராஆயினும் இன்னினியே – நாலடி:34 4/2
எ காலும் சொல்லார் மிகுதி சொல் எ காலும் – நாலடி:35 6/2
சொல் பட்டால் சாவதாம் சால்பு – நான்மணி:2/4
இன் சொல் குழியுள் இனிது எழூஉம் வன் சொல் – நான்மணி:14/2
இன் சொல் குழியுள் இனிது எழூஉம் வன் சொல்
கரவு எழூஉம் கண் இல் குழியுள் இரவு எழூஉம் – நான்மணி:14/2,3
உள்ளற்பொருளது உறுதி சொல் உள் அறிந்து – நான்மணி:50/2
சொல் என்ற போழ்தே பிணி உரைக்கும் நல்லார் – நான்மணி:74/2
கல்லா ஒருவர்க்கு தம் வாயில் சொல் கூற்றம் – நான்மணி:82/1
வடு சொல் நயம் இல்லார் வாய் தோன்றும் கற்றார் வாய் – நான்மணி:95/1
சாயினும் தோன்றா கரப்பு சொல் தீய – நான்மணி:95/2
பரப்பு சொல் சான்றோர் வாய் தோன்றா கரப்பு சொல் – நான்மணி:95/3
பரப்பு சொல் சான்றோர் வாய் தோன்றா கரப்பு சொல்
கீழ்கள் வாய் தோன்றிவிடும் – நான்மணி:95/3,4
யாழ் ஒக்கும் நட்டார் கழறும் சொல் பாழ் ஒக்கும் – நான்மணி:98/3
கொடும்பாடு உடையார் வாய் சொல் – இன்னா40:6/4
அறை பறை அன்னார் சொல் இன்னா இன்னா – இன்னா40:23/3
அடக்க அடங்காதார் சொல் – இன்னா40:40/4
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது ஆங்கு இனிதே – இனிய40:1/3
இகழுநர் சொல் அஞ்சி சென்றார் வருதல் – கார்40:5/1
இன் சொல் பலவும் உரைத்து – கார்40:9/4
சொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து – கார்40:41/4
கலந்தனர் சென்றார் வலந்த சொல் எல்லாம் – திணை50:13/3
அரும்பிய முள் எயிற்று அம் சொல் மடவாய் – திணை50:16/3
அறிவு அறா இன் சொல் அணியிழையாய் நின் இல் – திணை50:43/3
நின்றார் சொல் தேறாதாய் நீடு இன்றி வென்றார் – திணை150:79/2
பொருள் பொருள் என்றார் சொல் பொன் போல போற்றி – திணை150:85/1
பண்டு இயைய சொல்லிய சொல் பழுதால் மா கடல் – திணை150:100/1
தொடங்கு உறவு சொல் துணிக்க வேண்டா முடங்கு இறவு – திணை150:131/2
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும் – குறள்:4 5/1
சொல் காத்து சோர்வு இலாள் பெண் – குறள்:6 6/2
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – குறள்:7 5/2
மழலை சொல் கேளாதவர் – குறள்:7 6/2
என் நோற்றான்கொல் எனும் சொல் – குறள்:7 10/2
இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம் – குறள்:10 1/1
செம் பொருள் கண்டார் வாய் சொல் – குறள்:10 1/2
பண்பின் தலைப்பிரிய சொல் – குறள்:10 7/2
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும் – குறள்:10 8/1
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ – குறள்:10 9/1
வன் சொல் வழங்குவது – குறள்:10 9/2
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா – குறள்:12 9/1
சோகாப்பர் சொல் இழுக்கு பட்டு – குறள்:13 7/2
ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின் – குறள்:13 8/1
இன்னா சொல் நோற்கிற்பவர் – குறள்:16 9/2
இன்னா சொல் நோற்பாரின் பின் – குறள்:16 10/2
முன் இன்று பின் நோக்கா சொல் – குறள்:19 4/2
புன் சொல் உரைப்பான் பொறை – குறள்:19 9/2
பண்பு இல் சொல் பல்லார் அகத்து – குறள்:20 4/2
பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் – குறள்:20 6/1
பெரும் பயன் இல்லாத சொல் – குறள்:20 8/2
சொல்லில் பயன் இலா சொல் – குறள்:20 10/2
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் – குறள்:39 9/1
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும் – குறள்:41 2/1
ஒழுக்கம் உடையார் வாய் சொல் – குறள்:42 5/2
இன்னான் எனப்படும் சொல் – குறள்:46 3/2
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன் – குறள்:57 4/1
சொல் தொக்க தேறப்படும் – குறள்:59 9/2
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து – குறள்:61 7/1
வேட்ப மொழிவது ஆம் சொல் – குறள்:65 3/2
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை – குறள்:65 5/1
வெல்லும் சொல் இன்மை அறிந்து – குறள்:65 5/2
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல் – குறள்:65 6/1
சொல் தெரிதல் வல்லார் அகத்து – குறள்:72 7/2
சொல் வேறு பட்டார் தொடர்பு – குறள்:82 9/2
