கைந்நிலை

பாடல் எண் எல்லைகள்

*@1 குறிஞ்சி

#1
நுகர்தல் இவரும் கிளி கடி ஏனல்
நிகர் இல் மட மான் நெரியும் அமர் சாரல்
கானக நாடன் கலந்தான்இலன் என்று
மேனி சிதையும் பசந்து

#2
வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாக
சந்தனம் ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலை நாடன் வாரான்கொல் தோழி என்
நெஞ்சம் நடுங்கி வரும்

#3
பாசி பசும் சுனை பாங்கர் அழி முது நீர்
காய் சின மந்தி பயின்று கனி சுவைக்கும்
பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு
ஆசையின் தேம்பும் என் நெஞ்சு

#4
ஓங்கல் விழு பலவின் இன்பம் கொளீஇய
தீம் கனி மாவின் முசு பாய் மலை நாடன்
தான் கலந்து உள்ளா தகையனோ நேரிழாய்
தேம் கலந்த சொல்லின் தெளித்து

#5
இரசம் கொண்டு இன் தேன் இரைக்கும் குரலை
பிரசை இரும் பிடி பேணி வரூஉம்
முரசு அருவி ஆர்க்கும் மலை நாடற்கு என் தோள்
நிரையம் என கிடந்தவாறு

#6
மரையா உகளும் மரம் பயில் சோலை
உரை சால் மட மந்தி ஓடி உகளும்
புரை தீர் மலை நாடன் பூண் ஏந்து அகலம்
உரையா வழங்கும் என் நெஞ்சு

#7
கல் வரை ஏறி கடுவன் கனி வாழை
எல் உறு போழ்தின் இனிய பழம் கவுள் கொண்டு
ஒல்லென ஓடும் மலை நாடன்தன் கேண்மை
சொல்ல சொரியும் வளை

#8
கரும் கை கத வேழம் கார் பாம்பு குப்பம்
கரும்
பெரும் கல் மலை நாடன் பேணி வரினே
சுருங்கும் இவள் உற்ற நோய்

#9
காந்தள் அரும் பகை என்று கத வேழம்
ஏந்தல் மருப்பிடை கை வைத்து இனன் நோக்கி
பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நல் நாடன்
காய்ந்தான்கொல் நம்கண் கலப்பு

#10
பொன் இணர் வேங்கை புனம் சூழ் மலை நாடன்
மின்னின் அனைய வேல் ஏந்தி இரவினுள்
இன்னே வரும் கண்டாய் தோழி இடை யாமத்து
என்னை இமை பொருமாறு

#11
எறி கிளர் கேழல் கிளைத்திட்ட பூழி
பொறி கிளர் மஞ்ஞை புகன்று குடையும்
முறி கிளர் நல் மலை நாடன் வருமே
அறி துறைத்து இ அல்லில் நமக்கு

#12
நாக நறு மலர் நாள் வேங்கை பூ விரவி
கேசம் அணிந்த கிளர் எழிலோள் ஆக
முடியும்கொல் என்று முனிவான் ஒருவன்
வடி வேல் கை ஏந்தி வரும்
*@2 பாலை

#13
கடுகி அதர் அலைக்கும் கல் சூழ் பதுக்கை
விடு வில் எயினர்தம் வீளை ஓர்த்து ஓடும்
நெடு இடை அத்தம் செலவு உரைப்ப கேட்டே
வடுவிடை மெல்கின கண்

#14
கத நாய் துரப்ப
அவிழும்
புதல் மாறு வெம் கானம் போக்கு உரைப்ப நில்லா
முதன்

#15
கடும் கதிர் வெம் கானம் பல் பொருட்கண் சென்றார்
கொடும் கல் மலை

#16
மெல்லென் கடத்து
கடும் சின வேங்கை கதழ் வேழம் சாய்க்கு
நமர்

#17
கடமா இரிந்தோடும் கல் அதர் அத்தம்
மட மா இரும் பிடி வேழ
உண்கண்ணுள் நீர்

#18
ஆமா சிலைக்கும் அணி வரை ஆரிடை
ஏ மாண் சிலையார்க்கு இன மா இரிந்து ஓடும்
தாம் மாண்பு இல் வெம் சுரம் சென்றார் வர கண்டு
வாய் மாண்ட பல்லி படும்

#19
அரக்கு ஆர்ந்த ஓமை அரி படு நீழல்
செருக்கு இல் கடும் களிறு சென்று உறங்கி நிற்கும்
பரல் கானம் பல் பொருட்கு சென்றார் வருவர்
நுதற்கு இவர்ந்து ஏறும் ஒளி

#20
ஓவாத வெம் கானம் சென்றார்
வருவார் நமர்

#21
ஆந்தை குறுங்கலி கொள்ள நம் ஆடவர்
காய்ந்து கதிர் தெறூஉம் கானம் கடந்தார் பின்
ஏந்தல் இள முலை ஈர் எயிற்றாய் என் நெஞ்சு
நீந்தும் நெடு இடை சென்று

