சொ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொக்கினாள் 1
சொக்கு 6
சொரி 10
சொரிகின்ற 1
சொரிதர 1
சொரிந்த 21
சொரிந்தனர் 1
சொரிந்து 5
சொரிய 3
சொரியவே 1
சொரிவர் 1
சொரிவன 1
சொல் 128
சொல்-மின் 8
சொல்கின்றான் 1
சொல்ல 4
சொல்லல் 3
சொல்லாய் 2
சொல்லார் 1
சொல்லால் 15
சொல்லான் 4
சொல்லானும் 1
சொல்லி 4
சொல்லிய 9
சொல்லின் 6
சொல்லினார் 1
சொல்லினால் 2
சொல்லினாள் 2
சொல்லினான் 3
சொல்லு-மின் 1
சொல்லும் 21
சொல்லுவாள் 1
சொல்லே 2
சொல்லை 6
சொல்லொடு 2
சொல்லோடு 2
சொல்லோடும் 1
சொல்லோன் 1
சொல்வதற்கு 2
சொல்வல் 1
சொல்வாம் 9
சொல்வாம்-ஆல் 1
சொல்வாய் 2
சொல்வார் 4
சொல்வாள் 3
சொல்வான் 17
சொல்வீர் 1
சொல்வு 2
சொல்வேன் 1
சொல 2
சொலல் 1
சொலாய் 1
சொலார் 1
சொலால் 2
சொலாள் 1
சொலி 1
சொலும் 3
சொலுவார் 1
சொலை 3
சொற்கு 2
சொற்படி 1
சொற்ற 2
சொற்றல் 1
சொற்றவும் 1
சொற்றவோ 1
சொற்றி 1
சொற்றிய 1
சொற்றிலீர் 1
சொற்றினர்-ஆல் 1
சொற்றினார் 2
சொற்றினான் 5
சொற்றினானே 1
சொற்று 2
சொற்றுபு 1
சொற்றுவள்-ஆல் 1
சொற்றுவாய் 1
சொற்றுவாள் 1
சொற்றுவான் 1
சொற்றுவீர் 1
சொறி 1
சொன்ன 27
சொன்னதற்கு 1
சொன்னது 3
சொன்னவாறு 1
சொன்னவை 6
சொன்னாய் 1
சொன்னார் 7
சொன்னாள் 5
சொன்னான் 32
சொன்னானே 1

சொக்கினாள் (1)

உற்று அகத்துள் தக சொக்கினாள் சொற்றுவாள் – தேம்பா:9 13/4

மேல்


சொக்கு (6)

சொக்கு அவிழும் வான் உலகர் ஒக்க நசை தூண்ட உறீஇ – தேம்பா:5 151/2
தூய் உலாம் இந்து உலாம் சொக்கு உலாம் பாதமும் – தேம்பா:9 8/1
சொக்கு அளாவு உரு தோன்றிய தோன்றலை – தேம்பா:10 109/1
சொக்கு உருவை உண்டு உண்டு துகளோடு ஆசை வளர்ந்தன பின் – தேம்பா:20 24/2
சொக்கு அடங்கு சுதனை துதி பாட – தேம்பா:21 15/2
சொக்கு அடைந்த உரு கொடு தோன்றினான் – தேம்பா:34 28/3

மேல்


சொரி (10)

மிடை என சொரி வியன் முகில் வரைவு இல பொழிவ – தேம்பா:1 3/4
சொரி இரத்தமொடு எரி பிலிற்றிய களி எயிற்று அடல் அதிரும் ஓர் – தேம்பா:15 155/1
வாள் கடைந்து அருந்தினால் போல் மதி சொரி பசும் பால் கற்றை – தேம்பா:16 3/3
சொரி சுமந்திடும் கார் ஒப்ப துளி கையின் சலுமோன் நின்ற – தேம்பா:25 16/1
முலை அணி சுதர் அகலவே அழும் முலை என சொரி அழுது உக – தேம்பா:25 82/1
சொரி வளர்ந்த அருள் தொடர் போய் என்றான் – தேம்பா:26 156/4
சொரி காய்ந்த கரி அன்ன காம பவ்வம் தோய்ந்து ஆழ்வான் – தேம்பா:26 164/4
சுனை வளர் குவளை ஆதி சொரி மது மலர்கள் வாடி – தேம்பா:29 8/1
சொரி வளர் வானும் காணா சோண மா முனிவன் நோற்பான் – தேம்பா:30 69/4
சொரி மாலை பூ மாலை சுடர் பொன் மாலை துகிர் குளும் தீ – தேம்பா:36 99/2

மேல்


சொரிகின்ற (1)

சொரிகின்ற இழி கறை சிந்துக சுழல் கொண்டு எறிதருமே – தேம்பா:15 150/4

மேல்


சொரிதர (1)

சோரும் வாய் விரித்து கண் தீ சொரிதர அகழி தாழ்ந்து – தேம்பா:2 10/2

மேல்


சொரிந்த (21)

சூலை உளைந்து ஒளிர் முத்து சொரிந்த வளை குலம் நின்று இரிய – தேம்பா:1 69/2
சொரிந்த நீர் புனல் தூற்றி வழங்கினார் – தேம்பா:9 55/4
கான் சொரிந்த கனி பட பாலொடு – தேம்பா:9 56/1
தேன் சொரிந்த சுவைப்பட சேண்உளோர் – தேம்பா:9 56/2
வான் சொரிந்த மது கொடு பல் உணா – தேம்பா:9 56/3
மீன் சொரிந்த வெயில் கலத்து ஈட்டினார் – தேம்பா:9 56/4
தூற்றுவான் இரு விழி சொரிந்த மாரியை – தேம்பா:9 117/2
சொரிந்த பால் உண்டு துஞ்சிய ஓதிமம் வெருவி – தேம்பா:12 50/3
சொரிந்த மு மத கரி தூண்டினான் அரோ – தேம்பா:15 141/4
மீன் சொரிந்த முடி வேய்ந்து ஒளிர் தாயும் – தேம்பா:21 14/1
தேன் சொரிந்த கொடி அம் திறலோனும் – தேம்பா:21 14/2
நான் சொரிந்த நவை தீர் மகவு ஏந்தி – தேம்பா:21 14/3
கான் சொரிந்த சுனை கண்டு அருகு உற்றார் – தேம்பா:21 14/4
சொரிந்த பூ முக தோன்றலை வேண்டினான் – தேம்பா:24 60/4
சொரிந்த தன்மை வர தொகை ஈக நீ – தேம்பா:26 35/3
சொரிந்த சீர் பொறா தன்மை இ நாடு செய் துகளோ – தேம்பா:26 56/1
சொரிந்த தேனினும் சுவை கொள் தன் உயிரினும் இனிமை – தேம்பா:26 64/1
சொரிந்த செம் புனல் துன்றிய வாரியில் – தேம்பா:26 78/2
சொரிந்த நெடும் பொழில்-கண் மெலிந்து வாடும் துயர் முகமாய் – தேம்பா:29 24/2
சொரிந்த தான் உணும் துப்பு இரந்தான் அரோ – தேம்பா:31 75/4
சொரிந்த ஓதை தொடர்ந்து இசை பாடலில் – தேம்பா:33 12/3

மேல்


சொரிந்தனர் (1)

சொல்லின் மாரி சொரிந்தனர் வேதியார் – தேம்பா:1 81/4

மேல்


சொரிந்து (5)

சொல்லின் மாரி சொரிந்து என ஏது இலா – தேம்பா:1 81/3
இருள் சொரிந்து அடர்ந்த கங்குல்-இடை முகில் இரு கண் கூச – தேம்பா:25 14/1
தெருள் சொரிந்து இடித்து மின்னும் திறத்து உளத்து ஆளும் நாதன் – தேம்பா:25 14/2
அருள் சொரிந்து இடும் மெஞ்ஞானத்து அவிர் கதிர் மின்னி அன்னான் – தேம்பா:25 14/3
மருள் சொரிந்து இருண்ட நெஞ்சில் வடு முகம் கூசி கண்டான் – தேம்பா:25 14/4

மேல்


சொரிய (3)

துளி கொள் முகில் என மண மலர் மது மழை சொரிய அடி இணை தொழுகுவர் சிலருமே – தேம்பா:8 68/4
சொரிய மாரி துறும் தொனி வெள்ளம் ஆய் – தேம்பா:8 92/1
துய்த்த வாய் இரத்தம் சொரிய துமித்து – தேம்பா:28 103/3

மேல்


சொரியவே (1)

துயர முகமொடு தசையை உணஉண உதிரம் உமிழுவர் சொரியவே – தேம்பா:24 40/4

மேல்


சொரிவர் (1)

சொரிவர் உளைகுவர் சுழலும் கதையொடு சுசியின் வெருளுவர் தொனி எழ – தேம்பா:24 39/3

மேல்


சொரிவன (1)

