கூ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூ 1
கூஉம் 1
கூஉய் 2
கூகையை 1
கூட்டம் 2
கூட்டல் 1
கூட்டியக்கண்ணும் 1
கூட்டு 3
கூட்டுண்டு 2
கூட்டுவார் 1
கூட்டுள் 1
கூடகாரத்திற்கு 1
கூடம் 1
கூடல் 3
கூடல்கண் 1
கூடலின் 2
கூடலொடு 1
கூடன் 1
கூடாதே 1
கூடார்கண் 1
கூடாரை 3
கூடி 6
கூடிய 1
கூடியார் 1
கூடிவிடின் 1
கூடினான் 1
கூடினும் 1
கூடு 2
கூடும் 2
கூடும்கொல் 1
கூடுமோ 1
கூடுவது 1
கூடுவேம் 1
கூத்தர் 1
கூத்தன் 1
கூத்தனா 1
கூத்தாட்டு 2
கூத்தாடி 1
கூத்தியர் 1
கூத்து 2
கூத்தும் 1
கூத்தே 1
கூதறைகள் 1
கூந்தல் 9
கூப்பி 1
கூப்பிடும் 1
கூம்பலும் 1
கூம்பாது 1
கூம்பு 1
கூம்பும் 1
கூம்புவாரை 1
கூர் 15
கூர்த்த 3
கூர்த்து 2
கூர்த்துவிடல் 1
கூர்ந்த 2
கூர்ந்தது 1
கூர்ந்தன்று 1
கூர்ந்து 7
கூர்மை 1
கூர்மையரேனும் 1
கூர்மையின் 1
கூர்மையும் 2
கூர 2
கூரா 2
கூரிது 1
கூரியது 1
கூரியவாம் 1
கூரும் 1
கூரை 4
கூரையுள் 1
கூலி 2
கூலிக்கு 1
கூவ 1
கூவல் 2
கூவார் 1
கூவும் 1
கூழ் 17
கூழ்க்கு 1
கூழ்த்து 1
கூழும் 2
கூழை 2
கூற்றத்தை 1
கூற்றம் 22
கூற்றமாய் 1
கூற்றமும் 2
கூற்றமோ 1
கூற்றாமே 1
கூற்று 19
கூற்றுடன் 1
கூற்றே 1
கூற்றோடு 1
கூற 1
கூறப்படும் 4
கூறல் 6
கூறல்லவற்றை 1
கூறலால் 1
கூறலும் 1
கூறற்க 1
கூறற்கு 1
கூறா 1
கூறாத 1
கூறாதி 1
கூறாது 2
கூறாமை 3
கூறாயோ 1
கூறார் 5
கூறான் 2
கூறி 6
கூறிய 2
கூறிவிடும் 1
கூறின் 4
கூறினாய் 1
கூறினும் 1
கூறீர் 1
கூறு 2
கூறுங்கால் 1
கூறுதல் 1
கூறுபவேல் 1
கூறும் 14
கூறுமால் 1
கூறுவ 1
கூறுவர் 1
கூறுவான் 1
கூறை 3
கூன் 3
கூனல் 1
கூனி 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கூ (1)

நரி கூ கடற்கு எய்தாவாறு – பழ:22/4

TOP


கூஉம் (1)

கூஉம் துணை அல்லால் கொண்டு தடுமாற்றம் – நாலடி:14 10/3

TOP


கூஉய் (2)

கோள் நாடல் வேண்டா குறி அறிவார் கூஉய் கொண்டு ஓர் – திணை150:54/3
கூஉய் கொடுப்பது ஒன்று இல் எனினும் சார்ந்தார்க்கு – பழ:162/1

TOP


கூகையை (1)

பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும் – குறள்:49 1/1

TOP


கூட்டம் (2)

நாள் கூட்டம் மூழ்த்தம் இவற்றொடு நன்று ஆய – சிறுபஞ்:42/1
கோள் கூட்டம் யோகம் குணன் உணர்ந்து தோள் கூட்டல் – சிறுபஞ்:42/2

TOP


கூட்டல் (1)

கோள் கூட்டம் யோகம் குணன் உணர்ந்து தோள் கூட்டல்
உற்றானும் அல்லானும் ஐந்தும் உணர்வான் நாள் – சிறுபஞ்:42/2,3

TOP


கூட்டியக்கண்ணும் (1)

அரிந்து அரிகால் பெய்து அமைய கூட்டியக்கண்ணும்
பொருந்தா மண் ஆகா சுவர் – பழ:9/3,4

TOP


கூட்டு (3)

