பா – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 1
பாஅய் 3
பாக்கத்தார் 1
பாக்கத்து 1
பாக்கம் 2
பாக்கியத்தால் 1
பாக்கினுள் 1
பாக்கு 1
பாக்கும் 1
பாக 2
பாகம் 1
பாகன் 2
பாகனார் 1
பாகனால் 1
பாகனையே 1
பாகு 1
பாகுபடும் 1
பாங்கத்து 1
பாங்கர் 2
பாங்கன் 1
பாங்கனார் 1
பாங்கா 1
பாங்கினால் 1
பாங்கு 4
பாச 1
பாசடை 1
பாசத்துள் 1
பாசம் 4
பாசி 2
பாட்ட 1
பாட்டம் 1
பாட்டவர் 2
பாட்டு 6
பாட்டுள்ளும் 1
பாட்டே 1
பாட்டை 1
பாட 2
பாடத்தால் 1
பாடம் 1
பாடமே 1
பாடல் 4
பாடலான் 1
பாடலும் 1
பாடலொடு 1
பாடற்கு 1
பாடா 1
பாடு 33
பாடும் 2
பாடே 1
பாண் 3
பாண்டில் 1
பாண்மகற்கு 1
பாண்மகனே 8
பாண 19
பாணி 3
பாணித்து 1
பாணித்தே 1
பாத்தல் 1
பாத்தி 5
பாத்திட்டு 1
பாத்தியுள் 2
பாத்திலார்தாம் 1
பாத்து 23
பாத்துறான் 1
பாத்தூண் 1
பாதம் 2
பாதிரி 2
பாப்பு 2
பாம்பிற்கு 1
பாம்பின் 4
பாம்பின 1
பாம்பு 16
பாம்பும் 1
பாம்பொடு 2
பாம்பொடும் 1
பாய் 18
பாய்ச்சிவிடல் 1
பாய்தல் 2
பாய்தலின் 1
பாய்துமே 1
பாய்ந்த 2
பாய்ந்தாடுதல் 1
பாய்ந்தாலும் 1
பாய்ந்து 9
பாய்பவரே 1
பாய்பவோ 1
பாய்மா 1
பாய்வதே 1
பாய்வன 1
பாய 7
பாயிரம் 1
பாயின்று 1
பாயும் 7
பார் 3
பார்க்கப்படும் 1
பார்க்கும் 8
பார்த்திருக்கும் 1
பார்த்திருந்து 1
பார்த்திருப்பான் 1
பார்த்திருப்பானும் 1
பார்த்து 12
பார்த்தும் 1
பார்த்துழி 1
பார்த்துறின் 1
பார்ப்ப 1
பார்ப்பன் 1
பார்ப்பார் 9
பார்ப்பார்கண் 1
பார்ப்பாரும் 1
பார்ப்பாரை 1
பார்ப்பான் 4
பார்ப்பான்கண் 1
பார்ப்பானும் 3
பார்ப்பு 2
பார்வல் 1
பாரதத்துள்ளும் 1
பாரம் 2
பாரா 2
பாராட்ட 3
பாராட்டி 1
பாராட்டுதல் 1
பாராட்டும் 2
பாராட்டுவார் 1
பாராட்டுவானை 1
பாராத 1
பாராது 1
பாராய் 1
பாரி 1
பாரிக்கும் 3
பாரித்த 1
பாரித்தவனை 1
பாரித்து 3
பாரிப்பார் 2
பாரில் 1
பால் 45
பால 3
பாலகன் 1
பாலர்கள் 1
பாலனார் 1
பாலனார்க்கு 1
பாலா 1
பாலால் 2
பாலிகை 1
பாலின் 2
பாலும் 2
பாலை 2
பாலொடு 3
பாவம் 11
பாவமும் 3
பாவாய் 2
பாவி 2
பாவை 7
பாவையும் 1
பாவையோ 1
பாழ் 8
பாழ்பட்டு 1
பாழ்படுதல் 1
பாழாக 1
பாழி 2
பாற்கதியின் 1
பாற்பட்ட 1
பாற்பட்டார் 4
பாற்பட்டு 2
பாற்பட 1
பாற்படுத்தான் 3
பாற்படுப்பான் 1
பாற்றினம் 1
பாற்று 1
பாறு 1
பாறை 1
பானல் 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பா (1)

பா ஆர் அம் சேர்ப்பற்கு உரையாய் பரியாது – கைந்:49/3

TOP


பாக்கத்தார் (1)

ஓத நீர் வேலி உரை கடியா பாக்கத்தார்
காதல் நீர் வாராமை கண் நோக்கி ஓத நீர் – திணை150:37/1,2

TOP


பாக்கத்து (1)

வரன்று உயிர்த்த பாக்கத்து வந்து – திணை150:49/4

TOP


பாக்கம் (2)

பாக்கம் இது எம் இடம் – ஐந்50:12/4
விரை மேவும் பாக்கம் விளக்கா கரை மேல் – திணை150:48/2

TOP


பாக்கியத்தால் (1)

பலர் அறியார் பாக்கியத்தால் – குறள்:115 1/2

TOP


பாக்கினுள் (1)

கடித்து அமைந்த பாக்கினுள் கல் படுதல் இன்னா – இன்னா40:39/2

TOP


பாக்கு (1)

ஏதம் படு பாக்கு அறிந்து – குறள்:17 4/2

TOP


பாக்கும் (1)

உமிவும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
வகை இல் உரையும் வளர்ச்சியும் ஐந்தும் – ஆசாரக்:70/1,2

TOP


பாக (2)

கடாஅவுக பாக தேர் கார் ஓட கண்டே – கார்40:32/1
நூல் நவின்ற பாக தேர் நொவ்விதா சென்றீக – ஐந்50:10/1

TOP


பாகம் (1)

கல்லாமல் பாகம் படும் – பழ:21/4

TOP


பாகன் (2)

கடல் கோடு இரு மருப்பு கால் பாகன் ஆக – திணை150:43/1
திரை பாகன் ஆக திமில் களிறு ஆக – திணை150:52/1

TOP


பாகனார் (1)

மா கோல் யாழ் பாண்மகனே யானை பாகனார்
தூக்கோல் துடியோடு தோன்றாமுன் தூக்கோல் – திணை150:125/1,2

TOP


பாகனால் (1)

தேர் நலம் பாகனால் பாடு எய்தும் ஊர் நலம் – நான்மணி:24/3

TOP


பாகனையே (1)

அறிந்தும் அறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்த வேல் – நாலடி:22 3/3

TOP


பாகு (1)

மென்றிருந்து பாகு செயல் – பழ:289/4

TOP


பாகுபடும் (1)

பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான் – சிறுபஞ்:64/3

TOP


பாங்கத்து (1)

பாங்கத்து பல்லி படும் – ஐந்70:41/4

TOP


பாங்கர் (2)

ஓங்கு குருந்தோடு அரும்பு ஈன்று பாங்கர்
மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய் – திணை50:13/1,2
பாசி பசும் சுனை பாங்கர் அழி முது நீர் – கைந்:3/1

TOP


பாங்கன் (1)

