பி – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்சை 5
பிடர்த்தலை 1
பிடவம் 2
பிடாஅ 1
பிடி 4
பிடித்த 1
பிடித்து 2
பிடிப்பூணி 1
பிடியை 1
பிடியோடு 3
பிண்டி 2
பிண்டியின் 1
பிண 1
பிணக்கு 1
பிணங்கி 2
பிணங்கிய 2
பிணங்கும் 1
பிணத்த 1
பிணத்தின் 1
பிணம் 7
பிணி 25
பிணிக்கு 2
பிணிக்கும் 2
பிணித்தது 1
பிணித்துவிடல் 1
பிணிப்பட்டார் 1
பிணிப்பர் 3
பிணிப்பின் 1
பிணியும் 4
பிணியொடு 1
பிணை 6
பிணையல் 1
பிணையிலி 1
பிணையோ 1
பிணையோடு 2
பித்தரின் 1
பித்தன் 1
பிதற்றும் 2
பிதிர் 1
பிதிரும் 1
பிதுக்கி 1
பிரசை 1
பிரம்பூரி 1
பிரமாணம் 1
பிரித்தலும் 1
பிரித்து 1
பிரிதல் 1
பிரிந்த 2
பிரிந்தமை 1
பிரிந்தவர் 2
பிரிந்தார் 4
பிரிந்து 4
பிரிப்பர் 1
பிரிப்பு 1
பிரிய 3
பிரியலம் 2
பிரியா 2
பிரியார் 2
பிரியுமாம் 1
பிரிவது 1
பிரிவித்தல் 1
பிரிவில் 1
பிரிவின்கண் 1
பிரிவு 14
பிரிவும் 2
பிரைசம் 1
பிலம் 1
பிலிற்ற 1
பிழியார் 1
பிழை 2
பிழைத்த 3
பிழைத்தது 2
பிழைத்தாரை 1
பிழைத்து 8
பிழைப்ப 2
பிழைப்பது 1
பிழைப்பின் 1
பிழைப்பினை 1
பிழைப்பு 1
பிழையாதவர் 2
பிழையாது 3
பிள்ளை 2
பிள்ளைகட்கே 1
பிள்ளைகளை 1
பிள்ளையேயானும் 1
பிள்ளையை 1
பிளந்த 1
பிளந்து 2
பிளிற்றலும் 1
பிளிற்றாமை 1
பிளிற்றிவிடும் 1
பிளிற்றும் 1
பிற்பகல் 3
பிற்பாடு 1
பிற 23
பிறக்கலான் 1
பிறக்கு 1
பிறக்குங்கால் 1
பிறக்கும் 10
பிறங்க 2
பிறங்கல் 1
பிறங்கா 1
பிறங்கிற்று 1
பிறங்கு 2
பிறத்தல் 4
பிறத்தலால் 1
பிறத்தலும் 1
பிறந்த 11
பிறந்தக்கண்ணும் 1
பிறந்தமை 2
பிறந்தவன் 1
பிறந்தார் 11
பிறந்தார்க்கு 3
பிறந்தார்கண் 1
பிறந்தார்ஆயினும் 1
பிறந்தாரும் 1
பிறந்தாரை 1
பிறந்தான் 1
பிறந்திலாதார் 1
பிறந்து 4
பிறந்தும் 4
பிறந்துவிடும் 1
பிறந்தோர் 1
பிறந்தோர்கண்ணே 1
பிறப்பாய்விடும் 1
பிறப்பார் 1
பிறப்பாரும் 1
பிறப்பால் 1
பிறப்பாளர் 1
பிறப்பில் 2
பிறப்பிற்கு 1
பிறப்பின் 5
பிறப்பினால் 3
பிறப்பினான் 1
பிறப்பினும் 2
பிறப்பினுள் 2
பிறப்பினை 1
பிறப்பு 21
பிறப்பும் 3
பிறமன் 1
பிறர் 48
பிறர்க்கு 10
பிறர்க்கும் 1
பிறர்கண் 2
பிறர்பால் 1
பிறர்மாட்டு 1
பிறர்வாய் 1
பிறரால் 2
பிறரை 4
பிறரொடு 2
பிறரொடும் 1
பிறவாதவர் 1
பிறவாதார் 1
பிறவாமை 1
பிறவி 1
பிறவும் 2
பிறவோ 1
பிறழ்ந்து 1
பிறழ்வ 1
பிறழ்வன 1
பிறழாது 1
பிறழின் 1
பிறழும் 1
பிறற்கு 2
பிறன் 25
பிறன்கண் 2
பிறன்கை 1
பிறனை 2
பிறிதாய் 1
பிறிதி 1
பிறிதின் 2
பிறிதினால் 1
பிறிது 15
பிறிதுழி 1
பிறிதுஅரோ 1
பிறியோலை 1
பிறை 7
பின் 98
பின்றா 1
பின்றாது 1
பின்றை 2
பின்றையும் 1
பின்றையே 1
பின்னதாக 1
பின்னது 1
பின்னரும் 3
பின்னவாம் 1
பின்னார் 1
பின்னும் 5
பின்னை 6
பின்னொடு 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பிச்சை (5)

பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே – இனிய40:1/1
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே – இனிய40:39/1
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும் துச்சிருந்தான் – திரி:57/2
பிடி பிச்சை பின் இறை ஐயம் கூழ் கூற்றோடு – சிறுபஞ்:62/1
ஐயமே பிச்சை அரும் தவர்க்கு ஊண் ஆடை – ஏலாதி:70/1

TOP


பிடர்த்தலை (1)

பிடர்த்தலை பேரானை பெற்று கடைக்கால் – பழ:105/2

TOP


பிடவம் (2)

சேவல் என பிடவம் ஏறி – கைந்:26/2
பிடவம் குருந்தொடு பிண்டி மலர – கைந்:36/1

TOP


பிடாஅ (1)

பிடாஅ பெருந்தகை நற்கு – கார்40:32/4

TOP


பிடி (4)

வேழம் பிடி தழூஉம் வேய் சூழ் மலை நாட – பழ:265/3
பிடி பிச்சை பின் இறை ஐயம் கூழ் கூற்றோடு – சிறுபஞ்:62/1
பிரசை இரும் பிடி பேணி வரூஉம் – கைந்:5/2
மட மா இரும் பிடி வேழ – கைந்:17/2

TOP


பிடித்த (1)

ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா – இன்னா40:7/1

TOP


பிடித்து (2)

பின் ஆவது என்று பிடித்து இரார் முன்னே – நாலடி:1 5/2
தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும் – குறள்:104 7/1

TOP


பிடிப்பூணி (1)

தானும் நடவான் முடவன் பிடிப்பூணி
யானையொடு ஆடல் உறவு – பழ:192/3,4

TOP


பிடியை (1)

அழல் பட்டு அசைந்த பிடியை எழில் களிறு – ஐந்50:32/2

TOP


பிடியோடு (3)

வெம் சின வேழம் பிடியோடு இயைந்து ஆடும் – கார்40:38/2
பிடியோடு ஒருங்கு ஓடி தான் பிணங்கி வீழும் – ஐந்50:36/2
வரி நுதல் யானை பிடியோடு உறங்கும் – ஐந்70:37/2

TOP


பிண்டி (2)

எரி நிற நீள் பிண்டி இணர் இனம் எல்லாம் – திணை150:63/1
பிடவம் குருந்தொடு பிண்டி மலர – கைந்:36/1

TOP


பிண்டியின் (1)

பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி – பழ:404/1

TOP


பிண (1)

அன்று அவர்க்கு ஆங்கே பிண பறை ஆய் பின்றை – நாலடி:3 3/2

TOP


பிணக்கு (1)

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கு அறுக்கும் – திரி:10/1

TOP


பிணங்கி (2)

கூடி நிரந்து தலை பிணங்கி ஓடி – ஐந்50:5/2
பிடியோடு ஒருங்கு ஓடி தான் பிணங்கி வீழும் – ஐந்50:36/2

TOP


பிணங்கிய (2)

பீடு உடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள் – கள40:28/2
முள் உடை மூங்கில் பிணங்கிய சூழ் படப்பை – ஐந்70:36/1

TOP


பிணங்கும் (1)

வெதிர் பிணங்கும் சோலை வியன் கானம் செல்வார்க்கு – திணை50:18/2

TOP


பிணத்த (1)

மக்கள் பிணத்த சுடுகாடு தொக்க – நாலடி:13 1/2

TOP


பிணத்தின் (1)