கூட்டு முதல் உறையும் கோழி துயில் எடுப்ப – திணை150:143/3
கூட்டு இறப்ப கொண்டு தலையளிப்பின் அஃது அன்றோ – பழ:329/3
மேற்பட்ட கூட்டு மிகை நிற்றல் வேண்டாவே – பழ:333/2

TOP


கூட்டுண்டு (2)

நல் யானை நின் ஐயர் கூட்டுண்டு செல்வார்தாம் – திணை150:22/2
கொடி திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார் – பழ:331/1

TOP


கூட்டுவார் (1)

அம்பலம் தாழ் கூட்டுவார் – பழ:135/4

TOP


கூட்டுள் (1)

கூட்டுள் ஆய் கொண்டு வைப்பார் – நாலடி:13 2/4

TOP


கூடகாரத்திற்கு (1)

கூடகாரத்திற்கு துப்பு ஆகும் அஃதே போல் – பழ:96/2

TOP


கூடம் (1)

குடி ஓம்பல் வன்கண்மை நூல் வன்மை கூடம்
மடி ஓம்பும் ஆற்றல் உடைமை முடி ஓம்பி – ஏலாதி:17/1,2

TOP


கூடல் (3)

கூடல் இனிது ஆம் எனக்கு – ஐந்50:30/4
கோடா புகழ் மாறன் கூடல் அனையாளை – திணை150:4/1
கூடல் அணைய வரவு – கைந்:60/4

TOP


கூடல்கண் (1)

கூடல்கண் சென்றது என் நெஞ்சு – குறள்:129 4/2

TOP


கூடலின் (2)

கூடலின் காணப்படும் – குறள்:133 7/2
கூடலின் தோன்றிய உப்பு – குறள்:133 8/2

TOP


கூடலொடு (1)

கூடலொடு ஊடல் உளான் கூர்ந்து – ஏலாதி:51/4

TOP


கூடன் (1)

ஒளரதனே கேத்திரசன் கானீனன் கூடன்
கிரிதன் பௌநற்பவன் பேர் – ஏலாதி:30/3,4

TOP


கூடாதே (1)

செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
உள் பகை உற்ற குடி – குறள்:89 7/1,2

TOP


கூடார்கண் (1)

கூடார்கண் கூடிவிடின் – நான்மணி:21/4

TOP


கூடாரை (3)

கூடாரை அட்ட களத்து – கள40:12/5
கூடாரை அட்ட களத்து – கள40:22/6
கூடாரை அட்ட களத்து – கள40:41/5

TOP


கூடி (6)

நுண் உணர்வினாரொடு கூடி நுகர்வு உடைமை – நாலடி:24 3/1
சேடியர் போல செயல் தேற்றார் கூடி
புதுப்பெருக்கம் போல தம் பெண் நீர்மை காட்டி – நாலடி:36 4/2,3
கூடி நிரந்து தலை பிணங்கி ஓடி – ஐந்50:5/2
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் – குறள்:77 5/1
கூடி முயங்க பெறின் – குறள்:133 10/2
அருள் கூடி ஆர் அறத்தோடு ஐந்து இயைந்து ஈயின் – சிறுபஞ்:104/3

TOP


கூடிய (1)

கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி – குறள்:127 4/1

TOP


கூடியார் (1)

கூடியார் பெற்ற பயன் – குறள்:111 9/2

TOP


கூடிவிடின் (1)

கூடார்கண் கூடிவிடின் – நான்மணி:21/4

TOP


கூடினான் (1)

கூடினான் பின் பெரிது கூர்ந்து – திணை150:124/4

TOP


கூடினும் (1)

செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே – குறள்:89 7/1

TOP


கூடு (2)

வான் குரீஇ கூடு அரக்கு வால் உலண்டு நூல் புழுக்கோல் – சிறுபஞ்:25/1
கொக்கு ஆர் கொடும் கழி கூடு நீர் தண் சேர்ப்பன் – கைந்:55/1

TOP


கூடும் (2)

குலம் காரம் என்று அணுகான் கூடும் கூத்து என்றே – திணை150:127/3
குன்று போல் கூடும் பயன் – சிறுபஞ்:63/4

TOP


கூடும்கொல் (1)

கலப்பு அடும் கூடும்கொல் மற்று – கைந்:40/4

TOP


கூடுமோ (1)

