ஞா – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

ஞாஞ்சில் (1)

சீர் செயும் பயோதர ஞாஞ்சில் சேர்த்து அகழ் – தேம்பா:22 26/3

மேல்


ஞாஞ்சிலொடு (1)

நஞ்சு எஞ்சுக எய் படை ஞாஞ்சிலொடு
நெஞ்சு அஞ்சுக நீள் நிலம் அஞ்சுக வந்து – தேம்பா:15 27/2,3

மேல்


ஞாபக (1)

வினை-இடை விளை செயிர் விலகி ஞாபக
சினை-இடை மலர்ந்த நல் சீலம் செப்புவாம் – தேம்பா:27 1/3,4

மேல்


ஞாபகம் (2)

தெள் உற உளத்து எழீஇ திளைத்த ஞாபகம்
உள் உற தவம் கனிந்து உறையும் கா அதே – தேம்பா:20 5/3,4
அற்று எலாம் பொறா நுமான் அதற்கு ஓர் ஞாபகம்
உற்று எலாம் தீர்ப்பல் என்று உரைத்து எழீஇயினான் – தேம்பா:27 102/3,4

மேல்


ஞாயில் (2)

சுதை நலம் ஞாயில் முலை நிறை வரைந்து துகில் என அகழியை சூடி – தேம்பா:12 61/1
நட்டு அற்றம் நிகர் கடந்த உருவின் மாமை ஞாயில் பொறித்து – தேம்பா:14 96/3

மேல்


ஞாயிறு (2)

ஞானமே தெளித்து இவர் மனத்தின் ஞாயிறு
வான மேல் எழுந்து ஒளி வழங்கிற்று ஆய பின் – தேம்பா:20 132/1,2
நடையொடு விளக்கி வான் மேல் ஞாயிறு நடப்பதே போல் – தேம்பா:22 23/1

மேல்


ஞாலத்து (2)

அலை புறம் கொண்ட ஞாலத்து அடர் இருள் நீக்க யாக்கை – தேம்பா:13 23/1
எஞ்சுவான்-கொல்லோ ஞாலத்து யாவரும் பனிப்ப ஆண்மை – தேம்பா:14 19/2

மேல்


ஞாலம் (12)

உவர்க்கும் தாழ் கடல் உடுத்து அகல் விரி தலை ஞாலம்
எவர்க்கும் தாய் என எண் இலா கிழிபட கீறும் – தேம்பா:1 11/1,2
ஈடு இலாது ஞாலம் மேவும் இழிவு அமைந்த நோய் அற – தேம்பா:7 30/3
நாள் இதே உவப்ப ஞாலம் நசை அமிழ்ந்து இரா அற – தேம்பா:7 31/1
உறுவுகின்ற ஞாலம் யாவும் உளைய வந்த பீடைகள் – தேம்பா:7 32/2
நளி முகத்து அகல் ஞாலம் நயந்தவே – தேம்பா:7 44/4
மா இரு ஞாலம் மூடு மாசு இரா அற வில் வீசி – தேம்பா:9 71/1
ஞாலம் நல் தகவில் ஓங்க நாயகன் மனிதன் ஆனான் – தேம்பா:9 75/4
மா இரு ஞாலம் கொண்ட மருட்கு இனைந்து அழுத வானம் – தேம்பா:10 2/1
மடி முகத்து அழிந்த ஞாலம் வயின்-தொறும் நீத்த வாரி – தேம்பா:14 113/4
பட்டு ஈயும் எங்கும் எழ ஓதை பட்ட படர் ஞாலம் முற்றும் நெகிழ – தேம்பா:14 133/1
காற்று என பறந்து ஞாலம் கலக்கு உறீஇ கூச செம் தீ – தேம்பா:15 42/3
ஞாலம் விற்பன வாய் துகிர் நட்பு என – தேம்பா:30 96/2

மேல்


ஞாலமும் (2)

நால் முகம் தகு ஞாலமும் நெளி தர திரண்டார் – தேம்பா:16 16/4
ஞாலமும் நடுக்கிய நச்சு கண்ணினான் – தேம்பா:29 58/2

மேல்


ஞாலமே (1)

முடி துளவு எழில் முற்றின ஞாலமே – தேம்பா:7 50/4

மேல்


ஞான்றும் (3)

பா மழை திரளும் கன்னியர் இனிய பா மழை திரளும் எ ஞான்றும்
மீ மழை திரளும் மெலி தர விம்மி விண்ணும் மேல் குளிர நாறினவே – தேம்பா:2 48/3,4
மாய் உகுத்த வாழ்வு உகுக்கும் மணம் இன்றி எம் ஞான்றும் மாறா கன்னியாய் – தேம்பா:5 35/2
நண்பால் இணையா குண தொகையோன் நயந்து எம் ஞான்றும் முறை எஞ்சா – தேம்பா:26 41/3