தனக்கு என்றும் ஓர் பாங்கன் பொய்யான் மெய் ஆக்கும் – ஏலாதி:5/1

TOP


பாங்கனார் (1)

பாங்கனார் சென்ற நெறி – நாலடி:40 10/4

TOP


பாங்கா (1)

வெலற்கு அரிதாம் வில் வலான் வேல் விடலை பாங்கா
செலற்கு அரிதா சேய சுரம் – திணை150:87/3,4

TOP


பாங்கினால் (1)

பல்லவர் நோய் நீக்கும் பாங்கினால் கல்லா – சிறுபஞ்:106/2

TOP


பாங்கு (4)

பற்றினில் பாங்கு இனியது இல் – இனிய40:26/4
பத்திமையின் பாங்கு இனியது இல் – இனிய40:32/4
பற்று இலனாய் பல்லுயிர்க்கும் பார்த்து உற்று பாங்கு அறிதல் – இனிய40:35/3
பற்பல நாளும் பழுது இன்றி பாங்கு உடைய – இனிய40:40/3

TOP


பாச (1)

பற்று என்னும் பாச தளையும் பல வழியும் – திரி:22/1

TOP


பாசடை (1)

கரும் கால் மராம் பொழில் பாசடை துஞ்சும் – ஐந்70:12/2

TOP


பாசத்துள் (1)

பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ் தன்னை – நான்மணி:97/3

TOP


பாசம் (4)

மனை பாசம் கைவிடாய் மக்கட்கு என்று ஏங்கி – நாலடி:13 10/1
ஆசை பிறன்கண் படுதலும் பாசம்
பசிப்ப மடியை கொளலும் கதித்து ஒருவன் – திரி:20/1,2
பரந்து ஒழுகும் பெண்பாலை பாசம் என்பானும் – திரி:73/2
பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு – கைந்:3/3

TOP


பாசி (2)

பரந்த திறலாரை பாசி மேல் இட்டு – பழ:34/1
பாசி பசும் சுனை பாங்கர் அழி முது நீர் – கைந்:3/1

TOP


பாட்ட (1)

கண் பாட்ட பூ காவி கானல் அம் தண் சேர்ப்ப – பழ:71/3

TOP


பாட்டம் (1)

வெண் பாட்டம் வெள்ளம் தரும் – பழ:71/4

TOP


பாட்டவர் (2)

வான் பாட்டவர் பகை கொள்ளினும் மேலாயார் – பழ:71/1
புன் பாட்டவர் பகை கோடல் பயம் இன்றே – பழ:71/2

TOP


பாட்டு (6)

வேதம் உறுவன பாட்டு உள வேளாண்மை – நான்மணி:51/3
பொருள் உணர்வார் இல்வழி பாட்டு உரைத்தல் இன்னா – இன்னா40:10/1
பாட்டு முரலுமாம் பண் – திணை150:143/4
பாட்டு அரவம் பண் அரவம் பணியாத – திணை150:145/1
கேட்பவன் கேடு இல் பெரும் புலவன் பாட்டு அவன் – சிறுபஞ்:31/2
பகையொடு பாட்டு உரை என்று ஐந்தும் தொகையொடு – சிறுபஞ்:83/2

TOP


பாட்டுள்ளும் (1)

நாட்டுள்ளும் நல்ல பதி உள பாட்டுள்ளும்
பாடு எய்தும் பாட்டே உள – நான்மணி:62/3,4

TOP


பாட்டே (1)

பாடு எய்தும் பாட்டே உள – நான்மணி:62/4

TOP


பாட்டை (1)

பாட்டை இருந்து அயரும் பாய் நீர் கழனித்தே – திணை150:141/3

TOP


பாட (2)

திருந்து இன் இளி வண்டு பாட இரும் தும்பி – கார்40:15/3
வரி நிற நீள் வண்டர் பாட புரி நிற நீள் – திணை150:63/2

TOP


பாடத்தால் (1)

கற்றதூஉம் இன்றி கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதை ஓர் சூத்திரம் மற்று அதனை – நாலடி:32 4/1,2

TOP


பாடம் (1)

நா பாடம் சொல்லி நயம் உணர்வார் போல் செறிக்கும் – நாலடி:32 2/1

TOP


பாடமே (1)

பாடமே ஓதி பயன் தெரிதல் தேற்றாத – நாலடி:32 6/1

TOP


பாடல் (4)

பாடல் அதிர்ந்துவிடும் – நான்மணி:19/4
பாடல் உணர்வாரகத்து – நான்மணி:36/4
பாடல் சாம் பண் அறியாதார் முன்னர் ஊடல் சாம் – நான்மணி:44/3
பண் அமையா யாழின் கீழ் பாடல் பெரிது இன்னா – இன்னா40:31/1

TOP


பாடலான் (1)

பாடலான் பாடு பெறும் – நான்மணி:83/4

TOP


பாடலும் (1)

கொட்டி அளந்து அமையா பாடலும் தட்டித்து – திரி:57/1

TOP


பாடலொடு (1)

பாடலொடு ஆடல் பயின்று உயர் செல்வனாய் – ஏலாதி:51/3

TOP


பாடற்கு (1)

பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம் – குறள்:58 3/1

TOP


பாடா (1)

மடுத்துழி பாடா விடல் – இன்னா40:39/4

TOP


பாடு (33)

பனை துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர் – நாலடி:11 5/2
பகையேயும் பாடு பெறும் – நாலடி:19 7/4
பல் ஆன்ற கேள்வி பயன் உணர்வார் பாடு அழிந்து – நாலடி:26 2/1
பத்து எட்டு உடைமை பலருள்ளும் பாடு எய்தும் – நாலடி:29 1/2
தம் பாடு உரைப்பரோ தம் உடையார் தம் பாடு – நாலடி:30 2/2
தம் பாடு உரைப்பரோ தம் உடையார் தம் பாடு
உரையாமை முன் உணரும் ஒண்மை உடையார்க்கு – நாலடி:30 2/2,3
பக்கத்தார் பாராட்ட பாடு எய்தும் தான் உரைப்பின் – நாலடி:34 10/2
தேர் நலம் பாகனால் பாடு எய்தும் ஊர் நலம் – நான்மணி:24/3
பாடு அறியாதானை இரவு – நான்மணி:59/4
பாடு எய்தும் பாட்டே உள – நான்மணி:62/4
பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம் கொண்டு ஆளும் – நான்மணி:83/2
பாடலான் பாடு பெறும் – நான்மணி:83/4
வாலிழையார் முன்னர் வனப்பு இலான் பாடு இலன் – நான்மணி:96/1
சாலும் அவைப்படின் கல்லாதான் பாடு இலன் – நான்மணி:96/2
கற்றான் ஒருவனும் பாடு இலனே கல்லாதார் – நான்மணி:96/3
பாடு வண்டு ஊதும் பருவம் பணைத்தோளி – கார்40:4/3
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் – கள40:22/5
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் – கள40:41/4
பானல் அம் தண் கழி பாடு அறிந்து தன்னைமார் – திணை150:32/1
கற்றார் அனைத்து இலர் பாடு – குறள்:41 9/2
பட்டு பாடு ஊன்றும் களிறு – குறள்:60 7/2
படை தகையான் பாடு பெறும் – குறள்:77 8/2
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள் – குறள்:91 6/1
பண்பு உள பாடு அறிவார் மாட்டு – குறள்:100 5/2
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என் – குறள்:124 7/1
வாடினும் பாடு பெறும் – குறள்:133 2/2
முகட்டு வழி கட்டில் பாடு – ஆசாரக்:22/3
ஈடு இல்லதற்கு இல்லை பாடு – பழ:96/4
பன்மையின் பாடு உடையது இல் – பழ:306/4
பக்கம் படாமை ஒருவற்கு பாடு ஆற்றல் – சிறுபஞ்:75/1
பாடு அகம் சாராமை பாத்திலார்தாம் விழையும் – ஏலாதி:25/1
பாடு இறப்ப பன்னும் இடத்து – ஏலாதி:41/4
பாத்து உண்பான் ஏத்து உண்பான் பாடு – ஏலாதி:44/4