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும் – குறள்:83 6/1,2
சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில் வணக்கம் – குறள்:83 7/1
சொல் ஏர் உழவர் பகை – குறள்:88 2/2
இன் சொல் இழுக்கு தரும் – குறள்:92 1/2
நகை ஈகை இன் சொல் இகழாமை நான்கும் – குறள்:96 3/1
குலத்தில் பிறந்தார் வாய் சொல் – குறள்:96 9/2
சொல் பிறக்கும் சோர்வு தரும் – குறள்:105 4/2
சொல் பொருள் சோர்வு படும் – குறள்:105 6/2
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்
ஒல்லை உணரப்படும் – குறள்:110 6/1,2
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்
நீர் ஆக நீளும் இ நோய் – குறள்:115 7/1,2
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியாக்கு உண்டோ தவறு – குறள்:116 4/1,2
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது உலகத்து – குறள்:120 8/1
சொல் வென்றி வேண்டும் இலிங்கியும் இ மூவர் – திரி:17/3
சில் சொல் பெரும் தோள் மகளிரும் பல் வகையும் – திரி:47/1
வினாவற்க சொல் ஒழிந்தக்கால் – ஆசாரக்:74/4
என்றும் கடும் சொல் உரையார் இருவராய் – ஆசாரக்:93/2
பண் கொண்ட தீம் சொல் பணை தோளாய் யார் உளரோ – பழ:16/3
சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ வில் கீழ் – பழ:82/2
சொல் சோர்விலாதாரோ இல் – பழ:94/4
வீண் சேர்ந்த புன் சொல் விளம்பல் அது அன்றோ – பழ:115/3
தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால் – பழ:135/1
கொடுத்து குறை தீர்த்தல் ஆற்றி விடுத்து இன் சொல்
ஈயாமை என்ப எருமை அறிந்து ஒருவர் – பழ:167/2,3
எய்தா நகை சொல் எடுத்து உரைக்கப்பட்டவர் – பழ:189/1
சொல் தாற்று கொண்டு சுனைத்து எழுதல் எற்று எனின் – பழ:192/2
சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்தது போல் – பழ:270/2
சொல் எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய் – பழ:276/1
வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ – பழ:277/2
புன் சொல் இடர்ப்படுப்பது அல்லால் ஒருவனை – பழ:277/3
இன் சொல் இடர்ப்படுப்பது இல் – பழ:277/4
பரியார் பயன் இன்மை செய்து பெரியார் சொல்
கொள்ளாது தாம் தம்மை காவாதவர் பிறரை – பழ:310/2,3
அடைய பயின்றவர் சொல் ஆற்றுவரா கேட்டல் – பழ:314/1
தொடுத்த பெரும் புலவன் சொல் குறை தீர – பழ:316/1
கூர் அறிவினார் வாய் குணம் உடை சொல் கொள்ளாது – பழ:351/1
முன் இன்னா மூத்தார் வாய் சொல் – பழ:357/4
உரையுள் வளவிய சொல் சொல்லாதது போல் – பழ:366/3
தீம் சொல் மழலையாய் தேனார் பலா குறைத்து – பழ:371/3
கல் தேயும் தேயாது சொல் – பழ:394/4
அறம் அறமேல் சொல் பொறுக்க அன்றேல் கலிக்கண் – சிறுபஞ்:65/3
சொல் செல்லாவழி சொலவு நல்கூர்ந்தன்று – முது:9 7/1
கண்டவர் காமுறும் சொல் காணின் கல்வியின்கண் – ஏலாதி:4/3
போலும் இழையார் சொல் தேறான் களியானேல் – ஏலாதி:5/3
இன் சொல் அளாவல் இடம் இனிது ஊண் யாவர்க்கும் – ஏலாதி:7/1
வன் சொல் களைந்து வகுப்பானேல் மென் சொல் – ஏலாதி:7/2
வன் சொல் களைந்து வகுப்பானேல் மென் சொல்
முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய் நாளும் – ஏலாதி:7/2,3
மின் நேர் இடையார் சொல் தேறான் விழைவு ஓரான் – ஏலாதி:20/1
ஆண்டு அமைந்த கல்வியே சொல் ஆற்றல் பூண்டு அமைந்த – ஏலாதி:26/2
குறளை கடும் சொல் பயன் இல் சொல் நான்கும் – ஏலாதி:28/3
குறளை கடும் சொல் பயன் இல் சொல் நான்கும் – ஏலாதி:28/3
வேறல் எளிது அரிது சொல் – ஏலாதி:39/4
வாது உவவான் மாதரார் சொல் தேறான் காது தாழ் – ஏலாதி:43/2
பெரியார் சொல் பேணி பிறழாது நின்று – ஏலாதி:47/1
பரியா அடியார் பறியான் கரியார் சொல்
தேறான் இயையான் தெளிந்து அடிசில் ஈத்து உண்பான் – ஏலாதி:47/2,3
வணங்கி வழி ஒழுகி மாண்டார் சொல் கொண்டு – ஏலாதி:59/1
சுடர் இன்று சொல் இன்று மாறு இன்று சோர்வு இன்று – ஏலாதி:66/3
சாதல் பொருள் கொடுத்தல் இன் சொல் புணர்வு உவத்தல் – ஏலாதி:68/1
மா சாரியனா மறுதலை சொல் மாற்றுதலே – ஏலாதி:75/3
சொல் அற நூல் சோர்வு இன்றி தொக்கு உரைத்து நல்ல – ஏலாதி:81/2
நெறியின் இனிய சொல் நீர் வாய் மழலை – கைந்:41/3
சொல் நலம் கூறி நலன் உண்ட சேர்ப்பனை – கைந்:54/3