சொரிவன மழை போல் அழல் விட ஒரு-பால் தோல் உரித்து எரிப்பன ஒரு-பால் – தேம்பா:28 93/1

மேல்


சொல் (128)

வண் தமிழ் இனிதின் கேட்ட மட கிளி கிளக்கும் புன் சொல்
கொண்டு உமிழ்ந்து உரைப்ப நூலோர் குறை என கேளார்-கொல்லோ – தேம்பா:0 6/1,2
திருந்திய தமிழ் சொல் இல்லால் செவி புலன் கைப்ப நல்லோர் – தேம்பா:0 12/2
அரிய கோலியாற்று அறைந்த சொல் கேட்டனர் மருண்டார் – தேம்பா:3 15/4
சொல் நெடும் பகை தொடர்ந்தனன் எவரையும் நகைப்பான் – தேம்பா:3 16/4
சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின் பைம்பொன் சூல் முற்றி – தேம்பா:3 53/1
தார்-இடை குளித்த தேன் போல் தயை-இடை குளித்த சொல் கொண்டு – தேம்பா:4 28/3
தொனி பழித்த சொல் சொல்லிய வாய்மையான் – தேம்பா:4 62/4
துன்னி தாழ்ந்து தொழ உன் தீம் சுவை ஆர் குதலை சொல் கேட்ப – தேம்பா:5 22/3
அன்று என் தொடையால் அடையா பண்பு அன்னார் இருவர் சொல் அமிர்தம் – தேம்பா:5 24/1
சொல் வழியும் உள் வழியும் தொடர்ந்து அடங்காது எ உவமை தொகுதி யாவும் – தேம்பா:5 38/1
கள் உற்ற கனிந்த சொல் உற்றனன்-ஆல் – தேம்பா:5 65/4
கொல் ஏதம் இலா குதலை சொல் நல்லாள் – தேம்பா:5 91/3
அன்னவையும் நாண இனிது அம் சொல் நலாள் உளம் நாணி – தேம்பா:6 10/3
மீது-இடை ஊர் பானு உடுத்தாள் விளம்பிய சொல் கதிர் வெள்ளம் – தேம்பா:6 16/1
மானமே வேலியாய் வகுத்த சொல் தரும் – தேம்பா:6 26/1
கொண்ட சொல் இறைவனை வாழ்த்தி கூறுவான் – தேம்பா:6 33/4
திருந்து இன் ஆர் முகத்து உரைத்த சொல் திளை மது செவியால் – தேம்பா:6 62/3
கண் நலாள் உரைத்த சொல் காதின் உள் புக – தேம்பா:7 84/1
சொல் ஆரும் பங்கய கண் பொன் வரை தோள் சுடர் அகலம் தோற்று மேனி – தேம்பா:8 1/3
மண் புலனான் இரு செவியால் வான் உரிய இன்பு அருந்த மது சொல் கொண்டான் – தேம்பா:8 2/4
சிந்தையால் உருகி மீண்டு ஆய்ந்த சொல் செப்பினான் – தேம்பா:9 2/4
சொற்றல் உற்றிட்ட அ சொல் செவி பட்ட போது – தேம்பா:9 13/2
நாக்கு அணங்கு கனிந்து நவின்ற சொல்
நோக்கு அணங்கு கண்ணோட்டம் நொதுத்த கை – தேம்பா:9 38/1,2
தேன் உரு கோதை ஒத்தாள் செப்பிய கனிந்த தீம் சொல்
கான் உரு கொடியோன் சால களிப்புற செவியின் மாந்தி – தேம்பா:9 83/1,2
தெண் நிலா அடியினாள் செப்பும் சொல் விழைந்து – தேம்பா:9 85/2
துறை வனை உணர்வினாய் பணியை சொல் எனா – தேம்பா:9 116/2
பண் என சொன்ன தீம் சொல் பயன் உணர்ந்து அரிய அன்பால் – தேம்பா:9 118/1
நுண் என முறுவல் கோட்டி நுதல்வு அரும் கனி சொல் சொல்வாள் – தேம்பா:9 118/4
மாடக இசை நேர் இ சொல் மா தவன் சூசை கேட்டே – தேம்பா:9 128/1
துன்று அரு மா மாட்சிமையாள் தன் துணைவன் சொல் பணிய – தேம்பா:10 9/3
தேன் நிகர் சொல் செவி மாந்த செழும் தவத்தோன் உளத்து ஓங்கி – தேம்பா:10 11/1
மண் புலத்து இணை அற்ற மாது அறை வாய்ந்த சொல் கொடு தேறினன் – தேம்பா:10 127/3
இடத்து இடத்து அடர்த்தி உற்ற இக்கு உடைத்த இன்பு சொல்
குடத்தியர்க்கு அமைத்த பற்றல் கூர்ந்து தோன்றல் தாள் மிசை – தேம்பா:11 9/1,2
இன் இறாலினும் கனிந்த இன்ப அம் சொல் ஓதலால் – தேம்பா:11 12/2
சொல் தவிர்ந்த அருள் தொழில் கால் இது என்று – தேம்பா:11 29/1
சூள் எழுந்து உற சொல் என சொல்லுவாள் – தேம்பா:11 34/4
சொல் வாய் மல்கும் தூய் அறம் உற்றார் துகள் தீர்ந்தார் – தேம்பா:11 83/4
தன்மை கண்டே நூல் வடிவோன் சொல் தகை கேட்டால் – தேம்பா:11 84/3
ஆங்கு ஒடியா உறுதி சொல் அருத்தியினால் இருத்தியர் போல் அயனம் உன்னார் – தேம்பா:11 119/4
நல்கி தீம் சொல் பா இசைகள் நயப்பின் பாடி மின்னின் நிறத்து – தேம்பா:12 11/2
என்றன கடும் சொல் வாளால் இரு செவி முதல் ஈர்த்து அங்கண் – தேம்பா:12 94/1
நிழல் குளித்த உரு வானோன் கொடும் சொல் கேட்டு நெடும் கடல் நீர் – தேம்பா:13 5/3
முற்று உறும் அரந்தை எனும் நீத்தம் முழுகி சொல்
அற்று உறும் அழும் தொழில் அலால் எதுவும் ஆற்றான் – தேம்பா:14 11/3,4
சொல் என இரைப்ப அனைவரும் உவந்து துணுக்கென எழுந்து ஒருங்கு அகன்றார் – தேம்பா:14 42/4
சொல் வாய் தவிர் சிறை தீர் சூதர் உவந்து அப்புறம் போய் – தேம்பா:14 73/1
சொல் கலத்து ஏந்து இ காதை தூற்றிய இருவர் உள்ளம் – தேம்பா:14 122/2
சூர் ஒளித்த வானவர் தீம் சொல் ஆட ஏகினரே – தேம்பா:15 2/4
செய் பட்ட வானவரும் திற முனி சொல் கேட்டு உவந்து – தேம்பா:15 6/1
கலை ஈன்ற சொல் கடந்து காட்டியவை கேள்-மின் என்றான் – தேம்பா:15 7/4
வீறு ஆம் மதில் சூழ் கொணர்ந்து ஒரு சொல் விளம்பா வெல் வேல் ஏந்தி விரைந்து – தேம்பா:15 16/2
சொல் முகத்து அடங்கா சீர்த்தி சோசுவன் தூது என்று உற்றேன் – தேம்பா:15 48/2
சொல் உகும் மாரி சுளித்த முழக்கம் எழீஇ – தேம்பா:15 58/3
சொல் நாவினர் சய நெஞ்சினர் சுடு கண்ணினர் சுடர் பூண் – தேம்பா:15 142/2
சொல் வாய் உகு சுடு தீயொடு சுளி கண் அழல் உக நீர் – தேம்பா:15 143/1
சொல் வழங்கிய தகுதியால் சுருதி நூல் வழங்க – தேம்பா:16 8/1
நீர் வென்றன தோல் மத நீர் உகள் என்னில் அ சொல்
சீர் வென்றன பாய் பரி மா திசை யாங்கணும் பல் – தேம்பா:16 23/2,3
துன்னினார் பழம் பழியார் உவப்பில் ஆர்த்து சுடு நகை சொல்
பன்னினார் விழி குடைந்தார் பல் நாள் கோற சிறை வைத்தார் – தேம்பா:17 35/3,4
மறை கெழு நல் பயன் உரைத்த இறைவன் இ சொல் வழங்கினன்-ஆல் – தேம்பா:18 17/4
சொல் கலத்து இணை இலா சுவையில் அ தகவினோர் துதியோடு உண்டார் – தேம்பா:19 24/4
நின்றோன் வரும் கால் கடந்து உரைக்கும் நிறை சொல் வல்லோன் பா புகழும் – தேம்பா:19 26/3
சொல் கலத்து இமிழ் எழும் தூது உரைத்து என – தேம்பா:20 3/3
தேன் ஆர் காவில் நெடு நெறி போய் தீம் சொல் செல் குறைய – தேம்பா:20 15/2
சொல் கலத்து இனிய பாடல் தொடர்ந்த கின்னரம் பண் மற்று அ – தேம்பா:20 36/2