#22
கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர்
உள்ளம் பிரிந்தமை நீ அறிதி ஒள்ளிழாய்
தொல்லை விடரகம் நீந்தி பெயர்ந்து அவர்
வல்லை நாம் காணும் வரவு

#23
சிலை ஒலி வெம் கணையர் சிந்தியா நெஞ்சின்
கொலை புரி வில்லொடு கூற்று போல் ஓடும்
இலை ஒலி வெம் கானத்து இ பருவம் சென்றார்
தொலைவு இலர்கொல் தோழி நமர்

#24
வெம் சுரம் தேர் ஓட வெஃகி நின்று அத்த மா
சிந்தையால் நீர் என்று செத்து தவா ஓடும்
பண்பு இல் அரும் சுரம் என்பவால் ஆய்தொடி
நண்பு இலார் சென்ற நெறி
*@3 முல்லை

#25
கார் செய் புறவில் கவினி கொடி முல்லை
கூர் எயிறு ஈன குருந்து அரும்ப ஓரும்
வருவர் நம் காதலர் வாள் தடம் கண்ணாய்
பருவரல் பைதல் நோய் கொண்டு

#26
குருதி மலர் தோன்றி கூர் முகை ஈன
சேவல் என பிடவம் ஏறி
பொரு தீ என வெருளும் பொன் நேர் நிறத்தாய்
அரிது அவர் வாராவிடல்

#27
ஒல்க புகுதரு
கார் தரு மாலை கலந்தார் வரவு உள்ளி
ஊர் தரும் மேனி பசப்பு

#28
பெய்த புறவில் கடுமான் தேர்
ஒல்லை கடாவார் இவர் காணின் காதலர்
சில்

#29
குருந்து அலர
பீடு ஆர் இரலை பிணை தழுவ காடு ஆர
கார் வானம் வந்து

#30
கொன்றை கொடும் குழல் ஊதிய கோவலர்
மன்றம் புகுதரும் போழ்து

#31
வானம்
வந்து துளி வழங்க கண்டு

#32
கார் எதிர் வானம் கதழ் எரி
எழு நெஞ்சே செல்லாயால்
கூர் எரி மாலை குறி

#33
தளை அவிழ்
உளையார் கலி நன் மா பூட்டி வருவார்
களையாரோ நீ உற்ற நோய்

#34
முல்லை எயிறு ஈன
மல்கி
கடல் முகந்து கார் பொழிய காதலர் வந்தார்
உடன் இயைந்த

#35
பால் வாய் இடையர்
தெரிவிலர் தீம் குழல் ஊதும் பொழுதால்
அரிது

#36
பிடவம் குருந்தொடு பிண்டி மலர
மடவ மயில் கூவ மந்தி மா கூர
தட மலர் கோதையாய் தங்கார் வருவர்
இடபம் என கொண்டு தாம்
*@4 மருதம்

#37
கழனி உழவர் கலி அஞ்சி ஓடி
தழென மத எருமை தண் கயம் பாயும்
பழன வயல் ஊரன் பாண எம் முன்னர்
பொழென பொய் கூறாது ஒழி

#38
கயல் இனம் பாயும் கழனி நல் ஊர
நயம் இலேம் எம் மனை இன்றொடு வாரல்
துயில் இன் இள முலையார் தோள் நயந்து வாழ் நின்
கொண்டு

#39
முட்ட முது நீர் அடைகரை மேய்ந்து எழுந்து
தொட்ட வரி வரால் பாயும் புனல் ஊரன்
கட்டு அலர் கண்ணி புதல்வனை கொண்டு எம் இல்
சுட்டி அலைய வரும்

#40
தாரா இரியும் தகை வயல் ஊரனை
வாரான் எனினும் வரும் என்று சேரி
புலப்படும் சொல்லும் இ பூம் கொடி அன்னாள்
கலப்பு அடும் கூடும்கொல் மற்று

#41
பொய்கை நல் ஊரன் திறம் கிளப்ப என் உடையை
அஃது அன்று எனினும் அறிந்தேம் யாம் செய்தி
நெறியின் இனிய சொல் நீர் வாய் மழலை
சிறுவன் எமக்கு உடைமையால்

#42
நீத்த நீர் ஊரன் நிலைமையும் வண்ணமும்
யார்க்கு உரைத்தி பாண அதனால் யாம் என் செய்தும்
கூத்தனா கொண்டு குறை நீ உடையையேல்
ஆட்டுவித்து உண்ணினும் உண்

#43
போது அவிழ் தாமரை பூம் துறை ஊரனை
தாது அவிழ் கோதை தகை இயலார் தாம் புலப்பர்
ஏதின்மை சொல்லி இருப்பர் பிறர் மகளிர்
பேதைமை தம்மேலே கொண்டு