மேல்


ஞான (20)

உடை ஞான அறிவால் ஒளி மானம் அருள் – தேம்பா:5 71/3
காண மனம் எழு ஞான ஒளியொடு காமம் அற உறு காதலாய் – தேம்பா:5 116/2
கோண மரபு அறு ஞான குரு அடி கோதை என அணி கோதையும் – தேம்பா:5 116/3
உடுத்த அனந்த ஞான முறை உரைத்து உமிழ்கின்ற மான முனி – தேம்பா:5 130/1
பகுத்தனர் அங்கு ஞான ஒளி பரப்பி நடந்து போயினரே – தேம்பா:5 142/4
திற கடல் நீயே திரு கடல் நீயே திருந்து உளம் ஒளிபட ஞான
நிற கடல் நீயே நிகர் கடந்து உலகின் நிலையும் நீ உயிரும் நீ நிலை நான் – தேம்பா:6 34/2,3
மீன் உண்ட முடியாள் ஞான பல் விதிகள் விளம்பிய முறை உரைப்பு அரிதே – தேம்பா:6 44/4
கண் தலங்களும் கலங்கு காலும் ஞான காந்தியால் – தேம்பா:7 36/2
தெண் கதிர் கால் உடு குலமே முடியாய் சூடி தெளி ஞான நிலை இது என சுடாது தண்ணத்து – தேம்பா:8 46/3
துறை கெழு நூல் வழி அனைத்தும் அடையா ஞான துறை அன்னாள் மாசு அறு நல் உணர்வின் நீர்த்து – தேம்பா:8 53/1
களி வளர் தவத்தின் வீட்டில் காட்சி நல் நிலையில் ஞான
ஒளி வளர் கதவு சேர்த்தி ஒழுக்க நல் தாளை பூட்டி – தேம்பா:9 124/1,2
கண் நீர் ஆடி கழுவும் கசடு அற்று உணர்ந்த ஞான
தெண் நீர் ஆடி தெளிந்தாள் தெளி உள் நிறை தே அருளின் – தேம்பா:10 53/1,2
மொய் விண் நேர் உள் தூவிய ஞான முறை எல்லாம் – தேம்பா:11 82/2
நிலை புறம் கொண்ட ஞான நெடும் சுடர் அனையான் போக – தேம்பா:13 23/2
தனத்து-இடை எழுத்து என ஞான தன்மையான் – தேம்பா:18 10/1
தனத்து எழுதி வைத்தது என உறுதி ஞான தகுதியின் நான் – தேம்பா:18 19/1
காட்சியின் துணையோடு அன்னார் கனிந்து உயர்ந்து எவர்க்கும் ஞான
சூட்சியின் துணை தாம் ஆகி துகள் தவிர் புகழின் வாய்ந்தார் – தேம்பா:26 3/3,4
கலை வளர் உணர்வும் ஞான காட்சியும் உணராது எய்தி – தேம்பா:26 101/2
ஏற்றிய தெருளின் ஞான இரதம் இட்டு ஆய பைம்பொன் – தேம்பா:30 74/2
வீமமே பறவை தேர் மேல் விளை தவ குறிஞ்சி ஞான
வாமமே பறவை தேர் மேல் வளர் அற முல்லை சேர்ந்து என் – தேம்பா:30 79/2,3

மேல்


ஞானத்திற்கும் (1)

சீர் எழு ஞானத்திற்கும் திரை திரண்டு அலைவது உண்டோ – தேம்பா:26 99/4

மேல்


ஞானத்து (4)

துன்பு மிக ஐம்பொறியை துமித்த தன்மை சுடர் ஞானத்து
அன்பு மிக புடை சூழ்ந்த அரிய மோனர் அருந்துதிர் என்று – தேம்பா:20 21/1,2
மெய் பொருள் ஞானத்து அனைத்தையும் உணர்ந்து விளை திறன் நீதியால் நடவி – தேம்பா:27 162/3
நல் நெறி உரையில் கேட்கின் நணுகலீர் உரைத்த ஞானத்து
அ நெறி உரியது என்றால் அறிந்து உளம் தெளிக என்றான் – தேம்பா:29 6/3,4
உரை உடைத்து உயர்ந்த ஞானத்து ஒளி எழீஇ தேறினாரே – தேம்பா:30 39/4

மேல்


ஞானம் (26)

