ஊ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊஉங்கு 2
ஊக்க 1
ஊக்கத்தின் 1
ஊக்கம் 12
ஊக்கல் 6
ஊக்கா 1
ஊக்காது 1
ஊக்கார் 1
ஊக்கி 6
ஊக்கின் 2
ஊக்கும் 1
ஊக்குமாம் 1
ஊங்கி 1
ஊங்கு 3
ஊங்கும் 1
ஊச்சும் 1
ஊசல் 1
ஊட்கு 1
ஊட்ட 3
ஊட்டா 1
ஊட்டாத 1
ஊட்டார் 2
ஊட்டி 3
ஊட்டியக்கண்ணும் 1
ஊட்டினமை 1
ஊட்டினும் 1
ஊட்டும் 3
ஊட்டுமாறு 1
ஊடல் 7
ஊடல்கண் 1
ஊடலின் 4
ஊடாமை 1
ஊடார் 1
ஊடி 9
ஊடியவரை 1
ஊடிவிடும் 1
ஊடினாள் 1
ஊடு 3
ஊடுகமன்னோ 1
ஊடுதல் 2
ஊடும் 2
ஊண் 44
ஊணின்கண் 1
ஊணே 2
ஊணொடு 2
ஊதார் 1
ஊதி 2
ஊதிய 1
ஊதியம் 9
ஊதியமும் 1
ஊது 1
ஊதும் 7
ஊதை 2
ஊமன் 1
ஊர் 48
ஊர்க்கு 2
ஊர்தல் 2
ஊர்ந்த 3
ஊர்ந்தது 1
ஊர்ந்தான் 2
ஊர்ந்தானிடை 1
ஊர்ந்தானை 1
ஊர்ந்து 6
ஊர்ந்துவிடல் 1
ஊர்வது 2
ஊர்வர் 1
ஊர்வு 1
ஊர 22
ஊரவர் 2
ஊரற்கு 5
ஊரன் 39
ஊரன்தன் 3
ஊரனை 8
ஊரா 1
ஊராண் 1
ஊராண்மை 4
ஊரார் 1
ஊரார்க்கு 1
ஊரில் 2
ஊருணி 1
ஊரும் 10
ஊருமாறு 1
ஊருள் 3
ஊழ் 3
ஊழ்த்த 1
ஊழ்த்தும் 1
ஊழாயினாரை 1
ஊழி 3
ஊழியும் 1
ஊழின் 1
ஊழினால் 1
ஊழே 1
ஊழையும் 1
ஊற்றங்கோல் 1
ஊற்றம் 3
ஊற்றாய் 1
ஊற்று 6
ஊற்றுக்கோல் 1
ஊறல் 2
ஊறி 1
ஊறிய 2
ஊறு 7
ஊறுபாடு 2
ஊறும் 4
ஊன் 20
ஊன்ற 2
ஊன்றல் 1
ஊன்றா 1
ஊன்றி 6
ஊன்றிய 2
ஊன்று 1
ஊன்றும் 4
ஊன 1
ஊனம் 4
ஊனமே 1
ஊனை 6

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஊஉங்கு (2)

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு – குறள்:4 1/1,2
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை – குறள்:4 2/1

TOP


ஊக்க (1)

முயங்கிய கைகளை ஊக்க பசந்தது – குறள்:124 8/1

TOP


ஊக்கத்தின் (1)

உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – குறள்:48 3/1

TOP


ஊக்கம் (12)

ஊக்கம் அழிப்பதூஉம் மெய் ஆகும் ஆக்கம் – நாலடி:13 9/2
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே – இனிய40:22/2
உட்கு இல்வழி வாழா ஊக்கம் மிக இனிதே – இனிய40:26/2
உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே – இனிய40:29/2
ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே – இனிய40:33/1
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும் – குறள்:39 2/1
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர் – குறள்:49 6/1
ஊக்கம் அழிந்து விடும் – குறள்:50 8/2
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார் – குறள்:60 1/1
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார் – குறள்:60 3/1,2
ஊக்கம் உடையான் உழை – குறள்:60 4/2
ஊக்கம் அழிப்பது அரண் – குறள்:75 4/2

TOP


ஊக்கல் (6)

தாம் செய்வது அல்லால் தவற்றினால் தீங்கு ஊக்கல்
வான் தோய் குடி பிறந்தார்க்கு இல் – நாலடி:7 9/3,4
ஒன்று ஊக்கல் பெண்டிர் தொழில் நலம் என்றும் – நான்மணி:84/1
நன்று ஊக்கல் அந்தணர் உள்ளம் பிறன் ஆளும் – நான்மணி:84/2
நாடு ஊக்கல் மன்னர் தொழில் நலம் கேடு ஊக்கல் – நான்மணி:84/3
நாடு ஊக்கல் மன்னர் தொழில் நலம் கேடு ஊக்கல்
கேளிர் ஒரீஇவிடல் – நான்மணி:84/3,4
உள்ளத்து கொண்டு நேர்ந்து ஊக்கல் குறுநரிக்கு – பழ:80/3

TOP


ஊக்கா (1)

தெற்றெனவு இன்றி தெளிந்தாரை தீங்கு ஊக்கா
பத்திமையின் பாங்கு இனியது இல் – இனிய40:32/3,4

TOP


ஊக்காது (1)

படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன் – குறள்:26 3/1

TOP


ஊக்கார் (1)

ஊக்கார் அறிவுடையார் – குறள்:47 3/2

TOP


ஊக்கி (6)

ஊக்கி தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய – நாலடி:6 7/1
ஊக்கி அதன்கண் முயலாதான் நூக்கி – நாலடி:33 6/2
ஊக்கி எழுந்தும் எறிகல்லா ஒண் புருவம் – நாலடி:40 5/3
ஊக்கி எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சா – கள40:16/2
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர் – குறள்:48 3/1,2
ஊக்கி உழந்து ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை – பழ:315/1

TOP


ஊக்கின் (2)

நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் – குறள்:48 6/1,2
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு – குறள்:86 8/2

TOP


ஊக்கும் (1)