TOP


சொல்தொறும் (1)

சொல்தொறும் சோர்வு படுதலால் சோர்வு இன்றி – பழ:332/1

TOP


சொல்பவோ (1)

கீழ்மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால் சொல்பவோ
மேன்மக்கள் தம் வாயால் மீட்டு – நாலடி:7 10/3,4

TOP


சொல்மலை (1)

சோர கையன் சொல்மலை அல்லன் – முது:5 4/1

TOP


சொல்ல (3)

பல சொல்ல காமுறுவர் மன்ற மாசு அற்ற – குறள்:65 9/1
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல் – குறள்:108 8/1
சொல்ல சொரியும் வளை – கைந்:7/4

TOP


சொல்லகிற்பானும் (1)

இறந்து இன்னா சொல்லகிற்பானும் இ மூவர் – திரி:89/3

TOP


சொல்லல் (5)

பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல – குறள்:20 2/1
சில சொல்லல் தேற்றாதவர் – குறள்:65 9/2
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் – குறள்:72 3/1
உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன் – குறள்:72 8/1
நெறி அல்ல சொல்லல் நீ பாண அறி துயில் – பழ:222/3

TOP


சொல்லலும் (2)

சொல்லலும் வல்லது அமைச்சு – குறள்:64 4/2
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இ மூன்றும் – திரி:32/3

TOP


சொல்லற்க (4)

கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்கா சொல் – குறள்:19 4/1,2
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலா சொல் – குறள்:20 10/1,2
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள் – குறள்:72 9/1
பிறர்க்கு உற்ற கட்டுரையும் சொல்லற்க சொல்லின் – ஆசாரக்:67/3

TOP


சொல்லன் (2)

காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல் – குறள்:39 6/1
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம் – குறள்:57 6/1

TOP


சொல்லா (4)

கேட்பினும் சொல்லா விடல் – குறள்:70 7/2
சொல்லா நலத்தது சால்பு – குறள்:99 4/2
பால் பற்றி சொல்லா விடுதலும் தோல் வற்றி – திரி:27/2
உள் பொருள் சொல்லா சல மொழி மாந்தரும் – திரி:50/2

TOP


சொல்லாக்கால் (1)

சொல்லாக்கால் சொல்லுவது இல் – பழ:367/4

TOP


சொல்லாட (2)

சொல்லாட சோர்வுபடும் – குறள்:41 5/2
சொல்லாட போஒம் உயிர் – குறள்:107 10/2

TOP


சொல்லாடார் (2)

சொல்லாடார் சோரவிடல் – குறள்:82 8/2
பழித்து பலர் நடுவண் சொல்லாடார் என்கொல் – பழ:182/2

TOP


சொல்லாடுவாரையும் (1)

சொல்லாடுவாரையும் அஞ்சற்பாற்று எல் அருவி – பழ:350/2

TOP


சொல்லாடுவானும் (1)

இழுக்கு ஆய சொல்லாடுவானும் இ மூவர் – திரி:94/3

TOP


சொல்லாதது (1)

உரையுள் வளவிய சொல் சொல்லாதது போல் – பழ:366/3

TOP


சொல்லாதார் (2)

நன்கு செல சொல்லாதார் – குறள்:73 8/2
கற்ற செல சொல்லாதார் – குறள்:73 10/2

TOP


சொல்லாது (2)

சொல்லாது இருப்பது நாண் – நாலடி:30 9/4
சொல்லாது இருக்க பெறின் – குறள்:41 3/2

TOP


சொல்லாமை (5)

பயன் இல சொல்லாமை நன்று – குறள்:20 7/2
வெண் மொழி வேண்டினும் சொல்லாமை நல் மொழியை – திரி:32/2
மனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும் – திரி:78/3
மறந்தும் குரவர் முன் சொல்லாமை மூன்றும் – ஆசாரக்:63/2
சொல்லாமை நோக்கி குறிப்பு அறியும் பண்பின் தம் – பழ:255/1

TOP


சொல்லாமையுள்ளும் (1)

சொல்லாமையுள்ளும் ஒரு சோர்வு அச்சம் எல்லாம் – நாலடி:15 5/2

TOP


சொல்லாமையே (1)

வீரம் சொல்லாமையே வீழ்க களிப்பினும் – பழ:131/3

TOP


சொல்லாய் (3)

வளரா மயில் ஆட வாட்கண்ணாய் சொல்லாய்
உளர் ஆகி உய்யும் வகை – திணை150:111/3,4
தொடி உடையார் சேரிக்கு தோன்றுமோ சொல்லாய்
கடி உடையேன் வாயில் கடந்து – திணை150:125/3,4
பண் ஆளும் சொல்லாய் பழி இல் ஊண் பாற்படுத்தான் – ஏலாதி:35/3

TOP


சொல்லாயோ (1)

நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும் – குறள்:125 1/1

TOP


சொல்லார் (9)

காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து – நாலடி:7 3/4
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருள் மேல் – நாலடி:26 5/3
கற்று அறிந்த நாவினார் சொல்லார் தம் சோர்வு அஞ்சி – நாலடி:26 6/1
எ காலும் சொல்லார் மிகுதி சொல் எ காலும் – நாலடி:35 6/2
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும் பயன் இல்லாத சொல் – குறள்:20 8/1,2
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த – குறள்:20 9/1
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து – குறள்:42 7/1
தனிமை இடத்துக்கண் தம் கருமம் சொல்லார்
இனியவை யாம் அறிதும் என்னார் கசிவு இன்று – ஆசாரக்:69/2,3
சொல்லார் ஒருவரையும் உள் ஊன்ற பல் ஆ – பழ:345/2