காள் அணி ஏறி வேல் சாயல் கனிவு உகுத்து உயிர் உண் தீம் சொல்
வேள் அணி திலதம் ஒத்தாள் வீணை நல் குரலில் சொன்னாள் – தேம்பா:20 44/3,4
சிரை உமிழ் கனி சொல் ஆணரன் சென்று திரு தகும் பூத்திபாற்கு ஆள் ஆய் – தேம்பா:20 67/3
நீர்த்தன குதலை சொல் கொடு நெடு நாள் நினைத்தவை மறைவு அற சொன்னாள் – தேம்பா:20 73/3
சொல் நிறத்து அழன்று பெண்மையை பெண்மை சொற்றிலீர் கொடியதே என்றார் – தேம்பா:20 79/4
நூல் வழி உரைத்த தீம் சொல் நொய் இதழ் அவிழ்ந்த தேன் போல் – தேம்பா:20 97/1
உணர்ந்த சொல் கேளேம் என்பார் உயிர் கொல்லா கொன்றேம் என்பார் – தேம்பா:20 111/3
பல் நெறி இசைத்த சொல் பயன் கண்டே வளன் – தேம்பா:20 129/1
சொல் கலத்தில் உயர்வோர் சுவை மாந்த – தேம்பா:21 18/1
சொல் குலத்து இழிவின் பிதற்றிய கதைகள் சுருதியோ நூல் மலி நாட்டில் – தேம்பா:23 107/2
கெலி பட கனி எந்தை கிளைத்த சொல்
கலி பட கலங்கி கடி ஈட்டமே – தேம்பா:24 65/1,2
சொல் முகத்து இவண் தொடையொடு தொடருதும் உரைத்தே – தேம்பா:25 1/4
கண் புலன் உணர்த்தும் காட்சி கசடர் சொல் உதவி கேளேல் – தேம்பா:25 68/1
சொல் அற துணையாய் தம்முள் துணை புறத்து இன்றி நின்றார் – தேம்பா:26 1/4
சூழ் வினை அறிந்த வானோன் சொல் எடுத்து அஞ்சேல் அஞ்சேல் – தேம்பா:26 6/3
சொல் ஆரும் மலர் சிந்தும் குன்றத்து உச்சி துறந்து ஓடி – தேம்பா:26 161/1
புண் துதைந்த தீ அன்ன சுடும் சொல் வாளால் புரை ஈர்ந்து – தேம்பா:26 162/1
தார் முகத்து இக்கு என முதல் சொல் சாற்றிய – தேம்பா:27 2/3
மாடக ஆணி ஒவ்வா மட கிளி உணர்த்தும் தீம் சொல்
சூடக மகளிர் ஒப்ப சொன்னவை பொய்யா சீலத்து – தேம்பா:27 17/2,3
சுடும் சொல் கொண்டு அரும் துகள் வடு ஆற்றுதல் வேண்டின் – தேம்பா:27 22/2
விடும் சொல் பூ என விள்ளிய நய முகத்து அருளே – தேம்பா:27 22/3
படும் சொல் கொண்டு உளம் பனி பட குளிர்ந்து இனிது உரைப்பான் – தேம்பா:27 22/4
ஊறிய இன் நிலை மது சொல் பூம் கொடியோன் உரி மறை நூல் உரைத்தான் மீண்டே – தேம்பா:27 93/4
சொல் பிறப்பின் அடங்காதான் திருவுளமே என அன்னான் சூசை மீண்டே – தேம்பா:27 96/3
செவி மத தீம் சொல் வெஃகி செல்க ஈங்கு அடிகள் என்றார் – தேம்பா:27 146/4
தேம் செய்த மது சொல் நல்லோய் செப்புதி என்றார் மாதோ – தேம்பா:27 147/4
வரும் பொருள் அறியாது அன்றோ மருண்ட சொல் வளர்த்தி வேதம் – தேம்பா:27 154/2
மடலை குடைய ஊறிய தேன் வதைத்த சொல் அமிர்தத்து – தேம்பா:28 29/3
வீய் முதிர் மதுவின் தீம் சொல் விரித்த நூல் கல்வி மிக்கோய் – தேம்பா:28 59/1
நூல் கடல் துறையின் கேள்வி நுணுங்கிய புலமையோன் சொல்
பால் கடல் பதுமம் அன்ன படர்ந்த கண் இமையா கேட்டு – தேம்பா:28 128/1,2
தேன் முழுது இறைஞ்சும் தீம் சொல் தேறலை துளித்து நீயே – தேம்பா:28 131/2
வீய் திரள் தளிர்த்த தேன் போல் விளம்பிய சொல் என்று எண்ணி – தேம்பா:28 135/3
சொல் வரு தோற்றம் அதே – தேம்பா:28 148/4
பண் மறைத்து இனிதின் நீயே பணித்த சொல் மறுக்கல் ஆற்றா – தேம்பா:29 7/1
சொல் நாடினன் அஃதே சுருதியாக தொடர்ந்து எண்ணி – தேம்பா:29 21/2
கனி உரு காட்டி தீம் சொல் கண்ணியால் உளத்தை வீக்கி – தேம்பா:29 40/3
பண் முழுது இறைஞ்சும் நின் சொல் பார்த்திபன் மறுக்கல் செய்யான் – தேம்பா:29 47/1
வீங்கு கேள்வி நலோன் மெலியா தீம் சொல் விரித்து உரைத்தான் – தேம்பா:29 53/4
வேல் நலம் ஒன்று ஊன்றிய சொல் வெடித்தான் தூது உரைகொண்டான் – தேம்பா:29 66/4
பொய் விளைந்த சொல் பொருந்தி உள் கொள்வதும் வேண்டாம் – தேம்பா:29 105/3
சொல் பொறா வெளிற்றின் சொன்ன பொய் உணர்ந்து இமிர் இ வேதத்து – தேம்பா:29 113/2
எள் உற எஞ்சும் என் சொல் இயம்பிட துணியும்-காலை – தேம்பா:30 3/4
தேன் இருந்து அலர் சொல் வானோன் திருமகன் கொல்ல ஓர்ந்தான் – தேம்பா:30 6/2
சொல் திறத்து ஒரு கணத்து உலகம் தோற்றி முன் – தேம்பா:30 52/1
மெய் குடத்து அமிர்து உண்டு அன்ன விரித்த சொல் செவியின் மாந்தி – தேம்பா:30 84/1
வேல் நேர் நுழைந்த சொல் விளைத்த புண் இடு நீர் – தேம்பா:31 13/1
அளி முகத்து அவன் சொல் அறைந்தால் பகல் – தேம்பா:31 70/2
உண்ட நல் உயிர் உற்ற நீர் ஒத்த சொல்
கொண்ட தன்மையில் தாய் களி கூர்ந்து அவன் – தேம்பா:31 73/2,3
ஊட்டலும் அனைய தீம் சொல் ஓர் என்பான் ஓதல் உற்றான் – தேம்பா:31 84/4
வேறு பட்டு எதிர்த்த மாற்றம் ஒன்று ஆக வெளிற்று இளம் சொல் ஒருவீரேல் – தேம்பா:31 89/1
ஆசு அவா அறும் அரும் தவன் அறைந்த சொல் கேட்டு – தேம்பா:32 19/1
சொல் மலை பழித்து எழீஇ தோன்றும் மங்கையர் – தேம்பா:32 68/3
சொல் தாறு கடந்த சினம் சூட்டு ஆளி ஏந்தி அவண் தோன்றும் மன்னர் – தேம்பா:32 78/3
கடல் கடிந்து கனிந்த சொல் கூற மெய் – தேம்பா:34 23/3
தேன் பொதுளும் கனி தீம் சொல் தெளி பயன் கேட்டு அவன் ஏந்தும் – தேம்பா:34 36/1
மீட்பது அரும் சொல் தொடுத்தான் விம்மித கற்பு உள தூயான் – தேம்பா:34 39/4
களி வளர் உவப்பில் எம் வினை தீர கனிந்த சொல் தொடங்கிய ஆறும் – தேம்பா:34 49/2
கள்வரும் பொருள் தகா கடந்த சொல் புகழ் – தேம்பா:35 10/1
சொல் திறம் அகன்ற நயம் உண்டு தொழுகின்றார் – தேம்பா:35 29/4
உருக மா வயிர குன்றும் உரைத்த சொல் எறி வேல் பாய்ந்து – தேம்பா:35 52/1
சுரை கிடந்த சொல் ஆசி தந்தான் அரோ – தேம்பா:36 7/4
சொல் எழுந்த சுடர் கொடு ஏறினார் – தேம்பா:36 15/4
கேள்-மினே கேள்-மின் இன்பம் கிளைத்த சொல் கனிய கேள்-மின் – தேம்பா:36 84/1
பொன் மழை கொடையால் இடு எனும் சொல் இ புவனியில் கேட்பது மறுத்தான் – தேம்பா:36 107/4
நாம்பா அணி பூம் கொடி பூத்த நறும் பூ அனைய சொல் மலரால் – தேம்பா:36 132/1
வெருவு ஆய் புன் சொல் அஞ்சிய பின் விருப்பம் தூண்ட தொழுது அணிந்தேன் – தேம்பா:36 133/4