செத்த பிணத்தின் கடை – நாலடி:29 1/4

TOP


பிணம் (7)

பிணம் கொண்டு காட்டு உய்ப்பார் கண்டும் மணம் கொண்டு ஈண்டு – நாலடி:3 5/2
நால் நால் திசையும் பிணம் பிறங்க யானை – கள40:6/1
புக்க வாய் எல்லாம் பிணம் பிறங்க தச்சன் – கள40:15/2
விளிந்தார் பிணம் குருதி ஈர்க்கும் தெளிந்து – கள40:18/2
குருதி பிணம் கவரும் தோற்றம் அதிர்வு இலா – கள40:20/2
அரசர் பிணம் கான்ற நெய்த்தோர் முரசொடு – கள40:37/1
ஏதில் பிணம் தழீஇ அற்று – குறள்:92 3/2

TOP


பிணி (25)

மெல்ல நினைக்கின் பிணி பல தெள்ளிதின் – நாலடி:14 5/2
வெறுமை இடத்தும் விழு பிணி போழ்தும் – நாலடி:33 9/1
அட்டில் புகாதாள் அரும் பிணி அட்டதனை – நாலடி:37 3/2
பிணி அன்னர் பின் நோக்கா பெண்டிர் உலகிற்கு – நான்மணி:31/1
அணி அன்னர் அன்புடைய மாக்கள் பிணி பயிலும் – நான்மணி:31/2
சொல் என்ற போழ்தே பிணி உரைக்கும் நல்லார் – நான்மணி:74/2
பிணி அன்னார் வாழும் மனை – இன்னா40:13/4
மூத்த இடத்து பிணி இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:21/3
குழவிகள் உற்ற பிணி இன்னா இன்னா – இன்னா40:35/3
குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே – இனிய40:12/1
வீங்கிய மென் தோள் கவினி பிணி தீர – ஐந்70:41/3
பிணி நிறம் தீர்ந்து பெரும் பணை தோள் வீங்க – திணை50:9/1
தீ பிணி தீண்டல் அரிது – குறள்:23 7/2
பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் – குறள்:74 8/1
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் – குறள்:95 9/1
பிணி அன்றோ பீடு நடை – குறள்:102 4/2
பிணி தன்னை தின்னுங்கால் தான் வருந்துமாறும் – திரி:88/1
அஞ்சும் பிணி மூப்பு அரும் கூற்றுடன் இயைந்து – பழ:137/3
பிணி ஈடு அழித்துவிடும் – பழ:355/4
காத்து உண்பான் காணான் பிணி – சிறுபஞ்:6/4
இளமையின் சிறந்தன்று மெய் பிணி இன்மை – முது:1 5/1
உண்டி வெய்யோர்க்கு உறு பிணி எளிது – முது:8 7/1
பிணி கிடந்தோன் பெற்ற இன்பம் நல்கூர்ந்தன்று – முது:9 4/1
இளமை கழியும் பிணி மூப்பு இயையும் – ஏலாதி:21/1
பிணி பிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பம் – ஏலாதி:24/1

TOP


பிணிக்கு (2)

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை – குறள்:111 2/1
பொருந்தா பழி என்னும் பொல்லா பிணிக்கு
மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி மருந்தின் – பழ:355/1,2

TOP


பிணிக்கும் (2)

கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது – குறள்:57 10/1
கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும் – குறள்:65 3/1

TOP


பிணித்தது (1)

அகன் பணை ஊரனை தாமம் பிணித்தது
இகன்மை கருதி இருப்பல் முகன் அமரா – ஐந்70:44/1,2

TOP


பிணித்துவிடல் (1)

நயத்தின் பிணித்துவிடல் – நான்மணி:10/4

TOP


பிணிப்பட்டார் (1)

பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார் இளையார் பசு பெண்டிர் என்று இவர்கட்கு – ஆசாரக்:64/1,2

TOP


பிணிப்பர் (3)

கந்தில் பிணிப்பர் களிற்றை கதம் தவிர – நான்மணி:10/1
மந்திரத்தினால் பிணிப்பர் மா நாகம் கொந்தி – நான்மணி:10/2
இரும்பின் பிணிப்பர் கயத்தை சான்றோரை – நான்மணி:10/3

TOP


பிணிப்பின் (1)

விடும் அன்றோ வீங்க பிணிப்பின் அவாஅ – நான்மணி:78/2

TOP


பிணியும் (4)

அடைந்தார் பிரிவும் அரும் பிணியும் கேடும் – நாலடி:18 3/1
என்றும் பிணியும் தொழில் ஒக்கும் என்றும் – நான்மணி:57/2
உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும் – குறள்:74 4/1
உள் உருக்கி தின்னும் பெரும் பிணியும் இ மூன்றும் – திரி:18/3

TOP


பிணியொடு (1)

பிணியொடு மூப்பும் வருமால் துணிவு ஒன்றி – நாலடி:6 5/2

TOP


பிணை (6)

பெற்றான் அதிர்ப்பின் பிணை அன்னாள்தான் அதிர்க்கும் – நான்மணி:19/1
பிணை மான் இனிது உண்ண வேண்டி கலைமா தன் – ஐந்50:38/2
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு – குறள்:109 9/1
பிணை செல்வம் மாண்பு இன்று இயங்கல் இவை மூன்றும் – திரி:88/3
விழும் இழை நல்லார் வெருள் பிணை போல் நோக்கம் – பழ:12/1
பீடு ஆர் இரலை பிணை தழுவ காடு ஆர – கைந்:29/2

TOP


பிணையல் (1)

தே மலர் நீலம் பிணையல் செறி மலர் – திணை50:40/3

TOP


பிணையிலி (1)

பெட்டாங்கு ஒழுகும் பிணையிலி முட்டினும் – நான்மணி:89/2

TOP


பிணையோ (1)

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் – குறள்:109 5/1

TOP


பிணையோடு (2)

உருகு மட மான் பிணையோடு உகளும் – திணை50:25/2
மான் எங்கும் தம் பிணையோடு ஆட மறி உகள – திணை150:102/1

TOP


பித்தரின் (1)

பித்தரின் பேதையார் இல் – நாலடி:6 2/4

TOP


பித்தன் (1)

பித்தன் என்று எள்ளப்படும் – நாலடி:34 10/4

TOP


பிதற்றும் (2)

முல்லை முகை முறுவல் முத்து என்று இவை பிதற்றும்
கல்லா புன்மாக்கள் கவற்ற விடுவெனோ – நாலடி:5 5/1,2
சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும்
பித்தரின் பேதையார் இல் – நாலடி:6 2/3,4

TOP


பிதிர் (1)

கலியாணம் தேவர் பிதிர் விழா வேள்வி என்று – ஆசாரக்:48/1

TOP


பிதிரும் (1)

பிதிரும் முலை மேல் சுணங்கு – திணை50:28/4

TOP


பிதுக்கி (1)

தோட்கோப்பு காலத்தால் கொண்டு உய்ம்மின் பீள் பிதுக்கி
பிள்ளையை தாய் அலற கோடலால் மற்று அதன் – நாலடி:2 10/2,3

TOP


பிரசை (1)

பிரசை இரும் பிடி பேணி வரூஉம் – கைந்:5/2

TOP


பிரம்பூரி (1)

வரம்பு இல் பெருமை தருமே பிரம்பூரி
என்றும் பதக்கு ஏழ் வரும் – பழ:143/3,4

TOP


பிரமாணம் (1)

தூய்மையுள் தோன்றும் பிரமாணம் இ மூன்றும் – திரி:37/3

TOP


பிரித்தலும் (1)

பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார் – குறள்:64 3/1

TOP


பிரித்து (1)

மறைக்கண் பிரித்து அவரை மாற்றாது ஒழிதல் – பழ:180/3

TOP


பிரிதல் (1)

உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் – குறள்:40 4/1,2

TOP


பிரிந்த (2)

நம்மின் பிரிந்த இடத்து – ஐந்50:39/4
கொண்கன் பிரிந்த குளிர் பூம் பொழில் நோக்கி – ஐந்50:44/1

TOP


பிரிந்தமை (1)

உள்ளம் பிரிந்தமை நீ அறிதி ஒள்ளிழாய் – கைந்:22/2

TOP


பிரிந்தவர் (2)

பிரிந்தவர் மேனி போல் புல்லென்ற வள்ளி – ஐந்50:8/1
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர்
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – குறள்:125 8/1,2