மிகல் ஊக்கும் தன்மையவர் – குறள்:86 5/2

TOP


ஊக்குமாம் (1)

மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு – குறள்:86 8/2

TOP


ஊங்கி (1)

அதனின் ஊங்கி இல்லை உயிர்க்கு – குறள்:13 2/2

TOP


ஊங்கு (3)

மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – குறள்:4 2/2
பொருளும் அதனின் ஊங்கு இல் – குறள்:65 4/2
உண்ணலின் ஊங்கு இனியது இல் – குறள்:107 5/2

TOP


ஊங்கும் (1)

நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் – குறள்:46 10/1

TOP


ஊச்சும் (1)

கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர் காதலர் – ஐந்50:38/3

TOP


ஊசல் (1)

இரந்தார் பெறுவது ஒன்று இல்லை குரங்கு ஊசல்
வள்ளியின் ஆடும் மலை நாட அஃது அன்றோ – பழ:140/2,3

TOP


ஊட்கு (1)

இரந்து ஊட்கு பன்மையோ தீது – பழ:240/4

TOP


ஊட்ட (3)

அறு சுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட
மறு சிகை நீக்கி உண்டாரும் வறிஞராய் – நாலடி:1 1/1,2
கன்று ஊட்ட நந்தும் கறவை கலம் பரப்பி – நான்மணி:60/3
நன்று ஊட்ட நந்தும் விருந்து – நான்மணி:60/4

TOP


ஊட்டா (1)

ஊட்டா கழியும் எனின் – குறள்:38 8/2

TOP


ஊட்டாத (1)

பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும் ஊர்க்கு – திரி:104/2

TOP


ஊட்டார் (2)

கண் எச்சில் கண் ஊட்டார் காலொடு கால் தேயார் – ஆசாரக்:41/1
முளி புல்லும் கானமும் சேரார் தீக்கு ஊட்டார்
துளி விழ கால் பரப்பி ஓடார் தெளிவு இலா – ஆசாரக்:56/1,2

TOP


ஊட்டி (3)

உறு புனல் தந்து உலகு ஊட்டி அறும் இடத்தும் – நாலடி:19 5/1
பொன் கலத்து ஊட்டி புறந்தரினும் நாய் பிறர் – நாலடி:35 5/1
புகழ் மிகு சாந்து எறிந்து புல் எரி ஊட்டி
புகை கொடுக்க பெற்ற புலவோர் துகள் பொழியும் – திணை50:1/1,2

TOP


ஊட்டியக்கண்ணும் (1)

ஊட்டியக்கண்ணும் உறுதி சேர்ந்து இ உடம்பு – நாலடி:4 10/3

TOP


ஊட்டினமை (1)

ஊட்டினமை கண்டு உண்க ஊண் – ஆசாரக்:39/3

TOP


ஊட்டினும் (1)

பஞ்சி கொண்டு ஊட்டினும் பையென பையென என்று – நாலடி:40 6/3

TOP


ஊட்டும் (3)

தோல் பை உள் நின்று தொழில் அற செய்து ஊட்டும்
கூத்தன் புறப்பட்டக்கால் – நாலடி:3 6/3,4
தீ இல்லை ஊட்டும் திறம் – பழ:45/4
மரை ஆ கன்று ஊட்டும் மலை நாட மாயா – பழ:48/3

TOP


ஊட்டுமாறு (1)

உருவு திரு ஊட்டுமாறு – பழ:106/4

TOP


ஊடல் (7)

பாடல் சாம் பண் அறியாதார் முன்னர் ஊடல் சாம் – நான்மணி:44/3
ஊடல் உணராரகத்து – நான்மணி:44/4
புன் புறவே சேவலோடு ஊடல் பொருள் அன்றால் – திணை150:74/1
ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம் – குறள்:111 9/1
ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம் – குறள்:131 10/1
புணர்தலின் ஊடல் இனிது – குறள்:133 6/2
கூடலொடு ஊடல் உளான் கூர்ந்து – ஏலாதி:51/4

TOP


ஊடல்கண் (1)

ஊடல்கண் சென்றேன்மன் தோழி அது மறந்து – குறள்:129 4/1

TOP


ஊடலின் (4)

துனி புலவி ஊடலின் நோக்கேன் தொடர்ந்த – திணை150:153/1
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது – குறள்:131 7/1
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி – குறள்:133 2/1
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும் – குறள்:133 7/1

TOP


ஊடாமை (1)

தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும் – குறள்:129 2/1

TOP


ஊடார் (1)

செறுத்தோறு உடைப்பினும் செம் புனலோடு ஊடார்
மறுத்தும் சிறைசெய்வர் நீர் நசைஇ வாழ்நர் – நாலடி:23 2/1,2

TOP


ஊடி (9)

இடன் அறிந்து ஊடி இனிதின் உணரும் – நாலடி:39 4/3
முயங்காக்கால் பாயும் பசலை மற்று ஊடி
உயங்காக்கால் உப்பு இன்றாம் காமம் வயங்கு ஓதம் – நாலடி:40 1/1,2
கோட்டான் நோய் செய்யும் குறித்தாரை ஊடி
முகத்தான் நோய் செய்வர் மகளிர் முனிவர் – நான்மணி:12/2,3
உள்ளாது அகன்றார் என்று ஊடி யாம் பாராட்ட – கார்40:27/3
ஊடி இருப்பினும் ஊரன் நறு மேனி – ஐந்50:30/3
மணி குரல் மேல் மாதராள் ஊடி மணி சிரல் – திணை150:141/2
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் – குறள்:126 10/2
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை – குறள்:132 2/1
ஊடி பெறுகுவம்கொல்லோ நுதல் வெயர்ப்ப – குறள்:133 8/1

TOP


ஊடியவரை (1)

ஊடியவரை உணராமை வாடிய – குறள்:131 4/1

TOP


ஊடிவிடும் (1)

இல்லாளின் ஊடிவிடும் – குறள்:104 9/2

TOP


ஊடினாள் (1)

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று – குறள்:132 4/1,2

TOP


ஊடு (3)

போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி – கள40:2/2
என்று ஊடு அறுப்பினும் மன்று – பழ:207/4
ஓடு போல் தாரம் பிறந்த தாய் ஊடு போய் – சிறுபஞ்:81/2

