நூ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நூக்கி (2)

ஊக்கி அதன்கண் முயலாதான் நூக்கி
புறத்து இரு போகு என்னும் இன்னா சொல் இல்லுள் – நாலடி:33 6/2,3
நூக்கி அவர் வெலினும் தாம் வெலினும் வெம் சமத்து – பழ:296/1

TOP


நூல் (58)

அவன் துணையா ஆறு போய் அற்றே நூல் கற்ற – நாலடி:14 6/3
அலகு சால் கற்பின் அறிவன் நூல் கல்லாது – நாலடி:14 10/1
உலக நூல் ஓதுவது எல்லாம் கலகல – நாலடி:14 10/2
விண்ணுலகே ஒக்கும் விழைவிற்றால் நுண் நூல்
உணர்வு இலர் ஆகிய ஊதியம் இல்லார் – நாலடி:24 3/2,3
கற்பவற்கு எல்லாம் எளிய நூல் மற்று அம் – நாலடி:32 7/2
பொழிப்பு அகலம் நுட்பம் நூல் எச்சம் இ நான்கின் – நாலடி:32 9/1
இல் பிறப்பு இல்லார் எனைத்து நூல் கற்பினும் – நாலடி:32 10/1
நல் அறிவாளர் நவின்ற நூல் தேற்றாதார் – நாலடி:32 10/3
கனம் பொதித்த நூல் விரித்து காட்டினும் கீழ் தன் – நாலடி:35 1/3
நூல் கற்றக்கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார் – நாலடி:36 2/3
பொத்த நூல் கல்லும் புணர் பிரியா அன்றிலும் போல் – நாலடி:38 6/1
உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூல் அற்றால் – நாலடி:39 6/1
படும் அன்றோ பல் நூல் வலையில் கெடும் அன்றோ – நான்மணி:78/3
மெல்ல புனல் பொழியும் மின் எழில் கார் தொல்லை நூல்
வல்லார் உளம் மகிழ தீம் தமிழை வார்க்குமே – கார்40:41/2,3
நூல் நவின்ற பாக தேர் நொவ்விதா சென்றீக – ஐந்50:10/1
நூல் நல நுண் வலையால் நொண்டு எடுத்த கானல் – திணை150:32/2
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் – குறள்:38 3/1
நூல் இன்றி கோட்டி கொளல் – குறள்:41 1/2
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரொடு ஏனையவர் – குறள்:41 10/1,2
ஏதில ஏதிலார் நூல் – குறள்:44 10/2
ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் – குறள்:56 10/1
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் – குறள்:69 3/1
அஞ்சுமவன் கற்ற நூல் – குறள்:73 7/2
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – குறள்:75 3/2
நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் – குறள்:79 3/1
மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை – குறள்:128 3/1
நுண் நூல் பெரும் கேள்வி நூல் கரைகண்டானும் – திரி:35/2
நுண் நூல் பெரும் கேள்வி நூல் கரைகண்டானும் – திரி:35/2
நுண்ணிய நூல் உணர்வினார் – ஆசாரக்:41/3
இலங்கு நூல் ஓதாத நாள் – ஆசாரக்:47/4
நூல் முறையாளர் துணிவு – ஆசாரக்:61/3
விதி பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை இல்லார் – பழ:258/1
பற்றினான் பற்று அற்றான் நூல் தவசி எ பொருளும் – சிறுபஞ்:6/1
முற்றினான் ஆகும் முதல்வன் நூல் பற்றினால் – சிறுபஞ்:6/2
மூவாது மூத்தவர் நூல் வல்லார் தாவா – சிறுபஞ்:20/2
மூத்தாலும் மூவார் நூல் தேற்றாதார் பாத்தி – சிறுபஞ்:21/2
வான் குரீஇ கூடு அரக்கு வால் உலண்டு நூல் புழுக்கோல் – சிறுபஞ்:25/1
நுணங்கு நூல் ஓதுதல் கேட்டல் மாணாக்கர் – சிறுபஞ்:28/3
நுண் கலப்பை நூல் ஓதுவார் – சிறுபஞ்:58/4
சாலாமை நன்று நூல் சாயினும் சாலாமை – சிறுபஞ்:59/2
விண்டவர் நூல் வேண்டாவிடும் – ஏலாதி:4/4
மடம் படான் மாண்டார் நூல் மாண்ட இடம் பட – ஏலாதி:8/2
நூல் பட்டு ஆர் பூங்கோதாய் நோக்கின் இவை ஆறும் – ஏலாதி:13/3
அயல அயலவர் நூல் – ஏலாதி:14/4
குடி ஓம்பல் வன்கண்மை நூல் வன்மை கூடம் – ஏலாதி:17/1
பாலின் நூல் எய்தப்படும் – ஏலாதி:22/4
கால் காப்பு வேண்டான் பெரியார் நூல் காலற்கு – ஏலாதி:23/3
பால் இல்லார் பற்றிய நூல் இல்லார் சாலவும் – ஏலாதி:36/2
நுணங்கிய நூல் நோக்கி நுழையா இணங்கிய – ஏலாதி:59/2
நூல் நோக்கி வாழ்வான் நுனித்து – ஏலாதி:59/4
அருமை நூல் சால்பு இல்லார் சாரின் இருமைக்கும் – ஏலாதி:60/2
உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி உயர்ந்தான் – ஏலாதி:64/2
பாலனார் நூல் அமர்ந்து பாராது வாலிதா – ஏலாதி:65/2
ஈரும் புகை இருளோடு இருள் நூல் ஆராய்ந்து – ஏலாதி:67/2
பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து நூல் கதியின் – ஏலாதி:77/2
இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால் – ஏலாதி:81/1
இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால் – ஏலாதி:81/1
சொல் அற நூல் சோர்வு இன்றி தொக்கு உரைத்து நல்ல – ஏலாதி:81/2