வெம் தொழிலர் ஆய வெகுளிகட்கு கூடுமோ
மைந்து இறைகொண்ட மலை மார்ப ஆகுமோ – பழ:245/2,3

TOP


கூடுவது (1)

கூடுவது ஈவானை கொவ்வை போல் செம் வாயாய் – ஏலாதி:34/3

TOP


கூடுவேம் (1)

கூடுவேம் என்பது அவா – குறள்:131 10/2

TOP


கூத்தர் (1)

சொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து – கார்40:41/4

TOP


கூத்தன் (1)

கூத்தன் புறப்பட்டக்கால் – நாலடி:3 6/4

TOP


கூத்தனா (1)

கூத்தனா கொண்டு குறை நீ உடையையேல் – கைந்:42/3

TOP


கூத்தாட்டு (2)

கூத்தாட்டு அவை குழாத்த அற்றே பெரும் செல்வம் – குறள்:34 2/1
விளியாதான் கூத்தாட்டு காண்டலும் வீழ – திரி:11/1

TOP


கூத்தாடி (1)

கூத்தாடி உண்ணினும் உண் – ஐந்70:45/4

TOP


கூத்தியர் (1)

வாள் ஆடு கூத்தியர் கண் போல் தடுமாறும் – நாலடி:20 1/3

TOP


கூத்து (2)

நாட்டான் வீறு எய்துவர் மன்னவர் கூத்து ஒருவன் – நான்மணி:83/3
குலம் காரம் என்று அணுகான் கூடும் கூத்து என்றே – திணை150:127/3

TOP


கூத்தும் (1)

கூத்தும் விழவும் மணமும் கொலை களமும் – ஏலாதி:62/1

TOP


கூத்தே (1)

விழவு ஊரில் கூத்தே போல் வீழ்ந்து அவிதல் கண்டும் – பழ:343/2

TOP


கூதறைகள் (1)

கூதறைகள் ஆகார் குடி – பழ:360/4

TOP


கூந்தல் (9)

கூந்தல் வனப்பின் பெயல் தாழ வேந்தர் – கார்40:13/2
பல் இரும் கூந்தல் பனி நோனாள் கார் வானம் – கார்40:24/3
நுண் அறல் போல நுணங்கிய ஐம் கூந்தல்
வெண் மரல் போல நிறம் திரிந்து வேறாய – ஐந்50:27/2,3
பூ ஆர் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள் – ஐந்70:48/3
எல்லு நல் முல்லை தார் சேர்ந்த இரும் கூந்தல்
சொல்லும் அவர் வண்ணம் சோர்வு – திணை50:38/3,4
விரிந்து விடு கூந்தல் வெஃகா புரிந்து – திணை150:75/2
புயல் அமை கூந்தல் பொலந்தொடீஇ சான்றோர் – பழ:229/3
வார் சான்ற கூந்தல் வரம்பு உயர வைகலும் – சிறுபஞ்:44/1
கூந்தல் மயில் அன்னாய் குழீஇய வான் விண்ணோர்க்கு – ஏலாதி:33/3

TOP


கூப்பி (1)

கிடக்குங்கால் கை கூப்பி தெய்வம் தொழுது – ஆசாரக்:30/1

TOP


கூப்பிடும் (1)

கொல்ப போல் கூப்பிடும் வெம் கதிரோன் மல்கி – திணை150:92/2

TOP


கூம்பலும் (1)

கூம்பலும் இல்லது அறிவு – குறள்:43 5/2

TOP


கூம்பாது (1)

கோட்டு பூ போல மலர்ந்து பின் கூம்பாது
வேட்டதே வேட்டது ஆம் நட்பு ஆட்சி தோட்ட – நாலடி:22 5/1,2

TOP


கூம்பு (1)

கொடு முள் மடல் தாழை கூம்பு அவிழ்ந்த ஒண் பூ – ஐந்50:49/1

TOP


கூம்பும் (1)

கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன் – குறள்:49 10/1

TOP


கூம்புவாரை (1)

கய பூ போல் முன் மலர்ந்து பின் கூம்புவாரை
நயப்பாரும் நட்பாரும் இல் – நாலடி:22 5/3,4

TOP


கூர் (15)

