நொ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

நொடி (4)

உன்னி நான் உய்யல் ஆற்றேன் ஒரு நொடி பிரிந்து போகின் – தேம்பா:10 8/2
விண் முழுது அன்றி மண் முழுது இறைஞ்சும் வேந்தர் வேந்து அரை நொடி பொழுதில் – தேம்பா:14 41/2
அழல் எழ வளைத்த சாபம் நிமிர் இல அரை நொடி முடித்து இலாது விடு கணை – தேம்பா:24 33/1
நொடி துதைந்த நுணங்கிய நோக்கு அறாது – தேம்பா:26 150/3

மேல்


நொடிகள் (1)

நொடிகள் தவழ் போழ்து பல நூறு ஆண்டு என்று உணர்ந்து அலற – தேம்பா:28 80/3

மேல்


நொடிப்பினில் (1)

நூல் வழி புகழே போன்று நொடிப்பினில் பரந்த மேகம் – தேம்பா:12 18/1

மேல்


நொடை (1)

நோய் வயிறு ஆர்ந்த கானம் நொடை நல மாதர் வஞ்சம் – தேம்பா:19 9/3

மேல்


நொதுத்த (2)

நோக்கு அணங்கு கண்ணோட்டம் நொதுத்த கை – தேம்பா:9 38/2
நொய்ய ஆய் மது மலர் நொதுத்த கோலினான் – தேம்பா:30 104/1

மேல்


நொந்த (3)

நுட்பு அடை துயரினும் நொந்த நோய் எனா – தேம்பா:7 77/3
பின்பு உற மலர்ந்த இ தரு நொந்த பெற்றி போல் மெலிந்தது மாதோ – தேம்பா:18 36/4
நோய் உமிழ் நீர் என நுதலி நொந்த தாய் – தேம்பா:30 102/2

மேல்


நொந்தவர்க்கு (1)

நோயொடு மெலிந்த உடல் கெடும் எல்வை நொந்தவர்க்கு உதவ நீ ஒளியின் – தேம்பா:36 39/3

மேல்


நொந்தனள் (1)

அல் என இருண்ட நெஞ்சு அழுங்க நொந்தனள்
ஒல்லென அருவி நீர் ஒழுகும் கண்ணினாள் – தேம்பா:29 29/3,4

மேல்


நொந்தார் (5)

விழுந்து அழல் உளத்து இல்லை என்ன விண்ணவர் இரங்கி நொந்தார் – தேம்பா:24 5/4
பார் முகத்து இணையா தீமை பார்த்து உளத்து இரங்கி நொந்தார் – தேம்பா:25 87/4
எழு மலர் பகை கால் முன் பட்டு என மகர்க்கு இரங்கி நொந்தார் – தேம்பா:25 89/4
என்ன நொந்தார் நொந்து உணர்வு எய்தி எரி அ தீ – தேம்பா:28 126/1
காய்ந்த ஓர் சுரம் மெய் நொந்தார் கடி மலர் சுனைகள் காண்பார் – தேம்பா:29 13/1

மேல்


நொந்தால் (1)

நொந்தால் ஆதரவு ஆம் உறு நோய் ஒழியா – தேம்பா:36 47/1

மேல்


நொந்தாள் (1)

நொந்தாள் என்னா தானும் நொந்து ஆம் என்றான் என்றால் – தேம்பா:9 15/2

மேல்


நொந்தான் (6)

சென்றனன் கரு கண்டு உற்றான் தேர்ந்து உளம் சிதைந்தான் நொந்தான்
பின்று அனன் பின்றா துன்பம் பெற்று அழுது உரைப்பன் மீண்டே – தேம்பா:7 66/3,4
கடுத்து இருப்ப கண் அருவி கடுக நொந்தான் கடி கொடியான் – தேம்பா:10 68/4
முது முகத்து உருத்த காமம் முதிர் வினை ஆற்றா நொந்தான் – தேம்பா:28 5/4
முறைக்கு ஒரு மருந்தும் ஆகி முற்றும் நாம் உவப்ப நொந்தான் – தேம்பா:33 5/4
உன் உயிர் வருந்த உரைப்பது ஏது என்ன உளத்தில் நைந்து அரும் தவன் நொந்தான் – தேம்பா:34 52/4
மறந்து உயிர் அளிப்ப நொந்தான் வளன் விட உடல் உண்டு ஆனால் – தேம்பா:35 55/4

மேல்


நொந்து (43)

