தொ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 1
தொக்கது 1
தொக்கன 2
தொக்கார் 1
தொக்கு 10
தொகு 5
தொகுக்கும் 1
தொகுத்த 1
தொகுத்தனர் 1
தொகுத்தார் 1
தொகுத்து 1
தொகுதி 8
தொகுதியால் 1
தொகுதியும் 1
தொகுப்பார் 1
தொகை 18
தொகை_இல 1
தொகைத்த 1
தொகையால் 1
தொகையான் 1
தொகையில் 1
தொகையின் 4
தொகையும் 2
தொகையை 1
தொகையோன் 5
தொகையோனை 1
தொங்கல் 1
தொட 2
தொடங்கி 2
தொடங்கிய 2
தொடங்கிற்று 1
தொடங்கின்றான் 1
தொடங்கினார் 1
தொடர் 25
தொடர்கின்றவை 1
தொடர்கு 1
தொடர்ந்த 4
தொடர்ந்தவே 1
தொடர்ந்தனன் 1
தொடர்ந்தார் 1
தொடர்ந்தால் 1
தொடர்ந்தான் 1
தொடர்ந்து 13
தொடர்பின் 3
தொடர்பினார் 1
தொடர்பினோடு 1
தொடர்பு 3
தொடர்பை 2
தொடர்பொடு 2
தொடர்வன 2
தொடர்வார் 1
தொடர 7
தொடரா 1
தொடராது 1
தொடராமையினோ 1
தொடரார் 1
தொடருதும் 1
தொடரும் 2
தொடலை 1
தொடி 4
தொடு 11
தொடுகு 3
தொடுத்த 14
தொடுத்தான் 1
தொடுத்து 5
தொடுதலால் 1
தொடுப்பார் 1
தொடும் 10
தொடுவார் 1
தொடை 31
தொடைகள் 2
தொடைகாள் 1
தொடைப்பா 1
தொடையல் 4
தொடையால் 5
தொடையில் 2
தொடையினன் 1
தொடையினுள் 1
தொடையே 1
தொடையை 1
தொடையொடு 3
தொடையோ 2
தொத்து 1
தொபீயன் 3
தொய்யல் 3
தொய்யலின் 1
தொல் 23
தொல்லின் 1
தொல்லை 4
தொல்லையில் 3
தொல்லையின் 1
தொலைக்கு 1
தொலைக்கும் 1
தொலைத்த 1
தொலையா 1
தொலைவன 2
தொழ 22
தொழா 2
தொழில் 56
தொழிலனுக்கு 1
தொழிலாய் 1
தொழிலால் 1
தொழிலினால் 1
தொழிலினை 1
தொழிலே 1
தொழிலை 7
தொழிலோ 1
தொழிலோன் 2
தொழிற்கு 3
தொழு 4
தொழுகின்றார் 2
தொழுகின்றாள் 1
தொழுகுவர் 2
தொழுத 6
தொழுதது 2
தொழுதல் 3
தொழுதார் 3
தொழுதால் 2
தொழுதாள் 5
தொழுதான் 11
தொழுதி 1
தொழுது 51
தொழுதும் 3
தொழுதே 5
தொழுதேல் 2
தொழுதேன் 3
தொழுபவோ 1
தொழும் 33
தொழும்-தொறும் 2
தொழும்பர் 1
தொழும்பராய் 1
தொழும்பன் 3
தொழும்பனே 1
தொழும்பனை 1
தொழுவார் 5
தொழுவாள் 1
தொழுவான் 2
தொறும்தொறும் 3
தொன் 2
தொனி 13
தொனிகள் 1
தொனியில் 1
தொனியினோடு 1
தொனியே 1
தொனியோ 1

தொக்க (1)

தொக்க சிந்தை நிலை கடந்த சுகத்தில் பிதா வீற்று இருந்து ஆளும் – தேம்பா:36 19/2

மேல்


தொக்கது (1)

வான் வயிறு ஆர் சுவை அமிர்தம் மண் உலகில் தொக்கது என – தேம்பா:23 73/3

மேல்


தொக்கன (2)

தொக்கன பிணங்கள் அஞ்ச தொகை_இல இடி போல் ஆர்த்து – தேம்பா:23 54/3
தொக்கன எவரும் ஓட சூழ் இரு வானோர் தோன்றி – தேம்பா:29 86/3

மேல்


தொக்கார் (1)

தொக்கார் அனை அ துயர் ஆலுவன – தேம்பா:30 21/4

மேல்


தொக்கு (10)

தொக்கு அடங்கிய எசித்து உயிர் யாவும் துகள் ஒழிப்ப அவண் எய்திய நாதன் – தேம்பா:22 3/2
தொக்கு அணி வேட முனிவரன் என நான் தோன்றி ஆங்கு எவரையும் வெல்வேன் – தேம்பா:23 105/4
தொக்கு எலாம் பரந்து மாக்கள் தொகையில் ஆர் உய்வர் என்பார் – தேம்பா:24 7/4
தொக்கு அடங்கிய தாய் இவண் தோன்ற வந்து – தேம்பா:26 34/3
சூலம் அக்கு அணி கொக்கு அணி தொக்கு அணி – தேம்பா:27 80/2
தொக்கு அது நீக்கி தன் வயத்து ஆதல் சொல்லிய ஆறினுள் முதற்றே – தேம்பா:27 158/4
தொக்கு அளவு அகன்ற சீர் கொள் சுடர் உலகு உரிமை அங்கண் – தேம்பா:28 71/2
துப்பு அப்பால் உரு சிவப்ப தொக்கு உம்பர் என விருதாய் சுடர் மீன் கொண்டார் – தேம்பா:32 88/1
ஆவல் செய் அருள் தாயும் அனைத்தையும் தொக்கு உள ஆக்கி – தேம்பா:33 26/1
தூய் ஆக மறை வடிவு ஆய தொக்கு இணை வெல் மாட்சிமையாள் – தேம்பா:34 34/1

மேல்


தொகு (5)

சுனை செய் பாசியில் தொகு நிலை இல மனம் தளம்ப – தேம்பா:27 171/3
தோடு அகடு இழி தேன் கீதம் தொகு விரல் உலவி ஆர்க்கும் – தேம்பா:28 15/3
இட கை தொகு விரலால் எதிர் தோள் இட்ட வளை கவ்வி – தேம்பா:29 52/1
தும்மி அ ஏவல் செய்தோர் தொகு உயிர் நக்கி கோறி – தேம்பா:29 80/2
தொகு மணி பறைகள் ஆர்ப்பும் சுட்ட அகில் புகையும் சொல்ல – தேம்பா:36 92/3

மேல்


தொகுக்கும் (1)

சோலைகள் கிடந்தன தொகுக்கும் வண்ணமோ – தேம்பா:1 37/4

மேல்


தொகுத்த (1)

துன்பு துன்றிய பொருள் என அனைத்தையும் தொகுத்த
பின்பு துன்றிய பேர் அரிது அன்பு உளம் தூண்டி – தேம்பா:6 65/1,2

மேல்


தொகுத்தனர் (1)

தொகுத்தனர் எங்கும் யாரும் இல துணை பட ஒன்றி ஏகு அணிகள் – தேம்பா:5 142/3

மேல்


தொகுத்தார் (1)

தூய ஆரியர் விரைந்து அரும் தொடர்பொடு தொகுத்தார் – தேம்பா:6 64/4

மேல்


தொகுத்து (1)

தோல் முதல் உடைமை சால் தொகுத்து அங்கு ஓச்சு செங்கோல் – தேம்பா:14 80/1

மேல்


தொகுதி (8)

சொல் வழியும் உள் வழியும் தொடர்ந்து அடங்காது எ உவமை தொகுதி யாவும் – தேம்பா:5 38/1
சுருதி மொழி எழ எனது இறையவன் இவை தொகுதி அற அளவு அற இடும் அளவையில் – தேம்பா:8 70/2
துன்னி வீழ் புனல் அன்ன நிலையா செல்வ தொகுதி விழைந்து அறம் நீத்த பாவிகாள் விண் – தேம்பா:11 48/2
கோள் நெறி வழுவாது இலங்கு அற தொகுதி குணிக்க அரும் ஆணரன் மாட்சி – தேம்பா:20 69/2
பல் அற தொகுதி வாய்த்த பணி புனை சக்கரீயன் – தேம்பா:26 1/2
தேன் நிமிர் முல்லையாக திருந்து அற தொகுதி நட்டு – தேம்பா:30 73/1
துன் நெடும் கொடிகளும் தொகுதி ஒன்று இல்லா – தேம்பா:32 54/3
தோய்ந்த கதிர் எறி மணி கொய் சுவேசிய நாடு இனிது ஆள்வார் தொகுதி ஈட்டம் – தேம்பா:32 75/4

மேல்


தொகுதியால் (1)

துச்சு இறை உளம் போன்று அள்ளும் தொகுதியால் இருள் மொய்த்து ஆடா – தேம்பா:14 37/1

மேல்


தொகுதியும் (1)

வாய் எரி விளக்கின் தொகுதியும் மல்கி வயின்வயின் எரிந்த பைம்பொன்னும் – தேம்பா:2 46/2

மேல்


தொகுப்பார் (1)

துய் கலந்த நெல் உண்ணவும் ஈயவும் தொகுப்பார் – தேம்பா:1 15/4

மேல்


தொகை (18)

சூல் முகம் புதைத்த சீர் தொகை புறப்பட – தேம்பா:3 52/3
போற்றுவான் அவற்கு பொழி வர தொகை
சாற்றுவான் உணர்குவான் மக்கள் தன்மையோ – தேம்பா:9 117/3,4
தூ வரும் பலவும் தொகை சொற்றவோ – தேம்பா:11 28/4
கொல் வினை அறுப்ப வந்த குண தொகை இறைவன் போக – தேம்பா:13 21/2
தோல் பேர் படை ஓர் தொகை இன்றி வரும் – தேம்பா:15 40/2
தொடு கணை மாரி துளித்தன பின் தொகை அற்று – தேம்பா:15 67/3
சூழ் இசைத்து இடை உலாம் தொகை இழந்து அமரரே தொழுது போனார் – தேம்பா:19 21/4
தொக்கன பிணங்கள் அஞ்ச தொகை_இல இடி போல் ஆர்த்து – தேம்பா:23 54/3
தொகை இலா தகவின் காட்சி சுடர் எலிசேய் என்பானை – தேம்பா:25 62/1
இடை தயாபமோடு ஈந்த வர தொகை
படைத்த நாதன் அருள் பயன் எய்தினான் – தேம்பா:26 30/3,4
சொரிந்த தன்மை வர தொகை ஈக நீ – தேம்பா:26 35/3
காட்சியோடு உள அற தொகை அனைத்துமே கதிர் செய் – தேம்பா:26 63/1
மலை வளர் வெள்ளம் என்ன வர தொகை உவப்ப கொண்டேன் – தேம்பா:26 101/4
தொகை தீர்ந்த வரத்தோன் வாய் தோன்ற யாரும் துதைந்து அஞ்ச – தேம்பா:26 170/2
தொகை பட பழகா தன்மை தொழில் எலாம் அரிய அன்றோ – தேம்பா:28 16/4
தொகை வழி உணர்வு அரிது எனினும் சூழ்ந்த அ – தேம்பா:28 38/3
நிலை படு வனத்து அழல் திரளும் மாற்றுபு நிரை பட அற தொகை வளரும் மாட்சியோடு – தேம்பா:30 87/3
தொகை விரிந்து நின்றார் துயர் தீர்ப்ப வான் – தேம்பா:36 16/2