TOP


பிரிந்தார் (4)

பெண் இயல் நல்லாய் பிரிந்தார் வரல் கூறும் – கார்40:8/2
என்னரே ஏற்ற துணை பிரிந்தார் ஆற்று என்பார் – திணை150:106/1
பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்
பொருத்தலும் வல்லது அமைச்சு – குறள்:64 3/1,2
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி – குறள்:127 4/1

TOP


பிரிந்து (4)

துணை பிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றார் – திணை150:109/3
இணை பிரிந்து வாழ்வர் இனி – திணை150:109/4
உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் – குறள்:53 10/1
கள் உண்டல் காணின் கணவன் பிரிந்து உறைதல் – சிறுபஞ்:23/1

TOP


பிரிப்பர் (1)

பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி – குறள்:19 7/1

TOP


பிரிப்பு (1)

மயக்கிவிடினும் மன பிரிப்பு ஒன்று இன்றி – நாலடி:19 9/2

TOP


பிரிய (3)

பிரிய பெரும் படர் நோய் செய்யும் பெரிய – நாலடி:17 8/2
பிரிய பிரியுமாம் நோய் – நாலடி:25 7/4
தெண் கடல் சேர்ப்பன் பிரிய புலம்பு அடைந்து – ஐந்50:41/1

TOP


பிரியலம் (2)

நித்தலும் நம்மை பிரியலம் என்று உரைத்த – நாலடி:38 6/2
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா – குறள்:132 5/1

TOP


பிரியா (2)

பொத்த நூல் கல்லும் புணர் பிரியா அன்றிலும் போல் – நாலடி:38 6/1
கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர் – ஐந்50:34/1

TOP


பிரியார் (2)

பின் இன்னார் ஆகி பிரியார் ஒரு குடியார் – பழ:66/2
தம்மை பிரியார் தமர் போல் அடைந்தாரின் – பழ:188/2

TOP


பிரியுமாம் (1)

பிரிய பிரியுமாம் நோய் – நாலடி:25 7/4

TOP


பிரிவது (1)

யாமா பிரிவது இலம் – ஐந்70:4/4

TOP


பிரிவித்தல் (1)

கையார் பிரிவித்தல் காண் – திணை150:5/4

TOP


பிரிவில் (1)

நோதல் பிரிவில் கவறலே ஓதலின் – ஏலாதி:68/2

TOP


பிரிவின்கண் (1)

பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவது ஒன்று இல் – குறள்:84 9/1,2

TOP


பிரிவு (14)

மரீஇஇ பின்னை பிரிவு – நாலடி:22 10/4
மாலை பொழுதில் மணந்தார் பிரிவு உள்ளி – நாலடி:40 7/2
புணர் பாவை அன்னார் பிரிவு இன்னா இன்னா – இன்னா40:14/3
குருகிலை பூத்தன கானம் பிரிவு எண்ணி – கார்40:27/2
இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும் – குறள்:116 2/1
பிரிவு ஓர் இடத்து உண்மையான் – குறள்:116 3/2
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர் – குறள்:116 5/1
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர் – குறள்:116 6/1
இன்னாது இனியார் பிரிவு – குறள்:116 8/2
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி – குறள்:116 10/1
பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும் – குறள்:130 5/1
பிரிவு இன்றி போற்றப்படுவார் திரிவு இன்றி – பழ:25/2
பேஎயொடானும் பிரிவு – பழ:122/4
பெரு வரை நாட பிரிவு இன்று அதனால் – பழ:136/3

TOP


பிரிவும் (2)

அடைந்தார் பிரிவும் அரும் பிணியும் கேடும் – நாலடி:18 3/1
இரு தலையும் இன்னா பிரிவும் உருவினை – திரி:18/2

TOP


பிரைசம் (1)

பிரைசம் கொள வீழ்ந்த தீம் தேன் இறாஅல் – ஐந்70:10/1

TOP


பிலம் (1)

பிலம் தலைப்பட்டது போலாதே நல்ல – நாலடி:16 10/3

TOP


பிலிற்ற (1)

தெரி ஆ இன நிரை தீம் பால் பிலிற்ற
வரி வளை தோளி வருவார் நமர்கொல் – திணை50:30/2,3

TOP


பிழியார் (1)

உடுத்த ஆடை நீருள் பிழியார் விழுத்தக்கார் – ஆசாரக்:11/2

TOP


பிழை (2)

பிழை நூறும் சான்றோர் பொறுப்பர் கயவர்க்கு – நாலடி:36 7/2
முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை
பின் ஊறு இரங்கிவிடும் – குறள்:54 5/1,2

TOP


பிழைத்த (3)

பிழைத்த வேல் ஏந்தல் இனிது – குறள்:78 2/2
பிழைத்த பொறுத்தல் பெருமை சிறுமை – சிறுபஞ்:14/1
இழைத்த தீங்கு எண்ணி இருத்தல் பிழைத்த
பகை கெட வாழ்வதும் பல் பொருளால் பல்லார் – சிறுபஞ்:14/2,3

TOP


பிழைத்தது (2)

என் ஈன்ற யாயும் பிழைத்தது என் பொன் ஈன்ற – நாலடி:40 10/2
பிழைத்தது ஒறுக்கிற்பவர் – குறள்:78 9/2

TOP


பிழைத்தாரை (1)

பிழைத்தாரை அட்ட களத்து – கள40:3/4

TOP


பிழைத்து (8)

இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇ – நாலடி:1 6/1
கொடு வரி வேங்கை பிழைத்து கோட்பட்டு – ஐந்50:16/1
பேழ் வாய் இரும் புலி குஞ்சரம் கோள் பிழைத்து
பாழ் ஊர் பொதியில் புகா பார்க்கும் ஆர் இடை – ஐந்70:31/1,2
கொல் இயல் வேழம் குயவரி கோள் பிழைத்து
நல் இயல் தம் இனம் நாடுவ போல் நல் இயல் – திணை150:25/1,2
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து – குறள்:42 7/1
பெரியார் பிழைத்து ஒழுகுவார் – குறள்:90 6/2
பூ பிழைத்து வண்டு புடை ஆடும் கண்ணினாய் – பழ:354/3
ஏ பிழைத்து கா கொள்ளுமாறு – பழ:354/4

TOP


பிழைப்ப (2)

அரிமா பிழைப்ப எய்த கோல் – நாலடி:16 2/4
பின்னும் பிழைப்ப பொறுப்பவோ இன் இசை – பழ:221/2

TOP


பிழைப்பது (1)

என்றும் பிழைப்பது இல – ஆசாரக்:92/4

TOP


பிழைப்பின் (1)

குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும் – குறள்:102 9/1

TOP


பிழைப்பினை (1)

கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர் – பழ:80/2

TOP


பிழைப்பு (1)

முன்னும் ஒரு கால் பிழைப்பு ஆன்றார் ஆற்றவும் – பழ:221/1

TOP


பிழையாதவர் (2)

ஒழுக்கம் பிழையாதவர் – ஆசாரக்:2/4
ஒழுக்கம் பிழையாதவர் – ஆசாரக்:21/3

TOP


பிழையாது (3)

பெரு நடை தாம் பெறினும் பெற்றி பிழையாது
ஒரு நடையர் ஆகுவர் சான்றோர் பெரு நடை – நாலடி:35 3/1,2
வளைஇய சக்கரத்து ஆழி கொளை பிழையாது
ஒன்று இடையிட்டு வருமேல் நின் வாழ் நாட்கள் – ஐந்70:56/2,3
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – குறள்:31 7/2

TOP


பிள்ளை (2)

விருந்தினர் மூத்தோர் பசு சிறை பிள்ளை
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே என்றும் – ஆசாரக்:21/1,2
தாய் இழந்த பிள்ளை தலை இழந்த பெண்டாட்டி – ஏலாதி:78/1

TOP


பிள்ளைகட்கே (1)

இறு மென் குரல நின் பிள்ளைகட்கே ஆகி – ஐந்70:68/2

TOP


பிள்ளைகளை (1)

பிள்ளைகளை மருட்டும் தாயர் போல் அம்புலி மேல் – பழ:323/3

TOP


பிள்ளையேயானும் (1)

பிள்ளையேயானும் இழித்து உரையார் தம்மோடு – ஆசாரக்:68/3

TOP


பிள்ளையை (1)

பிள்ளையை தாய் அலற கோடலால் மற்று அதன் – நாலடி:2 10/3

TOP


பிளந்த (1)