TOP


பாடும் (2)

பண்ணாது பண் மேல் தேன் பாடும் கழி கானல் – திணை150:47/1
கந்தாரம் பாடும் களித்து – திணை150:106/4

TOP


பாடே (1)

பாடே புரியாது பால் போலும் சொல்லினாய் – ஏலாதி:21/3

TOP


பாண் (3)

தகை வண்டு பாண் முரலும் கானம் பகை கொண்டல் – கார்40:29/2
படாஅ மகிழ் வண்டு பாண் முரலும் கானம் – கார்40:32/3
பாண் சேரி பல் கிழிக்குமாறு – பழ:115/4

TOP


பாண்டில் (1)

கார்ப்பு உடை பாண்டில் கமழ புறவு எல்லாம் – ஐந்70:27/1

TOP


பாண்மகற்கு (1)

பாரி மட மகள் பாண்மகற்கு நீர் உலையுள் – பழ:171/2

TOP


பாண்மகனே (8)

தூதாய் திரிதரும் பாண்மகனே நீதான் – ஐந்50:22/2
செவ்வழி யாழ் பாண்மகனே சீர் ஆர் தேர் கையினால் – திணை150:124/1
மா கோல் யாழ் பாண்மகனே யானை பாகனார் – திணை150:125/1
விளரி யாழ் பாண்மகனே வேண்டா அழையேல் – திணை150:126/1
பாலை யாழ் பாண்மகனே பண்டு நின் நாயகற்கு – திணை150:133/1
எங்கை இயல்பின் எழுவல் யாழ் பாண்மகனே
தம் கையும் வாயும் அறியாமல் இங்கண் – திணை150:136/1,2
கண்ணுங்கால் என்கொல் கலவை யாழ் பாண்மகனே
எண்ணுங்கால் மற்று இன்று இவளொடு நேர் எண்ணின் – திணை150:150/1,2
மங்கையர் இல் நாடுமோ மா கோல் யாழ் பாண்மகனே
எங்கையர் இல் நாடலாம் இன்று – திணை150:151/3,4

TOP


பாண (19)

கொடியவை கூறாதி பாண நீ கூறின் – நாலடி:39 8/1
பெரும் பொய் உரையாதி பாண கரும்பின் – நாலடி:39 10/2
வேறு அல்லை பாண வியல் ஊரன் வாய்மொழியை – ஐந்50:21/3
பாண பரிந்து உரைக்க வேண்டுமோ மாண – ஐந்50:23/2
நீத்து நீர் ஊன வாய் பாண நீ போய் மொழி – ஐந்70:45/3
பெண்டிர்க்கு உரை பாண உய்த்து – ஐந்70:46/4
ஓவாது செல் பாண நீ – ஐந்70:48/4
பாண இருக்க அது களை நாண் உடையான் – ஐந்70:49/2
தன் உற்ற எல்லாம் இருக்க இரும் பாண
நின் உற்றதுண்டேல் உரை – ஐந்70:49/3,4
தன் நலம் என் அலார்க்கு ஈயான் எழு பாண
பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள் – திணை50:34/2,3
பல் காலும் வந்து பயின்று உரையல் பாண கேள் – திணை50:37/1
நல் வயல் ஊரன் நலம் உரைத்து நீ பாண
சொல்லின் பயின்று உரைக்க வேண்டா ஒழிதி நீ – திணை50:38/1,2
மடங்கு இறவு போலும் யாழ் பண்பு இலா பாண
தொடங்கு உறவு சொல் துணிக்க வேண்டா முடங்கு இறவு – திணை150:131/1,2
எங்கையர் இல் உள்ளானே பாண நீ பிறர் – திணை150:132/1
நெறி அல்ல சொல்லல் நீ பாண அறி துயில் – பழ:222/3
பழன வயல் ஊரன் பாண எம் முன்னர் – கைந்:37/3
யார்க்கு உரைத்தி பாண அதனால் யாம் என் செய்தும் – கைந்:42/2
மூத்தேம் இனி பாண முன்னாயின் நாம் இளையேம் – கைந்:45/1
செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய் பாண
இருக்க எம் இல்லுள் வரல் – கைந்:47/3,4

TOP


பாணி (3)

வெறி அயர் வெம் களத்து வேல்மகன் பாணி
முறி ஆர் நறும் கண்ணி முன்னர் தயங்க – நாலடி:2 6/1,2
செய்குறா பாணி சிறிதே அ சில் மொழியார் – நாலடி:37 2/3
கை உறா பாணி பெரிது – நாலடி:37 2/4

TOP


பாணித்து (1)

பாணித்து நிற்கிற்பார் யாவர் உளர் வேல் குத்திற்கு – பழ:32/3

TOP


பாணித்தே (1)

பாணித்தே செய்ப வியங்கொள்ளின் காணி – பழ:308/2

TOP


பாத்தல் (1)

பழியாமை பாத்தல் யார்மாட்டும் ஒழியாமை – சிறுபஞ்:45/2

TOP


பாத்தி (5)

பனை விளைவு நாம் எண்ண பாத்தி தினை விளைய – திணை150:5/2
பலா எழுந்தபால் வருக்கை பாத்தி அதன் நேர் – திணை150:29/1
பாத்தி படுப்பது ஓர் ஆறு – குறள்:47 5/2
நன்கு அறியார் தாமும் நனி உளர் பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள பேதைக்கு – பழ:399/2,3
மூத்தாலும் மூவார் நூல் தேற்றாதார் பாத்தி
புதைத்தாலும் நாறாத வித்து உள பேதைக்கு – சிறுபஞ்:21/2,3

TOP


பாத்திட்டு (1)

பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும் ஊர்க்கு – திரி:104/2

TOP


பாத்தியுள் (2)

வள பாத்தியுள் வளரும் வண்மை கிளை குழாம் – நான்மணி:14/1
பாத்தியுள் நீர் சொரிந்த அற்று – குறள்:72 8/2

TOP


பாத்திலார்தாம் (1)

பாடு அகம் சாராமை பாத்திலார்தாம் விழையும் – ஏலாதி:25/1

TOP


பாத்து (23)