TOP


ஊடுகமன்னோ (1)

ஊடுகமன்னோ ஒளியிழை யாம் இரப்ப – குறள்:133 9/1

TOP


ஊடுதல் (2)

இல்லை தவறு அவர்க்குஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு – குறள்:133 1/1,2
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் – குறள்:133 10/1

TOP


ஊடும் (2)

ஒண்டொடி ஊடும் நிலை – கார்40:23/4
ஒண்டொடி ஊடும் நிலை – கார்40:38/4

TOP


ஊண் (44)

வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண் இரந்தார்க்கு ஒன்று – நான்மணி:48/3
தமர் அல்லார் கையகத்து ஊண் – நான்மணி:91/4
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:1/3
வரு மனை பார்த்திருந்து ஊண் இன்னா இன்னா – இன்னா40:36/3
பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை – குறள்:5 4/1
பாத்து ஊண் மரீஇயவனை பசி என்னும் – குறள்:23 7/1
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும் – குறள்:94 9/1
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல – குறள்:102 2/1
கை செய்து ஊண் மாலையவர் – குறள்:104 5/2
உண்டது கான்றல் மயிர் களைதல் ஊண் பொழுது – ஆசாரக்:10/2
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே என்றும் – ஆசாரக்:21/2
முகட்டு வழி ஊண் புகழ்ந்தார் இகழ்ந்தார் – ஆசாரக்:22/2
துய்க்க முறை வகையால் ஊண் – ஆசாரக்:25/3
ஊட்டினமை கண்டு உண்க ஊண் – ஆசாரக்:39/3
ஊண் ஆர்ந்து உதவுவது ஒன்று இல் எனினும் கள்ளினை – பழ:256/3
கல்லா கயவர் இயற்கை நரியிற்கு ஊண்
நல் யாண்டும் தீ யாண்டும் இல் – பழ:290/3,4
துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு – பழ:353/1
ஊண் இன்றி ஆகாது உயிர் வாழ்க்கை பேணுங்கால் – பழ:400/2
ஊண் இலான் செய்யும் உதாரமும் ஏண் இலான் – சிறுபஞ்:10/2
ஒக்க உடன் உறைதல் ஊண் அமைவு தொக்க – சிறுபஞ்:51/2
இழிசினர்க்கேயானும் பசித்தார்க்கு ஊண் ஈத்தல் – சிறுபஞ்:75/3
தக்கது இளையான் தவம் செல்வன் ஊண் மறுத்தல் – சிறுபஞ்:96/1
இன் சொல் அளாவல் இடம் இனிது ஊண் யாவர்க்கும் – ஏலாதி:7/1
பண் ஆளும் சொல்லாய் பழி இல் ஊண் பாற்படுத்தான் – ஏலாதி:35/3
ஆழ படும் ஊண் அமைத்தார் இமையவரால் – ஏலாதி:36/3
வான் மகர வார்குழையாய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் – ஏலாதி:43/3
செல்வான் செயிர் இல் ஊண் ஈவான் அரசு ஆண்டு – ஏலாதி:45/3
எண்ணன் ஆய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் வைசிரவண்ணன் – ஏலாதி:49/3
பண்ணி ஊண் ஈய்ந்தவர் பல் யானை மன்னராய் – ஏலாதி:52/3
எண்ணி ஊண் ஆர்வார் இயைந்து – ஏலாதி:52/4
உடையராய் இல்லுள் ஊண் ஈத்து உண்பார் மண் மேல் – ஏலாதி:53/3
ஊண் ஈய்த்து உறு நோய் களைந்தார் பெரும் செல்வம் – ஏலாதி:55/3
உளையாளர் ஊண் ஒன்றும் இல்லார் கிளைஞராய் – ஏலாதி:56/2
மா அலந்த நோக்கினாய் ஊண் ஈய்ந்தார் மா கடல் சூழ் – ஏலாதி:56/3
ஆற்றி ஊண் ஈத்து அவை தீர்த்தார் அரசராய் – ஏலாதி:57/3
போற்றி ஊண் உண்பார் புரந்து – ஏலாதி:57/4
ஐயமே பிச்சை அரும் தவர்க்கு ஊண் ஆடை – ஏலாதி:70/1
நடப்பார்க்கு ஊண் நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண் – ஏலாதி:71/1
நடப்பார்க்கு ஊண் நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண்
கிடப்பார்க்கு ஊண் கேளிர்க்கு ஊண் கேடு இன்று உடல் சார்ந்த – ஏலாதி:71/1,2
கிடப்பார்க்கு ஊண் கேளிர்க்கு ஊண் கேடு இன்று உடல் சார்ந்த – ஏலாதி:71/2
கிடப்பார்க்கு ஊண் கேளிர்க்கு ஊண் கேடு இன்று உடல் சார்ந்த – ஏலாதி:71/2
வானகத்தார்க்கு ஊணே மறுதலையார்க்கு ஊண் அமைத்தான்தான் – ஏலாதி:71/3
கைத்து ஊண் பொருள் இழந்தார் கண்ணிலவர்க்கு ஈய்ந்தார் – ஏலாதி:78/3
ஊண் கொடுத்து ஊற்றாய் உதவினார் மன்னராய் – ஏலாதி:80/3

TOP


ஊணின்கண் (1)

முன் துவ்வார் முன் எழார் மிக்கு உறார் ஊணின்கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார் தம்மின் – ஆசாரக்:24/1,2

TOP


ஊணே (2)

எல்லாம் பொய் அட்டு ஊணே வாய் – பழ:213/4
வானகத்தார்க்கு ஊணே மறுதலையார்க்கு ஊண் அமைத்தான்தான் – ஏலாதி:71/3

TOP


ஊணொடு (2)

ஊணொடு செய்யும் சிறப்பு – ஆசாரக்:54/3
ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம் – ஏலாதி:63/1

TOP


ஊதார் (1)

உடம்பு நன்று என்று உரையார் ஊதார் விளக்கும் – ஆசாரக்:59/1

TOP


ஊதி (2)

