பீ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

பீட (1)

ஓதை பெய் முகில் அறும் உச்சி பீட மேல் – தேம்பா:30 111/3

மேல்


பீடத்து (2)

ஓசை மிக்க அற தொகையின் பீடத்து உயர் வளர்க – தேம்பா:3 55/3
இன்னான் இன்ன உரு காட்டி எரி சூழ் பீடத்து எழுந்து ஓங்கி – தேம்பா:23 9/1

மேல்


பீடம் (1)

ஆக மேல் இருவர் ஓர் பீடம் ஆக்கினர் – தேம்பா:30 108/2

மேல்


பீடமாக (1)

பிணித்த நர_தேவு இறையவற்கே பீடமாக வனைந்த மது – தேம்பா:26 46/1

மேல்


பீடமே (2)

பேறு_அரும் கடவுளை தாங்கும் பீடமே – தேம்பா:8 39/4
தடம் புகும் கடவுளை தாங்கும் பீடமே
உடம்பு கொள் உனது சேய் உவப்பதற்கு நின் – தேம்பா:9 96/2,3

மேல்


பீடிகை (1)

வேலை மா மணி பீடிகை வீதியும் – தேம்பா:17 42/1

மேல்


பீடு (6)

நோயு முன் எதிர்த்து தாங்க நுனித்த பீடு உடையார் யாரே – தேம்பா:14 117/4
பீடு உடை வரத்தில் ஒவ்வா பெரும் தகை நாம் வான் வாழ்ந்த – தேம்பா:23 10/1
பீடு உடையார் என்று உன்னல் பெரும் புகழ் பெற்ற ஆண்மை – தேம்பா:23 66/3
பீடு இழந்த புன் மாக்களின் பேதையர் இலையே – தேம்பா:26 68/4
பீடு இழந்து ஒழுகுவாரில் பேதையர் இல்லை நெஞ்சே – தேம்பா:28 137/4
பீடு இல முனிவரன் பிதற்றும் சொல்லினால் – தேம்பா:29 27/2

மேல்


பீடை (10)

வனத்தில் எழுந்த தீ அனைய மனத்தில் எழுந்த பீடை உறீஇ – தேம்பா:5 135/2
பீடை ஆய் உணங்கு அன்னார் வருந்தும் பெற்றி பெரிது எனவே – தேம்பா:10 58/4
பின்று என உளத்தில் ஓர்ந்தார் பீடை நீள் புணரி தாழ்ந்தே – தேம்பா:12 94/4
பீடை எழுந்து பெரும் படை வாடி அற – தேம்பா:15 65/3
படலையாய் நயம் பீடை பயத்தல் வான் – தேம்பா:26 80/1
திறம் ஒன்றே நயம் பீடை சேர்த்தி ஈவான் – தேம்பா:27 63/3
மொய் துணை கொண்டு எரி பீடை முறை மொழிவ கேள்-மின் அரோ – தேம்பா:28 85/4
விடைந்து பாய் வெறிகள் படுத்திய பீடை விட்டு ஒழியாது எரிந்து உளைவார் – தேம்பா:28 92/4
பொறைக்கு ஒரு நிலை சார்பு அல்லால் புலம்பி நாம் எய்தும் பீடை
முறைக்கு ஒரு மருந்தும் ஆகி முற்றும் நாம் உவப்ப நொந்தான் – தேம்பா:33 5/3,4
தைக்கும் ஓர் அம்பின் பீடை தகை கெட மிகும்-கால் வான் மேல் – தேம்பா:33 9/3

மேல்


பீடைகள் (2)

உறுவுகின்ற ஞாலம் யாவும் உளைய வந்த பீடைகள்
இறுவுகின்ற காலம் ஆக இளவல் நின்ற நாதனை – தேம்பா:7 32/2,3
நிலை கொள் பீடைகள் நீங்கு இல வேகுவார் – தேம்பா:28 110/4

மேல்


பீடையால் (2)

பீடையால் வற்றிய உளத்தில் பேர் ஒளி – தேம்பா:8 36/1
தூயவை தூய வாய் துளங்கும் பீடையால் – தேம்பா:29 130/4

மேல்


பீடையில் (1)

பெரியவர் கேண்மை போல் பீடையில் திளைத்து – தேம்பா:15 134/1

மேல்


பீர் (1)

பீர் தங்கும் உரு தீ சூளை பெய்-மின் ஈண்டு என்றான் மாதோ – தேம்பா:29 79/4

மேல்


பீலி (2)

முனி பட்டார் பீலி தேயர் மொய் படை இன்றி ஓர் நாள் – தேம்பா:17 20/1
பெற்று எலாம் வெறுத்தனன் பீலி பெற்ற பாணியான் – தேம்பா:27 129/4

மேல்


பீலித்தேயர் (1)

இனி திருத்திடல் நன்று என்ன ஈங்கு உண்ட பீலித்தேயர்
பனி திரு தடத்து தந்த பழ மறை பகைத்தார் என்ன – தேம்பா:17 17/2,3

மேல்


பீழை (2)

அடைக்கலத்து அடைந்த யூதர்க்கு அடிமை என்று இயற்றும் பீழை
துடைக்கல் அற்று எவரும் எஞ்சி தொறும்தொறும் அழுத கண்ணீர் – தேம்பா:14 23/2,3
நோய் நிலை நிரையம் கொண்ட பல் பீழை நுதலின் உள் பனிப்பவே ஊழி – தேம்பா:28 86/1

மேல்


பீழைகள் (1)

உண்டார் உன்னா பீழைகள் மீட்டு ஓர் உரை உற்றார் – தேம்பா:35 56/4

மேல்


பீழையால் (1)

பிணி உயிர்க்கும் மால் அவா செய் பீழையால்
தணி உயிர்க்கு எலாம் உறுதி தந்து தன் – தேம்பா:14 15/2,3

மேல்


பீள் (7)

பிறை வளர் நலம் என வளர்ந்த பீள் உள – தேம்பா:3 48/3
பீள் இதே வியப்ப வீடு பெறுவுகின்ற நாமுமே – தேம்பா:7 31/4
பீள் வளர் பருவத்து எஞ்சா பெரும் துயர் வளர்ந்து மிக்கு ஆய் – தேம்பா:7 62/2
பீள் கடைந்து அழுத்திய கதிர் பிலிற்றல் காண் – தேம்பா:8 37/2
பீள் கடைந்து அழுத்தி பாயும் பெரும் கதிர் சூசை கண்டான் – தேம்பா:16 3/4
பீள் கையும் இரு கண் புதைத்து அழுது இந்தோ பிரிய நின் தொழும்பனே எம்-தம் – தேம்பா:20 77/3
பீள் எழும் சங்கம் என்றோ பேழை மேல் அலைந்து போகின் – தேம்பா:21 7/2

மேல்


பீறு (1)

பீறு வாள் என பின்னை ஓர் ஐயமும் – தேம்பா:11 30/2

மேல்