பரவன்மின் பற்றன்மின் பாத்து உண்மின் யாதும் – நாலடி:10 2/3
அட்டது பாத்து உண்டல் அட்டு உண்டல் அட்டது – நாலடி:28 1/2
பாத்து இல் புடைவை உடை இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:2/3
பாத்து உணல் இல்லாருழை சென்று உணல் இன்னா – இன்னா40:21/2
படு வாய் இருள் அகற்றும் பாத்து – திணை150:48/4
பாத்து படு கடல் மாந்தி பல கொண்மூ – திணை150:114/1
பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை – குறள்:5 4/1
பாத்து ஊண் மரீஇயவனை பசி என்னும் – குறள்:23 7/1
மூத்தோரை இல்லா அவை களனும் பாத்து உண்ணா – திரி:10/2
பல் அவையுள் நல்லவை கற்றலும் பாத்து உண்டு ஆங்கு – திரி:31/1
ஒத்த ஒழுக்கம் உடைமையும் பாத்து உண்ணும் – திரி:40/2
ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும் இ மூவர் – திரி:70/3
பசை கொண்டவன் நிற்க பாத்து உண்ணான்ஆயின் – பழ:24/3
பயன் நோக்காது ஆற்றவும் பாத்து அறிவு ஒன்று இன்றி – பழ:40/1
பை அரவு அல்குல் பணை தோளாய் பாத்து அறிவு என் – பழ:364/3
பாத்து உண்பான் பார்ப்பான் பழி உணர்வான் சான்றவன் – சிறுபஞ்:6/3
பண்டாரம் பல் கணக்கு கண்காணி பாத்து இல்லார் – சிறுபஞ்:38/1
பார் அறம் நன்று பாத்து உண்பானேல் பேர் அறம் – சிறுபஞ்:61/2
பஞ்ச பொழுது பாத்து உண்பான் கரவாதான் – சிறுபஞ்:77/1
பத்தினி சேவகன் பாத்து இல் கடும் தவசி – சிறுபஞ்:101/1
பாத்து உண்பான் ஏத்து உண்பான் பாடு – ஏலாதி:44/4
பற்றுதல் பாத்து இல் தவம் – ஏலாதி:73/4
பாத்து இல் பய மொழி பண்பு பல கூறி – கைந்:45/3

TOP


பாத்துறான் (1)

பல் கிளையுள் பாத்துறான் ஆகி ஒருவனை – பழ:366/1

TOP


பாத்தூண் (1)

பாரம் வெய்யோர்க்கு பாத்தூண் எளிது – முது:8 9/1

TOP


பாதம் (2)

அரிது அவித்து ஆசு இன்று உணர்ந்தவன் பாதம்
விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து – பழ:1/1,2
முழுது உணர்ந்து மூன்று ஒழித்து மூவாதான் பாதம்
பழுது இன்றி ஆற்ற பணிந்து முழுது ஏத்தி – சிறுபஞ்:0/1,2

TOP


பாதிரி (2)

ஒள் நிற பாதிரி பூ சேர்தலால் புத்தோடு – நாலடி:14 9/3
வரி நிற பாதிரி வாட வளி போழ்ந்து – கார்40:3/1

TOP


பாப்பு (2)

பாப்பு கொடியாற்கு பால் மேனியான் போல – பழ:13/1
நன்றே ஒருவன் துணை கோடல் பாப்பு இடுக்கண் – பழ:111/1

TOP


பாம்பிற்கு (1)

பாம்பிற்கு ஒரு தலை காட்டி ஒரு தலை – நாலடி:38 5/1

TOP


பாம்பின் (4)

நிலைமை இல் நெஞ்சத்தான் துப்புரவு பாம்பின்
தலை நக்கி அன்னது உடைத்து – நாலடி:9 7/3,4
அணர்த்து எழு பாம்பின் தலை போல் புணர் கோடல் – கார்40:11/3
உரும் எறி பாம்பின் புரளும் செரு மொய்ம்பின் – கள40:13/3
உரும் எறி பாம்பின் புரளும் செரு மொய்ம்பின் – கள40:38/2

TOP


பாம்பின (1)

பாம்பு அறியும் பாம்பின கால் – பழ:5/4

TOP


பாம்பு (16)

பாம்பு கண்டு அன்னது உடைத்து – நாலடி:13 6/4
ஒரு புடை பாம்பு கொளினும் ஒரு புடை – நாலடி:15 8/1
பல்லினான் நோய் செய்யும் பாம்பு எலாம் கொல் ஏறு – நான்மணி:12/1
உற்றது உரையாதார் உள் கரந்து பாம்பு உறையும் – நான்மணி:55/3
அறை கல் இறுவரை மேல் பாம்பு சவட்டி – கார்40:17/1
கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே – கள40:22/4
பாம்பு என ஓடி உரும் இடிப்ப கண்டு இரங்கும் – திணை50:3/2
வண் துடுப்பு ஆய் பாம்பு ஆய் விரல் ஆய் வளை முரி ஆய் – திணை150:119/3
திங்களை பாம்பு கொண்டு அற்று – குறள்:115 6/2
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும் இ மூவர் – திரி:19/3
பாம்பு அறியும் பாம்பின கால் – பழ:5/4
பாம்பு காண்பாரும் உடைத்து – பழ:25/4
பாம்பு பல் கொள்வாரோ இல் – பழ:148/4
அவைப்படின் சாவாது பாம்பு – பழ:313/4
இளைது என்று பாம்பு இகழ்வார் இல் – பழ:383/4
கரும் கை கத வேழம் கார் பாம்பு குப்பம் – கைந்:8/1

TOP


பாம்பும் (1)

அளை உறை பாம்பும் அரசும் நெருப்பும் – ஆசாரக்:84/1

TOP


பாம்பொடு (2)

பாம்பொடு உடன் உறைந்த அற்று – குறள்:89 10/2
பாம்பொடு உடன் உறையுமாறு – பழ:349/4

TOP


பாம்பொடும் (1)

பரீஇ உயிர் செகுக்கும் பாம்பொடும் இன்னா – நாலடி:22 10/3

TOP


பாய் (18)

பருமம் பொறுப்பினும் பாய் பரிமா போல் – நாலடி:15 9/3
பரப்பு எலாம் பொன் ஒழுகும் பாய் அருவி நாட – நாலடி:31 7/3
பாய் திரை சூழ் வையம் பயப்பினும் இன்னாதே – நாலடி:34 9/3
வேர் அறின் வாடும் மரம் எல்லாம் நீர் பாய்
மடை அறின் நீள் நெய்தல் வாடும் படை அறின் – நான்மணி:41/2,3
பண் ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் – கள40:8/4
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் – கள40:22/5
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் – கள40:41/4
பாய் திரை சேர்ப்பன் பரி தேர் வர கண்டு – ஐந்70:71/3
பணை தாள் கதிர் செந்நெல் பாய் வயல் ஊரன் – திணை50:32/3
தண் பரப்ப பாய் இருள் நீ வரின் தாழ் கோதையாள் – திணை150:34/3
மா கடல் சேர் வெண் மணல் தண் கானல் பாய் திரை சேர் – திணை150:38/1
கரை பாய் நீள் சேர்ப்ப கனை இருள் வாரல் – திணை150:43/3
பாட்டை இருந்து அயரும் பாய் நீர் கழனித்தே – திணை150:141/3
முறுவல் இனிதுரை கால் நீர் மணை பாய்
கிடக்கையோடு இ ஐந்தும் என்ப தலை சென்றார்க்கு – ஆசாரக்:54/1,2
அறை பாய் அருவி அணி மலை நாட – பழ:15/3
பாய் இருள் நீக்கும் மதியம் போல் பல் மீனும் – பழ:47/3
பாய் வரை நாட பரிசு அழிந்தாரொடு – பழ:350/3
தீம் கனி மாவின் முசு பாய் மலை நாடன் – கைந்:4/2