ஓடா மறவர் எறிய நுதல் பிளந்த
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை – கள40:31/1,2

TOP


பிளந்து (2)

எற்றி வயவர் எறிய நுதல் பிளந்து
நெய்த்தோர் புனலுள் நிவந்த களிற்று உடம்பு – கள40:23/1,2
பிளந்து அறியும் பேர் ஆற்றலான் – சிறுபஞ்:56/4

TOP


பிளிற்றலும் (1)

பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும் துச்சிருந்தான் – திரி:57/2

TOP


பிளிற்றாமை (1)

பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே – இனிய40:39/1

TOP


பிளிற்றிவிடும் (1)

ஊரில் பிளிற்றிவிடும் – நான்மணி:34/4

TOP


பிளிற்றும் (1)

சூரல் புறவின் அணில் பிளிற்றும் சூழ் படப்பை – ஐந்70:35/1

TOP


பிற்பகல் (3)

முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி பிற்பகல்
துப்பு துகளின் கெழூஉம் புனல் நாடன் – கள40:1/3,4
பிற்பகல் தாமே வரும் – குறள்:32 9/2
பிற்பகல் கண்டுவிடும் – பழ:130/4

TOP


பிற்பாடு (1)

முந்தை எழுத்தின் வரவு உணர்ந்து பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு வந்த – திரி:56/1,2

TOP


பிற (23)

வினைப்பயன் அல்லால் பிற – நாலடி:11 5/4
விச்சை மற்று அல்ல பிற – நாலடி:14 4/4
கற்றலின் வாய்த்த பிற இல்லை எற்றுள்ளும் – நான்மணி:29/2
பிற ஆழி நீந்தல் அரிது – குறள்:1 8/2
ஆகுல நீர பிற – குறள்:4 4/2
மக்கள் பேறு அல்ல பிற – குறள்:7 1/2
அணி அல்ல மற்று பிற – குறள்:10 5/2
ஒப்புரவின் நல்ல பிற – குறள்:22 3/2
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று – குறள்:30 7/1,2
வாய்மையின் நல்ல பிற – குறள்:30 10/2
இல் அதனின் தீய பிற – குறள்:31 2/2
பகையும் உளவோ பிற – குறள்:31 4/2
பிற வினை எல்லாம் தரும் – குறள்:33 1/2
நீங்கின் அதனை பிற – குறள்:50 5/2
மற்றைய எல்லாம் பிற – குறள்:67 1/2
கண் அல்லது இல்லை பிற – குறள்:71 10/2
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும் – குறள்:91 9/1
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில் – குறள்:92 7/1
குண நலம் சான்றோர் நலனே பிற நலம் – குறள்:99 2/1
நல்லவர் நாணு பிற – குறள்:102 1/2
பண்பு யார்க்கு உரைக்க பிற – குறள்:119 1/2
மேனி அல்லால் பிற – ஆசாரக்:77/3
சாலும் பிற நூலின் சார்பு – ஏலாதி:5/4

TOP


பிறக்கலான் (1)

என்றும் அவனே பிறக்கலான் குன்றின் – நாலடி:31 7/2

TOP


பிறக்கு (1)

தனக்கு இன்னா இன்னா பிறக்கு – பழ:266/4

TOP


பிறக்குங்கால் (1)

பிறக்குங்கால் பேர் எனவும் பேரா இறக்குங்கால் – நான்மணி:40/1

TOP


பிறக்கும் (10)

கடல் சார்ந்தும் இன் நீர் பிறக்கும் மலை சார்ந்தும் – நாலடி:25 5/1
அழித்து பிறக்கும் பிறப்பு – நாலடி:31 2/4
கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும் மான் வயிற்று – நான்மணி:4/1
ஒள் அரிதாரம் பிறக்கும் பெரும் கடலுள் – நான்மணி:4/2
பல் விலைய முத்தம் பிறக்கும் அறிவார் யார் – நான்மணி:4/3
நல் ஆள் பிறக்கும் குடி – நான்மணி:4/4
கல்லில் பிறக்கும் கதிர் மணி காதலி – நான்மணி:5/1
சொல்லில் பிறக்கும் உயர் மதம் மெல்லென் – நான்மணி:5/2
அருளில் பிறக்கும் அற நெறி எல்லாம் – நான்மணி:5/3
சொல் பிறக்கும் சோர்வு தரும் – குறள்:105 4/2

TOP


பிறங்க (2)

நால் நால் திசையும் பிணம் பிறங்க யானை – கள40:6/1
புக்க வாய் எல்லாம் பிணம் பிறங்க தச்சன் – கள40:15/2

TOP


பிறங்கல் (1)

அறம் செய்து அருள் உடையர் ஆதல் பிறங்கல்
அமையொடு வேய் கலாம் வெற்ப அதுவே – பழ:215/2,3

TOP


பிறங்கா (1)

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
பண்பு உடை மக்கள் பெறின் – குறள்:7 2/1,2

TOP


பிறங்கிற்று (1)

பெருமை பிறங்கிற்று உலகு – குறள்:3 3/2

TOP


பிறங்கு (2)

பெற்றக்கடைத்தும் பிறங்கு அருவி நல் நாட – நாலடி:35 3/3
பிறங்கு மணல் மேல் அலவன் பரப்ப – திணை50:48/2

TOP


பிறத்தல் (4)

உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே – இனிய40:29/2
பிறத்தல் அதனான் வரும் – குறள்:31 3/2
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம் – குறள்:69 1/1
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும் – குறள்:100 2/1

TOP


பிறத்தலால் (1)

உப்பு ஈண்டு உவரி பிறத்தலால் தத்தம் – நாலடி:25 5/2

TOP


பிறத்தலும் (1)

செல்வ குடியுள் பிறத்தலும் பல் சவையின் – திரி:7/2

TOP


பிறந்த (11)

களர் நிலத்து பிறந்த உப்பினை சான்றோர் – நாலடி:14 3/1
பிறந்த குலம் மாயும் பேர் ஆண்மை மாயும் – நாலடி:29 5/1
சொல் பிறரை காக்கும் கருவியரோ இல் பிறந்த
நல் அறிவாளர் நவின்ற நூல் தேற்றாதார் – நாலடி:32 10/2,3
தூர்ந்து ஒழியும் பொய் பிறந்த போழ்தே மருத்துவன் – நான்மணி:74/1
சாவாத இல்லை பிறந்த உயிர் எல்லாம் – நான்மணி:76/1
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து – குறள்:61 3/1,2
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கி கொளல் – குறள்:103 6/1,2
அட்டமியும் ஏனை பிறந்த நாள் இ அனைத்தும் – ஆசாரக்:43/3
ஆற்றும் குடி பிறந்த சான்றவன் ஆற்றவும் – பழ:217/2
தான் பிறந்த இல் நினைந்து தன்னை கடைப்பிடித்து – சிறுபஞ்:66/1
ஓடு போல் தாரம் பிறந்த தாய் ஊடு போய் – சிறுபஞ்:81/2

TOP


பிறந்தக்கண்ணும் (1)

ஒத்த குடி பிறந்தக்கண்ணும் ஒன்று இல்லாதார் – நாலடி:29 1/3

TOP


பிறந்தமை (2)

பேர் இல் பிறந்தமை ஈரத்தின் அறிப – முது:2 1/1
சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப – முது:2 6/1

TOP


பிறந்தவன் (1)

குலத்து பிறந்தவன் கல்லாமை இன்னா – இன்னா40:19/1

TOP


பிறந்தார் (11)

விடுப்ப ஒழிதலொடு இன்ன குடி பிறந்தார்
குன்றா ஒழுக்கமா கொண்டார் கயவரொடு – நாலடி:15 3/2,3
மாணா குடி பிறந்தார் – நாலடி:15 5/4
எவ்வம் உழந்தக்கடைத்தும் குடி பிறந்தார்
செய்வர் செயற்பாலவை – நாலடி:15 7/3,4
ஒல்கார் குடி பிறந்தார் – நாலடி:15 8/4
செல்லா இடத்தும் குடி பிறந்தார் செய்வன – நாலடி:15 9/1
எற்று ஒன்றும் இல்லா இடத்தும் குடி பிறந்தார்
அற்று தன் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர் – நாலடி:15 10/1,2
ஏட்டை பருவத்தும் இல் பிறந்தார் செய்வன – நாலடி:36 8/1
இழுக்கார் குடி பிறந்தார் – குறள்:96 2/2
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் – குறள்:96 4/1,2
குலத்தில் பிறந்தார் வாய் சொல் – குறள்:96 9/2
கற்றது ஒன்று இன்றிவிடினும் குடி பிறந்தார்
மற்றொன்று அறிவாரின் மாண் மிக நல்லரால் – பழ:50/1,2