TOP


நூல்கள் (1)

ஈடு அற்றவர்க்கு ஈவான்ஆயின் நெறி நூல்கள்
பாடு இறப்ப பன்னும் இடத்து – ஏலாதி:41/3,4

TOP


நூலவர் (1)

நுண் விழைந்த நூலவர் நோக்கு – திரி:29/4

TOP


நூலார் (2)

வையார் வடித்த நூலார் – நாலடி:17 3/4
மொழிந்தார் முது நூலார் முன்பு – சிறுபஞ்:70/4

TOP


நூலாருள் (1)

நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் – குறள்:69 3/1

TOP


நூலிற்கு (1)

உரை ஆமோ நூலிற்கு நன்கு – நாலடி:32 9/4

TOP


நூலின் (1)

சாலும் பிற நூலின் சார்பு – ஏலாதி:5/4

TOP


நூலினை (1)

கதிப்பவர் நூலினை கையிகந்தார் ஆகி – பழ:258/2

TOP


நூலும் (6)

சேர்தற்பொருளது அற நெறி பல் நூலும்
தேர்தற்பொருள பொருள் – நான்மணி:50/3,4
விழுத்தகு நூலும் விழையாதார்க்கு இன்னா – இன்னா40:34/2
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும் – குறள்:59 1/1
அஞ்சுவான் கற்ற அரு நூலும் இ மூன்றும் – திரி:7/3
உணர்வுடையான் ஓதிய நூலும் புணர்வின்கண் – திரி:75/2
அறுவர் தம் நூலும் அறிந்து உணர்வு பற்றி – ஏலாதி:75/1

TOP


நூலுள் (1)

மூத்தார் இருந்துழி வேண்டார் முது நூலுள்
யாத்தார் அறிவினர் ஆய்ந்து – சிறுபஞ்:83/3,4

TOP


நூலை (1)

சேர்தற்கு செய்க பெரு நூலை யாதும் – திரி:90/2

TOP


நூலொடு (2)

மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம் – குறள்:64 6/1
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என் – குறள்:73 6/1

TOP


நூலோர் (2)

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – குறள்:33 2/1,2
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று – குறள்:95 1/1,2

TOP


நூலோர்க்கும் (1)

எ பால் நூலோர்க்கும் துணிவு – குறள்:54 3/2

TOP


நூழை (1)

மாழை மான் நோக்கின் மடமொழி நூழை
நுழையும் மட மகன் யார்கொல் என்று அன்னை – கைந்:59/2,3

TOP


நூற்கு (2)

நுண் மொழி நோக்கி பொருள் கொளலும் நூற்கு ஏலா – திரி:32/1
பல்லின் வனப்பும் வனப்பு அல்ல நூற்கு இயைந்த – சிறுபஞ்:35/3

TOP


நூற்கும் (1)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் – குறள்:55 3/1

TOP


நூற்றுவரை (1)

நூற்றுவரை கொண்டுவிடும் – பழ:369/4

TOP


நூற (1)

வரை புரை யானை கை நூற வரை மேல் – கள40:13/2

TOP


நூறி (1)

கடித்து கரும்பினை கண் தகர நூறி
இடித்து நீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும் – நாலடி:16 6/1,2

TOP


நூறு (1)

ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல் – குறள்:94 2/1

TOP


நூறும் (1)

பிழை நூறும் சான்றோர் பொறுப்பர் கயவர்க்கு – நாலடி:36 7/2

TOP


நூறுஆயிரவர்க்கு (1)

நூறுஆயிரவர்க்கு நேர் – பழ:214/4

TOP