TOP


பாய்ச்சிவிடல் (1)

மறைந்து யானை பாய்ச்சிவிடல் – பழ:376/4

TOP


பாய்தல் (2)

வாழ்வின் வரை பாய்தல் நன்று – நாலடி:37 9/4
நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா – இன்னா40:30/1

TOP


பாய்தலின் (1)

பல் கணை எ வாயும் பாய்தலின் செல்கலாது – கள40:10/1

TOP


பாய்துமே (1)

செம் கோடு பாய்துமே என்றாள்மன் செம் கோட்டின் – நாலடி:38 2/2

TOP


பாய்ந்த (2)

தேய்விடத்து சென்று இருள் பாய்ந்த ஆங்கு நல் வினை – நாலடி:6 1/3
பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாய் எல்லாம் – கள40:33/1

TOP


பாய்ந்தாடுதல் (1)

தறி அறியான் கீழ் நீர் பாய்ந்தாடுதல் இன்னா – இன்னா40:29/2

TOP


பாய்ந்தாலும் (1)

மிக்கு பெருகி மிகு புனல் பாய்ந்தாலும்
உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல் போல் மிக்க – பழ:11/1,2

TOP


பாய்ந்து (9)

பாய்ந்து அருவி ஆடினேம் ஆக பணிமொழிக்கு – ஐந்50:15/3
கொல்லை புனத்த அகில் சுமந்து கல் பாய்ந்து
வானின் அருவி ததும்ப கவினிய – ஐந்70:2/1,2
பால் ஒத்த வெள் அருவி பாய்ந்து ஆடி பல் பூ பெய்தால் – திணை150:19/1
பைம் தார் புனல்வாய் பாய்ந்து ஆடுவாள் அம் தார் – திணை150:128/2
அங்கண் கழனி பழனம் பாய்ந்து அங்கண் – திணை150:147/2
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் பாய்ந்து எழுந்து – திரி:82/2
பறை பெற்றாள் ஆடாதோ பாய்ந்து – பழ:403/4
பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நல் நாடன் – கைந்:9/3
கய நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன் – கைந்:46/1

TOP


பாய்பவரே (1)

உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல் – குறள்:129 7/1

TOP


பாய்பவோ (1)

செல் நீர் அருவி மலை நாட பாய்பவோ
வெந்நீரும் ஆடாதார் தீ – பழ:293/3,4

TOP


பாய்மா (1)

பாய்மா உடையான் உடைக்கிற்கும் தோம் இல் – நான்மணி:16/2

TOP


பாய்வதே (1)

பாய்வதே போலும் துறைவ கேள் தீயன – பழ:173/3

TOP


பாய்வன (1)

குஞ்சர கும்பத்து பாய்வன குன்று இவரும் – கள40:16/3

TOP


பாய (7)

மேல் ஆறு பாய விருந்து – நாலடி:27 8/4
ஓவா கணை பாய ஒல்கி எழில் வேழம் – கள40:12/1
கொல் யானை பாய குடை முருக்கி எவ்வாயும் – கள40:15/1
குஞ்சரம் பாய கொடி எழுந்து பொங்குபு – கள40:25/2
கொடுவரி பாய துணை இழந்து அஞ்சி – ஐந்70:39/1
பாய முழங்கி படு கடலுள் நீர் முகந்து – திணை50:27/2
மண் பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா – சிறுபஞ்:0/3

TOP


பாயிரம் (1)

பாயிரம் கூறி படை தொக்கால் என் செய்ப – பழ:165/3

TOP


பாயின்று (1)

படர் பசலை பாயின்று தோள் – ஐந்70:67/4

TOP


பாயும் (7)

முயங்காக்கால் பாயும் பசலை மற்று ஊடி – நாலடி:40 1/1
பள்ளியுள் பாயும் பசப்பு – கார்40:27/4
மலை கலங்க பாயும் மலை போல் நிலை கொள்ளா – கள40:25/1
ஆலித்து பாயும் அலை கடல் தண் சேர்ப்ப – பழ:40/3
தழென மத எருமை தண் கயம் பாயும்
பழன வயல் ஊரன் பாண எம் முன்னர் – கைந்:37/2,3
கயல் இனம் பாயும் கழனி நல் ஊர – கைந்:38/1
தொட்ட வரி வரால் பாயும் புனல் ஊரன் – கைந்:39/2

TOP


பார் (3)

பார் தாக்க பக்கு விடும் – குறள்:107 8/2
பார் எறியும் முந்நீர் துறைவ கடன் அன்றோ – பழ:101/3
பார் அறம் நன்று பாத்து உண்பானேல் பேர் அறம் – சிறுபஞ்:61/2

TOP


பார்க்கப்படும் (1)

பைம் மறியா பார்க்கப்படும் – நாலடி:5 2/4

TOP


பார்க்கும் (8)

பாழ் ஊர் பொதியில் புகா பார்க்கும் ஆர் இடை – ஐந்70:31/2
புள்ளி வெருகு தன் குட்டிக்கு இரை பார்க்கும்
கள்ளர் வழங்கும் சுரம் என்பர் காதலர் – ஐந்70:36/2,3
படு பகை பார்க்கும் சுரம் – ஐந்70:39/4
வரு நசை பார்க்கும் என் நெஞ்சு – திணை50:14/4
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள்:13 10/2
விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன் – குறள்:119 6/1
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு – குறள்:119 6/2
நாள் கழகம் பார்க்கும் நயம் இலா சூதனும் – திரி:81/2

TOP


பார்த்திருக்கும் (1)

எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும் அ சீர் – நாலடி:35 5/2

TOP


பார்த்திருந்து (1)

வரு மனை பார்த்திருந்து ஊண் இன்னா இன்னா – இன்னா40:36/3

TOP


பார்த்திருப்பான் (1)

செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு – குறள்:9 6/1,2

TOP


பார்த்திருப்பானும் (1)

செவி குற்றம் பார்த்திருப்பானும் இ மூவர் – திரி:28/3

TOP


பார்த்து (12)