TOP


சொல்லார்க்கு (1)

சொல்லார்க்கு அரு மறை சோராமை சிறிது எனினும் – ஏலாதி:15/3

TOP


சொல்லாரே (1)

அரசர் படை அளவும் சொல்லாரே என்றும் – ஆசாரக்:83/3

TOP


சொல்லால் (3)

துன்னிய சொல்லால் இனம் திரட்டல் இ மூன்றும் – திரி:58/3
சொல்லால் முறை செய்தான் சோழன் குல விச்சை – பழ:21/3
சொல்லால் வணக்கி வெகுண்டு அடுகிற்பார்க்கும் – பழ:367/3

TOP


சொல்லாலே (1)

சொல்லாலே தன்னை துயர்ப்படுக்கும் நல்லாய் – பழ:184/2

TOP


சொல்லான் (5)

சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற – நான்மணி:77/1
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் – குறள்:64 5/1
இன் சொல்லான் ஆகும் கிளைமை இயல்பு இல்லா – சிறுபஞ்:95/1
வன் சொல்லான் ஆகும் பகைமைமன் மென் சொல்லான் – சிறுபஞ்:95/2
வன் சொல்லான் ஆகும் பகைமைமன் மென் சொல்லான்
ஆய்வு இல்லா ஆர் அருளாம் அ அருள் நல் மனத்தான் – சிறுபஞ்:95/2,3

TOP


சொல்லானாய் (1)

கோத்து இன்னா சொல்லானாய் கொல்லானேல் பல்லவர் – சிறுபஞ்:81/3

TOP


சொல்லி (19)

நா பாடம் சொல்லி நயம் உணர்வார் போல் செறிக்கும் – நாலடி:32 2/1
நல்லாரிடை புக்கு நாணாது சொல்லி தன் – நாலடி:32 4/3
வஞ்சினம் சொல்லி வலித்தார் வரு குறியால் – திணை50:24/2
பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி – குறள்:19 7/1
பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர் – குறள்:19 7/1,2
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய் – குறள்:43 4/1
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல் – குறள்:65 6/1
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி – குறள்:69 5/1
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி
நன்றி பயப்பது ஆம் தூது – குறள்:69 5/1,2
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால் – குறள்:69 6/1
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும் – குறள்:70 7/1
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற – குறள்:73 4/1
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய – குறள்:80 5/1
காம நோய் சொல்லி இரவு – குறள்:128 10/2
திரிவு இன்றி தீர்ந்தார் போல் சொல்லி அவருள் – பழ:10/2
பொல்லாத சொல்லி மறைந்து ஒழுகும் பேதை தன் – பழ:184/1
சோற்று அரவம் சொல்லி உண்பான்ஆயின் மாற்று அரவம் – ஏலாதி:48/2
ஏதின்மை சொல்லி இருப்பர் பிறர் மகளிர் – கைந்:43/3
நயமே பல சொல்லி நாணினன் போன்றான் – கைந்:46/2

TOP


சொல்லிய (5)

பண்டு இயைய சொல்லிய சொல் பழுதால் மா கடல் – திணை150:100/1
சொல்லிய வண்ணம் செயல் – குறள்:67 4/2
சொல்லிய ஆசார வித்து – ஆசாரக்:1/5
சாரத்தால் சொல்லிய மூன்று – ஆசாரக்:62/3
சொல்லிய நல்லவும் தீய ஆம் எல்லாம் – பழ:3/2

TOP


சொல்லியக்கால் (3)

நேர்த்து நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் ஓர்த்து அதனை – நாலடி:7 4/1,2
கீழ்மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால் சொல்பவோ – நாலடி:7 10/3
நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் மற்று அது – நாலடி:8 2/1

TOP


சொல்லில் (3)