மேல்


தொகை_இல (1)

தொக்கன பிணங்கள் அஞ்ச தொகை_இல இடி போல் ஆர்த்து – தேம்பா:23 54/3

மேல்


தொகைத்த (1)

தொல் முகத்து அதிட்டனும் தொகைத்த மோனரும் – தேம்பா:20 133/1

மேல்


தொகையால் (1)

குல முறையும் இன முறையும் ஒன்றும் பாரா குண தொகையால் வேறுபட வினையை செய்த – தேம்பா:11 44/1

மேல்


தொகையான் (1)

மெய்யை நூறு தவம் விளைத்த அரும் வர தொகையான்
மையை நூறு உவப்பில் வாழ்ந்திருந்தான் யகோபு என்பான் – தேம்பா:20 57/3,4

மேல்


தொகையில் (1)

தொக்கு எலாம் பரந்து மாக்கள் தொகையில் ஆர் உய்வர் என்பார் – தேம்பா:24 7/4

மேல்


தொகையின் (4)

தூயவை பதி வர தொகையின் சூல் இடத்து – தேம்பா:3 51/2
ஓசை மிக்க அற தொகையின் பீடத்து உயர் வளர்க – தேம்பா:3 55/3
தூய் என துளித்த மாரி தொகையின் மேல் வரங்கள் வாரும் – தேம்பா:7 27/3
தொகையின் அங்கு அவன் தாள் தொழுது ஏத்தினான் – தேம்பா:26 31/4

மேல்


தொகையும் (2)

தொடையே நின்ற தயையும் நீதி தொகையும் பிரியா – தேம்பா:14 74/1
துகைத்த நோய் தணிவும் தொகையும் படா – தேம்பா:33 16/1

மேல்


தொகையை (1)

குணித்த கன்னி அனைத்தன கால் குழவிக்கு ஊட்டும் வர தொகையை
கணித்த திறத்து ஊட்டினள் அல்லால் கதிர் வானவரும் அறிகுவரோ – தேம்பா:26 46/3,4

மேல்


தொகையோன் (5)

குன்று எழுந்த செம்_சுடர் போல் முகில் மேல் தோன்றும் குண தொகையோன் வலத்து இறைஞ்சி உயர வானோர் – தேம்பா:11 46/1
ஒல்கா தவத்தின் வர தொகையோன் ஒரு நாள் சுடும் இ வனத்திடையே – தேம்பா:19 34/1
ஆர் அற தொகையோன் மைமைக்கு அரியது ஓர் புதல்வன் தோன்ற – தேம்பா:26 5/2
நண்பால் இணையா குண தொகையோன் நயந்து எம் ஞான்றும் முறை எஞ்சா – தேம்பா:26 41/3
ஆடலோடு இயைந்து ஒழுகி அரிய எல்லா அற தொகையோன்
வீடலோடு இயைந்து எதிர்க்கும் வினை சால் போத கனி கேட்பான் – தேம்பா:26 163/3,4

மேல்


தொகையோனை (1)

அ உலகும் உவந்து ஏத்தும் ஆன்ற குண தொகையோனை
இ உலகும் ஏத்தாதால் ஈங்கு இழிவு நண்ணாரோ – தேம்பா:26 143/1,2

மேல்


தொங்கல் (1)

தோடுவார் வெறி தொங்கல் இட்டு ஓடுவார் – தேம்பா:33 13/3

மேல்


தொட (2)

மருவி எதிர் வாளி தொட மடிவர் அலது உய்வர் என மருளி எவரும் கடிது அகன்றார் – தேம்பா:15 129/4
தொடை உற்ற எயிற்று அழல் ஈட்டிய பேய் தொட ஒற்றை சரத்தை அடல் தனு கோத்து – தேம்பா:24 27/1

மேல்


தொடங்கி (2)

தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய் சேர்த்து இ தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண் – தேம்பா:11 43/3
சூர் மரத்து உயர் தான் இளமையில் தொடங்கி சுகம் என துயில் கொள்வான் அம்மா – தேம்பா:34 51/4

மேல்


தொடங்கிய (2)

தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய் சேர்த்து இ தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண் – தேம்பா:11 43/3
களி வளர் உவப்பில் எம் வினை தீர கனிந்த சொல் தொடங்கிய ஆறும் – தேம்பா:34 49/2

மேல்


தொடங்கிற்று (1)

கூன் மலி சடத்த பேய்கள் குணித்த போர் தொடங்கிற்று அன்றோ – தேம்பா:24 11/4

மேல்


தொடங்கின்றான் (1)

ஊன் உகும் ஆக்கையை ஏந்திய நாதனை உணர்ந்து பாட தொடங்கின்றான் – தேம்பா:32 47/4

மேல்


தொடங்கினார் (1)

தொனி பட்டு ஆர்த்து அரிய போரை தொடங்கினார் வயிர தோளார் – தேம்பா:17 20/4

மேல்


தொடர் (25)

வெள்ளி நீள் தொடர் விசித்து அதை பிடித்து என சூழ – தேம்பா:1 5/3
தூண் தொடர் பொலிந்த முகட்டு உயர் விளங்கும் தூய பொன் தகட்டு மேல் படர்ந்த – தேம்பா:2 43/1
சேண் தொடர் பருதி தன் கதிர் படலின் செறிந்த பல் அணி அணி கிளர்ந்த – தேம்பா:2 43/2
பூண் தொடர் அணி ஆர் தனது உரு கண்டு பொருவு_இல் தோற்று உட்கு என சாய – தேம்பா:2 43/3
மாண் தொடர் இரவி ஆயிரம் என்ன வயங்கும் அ ஆலயம் மாதோ – தேம்பா:2 43/4
துன்னும் உயிரும் தொடர் காவலன் நீ – தேம்பா:5 59/2
துலங்கின அகத்து உன் ஏவல் தொடர் நெறி தோற்றுவாய் என்று – தேம்பா:7 8/3
சூழ்வார் இல்லால் தொடர் தீது அறியாது ஆள்வார் அல்லால் – தேம்பா:9 17/2
மேலோர் உகப்பே மேவார் மேவார் தொடர் தம் நிழலை – தேம்பா:9 19/3
துப்பு ஆறு என உதிர திரை தொடர் ஆழியின் விரவ – தேம்பா:14 59/2
சோதியின் வடிவாய் ஞானம் தொடர் குணத்து எஞ்சான் கோப – தேம்பா:14 121/1
துடி எழுந்த பறை ஒலி முழங்க அமர் தொடர் உடன்ற கொலை அளவதோ – தேம்பா:16 35/4
ஐ_ஐ_ஞூறு தொடர் நால் நூற்று ஆறு ஆண்டு முனர் – தேம்பா:20 57/1
தூங்கா ஒலி முரசு ஒத்து எழு தொனியில் தம்முள் தொடர் போர் – தேம்பா:21 27/3
சாலொடு தொடர் கடித்து அலறி தாவின – தேம்பா:24 15/2
கொலை முகத்தொடு குருதியை தொடர் குழவி துய்த்து உணும் அமுது உக – தேம்பா:25 75/3
சொரி வளர்ந்த அருள் தொடர் போய் என்றான் – தேம்பா:26 156/4
தூய் உணர்வால் வருந்தினும் தான் மறுக்கல் தேற்றா தொடர் காமம் – தேம்பா:26 169/2
தூயவர் செல்லும் வீட்டை தொடர் வழி காட்டல் செய்தாய் – தேம்பா:28 129/2
தொல் வினை என்னும் சூலால் தொடர் வினை தளிர்த்து விம்மும் – தேம்பா:29 120/1
தூவி அம் சிறை அனம் தொடர் குடை செய – தேம்பா:30 46/1
சுக முகத்து இன்ன ஆய் தொடர் ஒன்பான் பகல் – தேம்பா:34 5/1
தொல்லை இல்லை என்று உள நாளும் தொடர் தீது ஒப்பு – தேம்பா:34 57/3
துடைத்த நோய்க்கு ஓர் மருந்து அன்னான் தொடர் நல் குழு சூழ்வர புக்கான் – தேம்பா:36 18/4
ஆர்த்தன தேவ மகிழ்வு ஒலி அரவம் ஆர்த்தன தொடர் துதி துழனி – தேம்பா:36 29/1

மேல்


தொடர்கின்றவை (1)

துள்ளும் பரி என வந்து எதிர் தொடர்கின்றவை துறும்-ஆல் – தேம்பா:21 26/4

மேல்


தொடர்கு (1)

முனை முடுக்கிய தமர் அமர் தொடர்கு இல முனை நிறுத்திய பொழுதினும் அரிது அமர் – தேம்பா:15 167/2

மேல்


தொடர்ந்த (4)

சொல் கலத்து இனிய பாடல் தொடர்ந்த கின்னரம் பண் மற்று அ – தேம்பா:20 36/2
துறந்த பின் அவன் தொடர்ந்த பல் இடம் தொடர்ந்து அவனை – தேம்பா:25 8/2
சோர் அரும் கருத்தினோர் தொடர்ந்த தம் கதி – தேம்பா:30 49/3
பல் நாள் தொடர்ந்த பழி அற நான் பாய் செம் குருதி தந்து இறப்ப – தேம்பா:36 26/2

மேல்


தொடர்ந்தவே (1)

ஆயரும் மறந்த கன்று அடி தொடர்ந்தவே – தேம்பா:12 36/4

மேல்


தொடர்ந்தனன் (1)

சொல் நெடும் பகை தொடர்ந்தனன் எவரையும் நகைப்பான் – தேம்பா:3 16/4

மேல்


தொடர்ந்தார் (1)

கோல நீர் கடலாம் அ நகர் நீத்து ஈட்டம் கொடு தொடர்ந்தார் – தேம்பா:30 19/4

மேல்


தொடர்ந்தால் (1)

வனத்துளே தொடர்ந்தால் மருவான் என – தேம்பா:26 149/2

மேல்


தொடர்ந்தான் (1)

எண் உக இடம் அற்று அபயர் மா கடல் சூழ்ந்து எய்த கோல் பின்னுற தொடர்ந்தான் – தேம்பா:14 44/4

மேல்


தொடர்ந்து (13)

துஞ்சு இலா நதி தொடர்ந்து அகல் கரும் கடல் நோக்கல் – தேம்பா:1 8/3
துன்ன ஆசையால் தொடர்ந்து இள தாவிதன் எய்தி – தேம்பா:3 18/3
சொல் வழியும் உள் வழியும் தொடர்ந்து அடங்காது எ உவமை தொகுதி யாவும் – தேம்பா:5 38/1
துறவு ஆதல் தொடர்ந்து மணம் தொடராது – தேம்பா:5 109/1
சூத்திர அரவு நுங்க தொடர்ந்து மோயிசன் வால் வவ்வி – தேம்பா:14 27/3
துறந்த பின் அவன் தொடர்ந்த பல் இடம் தொடர்ந்து அவனை – தேம்பா:25 8/2
அன்பும் அச்சமும் காட்டிய வழி தொடர்ந்து அகல – தேம்பா:26 59/1
ஆட்சியோடு உடு அம்புலி தொடர்ந்து என தொடர – தேம்பா:26 63/2
சொல் நாடினன் அஃதே சுருதியாக தொடர்ந்து எண்ணி – தேம்பா:29 21/2
சொன்ன முறையில் ஈர் உலகும் தொடர்ந்து ஒன்றாய் – தேம்பா:31 12/3
துஞ்சா தயை மகன் தொடர்ந்து புக்கு நம்மை – தேம்பா:31 14/3
தொல் அகத்து உறவினோர் தொடர்ந்து நாடினார் – தேம்பா:31 20/2
சொரிந்த ஓதை தொடர்ந்து இசை பாடலில் – தேம்பா:33 12/3