ஞானம் கொண்டான் இல்லவன் இல்லோர் நகை கொள்வான் – தேம்பா:4 48/2
போக்காது உள்ளம் உய்ய மெய் ஞானம் புரி ஆண்மை – தேம்பா:4 52/2
தனத்தில் இருந்த வாழ்வு இனிமை தவிர்க்கல் நிறைந்த ஞானம் அதே – தேம்பா:5 137/4
பாதம் அங்கு எழுந்தது என ஞானம் அங்கு இலங்க இவர் பாழி வந்து அடைந்த பொழுதே – தேம்பா:5 146/2
நங்கையரை ஞானம் மிகு தங்க உரை சாற்றலொடு – தேம்பா:5 153/2
விதி செய்கின்ற வேதம் நின்ற மிகை துடைத்த ஞானம் ஆய் – தேம்பா:7 33/2
மெய் முறையும் மறை முறையும் விளக்குகின்ற ஞானம் அமை வியன் அத்தாணி – தேம்பா:8 18/2
கோள் நெறி கடந்த ஞானம் கூறி எம் உயிர்கள் வாழ – தேம்பா:9 82/1
முன்பு உற்ற கால் மொழிவாய் ஞானம் என்று முனி நகைத்தார் – தேம்பா:10 69/4
செல்லும் தன்மைத்து ஏழ் மடி ஓங்க தெளி ஞானம்
ஒல்லும் தன்மைத்து ஒள் அறம் உற்றே கதி உற்றார் – தேம்பா:11 81/3,4
வில் வாய் விண்ட பூம் குழவி-கண் விளை ஞானம்
வல் வாய் உண்ட மா தவன் நல் நூல் மறை கூறும் – தேம்பா:11 83/2,3
தெருள் பொறை நீதி வீரம் சீர் தகை உறுதி ஞானம்
பொருள் புகழ் புலமை மற்ற பொலி நலம் போயிற்று அன்றே – தேம்பா:13 22/3,4
ஞானம் உறு சீலம் இல நட்பு உறவும் இல்லா – தேம்பா:14 8/1
சோதியின் வடிவாய் ஞானம் தொடர் குணத்து எஞ்சான் கோப – தேம்பா:14 121/1
தீட்டிய சரிதையும் செய்த ஞானம் உள் – தேம்பா:20 130/2
ஞானம் தகவு ஊக்கம் நயம் புகழ் சீர் – தேம்பா:22 5/2
கலை புறம் கண்டு ஒளிர் ஞானம் கடந்த இறையோன் கன்னி தாய்க்கு – தேம்பா:23 78/1
திக்கு எலாம் நடுங்கி ஞானம் தெருள் தவம் அறத்தின் சீலம் – தேம்பா:24 7/1
மெய் வகை தெளிந்த ஞானம் விளைத்த பல் வரங்கள் தந்தே – தேம்பா:26 103/3
தேன் கறி கற்று இமிர் வண்டு ஆர் வனத்தின்-நின்று செழு ஞானம்
தான் கறி கற்று உழிழ்ந்து என்ன தவறா நீதி சால்பு உரைப்பான் – தேம்பா:26 160/3,4
உற்று எலாம் சிவாசிவன் ஓங்கி ஓங்கு ஞானம் உள் – தேம்பா:27 129/3
சீர் வளர் ஞானம் நீதி அன்பு ஊக்கம் திறன் தயை ஆனந்தம் மற்றை – தேம்பா:27 161/1
களித்த-கால் உணர்ந்த ஞானம் காய்ந்த கால் சிதையுமோ என்று – தேம்பா:28 149/3
அள் உற அன்பின் மூழ்கி ஆங்கு அவர் அருந்து ஞானம்
எள் உற எஞ்சும் என் சொல் இயம்பிட துணியும்-காலை – தேம்பா:30 3/3,4
கூர்த்து உராய் உவப்பின் மூழ்கி கொழுந்தவன் உண்ட ஞானம்
போர்த்து உராய் உமிழ்வதே போல் பெரும் பயன் எவர்க்கும் ஆக – தேம்பா:30 4/1,2
பேர் அரும் தவத்தொடு பிறந்த ஞானம் போல் – தேம்பா:30 49/2

மேல்


ஞானமும் (2)

அரு ஞானமும் மானமும் ஆய் அறிவும் – தேம்பா:5 94/1
சீர் விளை ஞானமும் நிறையும் சீலமும் – தேம்பா:36 126/2

மேல்


ஞானமே (3)

ஞானமே தூதனாய் நயப்ப யாவரும் – தேம்பா:6 26/2
ஞானமே பயில் நன்று எலாம் மிகுத்து உயிர் பிரிதல் – தேம்பா:11 100/3
ஞானமே தெளித்து இவர் மனத்தின் ஞாயிறு – தேம்பா:20 132/1

மேல்