TOP


பிறந்தார்க்கு (3)

வான் தோய் குடி பிறந்தார்க்கு இல் – நாலடி:7 9/4
வான் தோய் குடி பிறந்தார்க்கு அல்லது வான் தோயும் – நாலடி:15 2/2
பிறந்தார்க்கு அரிய துணை துறந்து வாழ்தல் – நான்மணி:48/2

TOP


பிறந்தார்கண் (1)

இல் பிறந்தார்கண் அல்லது இல்லை இயல்பாக – குறள்:96 1/1

TOP


பிறந்தார்ஆயினும் (1)

மேல் பிறந்தார்ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும் – குறள்:41 9/1

TOP


பிறந்தாரும் (1)

பெரிய குடி பிறந்தாரும் தமக்கு – பழ:356/1

TOP


பிறந்தாரை (1)

சீறற்க சிற்றில் பிறந்தாரை கூறற்க – நான்மணி:1/3

TOP


பிறந்தான் (1)

கண்டுழி நா சாம் கடவான் குடி பிறந்தான்
உண்டுழி நா சாம் உணர்ந்து – சிறுபஞ்:8/3,4

TOP


பிறந்திலாதார் (1)

பிறந்தும் பிறந்திலாதார் – திரி:89/4

TOP


பிறந்து (4)

ஒரு நீர் பிறந்து ஒருங்கு நீண்டக்கடைத்தும் – நாலடி:24 6/1
நீருள் பிறந்து நிறம் பசியதுஆயினும் – நாலடி:36 10/1
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும் – குறள்:51 2/1
குடி பிறந்து தன்கண் பழி நாணுவானை – குறள்:80 4/1

TOP


பிறந்தும் (4)

பிறந்தும் பிறவாதார் இல் – நாலடி:1 7/4
மேல் பிறந்தார்ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு – குறள்:41 9/1,2
பிறந்தும் பிறந்திலாதார் – திரி:89/4
பிறந்தும் பிறவாதவர் – திரி:92/4

TOP


பிறந்துவிடும் (1)

பொருளில் பிறந்துவிடும் – நான்மணி:5/4

TOP


பிறந்தோர் (1)

வடுப்பட வைது இறந்தக்கண்ணும் குடி பிறந்தோர்
கூறார் தம் வாயின் சிதைந்து – நாலடி:16 6/3,4

TOP


பிறந்தோர்கண்ணே (1)

இல் பிறந்தோர்கண்ணே உள – நாலடி:15 6/4

TOP


பிறப்பாய்விடும் (1)

துக்க பிறப்பாய்விடும் – திரி:60/4

TOP


பிறப்பார் (1)

பிறப்பால் பிறப்பார் அறன் இன்புறுவர் – நான்மணி:56/3

TOP


பிறப்பாரும் (1)

கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர் – நான்மணி:57/3,4

TOP


பிறப்பால் (1)

பிறப்பால் பிறப்பார் அறன் இன்புறுவர் – நான்மணி:56/3

TOP


பிறப்பாளர் (1)

குடி பிறப்பாளர் தம் கொள்கையின் குன்றார் – நாலடி:15 1/2

TOP


பிறப்பில் (2)

இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா – குறள்:132 5/1
பேஎய் பிறப்பில் பெரும் பசியும் பாஅய் – திரி:60/1

TOP


பிறப்பிற்கு (1)

படரும் பிறப்பிற்கு ஒன்று ஈயார் பொருளை – பழ:379/1

TOP


பிறப்பின் (5)

உணரும் குடி பிறப்பின் ஊதியம் என்னோ – நாலடி:15 4/3
உயர் குடியுள் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும் – நாலடி:20 9/3
விலங்கின் பிறப்பின் வெருவும் புலம் தெரியா – திரி:60/2
மக்கள் பிறப்பின் நிரப்பு இடும்பை இ மூன்றும் – திரி:60/3
பிறப்பின் சிறியாரை சென்று பிறப்பினால் – பழ:198/2

TOP


பிறப்பினால் (3)

தோற்றம் அரிது ஆய மக்கள் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறம் செய்க மாற்று இன்றி – பழ:137/1,2
பிறப்பின் சிறியாரை சென்று பிறப்பினால்
சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே – பழ:198/2,3
பிறப்பினால் மாண்டார் வெகுளார் திறத்து உள்ளி – பழ:370/2

TOP


பிறப்பினான் (1)

தொண்டு இரும் துன்பம் தொடரும் பிறப்பினான்
மண்டிலமும் ஆகும் மதி – ஏலாதி:72/3,4

TOP


பிறப்பினும் (2)

என்றும் புதியார் பிறப்பினும் இ உலகத்து – நாலடி:31 7/1
எனை பல் பிறப்பினும் ஈண்டி தாம் கொண்ட – பழ:362/1

TOP


பிறப்பினுள் (2)

பிறப்பினை யாரும் முனியார் பிறப்பினுள்
பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும் – நாலடி:18 4/2,3
ஆற்ற வழி விலங்கினாரே பிறப்பினுள்
போற்றி எனப்படுவார் – ஆசாரக்:64/3,4

TOP


பிறப்பினை (1)

பிறப்பினை யாரும் முனியார் பிறப்பினுள் – நாலடி:18 4/2

TOP


பிறப்பு (21)

பிறப்பு இன்னாது என்று உணரும் பேர் அறிவினாரை – நாலடி:18 3/3
இல் பிறப்பு எண்ணி இடை திரியார் என்பது ஓர் – நாலடி:22 2/1
அழித்து பிறக்கும் பிறப்பு – நாலடி:31 2/4
இல் பிறப்பு இல்லார் எனைத்து நூல் கற்பினும் – நாலடி:32 10/1
அந்தணரின் நல்ல பிறப்பு இல்லை என் செயினும் – நான்மணி:32/1
இழிந்த பிறப்பு ஆய்விடும் – குறள்:14 3/2
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் – குறள்:14 4/2
விழிப்பது போலும் பிறப்பு – குறள்:34 9/2
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல் – குறள்:35 5/1
பற்று அற்றகண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும் – குறள்:35 9/1
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள்:36 1/2
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு – குறள்:36 7/2
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும் – குறள்:36 8/1
தவாஅ பிறப்பு ஈனும் வித்து – குறள்:37 1/2
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா – குறள்:98 2/1
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள்:101 2/2
வித்து அற வீடும் பிறப்பு – திரி:22/4
பிறப்பு நெடு வாழ்க்கை செல்வம் வனப்பு – ஆசாரக்:2/1
சார்வு அற ஓடி பிறப்பு அறுக்கும் அஃதே போல் – பழ:219/3
பிணி பிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பம் – ஏலாதி:24/1
உணரான் வினை பிறப்பு செய்யும் உணராத – ஏலாதி:72/2

TOP


பிறப்பும் (3)

கற்றனவும் கண் அகன்ற சாயலும் இல் பிறப்பும்
பக்கத்தார் பாராட்ட பாடு எய்தும் தான் உரைப்பின் – நாலடி:34 10/1,2
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – குறள்:7 2/1
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்கண் – குறள்:11 7/1

TOP


பிறமன் (1)

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை – குறள்:111 2/1

TOP


பிறர் (48)