சொல்லில் பிறக்கும் உயர் மதம் மெல்லென் – நான்மணி:5/2
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க – குறள்:20 10/1
சொல்லில் பயன் இலா சொல் – குறள்:20 10/2

TOP


சொல்லின் (17)

இல்லாதார் வாய் சொல்லின் நயம் இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:28/3
சொல்லின் பயின்று உரைக்க வேண்டா ஒழிதி நீ – திணை50:38/2
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் – குறள்:72 1/1,2
இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மையவர் – குறள்:72 2/1,2
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல் – குறள்:72 3/1,2
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் – குறள்:73 1/1,2
தொல் குடியின் மாண்டார் தொடர்ச்சியும் சொல்லின்
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இ மூன்றும் – திரி:1/2,3
பிறர்க்கு உற்ற கட்டுரையும் சொல்லற்க சொல்லின்
வடு குற்றம் ஆகிவிடும் – ஆசாரக்:67/3,4
சொல்லின் செவி கொடுத்து கேட்டீக மீட்டும் – ஆசாரக்:74/3
ஒருத்தற்கு உதவாத சொல்லின் தனக்கு – பழ:187/2
சொல்லின் வளாஅய் தம் தாள் நிழல் கீழ் கொள்பவே – பழ:272/3
தொல்லை அளித்தாரை கேட்டு அறிதும் சொல்லின்
நெறி மடல் பூம் தாழை நீடு நீர் சேர்ப்ப – பழ:361/2,3
நல்குரவால் வேறாக நன்கு உணரான் சொல்லின்
உரையுள் வளவிய சொல் சொல்லாதது போல் – பழ:366/2,3
கல்லா துணையார் கயப்பித்தல் சொல்லின்
நிறைந்து ஆர் வளையினாய் அஃதால் எருக்கு – பழ:376/2,3
சொல்லின் வனப்பே வனப்பு – சிறுபஞ்:35/4
வல்லுவ நாடி வகையினால் சொல்லின்
கொடையினால் போகம் சுவர்க்கம் தவத்தால் – ஏலாதி:76/2,3
தேம் கலந்த சொல்லின் தெளித்து – கைந்:4/4

TOP


சொல்லின்கண் (1)

காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு – குறள்:65 2/2

TOP


சொல்லினாய் (1)

பாடே புரியாது பால் போலும் சொல்லினாய்
வீடே புரிதல் விதி – ஏலாதி:21/3,4

TOP


சொல்லினான் (1)

சொல்லினான் தேறற்பாற்று அன்று – குறள்:83 5/2

TOP


சொல்லினும் (4)

கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க – குறள்:19 4/1
நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் – குறள்:20 7/1
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல் – குறள்:83 6/1
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் – குறள்:105 6/1

TOP


சொல்லுக (8)

நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் – குறள்:20 7/1
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க – குறள்:20 10/1
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும் – குறள்:65 4/1
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை – குறள்:65 5/1
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் – குறள்:72 1/1
இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின் – குறள்:72 2/1
அருள் புரிந்து சொல்லுக சொல்லை இ மூன்றும் – திரி:90/3
சொல்லுக செவ்வி அறிந்து – ஆசாரக்:76/4

TOP


சொல்லுங்கால் (3)

மூடர் முனி தக்க சொல்லுங்கால் கேடு அரும் சீர் – நாலடி:32 6/2
சொல்லுங்கால் சோர்வு இன்றி சொல்லுதல் மாண்பு இனிதே – இனிய40:34/2
சொல்லுங்கால் சோர்வு படுதலால் நல்லாய் – பழ:2/2

TOP


சொல்லுதல் (4)

சொல்லுங்கால் சோர்வு இன்றி சொல்லுதல் மாண்பு இனிதே – இனிய40:34/2
சொல்லுதல் வல்லார் பெறின் – குறள்:65 8/2
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம் – குறள்:67 4/1
சொல்லுதல் வற்றாகும் பேதைமை யாண்டும் – திரி:14/2

TOP


சொல்லுதலும் (1)

சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம் – நான்மணி:100/3

TOP


சொல்லுபவோ (1)