மேல்


சொல்-மின் (8)

இ தலையான் ஆண்மையை வான் எய்தினரே சொல்-மின் என்றான் – தேம்பா:15 5/4
ஊன் சுவைத்து உடன்ற போரில் உற்றது சொல்-மின் என்ன – தேம்பா:16 7/3
உன்னி நீர் எவர் சொல்-மின் உற்றது என்றலும் – தேம்பா:18 6/3
கண் சேர் அணி கடந்த கவின் நீர் சொல்-மின் உவந்தது என்றார் – தேம்பா:20 12/4
சூர் ஏந்தி நிற்பர் எவர் சொல்-மின் என்றான் தொல் உணர்வான் – தேம்பா:20 27/4
உள்ளி வாழ் வரிகாள் சொல்-மின் உயிர் தனித்தலின் தீது உண்டோ – தேம்பா:26 108/4
வேண்டா சொல்லாய் சொல்-மின் என விளம்பி நக்கான் சிவாசிவன் தான் – தேம்பா:27 119/3
பொருள் தவழ்கிலதேல் தோன்ற பொருட்டு என்னோ சொல்-மின் என்றாள் – தேம்பா:29 9/4

மேல்


சொல்கின்றான் (1)

எஞ்சு இலா துயரத்து ஆழ்வாய் என்று மோயிசன் சொல்கின்றான் – தேம்பா:14 28/4

மேல்


சொல்ல (4)

சொல்ல கேட்டனள் தொன் மொழி தன்மையும் – தேம்பா:11 33/1
விஞ்சிய மாயை ஈர்தல் வேண்டும் என்று இரங்கி சொல்ல
எஞ்சிய பின்னர் நின்னை எண்ணி உள் தேறினேனே – தேம்பா:29 44/3,4
கண்டு என முனிவன் சொல்ல கனன்று உளம் புழுங்க செம் தீ – தேம்பா:29 109/2
தொகு மணி பறைகள் ஆர்ப்பும் சுட்ட அகில் புகையும் சொல்ல
மிகு மணி விழாவை காண விண்ணவர் வந்தது ஒத்தார் – தேம்பா:36 92/3,4

மேல்


சொல்லல் (3)

துணி மொழி உற்று இறைவனது துணை தாளை பணிந்து இவளும் சொல்லல் ஓர்ந்தாள் – தேம்பா:5 32/4
மேவுகின்ற திரு உளம் ஆய் சொல்லல் ஆற்றா மிடல் தன்னால் அடலை என புழுதி என்னா – தேம்பா:11 43/2
அருள் இழந்தே சொல்லல் என அழும் தொபீயன் – தேம்பா:27 62/3

மேல்


சொல்லாய் (2)

வேண்டா சொல்லாய் சொல்-மின் என விளம்பி நக்கான் சிவாசிவன் தான் – தேம்பா:27 119/3
அரும் பொருள் இறைமை சொல்லாய் என்றனன் வசிட்டன் என்பான் – தேம்பா:27 154/4

மேல்


சொல்லார் (1)

சொல்லார் உண்டோ உன் அருள் வாழ்த்தும் தொடை மிக்கோய் – தேம்பா:9 61/4

மேல்


சொல்லால் (15)

செவ்விய மதுர சொல்லால் சீரிய காட்சியோரும் – தேம்பா:2 4/2
தேன் செய்த கனி சொல்லால் சீர்த்த பல உறுதிகளும் செப்பினானே – தேம்பா:5 31/4
கொடு கொண்ட யாவும் இவள் கண்டு குளிர்ந்த சொல்லால்
உடு கொண்ட சென்னி ஒசித்து ஒல்லை அகல்-மின் என்னா – தேம்பா:5 82/2,3
மீன் பயிலும் முடியாள் வாய் விரித்து உரைத்த தீம் சொல்லால்
தேன் பயிலும் மலர் கொடியோன் செவி இன்பு உண்டு அறைதி என – தேம்பா:6 13/2,3
பண் கனிந்த நின் சொல்லால் பாசறை செய் மருள் தீர்த்தாய் – தேம்பா:6 17/4
தேன் ஆர்ந்த நறும் பாகில் தெள் அமுதில் தீம் சொல்லால்
மீன் ஆர்ந்த விண்ணவர் சூழ் விழைந்து இளவல் துதி பாட – தேம்பா:15 1/1,2
பண் கனிந்து இசைத்ததே போல் பாகினும் இனிய சொல்லால்
கண் கனிந்து உவப்ப தெள் ஆர் கதிர் கிழி பொறித்ததே போல் – தேம்பா:15 180/2,3
தேன் சுவைத்து உமிழ் தீம் சொல்லால் செப்புதலுற்றான் வானோன் – தேம்பா:16 7/4
பால் கலந்த நஞ்சு அன்ன பணி தீம் சொல்லால் பகைக்கு எஞ்சா – தேம்பா:17 33/2
நகையில் ஆற்றிய ஓர் சொல்லால் நடுங்கி ஆர்த்து ஒருங்கு மாய்ந்தார் – தேம்பா:25 62/4
மது கலத்து அலர் பூ வாயான் வழிந்த தேன் ஒத்த சொல்லால்
விது கலத்து இழிந்த வில் போல் விரித்த நூல் அனைத்தும் கேட்டு – தேம்பா:28 127/1,2
கொன் ஆர் முனி வேடத்து ஒருவன் மாயை கொடும் சொல்லால்
ஒன்னார் கண்டு உவப்ப ஒழிந்தது இ நாடு ஒருங்கு என்பாள் – தேம்பா:29 20/3,4
துய் பட இனிய சொல்லால் சுட்டிய உணர்வில் தேற்றேன் – தேம்பா:29 112/1
ஐயன் போக அவர் எய்திய ஆகுலம் அ சொல்லால்
ஐயம் போக தணிவு ஆம் எனினும் அன்று ஆங்கு இரவி – தேம்பா:31 35/1,2
சுனை ஈன்ற மலர் வாயான் துளி மது போல் இன்பம் உகும் சொல்லால் சொன்ன – தேம்பா:32 30/2

மேல்


சொல்லான் (4)

அருள் நீக்கும் பொறி செறித்தோன் அஞ்சி உணர்ந்தவை சொல்லான் – தேம்பா:6 3/4
வீய் முகத்து சுடும் சொல்லான் விளைத்திட்ட வெம் வெகுளி – தேம்பா:29 67/2
பண்ணோ தேனோ பணிந்து இணையா கனி சொல்லான்
உள் நோய் அருந்து என் உளம் வாட அருள் பூத்து – தேம்பா:31 39/2,3
பண் கடந்து இனிய சொல்லான் பகர்ந்து காட்டிய அ கோமார் – தேம்பா:32 90/1

மேல்


சொல்லானும் (1)

அளம் செயும் தமிழ் சொல்லானும் அவன் வளன் என்பது ஒத்தே – தேம்பா:0 3/4

மேல்


சொல்லி (4)

சொல்லை நிகழ்த்திய நுண்மை அறிந்தவர் சொல்லி நிகழ்த்துவரோ – தேம்பா:1 72/4
கோட்பது அரும் குண கிழத்தி கொழுநன் உளத்து எழ சொல்லி
வேட்பது அரும் மணம் மணத்த உயிர் இரண்டும் வேறு ஆகா – தேம்பா:10 10/2,3
பூம் கெழும் கொடியோன் சொல்லி புரை அற உணர்ந்ததேனும் – தேம்பா:14 21/2
உரம் தரும் உறுதி சொல்லி உதவிய வரங்கள் கேட்டு – தேம்பா:28 66/3

மேல்


சொல்லிய (9)

தொனி பழித்த சொல் சொல்லிய வாய்மையான் – தேம்பா:4 62/4
துறவு ஆய் மணம் நீக்குப சொல்லிய பின் – தேம்பா:5 104/3
சொல்லிய தூது போல் சுருங்கி வீசி அங்கு – தேம்பா:12 34/3
சொல்லிய விசையில் ஏந்தும் சூரலை சுழற்றி நிற்ப – தேம்பா:14 29/1
சொல்லிய மிக்கயேல் தோன்றல் தூய் அடி – தேம்பா:14 84/3
சொல்லிய இசையின் பெட்போ துயரமோ வியப்போ ஏதோ – தேம்பா:26 98/1
தொக்கு அது நீக்கி தன் வயத்து ஆதல் சொல்லிய ஆறினுள் முதற்றே – தேம்பா:27 158/4
சொல்லிய தன்மைத்து அன்றியும் அன்னான் துறும் துயர் கடை இலன் மிடியே – தேம்பா:31 88/1
படி முடித்து எவர்க்கும் பயன் தர வரும்-கால் பரமன் நீர் சொல்லிய வண்ணத்து – தேம்பா:31 90/1