இடும்பை கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண – நாலடி:11 7/1
உள் கூர் பசியால் உழை நசைஇ சென்றார்கட்கு – நாலடி:29 6/1
இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா – இன்னா40:10/2
கூர் உகிர் எண்கின் இரும் கிளை கண்படுக்கும் – ஐந்70:34/2
மா இரு ஞாலம் இருள் கூர் மருள் மாலை – திணை50:27/3
கோடல்அம் கூர் முகை கோள் அரா நேர் கருத – திணை50:29/1
வறம் கூர் கடும் கதிர் வல் விரைந்து நீங்க – திணை50:48/3
பரியது கூர் கோட்டதுஆயினும் யானை – குறள்:60 9/1
முடியும் திறத்தால் முயல்க தாம் கூர் அம்பு – பழ:49/3
கூர் அறிவினார் வாய் குணம் உடை சொல் கொள்ளாது – பழ:351/1
கூறப்படும் குணத்தான் கூர் வேல் வல் வேந்தனால் – சிறுபஞ்:57/3
கூர் அம்பு வெம் மணல் ஈர் மணி தூங்கலும் – ஏலாதி:67/1
கூர் எயிறு ஈன குருந்து அரும்ப ஓரும் – கைந்:25/2
குருதி மலர் தோன்றி கூர் முகை ஈன – கைந்:26/1
கூர் எரி மாலை குறி – கைந்:32/3

TOP


கூர்த்த (3)

கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன் தாரம் – நாலடி:9 1/3
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்குஆயினும் – பழ:195/3
கொலை புரியான் கொல்லான் புலால் மயங்கான் கூர்த்த
அலைபுரியான் வஞ்சியான் யாதும் நிலை திரியான் – ஏலாதி:2/1,2

TOP


கூர்த்து (2)

கூர்த்து நாய் கௌவி கொள கண்டும் தம் வாயால் – நாலடி:7 10/1
கூர்த்து அவரை தாம் நலிதல் கோள் அன்றால் சான்றவர்க்கு – பழ:375/2

TOP


கூர்த்துவிடல் (1)

சேப்பிலைக்கு கூர்த்துவிடல் – பழ:284/4

TOP


கூர்ந்த (2)

கூர்ந்த பசலை அவட்கு – கார்40:25/4
வறம் கூர்ந்த அனையது உடைத்து – குறள்:101 10/2

TOP


கூர்ந்தது (1)

கொல்வாங்கு கூர்ந்தது இ கார் – ஐந்50:4/4

TOP


கூர்ந்தன்று (1)

உறைத்து இருள் கூர்ந்தன்று வானம் பிறை தகை – கார்40:17/3

TOP


கூர்ந்து (7)

இணை வேல் எழில் மார்வத்து இங்க புண் கூர்ந்து
கணை அலைக்கு ஒல்கிய யானை துணை இலவாய் – கள40:21/1,2
பரும பணை எருத்தின் பல் யானை புண் கூர்ந்து
உரும் எறி பாம்பின் புரளும் செரு மொய்ம்பின் – கள40:38/1,2
புடைபெயர் போழ்தத்தும் ஆற்றாள் படர் கூர்ந்து
விம்மி உயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ – ஐந்50:39/2,3
குழல் ஆகி கோல் சுரியாய் கூர்ந்து – திணை150:98/4
கூடினான் பின் பெரிது கூர்ந்து – திணை150:124/4
கொள்வான் குடி வாழ்வான் கூர்ந்து – ஏலாதி:46/4
கூடலொடு ஊடல் உளான் கூர்ந்து – ஏலாதி:51/4

TOP


கூர்மை (1)

குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே – இனிய40:11/2

TOP


கூர்மையரேனும் (1)

அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் – குறள்:100 7/1

TOP


கூர்மையின் (1)

கூர்மையும் எல்லாம் ஒருங்கு இழப்பர் கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய் நிரப்பு என்னும் – நாலடி:29 7/2,3

TOP


கூர்மையும் (2)

கூர்மையும் எல்லாம் ஒருங்கு இழப்பர் கூர்மையின் – நாலடி:29 7/2
கேட்டு மறவாத கூர்மையும் முட்டு இன்றி – திரி:85/2

TOP


கூர (2)

ஒன்றிய நோயோடு இடும்பை பல கூர
வென்றி முரசின் இரங்கி எழில் வானம் – கார்40:35/2,3
மடவ மயில் கூவ மந்தி மா கூர
தட மலர் கோதையாய் தங்கார் வருவர் – கைந்:36/2,3

TOP


கூரா (2)

அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே – இனிய40:31/1
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே – இனிய40:39/2

TOP


கூரிது (1)

உருத்த சுணங்கின் ஒளியிழாய் கூரிது
எருத்து வலியதன் கொம்பு – பழ:76/3,4

TOP


கூரியது (1)