காய்ந்து எதிர் சொல்லுபவோ கற்று அறிந்தார் தீம் தேன் – பழ:268/2

TOP


சொல்லும் (24)

காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் – நாலடி:7 3/1
காதலார் சொல்லும் கடும் சொல் உவந்து உரைக்கும் – நாலடி:8 3/1
கல்லாத சொல்லும் கடை எல்லாம் கற்ற – நாலடி:26 5/2
துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா – இன்னா40:13/2
வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா – இன்னா40:28/2
சொல்லும் அவர் வண்ணம் சோர்வு – திணை50:38/4
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னா சொல் நோற்பாரின் பின் – குறள்:16 10/1,2
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும் – குறள்:19 5/1
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையால் காணப்படும் – குறள்:19 5/1,2
நயன் இலன் என்பது சொல்லும் பயன் இல – குறள்:20 3/1
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் – குறள்:70 4/1
செறாஅ சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும் – குறள்:110 7/1
வைது எள்ளி சொல்லும் தலைமகனும் பொய் தெள்ளி – திரி:49/2
உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும் இ மூன்றும் – திரி:85/3
எடுத்து உரையார் பெண்டிர் மேல் நோக்கார் செவி சொல்லும்
கொள்ளார் பெரியார் அகத்து – ஆசாரக்:75/2,3
கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை – பழ:79/1
கள்ளி அகிலும் கரும் காக்கை சொல்லும் போல் – பழ:87/1
புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார் – பழ:277/1
புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார் – பழ:277/1
வழங்கார் வலி இலார் வாய் சொல்லும் பொல்லார் – பழ:292/1
தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதா – பழ:310/1
செல்லான் சிறியார் இனம் சேரான் சொல்லும்
மறையில் செவி இலன் தீ சொற்கண் மூங்கை – ஏலாதி:19/2,3
பற்றுதல் இன்றி விடுதல் முன் சொல்லும் மேல் – ஏலாதி:73/3
புலப்படும் சொல்லும் இ பூம் கொடி அன்னாள் – கைந்:40/3

TOP


சொல்லுவ (1)

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் – குறள்:124 2/1

TOP


சொல்லுவது (1)

சொல்லாக்கால் சொல்லுவது இல் – பழ:367/4

TOP


சொல்லுவரால் (1)

நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவரால்
இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என் – பழ:94/1,2

TOP


சொல்லுவார் (2)

நன்கு செல சொல்லுவார் – குறள்:72 9/2
கற்ற செல சொல்லுவார் – குறள்:73 2/2

TOP


சொல்லுவான் (1)

பல்லார் முனிய பயன் இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப்படும் – குறள்:20 1/1,2

TOP


சொல்லே (3)

தீ சொல்லே காமின் வரும் காலன் திண்ணிதே – சிறுபஞ்:24/3
வாய் சொல்லே அன்று வழக்கு – சிறுபஞ்:24/4
சேர்ந்தால் பகை பழி தீ சொல்லே சாக்காடே – ஏலாதி:25/3

TOP


சொல்லேன் (1)

ஒடுங்கு மடல் பெண்ணை அன்றிற்கும் சொல்லேன்
கடும் சூளின் தான் கண்டு கானலுள் மேயும் – கைந்:50/2,3

TOP


சொல்லை (4)

திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும் – குறள்:65 4/1
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை – குறள்:65 5/1
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து – குறள்:65 5/1,2
அருள் புரிந்து சொல்லுக சொல்லை இ மூன்றும் – திரி:90/3

TOP


சொல்லொடு (1)

சொல்லொடு ஒருப்படார் சோர்வு இன்றி மாறுபவே – பழ:193/3

TOP


சொல்லோடு (1)

நன்றி அறிதல் பொறையுடைமை இன் சொல்லோடு
இன்னாத எ உயிர்க்கும் செய்யாமை கல்வியோடு – ஆசாரக்:1/1,2

TOP


சொல்வற்று (1)

கடுக்கென சொல்வற்று ஆம் கண்ணோட்டம் இன்றாம் – நாலடி:35 8/1

TOP


சொல்வன்மை (2)

அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு – குறள்:69 2/1
சோகம் படும் சூதே சொல்வன்மை சோக – ஏலாதி:18/2

TOP


சொல்வேன் (1)

இனி வரையாய் என்று எண்ணி சொல்வேன் முனி வரையுள் – திணை150:27/2

TOP


சொலப்படும் (1)

சுட்டி சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும் – பழ:203/1

TOP


சொலல் (5)

வழுக்கியும் வாயால் சொலல் – குறள்:14 9/2
தீமை இலாத சொலல் – குறள்:30 1/2
சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை – குறள்:65 7/1
வேண்டுப வேட்ப சொலல் – குறள்:70 6/2
கண்டதூஉம் எண்ணி சொலல் – பழ:153/4

TOP


சொலவர்க்கு (1)

இன்புறூஉம் இன் சொலவர்க்கு – குறள்:10 4/2

TOP


சொலவு (1)

சொல் செல்லாவழி சொலவு நல்கூர்ந்தன்று – முது:9 7/1

TOP


சொலற்பால (1)

சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம் – நான்மணி:100/3

TOP


சொலன் (2)

இன் சொலன் ஆக பெறின் – குறள்:10 2/2
பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு – குறள்:10 5/1

TOP


சொலா (1)

வைததனை இன் சொலா கொள்வானும் நெய் பெய்த – திரி:48/1

TOP


சொலால் (3)

வெம் சொலால் இன்புறுவார் – நான்மணி:71/4
இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால் – குறள்:39 7/1
இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
தான் கண்டனைத்து இ உலகு – குறள்:39 7/1,2

TOP


சொலான் (2)

இன் சொலான் ஆகும் கிழமை இனிப்பு இலா – நான்மணி:105/1
வன் சொலான் ஆகும் வசை மனம் மென் சொலின் – நான்மணி:105/2

TOP


சொலின் (4)

ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ போது எலாம் – நாலடி:8 3/2
வன் சொலான் ஆகும் வசை மனம் மென் சொலின்
நாவினான் ஆகும் அருள் மனம் அ மனத்தான் – நான்மணி:105/2,3
நாடி இனிய சொலின் – குறள்:10 6/2
நீர்மை உடையார் சொலின் – குறள்:20 5/2

TOP


சொலினதே (1)

இன் சொலினதே அறம் – குறள்:10 3/2

TOP


சொலினும் (1)

உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல் – குறள்:110 6/1

TOP


சொலும் (2)

கொடுத்தலும் இன் சொலும் ஆற்றின் அடுக்கிய – குறள்:53 5/1
காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொலும்
தூண்டிலின் உள்பொதிந்த தேரையும் மாண்ட சீர் – திரி:24/1,2

TOP


சொலை (1)

கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல் சொலை முனிந்து – திரி:39/2

TOP


சொற்கண் (1)

மறையில் செவி இலன் தீ சொற்கண் மூங்கை – ஏலாதி:19/3

TOP


சொற்கள் (2)

கொழித்து அகலம் காட்டாதார் சொற்கள் பழிப்பு இல் – நாலடி:32 9/2
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
என்ன பயனும் இல – குறள்:110 10/1,2

TOP


சொற்களோடு (1)

குழி படல் தீ சொற்களோடு மொழிப்பட்ட – சிறுபஞ்:102/2

TOP


சொற்கு (1)

செய்யீரோ என்னானும் என்னும் சொற்கு இன்னாதே – நாலடி:31 9/3

TOP


சொற்செலவு (1)

உடை நடை சொற்செலவு வைதல் இ நான்கும் – ஆசாரக்:49/1

TOP


சொற்சோர்வு (1)

சொற்சோர்வு உடைமையின் எ சோர்வும் அறிப – முது:2 8/1

TOP


சொறண்டார் (1)

உடுக்கை இகவார் செவி சொறண்டார் கை மேல் – ஆசாரக்:75/1

TOP


சொறியார் (1)

சொறியார் உடம்பு மடுத்து – ஆசாரக்:28/3

TOP