வை – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


வைகினும் (1)

மன்னரை சேர்ந்து ஒழுகல் கற்புடைய மனைவியொடு வைகினும் தாமரை இலை – குமரேச:101/5
மேல்

வைத்த (7)

மங்காத செந்தமிழ் குறுமுனிக்கு உபதேசம் வைத்த மெய்ஞ்ஞான குருவே – குமரேச:17/7
மன் ஒருவர் வைத்த பொருள் அபகரித்தோர் இவர்கள் மா நரகில் வீழ்வர் அன்றோ – குமரேச:20/7
கருணையொடு மிக்க நாணயமுளோர் கையினில் கடனிட்டு வைத்த முதலும் – குமரேச:51/3
மாற்றி சுரத்தினை விபூதியால் உடல் குளிர வைத்த மெய்ஞ்ஞான முதலே – குமரேச:61/7
தம் தாரம் அன்றியே பரதாரம் மேல் நினைவு-தனை வைத்த காமுகர்க்கு – குமரேச:67/1
மழு தினம் செங்கை-தனில் வைத்த கங்காளன் அருள் மைந்தன் என வந்த முருகா – குமரேச:88/7
மன் அயிலும் இனிய செம் சேவலும் செங்கை மலர் வைத்த சரவண பூபனே – குமரேச:96/7
மேல்

வைத்தவரும் (1)

மடியாது இருந்த பேர் இல்லை அவர் தேடியதை வாரி வைத்தவரும் இல்லை – குமரேச:73/2
மேல்

வைத்திடில் (1)

பவளத்தினிடை முத்தை வைத்திடில் சோபிதம் படிக மணி கோக்கின் என்னாம் – குமரேச:100/2
மேல்

வைத்திடும் (1)

கருணையுடனே வைத்திடும் தணீர்ப்பந்தலும் காவேரி போல் ஊற்றமும் – குமரேச:18/4
மேல்

வைத்திடுவர் (1)

தொகைபண்ணி வைத்திடுவர் கைக்கொண்டுபோக வரு சொந்தமானவர் வேறு காண் – குமரேச:94/6
மேல்

வைத்தியன் (1)

ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும் அறியும் மதியோன் வைத்தியன்
அகம் இன்றி மெய் உணர்ந்து ஐம்புலன் ஒழித்துவிட்டவனே மெய்ஞ்ஞானி எனலாம் – குமரேச:13/5,6
மேல்

வைத்து (3)

வைத்து இசை மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன்னுயிர் சிறக்கும் அன்றோ – குமரேச:9/7
வாரமுடன் அருணகிரிநாதருக்கு அனுபூதி வைத்து எழுதி அருள் குருபரா – குமரேச:64/7
மத்து இனிய மேரு என வைத்து அமுதினை கடையும் மால் மருகன் ஆன முருகா – குமரேச:90/7
மேல்

வைத்தும் (1)

புனிதற்கு மந்த்ர உபதேசமொழி சொல்லியும் பாதனை சிறையில் வைத்தும்
தேம் மிக்க அரி அர பிரமாதிகட்கும் செகுக்க முடியா அசுரனை – குமரேச:3/2,3
மேல்

வைப்பார் (1)

மோதியே வாத பிடிப்பு வந்தது போல முன் காலை அகல வைப்பார்
விற்பனம் மிகுந்த பெரியோர் செய்தி சொன்னாலும் வெடுவெடுத்து ஏசி நிற்பார் – குமரேச:43/4,5
மேல்

வையத்து (1)

மரு இலா வண்ண மலர் பெரியோர் இலாத சபை வையத்து இருந்து என் பயன் – குமரேச:23/7
மேல்

வையினும் (1)

பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம் நல் பெரியர் சொல் கேளாத காலம் – குமரேச:59/4
மேல்