ஆள் பார்த்து உழலும் அருள் இல் கூற்று உண்மையால் – நாலடி:2 10/1
அறு நீர் சிறு கிணற்று ஊறல் பார்த்து உண்பர் – நாலடி:28 5/2
பற்று இலனாய் பல்லுயிர்க்கும் பார்த்து உற்று பாங்கு அறிதல் – இனிய40:35/3
கறி வளர் பூம் சாரல் கைந்நாகம் பார்த்து
நெறி வளர் நீள் வேங்கை கொட்கும் முறி வளர் – திணை150:7/1,2
அசைந்து ஒழிந்த யானை பசியால் ஆள் பார்த்து
மிசைந்து ஒழியும் அத்தம் விரைந்து – திணை150:86/3,4
பருந்து கழுகொடு வம்பலர் பார்த்து ஆண்டு – திணை150:91/3
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள் வேர்ப்பர் ஒள்ளியவர் – குறள்:49 7/1,2
படுபயனும் பார்த்து செயல் – குறள்:68 6/2
தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால் – குறள்:111 7/1
நினைத்தது இது என்று அ நீர்மையை பார்த்து
மனத்தது அறிந்து ஈவார் மாண்டார் புனத்த – பழ:246/1,2
பார்த்து ஆற்றாதாரை பரியாது மீதூர்தல் – பழ:284/2
பார்த்து ஓடி சென்று கதம் பட்டு நாய் கவ்வின் – பழ:375/3

TOP


பார்த்தும் (1)

படும் புலால் பார்த்தும் பகர்தும் அடும்பு எலாம் – திணை150:51/2

TOP


பார்த்துழி (1)

பார்த்துழி பெய்யில் என் பல்லோர் பழிக்கில் என் – நாலடி:3 6/2

TOP


பார்த்துறின் (1)

ஒண் செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்று அவள் – நான்மணி:64/3

TOP


பார்ப்ப (1)

கொலை வல் கொடும் கூற்றம் கோள் பார்ப்ப ஈண்டை – நாலடி:34 1/3

TOP


பார்ப்பன் (1)

வேட்டவன் பார்ப்பன் விளங்கிழைக்கு கற்பு உடைமை – சிறுபஞ்:31/1

TOP


பார்ப்பார் (9)

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா – இன்னா40:2/1
எச்சிலார் தீண்டார் பசு பார்ப்பார் தீ தேவர் – ஆசாரக்:5/1
ஐம் பூதம் பார்ப்பார் பசு திங்கள் நாயிறு – ஆசாரக்:15/1
இரு தேவர் பார்ப்பார் இடை போகார் தும்மினும் – ஆசாரக்:31/1
நில துளக்கு விண் அதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்கு நூல் ஓதாத நாள் – ஆசாரக்:47/3,4
பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் – ஆசாரக்:64/1
பசு கொடுப்பின் பார்ப்பார் கை கொள்ளாரே என்றும் – ஆசாரக்:90/2
காப்பாரின் பார்ப்பார் மிகும் – பழ:259/4
பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள் – ஏலாதி:54/1

TOP


பார்ப்பார்கண் (1)

பொச்சாப்பு பார்ப்பார்கண் இல் – குறள்:29 5/2

TOP


பார்ப்பாரும் (1)

பார்ப்பாரும் தின்பர் உடும்பு – பழ:87/4

TOP


பார்ப்பாரை (1)

பழகினும் பார்ப்பாரை தீ போல் ஒழுகல் – திரி:42/2

TOP


பார்ப்பான் (4)

எருது உடையான் வேளாளன் ஏலாதான் பார்ப்பான்
ஒரு தொடையான் வெல்வது கோழி உருவோடு – நான்மணி:52/1,2
ஓத்து இலா பார்ப்பான் உரை – இன்னா40:21/4
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் – குறள்:14 4/1,2
பாத்து உண்பான் பார்ப்பான் பழி உணர்வான் சான்றவன் – சிறுபஞ்:6/3

TOP


பார்ப்பான்கண் (1)

ஞெண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் விண் தோயும் – பழ:111/2

TOP


பார்ப்பானும் (3)

ஒட்டி வினை நலம் பார்ப்பானும் இ மூவர் – திரி:15/3
மூன்று கடன் கழித்த பார்ப்பானும் ஓர்ந்து – திரி:34/1
வேதம் கரைகண்ட பார்ப்பானும் தீது இகந்து – திரி:70/2

TOP


பார்ப்பு (2)

முருகு வாய் முள் தாழை நீள் முகை பார்ப்பு என்றே – திணை150:36/1
மாவிற்கு கூற்றம் ஆம் ஞெண்டிற்கு தன் பார்ப்பு
நாவிற்கு நன்று அல் வசை – சிறுபஞ்:9/3,4

TOP


பார்வல் (1)

இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும் – குறள்:116 2/1

TOP


பாரதத்துள்ளும் (1)

பாரதத்துள்ளும் பணையம் தம் தாயமா – பழ:52/1

TOP


பாரம் (2)

வலி முன்னர் வை பாரம் இல் – பழ:234/4
பாரம் வெய்யோர்க்கு பாத்தூண் எளிது – முது:8 9/1

TOP


பாரா (2)

சால் நெறி பாரா உழவனும் தன் மனையில் – திரி:103/1
ஏர் குற்றம் பாரா உழவனும் இன் அடிசில் – திரி:104/1

TOP


பாராட்ட (3)

பக்கத்தார் பாராட்ட பாடு எய்தும் தான் உரைப்பின் – நாலடி:34 10/2
உள்ளாது அகன்றார் என்று ஊடி யாம் பாராட்ட
பள்ளியுள் பாயும் பசப்பு – கார்40:27/3,4
தம் மேல் புகழ் பிறர் பாராட்ட தம் மேல் தாம் – பழ:131/2

TOP


பாராட்டி (1)

தளர் முலை பாராட்டி என்னுடைய பாவை – ஐந்70:47/3

TOP


பாராட்டுதல் (1)

பற்று அற்றகண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார்கண்ணே உள – குறள்:53 1/1,2

TOP


பாராட்டும் (2)

இளமை பாராட்டும் உலகு – நான்மணி:63/4
பண்பு பாராட்டும் உலகு – குறள்:100 4/2

TOP


பாராட்டுவார் (1)

கண்டு பாராட்டுவார் கண்டிலர்கொல் மண்டி – நாலடி:5 8/2

TOP


பாராட்டுவானை (1)

பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் – குறள்:20 6/1

TOP


பாராத (1)

வரும் குற்றம் பாராத மன்னும் இ மூவர் – திரி:104/3

TOP


பாராது (1)

பாலனார் நூல் அமர்ந்து பாராது வாலிதா – ஏலாதி:65/2

TOP


பாராய் (1)

பாராய் மனை துறந்து அ சேரி செல்வதனை – ஐந்70:54/3

TOP


பாரி (1)

பாரி மட மகள் பாண்மகற்கு நீர் உலையுள் – பழ:171/2

TOP


பாரிக்கும் (3)

அம் கண் விசும்பின் அகல் நிலா பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் திங்கள் – நாலடி:16 1/1,2
பண்பு இன்மை பாரிக்கும் நோய் – குறள்:86 1/2
அம் கண் விசும்பின் அகல் நிலா பாரிக்கும்
திங்களும் தீங்குறுதல் காண்டுமால் பொங்கி – பழ:15/1,2

TOP


பாரித்த (1)

பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள் – திணை50:34/3

TOP


பாரித்தவனை (1)

பாரித்தவனை நலிந்து தொழில் கோடல் – பழ:389/3

TOP


பாரித்து (3)