மேல்


சொல்லின் (6)

சொல்லின் மாரி சொரிந்து என ஏது இலா – தேம்பா:1 81/3
சொல்லின் மாரி சொரிந்தனர் வேதியார் – தேம்பா:1 81/4
சொல்லின் முகத்து இறையோன் தாளை தாழ்ந்து இ தோன்றல் அறத்து – தேம்பா:3 56/3
சொல்லின் மாரியும் தூய் மலர் மாரியும் – தேம்பா:24 66/2
சொல்லின் மாரியின் தூய் புகழ் பாடியும் – தேம்பா:25 99/2
சொல்லின் ஆசி தந்து ஓர் வரை துன்னினார் – தேம்பா:36 5/4

மேல்


சொல்லினார் (1)

முன் தொழில் அத்தனம் முறிய சொல்லினார் – தேம்பா:25 55/4

மேல்


சொல்லினால் (2)

அன்புற சொல்லினால் அல்லது உன் அடி – தேம்பா:8 29/2
பீடு இல முனிவரன் பிதற்றும் சொல்லினால்
கோடு இல உனை அலால் குழைந்து நோக நான் – தேம்பா:29 27/2,3

மேல்


சொல்லினாள் (2)

துஞ்சு மா தவரே என சொல்லினாள் – தேம்பா:11 32/4
மாசை அம் கரை மருவ சொல்லினாள் – தேம்பா:14 12/4

மேல்


சொல்லினான் (3)

துணி மொழி உறுதியாக சொல்லினான் மது பெய் கோலான் – தேம்பா:30 7/4
அயர் தந்தாய் என மகன் வலித்து சொல்லினான் – தேம்பா:30 110/4
ஆவி தந்த அறா அருள் சொல்லினான் – தேம்பா:31 65/4

மேல்


சொல்லு-மின் (1)

எழுந்தனன் சொல்லு-மின் வந்தது என்று பின் – தேம்பா:26 136/3

மேல்


சொல்லும் (21)

சொல்லும் செல்லா கான் நுழையா தண் துளி தூற்றும் – தேம்பா:4 53/1
சொல்லும் கனி அம் சொலும் ஒள் நுதல் கொள் – தேம்பா:5 92/2
சொல்லும் செல்லா உள்நயம் உண்டே தொழுது உண்டார் – தேம்பா:9 58/4
அ திறத்து இவன் தன் சொல்லும் ஆர்வமும் உயிர்த்து சொல்வான் – தேம்பா:9 95/4
தண் தமிழ் சொல்லும் நூலும் சால்பொடு கடந்த வண்ணத்து – தேம்பா:9 133/1
மிக்கு ஆலம் கால் உருவத்து எய்தா முன்னர் விடும் தூது என்று எய்தும் எலாம் சொல்லும் பாலோ – தேம்பா:11 39/4
முன் செய்கை அனைத்தும் அவண் தோன்றி தீமை முயன்றதும் உள் விரும்பியதும் உரைத்த சொல்லும்
நல் செய்கை நன்றாய் செய்யாமல் செய்த நவையும் ஒளித்து இருள் தேடி இரவில் செய்த – தேம்பா:11 47/1,2
சொல்லும் தன்மை பொன் மொழி மாரி துளி வெற்பில் – தேம்பா:11 81/1
கண்டுளி உளத்தில் ஓங்க களித்த பூம் கொடியோன் சொல்லும்
தண் துளி முகில் சூழ் வெற்பை தகு மறை வடிவாய் நோக்காய் – தேம்பா:12 16/1,2
வெளி முகத்து அமலன் சொல்லும் வெல்லுவாய் வென்று என் ஆண்மை – தேம்பா:15 55/2
பூசை கொண்டு இறைஞ்சி கேட்டு பொழி மது உரையின் சொல்லும்
மாசை கொண்டு ஒளிர் குன்று அன்ன வயங்கும் அ நகரை முன்னோர் – தேம்பா:17 13/2,3
பிணி திறத்து இசைத்த சொல்லும் பெட்பு எழ கேட்டு தானும் – தேம்பா:20 114/2
சொல்லும் தன்மைத்து அர்ச்சனை விஞ்ச துகள் ஆக்கம் – தேம்பா:23 26/3
கை முகம் புதைத்த நாக நீல் முகத்தான் கரோதரன் நக்கு இவை சொல்லும்
பொய் முகம் புதைத்த வஞ்சனை தொழிலால் புரையுற உணர்ந்த வாய் யாவும் – தேம்பா:23 98/1,2
சொல்லும் நீர்மையின் துறும் பகை தோன்றிலது என்னில் – தேம்பா:25 33/3
சொல்லும் தன்மை அன்றேல் அருள் சூழ்ந்து நீ – தேம்பா:26 178/3
ஏர் விளை மணியின் சாயல் எண்ணிய அளவில் சொல்லும்
சீர் விளை இனிய யாப்பில் செய்யுளை பொருத்துவாரும் – தேம்பா:28 14/1,2
எஞ்சிய நினைவு உற்று ஆயாது இழிவு உற பிதற்றும் சொல்லும்
துஞ்சிய-காலை மெய் போல் தோன்றிய கனவும் ஒன்று ஆம் – தேம்பா:29 15/2,3
தூங்கியது ஓர் பூண் கலனோ சுடர் முடியோ முடி மணியோ சொல்லும் தன்மை – தேம்பா:32 27/2
சொன்னார் சொல்லும் பா உரை அஞ்சா சுடர் மொய்ப்ப – தேம்பா:36 75/2
மா முரசு ஒழிப்ப சொல்லும் வளன் முடி பத்தாம் நாளில் – தேம்பா:36 82/2

மேல்


சொல்லுவாள் (1)

சூள் எழுந்து உற சொல் என சொல்லுவாள் – தேம்பா:11 34/4

மேல்


சொல்லே (2)

சொல்லே உயிர் உண் எனவே சொலுவார் – தேம்பா:5 91/2
பண் அழகு ஆம் இன் குரல் போல் அழகு ஆம் நாவில் பணி சொல்லே
விண் அழகு ஆம் பெய் துளி போல் அழகு ஆம் சீர்க்கு விளை கொடையே – தேம்பா:27 40/1,2

மேல்


சொல்லை (6)

சொல்லை நிகழ்த்திய நுண்மை அறிந்தவர் சொல்லி நிகழ்த்துவரோ – தேம்பா:1 72/4
தனக்கு அளவு அகன்ற ஆசி சாற்றிய சொல்லை ஆய்ந்த – தேம்பா:7 7/3
நளி அமைந்த இனிய சொல்லை நவின்று அடி வணங்கிட்டானே – தேம்பா:7 11/4
நூல் நிலம் காட்சி மூத்தோன் நுதலி ஆங்கு உரைத்த சொல்லை
தேன் நில முகையின் நின்ற திரு நர_தேவன் கேட்டு – தேம்பா:12 95/1,2
வினை வளர் நவங்கள் நாட்டி விரித்த நின் சொல்லை கேட்டு – தேம்பா:29 8/3
இனிய தேனினும் இனிய யாவிலும் இனிய தீம் சொல்லை
கனிய ஆடுவள் உயிரை காத்த மெய் என இரு பொழுதே – தேம்பா:33 24/1,2

மேல்


சொல்லொடு (2)

நடு மா கடல் அடை காலையில் நமை ஆள்பவன் நவில் சொல்லொடு
மா கடல் மிசை வானவன் அரு ஆயின ஒருவன் – தேம்பா:14 48/2,3
அலம் கலந்த தேன் அனைய தீம் சொல்லொடு வஞ்ச – தேம்பா:26 67/2

மேல்


சொல்லோடு (2)

என்று இவை உணர்வின் சொல்லோடு எரி வினை அவிப்ப கண்ணீர் – தேம்பா:29 118/1
சொல்லோடு அடையா சுடர் செய் சிறுவன் – தேம்பா:30 27/3

மேல்


சொல்லோடும் (1)

சொல்லோடும் உணர்வு இன்றி சூழ்ந்த எலா கலை வல்லோய் தொழும் தொழும்பன் – தேம்பா:8 7/2

மேல்


சொல்லோன் (1)

மொய் அறும் ஓர் முறை தானும் முற்று உலவி வழங்கும் என்றான் முருகு சொல்லோன் – தேம்பா:32 89/4

மேல்


சொல்வதற்கு (2)

சொல்வதற்கு அரும் தொடை என தொடர்வன துகளே – தேம்பா:23 90/4
சொல்வதற்கு அரும் சினத்து அரசன் சொற்றினான் – தேம்பா:23 121/4

