நோ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோ 3
நோக்க 2
நோக்கப்பட்டவர் 1
நோக்கப்படும் 1
நோக்கம் 7
நோக்கா 4
நோக்காக்கால் 1
நோக்காத 1
நோக்காது 2
நோக்காமை 2
நோக்கார் 13
நோக்கார்கொல் 1
நோக்காரே 1
நோக்கான் 11
நோக்கி 66
நோக்கிக்கொல்லோ 1
நோக்கிய 2
நோக்கியக்கால் 2
நோக்கியும் 1
நோக்கியே 1
நோக்கின் 8
நோக்கினாய் 2
நோக்கினாள் 1
நோக்கினீர் 1
நோக்கினும் 1
நோக்கு 14
நோக்குங்கால் 2
நோக்குதல் 2
நோக்கும் 8
நோக்குமின் 1
நோக்குள்ளும் 1
நோக்கேன் 1
நோகும் 1
நோதல் 3
நோய் 87
நோய்க்கு 3
நோய்கள் 1
நோயால் 2
நோயின் 1
நோயும் 3
நோயே 1
நோயை 2
நோயோடு 1
நோலா 1
நோலாதது 1
நோலாதவர் 1
நோவ 5
நோவது 8
நோவர் 1
நோவல் 2
நோவற்க 1
நோவார் 1
நோவின் 1
நோவு 1
நோவும் 1
நோற்கிற்பவர் 1
நோற்கிற்பவர்க்கு 1
நோற்பார் 3
நோற்பாரின் 2
நோற்ற 2
நோற்றலின் 1
நோற்றார்க்கு 1
நோற்றான்கொல் 1
நோன் 1
நோன்பியும் 1
நோன்பிற்கு 1
நோன்பு 4
நோன்பும் 1
நோன்மை 3
நோன்றல் 1
நோன்று 1
நோனா 3
நோனாதோன் 2
நோனாள் 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நோ (3)

நோ தக்கது என் உண்டாம் நோக்குங்கால் காதல் – நாலடி:23 8/2
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து – குறள்:16 7/1
நோ தக்க நட்டார் செயின் – குறள்:81 5/2

TOP


நோக்க (2)

நோக்க குழையும் விருந்து – குறள்:9 10/2
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
பசையினள் பைய நகும் – குறள்:110 8/1,2

TOP


நோக்கப்பட்டவர் (1)

மெய்ம்மையே நின்று மிக நோக்கப்பட்டவர்
கைம் மேலே நின்று கறுப்பன செய்து ஒழுகி – பழ:201/1,2

TOP


நோக்கப்படும் (1)

பிறன் போல நோக்கப்படும் – குறள்:105 7/2

TOP


நோக்கம் (7)

படு புலால் காப்பாள் படை நெடும் கண் நோக்கம்
கடிபு ஒல்லா என்னையே காப்பு – திணை150:32/3,4
நின் நோக்கம் கொண்ட மான் தண் குரவ நீழல் காண் – திணை150:70/1
பொன் நோக்கம் கொண்ட பூம் கோங்கம் காண் பொன் நோக்கம் – திணை150:70/2
பொன் நோக்கம் கொண்ட பூம் கோங்கம் காண் பொன் நோக்கம்
கொண்ட சுணங்கு அணி மென் முலை கொம்பு அன்னாய் – திணை150:70/2,3
நோக்கம் இ மூன்றும் உடைத்து – குறள்:109 5/2
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின் – குறள்:110 2/1
விழும் இழை நல்லார் வெருள் பிணை போல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும் தொழுநையுள் – பழ:12/1,2

TOP


நோக்கா (4)

பிணி அன்னர் பின் நோக்கா பெண்டிர் உலகிற்கு – நான்மணி:31/1
பிறன் மனை பின் நோக்கா பீடு இனிது ஆற்ற – இனிய40:15/1
தன் துணையோடு ஆடும் அலவனையும் தான் நோக்கா
இன் துணையோடு ஆட இயையுமோ இன் துணையோடு – திணை150:40/1,2
முன் இன்று பின் நோக்கா சொல் – குறள்:19 4/2

TOP


நோக்காக்கால் (1)

யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும் – குறள்:110 4/1,2

TOP


நோக்காத (1)