மேல்


தொடர்பின் (3)

துன்று என்று இரு நள் செவி உவப்ப தொடர்பின் கேட்ட வான் இறையோன் – தேம்பா:5 24/2
திரை உடை தொடர்பின் வந்தார் திறன் உணர்கிலராய் நின்றே – தேம்பா:30 39/3
தூயினர் துயர்க்கு அற தொடர்பின் போயினார் – தேம்பா:30 43/4

மேல்


தொடர்பினார் (1)

துய் அம் தாய் உரி தொடர்பினார் சுட புகன்றவர்க்கும் – தேம்பா:6 60/1

மேல்


தொடர்பினோடு (1)

சூல் வழி சனித்த பாவ தொடர்பினோடு ஊழ்த்த நெஞ்சே – தேம்பா:28 138/4

மேல்


தொடர்பு (3)

துய் விளை உளத்தில் பொங்கும் தொடர்பு இறகு ஆக ஊக்கி – தேம்பா:9 80/3
தொடையொடு வளர்ந்த பா போல் தொடர்பு அறா வழங்கிற்று அன்றோ – தேம்பா:22 23/4
சுருதியே வடிவாய் தோன்றிய தாயின் தொடர்பு அருள் உதவி சார்பு எய்த – தேம்பா:36 35/3

மேல்


தொடர்பை (2)

நீக்காது உனை நேடிய எம் தொடர்பை
தூக்காமையினோ தொடராமையினோ – தேம்பா:30 31/2,3
துயர் தந்தால் அரிய ஓர் தொடர்பை தோற்றுவித்து – தேம்பா:30 110/2

மேல்


தொடர்பொடு (2)

தூய ஆரியர் விரைந்து அரும் தொடர்பொடு தொகுத்தார் – தேம்பா:6 64/4
துஞ்சிய உயிர்கள் உய்ய தொடர்பொடு ஈங்கு எய்தி ஆர்வம் – தேம்பா:7 28/2

மேல்


தொடர்வன (2)

கலையின் உயரின தொடை தொடை தொடர்வன கனிய இன எனது உரை அடை கருமமோ – தேம்பா:8 64/4
சொல்வதற்கு அரும் தொடை என தொடர்வன துகளே – தேம்பா:23 90/4

மேல்


தொடர்வார் (1)

பெயர்வார் நசை உள் பெயரா தொடர்வார் – தேம்பா:30 34/4

மேல்


தொடர (7)

இற்றை இனிது ஆயின பின் மற்றையவரும் தொடர
கற்றை மலி சோதி கருள் முற்று முகில் புக்கு அனைய – தேம்பா:5 150/1,2
ஒன்பது சாபம் நிறை நிறை தொடர உவமியா மதுகையோன் இட்ட – தேம்பா:14 40/3
இ படை தொடர புணரி முன் நெருங்க இடை வரும் யூதர் உள் வெருவ – தேம்பா:14 46/1
இடையே நின்று தொடர இனிது எண்_இலர் சால்பு உண்டார் – தேம்பா:14 74/4
தொடர பொம்மி வளர்ந்து விளங்குமே – தேம்பா:18 53/4
ஆட்சியோடு உடு அம்புலி தொடர்ந்து என தொடர
மாட்சியோடு உயிர் வளர்ந்தன தன்மையின் இளைத்த – தேம்பா:26 63/2,3
தொடர நெஞ்சத்து அவா அற தணித்து நிற்ப – தேம்பா:30 68/2

மேல்


தொடரா (1)

துன்பும் அல்லும் உள் குடி அலால் மன் உயிர் தொடரா
இன்பு உகுத்தது ஓர் இருண்ட கான்-இடை ஒளித்து உறைந்தாள் – தேம்பா:26 59/3,4

மேல்


தொடராது (1)

துறவு ஆதல் தொடர்ந்து மணம் தொடராது
உறல் ஆவது எனோ திரு என் உளம் ஆய் – தேம்பா:5 109/1,2

மேல்


தொடராமையினோ (1)

தூக்காமையினோ தொடராமையினோ
நோக்காது எமை நூக்குபு போதி என்பார் – தேம்பா:30 31/3,4

மேல்


தொடரார் (1)

பின் நாள் தொடரார் ஆர் பொறுக்கும் தன்மை பிழை என்பாள் – தேம்பா:29 21/4

மேல்


தொடருதும் (1)

சொல் முகத்து இவண் தொடையொடு தொடருதும் உரைத்தே – தேம்பா:25 1/4

மேல்


தொடரும் (2)

தொடுத்த பாவை நிகர நீதி தொடரும் நூலின் முறையினால் – தேம்பா:7 39/1
போல் ஓர் இடத்தும் தேடா பொழுதே தொடரும் புகழே – தேம்பா:9 19/4

மேல்


தொடலை (1)

நிழல் தர தொடலை கூந்தல் நீர்மையார் தோள் மேல் துஞ்சி – தேம்பா:28 133/2

மேல்


தொடி (4)

தொடி ஒத்து அலர்ந்த கொடி வேய்துப சூழ்ந்து அடைந்தார் – தேம்பா:5 77/4
மருள் நீக்கும் கோல் தொடி தன் வாள் முகத்தால் எஞ்ஞான்றும் – தேம்பா:6 3/2
என் உயிர் அதனின் ஊங்கு இனிய பொன் தொடி
தன் உயிர் பிரிந்து யான் தனித்து போயின – தேம்பா:7 88/1,2
தொடி மணி இலங்கவும் எழில் முகத்தினார் – தேம்பா:32 66/3

மேல்


தொடு (11)

இருள் தொடு துயர் அகன்று அறிவை ஈந்தன – தேம்பா:8 30/3
தொடு கணை மாரி துளித்தன பின் தொகை அற்று – தேம்பா:15 67/3
நக படு சின தொடு கரியில் ஊக்குபு நகை தகு மதிக்கு இணை பருதி வாய்த்து இழை – தேம்பா:15 74/3
திளைத்தனர் புடைப்புடை படு புண் வாய் கறை சிதர்த்தனர் சின தொடு சின வில் பூட்டு என – தேம்பா:15 79/2
சுழல் எழ உருத்த வாரி என அமர் தொடு முறை உரைக்க நூலின் அளவதோ – தேம்பா:15 110/4
மழை என தொடு கணையொடு பல படை வழி வகுத்து உயிர் அளவு இல அனிலம் முன் – தேம்பா:15 166/2
இருள் தொடு நிசியில் ஆதி இறைவனை பகைத்த பாலால் – தேம்பா:16 39/2
மருள் தொடு தலைவர் ஆதி மற்றவர் தம்மில் தாம் தம்மை – தேம்பா:16 39/3
வல் அரி குழவி போன்றே வய தொடு பிறந்த தோன்றல் – தேம்பா:17 16/1
கறையோடு மிடைந்து எரியும் தழல கதமோடு சரம் தொடு வெம் சமரே – தேம்பா:24 29/4
தொடு மலை உயர்த்த நேமி உருவவும் துறு விசையின் மைத்தன் ஏவு கணையொடு – தேம்பா:24 34/3

மேல்


தொடுகு (3)

தொடுகு குழல் ஒலி தொடுகு குரல் ஒலி தொடுகு துதி ஒலி தொடுதலால் – தேம்பா:5 119/3
தொடுகு குழல் ஒலி தொடுகு குரல் ஒலி தொடுகு துதி ஒலி தொடுதலால் – தேம்பா:5 119/3
தொடுகு குழல் ஒலி தொடுகு குரல் ஒலி தொடுகு துதி ஒலி தொடுதலால் – தேம்பா:5 119/3

மேல்


தொடுத்த (14)

கருப்பு விலின் இடை தொடுத்த பசு மலர் கதிர்த்த பகழி-கொல் என அவர் – தேம்பா:5 114/2
சொற்ற ஆய சீரதோ தொடுத்த பாவின் மாலையால் – தேம்பா:7 38/4
தொடுத்த பாவை நிகர நீதி தொடரும் நூலின் முறையினால் – தேம்பா:7 39/1
விண் பொதுளும் நலம் தொடுத்த மாலையாக விழுந்து இறைஞ்சி கொணர்ந்தனரே ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 55/4
மெய் திறத்தால் மறை தொடுத்த தொடையல் என்னா விசித்து அணிந்தார் தாள் வணங்கி ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 56/4
தொடுத்த உவப்பில் இன்பு ஒழியா தோன்றிற்று அன்று ஓர் விழா அணியே – தேம்பா:12 9/4
துறந்த துயில் ஆக தொடுத்த தேவ துதி விள்ளான் – தேம்பா:16 60/4
தொடுத்த தன் அணிகள் பெய்து என் தோன்றல் என்று அரசி கொண்டாள் – தேம்பா:21 9/4
சுளி முகத்து அதிர்ந்த பேய் தொடுத்த வேல் எலாம் – தேம்பா:24 18/3
வில் செய்வார் கொண்ட ஆறும் வெம் கணை தொடுத்த ஆறும் – தேம்பா:28 10/1
சுனை அனை விழி விடா தொடுத்த நீரினால் – தேம்பா:31 96/1
துயில் அகல் ஒளி மணி தொடுத்த பான்மையால் – தேம்பா:32 57/3
சூசை தரு திவ்விய துதி தொடை தொடுத்த
ஓசை தரு நாமம் ஒரு ஆயிரமும் ஓதி – தேம்பா:35 37/2,3
நூல் மேல் முறை நையா தொடுத்த நுண் மண் ஆறு_ஆறு அணி இது என – தேம்பா:36 131/3

மேல்


தொடுத்தான் (1)

மீட்பது அரும் சொல் தொடுத்தான் விம்மித கற்பு உள தூயான் – தேம்பா:34 39/4

மேல்


தொடுத்து (5)

பா முறை நடத்தி தொடை சரம் தொடுத்து பகர்ந்து அவை புகழ்வது பாலோ – தேம்பா:2 49/4
முடித்த திங்களை தொடுத்து உடுக்கள் உற்றல் ஒத்ததே – தேம்பா:11 9/4
முக முகம் எதிர்த்து வாளி இடை இடை முறை முறை தொடுத்து மீள வய மலை – தேம்பா:15 112/3
மீ வை வாளி தொடுத்து ஒருங்கு மாய்த்தார் வியந்து எவரும் – தேம்பா:16 53/3
தோட்டு அழகு அலர்ந்த பூம் தொடை தொடுத்து ஒளி – தேம்பா:32 63/1

மேல்


தொடுதலால் (1)

தொடுகு குழல் ஒலி தொடுகு குரல் ஒலி தொடுகு துதி ஒலி தொடுதலால்
படுகு முகில் ஒலி படுகு கடல் ஒலி படுதல் இல மணம் ஆயதே – தேம்பா:5 119/3,4