வலியால் பிறர் மனை மேல் சென்றாரே இம்மை – நாலடி:9 5/3
பிறர் மறையின்கண் செவிடு ஆய் திறன் அறிந்து – நாலடி:16 8/1
பொறுமின் பிறர் கடும் சொல் போற்றுமின் வஞ்சம் – நாலடி:18 2/2
இன்னர் இனையர் எமர் பிறர் என்னும் சொல் – நாலடி:21 5/1
பொன் கலத்து ஊட்டி புறந்தரினும் நாய் பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும் அ சீர் – நாலடி:35 5/1,2
கன்றாமை வேண்டும் கடிய பிறர் செய்த – நான்மணி:11/1
துன்னிய கேளிர் பிறர் இல்லை மக்களின் – நான்மணி:54/2
செம் தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு – திணை150:24/3
எங்கையர் இல் உள்ளானே பாண நீ பிறர்
மங்கையர் இல் என்று மயங்கினாய் மங்கையர் இல் – திணை150:132/1,2
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து – குறள்:16 7/1
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும் – குறள்:16 10/1
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின் – குறள்:44 6/1
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல் – குறள்:65 6/1
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை – குறள்:99 4/1
ஒண் பொருள் கொள்வார் பிறர் – குறள்:101 9/2
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு – குறள்:102 5/1
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின் – குறள்:102 8/1
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல் – குறள்:108 9/1
பிறர் தன்னை பேணுங்கால் நாணலும் பேணார் – திரி:6/1
குற்றம் பிறர் மேல் உரைத்தலும் இ மூன்றும் – திரி:54/3
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்பு – ஆசாரக்:12/2
பிறர் மனை கள் களவு சூது கொலையோடு – ஆசாரக்:37/1
விளிந்தாரே போல பிறர் ஆகி நிற்கும் – பழ:42/1
பிறர்க்கு பிறர் செய்வது ஒன்று உண்டோ இல்லை – பழ:56/3
துன்னினார் அல்லர் பிறர் – பழ:66/4
உண்ணும் துணையும் உளரா பிறர் ஆவர் – பழ:89/2
பெரு மலை நாட பிறர் அறியலாகா – பழ:91/1
நல்லவும் தீயவும் நாடி பிறர் உரைக்கும் – பழ:104/1
மெய்யா உணரின் பிறர் பிறர்க்கு செய்வது என் – பழ:109/1
தம் குற்றம் நீக்கலர் ஆகி பிறர் குற்றம் – பழ:124/1
தம் மேல் புகழ் பிறர் பாராட்ட தம் மேல் தாம் – பழ:131/2
இனி யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார் – பழ:161/1
நினைத்து பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும் – பழ:266/2
நல்லார் உணர்ப பிறர் உணரார் நல்ல – பழ:337/2
தொடங்கி பிறர் உடைமை மேவார் குடம்பை – பழ:372/2
வேண்டின் அறிமடம் வேண்டேல் பிறர் மனை – சிறுபஞ்:4/3
வெள்கிலளாய் பிறர் இல் சேறல் உள்ளி – சிறுபஞ்:23/2
பிறர் கருமம் ஆராய்தல் தீ பெண் கிளைமை – சிறுபஞ்:23/3
வழீஇ பிறர் பொருளை வவ்வார் கெழீஇ – சிறுபஞ்:36/2
யார் யார் பிறர் மனையாள் உள்ளிட்டு இ ஐவரையும் – சிறுபஞ்:40/3
அரியர் ஆவார் பிறர் இல் செல்லாரே உண்ணார் – சிறுபஞ்:50/3
பெரியர் ஆவார் பிறர் கைத்து – சிறுபஞ்:50/4
மாயம் பிறர் பொருட்கண் மாற்றி மா மானத்தான் – சிறுபஞ்:55/3
காடு போல் கட்கு இனிய இல்லம் பிறர் பொருள் – சிறுபஞ்:81/1
பேண் இலன் நாய் பிறர் சேவகன் நாய் ஏண் இல் – சிறுபஞ்:93/2
கொல்லான் கொலை புரியான் பொய்யான் பிறர் பொருள் மேல் – ஏலாதி:19/1
மறுகான் பிறர் பொருள் வெளவான் இறுகானாய் – ஏலாதி:41/2
ஏதின்மை சொல்லி இருப்பர் பிறர் மகளிர் – கைந்:43/3

TOP


பிறர்க்கு (10)

எய்தியக்கண்ணும் பிறர்க்கு – நாலடி:15 2/4
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா – குறள்:32 1/1
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா – குறள்:32 9/1
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா – குறள்:84 4/1
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – குறள்:108 6/2
பிறர்க்கு உற்ற கட்டுரையும் சொல்லற்க சொல்லின் – ஆசாரக்:67/3
பிறர்க்கு பிறர் செய்வது ஒன்று உண்டோ இல்லை – பழ:56/3
பெற்றாலும் செல்வம் பிறர்க்கு ஈயார் தாம் துவ்வார் – பழ:107/1
மெய்யா உணரின் பிறர் பிறர்க்கு செய்வது என் – பழ:109/1
முன் பிறர்க்கு ஓடி மொழியற்க தின்குறுவான் – பழ:257/2

TOP


பிறர்க்கும் (1)

தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர் – குறள்:132 9/1

TOP


பிறர்கண் (2)

தீ பால தான் பிறர்கண் செய்யற்க நோய் பால – குறள்:21 6/1
செயிர் நோய் பிறர்கண் செய்யாமை செயிர் நோய் – சிறுபஞ்:30/2

TOP


பிறர்பால் (1)

புல்லான் பிறர்பால் புலால் மயங்கல் செல்லான் – ஏலாதி:42/2

TOP


பிறர்மாட்டு (1)

இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும் அடுத்து அடுத்து – நாலடி:35 8/2

TOP


பிறர்வாய் (1)

எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்
நுண் பொருள் காண்பது அறிவு – குறள்:43 4/1,2

TOP


பிறரால் (2)

தான் பிறரால் கருதற்பாடு உணர்ந்து தான் பிறரால் – சிறுபஞ்:66/2
தான் பிறரால் கருதற்பாடு உணர்ந்து தான் பிறரால்
சாவ என வாழான் சான்றோரால் பல் யாண்டும் – சிறுபஞ்:66/2,3

TOP


பிறரை (4)

எள்ளி பிறரை இகழ்ந்து உரையார் தள்ளியும் – நாலடி:16 7/2
சொல் பிறரை காக்கும் கருவியரோ இல் பிறந்த – நாலடி:32 10/2
கொள்ளாது தாம் தம்மை காவாதவர் பிறரை
கள்ளரா செய்குறுவார் – பழ:310/3,4
உரையான் குலன் குடிமை ஊனம் பிறரை
உரையான் பொருளொடு வாழ்வு ஆயு உரையானாய் – ஏலாதி:32/1,2

TOP


பிறரொடு (2)

பிறரொடு மந்திரம் கொள்ளார் இறைவனை – ஆசாரக்:78/1
கேடு பிறரொடு சூழ்தல் கிளர் மணி – பழ:81/2

TOP


பிறரொடும் (1)

நீயும் பிறரொடும் காண் நீடாதே ஆயும் – திணை150:98/2

TOP


பிறவாதவர் (1)

பிறந்தும் பிறவாதவர் – திரி:92/4

TOP


பிறவாதார் (1)

பிறந்தும் பிறவாதார் இல் – நாலடி:1 7/4

TOP


பிறவாமை (1)

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது – குறள்:37 2/1

TOP


பிறவி (1)

பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார் – குறள்:1 10/1

TOP


பிறவும் (2)

பிறவும் தம போல் செயின் – குறள்:12 10/2
நல்ல பிறவும் உணர்வாரை கட்டுரையின் – பழ:104/2

TOP


பிறவோ (1)

கள்ளம் பிறவோ பசப்பு – குறள்:119 4/2

TOP


பிறழ்ந்து (1)

சிறுகா பெருகா முறை பிறழ்ந்து வாரா – நாலடி:11 10/1

TOP


பிறழ்வ (1)

நீல சுறா பிறழ்வ போன்ற புனல் நாடன் – கள40:9/3

TOP


பிறழ்வன (1)

நெய்தல் இடை இடை வாளை பிறழ்வன போல் – கள40:33/2

TOP


பிறழாது (1)

பெரியார் சொல் பேணி பிறழாது நின்று – ஏலாதி:47/1

TOP


பிறழின் (1)

இன்பம் பிறழின் இயைவு எளிது மற்று அதன் – ஏலாதி:3/3

TOP


பிறழும் (1)

வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன் – கள40:7/3

TOP


பிறற்கு (2)

என்பும் உரியர் பிறற்கு – குறள்:8 2/2
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – குறள்:15 9/2

TOP


பிறன் (25)

கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன் தாரம் – நாலடி:9 1/3
பிறன் தாரம் நச்சுவார் சேரா பிறன் தாரம் – நாலடி:9 2/2
பிறன் தாரம் நச்சுவார் சேரா பிறன் தாரம் – நாலடி:9 2/2
உட்கான் பிறன் இல் புகல் – நாலடி:9 3/4
நன்று ஊக்கல் அந்தணர் உள்ளம் பிறன் ஆளும் – நான்மணி:84/2
பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா – இன்னா40:38/1
பிறன் மனை பின் நோக்கா பீடு இனிது ஆற்ற – இனிய40:15/1
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று – குறள்:5 9/2
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து – குறள்:15 1/1
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை – குறள்:15 2/1
தேரான் பிறன் இல் புகல் – குறள்:15 4/2
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள் – குறள்:15 7/1
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு – குறள்:15 8/1
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள் – குறள்:15 10/1
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம் – குறள்:17 3/1
வேண்டும் பிறன் கைப்பொருள் – குறள்:18 8/2
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும் – குறள்:19 6/1
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – குறள்:21 4/1
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை – குறள்:29 2/1
பிறன் போல நோக்கப்படும் – குறள்:105 7/2
பிறன் கடை நின்று ஒழுகுவானும் மறம் தெரியாது – திரி:19/2
இடை அறுத்து போகி பிறன் ஒருவன் சேரார் – ஆசாரக்:66/3
முற்பகல் கண்டான் பிறன் கேடு தன் கேடு – பழ:130/3
உய்யான் பிறன் செவிக்கு உய்த்து – சிறுபஞ்:1/4
பெரும் குணத்தார் சேர்மின் பிறன் பொருள் வவ்வன்மின் – சிறுபஞ்:24/1

TOP


பிறன்கண் (2)

வேண்டும் பிறன்கண் செயல் – குறள்:32 6/2
ஆசை பிறன்கண் படுதலும் பாசம் – திரி:20/1

TOP


பிறன்கை (1)

பிறன்கை பொருள் வெளவான் வாழ்தல் இனிதே – இனிய40:21/1

TOP


பிறனை (2)

அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனை
கொலை ஒக்கும் கொண்டு கண்மாறல் புலை ஒக்கும் – நான்மணி:6/2,3
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை – குறள்:51 8/1

TOP


பிறிதாய் (1)

மாரி நாள் வந்த விருந்தும் மனம் பிறிதாய்
காரியத்தில் குன்றா கணிகையும் வீரியத்து – திரி:76/1,2

TOP


பிறிதி (1)

பிறிதி யாதும் நோக்கான் உரையான் தொழுது கொண்டு – ஆசாரக்:20/3

TOP


பிறிதின் (2)

அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய் – குறள்:32 5/1
அறிவின் அருள் புரிந்து செல்லார் பிறிதின்
உயிர் செகுத்து ஊன் துய்த்து ஒழுகுதல் ஓம்பார் – பழ:164/2,3

TOP


பிறிதினால் (1)

பிறிதினால் மாண்டது எவனாம் பொறியின் – பழ:271/2

TOP


பிறிது (15)

யாங்கணும் தேரின் பிறிது இல்லை ஆங்கு தாம் – நாலடி:12 10/2
பேரும் பிறிது ஆகி தீர்த்தம் ஆம் ஓரும் – நாலடி:18 5/2
அலைப்பான் பிறிது உயிரை ஆக்கலும் குற்றம் – நான்மணி:100/1
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் – குறள்:26 1/1
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன் – குறள்:26 7/1
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை – குறள்:33 7/1,2
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை – குறள்:65 5/1
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை – குறள்:85 1/1
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும் – குறள்:85 2/1
சாரார் செவி ஓரார் சாரின் பிறிது ஒன்று – ஆசாரக்:78/2
அறிவு இலான் மெய் தலைப்பாடு பிறிது இல்லை – பழ:138/3
பேர் பிறிது ஆக பெறுதலால் போகாரே – பழ:146/3
உண்டது நீலம் பிறிது – பழ:168/4
உரையும் பொருள் முடிவும் ஒன்றால் உரை பிறிது
கொண்டு எடுத்து கூறல் கொடும் கழி தண் சேர்ப்ப – பழ:196/2,3
அறிவு சோர்வு உடைமையின் பிறிது சோர்வும் அறிப – முது:2 9/1

TOP


பிறிதுழி (1)

உணற்கு இனிய இன் நீர் பிறிதுழி இல் என்னும் – பழ:61/1

TOP


பிறிதுஅரோ (1)

பெண் கிடந்த தன்மை பிறிதுஅரோ பண் கிடந்து – திணை150:149/2

TOP


பிறியோலை (1)

பிறியோலை பேர்த்து விளியா கதிப்ப – திணை150:113/2

TOP


பிறை (7)

பெரியவர் கேண்மை பிறை போல நாளும் – நாலடி:13 5/1
இளம் பிறை ஆயக்கால் திங்களை சேராது – நாலடி:25 1/3
உறைத்து இருள் கூர்ந்தன்று வானம் பிறை தகை – கார்40:17/3
உறை எதிர்ந்து வித்திய ஊழ் ஏனல் பிறை எதிர்ந்த – திணை150:1/2
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி – குறள்:79 2/1
பிறை பெற்ற வாணுதலாய் தானே ஆடும் பேய் – பழ:403/3
உறை கிடந்தார் ஒன்று இடையிட்டு உண்பார் பிறை கிடந்து – சிறுபஞ்:69/2

TOP


பின் (98)