மேல்


சொல்வல் (1)

புன் சாயல் சொல்வல் என புகல் மீண்டு உற்றான் தவம் மூத்தோன் – தேம்பா:20 29/4

மேல்


சொல்வாம் (9)

ஆரிய வளன்-தன் காதை அறம் முதல் விளங்க சொல்வாம் – தேம்பா:0 1/4
துணை அற்று அகன்ற மாண்பு இவரை துணையாய் சேர்த்த நலம் சொல்வாம் – தேம்பா:5 25/4
பன்ன_அரு மணம் புணர் பயன் சொல்வாம் அரோ – தேம்பா:5 54/4
கால் வருந்திய காதை சொல்வாம் அரோ – தேம்பா:7 59/4
எல் செயும் கன்னி நீக்கி இளவலாய் உதித்தல் சொல்வாம் – தேம்பா:10 1/4
ஐ அற்று ஓர் அறிவு உடை மூ அரசரை தன் தாள் தொழுவான் அழைத்தல் சொல்வாம் – தேம்பா:11 103/4
முந்நீர் எழுந்த இளம் கதிர் போல் மூது ஊர் புறம் வந்தது சொல்வாம் – தேம்பா:12 1/4
அனையது விளம்பி போன அணி வளர் முல்லை சொல்வாம் – தேம்பா:12 27/4
தூய் வரும் படும் துயர் அற இவன் பிணி சொல்வாம் – தேம்பா:32 108/4

மேல்


சொல்வாம்-ஆல் (1)

முனை பகை தன்மைத்து அன்னார் முரிய உற்றது சொல்வாம்-ஆல் – தேம்பா:30 5/4

மேல்


சொல்வாய் (2)

அன்னதற்கு அடியேன் செய்யும் ஆவது என்று அருளி சொல்வாய் – தேம்பா:10 6/4
போய் நரகு உறைவர் யாரோ புலமையோய் விரித்து சொல்வாய் – தேம்பா:28 58/4

மேல்


சொல்வார் (4)

கூம்பு உளம் கடுத்த வஞ்சம் குணம் என சொல்வார் தேடி – தேம்பா:25 15/3
காய் நரகு என்ற போழ்தில் கணம் கொடு நின்றார் சொல்வார்
தீய் நரகு என்பது அல்லால் தீ நரகு எ நாடு எ பால் – தேம்பா:28 58/1,2
பொய்ப்பட உரைக்கின்றோரும் பொருந்து நூல் எளிய சொல்வார்
மைப்பட இவண் நான் செய்த வடுவினை பொறுத்த சால்பே – தேம்பா:29 112/2,3
எண் மேல் வைத்த எம் செயிர் ஆர்ஆர் இணை சொல்வார் – தேம்பா:35 60/4

மேல்


சொல்வாள் (3)

நூல் முகத்து உமிழ்ந்து தீம் தேன் நுகர்ந்த வாய் மலர்ந்து சொல்வாள் – தேம்பா:9 72/4
நுண் என முறுவல் கோட்டி நுதல்வு அரும் கனி சொல் சொல்வாள் – தேம்பா:9 118/4
பின்பு அருந்தி கேட்டு எவரும் வணங்கி நிற்ப பேர் அறிவு ஓங்கிய சாந்தி தொழுது சொல்வாள் – தேம்பா:11 57/4

மேல்


சொல்வான் (17)

தெருள் தகும் உணர்வின் சான்றோன் சேடனை தழுவி சொல்வான்
அருள் தகும் உணர்வு அன்பு ஊக்கம் அரும் பொறை ஈகை மற்ற – தேம்பா:4 42/1,2
சீர் ஆரும் கன்னியின்-கண் சேடு அமை ஓர் வானவனை செலுத்தி சொல்வான் – தேம்பா:5 26/4
உளம் கடுத்தவற்றை ஓர்ந்த கபிரியேல் உறுதி சொல்வான்
விளங்கு அடுத்து இறைவற்கு அன்பு மீது உற உவகை பூத்த – தேம்பா:7 9/2,3
நூல் அரும்ப வாய் அரும்பி சுருதி மது பொழியும் உரை நுதலி சொல்வான் – தேம்பா:8 6/4
பெயர்வு ஆயின கால் பிழி வாய் மலரே பிளிர சொல்வான் – தேம்பா:9 26/4
அ திறத்து இவன் தன் சொல்லும் ஆர்வமும் உயிர்த்து சொல்வான் – தேம்பா:9 95/4
ஓர் என்பான் மனத்துள் சொல்வான் உளத்தின்-பால் வணக்கம் செய்து – தேம்பா:9 126/2
அப்பு அணி உலக வேந்தின் அன்னையை நோக்கி சொல்வான் – தேம்பா:10 5/4
மை முறையால் இரவின் நடு மருவ கண்டு வளன் சொல்வான் – தேம்பா:10 72/4
மின்னி வீழ் உரும் அன்ன களித்து நோக்கி வெரு உய்க்கும் முகத்து ஆர்த்து விமலன் சொல்வான்
துன்னி வீழ் புனல் அன்ன நிலையா செல்வ தொகுதி விழைந்து அறம் நீத்த பாவிகாள் விண் – தேம்பா:11 48/1,2
வில்லை தாராய் வேய்ந்தனன் அன்பு ஆர் விதி சொல்வான் – தேம்பா:11 80/4
வில் முகத்து அம்பின் சென்று வேந்தர் ஐந்து இறைஞ்சி சொல்வான்
சொல் முகத்து அடங்கா சீர்த்தி சோசுவன் தூது என்று உற்றேன் – தேம்பா:15 48/1,2
பிதிர் எழும் கதிரின் வானோன் பிழி மொழி பிலிற்றி சொல்வான் – தேம்பா:16 5/4
பண் நரம்பு இளகி ஏங்கும் பரிசொடு விம்மி சொல்வான் – தேம்பா:26 97/4
ஒண் தவத்து இறைவன் சூசை உரை விரித்து இமிழின் சொல்வான் – தேம்பா:28 1/4
கோது வாய் கிழிந்த புண் மேல் குளும் மருந்து உறழ சொல்வான் – தேம்பா:28 2/4
ஆர் பகை காதை கேண்மோ அரும் தவ என்று சொல்வான்
நேர் பகை மறுப்ப நேரா நிமிர் நெடும் காட்சி நீரான் – தேம்பா:32 96/3,4

மேல்


சொல்வீர் (1)

மட்டு-இடை மலர்ந்த சோலை வகுத்து மண் ஒப்ப சொல்வீர் – தேம்பா:28 69/4

மேல்


சொல்வு (2)

தூக்கில் தாக்கிய நயன் சொல்வு ஆகுமோ – தேம்பா:4 12/4
நம்பு அயில் எமக்கு உள நயன் சொல்வு ஆம்-கொலோ – தேம்பா:9 98/4

மேல்


சொல்வேன் (1)

சீரிடத்து உரிமை சொல்வேன் செரு பட வம்-மின் என்ன – தேம்பா:15 54/3

மேல்


சொல (2)

பம்பர வளன் சொல அமரன் பன்னினான் – தேம்பா:18 8/4
நின்ற யாவையும் நீர் சொல போவல் யான் என்றான் – தேம்பா:25 6/4

மேல்


சொலல் (1)

துன் உயிர் சேர் இரக்கம் எமக்கு இலது ஏன் என்னா சொலல் உற்றான் – தேம்பா:10 67/4

மேல்


சொலாய் (1)

வீ உமிழ் தேனினும் விழைந்த தீம் சொலாய்
நீ உமிழ் நீர் உக நிலைமை யாது என்றாள் – தேம்பா:30 102/3,4

மேல்


சொலார் (1)

சீர் உலாம் அடியினால் தீம் சொலார் அடைவரோ – தேம்பா:9 5/4

மேல்


சொலால் (2)

நல்லே உயிர் காக்கும் நவின்ற சொலால் – தேம்பா:5 91/4
தாறு_இல சுடரை மை வரிந்து என்ன சாற்றுதும் புன் சொலால் அவையே – தேம்பா:27 156/4

மேல்


சொலாள் (1)

பண் குடைந்த சொலாள் பணிந்து ஏங்கினாள் – தேம்பா:36 4/4

மேல்


சொலி (1)

தான் நலம் பட சொலி தானை மீட்டு வேய் – தேம்பா:15 139/2

மேல்


சொலும் (3)

சொல்லும் கனி அம் சொலும் ஒள் நுதல் கொள் – தேம்பா:5 92/2
அருளின் காணியினான் அருளி சொலும்
பொருளின் காணிய பொற்பு அளிக்கு இன்புறீஇ – தேம்பா:26 157/1,2
தே நக மலர்ந்த கா சென்று அன்னான் சொலும்
பா நக உணர்வு கேட்டு அறத்தின்-பாலதோ – தேம்பா:29 95/2,3