அ அரும் குண தவன் விருப்பு எய்தி நொந்து அயர்வான் – தேம்பா:5 1/4
நீர் முகத்து எழுந்த ஓதம் நேர நொந்து அலைந்த நெஞ்சான் – தேம்பா:7 64/2
இலை புறம் கண்ட பைம் பூ இரும் கொடி வாட நொந்து
கலை புறம் கண்ட நூலோன் கலங்கி உள் உளைந்து சோர்ந்தான் – தேம்பா:7 73/3,4
கண் படை கீறிய கருத்தின் நொந்து உளான் – தேம்பா:7 77/4
நொந்தாள் என்னா தானும் நொந்து ஆம் என்றான் என்றால் – தேம்பா:9 15/2
மயல் ஆம் என்னா மனம் நொந்து அழுவாள் வானோர்க்கு அரசாள் – தேம்பா:9 24/4
நுணி கொம்பினும் ஊக்கினர் நொந்து இறப்பார் அனைய ஊக்கம் – தேம்பா:9 27/1
தன்னை உன்னு இல மா தவன் நொந்து மீன் – தேம்பா:9 49/3
நொந்து தேர் அரும் புவி இடுக்கண் நூக்கு சூல் – தேம்பா:9 94/2
புலம்பும் ஓதையின் நொந்து என பொன் இட – தேம்பா:10 30/1
கொன்னே குழைய பிறரும் குழைந்தேன் என நொந்து அழுதே – தேம்பா:10 45/3
நூல் நேர பாய் நெடிய மறுகிற்கு எல்லாம் நொந்து ஒழுகில் – தேம்பா:10 71/3
துடித்திடுவார் உடல் பதைப்பார் மோதி வீழ்வார் சுழல்கிற்பார் புரள்வார் நொந்து அழுவார் சோர்வார் – தேம்பா:11 52/1
கொடி ஆடு என நொந்து குழைந்து அழுவாள் – தேம்பா:11 70/4
ஊன் தும்மு வேல் வாய் பின் நாள் உறும் துயர் உணர்ந்து நொந்து
வான் தும்மு மின்னின் மின்னு மகவினை நெடிது வாழ்த்தி – தேம்பா:12 97/2,3
நொய் இதழ் தாது என நொந்து வாடினாள் – தேம்பா:13 9/4
நொந்து நொந்து அழுத ஓதை நுழைந்து உயர் வானத்து உச்சி – தேம்பா:14 24/1
நொந்து நொந்து அழுத ஓதை நுழைந்து உயர் வானத்து உச்சி – தேம்பா:14 24/1
தரு அறா உணரா நோயால் தளர்ந்து நொந்து இறக்கும் மாதோ – தேம்பா:14 33/4
வளைய முழங்கின வண் சிலை தேர் உருள் வளைய முழங்கின நொந்து
உளைய முழங்கின மாள் கரி மாள் பரி உளைய முழங்கின போர் – தேம்பா:15 100/1,2
இறை பதி அடியினன் நொந்து அன்று எஞ்சினான் – தேம்பா:15 131/4
அவா உறீஇ நொந்து நிற்ப அம்புலி குழவி வெண் கோட்டு – தேம்பா:20 34/1
ஆர்த்து அனல் இடிபட்டு அனைய நின்றன பின்பு ஆணரன் நாணி நொந்து உரைத்தான் – தேம்பா:20 73/4
நூல் கலந்து உரைத்த வண்ணம் நொந்து உயிர் எவையும் எஞ்ச – தேம்பா:20 102/3
எஞ்ச நொந்து அழ தாய் தந்தை இரிந்த தம் நாளில் வந்த – தேம்பா:20 108/1
நூல் நெறி வழுவா யூதர் நொந்து எசித்து உறைந்த-காலை – தேம்பா:21 4/1
வினை நொந்து அழ வெம் பகை நீங்கி அழ – தேம்பா:22 6/3
என்றலொடு நொந்து முகில் ஈன்ற உரும் என்னா – தேம்பா:23 48/1
தான் முகத்து இடர் தளிர்ப்ப நொந்து இயம்புதல் உற்றான் – தேம்பா:25 38/4
புரவலர் ஆக நொந்து புலம்பினர்க்கு உயிரே ஆகி – தேம்பா:26 4/3
நொந்து உயர் கிளையரை நிவலன் நோக்கி முன் – தேம்பா:27 53/3
மை திறத்தால் நொந்து அழுவது எளிதே வாடும் – தேம்பா:27 64/1
மற்றை நாதன் நீர் இதோ என வசிட்டன் நொந்து உரைத்தான் – தேம்பா:27 169/4
மனம் செயும் பங்கமும் மனம் நொந்து ஆற்றலின் – தேம்பா:28 37/2
என்ன நொந்தார் நொந்து உணர்வு எய்தி எரி அ தீ – தேம்பா:28 126/1
நுனி கதிர் சுரக்கும் வேலோன் நொந்து உளம் தெளிய தேறி – தேம்பா:29 111/3
பொன்ற தக நொந்து பொறாமலும் மீண்டு – தேம்பா:31 60/3
விஞ்சு அருள் கொண்டு ஆசு அற நாம் மீ வாழ தான் நொந்து
நெஞ்சு அருள் கொண்டு ஈங்கு இறக்கும் நீ அல்லால் வேறு யாரே – தேம்பா:32 50/3,4
கொன்னை காட்டிய கொடுமை நொந்து எஞ்ச நல் மறையோடு – தேம்பா:32 105/2
நீண்டு நொந்து நின் தாதை படும் துயர் – தேம்பா:33 18/3
நோய் அருந்தல் இவற்கு என நொந்து உடல் – தேம்பா:33 22/1
புரை செயும் தன் துயர் பொறுத்து நொந்து இலான் – தேம்பா:35 16/1
நோய்-அது பயன் என்று இரங்கி நொந்து அழுத – தேம்பா:35 85/3

