மீ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மீ (6)

மீ போர்வை மாட்சித்து உடம்பு ஆனால் மீ போர்வை – நாலடி:5 2/2
மீ போர்வை மாட்சித்து உடம்பு ஆனால் மீ போர்வை – நாலடி:5 2/2
பெரும் தோளி பெய்வளாய் என்னும் மீ போர்த்த – நாலடி:5 7/3
உரைத்தாரை மீதூரா மீ கூற்றம் பல்லி – பழ:22/1
மீ வேலி போக்குபவர் – பழ:379/4
மீப்பு இலோரை மீ குணம் பழியார் – முது:3 2/1

TOP


மீக்கூற்றம் (4)

இல்லம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலி என்று இவை எல்லாம் மெல்ல – நாலடி:6 3/1,2
நில கிழமை மீக்கூற்றம் கல்வி நோய் இன்மை – ஆசாரக்:2/2
மன்னவன் ஆணை கீழ் மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செய பெறுப புன்னை – பழ:311/1,2
சென்ற புகழ் செல்வம் மீக்கூற்றம் சேவகம் – ஏலாதி:1/1

TOP


மீக்கூறும் (1)

மீக்கூறும் மன்னன் நிலம் – குறள்:39 6/2

TOP


மீக்கூறுமவர்களை (1)

வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல் – பழ:117/2

TOP


மீக்கோள் (1)

வடக்கொடு கோணம் தலை வையார் மீக்கோள்
உடல் கொடுத்து சேர்தல் வழி – ஆசாரக்:30/2,3

TOP


மீட்டு (2)

மேன்மக்கள் தம் வாயால் மீட்டு – நாலடி:7 10/4
மிக்க பழி பெரிதும் செய்தக்கால் மீட்டு அதற்கு – பழ:202/1

TOP


மீட்டும் (1)

சொல்லின் செவி கொடுத்து கேட்டீக மீட்டும்
வினாவற்க சொல் ஒழிந்தக்கால் – ஆசாரக்:74/3,4

TOP


மீது (3)

புல் ஈர போழ்தின் உழவே போல் மீது ஆடி – நாலடி:12 5/3
சாய் பறிக்க நீர் திகழும் தண் வயல் ஊரன் மீது
ஈ பறக்க நொந்தேனும் யானேமன் தீ பறக்க – நாலடி:39 9/1,2
கொம்பு மறைக்கும் இடாஅய் அவிழின் மீது
அம்பு பறத்தல் அரிது – சிறுபஞ்:94/3,4

TOP


மீதூர்தல் (1)

பார்த்து ஆற்றாதாரை பரியாது மீதூர்தல்
யாத்த தேசு இல்லார் படை ஆண்மை நாவிதன் வாள் – பழ:284/2,3

TOP


மீதூர்ந்து (1)

ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால் – பழ:287/1

TOP


மீதூர (1)

துன்பமே மீதூர கண்டும் துறவு உள்ளார் – நாலடி:6 10/1

TOP


மீதூரா (1)

உரைத்தாரை மீதூரா மீ கூற்றம் பல்லி – பழ:22/1

TOP


மீதூரும் (1)

மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை – பழ:157/2

TOP


மீப்பு (1)

மீப்பு இலோரை மீ குணம் பழியார் – முது:3 2/1

TOP


மீளா (1)

உடன் கொண்டு மீளா அரசும் இ மூன்றும் – திரி:103/3

TOP


மீளி (1)

மீளி கொள் மொய்ம்பினவர் – ஐந்70:38/4

TOP


மீளிமை (1)

அடக்கம் உடையவன் மீளிமை இன்னா – இன்னா40:40/1

TOP


மீன் (13)

தேம் படு தெண் கயத்து மீன் காட்டும் ஆங்கு – நாலடி:38 5/2
வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன் – கள40:7/3
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழு மீன்
உணங்கல் புள் ஓப்பும் ஒளி இழை மாதர் – ஐந்50:47/2,3
பல் மீன் உணங்கல் கவரும் துறைவனை – ஐந்70:66/2
சிறு மீன் கவுள் கொண்ட செம் தூவி நாராய் – ஐந்70:68/1
நெறி அறிதி மீன் தபு நீ – ஐந்70:68/4
இன மீன் இரும் கழி ஓதம் உலாவ – திணை50:44/1
குவளை அம் பூவொடு செம் கயல் மீன் சூடி – திணை150:147/3
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று – குறள்:94 1/2
பதியின் கலங்கிய மீன் – குறள்:112 6/2
வாளை மீன் உள்ளல் தலைப்படலும் ஆள் அல்லான் – திரி:7/1
காப்பிடுதல் புன் மீன் தலை – பழ:128/4
புலவு மீன் குப்பை கவரும் துறைவன் – கைந்:53/3

TOP


மீன்கண் (1)

கடும் புலால் வெண் மணல் கானல் உறு மீன்கண்
படும் புலால் பார்த்தும் பகர்தும் அடும்பு எலாம் – திணை150:51/1,2

TOP


மீனின் (1)

மேல் ஆடும் மீனின் பலர் ஆவர் ஏலா – நாலடி:12 3/2

TOP


மீனும் (1)

பாய் இருள் நீக்கும் மதியம் போல் பல் மீனும்
காய்கலாவாகும் நிலா – பழ:47/3,4

TOP