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு – குறள்:15 8/1

TOP


நோக்காது (2)

அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய – குறள்:101 9/1
பயன் நோக்காது ஆற்றவும் பாத்து அறிவு ஒன்று இன்றி – பழ:40/1

TOP


நோக்காமை (2)

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண் – குறள்:110 5/1
நச்சாமை நோக்காமை நன்று – ஏலாதி:12/4

TOP


நோக்கார் (13)

எச்சிலார் நோக்கார் புலை திங்கள் நாய் நாயிறு – ஆசாரக்:6/1
நீருள் நிழல் புரிந்து நோக்கார் நிலம் இரா – ஆசாரக்:13/1
நீர் தொடார் நோக்கார் புலை – ஆசாரக்:13/4
பகல் தெற்கு நோக்கார் இரா வடக்கு நோக்கார் – ஆசாரக்:33/1
பகல் தெற்கு நோக்கார் இரா வடக்கு நோக்கார்
பகல் பெய்யார் தீயினுள் நீர் – ஆசாரக்:33/1,2
அறன் அறிந்தார் இ ஐந்தும் நோக்கார் திறன் இலர் என்று – ஆசாரக்:37/2
தீண்டா நாள் மு நாளும் நோக்கார் நீர் ஆடிய பின் – ஆசாரக்:42/1
தம் ஒளி வேண்டுவார் நோக்கார் பகல் கிழவோன் – ஆசாரக்:51/2
எடுத்து உரையார் பெண்டிர் மேல் நோக்கார் செவி சொல்லும் – ஆசாரக்:75/2
தம் மேனி நோக்கார் தலை உளரார் கைநொடியார் – ஆசாரக்:77/1
எ மேனிஆயினும் நோக்கார் தலைமகன்தம் – ஆசாரக்:77/2
நடுக்கு அற்ற காட்சியார் நோக்கார் எடுத்து இசையார் – ஆசாரக்:99/2
தம் நடை நோக்கார் தமர் வந்தவாறு அறியார் – பழ:288/1

TOP


நோக்கார்கொல் (1)

நோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை யாக்கைக்கு ஓர் – நாலடி:5 1/2

TOP


நோக்காரே (1)

இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வவ் – ஆசாரக்:81/2

TOP


நோக்கான் (11)

நோக்கான் தேர் ஊர்ந்தது கண்டு – ஐந்50:28/4
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் – குறள்:53 8/1
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் – குறள்:87 5/1
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பு இலன் பற்றார்க்கு இனிது – குறள்:87 5/1,2
பிறிதி யாதும் நோக்கான் உரையான் தொழுது கொண்டு – ஆசாரக்:20/3
குணம் நோக்கான் கூழ் நோக்கான் கோலமும் நோக்கான் – ஏலாதி:23/1
குணம் நோக்கான் கூழ் நோக்கான் கோலமும் நோக்கான் – ஏலாதி:23/1
குணம் நோக்கான் கூழ் நோக்கான் கோலமும் நோக்கான்
மணம் நோக்கான் மங்கலமும் நோக்கான் கணம் நோக்கான் – ஏலாதி:23/1,2
மணம் நோக்கான் மங்கலமும் நோக்கான் கணம் நோக்கான் – ஏலாதி:23/2
மணம் நோக்கான் மங்கலமும் நோக்கான் கணம் நோக்கான் – ஏலாதி:23/2
மணம் நோக்கான் மங்கலமும் நோக்கான் கணம் நோக்கான்
கால் காப்பு வேண்டான் பெரியார் நூல் காலற்கு – ஏலாதி:23/2,3

TOP


நோக்கி (66)