மேல்


தொடுப்பார் (1)

கழலால் சிலம்ப மருட்டிடுவார் கண்ணால் கணை தொடுப்பார்
நிழலால் கலன் கொண்டு இருள் மொய்ப்பார் நிறை தம் உறுப்பு எல்லாம் – தேம்பா:28 30/2,3

மேல்


தொடும் (10)

தெருள் தொடும் இனிய குழல் ஒலி வீணை செறி ஒலி கின்னரத்து ஒலி நல் – தேம்பா:2 47/2
மருள் தொடும் மதுர பல்லியம் ஒலிப்ப மாகதர் பா ஒலி இசைந்து இ – தேம்பா:2 47/3
அருள் தொடும் ஒலிகள் கடல் ஒலி ஒழிக்கும் அரிய இன்பு இரு செவி மாந்த – தேம்பா:2 47/4
பொருள் தொடும் அருமறை வடிவம் போன்று ஒளிர் – தேம்பா:8 30/1
அருள் தொடும் மடவரல் அகத்தில் இன்புற – தேம்பா:8 30/2
தெருள் தொடும் இறைவனை சிறந்து போற்றினாள் – தேம்பா:8 30/4
அருள் தொடும் திசை அந்தரம் அளவு இல களிப்ப – தேம்பா:11 94/2
மருள் தொடும் திசை வையகம் இனிது அயர்வு உயிர்ப்ப – தேம்பா:11 94/3
இருள் தொடும் திசை இடியொடு நடுநடுங்கினவே – தேம்பா:11 94/4
உருள் தொடும் இரதம் ஆதி உள படை சிதைத்து மாய்த்தார் – தேம்பா:16 39/4

மேல்


தொடுவார் (1)

இடை நின்று சுழன்று எவணும் தழலால் எரிகின்ற இடி என்று சரம் தொடுவார்
மிடை நின்ற இரதம் கொடு இழிந்து எழுவார் மிலைகின்று புரண்டு புரண்டு உருள்வார் – தேம்பா:24 30/3,4

மேல்


தொடை (31)

பா முறை நடத்தி தொடை சரம் தொடுத்து பகர்ந்து அவை புகழ்வது பாலோ – தேம்பா:2 49/4
அகம் மலிந்து உணர்ந்த தமிழ் கலை வருந்துகின்ற தொடை அளவின் நின்று அடங்க முறையோ – தேம்பா:5 149/4
அறை கெழு நூல் வழி தொடை போல் தொடையல் ஆக்கி அருச்சனை செய்து அடி அணிந்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 53/4
கலையின் உயரின தொடை தொடை தொடர்வன கனிய இன எனது உரை அடை கருமமோ – தேம்பா:8 64/4
கலையின் உயரின தொடை தொடை தொடர்வன கனிய இன எனது உரை அடை கருமமோ – தேம்பா:8 64/4
ஒலி அதிர முடி முடியொடும் அடிபட உவகை எழ விழ அணி தொடை அசைவொடு – தேம்பா:8 65/1
தண் அம் தீம் புனல் ஆடு அலர் தண் தொடை
சுண்ணம் தோய்ந்து உரம் தூங்குபு தோன்றினார் – தேம்பா:9 53/3,4
சொல்லார் உண்டோ உன் அருள் வாழ்த்தும் தொடை மிக்கோய் – தேம்பா:9 61/4
ஒருவர் புகழும் தொடை உணர்ந்த இசை பாட – தேம்பா:12 85/3
கல்லியம் பா தொடை கனிய பாடினார் – தேம்பா:13 19/4
தொடை வரும் கனி பாவின் சொற்றினான் – தேம்பா:14 18/4
அறுவன கால் தொடை அம் கை உரம் தலைகள் – தேம்பா:15 72/3
இரைத்த சிலை கால் எரிய ஓர் ஒர் தொடை ஏவினன் இகல் சிலையும் மால் களிறும் அம் பொன் – தேம்பா:15 128/3
சுட வில் திறல் கணை மட்டு இல தொடை விட்டனன் அவனே – தேம்பா:15 144/4
மரு மணி தொடை யாழ் ஏந்தி மரகத மணி தாள் வைத்த – தேம்பா:15 182/1
தாம் சினை மலர் தொடை தாளில் பெய்து பைம் – தேம்பா:17 10/3
சொல்வதற்கு அரும் தொடை என தொடர்வன துகளே – தேம்பா:23 90/4
தொடை உற்ற எயிற்று அழல் ஈட்டிய பேய் தொட ஒற்றை சரத்தை அடல் தனு கோத்து – தேம்பா:24 27/1
கடை உற்ற சர தொடை கோடியும் ஆய் ககனத்தில் அழற்றிய மாரி எனா – தேம்பா:24 27/3
தொடை ஒன்று சரம் சதம் ஒன்று இடுவார் துறுகின்ற இரதம் கொடு எதிர்ந்து இரிவார் – தேம்பா:24 30/1
திறத்தில் அற தொடை ஏற்றினான் – தேம்பா:24 56/4
தாக்கினான் அற வெம் சர பல் தொடை
போக்கினான் கடி போக்கிய வேல் எலாம் – தேம்பா:24 58/2,3
துளி விள்ளா முகை தேம் தொடை ஆக நீ – தேம்பா:25 95/2
சுரை ஈர மலர் தொடை சூழ் பொழிலே – தேம்பா:30 24/3
திகை தகு நலத்து எழு வனம் இது ஆய் புகழ் திளைத்தன கவி தொடை நிகரும் மாட்சியோ – தேம்பா:30 86/4
விதுப்பட உருப்படும் அமரர் பா தொடை விளைத்து இவை இசைத்து அடி தொழுது வாழ்த்துளி – தேம்பா:30 89/1
தோட்டு அழகு அலர்ந்த பூம் தொடை தொடுத்து ஒளி – தேம்பா:32 63/1
தேன் நுரைத்து அலர் தொடை செறிந்த பூண்களும் – தேம்பா:32 64/2
விரை புறம் காண் தொடை மார்பில் வெண் புறவு கதிர் பரப்ப வேய்ந்த அன்னார் – தேம்பா:32 82/3
சூசை தரு திவ்விய துதி தொடை தொடுத்த – தேம்பா:35 37/2
ஒண் உரு தொடை கொணர் பொறையும் ஊக்கமும் – தேம்பா:36 128/3

மேல்


தொடைகள் (2)

நின்று அலர் தொடைகள் ஏந்தி நிகர்த்த பேய் தோல்வி காண்பார் – தேம்பா:24 10/4
குடி சென்ற வீடு என்ன கொழு மணி பொன் பூம் தொடைகள் குவித்து போற்ற – தேம்பா:32 29/3

மேல்


தொடைகாள் (1)

விண்டு இக்கு ஒழுகி குழல் சூழ் விரை வீசிய தண் தொடைகாள்
வண்டிற்கு இரை செய்து எனையும் வண்டிற்கு இரை செய்தீரே – தேம்பா:10 46/1,2

மேல்


தொடைப்பா (1)

ஆசை மிக்க கனி ஈன்றாள் கற்றோர் அரும் தொடைப்பா
ஓசை மிக்க அற தொகையின் பீடத்து உயர் வளர்க – தேம்பா:3 55/2,3

மேல்


தொடையல் (4)

சுருளொடு வீங்கிய தொடையல் மார்பினான் – தேம்பா:3 2/3
அறை கெழு நூல் வழி தொடை போல் தொடையல் ஆக்கி அருச்சனை செய்து அடி அணிந்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 53/4
மெய் திறத்தால் மறை தொடுத்த தொடையல் என்னா விசித்து அணிந்தார் தாள் வணங்கி ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 56/4
துவரும் உடன் உள பல நிற மலர் அணி தொடையல் மது மழை குமிழிகள் எழ விழ – தேம்பா:8 63/3

மேல்


தொடையால் (5)

அன்று என் தொடையால் அடையா பண்பு அன்னார் இருவர் சொல் அமிர்தம் – தேம்பா:5 24/1
தாது ஊது அளி சூழ் தவழ் தண் தொடையால்
மாது ஊடு மனம் சுட வானவனே – தேம்பா:5 61/1,2
மரு கொண்டு ஆர் மது மலரை தூவி தூவி மது தொடையால் மண்டு புகழ் பாடி பாடி – தேம்பா:8 47/3
நெஞ்சம் சேர் நஞ்சு உகுப்ப எடுத்த நாக நெடும் தலையை என் தொடையால் நேரா வல்லாள் – தேம்பா:8 58/2
ஓர் அறு_பத்தும் இரட்டியும் ஓர் தொடையால்
சீர் அறு வேகமொடு அம்புகள் சேர்த்தி விட – தேம்பா:15 70/1,2

மேல்


தொடையில் (2)

தொடையில் அழல் உற்ற பாணம் இடுதலின் துரகமோடு அறுத்த பாகன் மடிதர – தேம்பா:15 111/3
நிறத்து உறும் தொடையில் மார்ப நிகர்ப்பு அரும் நிலை இது அன்றோ – தேம்பா:25 67/4

மேல்


தொடையினன் (1)

நறை பதி தொடையினன் நளி பல் மன்னவர் – தேம்பா:15 131/3

மேல்


தொடையினுள் (1)

சூழ் யாப்பு உள தொடையினுள் யாப்பு உறும் பாலோ – தேம்பா:31 1/4

மேல்


தொடையே (1)

தொடையே நின்ற தயையும் நீதி தொகையும் பிரியா – தேம்பா:14 74/1

மேல்


தொடையை (1)

மை திறத்தால் விரி சிறகை ஓசனித்த வண்டு அணுகா சண்பக அம் தொடையை அன்றே – தேம்பா:8 56/3

மேல்


தொடையொடு (3)

நிரப்பின சிலை கொடு தொடையொடு ஈட்டிய நெறி கணை தடுத்தன கவசம் மேல் பட – தேம்பா:15 80/2
தொடையொடு வளர்ந்த பா போல் தொடர்பு அறா வழங்கிற்று அன்றோ – தேம்பா:22 23/4
சொல் முகத்து இவண் தொடையொடு தொடருதும் உரைத்தே – தேம்பா:25 1/4

மேல்


தொடையோ (2)

தூங்கு ஆய மாலை தொடையோ மணவாது தூய் பொன் – தேம்பா:5 83/1
கான் உடை தொடையோ கலனோ தகா – தேம்பா:9 41/3

மேல்


தொத்து (1)

தேன் நிமிர் தொத்து அணி திமிசும் சாந்தமும் – தேம்பா:18 12/1

மேல்


தொபீயன் (3)

பேர் செல்வத்து ஒளி கொடை கை தொபீயன் என்பான் பிறழா கற்பு – தேம்பா:27 39/2
அருள் இழந்தே சொல்லல் என அழும் தொபீயன்
மருள் இழந்தே கலங்காதான் மறுத்து சொன்னான் – தேம்பா:27 62/3,4
நால் வழி அனைத்தும் தோன்றி நவை அற தொபீயன் காண – தேம்பா:27 68/3

மேல்


தொய்யல் (3)

தொய்யல் உற்று இறைவன் தாளை தொழுது வாழ் திரு வல்லோனே – தேம்பா:7 12/1
ஆழ் அலை பழிப்ப தொய்யல் ஆர்ந்த தாய் நயப்ப வெய்யோன் – தேம்பா:7 25/2
துறு வாமத்து ஒளிர்ந்த நவ சுற்கையொடு உள் அறிவு எய்தி தொய்யல் உற்றார் – தேம்பா:11 105/4