எஃகு அதனின் கூரியது இல் – குறள்:76 9/2

TOP


கூரியவாம் (1)

கணையிலும் கூரியவாம் கண் – பழ:174/4

TOP


கூரும் (1)

நிறம் கூரும் மாலை வரும் – திணை50:48/4

TOP


கூரை (4)

செறிப்பு இல் பழம் கூரை சேறு அணை ஆக – நாலடி:24 1/1
உறை சோர் பழம் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா – இன்னா40:5/2
பீர் இவர் கூரை மறு மனை சேர்ந்து அல்கி – ஐந்70:34/1
அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்ப பெருகியக்கண்ணும் திறப்பட்டார் – ஆசாரக்:85/1,2

TOP


கூரையுள் (1)

கூரையுள் பல் காலும் சேறலும் இ மூன்றும் – திரி:11/3

TOP


கூலி (2)

மெய் வருத்த கூலி தரும் – குறள்:62 9/2
மரம் போக்கி கூலி கொண்டார் – பழ:60/4

TOP


கூலிக்கு (1)

கூலிக்கு செய்து உண்ணுமாறு – பழ:40/4

TOP


கூவ (1)

மடவ மயில் கூவ மந்தி மா கூர – கைந்:36/2

TOP


கூவல் (2)

கூவல் குறை இன்றி தொட்டானும் இ மூவர் – திரி:16/3
உண் நீர் வளம் குளம் கூவல் வழி புரை – ஏலாதி:51/1

TOP


கூவார் (1)

எழுச்சிக்கண் பின் கூவார் தும்மார் வழுக்கியும் – ஆசாரக்:58/1

TOP


கூவும் (1)

மாரி நாள் கூவும் குயிலின் குரல் இன்னா – இன்னா40:20/1

TOP


கூழ் (17)

சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் எனின் செல்வம் ஒன்று – நாலடி:1 1/3
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க – நாலடி:1 2/2
கோள் ஆற்ற கொள்ளா குளத்தின் கீழ் பைம் கூழ் போல் – நாலடி:20 1/1
பன்றி கூழ் பத்தரில் தே மா வடித்து அற்றால் – நாலடி:26 7/1
நலம் கெடும் நீர் அற்ற பைம் கூழ் நலம் மாறின் – நான்மணி:43/3
சிறு கை அளாவிய கூழ் – குறள்:7 4/2
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் – குறள்:39 1/1
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
களை கட்டதனொடு நேர் – குறள்:55 10/1,2
கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைம் கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும் இளையனாய் – திரி:59/1,2
பெய்க விருந்திற்கும் கூழ் – ஆசாரக்:48/3
தமர் மறையா கூழ் உண்டு சேறல்அதுவே – பழ:116/3
சிறிது ஆய கூழ் பெற்று செல்வரை சேர்ந்தார் – பழ:235/1
கொல்லையில் கூழ் மரமே போன்று – பழ:272/4
தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே – பழ:378/3
பிடி பிச்சை பின் இறை ஐயம் கூழ் கூற்றோடு – சிறுபஞ்:62/1
குணம் நோக்கான் கூழ் நோக்கான் கோலமும் நோக்கான் – ஏலாதி:23/1
குடி படுத்து கூழ் ஈந்தான் கொல் யானை ஏறி – ஏலாதி:42/3

TOP


கூழ்க்கு (1)

வறன் உழக்கும் பைம் கூழ்க்கு வான் சோர்வு இனிதே – இனிய40:15/2

TOP


கூழ்த்து (1)

கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார் – குறள்:75 5/1

TOP


கூழும் (2)

கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி – குறள்:56 4/1
பெரிது ஆய கூழும் பெறுவர் அரிது ஆம் – பழ:235/2

TOP


கூழை (2)

ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும் பால் கூழை
மூழை சுவை உணராத ஆங்கு – நாலடி:33 1/3,4
சோறு என்று கூழை மதிப்பானும் ஊறிய – திரி:48/2

TOP


கூற்றத்தை (1)

கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு – குறள்:90 4/1

TOP


கூற்றம் (22)