அகத்து ஆரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கி
புக தாம் பெறாஅர் புறங்கடை பற்றி – நாலடி:4 1/1,2
இடை தெரிந்து இன்னாமை நோக்கி மனை ஆறு – நாலடி:6 4/3
இசைதொறும் மற்று அதன் இன்னாமை நோக்கி
பசைதல் பரியாதாம் மேல் – நாலடி:6 10/3,4
மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு – நாலடி:10 5/1
அரியரா நோக்கி அறன் அறியும் சான்றோர் – நாலடி:17 5/3
பகைவர் பணிவு இடம் நோக்கி தகவு உடையார் – நாலடி:25 1/1
தன் போல் ஒருவன் முகம் நோக்கி தானும் ஓர் – நாலடி:26 10/3
நோக்கி இருந்தேனும் யான் – நாலடி:39 9/4
செல் சுடர் நோக்கி சிதர் அரி கண் கொண்ட நீர் – நாலடி:40 4/1
கோல் நோக்கி வாழும் குடி எல்லாம் தாய் முலை – நான்மணி:26/1
பால் நோக்கி வாழும் குழவிகள் வான – நான்மணி:26/2
துளி நோக்கி வாழும் உலகம் உலகின் – நான்மணி:26/3
விளி நோக்கி இன்புறூஉம் கூற்று – நான்மணி:26/4
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் – இனிய40:2/3
தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி
வடு இடை போழ்ந்து அகன்ற கண்ணாய் வருந்தல் – கார்40:6/1,2
தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி தான் நவின்ற – ஐந்50:10/2
கொண்கன் பிரிந்த குளிர் பூம் பொழில் நோக்கி
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளி முகம் – ஐந்50:44/1,2
இடிப்பது போலும் எழில் வானம் நோக்கி
துடிப்பது போலும் உயிர் – ஐந்70:18/3,4
போது உறழ் தாமரை கண் ஊரனை நேர் நோக்கி
வாய் மூடி இட்டும் இருப்பவோ மாணிழாய் – ஐந்70:51/2,3
காதல் நீர் வாராமை கண் நோக்கி ஓத நீர் – திணை150:37/2
ஏழை மான் நோக்கி இடம் – திணை150:44/4
காண் அகன்ற வழி நோக்கி பொன் போர்த்து – திணை150:74/3
மேல் நோக்கி வெம் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி – திணை150:95/1
மேல் நோக்கி வெம் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி
கான் ஓக்கம் கொண்டு அழகா காண் மடவாய் மான்நோக்கி – திணை150:95/1,2
நினை நோக்கி கூறினும் நீ மொழியல் என்று – திணை150:144/3
மனை நோக்கி மாண் விடும் – திணை150:144/4
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம் – குறள்:10 3/1
அறன் நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன் நோக்கி – குறள்:19 9/1
அறன் நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன் நோக்கி
புன் சொல் உரைப்பான் பொறை – குறள்:19 9/1,2
அது நோக்கி வாழ்வார் பலர் – குறள்:53 8/2
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன் – குறள்:55 2/1
கோல் நோக்கி வாழும் குடி – குறள்:55 2/2
செல்லும் வாய் நோக்கி செயல் – குறள்:68 3/2
கூறாமை நோக்கி குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும் – குறள்:71 1/1
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி – குறள்:71 8/1
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி
உற்றது உணர்வார் பெறின் – குறள்:71 8/1,2
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள் – குறள்:110 3/1
தான் நோக்கி மெல்ல நகும் – குறள்:110 4/2
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும் – குறள்:118 3/1
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி – குறள்:128 9/1
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி – குறள்:128 9/1
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி
அஃது ஆண்டு அவள் செய்தது – குறள்:128 9/1,2
நுண் மொழி நோக்கி பொருள் கொளலும் நூற்கு ஏலா – திரி:32/1
பழமையை நோக்கி அளித்தல் கிழமையால் – திரி:58/1
குணம் நோக்கி கொண்டவர் கோள் விட்டுழியும் – ஆசாரக்:55/3
கண்ணுளே நோக்கி உரை – ஆசாரக்:97/3
தக்குழி நோக்கி அறம் செய்க அஃது அன்றோ – பழ:37/3
இசை நோக்கி ஈகின்றார் ஈகை வயமா போல் – பழ:40/2
அம் தண் அருவி மலை நாட சேண் நோக்கி
நந்து நீர் கொண்டதே போன்று – பழ:69/3,4
எனக்கு தகவு அன்றால் என்பதே நோக்கி
தனக்கு கரி ஆவான் தானாய் தவற்றை – பழ:102/1,2
அற்றாக நோக்கி அறத்திற்கு அருள் உடைமை – பழ:141/1
அறம் செய்பவற்கும் அறவுழி நோக்கி
திறம் தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்று ஆம் – பழ:159/1,2
உலப்பு இல் உலகத்து உறுதியே நோக்கி
குலைத்து அடக்கி நல் அறம் கொள்ளார் கொளுத்தல் – பழ:212/1,2
சொல்லாமை நோக்கி குறிப்பு அறியும் பண்பின் தம் – பழ:255/1
நோக்கி இருந்தார் இமைக்கும் அளவின்கண் – பழ:259/1
சிறப்பு உடை மன்னரை செவ்வியான் நோக்கி
திறத்தின் உரைப்பார்க்கு ஒன்று ஆகாதது இல்லை – பழ:295/1,2
நோக்கி அறிகல்லா தம் உறுப்பு கண்ணாடி – பழ:301/1
நோக்கி அறிப அதுவே போல் நோக்கி – பழ:301/2
நோக்கி அறிப அதுவே போல் நோக்கி
முகன் அறிவார் முன்னம் அறிப அதுவே – பழ:301/2,3
நேர்த்து உரைத்து எள்ளார் நிலை நோக்கி சீர்த்த – பழ:383/2
நோக்கும் வாய் நோக்கி நுழைவானேல் மற்று அவனை – ஏலாதி:8/3
நுணங்கிய நூல் நோக்கி நுழையா இணங்கிய – ஏலாதி:59/2
பால் நோக்கி வாழ்வான் பழி இல்லா மன்னனாய் – ஏலாதி:59/3
நூல் நோக்கி வாழ்வான் நுனித்து – ஏலாதி:59/4
உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி
உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி உயர்ந்தான் – ஏலாதி:64/1,2
ஏந்தல் மருப்பிடை கை வைத்து இனன் நோக்கி
பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நல் நாடன் – கைந்:9/2,3