மேல்


தொய்யலின் (1)

துன்பு அருந்திய யாவரும் தொய்யலின்
பின்பு அருந்திய காட்சியின் பெற்றியால் – தேம்பா:36 1/2,3

மேல்


தொல் (23)

தீய் வழி கரு வழி சேரும் தொல் செயிர் – தேம்பா:3 49/3
தொல் மாண்ட புடை நகரில் துன்னிய பின் ஆங்கு உறையும் – தேம்பா:10 12/1
தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய் சேர்த்து இ தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண் – தேம்பா:11 43/3
துன்னிய கொடும் கோல் துயர் செய உளைந்து தொல் மறை வழு இல காத்து – தேம்பா:12 58/3
தொல் உடை சுருதி மாண்பு இயல் காட்ட தோன்றிய தரு இது ஆம்-மன்னோ – தேம்பா:18 34/4
சுடர பொன் சுடும் தீ என தொல் மறை – தேம்பா:18 53/1
சூர் ஏந்தி நிற்பர் எவர் சொல்-மின் என்றான் தொல் உணர்வான் – தேம்பா:20 27/4
சொன்ன தன்மையின் தொல் உரை நூலினர் – தேம்பா:20 86/2
தொல் முகத்து அதிட்டனும் தொகைத்த மோனரும் – தேம்பா:20 133/1
தும்பி சூழ் அலர் தொல் கொழுகொம்பு இழந்து அடுத்த – தேம்பா:23 95/3
மெய் நிறத்து உயர் தொல் வேதம் அது என்றும் விரி ஒளி மணி முடி வேந்தர் – தேம்பா:23 108/2
மற்றை யாவையும் தாம் ஒழிந்த தொல் தேவர் மன சினத்து அயர்ந்தவை என்பேன் – தேம்பா:23 112/2
கொடும் தொல் புண்ணினை கொந்து அழல் ஆற்றியது அனைய – தேம்பா:27 22/1
தொல் வினை இனிய என்று துகளுற தோன்றும்-காலும் – தேம்பா:28 140/1
தொல் நெறி வாமன் நீக்கி சூசை ஆங்கு உணர்த்தும் ஓதி – தேம்பா:29 48/1
கோன் நலமும் குல நலமும் குலத்து உரிய தொல் சுருதி – தேம்பா:29 66/1
தொல் வினை என்னும் சூலால் தொடர் வினை தளிர்த்து விம்மும் – தேம்பா:29 120/1
தொல் உரு தகவனம் சுட அழன்றது-ஆல் – தேம்பா:30 60/2
தொல் அகத்து உறவினோர் தொடர்ந்து நாடினார் – தேம்பா:31 20/2
துயர் ஏன் அஞர் ஏன் உளம் ஆழ்ந்து உறு தொல் நய மா கடலின் – தேம்பா:31 34/1
தொல் பழி பிதா இதோ துடைக்குவேன் என்றான் – தேம்பா:35 19/4
வடு மர கனியால் மாக்கட்கு அமைந்த தொல் பழியை எந்தை – தேம்பா:35 24/3
கனம் பழுத்து இரிந்த உரும் என விண்ணின் கடிந்த பேய் கொண்ட தொல் பகையால் – தேம்பா:36 36/1

மேல்


தொல்லின் (1)

தொல்லின் தம் மனத்து ஆசு அற தோன்றிய – தேம்பா:18 48/1

மேல்


தொல்லை (4)

தொல்லை உள நம் வினை துடைத்து நமை வீட்டில் – தேம்பா:14 6/1
தொல்லை இ மருளின் ஊழ்த்த துகள் விட துணிதல் ஒன்றோ – தேம்பா:28 56/1
தொல்லை இல்லை என்று உள நாளும் தொடர் தீது ஒப்பு – தேம்பா:34 57/3
இன்பு உரிய தொல்லை இலை எல்லை இலை அன்றே – தேம்பா:35 38/4

மேல்


தொல்லையில் (3)

தொல்லையில் அளித்த தேவரை நீங்கி தொழுபவோ புது இறை என்பேன் – தேம்பா:23 106/1
தொல்லையில் பொறித்த எம் நூல் சொன்னவாறு இ நாள் ஆகி – தேம்பா:27 149/3
தொல்லையில் அறிந்து உளோய் துதைந்த எம் துயர் – தேம்பா:31 22/3

மேல்


தொல்லையின் (1)

வீங்கி ஆர் அழல் தொல்லையின் மேய்ந்ததே – தேம்பா:30 92/4

மேல்


தொலைக்கு (1)

எ வினை தொலைக்கு அடைதல் வேண்டும் இனி ஐயா – தேம்பா:14 9/4

மேல்


தொலைக்கும் (1)

நெறி இன்மை நெறி தொலைக்கும் உறுதி இன்மை நெறி தன்னில் – தேம்பா:13 7/2

மேல்


தொலைத்த (1)

சூர் முழுது அழுங்கு மற்ற தொலைத்த நாடு உய்ய எய்தி – தேம்பா:20 103/3

மேல்


தொலையா (1)

துனியே தளிர்ப்ப தலைவிதியும் தொலையா பிறப்பும் புக்கனவோ – தேம்பா:27 124/3

மேல்


தொலைவன (2)

துன்ன_அரு நயனொடு தொலைவன பொழுதே – தேம்பா:2 51/4
சூடுவர் நயனொடு தொலைவன பொழுதே – தேம்பா:2 52/4

மேல்


தொழ (22)

அடியில் ஆருயிர் அமைந்த நீர் தொழ
கடியில் ஆர் மரம் வளைதல் காணுமே – தேம்பா:1 18/3,4
துன்னி தாழ்ந்து தொழ உன் தீம் சுவை ஆர் குதலை சொல் கேட்ப – தேம்பா:5 22/3
விலை புறம் காண் மணி என தன் மனை மகன் ஆம் எந்தை தொழ விரும்பி வீழ்ந்தான் – தேம்பா:8 5/4
கதிர் செயும் உலகின் வேந்தர் கழல் தொழ உவகை பொங்கி – தேம்பா:9 122/1
கோள் மின்னும் முடி தாழ கொழுநனை தான் தொழ அவனும் – தேம்பா:10 15/2
மின்னல் நேரும் அன்னை ஈன்ற வேதநாதனை தொழ
உன் அலாத கோவர் இன்பம் உண்ண உற்று அழைத்தனர் – தேம்பா:11 1/3,4
அன்ன அரும் திரு சேய் தொழ அண்ணுவார் – தேம்பா:11 15/4
எல்லை தாராய் ஏந்திய எந்தை தொழ அம் பூ – தேம்பா:11 80/3
இ மலையின் தொழ தொழ வீழ்ந்து எழுந்து எழுந்து கோ வேந்தை இறைஞ்சிட்டாரே – தேம்பா:11 112/4
இ மலையின் தொழ தொழ வீழ்ந்து எழுந்து எழுந்து கோ வேந்தை இறைஞ்சிட்டாரே – தேம்பா:11 112/4
முற்று முதல் ஆய் உலகம் மூன்று தொழ வான் மேல் – தேம்பா:14 7/1
மின்னின் நீரவர் தொழ வீழ்ந்து சூசை உள் – தேம்பா:18 6/2
வான் வாழ் இறையோன் தனை மறுத்து வசை பல் தேவர் தொழ கண்டு – தேம்பா:19 27/2
சொன்ன அ சிறை நீத்து தொழ கலன் – தேம்பா:20 89/3
துன் மலர் கமல கையை தொழ குவித்து இறைஞ்சிட்டானே – தேம்பா:26 92/4
ஈறு_இல நன்மை நிறைவும் ஓர் குறை முற்று இன்மையும் தொழ தகும் தெய்வம் – தேம்பா:27 156/1
கான் உகும் பூம் கொடியோனும் அ தாள் மிசை கமழ் பூ ஏற்றி தொழ தானும் – தேம்பா:32 47/3
வனையா வழிபாடு வனைந்து தொழ
புனையா உயர் பாடு புனைந்தனன்-ஆல் – தேம்பா:36 55/3,4
புன்னாக வண்டு இசையால் புகழ்ந்து பாட தொழ பொருநர் – தேம்பா:36 100/2
கை முறை தொழ பறை கறங்க யாவரும் – தேம்பா:36 118/2
கால் மணி பட மிதித்து உயர் தம் கை தொழ
வால் மணி பூத்தது ஓர் மரகத கிரி – தேம்பா:36 120/2,3
கை மணி தொழ சிலர் சிலர் கலாநிதி – தேம்பா:36 121/3

மேல்


தொழா (2)

தோய்ந்தான் மலர் தாள் கதிர் கையால் தொழுதான் தொழா மற்றவர் கண்டு – தேம்பா:12 7/3
வாய்ந்தே மகிழ்ந்து தொழா நின்ற வளனை நோக்கி ஆசி நலம் – தேம்பா:36 27/3

மேல்


தொழில் (56)