பின் ஆவது என்று பிடித்து இரார் முன்னே – நாலடி:1 5/2
சாறு போல் சாலவும் பின் உதவி மற்று அதன் – நாலடி:4 4/3
கடையாயார் பின் சென்று வாழ்வர் உடைய – நாலடி:16 10/2
வெறுப்பன செய்யாமை வேண்டும் வெறுத்த பின்
ஆர்க்கும் அருவு அணி மலை நாட – நாலடி:17 1/2,3
பின் துற்று துற்றுவர் சான்றவர் அ துற்று – நாலடி:19 10/2
கோட்டு பூ போல மலர்ந்து பின் கூம்பாது – நாலடி:22 5/1
கய பூ போல் முன் மலர்ந்து பின் கூம்புவாரை – நாலடி:22 5/3
கலந்து பழி காணார் சான்றோர் கலந்த பின்
தீமை எடுத்து உரைக்கும் திண் அறிவு இல்லாதார் – நாலடி:23 7/2,3
நட்ட பின் நாடி திரிவேனேல் நட்டான் – நாலடி:23 10/2
பெரும் செல்வம் எய்தியக்கால் பின் அறிதும் என்பார் – நாலடி:28 2/3
என்பாய் உகினும் இயல்பு இலார் பின் சென்று – நாலடி:30 2/1
மருண்ட மனத்தார் பின் செல்பவோ தாமும் – நாலடி:31 1/3
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின் சென்று – நாலடி:31 4/3
பின் அறிவாம் என்று இருக்கும் பேதையார் கை காட்டும் – நாலடி:33 8/3
ஓசை அவிந்த பின் ஆடுதும் என்று அற்றால் – நாலடி:34 2/2
தம்கண் மரபு இல்லார் பின் சென்று தாம் அவரை – நாலடி:34 6/1
பழையர் இவர் என்று பல் நாள் பின் நிற்பின் – நாலடி:35 9/1
உணரார் பின் சென்று நிலை – நாலடி:37 5/4
பெறு நசையால் பின் நிற்பார் இன்மையே பேணும் – நாலடி:39 1/3
பின் சென்றது அம்ம சிறு சிரல் பின் சென்றும் – நாலடி:40 5/2
பின் சென்றது அம்ம சிறு சிரல் பின் சென்றும் – நாலடி:40 5/2
அஞ்சி பின் வாங்கும் அடி – நாலடி:40 6/4
கடக்க அரும் கானத்து காளை பின் நாளை – நாலடி:40 8/1
ஏறிய பின் அறிப மா நலம் மாசு அற – நான்மணி:3/2
முன்னம் வித்து ஆக முளைக்கும் முளைத்த பின்
இன்னா வித்து ஆகிவிடும் – நான்மணி:30/3,4
பிணி அன்னர் பின் நோக்கா பெண்டிர் உலகிற்கு – நான்மணி:31/1
பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை என் பெறினும் – நான்மணி:66/1
பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா – இன்னா40:38/1
மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே – இனிய40:13/1
பிறன் மனை பின் நோக்கா பீடு இனிது ஆற்ற – இனிய40:15/1
கார் பெயல் பெய்த பின் செம் குள கோட்டு கீழ் – கள40:2/3
ஊர் ஆன் பின் ஆயன் உவந்து ஊதும் சீர்சால் – ஐந்50:7/2
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல் காதலன் பின்
காய்ந்து கதிர் தெறூஉம் காடு – ஐந்50:33/3,4
கல் அதர் அத்தத்தை காதலன் பின் போதல் – ஐந்50:37/3
கொன்றை குழல் ஊதி கோவலர் பின் நிரைத்து – ஐந்70:22/1
கொல் களிறு அன்னான் பின் செல்லும்கொல் என் பேதை – ஐந்70:42/3
அடு திறலான் பின் சென்ற ஆறு – திணை150:75/4
பின்றாது பேணும் புகழான் பின் பின்றா – திணை150:87/2
கூடினான் பின் பெரிது கூர்ந்து – திணை150:124/4
முன் கேட்டும் கண்டும் முடிவு அறியேன் பின் கேட்டு – திணை150:135/2
இன்னா சொல் நோற்பாரின் பின் – குறள்:16 10/2
முன் இன்று பின் நோக்கா சொல் – குறள்:19 4/2
வீயாது பின் சென்று அடும் – குறள்:21 7/2
மாற்றுவார் ஆற்றலின் பின் – குறள்:23 5/2
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னை சுடும் – குறள்:30 3/1,2
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின்
உய்யா விழுமம் தரும் – குறள்:32 3/1,2
பின் சார பொய்யாமை நன்று – குறள்:33 3/2
வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின்
ஈண்டு இயற்பால பல – குறள்:35 2/1,2
கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்கு தக – குறள்:40 1/1,2
எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு – குறள்:47 7/1,2
இடம் கண்ட பின் அல்லது – குறள்:50 1/2
தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
தேறுக தேறும் பொருள் – குறள்:51 9/1,2
பின் ஊறு இரங்கிவிடும் – குறள்:54 5/2
பின் பயக்கும் நற்பாலவை – குறள்:66 9/2
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின் – குறள்:67 2/1
போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின்
தேற்றுதல் யார்க்கும் அரிது – குறள்:70 3/1,2
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு – குறள்:78 10/1
பின் நீர பேதையார் நட்பு – குறள்:79 2/2
நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின்
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு – குறள்:80 1/1,2
இகழ்வார் பின் சென்று நிலை – குறள்:97 6/2
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே – குறள்:97 7/1
தொழுது உண்டு பின் செல்பவர் – குறள்:104 3/2
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு – குறள்:104 8/1,2
பின் இருந்து வாழ்வார் பலர் – குறள்:116 10/2
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – குறள்:125 8/2
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய் – குறள்:126 5/1
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்தரோ – குறள்:126 6/1
காண்கமன் கொண்கனை கண் ஆர கண்ட பின்
நீங்கும் என் மென் தோள் பசப்பு – குறள்:127 5/1,2
பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – குறள்:130 3/2
பெண் விழைந்து பின் செலினும் தன் செலவில் குன்றாமை – திரி:29/1
நன் பயம் காய்வின்கண் கூறலும் பின் பயவா – திரி:54/2
நீர் தொடாது எண்ணெய் உரையார் உரைத்த பின்
நீர் தொடார் நோக்கார் புலை – ஆசாரக்:13/3,4
பத்து திசையும் மனத்தால் மறைத்த பின்
அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இரு புலனும் – ஆசாரக்:34/1,2
தீண்டா நாள் மு நாளும் நோக்கார் நீர் ஆடிய பின்
ஈர்ஆறு நாளும் இகவற்க என்பதே – ஆசாரக்:42/1,2
முன் ஒளியும் பின் ஒளியும் அற்று – ஆசாரக்:51/3
எழுச்சிக்கண் பின் கூவார் தும்மார் வழுக்கியும் – ஆசாரக்:58/1
புழைக்கடை பின் புகார் கோட்டி உரிமை – ஆசாரக்:81/1
பின் இன்னார் ஆகி பிரியார் ஒரு குடியார் – பழ:66/2
பின் இன்னா பேதையார் நட்பு – பழ:113/4
பின் நலிதும் என்று உரைத்தல் பேதைமையே பின் நின்று – பழ:148/2
பின் நலிதும் என்று உரைத்தல் பேதைமையே பின் நின்று – பழ:148/2
பின் நலிவானை பெறல் வேண்டும் என்னதூஉம் – பழ:156/2
பெருக்க மதித்த பின் பேணாத செய்தும் – பழ:224/2
அன்பு அறிந்த பின் அல்லால் யார் யார்க்கும் தம் மறையை – பழ:257/1
கொல்வாங்கு கொன்ற பின் அல்லது உய கொண்டு – பழ:257/3
அணி எல்லாம் ஆடையின் பின் – பழ:271/4
ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்த பின்
நல் செய்கை செய்வார் போல் காட்டி நசை அழுங்க – பழ:283/1,2
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ வைப்போடு – பழ:312/2
வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவையால் – பழ:374/1
தொடங்கினார் இல்லத்து அதன் பின் துறவா – பழ:398/3
கலந்த பின் கீழ் காணார் காணாய் மடவாய் – சிறுபஞ்:36/3
புலந்த பின் போற்றார் புலை – சிறுபஞ்:36/4
புன் புலத்தை செய்து எரு போற்றிய பின் நன் புலக்கண் – சிறுபஞ்:58/2
பிடி பிச்சை பின் இறை ஐயம் கூழ் கூற்றோடு – சிறுபஞ்:62/1
பெறு பயன் பின் சால பெரிது – சிறுபஞ்:62/4
சூலாமை சூலின் படும் துன்பம் ஈன்ற பின்
ஏலாமை ஏற்ப வளர்ப்பு அருமை சால்பவை – சிறுபஞ்:73/1,2
முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று – முது:1 10/1
காய்ந்து கதிர் தெறூஉம் கானம் கடந்தார் பின்
ஏந்தல் இள முலை ஈர் எயிற்றாய் என் நெஞ்சு – கைந்:21/2,3

TOP


பின்றா (1)

பின்றாது பேணும் புகழான் பின் பின்றா
வெலற்கு அரிதாம் வில் வலான் வேல் விடலை பாங்கா – திணை150:87/2,3

TOP


பின்றாது (1)

பின்றாது பேணும் புகழான் பின் பின்றா – திணை150:87/2

TOP


பின்றை (2)

அன்று அவர்க்கு ஆங்கே பிண பறை ஆய் பின்றை
ஒலித்தலும் உண்டாம் என்று உய்ந்துபோம் ஆறே – நாலடி:3 3/2,3
வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை – குறள்:52 8/1

TOP


பின்றையும் (1)

காலை கழிந்ததன் பின்றையும் மேலை – பழ:93/2

TOP


பின்றையே (1)

பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி – நாலடி:4 6/2

TOP


பின்னதாக (1)

நாய் பின்னதாக தகர் – பழ:156/4

TOP


பின்னது (1)

சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் – குறள்:104 1/1

TOP


பின்னரும் (3)

பின்னரும் பீடு அழிக்கும் நோய் உள கொன்னே – நாலடி:10 2/2
விழைந்தார் போல் தீயவை பின்னரும் செய்தல் – பழ:211/2
விட்டு கருமம் செயவைத்த பின்னரும்
முட்டாது அவரை வியங்கொளவேண்டுமால் – பழ:279/1,2

TOP


பின்னவாம் (1)

பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை என் பெறினும் – நான்மணி:66/1

TOP


பின்னார் (1)

பின்னார் இல் அந்தி முடிவு – திணை150:132/4

TOP


பின்னும் (5)

கரும வரிசையால் கல்லாதார் பின்னும்
பெருமை உடையாரும் சேறல் அரு மரபின் – நாலடி:25 9/1,2
வலி ஆகி பின்னும் பயக்கும் மெலிவு இல் – ஐந்70:5/2
தக்க நெறியிடை பின்னும் செல பெறார் – பழ:46/3
பின்னும் பிழைப்ப பொறுப்பவோ இன் இசை – பழ:221/2
அறம் தேயும் பின்னும் அலர்மகளை நீக்கும் – சிறுபஞ்:105/3

TOP


பின்னை (6)

மரீஇஇ பின்னை பிரிவு – நாலடி:22 10/4
பின்னை அவர் கொடுக்கும் போழ்து – நாலடி:28 8/4
ஆய்வு இன்றி செய்யாதார் பின்னை வழி நினைந்து – பழ:261/2
பின்னை ஒருவரால் செய்வித்தும் என்று இருத்தல் – பழ:293/2
பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல் இன் இயற்கை – பழ:325/2
பின்னை உரைக்கப்படற்பாலான் முன்னி – பழ:347/2

TOP


பின்னொடு (1)

பின்னொடு நின்று படு மழை – ஐந்70:28/3

TOP