பாரித்து உரைக்கும் உரை – குறள்:20 3/2
பாரித்து பல் கால் பயின்று – ஆசாரக்:71/3
பரந்து உரையார் பாரித்து உரையார் ஒருங்கு எனைத்தும் – ஆசாரக்:76/2

TOP


பாரிப்பார் (2)

தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி – குறள்:92 6/1
புன் நலம் பாரிப்பார் தோள் – குறள்:92 6/2

TOP


பாரில் (1)

பைம் தலை பாரில் புரள்பவை நன்கு எனைத்தும் – கள40:24/2

TOP


பால் (45)

பருவம் எனைத்து உள பல்லின் பால் ஏனை – நாலடி:2 8/1
உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும் – நாலடி:12 6/3
பால் வேறு உருவின அல்லவாம் பால் போல் – நாலடி:12 8/2
பால் வேறு உருவின அல்லவாம் பால் போல் – நாலடி:12 8/2
பால் உண் குருகின் தெரிந்து – நாலடி:14 5/4
பாலொடு அளாய நீர் பால் போல் ஆகும் அல்லது – நாலடி:18 7/1
ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும் பால் கூழை – நாலடி:33 1/3
கவ்வி தோல் தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின் – நாலடி:33 2/3
நெய் இலா பால் சோற்றின் நேர் – நாலடி:34 3/4
பால் நோக்கி வாழும் குழவிகள் வான – நான்மணி:26/2
வன்கண் பெருகின் வலி பெருகும் பால் மொழியார் – நான்மணி:90/1
எ துணையும் ஆற்ற இனிது என்ப பால் படும் – இனிய40:38/3
ஆயமும் ஒன்றும் இவை நினையாள் பால் போலும் – ஐந்50:33/2
தெரி ஆ இன நிரை தீம் பால் பிலிற்ற – திணை50:30/2
பால் ஒத்த வெள் அருவி பாய்ந்து ஆடி பல் பூ பெய்தால் – திணை150:19/1
பால் போலும் வெண் நிலவும் பை அரவு அல்குலாய் – திணை150:96/3
கன்று உள்ளி சோர்ந்த பால் கால் ஒற்றி தாமரை பூ – திணை150:138/1
துன்னற்க தீவினை பால் – குறள்:21 9/2
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து – குறள்:38 6/1
எ பால் நூலோர்க்கும் துணிவு – குறள்:54 3/2
அ பால் நால் கூற்றே மருந்து – குறள்:95 10/2
பகலும் பால் பட்டன்று இருள் – குறள்:100 9/2
பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்த அற்று – குறள்:100 10/1,2
பால் பற்றி சொல்லா விடுதலும் தோல் வற்றி – திரி:27/2
சால்பினில் தோன்றும் குடிமையும் பால் போலும் – திரி:37/2
மு பால் ஒழுக்கினால் காத்து உய்க்க உய்யாக்கால் – ஆசாரக்:3/2
மேல் முறை பால் தம் குரவரை போல் ஒழுகல் – ஆசாரக்:61/2
பாப்பு கொடியாற்கு பால் மேனியான் போல – பழ:13/1
பரந்தவர் கொள்கை மேல் பால் ஆறும் ஓடார் – பழ:143/1
தீ பால் வினையினை தீரவும் அஞ்சாராய் – பழ:193/1
அக்காரம் பால் செருக்குமாறு – பழ:199/4
நீர் ஒழுக பால் ஒழுகுமாறு – பழ:206/4
அலைத்து பால் பெய்துவிடல் – பழ:212/4
எலி இல்வழி பெறா பால் – பழ:330/4
பால் தலை பால் ஊறல் இல் – பழ:333/4
பால் தலை பால் ஊறல் இல் – பழ:333/4
நெய்த்தலை பால் உக்குவிடல் – பழ:339/4
கடைப்பிடி இல்லார் பால் வைத்து கடைப்பிடி – பழ:377/2
கன்று சாவ பால் கறவாமை செய்யாமை – சிறுபஞ்:45/3
ஓர்த்து ஒரு பால் மறைத்து உண்பான் மேய் ஓர்த்த – சிறுபஞ்:65/2
தோல் கன்று காட்டி கறவார் கறந்த பால்
பாற்பட்டார் உண்ணார் பழி பாவம் பாற்பட்டார் – சிறுபஞ்:82/1,2
பாடே புரியாது பால் போலும் சொல்லினாய் – ஏலாதி:21/3
பால் இல்லார் பற்றிய நூல் இல்லார் சாலவும் – ஏலாதி:36/2
பால் நோக்கி வாழ்வான் பழி இல்லா மன்னனாய் – ஏலாதி:59/3
பால் வாய் இடையர் – கைந்:35/1

TOP


பால (3)

தீ பால தான் பிறர்கண் செய்யற்க நோய் பால – குறள்:21 6/1
தீ பால தான் பிறர்கண் செய்யற்க நோய் பால
தன்னை அடல் வேண்டாதான் – குறள்:21 6/1,2
கார்ப்பார் தமை யாதும் காப்பு இலார் தூ பால
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் மண் ஆண்டு – ஏலாதி:54/2,3

TOP


பாலகன் (1)

குழலும் குடுமி என் பாலகன் கூறும் – ஐந்50:25/3

TOP


பாலர்கள் (1)

பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள்
கார்ப்பார் தமை யாதும் காப்பு இலார் தூ பால – ஏலாதி:54/1,2

TOP


பாலனார் (1)

பாலனார் நூல் அமர்ந்து பாராது வாலிதா – ஏலாதி:65/2

TOP


பாலனார்க்கு (1)

பாலனார்க்கு ஈக பழியிலாள்பாலால் – திணை150:12/2

TOP


பாலா (1)

ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா
கட்டங்க வெல் கொடி கொண்டானும் கொண்டானே – பழ:85/1,2

TOP


பாலால் (2)

பாலால் கழீஇ பல நாள் உணக்கினும் – நாலடி:26 8/1
வினைபடு பாலால் கொளல் – குறள்:28 9/2

TOP


பாலிகை (1)

பாலிகை பூக்கும் பயின்று – திணை150:51/4

TOP


பாலின் (2)

கலம் சிதைக்கும் பாலின் சுவையை குலம் சிதைக்கும் – நான்மணி:21/3
பாலின் நூல் எய்தப்படும் – ஏலாதி:22/4

TOP


பாலும் (2)

எ பாலும் ஆகா கெடும் – ஆசாரக்:3/3
துய்த்து வழங்கி இரு பாலும் அ தக – பழ:37/2

TOP


பாலை (2)

இரும் சிறை வண்டு இனம் பாலை முரல – திணை50:16/2
பாலை யாழ் பாண்மகனே பண்டு நின் நாயகற்கு – திணை150:133/1

TOP


பாலொடு (3)

பாலொடு அளாய நீர் பால் போல் ஆகும் அல்லது – நாலடி:18 7/1
அக்காரம் பாலொடு அமரார் கைத்து உண்டலின் – நாலடி:21 6/2
பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி – குறள்:113 1/1

TOP


பாவம் (11)