முல்லை நறு மலர் ஊதி இரும் தும்பி – ஐந்50:6/1
கொன்றை குழல் ஊதி கோவலர் பின் நிரைத்து – ஐந்70:22/1

TOP


ஊதிய (1)

கொன்றை கொடும் குழல் ஊதிய கோவலர் – கைந்:30/1

TOP


ஊதியம் (9)

வாழ்தலின் ஊதியம் என் உண்டாம் வந்ததே – நாலடி:2 2/3
உணரும் குடி பிறப்பின் ஊதியம் என்னோ – நாலடி:15 4/3
உணர்வு இலர் ஆகிய ஊதியம் இல்லார் – நாலடி:24 3/3
ஊதியம் அன்றோ உயிர்க்கு – ஐந்70:57/4
ஊதியம் இல்லை உயிர்க்கு – குறள்:24 1/2
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம் – குறள்:45 9/1
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார் – குறள்:80 7/1
ஊதியம் போகவிடல் – குறள்:84 1/2
முதல் இலார்க்கு ஊதியம் இல் – பழ:312/4

TOP


ஊதியமும் (1)

ஊதியமும் சூழ்ந்து செயல் – குறள்:47 1/2

TOP


ஊது (1)

வண்டு ஊது கோதை வகை நாடிக்கொண்டிருந்து – கைந்:44/2

TOP


ஊதும் (7)

உலை ஊதும் தீயே போல் உள் கனலும்கொல்லோ – நாலடி:30 8/3
பாடு வண்டு ஊதும் பருவம் பணைத்தோளி – கார்40:4/3
இன் குழல் ஊதும் பொழுது – கார்40:15/4
ஊர் ஆன் பின் ஆயன் உவந்து ஊதும் சீர்சால் – ஐந்50:7/2
போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்கு – ஐந்50:22/1
வேனில் பருவத்து எதிர் மலர் ஏற்று ஊதும்
கூனி வண்டு அன்ன குளிர் வயல் நல் ஊரன் – திணை50:35/1,2
தெரிவிலர் தீம் குழல் ஊதும் பொழுதால் – கைந்:35/2

TOP


ஊதை (2)

ஊதை உளரும் நறும் தண் கா பேதை – கார்40:30/3
உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனை – ஐந்70:57/2

TOP


ஊமன் (1)

துஞ்சு ஊமன் கண்ட கனா – திரி:7/4

TOP


ஊர் (48)

உள்ளத்தான் உள்ளி உரைத்து உராய் ஊர் கேட்ப – நாலடி:7 4/3
வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே – நாலடி:13 5/3
ஊர் அங்கண நீர் உரவு நீர் சேர்ந்தக்கால் – நாலடி:18 5/1
இறைத்து உணினும் ஊர் ஆற்றும் என்பர் கொடைக்கடனும் – நாலடி:19 4/2
மாத்திரை இன்றி நடக்குமேல் வாழும் ஊர்
கோத்திரம் கூறப்படும் – நாலடி:25 2/3,4
வல்லாளாய் வாழும் ஊர் தன் புகழும் மாண் கற்பின் – நாலடி:39 3/3
தேர் நலம் பாகனால் பாடு எய்தும் ஊர் நலம் – நான்மணி:24/3
தமர் அனையர் ஓர் ஊர் உறைவார் தமருள்ளும் – நான்மணி:73/2
நல்லார்க்கு தம் ஊர் என்று ஊர் இல்லை நன்னெறி – நான்மணி:81/1
நல்லார்க்கு தம் ஊர் என்று ஊர் இல்லை நன்னெறி – நான்மணி:81/1
செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை அல்லா – நான்மணி:81/2
செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை அல்லா – நான்மணி:81/2
கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை தம் கைத்து – நான்மணி:81/3
கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை தம் கைத்து – நான்மணி:81/3
உடையார்க்கும் எ ஊரும் ஊர் – நான்மணி:81/4
கான் யாறு இடையிட்ட ஊர் – இன்னா40:22/4
கான் யாற்று அடைகரை ஊர் இனிது ஆங்கு இனிதே – இனிய40:4/3
ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே – இனிய40:33/1
செல்வி உடைய சுரம் நெஞ்சே காதலி ஊர்
கவ்வை அழுங்க செலற்கு – கார்40:28/3,4
செல்வ மழை மதர் கண் சில் மொழி பேதை ஊர்
நல் விருந்து ஆக நமக்கு – கார்40:36/3,4
ஆகின்று நம் ஊர் அவர்க்கு – கார்40:39/4
ஊர் ஆன் பின் ஆயன் உவந்து ஊதும் சீர்சால் – ஐந்50:7/2
பாழ் ஊர் பொதியில் புகா பார்க்கும் ஆர் இடை – ஐந்70:31/2
ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும் – ஐந்70:35/2
ஊர் இடு கவ்வை ஒழித்து – ஐந்70:35/4
ஊர் அறி கெளவை தரும் – திணை50:7/4
கடல் அன்றி கார் ஊர் கறுத்து – திணை150:121/4
தந்தையார் தம் ஊர் தகை – திணை150:138/4
ஊரா தேரான் தந்தை ஊர் – திணை150:139/4
மயல் ஊர் அரவர் மகள் – திணை150:140/4
ஆட்டை இருந்து உறையும் ஊர் – திணை150:141/4
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் – குறள்:40 7/1
ஏதிலர் என்னும் இ ஊர் – குறள்:113 9/2
ஏதிலர் என்னும் இ ஊர் – குறள்:113 10/2
அலர் எமக்கு ஈந்தது இ ஊர் – குறள்:115 2/2
உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை – குறள்:115 3/1
கௌவை எடுக்கும் இ ஊர் – குறள்:115 10/2
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும் – குறள்:116 8/1
ஊர் எல்லாம் நோவது உடைத்து – திரி:11/4
ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும் – ஆசாரக்:57/2
உரையிடை ஆய்ந்து உரையார் ஊர் முனிவ செய்யார் – ஆசாரக்:83/2
ஊர் அறிய நட்டார்க்கு உணா – பழ:101/4
ஊர் மிகின் இல்லை கரியே ஒலித்து உடன் – பழ:190/3
ஊர் மேற்று அமணர்க்கும் ஓடு – பழ:231/4
போம் ஆறு அறியா புலன் மயங்கி ஊர் புக்கு – பழ:233/3
ஊர் அறியா மூரியோ இல் – பழ:351/4
ஓடுக ஊர் ஓடுமாறு – பழ:392/4
ஊர் தரும் மேனி பசப்பு – கைந்:27/3