#44
தண் துறை ஊரன் தட மென் பணை தோளாய்
வண்டு ஊது கோதை வகை நாடிக்கொண்டிருந்து
கோல வன முலையும் புல்லினான் என்று எடுத்து
சாலவும் தூற்றும் அலர்

#45
மூத்தேம் இனி பாண முன்னாயின் நாம் இளையேம்
கார் தண் கலி வயல் ஊரன் கடிது எமக்கு
பாத்து இல் பய மொழி பண்பு பல கூறி
நீத்தல் அறிந்திலேம் இன்று

#46
கய நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன்
நயமே பல சொல்லி நாணினன் போன்றான்
பயம் இல் யாழ்ப்பாண பழுது ஆய கூறாது
எழு நீ போ நீடாது மற்று

#47
அரக்கு ஆம்பல் தாமரை அம் செங்கழுநீர்
ஒருக்கு ஆர்ந்த வல்லி ஒலித்து ஆர குத்தும்
செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய் பாண
இருக்க எம் இல்லுள் வரல்

#48
கொக்கு ஆர் வள வயல் ஊரன் குளிர் சாந்தம்
மிக்க வன முலை புல்லான் பொலிவு உடைத்தா
தக்க யாழ்ப்பாண தளர் முலையாய் மூத்து அமைந்தார்
உத்தரம் வேண்டா வரல்
*@5 நெய்தல்

#49
நாவாய் வழங்கு நளி திரை தண் கடலுள்
ஓவா கலந்து ஆர்க்கும் ஒல்லென் இறா குப்பை
பா ஆர் அம் சேர்ப்பற்கு உரையாய் பரியாது
நோயால் நுணுகியவாறு

#50
நெடும் கடல் தண் சேர்ப்ப நின்னோடு உரையேன்
ஒடுங்கு மடல் பெண்ணை அன்றிற்கும் சொல்லேன்
கடும் சூளின் தான் கண்டு கானலுள் மேயும்
தடம் தாள் மட நாராய் கேள்

#51
மணி நிற நெய்தல் மலர் புரையும் கண்ணாய்
அணி நலம் உண்டு இறந்து நம் அருளா விட்ட
துணி முந்நீர் சேர்ப்பற்கு தூதோடு வந்த
பணி மொழி புள்ளே பற

#52
அன்னையும் இல் கடிந்தாள் யாங்கு இனி யாம் என் செய்கம்
புன்னைஅxம் கானலுள் புக்கு இருந்தும் நின்னை
நினையான் துறந்த நெடும் கழி சேர்ப்பற்கு
உரையேனோ பட்ட பழி

#53
அலவன் வழங்கும் அடும்பு இவர் எக்கர்
நிலவு நெடும் கானல் நீடார் துறந்தார்
புலவு மீன் குப்பை கவரும் துறைவன்
கலவான்கொல் தோழி நமக்கு

#54
என்னையர் தந்த இற உணங்கல் யாம் கடிந்து
புன்னையம் கானல் இருந்தேமா பொய்த்து எம்மை
சொல் நலம் கூறி நலன் உண்ட சேர்ப்பனை
என்னைகொல் யாம் காணுமாறு

#55
கொக்கு ஆர் கொடும் கழி கூடு நீர் தண் சேர்ப்பன்
நக்காங்கு அசதி நனி ஆடி தக்க
பொரு கயற்கண்ணினாய் புல்லான் விடினே
இரு கையும் நில்லா வளை

#56
நுரை தரும் ஓதம் கடந்து எமர் தந்த
கரும் கரை வன்மீன் கவரும் புள் ஓப்பின்
புகர் இல்லேம் யாம் இருப்ப பூம் கழி சேர்ப்பன்
நுகர்வனன் உண்டான் நலம்

#57
கொடு வாய் புணர் அன்றில் கொய் மடல் பெண்ணை
தடவு கிளை பயிரும் தண் கடல் சேர்ப்பன்
நிலவு கொடும் கழி நீந்தி நம் முன்றில்
புலவு திரை பொருத போழ்து

#58
சுறா எறி குப்பை சுழலும் கழியுள்
இறா எறி ஓதம் அலற இரைக்கும்
உறாஅ நீர் சேர்ப்பனை உள்ளி இருப்பின்
பொறாஅ என் முன்கை வளை

#59
தாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை
மாழை மான் நோக்கின் மடமொழி நூழை
நுழையும் மட மகன் யார்கொல் என்று அன்னை
புழையும் அடைத்தாள் கதவு

#60
பொன் அம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி
தென்னவன் கொற்கை குருகு இரிய மன்னரை
ஓடு புறம் கண்ட ஒண் தாரான் தேர் இதோ
கூடல் அணைய வரவு
*