மேல்


நொந்துளான் (1)

ஒழுக்கு உடை ஏலியன் உளத்து நொந்துளான்
விழுக்கு உடை அரசியல் விரும்பி கூறினான் – தேம்பா:25 56/3,4

மேல்


நொந்தே (1)

நசை உற்று உற்ற தீது அற நொந்தே நடை ஒன்றோ – தேம்பா:28 121/1

மேல்


நொந்தேன் (2)

உன்னிய திறத்து அழுது உயிர் நொந்தேன் என்றான் – தேம்பா:30 103/4
அன்னார் வாழ உயிர் நொந்தேன் அயர்ந்தேன் நிந்தை பட்டு இறந்தேன் – தேம்பா:36 20/2

மேல்


நொந்தோம் (1)

குன்றாது ஆங்கு உள செல்வம் இழந்தோம் நொந்தோம் குலைகிற்போம் கரை காணா மருண்டோம் கெட்டோம் – தேம்பா:11 51/2

மேல்


நொய் (13)

செய் வினை அளிக்கும் என நொய் வினை குறித்த பரன் – தேம்பா:5 158/2
நொய் அம் தாதுகள் நோவ உள் குடைந்து இமிர் அளிக்கும் – தேம்பா:6 60/3
நொய் என கதிர் உதித்து இருள் என மறைந்ததுவே – தேம்பா:6 68/4
திருகினால் நொய் அலர் சிதைதல் போல் உளத்து – தேம்பா:7 76/1
முள் பொதுளும் மணம் பொதுளும் நொய் அம் தாது முருகு ஒழுகும் முகை விண்ட செம் செவ்வந்தி – தேம்பா:8 55/3
தண்டலை அகத்து விள்ளும் தாதினும் நொய் தாள் நீயும் – தேம்பா:10 7/3
அன்று ஆங்கு நொய் அடியாள் அயர்வுற்று சோர்ந்து விழ – தேம்பா:10 20/2
அருத்தியொடு மனத்து ஓங்கி அனிச்சையில் நொய் அடி சிரம் மேல் அணுகி சேர்த்தி – தேம்பா:11 116/1
மலி நிழல் பட்டு அலர் மலரின் நொய் அம் சேயின் மழ வினையும் – தேம்பா:13 6/1
நொய் இதழ் தாது என நொந்து வாடினாள் – தேம்பா:13 9/4
நூல் வழி உரைத்த தீம் சொல் நொய் இதழ் அவிழ்ந்த தேன் போல் – தேம்பா:20 97/1
பூளையின் நொய் அம் குரம்பையர் பிறழா புதவு எரி புதைத்து வெந்து எரிவார் – தேம்பா:28 90/4
நொய் சுடர் அலர் தடம் நொய்து என்று ஏகினார் – தேம்பா:30 56/3

மேல்


நொய்தாய் (1)

காவி பட்டு ஒளிரும் கண்ணினார் காணி கற்பு அதே பளிங்கினும் நொய்தாய்
ஆவி பட்டு அழுக்கு உற்று ஒழியும் என்று அறைவர் அரிய நூல் புலமையோர் என்றாள் – தேம்பா:30 143/1,2

மேல்


நொய்து (1)

நொய் சுடர் அலர் தடம் நொய்து என்று ஏகினார் – தேம்பா:30 56/3

மேல்


நொய்ய (4)

நுண் படும் அனிச்சையின் நொய்ய சீறடி – தேம்பா:9 101/2
வீயினின் பூளையின் நொய்ய மெய் உடை – தேம்பா:9 102/1
கொய்ய நீரிய குட்டனும் நொய்ய தன் – தேம்பா:26 153/2
நொய்ய ஆய் மது மலர் நொதுத்த கோலினான் – தேம்பா:30 104/1

மேல்


நொய்வும் (1)

பொலி நிழல் பட்டு அலர் பூம் கொம்பு ஒத்தாள் நொய்வும் புரை வினையால் – தேம்பா:13 6/2

மேல்


நொர்வெற்கர் (1)

நூல் உண்டே நீதி வழா நூல் உண்ட நொர்வெற்கர் தலைவர் ஈட்டம் – தேம்பா:32 86/4

மேல்


நொறி (1)

நோய் விளை குரோதம் வேலாய் நொறி கரத்து உலோபம் எஃகாய் – தேம்பா:24 3/2

மேல்


நொறில் (2)

நூல் வரும் சுருதி வேலி நொறில் தவம் விளைத்த சீலம் – தேம்பா:14 118/1
நூல் நிமிர் தவத்தின் காத்த நொறில் பொறி வேலி கோலி – தேம்பா:30 73/2

மேல்