TOP


ஊர்க்கு (2)

மாரி வளம் பொய்ப்பின் ஊர்க்கு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:20/3
பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும் ஊர்க்கு
வரும் குற்றம் பாராத மன்னும் இ மூவர் – திரி:104/2,3

TOP


ஊர்தல் (2)

மணி இலா குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா – இன்னா40:13/1
மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்மன்ற – குறள்:114 6/1

TOP


ஊர்ந்த (3)

பெரும் பயனும் ஆற்றவே கொள்க கரும்பு ஊர்ந்த
சாறு போல் சாலவும் பின் உதவி மற்று அதன் – நாலடி:4 4/2,3
மென் முலை மேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல் – திணை50:22/1
ஊர்ந்த பரிவும் இலர் ஆகி சேர்ந்தார் – பழ:386/2

TOP


ஊர்ந்தது (1)

நோக்கான் தேர் ஊர்ந்தது கண்டு – ஐந்50:28/4

TOP


ஊர்ந்தான் (2)

ஊர்ந்தான் வகைய கலின மா நேர்ந்து ஒருவன் – நான்மணி:70/1
கறவை கன்று ஊர்ந்தானை தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பு இளமை இல் – பழ:93/3,4

TOP


ஊர்ந்தானிடை (1)

பொறுத்தானொடு ஊர்ந்தானிடை – குறள்:4 7/2

TOP


ஊர்ந்தானை (1)

கறவை கன்று ஊர்ந்தானை தந்தையும் ஊர்ந்தான் – பழ:93/3

TOP


ஊர்ந்து (6)

செக்கு ஊர்ந்து கொண்டானும் செய்த பொருள் உடையார் – நாலடி:38 4/3
ஓர்த்து ஒழிந்தாள் என் பேதை ஊர்ந்து – திணை150:73/4
உள் நிலாது என் ஆவி ஊர்ந்து – திணை150:94/4
ஊர்ந்து உலகம் தாவிய அண்ணலேஆயினும் – பழ:67/3
ஒன்றும் வகையான் அறம் செய்க ஊர்ந்து உருளின் – பழ:303/3
ஓட்டுத்தலை நிற்கும் ஊர்ந்து – சிறுபஞ்:99/4

TOP


ஊர்ந்துவிடல் (1)

பெருமிதம் ஊர்ந்துவிடல் – குறள்:98 9/2

TOP


ஊர்வது (2)

அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – குறள்:63 1/2
மேனி பசப்பு ஊர்வது – குறள்:119 5/2

TOP


ஊர்வர் (1)

கடும் பரி மா காதலித்து ஊர்வர் கொடும் குழை – நான்மணி:53/2

TOP


ஊர்வு (1)

புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா – இன்னா40:15/1

TOP


ஊர (22)

வயல் நிறைய காய்க்கும் வள வயல் ஊர
மகன் அறிவு தந்தை அறிவு – நாலடி:37 7/3,4
தண் துறை ஊர தகுவதோ ஒண்டொடியை – ஐந்70:54/2
கடையாயார் நட்பே போல் காஞ்சி நல் ஊர
உடைய இள நலம் உண்டாய் கடை அ – திணை50:33/1,2
செந்தாமரை மலரும் செய் வயல் நல் ஊர
நொந்தால் மற்று உன்னை செயப்படுவது என் உண்டாம் – திணை50:36/1,2
மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர
துணி கடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி – திணை50:47/2,3
புண் கயத்து உள்ளும் வயல் ஊர வண் கயம் – திணை150:142/2
மாசு ஊர மாய்ந்து கெடும் – குறள்:61 1/2
பூம் புனல் ஊர பொது மக்கட்கு ஆகாதே – பழ:5/3
கொக்கு ஆர் வள வயல் ஊர தினல் ஆமோ – பழ:18/3
நாரை துயில் வதியும் ஊர குளம் தொட்டு – பழ:23/3
பூ புக்கு வண்டு ஆர்க்கும் ஊர குறும்பு இயங்கும் – பழ:63/3
பொன்னா செயினும் புகாஅர் புனல் ஊர
துன்னினார் அல்லர் பிறர் – பழ:66/3,4
பூ மேல் இசை முரலும் ஊர அது அன்றோ – பழ:75/3
புள் ஒலி பொய்கை புனல் ஊர அஃது அன்றோ – பழ:98/3
வரம்பிடை பூ மேயும் வண் புனல் ஊர
மரம் குரைப்ப மண்ணா மயிர் – பழ:107/3,4
அரிநர் அணை திறக்கும் ஊர அறுமோ – பழ:177/3
புனல் பொய்கை ஊர விளக்கு எலி கொண்டு – பழ:189/3
யாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர ஈனுமோ – பழ:221/3
பூ மிதித்து புள் கலாம் பொய்கை புனல் ஊர
தாய் மிதித்த ஆகா முடம் – பழ:299/3,4
விராஅம் புனல் ஊர வேண்டு அயிரை இட்டு – பழ:302/3
செய்த்தலை வீழும் புனல் ஊர அஃதே நன் – பழ:339/3
கயல் இனம் பாயும் கழனி நல் ஊர
நயம் இலேம் எம் மனை இன்றொடு வாரல் – கைந்:38/1,2

TOP


ஊரவர் (2)

ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல் – குறள்:115 7/1
காணார்கொல் இ ஊரவர் – குறள்:122 10/2

TOP


ஊரற்கு (5)