தவத்தின் முன் நில்லாதாம் பாவம் விளக்கு நெய் – நாலடி:6 1/2
நச்சுவார் சேரும் பகை பழி பாவம் என்று – நாலடி:9 2/3
அறித இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பினவர் – நாலடி:38 10/3,4
பழித்துழி நிற்பது பாவம் அழித்து – நான்மணி:28/2
கயம் பெருகின் பாவம் பெரிது – நான்மணி:90/4
என் மெலிய வீங்கினவே பாவம் என்று என் மெலிவிற்கு – திணை150:21/2
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் – குறள்:15 6/1
செய்யான் பழி பாவம் சேரான் புறமொழியும் – சிறுபஞ்:1/3
கட்டு எறிந்த பாவம் கருது – சிறுபஞ்:68/4
பாற்பட்டார் உண்ணார் பழி பாவம் பாற்பட்டார் – சிறுபஞ்:82/2
பாவம் பழி பகை சாக்காடே கேடு அச்சம் – ஏலாதி:60/3

TOP


பாவமும் (3)

பாவமும் ஏனை பழியும் பட வருவ – நாலடி:30 5/1
பாவமும் அஞ்சாராய் பற்றும் தொழில் மொழி – இனிய40:23/3
இம்மை பழியும் மறுமைக்கு பாவமும்
தம்மை பிரியார் தமர் போல் அடைந்தாரின் – பழ:188/1,2

TOP


பாவாய் (2)

நாறா தகடே போல் நல் மலர் மேல் பொன் பாவாய்
நீறாய் நிலத்து விளிஅரோ வேறு ஆய – நாலடி:27 6/1,2
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும் – குறள்:113 3/1

TOP


பாவி (2)

அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று – குறள்:17 8/1
இன்மை என ஒரு பாவி மறுமையும் – குறள்:105 2/1

TOP


பாவை (7)

பூம் பாவை செய்த குறி – நாலடி:40 9/4
புணர் பாவை அன்னார் பிரிவு இன்னா இன்னா – இன்னா40:14/3
தளர் முலை பாராட்டி என்னுடைய பாவை
வளர் முலைக்கண் ஞெமுக்குவார் – ஐந்70:47/3,4
ஈன்றாய் நீ பாவை இரும் குரவே ஈன்றாள் – திணை150:65/2
மண் மாண் புனை பாவை அற்று – குறள்:41 7/2
தான் செய்த பாவை தனக்கு – பழ:8/4
தேவரேஆயினும் தீங்கு ஓர்ப்பர் பாவை
பட தோன்றும் நல்லாய் நெடு வேல் கெடுத்தான் – பழ:179/2,3

TOP


பாவையும் (1)

பாவையும் பந்தும் பவள வாய் பைம் கிளியும் – ஐந்50:33/1

TOP


பாவையோ (1)

ஒவ்வாத பாவையோ இல் – பழ:226/4

TOP


பாழ் (8)

மனைக்கு பாழ் வாணுதல் இன்மை தான் செல்லும் – நான்மணி:20/1
திசைக்கு பாழ் நட்டோரை இன்மை இருந்த – நான்மணி:20/2
அவைக்கு பாழ் மூத்தோரை இன்மை தனக்கு பாழ் – நான்மணி:20/3
அவைக்கு பாழ் மூத்தோரை இன்மை தனக்கு பாழ்
கற்று அறிவு இல்லா உடம்பு – நான்மணி:20/3,4
யாழ் ஒக்கும் நட்டார் கழறும் சொல் பாழ் ஒக்கும் – நான்மணி:98/3
பாழ் ஊர் பொதியில் புகா பார்க்கும் ஆர் இடை – ஐந்70:31/2
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும் – குறள்:74 5/1
பாழ் மனையும் தேவ குலனும் சுடுகாடும் – ஆசாரக்:57/1

TOP


பாழ்பட்டு (1)

காதல் கவற்றும் மனத்தினால் கண் பாழ்பட்டு
ஏதிலவரை இரவு – நாலடி:31 6/3,4

TOP


பாழ்படுதல் (1)

பருவந்து பாழ்படுதல் இன்று – குறள்:9 3/2

TOP


பாழாக (1)

ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
இரு சுடரும் போந்தன என்றார் – திணை150:71/3,4

TOP


பாழி (2)

பாழி போல் மாயவன் தன் பற்றார் களிற்று எறிந்த – திணை150:97/1
பாழி தோள் வட்டித்தார் காண்பாம் இனிது அல்லால் – பழ:338/3

TOP


பாற்கதியின் (1)

பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து நூல் கதியின் – ஏலாதி:77/2

TOP


பாற்பட்ட (1)

பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர் – பழ:345/1

TOP


பாற்பட்டார் (4)

பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே – இனிய40:6/2
பாற்பட்டார் உண்ணார் பழி பாவம் பாற்பட்டார் – சிறுபஞ்:82/2
பாற்பட்டார் உண்ணார் பழி பாவம் பாற்பட்டார்
ஏற்று அயரா இன்புற்று வாழ்வன ஈடு அழிய – சிறுபஞ்:82/2,3
பாற்பட்டார் கொண்டு ஒழுகும் பண்பு – ஏலாதி:13/4

TOP


பாற்பட்டு (2)

பாற்பட்டு ஒழுக பெறின் – குறள்:12 1/2
பாற்பட்டு வாழ்வர்எனினும் குடிகள் மேல் – பழ:333/1

TOP


பாற்பட (1)

பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து நூல் கதியின் – ஏலாதி:77/2

TOP


பாற்படுத்தான் (3)

பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கம் இனிது – சிறுபஞ்:64/3,4
பண் ஆளும் சொல்லாய் பழி இல் ஊண் பாற்படுத்தான்
மண் ஆளும் மன்னாய் மற்று – ஏலாதி:35/3,4
தண்ணீரே அம்பலம் தான் பாற்படுத்தான் பண் நீர – ஏலாதி:51/2

TOP


பாற்படுப்பான் (1)

பண் கலப்பை பாற்படுப்பான் உழவன் என்பவே – சிறுபஞ்:58/3

TOP


பாற்றினம் (1)

பாற்றினம் சேர படு நிழல் கண்டு அஞ்சி – திணை50:20/2

TOP


பாற்று (1)

தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று – குறள்:2 1/2

TOP


பாறு (1)

பாறு புரவியா பல் களிறு நீள் திமிலா – திணை150:53/1

TOP


பாறை (1)

கடு உணங்கு பாறை கடவு தெவுட்டும் – ஐந்70:39/2

TOP


பானல் (1)

பானல் அம் தண் கழி பாடு அறிந்து தன்னைமார் – திணை150:32/1

TOP


பாஅய் (3)

தாது இணர் கொன்றை எரி வளர்ப்ப பாஅய்
இடிப்பது போலும் எழில் வானம் நோக்கி – ஐந்70:18/2,3
பவள கொழுந்தின் மேல் பொன் தாலி பாஅய்
திகழ கான்றிட்டன தேர்ந்து – திணை150:66/3,4
பேஎய் பிறப்பில் பெரும் பசியும் பாஅய்
விலங்கின் பிறப்பின் வெருவும் புலம் தெரியா – திரி:60/1,2

TOP