அம் பொனால் இசைத்த மணி சுவர் ஏற்றி அரும் தொழில் தச்சரும் நாண – தேம்பா:2 41/2
தணை அற்று அகன்ற தயை கடவுள் தனி தான் செய்யும் தொழில் எனினும் – தேம்பா:5 25/3
கை படு தொழில் எலாம் கனிவொடு இயற்றினான் – தேம்பா:8 24/4
துன்று ஆய பணி தொழில் என் தொழிலே என்றாள் அவளும் – தேம்பா:9 16/1
தணிக்கும் பரிசால் தாய் தண் தொழில் செய்யாதால் தகவோ – தேம்பா:9 27/4
தோய்ந்து உலாம் அருளால் தொழில் செய்து உயிர் – தேம்பா:9 35/3
தொழுது உண்பார் எனில் தாம் தொழில் செய்த பின் – தேம்பா:9 36/2
அந்த நுண் தொழில் ஆம் என கொள்பவர் – தேம்பா:9 37/1
தன்னால் ஆம் ஓர் புன் தொழில் சார்பு என்றவர் வாழாது – தேம்பா:9 67/3
உரு வளர் பருதி தோற்றி உடை தொழில் எஞ்ச நாதன் – தேம்பா:9 79/3
அரு வினை தொழில் உழைத்து அருந்துதீர் என – தேம்பா:9 110/1
திரு வினை தன்மை ஆம் தொழில் செய்து ஆற்றலே – தேம்பா:9 110/4
சொல் தவிர்ந்த அருள் தொழில் கால் இது என்று – தேம்பா:11 29/1
பூரி மல்கிய தொழில் எலாம் பொருந்தி இ மூவர் – தேம்பா:12 55/3
வாணிகர் தொழில் ஆம் ஈங்கு மாறு உணரார் வழங்கும் ஒன்று ஆயிரம் ஆக – தேம்பா:12 69/2
அற்று உறும் அழும் தொழில் அலால் எதுவும் ஆற்றான் – தேம்பா:14 11/4
சுசி முகந்து சுடும் என சரங்கள் தம தொழில் மறந்தன-கொல் என ஒளி – தேம்பா:15 97/1
பெரு விலது செய் தொழில் கொல் உவமை இல நின் கடவுள் பெறு வலி இது என்று அலறி ஓவான் – தேம்பா:15 129/2
அரிய ஓர் தொழில் ஆண்டவன் ஏவிய காலை – தேம்பா:16 15/1
தன் தொழில் செய்து ஆயின பின் அன்னான் போக தாம மணி – தேம்பா:17 28/1
கல் தொழில் செய் வாய் கதவம் அடைத்தது என்ன கண்டு ஒன்னார் – தேம்பா:17 28/2
புன் தொழில் செய் வலி இதுவோ என்ன நக்கு பொன் கதவம் – தேம்பா:17 28/3
மல் தொழில் செய் புயத்து எடுத்து அம் மலை மேல் உய்த்தான் மயிர் திறத்தான் – தேம்பா:17 28/4
நின் ஒளி குன்றா நின் மறை குன்றா நினைத்த நின் அருள் தொழில் முடிப்பாய் – தேம்பா:18 42/3
வெல தொழில் எஞ்ச அஞ்சி விதவையின் இளைத்தேன் என்றான் – தேம்பா:23 55/1
குல தொழில் வஞ்சம் பொங்க கூவிடத்து அவன் நான் செய்த – தேம்பா:23 55/2
வல தொழில் இருவர் கூற வலியன் ஆர் என்பீர் என்ன – தேம்பா:23 55/3
சல தொழில் அரசன் மூரல் தந்து மீண்டு அவன் சொன்னானே – தேம்பா:23 55/4
என் வல தொழில் இது அய்ய இவனும் வந்து அமைத்த யாவும் – தேம்பா:23 65/1
தன் வல தொழில் என்று ஓத தாவு அரும் வலியோன் என்றும் – தேம்பா:23 65/2
ஈடு உடை தொழில் என்பாயோ என திரங்கரன் முன் பாய்ந்தான் – தேம்பா:23 66/4
முன் இயம்பிய முரண் தொழில் யாவையும் நோக்கில் – தேம்பா:23 86/2
பின் இயம்பிட பிழை செயும் தொழில் யாது உண்டோ – தேம்பா:23 86/4
ஓங்கு_அரும் தொழில் உதவி கொண்டு ஒளித்த வேல் எறிந்த – தேம்பா:23 89/2
மொய் முகத்து அரு முரண் தொழில் நெடிது காட்டினன்-ஆல் – தேம்பா:23 97/4
பின்று இன்று ஆம் தொழில் பேசு-மின் என்றனன் பெருமான் – தேம்பா:25 30/4
வையகத்து ஒருவனாய் வாய்ந்த மு தொழில்
செய் அகத்து இணை இலான் சிறந்த அன்பொடு – தேம்பா:25 43/1,2
வீரியர் தொழில் இதோ வெருவி புன்மை சேர் – தேம்பா:25 52/1
நாரியர் தொழில் இதோ நவை இலா மறை – தேம்பா:25 52/2
ஆரியர் தொழில் என அரசியல் பட – தேம்பா:25 52/3
பொன் தொழில் வனை மர பாவை பொற்பு என – தேம்பா:25 55/1
மல் தொழில் ஒளியொடு வஞ்சம் கோடிய – தேம்பா:25 55/2
புன் தொழில் அனைவரும் புகன்று கோல் வளை – தேம்பா:25 55/3
முன் தொழில் அத்தனம் முறிய சொல்லினார் – தேம்பா:25 55/4
நஞ்சினார் தொழில் கண்ட தாய் மறைவு என்று நாடினும் நாகு கொண்டு – தேம்பா:25 79/1
அஞ்சினார் தொழில் கண்டிலாமையில் அன்பினால் உயிர் பேணிய – தேம்பா:25 79/2
நெஞ்சினாள் தொழில் கண்டிலா மகன் நின்று நீடு அழவே பகை – தேம்பா:25 79/3
விஞ்சினார் தொழில் கொண்டு வாள் வழி வெம் புண் நீர் உக வீவன்-ஆல் – தேம்பா:25 79/4
விசை செய் வில் பகை வில் தொழில் காக்கினும் – தேம்பா:26 177/3
எஞ்சு வாணிகர் புன் தொழில் என்று அலால் – தேம்பா:27 32/2
தொகை பட பழகா தன்மை தொழில் எலாம் அரிய அன்றோ – தேம்பா:28 16/4
சில் தொழில் பல நாள் கற்றும் திருந்து இலாரேனும் இன்ன – தேம்பா:28 17/3
மல் தொழில் பயன்பட்டு ஓங்க மன துணிவு ஒன்றே சால்பு ஆம் – தேம்பா:28 17/4
தூய் வினை வயத்தோன் செய்த தொழில் கெட உணர்ந்த பாவம் – தேம்பா:28 73/2
குலம் புரி கொடிய பேய்கள் கொலை தொழில் கருவி சூழ்ந்து – தேம்பா:28 154/1
ஏர் பொருள் நாணம் நாடு இல் இருத்தல் பெண் தொழில் அது ஆகி – தேம்பா:30 76/2

மேல்


தொழிலனுக்கு (1)

எம் கை அம் தொழிலனுக்கு இயலும் பான்மையோ – தேம்பா:9 109/4

மேல்


தொழிலாய் (1)

போர் பொருள் பலவும் நாடி போதல் ஆண் தொழிலாய் போகில் – தேம்பா:30 76/1

மேல்


தொழிலால் (1)

பொய் முகம் புதைத்த வஞ்சனை தொழிலால் புரையுற உணர்ந்த வாய் யாவும் – தேம்பா:23 98/2

மேல்


தொழிலினால் (1)

சேயினை தொழிலினால் காய்த்த திண் கர – தேம்பா:9 102/2

மேல்


தொழிலினை (1)

பூரியர் தொழிலினை புகன்றுளாய் அரோ – தேம்பா:25 52/4

மேல்


தொழிலே (1)

துன்று ஆய பணி தொழில் என் தொழிலே என்றாள் அவளும் – தேம்பா:9 16/1

மேல்


தொழிலை (7)

கம் பொனால் வனைந்த தொழிலை இ உலகில் கை விடா காட்டினர் போன்றே – தேம்பா:2 41/4
சென்று ஆய பணி தொழிலை செய முன்னுவர் அ சான்றோர் – தேம்பா:9 16/4
இன்னாட்கு இறை ஆம் நினக்கோ என அ தொழிலை முயன்றாள் – தேம்பா:9 21/4
வில் ஆர் அறிவோய் விழையும் தொழிலை விடல் ஆகாதோ – தேம்பா:9 28/4
அன்பால் விழை தண் தொழிலை அன்னாள் அரிது ஆற்றிடலே – தேம்பா:9 29/2
மீட்பது ஓர் வினை விழைந்து உலகு அழிக்கும் பல் தொழிலை
கேட்பது ஓர் வினை கிடத்திட பயன் இலா ஆசை – தேம்பா:23 87/2,3
மல் செய்வார் தொழிலை கண்டார் மைந்தர் செய் தொழிலோ என்பார் – தேம்பா:28 10/4

மேல்


தொழிலோ (1)

மல் செய்வார் தொழிலை கண்டார் மைந்தர் செய் தொழிலோ என்பார் – தேம்பா:28 10/4

மேல்


தொழிலோன் (2)

புன் வல தொழிலோன் என்றும் பொருத்தலின் தோன்றும் தோன்றி – தேம்பா:23 65/3
மன் வல தொழிலோன் உன்னால் வரிசை பெற்று உய்வான் என்றான் – தேம்பா:23 65/4

மேல்


தொழிற்கு (3)

தன் குலத்து இழிவு இது என்று உளம் மருட்டும் சட தொழிற்கு அரிது உண்டோ என்றான் – தேம்பா:23 107/4
பல் தொழிற்கு எல்லாம் இஃதே பால் எனின் அறத்தின் தூய – தேம்பா:28 17/1
நல் தொழிற்கு இதுவும் அன்றி நசைக்கு இணை பயன் உண்டாம்-ஆல் – தேம்பா:28 17/2

மேல்


தொழு (4)

தீய் வினை செய் நாம் மகிழ உம்பர் தொழு செல்வா – தேம்பா:12 88/1
வஞ்சினர் ஒருங்கு தொழு மன் அரச மாயை – தேம்பா:23 47/1
அன்று எழு முடிக்கு இணை அணிந்து தொழு சூசை – தேம்பா:35 35/2
கூடார் தொழு கோ முரசின் குரலே – தேம்பா:36 64/2

மேல்


தொழுகின்றார் (2)

தோடு அவிழ்த்த விரை கமலம் மாலை மாற்றி சூடிய தாள் தொழுகின்றார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 52/4
சொல் திறம் அகன்ற நயம் உண்டு தொழுகின்றார் – தேம்பா:35 29/4

மேல்


தொழுகின்றாள் (1)

சூசை என்று அவனை ஏற்றி எந்தை தொழுகின்றாள் – தேம்பா:3 55/4

மேல்


தொழுகுவர் (2)

துளி கொள் முகில் என மண மலர் மது மழை சொரிய அடி இணை தொழுகுவர் சிலருமே – தேம்பா:8 68/4
சுனை வரும் மலர் அடி தொழுகுவர் அணைகுவர் சோபனம் ஆடிர் அனந்தம் முடியார் – தேம்பா:35 78/2

மேல்


தொழுத (6)

தொழுத ஆணரன் பின் இவை சொற்றினான் – தேம்பா:20 92/4
சேண் நெறி இறங்கி காத்த தேவராய் தொழுத பேய்கள் – தேம்பா:22 12/3
நாம் செய்த குறையோ பல் நாள் நாம் இவண் தொழுத தேவர் – தேம்பா:27 147/1
மின் ஆர் மணம் தேக்கி தொழுத தேவர் வெறுத்து அந்தோ – தேம்பா:29 20/2
நூல் நலமும் அவர் தொழுத நுனித்த ஒரு நாயகன்-தன் – தேம்பா:29 66/2
உடுத்து அன உடல் கொடு உலகு காத்து அருள் ஒளி கெழு நிலத்தினர் தொழுத பார்த்திப – தேம்பா:30 88/1

மேல்


தொழுதது (2)

வன்னி வீழ்ந்து எரி வஞ்ச பேய்கள் தம்மை வர கடவுள் என்று எண்ணி தொழுதது என்னோ – தேம்பா:11 48/4
எரி ஆர் சுடர் தொழுதது என பகைத்தார் மூதுனரே – தேம்பா:20 60/2

மேல்


தொழுதல் (3)

எண் முழுது இழந்த சீலத்து இறைவனை தொழுதல் தீதோ – தேம்பா:15 49/2
துணி முகத்து இவை ஓர்ந்து அன்னார் தொழுதல் விட்டு இருப்ப கண்டேன் – தேம்பா:23 16/4
துப்பு இலா தேவரை தொழுதல் அந்தகற்கு – தேம்பா:35 5/2

மேல்


தொழுதார் (3)

இருந்த வானவர் இடையிடை விருப்பு எழீஇ தொழுதார் – தேம்பா:11 93/4
விஞ்சா துதி மேல் நின்ற தயை விளைக்கும் இவன் தான் என தொழுதார் – தேம்பா:19 35/4
விண் வாய் மண பூம் புகை மொய்ப்ப விள்ளா இன்பத்து அடி தொழுதார் – தேம்பா:36 129/4

மேல்


தொழுதால் (2)