கொடுத்தார் உய போவர் கோடு இல் தீ கூற்றம்
தொடுத்து ஆறு செல்லும் சுரம் – நாலடி:1 5/3,4
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை ஆற்ற – நாலடி:1 6/2
கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் ஆற்ற – நாலடி:1 7/2
வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவது இலர் – நாலடி:4 5/3,4
பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி – நாலடி:4 6/2
கூற்றம் கொண்டு ஓடும் பொழுது – நாலடி:12 10/4
அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம்
பொறுமின் பிறர் கடும் சொல் போற்றுமின் வஞ்சம் – நாலடி:18 2/1,2
கொலை வல் கொடும் கூற்றம் கோள் பார்ப்ப ஈண்டை – நாலடி:34 1/3
எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம் சிறு காலை – நாலடி:37 3/1
கல்லா ஒருவர்க்கு தம் வாயில் சொல் கூற்றம்
மெல் இலை வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம் – நான்மணி:82/1,2
மெல் இலை வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் கூற்றாமே – நான்மணி:82/2,3
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் கூற்றாமே – நான்மணி:82/3
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே – இனிய40:28/2
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் – குறள்:27 9/1
ஏற்றார்க்கு இயைவ கரப்பானும் கூற்றம்
வரவு உண்மை சிந்தியாதானும் இ மூவர் – திரி:45/2,3
உரைத்தாரை மீதூரா மீ கூற்றம் பல்லி – பழ:22/1
கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து குறிப்பு அறிந்து – பழ:110/1
நோற்ற பெருமை உடையாரும் கூற்றம்
புறம் கொம்மை கொட்டினார் இல் – பழ:126/3,4
மதித்து அஞ்சி மாறும் அஃது இன்மையால் கூற்றம்
குதித்து உய்ந்து அறிவாரோ இல் – பழ:183/3,4
சிலம்பிக்கு தன் சினை கூற்றம் நீள் கோடு – சிறுபஞ்:9/1
விலங்கிற்கு கூற்றம் மயிர்தான் வலம் படா – சிறுபஞ்:9/2
மாவிற்கு கூற்றம் ஆம் ஞெண்டிற்கு தன் பார்ப்பு – சிறுபஞ்:9/3

TOP


கூற்றமாய் (1)

கூற்றமாய் வீழ்ந்துவிடும் – பழ:166/4

TOP


கூற்றமும் (2)

கொள இழைக்கும் கூற்றமும் கண்டு – நாலடி:33 10/4
கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது ஆற்ற – நான்மணி:39/2

TOP


கூற்றமோ (1)

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் – குறள்:109 5/1

TOP


கூற்றாமே (1)

அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் கூற்றாமே
இல் இருந்து தீங்கு ஒழுகுவாள் – நான்மணி:82/3,4

TOP


கூற்று (19)

வந்தது வந்தது கூற்று – நாலடி:1 4/4
ஆள் பார்த்து உழலும் அருள் இல் கூற்று உண்மையால் – நாலடி:2 10/1
கோது என்று கொள்ளாதாம் கூற்று – நாலடி:11 6/4
ஒன்னாருள் கூற்று உட்கும் உட்கு உடைமை எல்லாம் – நாலடி:19 8/2
விளி நோக்கி இன்புறூஉம் கூற்று – நான்மணி:26/4
வீரம் இலாளர் கடுமொழி கூற்று இன்னா – இன்னா40:20/2
பரியார்க்கு தாம் உற்ற கூற்று இன்னா இன்னா – இன்னா40:26/3
எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா – இன்னா40:31/2
முன்னை உரையார் புறமொழி கூற்று இன்னா – இன்னா40:32/2
கூற்று அன வல் வில் விடலையோடு என் மகள் – திணை50:20/3
கொடும் தடம் கண் கூற்று மின் ஆக நெடும் தடம் கண் – திணை150:115/2
செல்லாது உயிர் உண்ணும் கூற்று – குறள்:33 6/2
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் – குறள்:77 5/1
உப்பிற்கும் காடிக்கும் கூற்று – குறள்:105 10/2
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன் – குறள்:109 3/1
தணிவு இல் பெரும் கூற்று உயிர் உண்ணுமாறும் – திரி:88/2
உண்ணும் துணை காக்கும் கூற்று – பழ:89/4
கூற்று அயர செய்யார் கொணர்ந்து – சிறுபஞ்:82/4
கொலை புரி வில்லொடு கூற்று போல் ஓடும் – கைந்:23/2

TOP


கூற்றுடன் (1)

அஞ்சும் பிணி மூப்பு அரும் கூற்றுடன் இயைந்து – பழ:137/3

TOP


கூற்றே (1)

அ பால் நால் கூற்றே மருந்து – குறள்:95 10/2

TOP


கூற்றோடு (1)