மேல்


சொலுவார் (1)

சொல்லே உயிர் உண் எனவே சொலுவார்
கொல் ஏதம் இலா குதலை சொல் நல்லாள் – தேம்பா:5 91/2,3

மேல்


சொலை (3)

தேன் இறைஞ்சிய தீம் சொலை கேட்கிலான் – தேம்பா:4 20/4
தேனும் நேராது தேர் தீம் சொலை செப்பவே – தேம்பா:9 3/3
தேன் நலம் கடந்த மென் குதலை தீம் சொலை
வான் நலம் உளம் பட செவிகள் மாந்தினேல் – தேம்பா:9 107/2,3

மேல்


சொற்கு (2)

பொய் வயத்தினான் புகைந்த சொற்கு அஞ்சுவது என்னோ – தேம்பா:3 20/2
தழன்ற சொற்கு இறையோன் தரும் ஏவலால் – தேம்பா:23 32/3

மேல்


சொற்படி (1)

பன்னி ஆயின நின் வாய் சொற்படி எனக்கு ஆக என்றாள் – தேம்பா:7 21/4

மேல்


சொற்ற (2)

சொற்ற ஆறு அறியேனேல் துகள் துடைத்த எந்தை வரம் – தேம்பா:6 7/2
சொற்ற ஆய சீரதோ தொடுத்த பாவின் மாலையால் – தேம்பா:7 38/4

மேல்


சொற்றல் (1)

சொற்றல் உற்றிட்ட அ சொல் செவி பட்ட போது – தேம்பா:9 13/2

மேல்


சொற்றவும் (1)

துடைத்த தன் ஐயமும் துகளும் சொற்றவும்
உடைத்து அன மன நசை பொறாத உண்மையால் – தேம்பா:8 25/2,3

மேல்


சொற்றவோ (1)

தூ வரும் பலவும் தொகை சொற்றவோ – தேம்பா:11 28/4

மேல்


சொற்றி (1)

துய்த்த அருள் உமிழும் முக நல்லிர் என்று சொற்றி மலர் – தேம்பா:20 14/3

மேல்


சொற்றிய (1)

துப்பும் காய் எரி என்றால் சுடும்-கொல்லோ சொற்றிய ஓர் – தேம்பா:30 116/1

மேல்


சொற்றிலீர் (1)

சொல் நிறத்து அழன்று பெண்மையை பெண்மை சொற்றிலீர் கொடியதே என்றார் – தேம்பா:20 79/4

மேல்


சொற்றினர்-ஆல் (1)

துணி சாயல் மலர் முகத்து துன்னி ஆசி சொற்றினர்-ஆல் – தேம்பா:20 20/4

மேல்


சொற்றினார் (2)

துணிவு அரும் அன்பு எழுந்து ஆசி சொற்றினார் – தேம்பா:10 88/4
உருவில் வேய்ந்த வேந்த வாழி என்று உறுதி சொற்றினார் – தேம்பா:11 8/4

மேல்


சொற்றினான் (5)

தூய் உடு உணர்வோய் என்ன சொற்றினான் குரவன் அம்மா – தேம்பா:4 36/4
தொடை வரும் கனி பாவின் சொற்றினான் – தேம்பா:14 18/4
துன்னி நீர் சட்சதன் தொழுது சொற்றினான் – தேம்பா:18 6/4
தொழுத ஆணரன் பின் இவை சொற்றினான் – தேம்பா:20 92/4
சொல்வதற்கு அரும் சினத்து அரசன் சொற்றினான் – தேம்பா:23 121/4

மேல்


சொற்றினானே (1)

சோமம் சால் கொடி வல்லோனும் துயருற சொற்றினானே – தேம்பா:12 92/4

மேல்


சொற்று (2)

சொற்று உறும் எனது சூழ்ச்சி துணிவு இழிவாக தோன்றின் – தேம்பா:25 59/3
சொற்று என கனைந்து சூழ் துணர் குடைந்தவே – தேம்பா:30 58/4

மேல்


சொற்றுபு (1)

சொற்றுபு கொடியார் மாசு_இல் ஆணரனை சுளித்து அடித்து இழிவுற கச்சின் – தேம்பா:20 78/3

மேல்


சொற்றுவள்-ஆல் (1)

தொழுதாள் அழுதாள் பினை சொற்றுவள்-ஆல் – தேம்பா:11 58/4

மேல்


சொற்றுவாய் (1)

துதி பழித்து இட்ட நாமம் சொற்றுவாய் கன்னி மாதே – தேம்பா:7 10/4

மேல்


சொற்றுவாள் (1)

உற்று அகத்துள் தக சொக்கினாள் சொற்றுவாள் – தேம்பா:9 13/4

மேல்


சொற்றுவான் (1)

தோம் என யாவும் தீர் தவற்கு சொற்றுவான் – தேம்பா:5 39/4

மேல்


சொற்றுவீர் (1)

தூற்றிய பின்னர் வாழ்த்தி சொற்றுவீர் என்றார் அன்னார் – தேம்பா:15 53/4

மேல்


சொறி (1)

சொறி படர் அரியும் உரகமும் மலமும் சுடச்சுட அமிர்து என ஊட்டி – தேம்பா:28 95/1

மேல்


சொன்ன (27)

உண்டு அமிழ்து உமிழ்ந்தால் என்ன உலகு ஒருங்கு ஆள்வாள் சொன்ன
பண்டு அமிழ்து உண்டு யான் புன் பாவொடு கக்க கேட்பார் – தேம்பா:0 6/3,4
சொன்ன பா நிகரும் மேல் துளங்கினான் அரோ – தேம்பா:3 1/4
நீதியும் நெறியும் சொன்ன நிலை எலாம் உணர்ந்த பின்னர் – தேம்பா:4 45/1
கோ அது இறைவன் சொன்ன கூற்று என உரைத்தல் பொய்யா – தேம்பா:7 15/3
பண் என சொன்ன தீம் சொல் பயன் உணர்ந்து அரிய அன்பால் – தேம்பா:9 118/1
சொன்ன நல் உரை தேன் சுவையில் சுவை – தேம்பா:10 119/3
ஓளியில் சொன்ன யாவும் உணர்ந்த மோயிசன் போய் கூற – தேம்பா:14 26/1
சொன்ன தன்மையின் தொல் உரை நூலினர் – தேம்பா:20 86/2
சொன்ன அ சிறை நீத்து தொழ கலன் – தேம்பா:20 89/3
தகை இலா சொன்ன பாலால் சடத்து இரு கரடி பாய்ந்து – தேம்பா:25 62/3
தண் நிற பிறை சூழ் தாளாள் தளிர்த்த தன் தயையின் சொன்ன
பண் நிற கிளவியால் யான் பழம் பழி களங்கம் தீர்ந்தேன் – தேம்பா:26 100/3,4
தவம் அணி மார்பன் சொன்ன தன் இசைக்கு இசைகள் பாட – தேம்பா:26 116/2
கலை செய் தூய் உயர்வு உரைத்தோன் பிரிதல் சொன்ன காரணமாய் – தேம்பா:26 166/1
சொன்ன முன் கதிகள் கடை தோன்று இலா – தேம்பா:27 91/1
சொன்ன குரவர் காலம் அதை துதி நூலோர் முற்பிறப்பு என்றார் – தேம்பா:27 122/1
முன் நாள் சொன்ன நிலை நோக்கின் முகைத்த என் நாட்டு என் குலத்தே – தேம்பா:27 126/3
சொன்ன பகையும் யாது என்னின் சூட்சி நலம் மிக்கோன் – தேம்பா:28 24/1
செழும் துறவு இறைவன் சொன்ன தேறிய உணர்வில் தேறி – தேம்பா:28 130/3
பண் துளி உரையின் சொன்ன பயன் எலாம் உண்ட யாரும் – தேம்பா:28 157/2
வான் உரு தவத்தோன் சொன்ன மறை மொழி பழித்து சொன்னாள் – தேம்பா:29 3/4
சொன்ன தன்மைத்தே வெகுளி விம்மும் துகள் பொங்கி – தேம்பா:29 22/3
சொல் பொறா வெளிற்றின் சொன்ன பொய் உணர்ந்து இமிர் இ வேதத்து – தேம்பா:29 113/2
சொன்ன முறையில் ஈர் உலகும் தொடர்ந்து ஒன்றாய் – தேம்பா:31 12/3
சுட்டு அவை செயேன்-கொலோ என்று சொன்ன பின் – தேம்பா:31 98/3
சுனை ஈன்ற மலர் வாயான் துளி மது போல் இன்பம் உகும் சொல்லால் சொன்ன
வினை ஈன்ற வியப்புடன் உள் மிக ஏய்ந்த ஐயம் அற வினவி தண் தேன் – தேம்பா:32 30/2,3
சொன்ன மா மறை சூட்டு உள தூயினான் – தேம்பா:34 27/4
உள்ளிய துறவின் சொன்ன உரை இதோ என்ன அஞ்சி – தேம்பா:36 81/1