தொழுதேல் தொழுதேல் இறைவன் தொழுதால் நன்று என்றாலும் – தேம்பா:9 14/1
பொழுதே தொழுதால் எனக்கே புரி ஓர் பணிவு ஆம் என்னா – தேம்பா:9 14/3

மேல்


தொழுதாள் (5)

தப்பு அடையா முறை அருள்தி தற்பரனே என தொழுதாள் – தேம்பா:6 5/4
அழுதே அழுதே தொழுதாள் அமரர்க்கு அரசாள் என்பாள் – தேம்பா:9 14/4
தொழுதாள் அழுதாள் பினை சொற்றுவள்-ஆல் – தேம்பா:11 58/4
மீன் நிலை முடி தாள் சேர்த்தி மெய்யனை தொழுதாள் தாயே – தேம்பா:12 19/4
கரிந்த கனவு இடையில் கண்டாள் கண்டு கை தொழுதாள் – தேம்பா:29 24/4

மேல்


தொழுதான் (11)

வாய்ந்தான் தொழுதான் மது வாகையினான் – தேம்பா:5 111/4
சென்று துணை அடி துன்றி வளன் அவை சென்னி மிசை தொழுதான் அரோ – தேம்பா:5 115/4
தருவாய் வந்து ஓய் இல அன்பின் தகவோய் திருவோய் என தொழுதான் – தேம்பா:10 148/4
தோய்ந்தான் மலர் தாள் கதிர் கையால் தொழுதான் தொழா மற்றவர் கண்டு – தேம்பா:12 7/3
ஆடினான் அழும் கண்ணீர் ஆட்டி தேம் பூ அடி தொழுதான்
சூடினான் சுவை விள்ளான் பினர் முந்நீர் மேல் துறும் வெள்ளம் – தேம்பா:14 91/2,3
சிரகம் கொள் தூய முகிலாக இன்று திரி நாதன் என்று தொழுதான் – தேம்பா:14 137/4
அனை அம் கதிர் மேனி அணிந்தாயோ என்று அடி தொழுதான் – தேம்பா:16 58/4
ஓதல் மிகவே நூல் துறை நீத்த உணர்வோய் என தொழுதான் – தேம்பா:28 33/4
பின்னை பற்றி நீ தருக என பெரும் தவன் தொழுதான் – தேம்பா:32 106/4
மிக்க சுடர் சூழ் ஆசனத்தில் வீழ்ந்தான் தொழுதான் உளம் தூண்டி – தேம்பா:36 19/3
அமர் என்று அவர் வென்று ஈங்கு எம்மோடு ஆள அருள் செய்க என தொழுதான் – தேம்பா:36 21/4

மேல்


தொழுதி (1)

உள் புலன் தெளிந்து அன்னானை ஒருங்கு நீ தொழுதி பின்னர் – தேம்பா:25 68/3

மேல்


தொழுது (51)

தொழுது இனிது அற நெறி துறுவன நயனால் – தேம்பா:2 56/3
பூரணமாய் தொழுது உவப்ப பூவனத்தில் பொருவு இன்றி போர்த்த வெய்யோன் – தேம்பா:5 28/3
மின் தன் தாள் தொழுது இன்னும் விரி வேதத்து உறுதி உரை விளம்புகின்றான் – தேம்பா:5 36/4
தொய்யல் உற்று இறைவன் தாளை தொழுது வாழ் திரு வல்லோனே – தேம்பா:7 12/1
பொம் பரிவும் பொங்கி எழ தொழுது தொழுது ஆயிரம் நா புகல் கொண்டேனும் – தேம்பா:8 12/2
பொம் பரிவும் பொங்கி எழ தொழுது தொழுது ஆயிரம் நா புகல் கொண்டேனும் – தேம்பா:8 12/2
காசு என்று தேன் துளிக்கும் குமுத மாலை கால் அணியாய் தொழுது இடுவார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 54/4
பஞ்சம் சேர் உவப்பினொடு பைம்பொன் சேர்ந்த பதத்து அணியாய் தொழுது அணிந்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 58/4
தோயும் நீ எனையும் நீ ஆள் எனா தொழுது உளான் – தேம்பா:9 12/4
தொழுது உண்பார் எனில் தாம் தொழில் செய்த பின் – தேம்பா:9 36/2
சொல்லும் செல்லா உள்நயம் உண்டே தொழுது உண்டார் – தேம்பா:9 58/4
சூழ்வரே பரமன் நல் தாள் தொழுது அருகு உவப்பின் சேர்ந்தார் – தேம்பா:9 78/4
துன் இன்பு உள் எழ தொழுது போற்றலின் – தேம்பா:10 106/3
பின்பு அருந்தி கேட்டு எவரும் வணங்கி நிற்ப பேர் அறிவு ஓங்கிய சாந்தி தொழுது சொல்வாள் – தேம்பா:11 57/4
மனத்து இனத்து தொழுது அடியை வணங்குவல் என்று அவனவனும் மனத்தில் தேறி – தேம்பா:11 106/2
தணிப்பு அரிய இ மூவர் தாள் தொழுது அ மூ அரசர் தணந்து நீங்கி – தேம்பா:11 120/3
நெடிது ஒருங்கு செந்நெல் வளர்ந்து இவர் தொழுது ஒரு-பால் – தேம்பா:12 52/2
தொழுது தன் உளத்து இன்பு ஆற்றா துணை அடி மலரை ஏற்றி – தேம்பா:12 78/1
சுழல் குளித்த மனம் சோர்ந்து வளன் அ பணியை தொழுது உளைந்தான் – தேம்பா:13 5/4
அடைவு_அரும் தயை அணிந்த தாள் தொழுது
உடைவு_அரும் கருத்து உணர்ந்த ஆண்மையை – தேம்பா:14 18/2,3
வல்லது இலதே என்பார் வரையா தொழுது மகிழ்வார் – தேம்பா:14 72/4
துவ்வு உலகு இறைஞ்சு அடி தொழுது பாடினான் – தேம்பா:14 87/4
எஞ்சி தொழுது இற்றை இயம்பினர்-ஆல் – தேம்பா:15 25/4
நெருப்பு அட வெய்ய ஆபன் நிருபனை தொழுது போனான் – தேம்பா:15 47/4
கை திறத்தின் தாள் தொழுது நிற்ப அன்னார் கனிந்து எழுந்து – தேம்பா:17 39/3
துன்னி நீர் சட்சதன் தொழுது சொற்றினான் – தேம்பா:18 6/4
ஊன் பயில் உரு நாதன் ஒளி அடி தொழுது ஏந்தி – தேம்பா:19 2/3
சூழ் இசைத்து இடை உலாம் தொகை இழந்து அமரரே தொழுது போனார் – தேம்பா:19 21/4
கரை வளர் புனலை காட்டி கபிரியேல் தொழுது கூற – தேம்பா:21 3/2
துன் எதிர் துணைவியும் தொழுது எதிர்ந்தனர் – தேம்பா:26 24/4
தொகையின் அங்கு அவன் தாள் தொழுது ஏத்தினான் – தேம்பா:26 31/4
மண்-பால் தன்னை தொழுது இறைஞ்சும் மக்கட்கே தான் தயை செய்வான் – தேம்பா:26 41/4
பின்ன மு முறை தொழுது இட்டு பேர் அருள் – தேம்பா:27 4/3
நீடிய நசை கொடு நிமலனை தொழுது
ஆடிய சிந்தையின் அரற்றி விம்முவார் – தேம்பா:27 52/3,4
பட கை தொழுது இனி செய் பணியே பணிப்ப என நின்றான் – தேம்பா:29 52/4
துனி கதிர் ஒழிய வீழ்ந்து துணை அடி தொழுது சொன்னான் – தேம்பா:29 111/4
இரைத்தன கடல் கலி மெலிய ஆர்த்து உடல் எடுத்து உலகு அளித்தவன் தொழுது சாற்றினார் – தேம்பா:30 85/4
விதுப்பட உருப்படும் அமரர் பா தொடை விளைத்து இவை இசைத்து அடி தொழுது வாழ்த்துளி – தேம்பா:30 89/1
மதுப்பட இசைப்படும் இனிய பா புகழ் வகுத்தனர் துதித்தனர் தொழுது வாழ்த்தினார் – தேம்பா:30 89/4
தொழுது அன்னார் தடம் கொண்டு துதி பாடி நெடும் வழி போய் – தேம்பா:30 122/3
அனையவும் மலர்ந்த நெஞ்சு அறம் வெஃகி அடி தொழுது அனைவரும் அழ போய் – தேம்பா:30 145/3
ஈறு பட்டு அனைத்தும் கற்றவர் சொன்னது இயம்புதும் என தொழுது உரைப்பான் – தேம்பா:31 89/2
உன்னலால் ஆசி செய்க என்று உயர் தவன் தொழுது நின்றான் – தேம்பா:34 18/4
தந்தை ஆம் இறை தாழ்வு இலா தாள் தொழுது
எந்தையால் கதி எய்துப நம்பிய – தேம்பா:34 24/2,3
நிலை புறம்கொளீஇ நிமலனை தொழுது முன் நின்றான் – தேம்பா:35 71/4
தன் தாள் இகலோர் தொழுது ஆம் தகை மேல் – தேம்பா:36 54/1
முன் தான் தொழுது ஏவல் முடித்தலின் ஆம் – தேம்பா:36 54/3
வே முரசு அறைவி என்றான் விரைந்து அவன் தொழுது போனான் – தேம்பா:36 82/4
விலை வரம்பு அற்று அமைத்த முடி வேந்தர் வேந்தன் தொழுது அணிந்தான் – தேம்பா:36 101/4
தேம்பாய் மணி தேன் மலர் சேர்த்த தேம்பாவணியை தொழுது ஏந்தி – தேம்பா:36 133/1
வெருவு ஆய் புன் சொல் அஞ்சிய பின் விருப்பம் தூண்ட தொழுது அணிந்தேன் – தேம்பா:36 133/4

மேல்


தொழுதும் (3)

சுருள் தரு மது மலர் இணை அடி தொழுதும் – தேம்பா:14 123/4
தன வழி ஒளிர் அருள் தரும் அடி தொழுதும் – தேம்பா:14 124/4
வலி உலகு உணர்வுற மலர் அடி தொழுதும் – தேம்பா:14 125/4

மேல்


தொழுதே (5)

நீ ஏவியதே நான் மேவிய நீதி என தொழுதே
போய் ஏவியதை புகழ் மேல் நின்றாட்கு உரைசெய்தனன்-ஆல் – தேம்பா:9 30/2,3
நனை ஈன்ற நறும் கொடியோன் நளினம் அடும் தாள் தொழுதே நவின்றான் மாதோ – தேம்பா:32 30/4
ஓலை கதை கேட்டு உணர தொழுதே
வேலை படை வேந்தர் எலாரும் எழீஇ – தேம்பா:36 62/2,3
அலை நேர் அபயர் அடி நேர் தொழுதே
நிலை நேர் வலி நேர் அரசு அண்டினர்-ஆல் – தேம்பா:36 68/3,4
மற்றை யாவரும் சூழ் மன்னனோடு இறைஞ்ச மறையவர் ஏற்றினர் தொழுதே – தேம்பா:36 110/4

மேல்


தொழுதேல் (2)

தொழுதேல் தொழுதேல் இறைவன் தொழுதால் நன்று என்றாலும் – தேம்பா:9 14/1
தொழுதேல் தொழுதேல் இறைவன் தொழுதால் நன்று என்றாலும் – தேம்பா:9 14/1