பிடி பிச்சை பின் இறை ஐயம் கூழ் கூற்றோடு
எடுத்து இரந்த உப்பு இ துணையோடு அடுத்த – சிறுபஞ்:62/1,2

TOP


கூற (1)

அறம் கூற வேண்டா அவற்கு – நாலடி:16 8/4

TOP


கூறப்படும் (4)

கோத்திரம் கூறப்படும் – நாலடி:25 2/4
தொழுத்தையால் கூறப்படும் – நாலடி:33 6/4
திறன் தெரிந்து கூறப்படும் – குறள்:19 6/2
கூறப்படும் குணத்தான் கூர் வேல் வல் வேந்தனால் – சிறுபஞ்:57/3

TOP


கூறல் (6)

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்ப காய் கவர்ந்து அற்று – குறள்:10 10/1,2
உழை இருந்தான் கூறல் கடன் – குறள்:64 8/2
கொடியர் என கூறல் நொந்து – குறள்:124 6/2
கொண்டு எடுத்து கூறல் கொடும் கழி தண் சேர்ப்ப – பழ:196/3
அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளி கூறல்
மிளகு உளு உண்பான் புகல் – பழ:326/3,4
மொழிந்தான் மொழி அறியான் கூறல் முழந்தாள் – பழ:347/3

TOP


கூறல்லவற்றை (1)

கூறல்லவற்றை விரைந்து – நான்மணி:1/4

TOP


கூறலால் (1)

தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்
முன் இன்னா மூத்தார் வாய் சொல் – பழ:357/3,4

TOP


கூறலும் (1)

நன் பயம் காய்வின்கண் கூறலும் பின் பயவா – திரி:54/2

TOP


கூறற்க (1)

சீறற்க சிற்றில் பிறந்தாரை கூறற்க
கூறல்லவற்றை விரைந்து – நான்மணி:1/3,4

TOP


கூறற்கு (1)

குணனேயும் கூறற்கு அரிதால் குணன் அழுங்க – நாலடி:36 3/2

TOP


கூறா (1)

தாம் தம்மை கூறா பொருள் – திரி:8/4

TOP


கூறாத (1)

ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல் – இனிய40:28/3,4

TOP


கூறாதி (1)

கொடியவை கூறாதி பாண நீ கூறின் – நாலடி:39 8/1

TOP


கூறாது (2)

பொழென பொய் கூறாது ஒழி – கைந்:37/4
பயம் இல் யாழ்ப்பாண பழுது ஆய கூறாது
எழு நீ போ நீடாது மற்று – கைந்:46/3,4

TOP


கூறாமை (3)

கூறாமை நோக்கி குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும் – குறள்:71 1/1
குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை – குறள்:71 4/1
கொள்ளாருள் கொள்ளாத கூறாமை இ மூன்றும் – திரி:82/3

TOP


கூறாயோ (1)

கூறாயோ கூறும் குணத்தினனாய் வேறாக – திணை150:90/2

TOP


கூறார் (5)

கூறார் தம் வாயின் சிதைந்து – நாலடி:16 6/4
வாயின் பொய் கூறார் வடு அறு காட்சியார் – நாலடி:16 7/3
குணனும் குலம் உடையார் கூறார் பகைவர் போல் – ஆசாரக்:71/2
என்றும் முறை கொண்டு கூறார் புலையரையும் – ஆசாரக்:80/3
நன்கு அறிவார் கூறார் முறை – ஆசாரக்:80/4

TOP


கூறான் (2)

அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன் – குறள்:19 1/1
புறம் கூறான் என்றல் இனிது – குறள்:19 1/2

TOP


கூறி (6)

கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு – நாலடி:34 5/3
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல் – குறள்:19 3/1
உழை இருந்து நுண்ணிய கூறி கருமம் – பழ:86/1
பாயிரம் கூறி படை தொக்கால் என் செய்ப – பழ:165/3
பாத்து இல் பய மொழி பண்பு பல கூறி
நீத்தல் அறிந்திலேம் இன்று – கைந்:45/3,4
சொல் நலம் கூறி நலன் உண்ட சேர்ப்பனை – கைந்:54/3

TOP


கூறிய (2)

நாற்றம் உரைக்கும் மலர் உண்மை கூறிய
மாற்றம் உரைக்கும் வினை நலம் தூக்கின் – நான்மணி:45/1,2
பொருள் அல்லார் கூறிய பொய் குறளை வேந்தன் – பழ:147/1