இட கண் அனையம் யாம் ஊரற்கு அதனால் – நாலடி:39 8/3
கடை கண் அனையம் யாம் ஊரற்கு அதனால் – நாலடி:39 10/3
போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்கு
தூதாய் திரிதரும் பாண்மகனே நீதான் – ஐந்50:22/1,2
நீலத்து புக்கு ஒளிக்கும் ஊரற்கு மேல் எல்லாம் – ஐந்50:24/2
ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு
வல்லென்றது என் நெஞ்சம் வாட்கண்ணாய் நில் என்னாது – ஐந்50:28/1,2

TOP


ஊரன் (39)

ஒருங்கு ஒப்ப கொண்டானாம் ஊரன் ஒருங்கு ஒவ்வா – நாலடி:39 7/2
சாய் பறிக்க நீர் திகழும் தண் வயல் ஊரன் மீது – நாலடி:39 9/1
வேறு அல்லை பாண வியல் ஊரன் வாய்மொழியை – ஐந்50:21/3
யாணர் அகல் வயல் ஊரன் அருளுதல் – ஐந்50:23/1
அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன்
விழைதகு மார்பம் உறும் நோய் விழையின் – ஐந்50:25/1,2
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப – ஐந்50:26/2
தண் வயல் ஊரன் புலக்கும் தகையமோ – ஐந்50:27/1
ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பும் – ஐந்50:29/1
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ ஊரன்
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன் – ஐந்50:29/3,4
ஊடி இருப்பினும் ஊரன் நறு மேனி – ஐந்50:30/3
ஆற்றல் உடையன் அரும் பொறி நல் ஊரன்
மேற்று சிறு தாய காய்வு அஞ்சி போற்று உருவி – ஐந்70:43/1,2
தண் துறை ஊரன் மலர் அன்ன மார்புற – ஐந்70:46/3
யாணர் நல் ஊரன் திறம் கிளப்பல் என்னுடைய – ஐந்70:49/1
வழிபாடு கொள்ளும் வள வயல் ஊரன்
பழிபாடு நின் மேலது – ஐந்70:53/3,4
பொய்கை நல் ஊரன் திறம் கிளத்தல் என்னுடைய – ஐந்70:55/1
வள வயல் ஊரன் மருள் உரைக்கு மாதர் – ஐந்70:56/1
உரன் அழிந்து ஓடும் ஒலி புனல் ஊரன்
கிழமை உடையன் என் தோட்கு – திணை50:31/3,4
பணை தாள் கதிர் செந்நெல் பாய் வயல் ஊரன்
இணைத்தான் எமக்கும் ஓர் நோய் – திணை50:32/3,4
செந்நெல் விளை வயல் ஊரன் சில் பகல் – திணை50:34/1
கூனி வண்டு அன்ன குளிர் வயல் நல் ஊரன்
மாண் இழை நல்லார் இள நலம் உண்டு அவர் – திணை50:35/2,3
நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள் – திணை50:37/2
நல் வயல் ஊரன் நலம் உரைத்து நீ பாண – திணை50:38/1
பெரும் புற வாளை பெடை கதூஉம் ஊரன்
விரும்பு நாள் போலான் வியல் நலம் உண்டான் – திணை50:39/2,3
தீம் புனல் ஊரன் மகள் இவள் ஆய்ந்த நறும் – திணை50:40/2
ஆடினான் ஆய் வயல் ஊரன் மற்று எங்கையர் தோள் – திணை150:124/3
பூம் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன் – திணை150:126/3
வயந்தகம் போல் தோன்றும் வயல் ஊரன் கேண்மை – திணை150:128/3
பூட்டுற்ற வில் ஏய்க்கும் பூம் பொய்கை ஊரன் பொய் – திணை150:131/3
வயல் ஊரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள் – திணை150:140/3
நல் வயல் ஊரன் நறும் சாந்து அணி அகலம் – திணை150:143/1
பழன வயல் ஊரன் பாண எம் முன்னர் – கைந்:37/3
தொட்ட வரி வரால் பாயும் புனல் ஊரன்
கட்டு அலர் கண்ணி புதல்வனை கொண்டு எம் இல் – கைந்:39/2,3
பொய்கை நல் ஊரன் திறம் கிளப்ப என் உடையை – கைந்:41/1
நீத்த நீர் ஊரன் நிலைமையும் வண்ணமும் – கைந்:42/1
தண் துறை ஊரன் தட மென் பணை தோளாய் – கைந்:44/1
கார் தண் கலி வயல் ஊரன் கடிது எமக்கு – கைந்:45/2
கய நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன்
நயமே பல சொல்லி நாணினன் போன்றான் – கைந்:46/1,2
செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய் பாண – கைந்:47/3
கொக்கு ஆர் வள வயல் ஊரன் குளிர் சாந்தம் – கைந்:48/1

TOP


ஊரன்தன் (3)

மென் கண் கலி வயல் ஊரன்தன் மெய்ம்மையை – திணை150:127/1
புல்லகம் ஏய்க்கும் புகழ் வயல் ஊரன்தன்
நல் அகம் சேராமை நன்று – திணை150:129/3,4
மெய்ம் மருட்டு ஒல்லா மிகு புனல் ஊரன்தன்
பொய்ம் மருட்டு பெற்ற பொழுது – திணை150:130/3,4

TOP


ஊரனை (8)

அகன் பணை ஊரனை தாமம் பிணித்தது – ஐந்70:44/1
தேம் கமழ் பொய்கை அக வயல் ஊரனை
பூம் கண் புதல்வன் மிதித்து உழக்க ஈங்கு – ஐந்70:47/1,2
ஒள் இதழ் தாமரை போது உறழும் ஊரனை
உள்ளம் கொண்டு உள்ளான் என்று யார்க்கு உரைக்கோ ஒள்ளிழாய் – ஐந்70:50/1,2
போது உறழ் தாமரை கண் ஊரனை நேர் நோக்கி – ஐந்70:51/2
ஓதம் துவன்றும் ஒலி புனல் ஊரனை
பேதை பட்டு ஏங்கன்மின் நீயிரும் எண் இலா – ஐந்70:52/2,3
நாணா நடுக்கும் நளி வயல் ஊரனை
காணா எப்போதுமே கண் – திணை150:153/3,4
தாரா இரியும் தகை வயல் ஊரனை
வாரான் எனினும் வரும் என்று சேரி – கைந்:40/1,2
போது அவிழ் தாமரை பூம் துறை ஊரனை
தாது அவிழ் கோதை தகை இயலார் தாம் புலப்பர் – கைந்:43/1,2