TOP


நோக்கிக்கொல்லோ (1)

பழமை பயன் நோக்கிக்கொல்லோ கிழமை – திணை150:134/2

TOP


நோக்கிய (2)

கன்னி இள ஞாழல் பூம் பொழில் நோக்கிய
கண்ணின் வருந்தும் என் நெஞ்சு – திணை50:49/3,4
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா – குறள்:118 2/1

TOP


நோக்கியக்கால் (2)

கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால்
விண்டவரோடு ஒன்றி புறன் உரைப்பின் அஃது அன்றோ – பழ:133/2,3
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால்
போர் ஏற்றும் என்பார் பொது ஆக்கல் வேண்டுமோ – பழ:231/1,2

TOP


நோக்கியும் (1)

மாழை மான் நோக்கியும் ஆற்றாள் இர வரின் – திணை50:7/3

TOP


நோக்கியே (1)

கற்றானை நோக்கியே கைவிடுக கற்றான் – பழ:38/2

TOP


நோக்கின் (8)

தாம் ஆர்ந்த போதே தகர் கோடு ஆம் மான் நோக்கின்
தம் நெறி பெண்டிர் தட முலை சேராரே – நாலடி:38 8/2,3
குழைக்கு அமர்ந்த நோக்கின் குறிப்பு – திணை150:68/4
நீர் நின்ற நோக்கின் நெடும் பணை மென் தோளாட்கு – திணை150:115/3
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர் – குறள்:53 8/1,2
மடம் பட்ட மான் நோக்கின் மா மயில் அன்னாய் – பழ:57/3
மா புரை நோக்கின் மயில் அன்னாய் பூசையை – பழ:128/3
நூல் பட்டு ஆர் பூங்கோதாய் நோக்கின் இவை ஆறும் – ஏலாதி:13/3
மாழை மான் நோக்கின் மடமொழி நூழை – கைந்:59/2

TOP


நோக்கினாய் (2)

மான் சேர்ந்த நோக்கினாய் ஆங்க அணங்கு ஆகும் – பழ:8/3
மா அலந்த நோக்கினாய் ஊண் ஈய்ந்தார் மா கடல் சூழ் – ஏலாதி:56/3

TOP


நோக்கினாள் (1)

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள் – குறள்:110 3/1

TOP


நோக்கினீர் (1)