மேல்


சொன்னதற்கு (1)

துகைத்து மொய்த்த வெம் துயர் அற சொன்னதற்கு அமைகின் – தேம்பா:25 31/2

மேல்


சொன்னது (3)

வவ்வு அழிவு ஒழிய தூது வந்த காபிரியேல் சொன்னது
அ வழி கருப்பம் ஆகி அதிசயித்து ஓங்கினானே – தேம்பா:26 9/3,4
ஈறு பட்டு அனைத்தும் கற்றவர் சொன்னது இயம்புதும் என தொழுது உரைப்பான் – தேம்பா:31 89/2
கோடிய உள்ளமும் இன்பு உறீஇ சொன்னது உள் கொண்டு குன்றா தெளிவு எய்தி – தேம்பா:32 42/3

மேல்


சொன்னவாறு (1)

தொல்லையில் பொறித்த எம் நூல் சொன்னவாறு இ நாள் ஆகி – தேம்பா:27 149/3

மேல்


சொன்னவை (6)

சொன்னவை மகளும் அன்ன துணிவொடு வரைந்திட்டாளே – தேம்பா:0 11/4
சொன்னவை கொண்டு உணர்வு உரைப்ப துணிந்து துவர் வாய் மலர்ந்தாள் – தேம்பா:6 10/4
துஞ்சி வாழ் பொய்கை போகில் சொன்னவை மறுப்பாய் ஆயின் – தேம்பா:14 28/3
துகைத்த தீது அற சொன்னவை விடுதியேல் அய்யா – தேம்பா:25 37/3
சூடக மகளிர் ஒப்ப சொன்னவை பொய்யா சீலத்து – தேம்பா:27 17/3
ஆய்ந்தே இமிழின் சொன்னவை கேட்டு ஐயன் வான் மேல் பேர் உவகை – தேம்பா:36 27/1

மேல்


சொன்னாய் (1)

உன் அலால் தெய்வம் அல்லால் உணர்வு_அரும் பயன்கள் சொன்னாய்
நின் அலால் பிறர்கள் யாரே நிறைந்து இவை செலுத்தும் பாலார் – தேம்பா:20 98/1,2

மேல்


சொன்னார் (7)

சொன்னார் அவர் உரை இன்பு அது பெரிதோ பொழி துளிகள் – தேம்பா:2 67/3
தண் தார் இவன் ஆவான் என்ன வாழ்த்தி சயம் சொன்னார் – தேம்பா:3 54/4
கழல் எடுத்து ஆடி பாடி கனிவு எடுத்து இனைய சொன்னார் – தேம்பா:20 41/4
சுரும்பின் தேக்கிய மற்றவர் ஒத்து உரை சொன்னார் – தேம்பா:25 29/4
பண் பொழி உரையின் நாதன் பணிந்து இவர் வாழ்த்தி சொன்னார் – தேம்பா:25 90/4
நின்றார் ஒன்றாய் ஆர் புகழ் மாலை நிறை சொன்னார் – தேம்பா:34 53/4
சொன்னார் சொல்லும் பா உரை அஞ்சா சுடர் மொய்ப்ப – தேம்பா:36 75/2

மேல்


சொன்னாள் (5)

வேள் அணி திலதம் ஒத்தாள் வீணை நல் குரலில் சொன்னாள் – தேம்பா:20 44/4
நீர்த்தன குதலை சொல் கொடு நெடு நாள் நினைத்தவை மறைவு அற சொன்னாள்
ஆர்த்து அனல் இடிபட்டு அனைய நின்றன பின்பு ஆணரன் நாணி நொந்து உரைத்தான் – தேம்பா:20 73/3,4
வான் உரு தவத்தோன் சொன்ன மறை மொழி பழித்து சொன்னாள் – தேம்பா:29 3/4
கன்றுவாள் சோர்வாள் வஞ்சம் கக்கியே இனைய சொன்னாள் – தேம்பா:29 36/4
காமனும் எஞ்ச பைம் பூம் கவின் நலோய் என்று சொன்னாள் – தேம்பா:29 43/4

மேல்


சொன்னான் (32)

சிருங்கு எலா நிலையின் ஊங்கும் திறம் இது என்று அய்யன் சொன்னான் – தேம்பா:4 34/4
கம்பு அலர் கண்கள் பூப்ப காண்பை என்று இறைவன் சொன்னான் – தேம்பா:12 75/4
கருத்தில் எழும் ஆர்ந்த துயர் கான்று இனைய சொன்னான் – தேம்பா:14 3/4
உற்றது என்று உணர்த்தி என்றான் உவந்து சட்சதனும் சொன்னான் – தேம்பா:18 33/4
இருப்பு எனவே மறை உந்தும் இரத மார்பன் வளன் சொன்னான் – தேம்பா:20 22/4
ஆங்கு எழுதிய பொன் சாயலாள் ஆர் என்று அதிட்டன் கேட்டு இவை வளன் சொன்னான் – தேம்பா:20 66/4
பட நடை எழிலை விரும்பிலீர் என்ன பாணிக மா முனி சொன்னான் – தேம்பா:20 80/4
விற்றவர் கேட்டு தாளை இறைஞ்ச வீழ்ந்து ஒருவன் சொன்னான் – தேம்பா:20 104/4
நான் தோய் வஞ்சம் சால்பு என சொன்னான் நவை மிக்கான் – தேம்பா:23 28/4
மேல் கடல் சினத்து வேந்தன் மிக்கு உளம் வெகுண்டு சொன்னான் – தேம்பா:25 69/4
சென்றன எவனும் கூச திசை எலாம் உருமின் சொன்னான் – தேம்பா:25 71/4
என்ன ஆறு ஒழுகும் வெள்ளத்து இள முனி அழுது சொன்னான் – தேம்பா:26 115/4
தெள் உண்ட உணர்வில் காட்டி திருமகன் சொன்னான் மீண்டே – தேம்பா:27 9/4
மருள் இழந்தே கலங்காதான் மறுத்து சொன்னான் – தேம்பா:27 62/4
துடிப்பு அணி மொழியால் சொன்னான் சுருதி நூல் அமிர்த வாயான் – தேம்பா:27 73/4
பெய் கறை அற்று ஒளி மொய் பெரும் சுருதி விளக்கு ஏந்தி பெரியோன் சொன்னான் – தேம்பா:27 97/4
மெய் வகை உணர்வு நாடி வினாதத்தன் சொன்னான் மீண்டே – தேம்பா:27 148/4
சினை வரும் பலர் சேர்த்தினீர் என வளன் சொன்னான் – தேம்பா:27 170/4
தணியும் பாங்கு உயிர்ப்பு வீக்கி சழுக்கு அற வாமன் சொன்னான் – தேம்பா:28 19/4
பனிய வேய் அலர் செ வாயான் பணித்து மற்று இதனை சொன்னான் – தேம்பா:28 60/4
ஆனவர் அஞ்சி கூற அரும் தவன் இனைய சொன்னான் – தேம்பா:28 74/4
இசை உற்று உற்ற நூல் விதி சொன்னான் இசை மேலான் – தேம்பா:28 121/4
நால் கடல் தானை ஏறான் நவை அறுத்து எழுந்து சொன்னான் – தேம்பா:28 128/4
அளித்த-கால் இது என்று ஆய்ந்த அரும் தவன் இனிதின் சொன்னான் – தேம்பா:28 149/4
என விடை உரைத்த சூசை இயல் பட விரித்து சொன்னான் – தேம்பா:29 10/4
தாங்கிய சுடர் செய் வேலோன் தழுவினான் உறுதி சொன்னான்
ஏங்கிய உளத்தில் தேற இரவலர் ஈனர் நால்வர் – தேம்பா:29 42/2,3
துனி கதிர் ஒழிய வீழ்ந்து துணை அடி தொழுது சொன்னான் – தேம்பா:29 111/4
பண்பு அகல் உரை கொண்டு அம் பூ பதும வாய் மலர்ந்து சொன்னான் – தேம்பா:30 61/4
மேழக குரலில் சொன்னான் வெண் மணல் திண்ணை சேர்ந்தே – தேம்பா:30 129/4
எ திறத்து உரிய குலத்தன் நீ என்றார் இளவலும் மறைவுற சொன்னான் – தேம்பா:31 92/4
பெருகவோ ஆற்றவோ ஓர் பேர் உயிர்ப்பு உயிர்த்து சொன்னான் – தேம்பா:35 52/4
மேவு உலகு எழுக என்ன வியல் முரசு அதிர்ப்ப சொன்னான் – தேம்பா:36 86/4

மேல்


சொன்னானே (1)

சல தொழில் அரசன் மூரல் தந்து மீண்டு அவன் சொன்னானே – தேம்பா:23 55/4

மேல்