TOP


கூறிவிடும் (1)

குற்றமே கூறிவிடும் – குறள்:98 10/2

TOP


கூறின் (4)

கொடியவை கூறாதி பாண நீ கூறின்
அடி பைய இட்டு ஒதுங்கி சென்று துடியின் – நாலடி:39 8/1,2
துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து – குறள்:3 2/1
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம் – குறள்:94 3/1
திறன் வேறு கூறின் பொறையும் அற வினையை – திரி:6/2

TOP


கூறினாய் (1)

கொடியது கூறினாய் மன்ற அடியுளே – பழ:130/2

TOP


கூறினும் (1)

நினை நோக்கி கூறினும் நீ மொழியல் என்று – திணை150:144/3

TOP


கூறீர் (1)

உறு பஞ்ச மூலம் தீர் மாரி போல் கூறீர்
சிறுபஞ்சமூலம் சிறந்து – சிறுபஞ்:107/3,4

TOP


கூறு (2)

இன்பம் எனக்கு எனைத்தால் கூறு – நாலடி:9 4/4
நட்டார்க்கு இயையின் தமக்கு இயைந்த கூறு உடம்பு – ஏலாதி:79/3

TOP


கூறுங்கால் (1)

குன்றக நல் நாட கூறுங்கால் இல்லையே – பழ:111/3

TOP


கூறுதல் (1)

தங்கள் நேர் வைத்து தகவு அல்ல கூறுதல்
திங்களை நாய் குரைத்து அற்று – பழ:149/3,4

TOP


கூறுபவேல் (1)

பொய்யாக தம்மை பொருள் அல்ல கூறுபவேல்
மை ஆர உண்ட கண் மாண் இழாய் என் பரிப – பழ:44/2,3

TOP


கூறும் (14)

குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட்கு – நாலடி:36 3/3
அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா – இன்னா40:6/1
கள் உண்பான் கூறும் கரும பொருள் இன்னா – இன்னா40:33/1
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே – இனிய40:6/2
கற்று அறிந்தார் கூறும் கரும பொருள் இனிதே – இனிய40:32/1
பெண் இயல் நல்லாய் பிரிந்தார் வரல் கூறும்
கண் இயல் அஞ்சனம் தோய்ந்த போல் காயாவும் – கார்40:8/2,3
முன்கை இறப்ப துறந்தார் வரல் கூறும்
இன் சொல் பலவும் உரைத்து – கார்40:9/3,4
வணர் ஒலி ஐம்பாலாய் வல் வருதல் கூறும்
அணர்த்து எழு பாம்பின் தலை போல் புணர் கோடல் – கார்40:11/2,3
மா நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே – கள40:41/3
குழலும் குடுமி என் பாலகன் கூறும்
மழலை வாய் கட்டுரையால் – ஐந்50:25/3,4
கூறாயோ கூறும் குணத்தினனாய் வேறாக – திணை150:90/2
அறம் கூறும் ஆக்கம் தரும் – குறள்:19 3/2
படர்ந்ததே கூறும் முகம் – பழ:41/4
முன் நின்று கூறும் குறளை தெரிதலால் – பழ:113/3

TOP


கூறுமால் (1)

கோவிற்கு கோவலன் என்று உலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட்கு என வேண்டா தீங்கு உரைக்கும் – பழ:152/2,3

TOP


கூறுவ (1)

கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது ஆற்ற – நான்மணி:39/2

TOP


கூறுவர் (1)

கை உண்டும் கூறுவர் மெய் – பழ:241/4

TOP


கூறுவான் (1)

பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும் – குறள்:19 6/1

TOP


கூறை (3)

அத்து இட்ட கூறை அரை சுற்றி வாழினும் – நாலடி:29 1/1
கருத்தினால் கூறை கொள்வார் – பழ:378/4
ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம் – ஏலாதி:63/1

TOP


கூன் (3)

கூன் கையர் அல்லாதவர்க்கு – குறள்:108 7/2
புறத்து அமைச்சின் நன்று அகத்து கூன் – பழ:295/4
கூன் மேல் எழுந்த குரு – பழ:305/4

TOP


கூனல் (1)

ஈனம் செய கிடந்தது இல் என்று கூனல்
படை மாறு கொள்ள பகை தூண்டல் அஃதே – பழ:73/2,3

TOP


கூனி (1)

கூனி வண்டு அன்ன குளிர் வயல் நல் ஊரன் – திணை50:35/2

TOP