யார் உள்ளி நோக்கினீர் என்று – குறள்:132 10/2

TOP


நோக்கினும் (1)

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர் – குறள்:132 10/1

TOP


நோக்கு (14)

ஏதில் மனையாளை நோக்கு – நாலடி:9 6/4
செல்வர் சிறு நோக்கு நோக்குங்கால் கொல்லன் – நாலடி:30 8/2
உழலை முருக்கிய செம் நோக்கு எருமை – ஐந்70:46/1
நொந்து இனைய வல்லளோ நோக்கு – திணை150:24/4
மகர குழை மறித்த நோக்கு – திணை150:77/4
பேணி கொள்வேம் என்னும் நோக்கு – குறள்:98 6/2
ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு – குறள்:109 2/1
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு – குறள்:110 1/1
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள்:110 1/1,2
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள்:110 1/2
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல் – குறள்:110 9/1
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் – குறள்:110 10/1
நுண் விழைந்த நூலவர் நோக்கு – திரி:29/4
நோக்கு அற்றவரை பழித்தல் என் என்னானும் – பழ:250/3

TOP


நோக்குங்கால் (2)

நோ தக்கது என் உண்டாம் நோக்குங்கால் காதல் – நாலடி:23 8/2
செல்வர் சிறு நோக்கு நோக்குங்கால் கொல்லன் – நாலடி:30 8/2

TOP


நோக்குதல் (2)

ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு – குறள்:109 2/1
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
காதலார்கண்ணே உள – குறள்:110 9/1,2

TOP


நோக்கும் (8)

பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா – இன்னா40:38/1
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு – குறள்:109 9/1
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் – குறள்:110 4/1
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் – குறள்:110 4/1
செறாஅ சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – குறள்:110 7/1,2
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து – ஆசாரக்:20/1
நோக்கும் வாய் நோக்கி நுழைவானேல் மற்று அவனை – ஏலாதி:8/3
நோக்கும் வாய் விண்ணின் உயர்வு – ஏலாதி:40/4

TOP


நோக்குமின் (1)

நோக்குமின் என்று இகழ்ந்து நொவ்வியார்கை விடுதல் – பழ:315/2

TOP


நோக்குள்ளும் (1)

மோந்து அறிப எல்லா மலர்களும் நோக்குள்ளும்
கண்ணினான் காண்ப அணியவற்றை தொக்கு இருந்து – நான்மணி:75/2,3

TOP


நோக்கேன் (1)

துனி புலவி ஊடலின் நோக்கேன் தொடர்ந்த – திணை150:153/1

TOP


நோகும் (1)

காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
மாணிழை கண் ஒவ்வேம் என்று – குறள்:112 4/1,2

TOP


நோதல் (3)

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் – குறள்:35 1/1,2
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும் – குறள்:131 8/1
நோதல் பிரிவில் கவறலே ஓதலின் – ஏலாதி:68/2

TOP


நோய் (87)

நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி – நாலடி:6 2/1
உரவோர்கண் காம நோய் ஓஒ கொடிதே – நாலடி:9 8/2
பின்னரும் பீடு அழிக்கும் நோய் உள கொன்னே – நாலடி:10 2/2
எரிப்ப சுட்டு எவ்வ நோய் ஆக்கும் பரப்ப – நாலடி:13 4/2
பிரிய பெரும் படர் நோய் செய்யும் பெரிய – நாலடி:17 8/2
பிரிய பிரியுமாம் நோய் – நாலடி:25 7/4
உரையாரோ தாம் உற்ற நோய் – நாலடி:30 2/4
இனியார் தம் நெஞ்சத்து நோய் உரைப்ப அ நோய் – நாலடி:37 9/1
இனியார் தம் நெஞ்சத்து நோய் உரைப்ப அ நோய்
தணியாத உள்ளம் உடையார் மணி வரன்றி – நாலடி:37 9/1,2
பல்லினான் நோய் செய்யும் பாம்பு எலாம் கொல் ஏறு – நான்மணி:12/1
கோட்டான் நோய் செய்யும் குறித்தாரை ஊடி – நான்மணி:12/2
முகத்தான் நோய் செய்வர் மகளிர் முனிவர் – நான்மணி:12/3
தவத்தான் தருக்குவர் நோய் – நான்மணி:12/4
நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி – கார்40:40/2
விழைதகு மார்பம் உறும் நோய் விழையின் – ஐந்50:25/2
இணைத்தான் எமக்கும் ஓர் நோய் – திணை50:32/4
உடலும் உறு நோய் உரைத்து – திணை50:45/4
உரு அழி உள் நோய் கெட – திணை50:46/4
என் உள் உறு நோய் பெரிது – திணை150:67/4
அன்று ஒழிய நோய் மொழி சார்வு ஆகாது உரும் உடை வான் – திணை150:108/3
ஒன்று ஒழிய நோய் செய்தவாறு – திணை150:108/4
மாலும் மாறா நோய் மருந்து – திணை150:142/4
தீ பால தான் பிறர்கண் செய்யற்க நோய் பால – குறள்:21 6/1
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை – குறள்:27 1/1
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றாக்கடை – குறள்:32 5/1,2
தம் நோய் போல் போற்றாக்கடை – குறள்:32 5/2
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார் – குறள்:32 10/1
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார் – குறள்:32 10/1
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார் – குறள்:32 10/1
நோய் இன்மை வேண்டுபவர் – குறள்:32 10/2
சார்தரா சார்தரும் நோய் – குறள்:36 9/2
நாமம் கெட கெடும் நோய் – குறள்:36 10/2
அதிர வருவதோர் நோய் – குறள்:43 9/2
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும் – குறள்:45 2/1
போஒம் அளவும் ஓர் நோய் – குறள்:85 8/2
பண்பு இன்மை பாரிக்கும் நோய் – குறள்:86 1/2
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா – குறள்:86 3/1
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் – குறள்:95 1/1
கழி பேர் இரையான்கண் நோய் – குறள்:95 6/2
நோய் அளவு இன்றி படும் – குறள்:95 7/2
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – குறள்:95 8/1
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – குறள்:95 8/1
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள்:110 1/2
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள்:110 1/2
நீர் ஆக நீளும் இ நோய் – குறள்:115 7/2
தொடின் சுடின் அல்லது காம நோய் போல – குறள்:116 9/1
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி – குறள்:116 10/1
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு – குறள்:117 2/1
கண் தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது – குறள்:118 1/1,2
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து – குறள்:118 4/2
காம நோய் செய்த என் கண் – குறள்:118 5/2
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண் – குறள்:118 6/1
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை – குறள்:120 10/1
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத – குறள்:123 6/1
மாலை மலரும் இ நோய் – குறள்:123 7/2
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து – குறள்:125 1/2
பைதல் நோய் செய்தார்கண் இல் – குறள்:125 3/2
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய்
உற்றார் அறிவது ஒன்று அன்று – குறள்:126 5/1,2
பைதல் நோய் எல்லாம் கெட – குறள்:127 6/2
காம நோய் சொல்லி இரவு – குறள்:128 10/2
அல்லல் நோய் காண்கம் சிறிது – குறள்:131 1/2
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை – குறள்:131 3/1
நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய் – திரி:79/4
உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும் – திரி:105/1
அலகு இல் அக நோய் அகற்றும் நிலை கொள் – திரி:105/2
பரிவோடு நோய் அவிய பன்னி ஆராய்ந்து – திரி:106/3
நில கிழமை மீக்கூற்றம் கல்வி நோய் இன்மை – ஆசாரக்:2/2
நோய் இன்மை வேண்டுபவர் – ஆசாரக்:57/4
தாஅம் தர வாரா நோய் – பழ:7/4
மறையார் மருத்துவர்க்கு நோய் – பழ:88/4
நோய் இன்று எனினும் அடுப்பின் கடை முடங்கும் – பழ:117/3
தனக்கு நோய் செய்துவிடல் – பழ:189/4
நோய் காண் பொழுதின் அறம் செய்வார் காணாமை – பழ:261/3
நிற்பு அனைத்தும் நெஞ்சிற்கு ஓர் நோய் – சிறுபஞ்:27/4
உயிர் நோய் செய்யாமை உறு நோய் மறத்தல் – சிறுபஞ்:30/1
உயிர் நோய் செய்யாமை உறு நோய் மறத்தல் – சிறுபஞ்:30/1
செயிர் நோய் பிறர்கண் செய்யாமை செயிர் நோய் – சிறுபஞ்:30/2
செயிர் நோய் பிறர்கண் செய்யாமை செயிர் நோய்
விழைவு வெகுளி இவை விடுவான்ஆயின் – சிறுபஞ்:30/2,3
கள்ள நோய் காணும் அயல் ஐந்தும் ஆகுமேல் – சிறுபஞ்:60/3
உள்ளம் நோய் வேண்டா உயிர்க்கு – சிறுபஞ்:60/4
பல்லவர் நோய் நீக்கும் பாங்கினால் கல்லா – சிறுபஞ்:106/2
உடன்படான் கொல்லான் உடன்றார் நோய் தீர்ந்து – ஏலாதி:8/1
ஊண் ஈய்த்து உறு நோய் களைந்தார் பெரும் செல்வம் – ஏலாதி:55/3
கரும் சிரங்கு வெண் தொழு நோய் கல் வளி காயும் – ஏலாதி:57/1
சுருங்கும் இவள் உற்ற நோய் – கைந்:8/4
பருவரல் பைதல் நோய் கொண்டு – கைந்:25/4
களையாரோ நீ உற்ற நோய் – கைந்:33/3