மேல்


தொழுதேன் (3)

பொருள் தரு மணி உருவே பொழி மண அடி தொழுதேன் – தேம்பா:15 183/4
புரை இல மனு_மகனே பொதி மலர் அடி தொழுதேன் – தேம்பா:15 184/4
குரு மலி அற நெறியே கொழு மலர் அடி தொழுதேன் – தேம்பா:15 185/4

மேல்


தொழுபவோ (1)

தொல்லையில் அளித்த தேவரை நீங்கி தொழுபவோ புது இறை என்பேன் – தேம்பா:23 106/1

மேல்


தொழும் (33)

தான் மலி உவப்பின் சாற்றுவான் உயர் வான் தளம் தொழும் தவத்து இறை என்பான் – தேம்பா:6 43/4
கால் தொழும் கடை காரணம் காண்டு இலன் – தேம்பா:7 52/2
சொல்லோடும் உணர்வு இன்றி சூழ்ந்த எலா கலை வல்லோய் தொழும் தொழும்பன் – தேம்பா:8 7/2
அலகு இல்லாள் பொருவு இல்லாள் அமரர் தொழும் அடி நல்லாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 17/4
தொழும் திரு அடி மிசை மழை கண் தூவியே – தேம்பா:8 26/4
மாண் மின்னும் மனம் வெருவி வணங்க பின்பு இருவர் தொழும்
தாள் மின்னும் மகன் தந்த ஆசியோடு தடம் கொண்டார் – தேம்பா:10 15/3,4
சூர் பாய் துகள் அற்று உய்வதற்கு உன் துணை தாள் தொழும் பண்பு உரையாயோ – தேம்பா:10 142/4
ஒண் தலங்கள் அண்ட உம்பரும் தொழும் பராபரா – தேம்பா:11 6/1
விண்ணோர் தொழும் ஓர் தனி வேந்து என நீ – தேம்பா:11 62/2
அரங்கு படர் வான் தொழும் அருள் குழவி ஏந்தி – தேம்பா:14 1/3
வான் முதலவன் தொழும் வளர் சகோபு அவன் – தேம்பா:14 80/3
ஓடினால் என தொழும் காபிரியல் இன்புற்று உரை உற்றான் – தேம்பா:14 91/4
ஒவ்வா மறையை தொழும் தன்மைத்து உவந்து ஒல்லென வீழ்ந்து உலகு அறிய – தேம்பா:15 12/3
இரு மலி உலகு உளரே இணரொடு தொழும் அடியே – தேம்பா:15 185/3
பார் முகம் தொழும் பிரான் பார்த்து நும் பகை – தேம்பா:16 28/2
திறை சுமந்து அடி தொழும் தெவ்வர் போல் மது – தேம்பா:17 3/1
வரை நிரை வளர் நலம் காக்க வான் தொழும்
விரை நிரை மலர் உரு வேய்ந்த இ பிரான் – தேம்பா:18 7/2,3
மேவி வான் தொழும் தன் தவ வில்லினால் – தேம்பா:24 59/1
தொழும் தனது இரு கரம் குவித்து தோன்றினான் – தேம்பா:26 136/4
ஊன் தோய்ந்த துயர் கொண்ட உம்பர் தொழும் கோமானே – தேம்பா:26 140/2
உம்பர் தொழும் கோமானை உள்ளி நெறியுள் பிறழாது – தேம்பா:26 140/3
இம்பர் தொழும் சிந்தையவா ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 140/4
விண் தொழும் விதி என வளன் விளம்பிய – தேம்பா:29 31/1
பண் தொழும் உரைக்கு உரை மறுக்கும் பாலதோ – தேம்பா:29 31/2
புண் தொழும் அயில் கொடு பொருத தன்மையால் – தேம்பா:29 31/3
மண் தொழும் அரசு செய் வலம் இஃது ஆம் அரோ – தேம்பா:29 31/4
துஞ்சினரோ மற்று எவரும் தொழும் தேவர் நும் படை முன் – தேம்பா:29 70/1
நாவு இழுத்து இறந்து எரி நரகில் தான் தொழும்
ஆவி இழுக்கு இடும் குணுங்கு உவப்ப மூழ்கினாள் – தேம்பா:29 129/3,4
நாமம் சால் வெற்றி தர நண்ணர் தொழும் புலோனிய நல் நாடர் ஈட்டம் – தேம்பா:32 74/4
வண் துளாய் கரத்து ஏந்தி வான் தொழும் அரசு இடும் உணவு – தேம்பா:33 27/3
உன்-பால் இருந்து தொழும் வளன் தான் உலகில் நிகரா உள தூயோன் – தேம்பா:36 23/4
வாயொடு மலர்ந்த கடை மணி வரமே வகுத்தது ஆம் வான் தொழும் மரபோய் – தேம்பா:36 39/4
ஒன்னார் தொழும் ஓங்கு அயில் ஓங்கு அவை சூழ் – தேம்பா:36 72/3

மேல்


தொழும்-தொறும் (2)

தொழும்-தொறும் தொழும்-தொறும் துளங்குகின்ற தோற்றமே – தேம்பா:11 2/4
தொழும்-தொறும் தொழும்-தொறும் துளங்குகின்ற தோற்றமே – தேம்பா:11 2/4

மேல்


தொழும்பர் (1)

தோர்த்த பாங்கினர் தொழும்பர் என்று ஆகுவர் என்னா – தேம்பா:3 14/3

மேல்


தொழும்பராய் (1)

துன்பு அது நீங்க அரசு உளத்து இகன்று தொழும்பராய் நில்-மின் என்றமையால் – தேம்பா:14 40/2

மேல்


தொழும்பன் (3)

சொல்லோடும் உணர்வு இன்றி சூழ்ந்த எலா கலை வல்லோய் தொழும் தொழும்பன்
புல்லோடும் புன்மை அறியாது என்னோ இ திறத்தில் பொலிய செய்தாய் – தேம்பா:8 7/2,3
பேர் ஆழி கடக்கவும் நீ தொழும்பன் எனை துணை கொண்டாய் பெயரா செல்வோய் – தேம்பா:8 8/4
வண்ணத்து அரும் தன் தயை உள்ளி வழுவா அன்பின் பணி தொழும்பன்
எண்ணத்து ஒழுகும் இசறயலை இரங்கி கைக்கொண்டான் என்றாள் – தேம்பா:26 43/2,3

மேல்


தொழும்பனே (1)

பீள் கையும் இரு கண் புதைத்து அழுது இந்தோ பிரிய நின் தொழும்பனே எம்-தம் – தேம்பா:20 77/3

மேல்


தொழும்பனை (1)

பில்கிய நயனில் உம் வயம் காட்ட பிழைத்த இ தொழும்பனை நோக்கி – தேம்பா:36 43/3

மேல்


தொழுவார் (5)

மால் நகத்தே பெற்றோரே வம்-மின் என்னா வர கடலில் மூழ்கு உவப்பின் தொழுவார் நல்லோர் – தேம்பா:11 53/4
தொழுவார் புகழ்வார் துணர் மெல் அடி மேல் – தேம்பா:11 71/2
என்றே தொழுவார் இளையோர் சிலரே – தேம்பா:11 72/4
ஒருவரும் இரவியின் ஒளி மிக இவன் எழும் ஓரையின் ஓகை நவின்று தொழுவார் – தேம்பா:35 77/4
உள்ளுற தொழுவார் நசை அளவொடு மெல் உருண்டு கண் கூசுவ பேணி – தேம்பா:36 111/3

மேல்


தொழுவாள் (1)

வன் தாள் தொழுவாள் தகை வானவரும் – தேம்பா:5 75/2

மேல்


தொழுவான் (2)

ஐ அற்று ஓர் அறிவு உடை மூ அரசரை தன் தாள் தொழுவான் அழைத்தல் சொல்வாம் – தேம்பா:11 103/4
தொழுவான் நனி துதிப்பான் சுழன்று ஏங்கி விம்முவன் ஆம் – தேம்பா:20 62/2

மேல்


தொறும்தொறும் (3)

துடைக்கல் அற்று எவரும் எஞ்சி தொறும்தொறும் அழுத கண்ணீர் – தேம்பா:14 23/3
துயில் சிறிது இலாமையானும் தொறும்தொறும் துஞ்சிற்று அன்றே – தேம்பா:14 116/4
சூட்சியை அடைந்து அடி தொறும்தொறும் இறைஞ்ச – தேம்பா:35 30/3

மேல்


தொன் (2)

சொல்ல கேட்டனள் தொன் மொழி தன்மையும் – தேம்பா:11 33/1
தாங்கு தொன் மரத்து அடி மணல் திண்ணையில் தங்கி – தேம்பா:12 44/3

மேல்


தொனி (13)

தொனி பழித்த சொல் சொல்லிய வாய்மையான் – தேம்பா:4 62/4
சொரிய மாரி துறும் தொனி வெள்ளம் ஆய் – தேம்பா:8 92/1
கூறும் கலை அற்று உணர்வோய் நீ கூறும் தொனி அற்று உரைப்போய் நீ – தேம்பா:10 143/2
முழவு எழும் தொனி ஒப்ப முந்நீர் ஒலி – தேம்பா:13 38/1
தொனி வெகுண்ட நதி என எழுந்த கறை துணை எழுந்த கரையொடும் எழ – தேம்பா:15 92/3
துடி முழங்கின தொனி எழுந்து இவர் துறுவி வெம் சமர் பொருத கால் – தேம்பா:15 151/2
தொனி பட்டு ஆர்த்து அரிய போரை தொடங்கினார் வயிர தோளார் – தேம்பா:17 20/4
தொனி வளர் யாழ் என பாட தும்பிகள் – தேம்பா:20 10/2
பிரியும் பல குமுறும் பல தொனி உம்பரம் பெறவே – தேம்பா:21 28/4
சொரிவர் உளைகுவர் சுழலும் கதையொடு சுசியின் வெருளுவர் தொனி எழ – தேம்பா:24 39/3
துளை கொள் குழலொடு தொனி யாழ் ஒலி எழ – தேம்பா:30 155/2
தேன் நிகர் தொனி குழல் திளைத்த ஓதை செய் – தேம்பா:32 59/3
தொனி வரும் முழக்கத்து இ பார் துணுக்கென பிளந்த வாயால் – தேம்பா:32 91/2

மேல்


தொனிகள் (1)

வலித்தன கல குரல் தொனிகள் மாற்றிட மலர் துறை அடுத்து அளி இனிதில் ஆர்த்தலும் – தேம்பா:30 90/1

மேல்


தொனியில் (1)

தூங்கா ஒலி முரசு ஒத்து எழு தொனியில் தம்முள் தொடர் போர் – தேம்பா:21 27/3

மேல்


தொனியினோடு (1)

ஏழ் இசை குழலினோடு இனிய பண் தொனியினோடு இசை விடாத – தேம்பா:19 21/1

மேல்


தொனியே (1)

துன்னும் திரை அலை தொனியே ஒழி தர – தேம்பா:30 156/1

மேல்


தொனியோ (1)

சால் ஓர் பொருளால் நிறை பொன் கலமே தரும் ஓர் தொனியோ
நூலோர் இயக்கம் பேசார் நுண் மாண் நுழைகின்ற அறம் கொள் – தேம்பா:9 19/1,2

மேல்