TOP


ஊரா (1)

ஊரா தேரான் தந்தை ஊர் – திணை150:139/4

TOP


ஊராண் (1)

உட்கு உடையாள் ஊராண் இயல்பினாள் உட்கி – நாலடி:39 4/2

TOP


ஊராண்மை (4)

உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை இன்மை – நாலடி:24 10/1
ஊராண்மை ஆக்கிக்கொளல் – ஐந்70:54/4
ஊராண்மை மற்று அதன் எஃகு – குறள்:78 3/2
ஊராண்மை என்னும் செருக்கு – திரி:6/4

TOP


ஊரார் (1)

உகவும் கார் அன்று என்பார் ஊரார் அதனை – திணை150:119/1

TOP


ஊரார்க்கு (1)

மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல் – குறள்:118 10/1

TOP


ஊரில் (2)

ஊரில் பிளிற்றிவிடும் – நான்மணி:34/4
விழவு ஊரில் கூத்தே போல் வீழ்ந்து அவிதல் கண்டும் – பழ:343/2

TOP


ஊருணி (1)

ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் – குறள்:22 5/1

TOP


ஊரும் (10)

உடையார்க்கும் எ ஊரும் ஊர் – நான்மணி:81/4
ஏரி சிறிதுஆயின் நீர் ஊரும் இல்லத்து – நான்மணி:99/1
வாரி சிறிதுஆயின் பெண் ஊரும் மேலை – நான்மணி:99/2
தவம் சிறிதுஆயின் வினை ஊரும் ஊரும் – நான்மணி:99/3
தவம் சிறிதுஆயின் வினை ஊரும் ஊரும்
உரன் சிறிதுஆயின் பகை – நான்மணி:99/3,4
கல்லாதான் ஊரும் கலிமா பரிப்பு இன்னா – இன்னா40:28/1
ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே – இனிய40:8/1
மேனி மேல் ஊரும் பசப்பு – குறள்:119 2/2
கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கு அறுக்கும் – திரி:10/1
ஏவலாள் ஊரும் சுடும் – பழ:191/4

TOP


ஊருமாறு (1)

கற்றான் அஃது ஊருமாறு – நாலடி:40 8/4

TOP


ஊருள் (3)

ஊருள் எழுந்த உரு கெழு செம் தீக்கு – நாலடி:9 10/1
நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க – நாலடி:10 6/1
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்
நச்சு மரம் பழுத்து அற்று – குறள்:101 8/1,2

TOP


ஊழ் (3)

மெல் விரல் ஊழ் தெறியா விம்மி தன் மெல் விரலின் – நாலடி:40 4/2
உறை எதிர்ந்து வித்திய ஊழ் ஏனல் பிறை எதிர்ந்த – திணை150:1/2
ஊழ் அம்பு வீழா நிலத்து – பழ:265/4

TOP


ஊழ்த்த (1)

நுண் அரும்பு ஊழ்த்த புறவு – கார்40:8/4

TOP


ஊழ்த்தும் (1)

இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது – குறள்:65 10/1

TOP


ஊழாயினாரை (1)

ஊழாயினாரை களைந்திட்டு உதவாத – பழ:371/1

TOP


ஊழி (3)

எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே எனைத்தும் – நாலடி:13 10/2
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு – குறள்:99 9/1
கட்டு அலர் தார் மார்ப கலி ஊழி காலத்து – பழ:59/3

TOP


ஊழியும் (1)

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன யாமமும் – நான்மணி:71/1

TOP


ஊழின் (1)

ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று – குறள்:38 10/1

TOP


ஊழினால் (1)

தாழ்விடத்து நேர் கருதும் தட்டையும் ஊழினால்
ஒட்டி வினை நலம் பார்ப்பானும் இ மூவர் – திரி:15/2,3

TOP


ஊழே (1)

அறிவினை ஊழே அடும் – பழ:203/4

TOP


ஊழையும் (1)

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – குறள்:62 10/1

TOP


ஊற்றங்கோல் (1)

ஒல்லை உயிர்க்கு ஊற்றங்கோல் ஆகி ஒல்லுமேல் – சிறுபஞ்:55/2

TOP


ஊற்றம் (3)

ஊற்றம் உடையார் உணர்வு உடையார் ஊற்றம் – நாலடி:20 6/2
ஊற்றம் உடையார் உணர்வு உடையார் ஊற்றம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார் – நாலடி:20 6/2,3
உடைய மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார் – பழ:324/3

TOP


ஊற்றாய் (1)

ஊண் கொடுத்து ஊற்றாய் உதவினார் மன்னராய் – ஏலாதி:80/3

TOP


ஊற்று (6)

உறு காலத்து ஊற்று ஆகா ஆம் இடத்தே ஆகும் – நாலடி:11 10/2
அற்று தன் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர் – நாலடி:15 10/2
உறைப்பு அரும் காலத்தும் ஊற்று நீர் கேணி – நாலடி:19 4/1
வல் ஊற்று உவர் இல் கிணற்றின்கண் சென்று உண்பர் – நாலடி:27 3/2
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை – குறள்:42 4/2
ஊற்று நீர் போல மிகும் – குறள்:117 1/2

TOP


ஊற்றுக்கோல் (1)

இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே – குறள்:42 5/1

TOP


ஊறல் (2)

அறு நீர் சிறு கிணற்று ஊறல் பார்த்து உண்பர் – நாலடி:28 5/2
பால் தலை பால் ஊறல் இல் – பழ:333/4

TOP


ஊறி (1)

ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய் புலனும் – நாலடி:5 7/1

TOP


ஊறிய (2)

வால் எயிறு ஊறிய நீர் – குறள்:113 1/2
சோறு என்று கூழை மதிப்பானும் ஊறிய
கைப்பதனை கட்டி என்று உண்பானும் இ மூவர் – திரி:48/2,3

TOP


ஊறு (7)