TOP


நோய்க்கு (3)

செம் தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு
நொந்து இனைய வல்லளோ நோக்கு – திணை150:24/3,4
ஆடினாய் நீஆயின் அ நோய்க்கு என் நொந்து என்று – திணை150:40/3
தன் நோய்க்கு தானே மருந்து – குறள்:111 2/2

TOP


நோய்கள் (1)

வரு நோய்கள் முன் நாளில் தீர்த்தாரே இ நாள் – சிறுபஞ்:74/3

TOP


நோயால் (2)

வலி அழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால்
நலிபு அழிந்தார் நாட்டு அறைபோய் நைந்தார் மெலிவு ஒழிய – சிறுபஞ்:71/1,2
நோயால் நுணுகியவாறு – கைந்:49/4

TOP


நோயின் (1)

விளியா அரு நோயின் நன்றால் அளிய – நாலடி:22 9/2

TOP


நோயும் (3)

நோயும் பசலையும் தந்து – குறள்:119 3/2
அறிவு அழுங்க தின்னும் பசி நோயும் மாந்தர் – திரி:95/1
ஒரு நோயும் இன்றி வாழ்வார் – சிறுபஞ்:74/4

TOP


நோயே (1)

நோயே உரன் உடையார்க்கு – திரி:44/4

TOP


நோயை (2)

மறைப்பேன்மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு – குறள்:117 1/1
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு – குறள்:117 2/1

TOP


நோயோடு (1)

ஒன்றிய நோயோடு இடும்பை பல கூர – கார்40:35/2

TOP


நோலா (1)

நோலா உடம்பிற்கு அறிவு – நாலடி:26 8/4

TOP


நோலாதது (1)

திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று – முது:5 9/1

TOP


நோலாதவர் (1)

சிலர் பலர் நோலாதவர் – குறள்:27 10/2

TOP


நோவ (5)

காப்பு உய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார் தம் கை நோவ
யாப்பு உய்ந்தார் உய்ந்த பல – நாலடி:28 7/3,4
நோவ உரைத்தாரை தாம் பொறுக்கல் ஆற்றாதார் – பழ:45/1
உரிஞ்சி நடப்பாரை உள் அடி நோவ
நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை செருந்தி – பழ:170/1,2
நோவ செயின் நோன்மை இல் – பழ:335/4
பொய்யாமை நன்று பொருள் நன்று உயிர் நோவ
கொல்லாமை நன்று கொழிக்குங்கால் பல்லார் முன் – சிறுபஞ்:37/1,2

TOP


நோவது (8)

ஏதில் மகளிரை நோவது எவன்கொலோ – ஐந்70:44/3
நோவது என் மார்பு அறியும் இன்று – ஐந்70:51/4
இகழ்வாரை நோவது எவன் – குறள்:24 7/2
காதல் அவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி என் நெஞ்சு – குறள்:125 2/1,2
ஊர் எல்லாம் நோவது உடைத்து – திரி:11/4
இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என் – பழ:94/2
ஆற்றாதார் வேந்தனை நோவது சேற்றுள் – பழ:155/2
மேவலரை நோவது என் மின் நேர் மருங்குலாய் – பழ:191/3

TOP


நோவர் (1)

நனவினான் நல்காரை நோவர் கனவினான் – குறள்:122 9/1

TOP


நோவல் (2)

அம் சாயற்கே நோவல் யான் – திணை150:19/4
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை – குறள்:124 6/1

TOP


நோவற்க (1)

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க – குறள்:88 7/1

TOP


நோவார் (1)

புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை – குறள்:24 7/1

TOP


நோவின் (1)

தன்னையா தான் நோவின் அல்லது துன்னி – நாலடி:8 6/2

TOP


நோவு (1)

நோவு அஞ்சாதாரோடு நட்பும் விருந்து அஞ்சும் – திரி:63/1

TOP


நோவும் (1)

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகன் கண்டு தாய் மறந்த ஆஅங்கு – நாலடி:21 1/1,2

TOP


நோற்கிற்பவர் (1)

இன்னா சொல் நோற்கிற்பவர் – குறள்:16 9/2

TOP


நோற்கிற்பவர்க்கு (1)

சுடச்சுட நோற்கிற்பவர்க்கு – குறள்:27 7/2

TOP


நோற்பார் (3)

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும் – குறள்:16 10/1
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் – குறள்:27 10/1,2
சிறை கிடந்தார் செத்தார்க்கு நோற்பார் பல நாள் – சிறுபஞ்:69/1

TOP


நோற்பாரின் (2)

நோற்பாரின் நோன்மை உடைத்து – குறள்:5 8/2
இன்னா சொல் நோற்பாரின் பின் – குறள்:16 10/2

TOP


நோற்ற (2)

அறத்தொடு தாம் நோற்ற நோன்பு வியவார் – ஆசாரக்:88/2
நோற்ற பெருமை உடையாரும் கூற்றம் – பழ:126/3

TOP


நோற்றலின் (1)

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு – குறள்:27 9/1,2

TOP


நோற்றார்க்கு (1)

தேற்றார் சிறியர் எனல் வேண்டா நோற்றார்க்கு
சோற்று உள்ளும் வீழும் கறி – பழ:150/3,4

TOP


நோற்றான்கொல் (1)

என் நோற்றான்கொல் எனும் சொல் – குறள்:7 10/2

TOP


நோன் (1)

வரி முகம் புண்படுக்கும் வள் உகிர் நோன் தாள் – நாலடி:20 8/3

TOP


நோன்பியும் (1)

வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும்
இல்லது காமுற்று இருப்பானும் கல்வி – திரி:28/1,2

TOP


நோன்பிற்கு (1)

இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை – குறள்:35 4/1

TOP


நோன்பு (4)

நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:17/3
வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே – இனிய40:24/1
அறத்தொடு தாம் நோற்ற நோன்பு வியவார் – ஆசாரக்:88/2
திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று – முது:5 9/1

TOP


நோன்பும் (1)

நாண் இலான் சால்பும் நடை இலான் நல் நோன்பும்
ஊண் இலான் செய்யும் உதாரமும் ஏண் இலான் – சிறுபஞ்:10/1,2

TOP


நோன்மை (3)

நோற்பாரின் நோன்மை உடைத்து – குறள்:5 8/2
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை – குறள்:99 4/1
நோவ செயின் நோன்மை இல் – பழ:335/4

TOP


நோன்றல் (1)

உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை – குறள்:27 1/1

TOP


நோன்று (1)

நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:17/3

TOP


நோனா (3)

நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் – குறள்:114 2/1
நோனா உடம்பின் அகத்து – குறள்:117 3/2
வெவ் உரை நோனா வெகுள்வும் இவை மூன்றும் – திரி:95/3

TOP


நோனாதோன் (2)

சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய் – முது:7 7/1
பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய் – முது:7 8/1

TOP


நோனாள் (1)

பல் இரும் கூந்தல் பனி நோனாள் கார் வானம் – கார்40:24/3

TOP