ஊறு செய் நெஞ்சம் தம் உள் அடக்கி ஒண்ணுதலார் – நாலடி:38 9/1
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – குறள்:3 7/1
பின் ஊறு இரங்கிவிடும் – குறள்:54 5/2
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின் – குறள்:67 2/1
ஊறு எய்தி உள்ளப்படும் – குறள்:67 5/2
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன் – குறள்:77 1/1
உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவு இடத்து – குறள்:77 2/1

TOP


ஊறுபாடு (2)

ஊறுபாடு இல்லை உயிர்க்கு – குறள்:95 5/2
ஊறுபாடு இல்லா உயர் தவம் தான் புரியின் – ஏலாதி:65/3

TOP


ஊறும் (4)

கல்லுற்றுழி ஊறும் ஆறே போல் செல்வம் – நாலடி:19 5/2
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு – குறள்:40 6/1
கற்று அனைத்து ஊறும் அறிவு – குறள்:40 6/2
இறைத்தொறும் ஊறும் கிணறு – பழ:344/4

TOP


ஊன் (20)

ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க வான் கவிந்த – நாலடி:8 10/2
உறு புலி ஊன் இரை இன்றி ஒரு நாள் – நாலடி:20 3/1
தானைக்கு செல்சார் தறுகண்மை ஊன் உண்டல் – நான்மணி:37/3
ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம் நீர் நிலத்து – நான்மணி:65/1
விலைப்பாலின் கொண்டு ஊன் மிசைதலும் குற்றம் – நான்மணி:100/2
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் – குறள்:26 1/1
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் – குறள்:26 1/1
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு – குறள்:26 2/2
பொருள் அல்லது அ ஊன் தினல் – குறள்:26 4/2
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண – குறள்:26 5/1
விலை பொருட்டால் ஊன் தருவார் இல் – குறள்:26 6/2
உயிரின் தலைப்பிரிந்த ஊன் – குறள்:26 8/2
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை – குறள்:97 8/1
ஊன் உண்டு உயிர்கட்கு அருள் உடையெம் என்பானும் – திரி:36/1
தமக்கு என்று உலை ஏற்றார் தம்பொருட்டு ஊன் கொள்ளார் – ஆசாரக்:39/1
உயிர் செகுத்து ஊன் துய்த்து ஒழுகுதல் ஓம்பார் – பழ:164/3
ஓர்த்து உடம்பு பேரும் என்று ஊன் அவாய் உண்ணானேல் – சிறுபஞ்:17/3
ஊன் மறுத்து கொள்ளானேல் ஊன் உடம்பு எஞ்ஞான்றும் – சிறுபஞ்:19/3
ஊன் மறுத்து கொள்ளானேல் ஊன் உடம்பு எஞ்ஞான்றும் – சிறுபஞ்:19/3
உடம்பின் ஆர் வேலி ஒருப்படுத்து ஊன் ஆர – சிறுபஞ்:32/3

TOP


ஊன்ற (2)

வல்லவர் ஊன்ற வடி ஆ போல் வாய் வைத்து – நாலடி:28 9/3
சொல்லார் ஒருவரையும் உள் ஊன்ற பல் ஆ – பழ:345/2

TOP


ஊன்றல் (1)

தம் சார்பு இலாதாரை தேசு ஊன்றல் ஆகுமோ – பழ:254/2

TOP


ஊன்றா (1)

தாழா தளரா தலை நடுங்கா தண்டு ஊன்றா
வீழா விறக்கும் இவள்மாட்டும் காழ் இலா – நாலடி:2 4/1,2

TOP


ஊன்றி (6)

மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங்கு எழுந்திருப்பார் – நாலடி:2 1/3,4
சொல் தளர்ந்து கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய் – நாலடி:2 3/1
திருவில் விலங்கு ஊன்றி தீம் பெயல் தாழ – கார்40:1/2
இழுக்கும் களிற்று கோடு ஊன்றி எழுவர் – கள40:3/2
கற்பு தாள் வீழ்த்து கவுள் மிசை கை ஊன்றி
நிற்பாள் நிலை உணர்கம் யாம் – ஐந்50:10/3,4
சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி
வலி ஆகி பின்னும் பயக்கும் மெலிவு இல் – ஐந்70:5/1,2

TOP


ஊன்றிய (2)

மதலை ஆய் மற்று அதன் வீழ் ஊன்றிய ஆங்கு – நாலடி:20 7/2
ஐந்து சால்பு ஊன்றிய தூண் – குறள்:99 3/2

TOP


ஊன்று (1)

நேர்வளை நெஞ்சு ஊன்று கோல் – ஐந்70:11/4

TOP


ஊன்றும் (4)

பட்டு பாடு ஊன்றும் களிறு – குறள்:60 7/2
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – குறள்:62 5/2
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை – குறள்:79 9/2
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி – குறள்:103 10/1,2

TOP


ஊன (1)

நீத்து நீர் ஊன வாய் பாண நீ போய் மொழி – ஐந்70:45/3

TOP


ஊனம் (4)

ஊனம் ஒன்று இன்றி உயர்ந்த பொருள் உடைமை – இனிய40:13/3
ஊனம் கொண்டாடார் உறுதி உடையவை – இனிய40:27/3
உரையான் குலன் குடிமை ஊனம் பிறரை – ஏலாதி:32/1
மானமே மாய உயிர்க்கு ஊனம் என்னுமே – ஏலாதி:61/3

TOP


ஊனமே (1)

ஊனமே தீர்ந்தவர் ஓத்து – ஏலாதி:61/4

TOP


ஊனை (6)

ஊனை தின்று ஊனை பெருக்குதல் முன் இன்னா – இன்னா40:22/2
ஊனை தின்று ஊனை பெருக்குதல் முன் இன்னா – இன்னா40:22/2
ஊனை தின்று ஊனை பெருக்காமை முன் இனிதே – இனிய40:4/2
ஊனை தின்று ஊனை பெருக்காமை முன் இனிதே – இனிய40:4/2
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும் – குறள்:102 3/1
கோறலும் நஞ்சு ஊனை துய்த்தல் கொடு நஞ்சு – சிறுபஞ்:11/1

TOP