சொ – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


சொந்தமானவர் (1)

தொகைபண்ணி வைத்திடுவர் கைக்கொண்டுபோக வரு சொந்தமானவர் வேறு காண் – குமரேச:94/6
மேல்

சொரி (1)

சுழல் பெரும் காற்றினில் வெடித்த பஞ்சும் மணல் சொரி நறும் பனி நீரும் நீள் – குமரேச:95/3
மேல்

சொரிதல் (1)

மாரிக்கு நிகர் என்று பனி சொரிதல் போலவும் மனைக்கு நிகர் என்று சிறுபெண் – குமரேச:2/1
மேல்

சொரூப (1)

வாமன சொரூப மத யானை_முகனுக்கு இளைய வால குருபர வேலவா – குமரேச:50/7
மேல்

சொல் (8)

சொல் அரிய யாகாதி கருமங்கள் செய்வதும் தொல் புவி செழிக்கும் நலமும் – குமரேச:7/3
இடம் விளக்குவது குடி உடல் விளக்குவது உண்டி இனிய சொல் விளக்குவது அருள் – குமரேச:16/4
மகம் விளக்குவது மறை சொல் விளக்குவது நிசம் வாவியை விளக்குவது நீர் – குமரேச:16/7
சிங்கார வனமதில் உதிப்பினும் காகமது தீம் சொல் புகல் குயில் ஆகுமோ – குமரேச:17/1
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம் நல் பெரியர் சொல் கேளாத காலம் – குமரேச:59/4
வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும் – குமரேச:79/2
பாங்காக இன்னவை பொருந்திட சொல் கவிதை பாடில் சிறப்பு என்பர் காண் – குமரேச:88/6
அன்னதானம் செய்தல் பெரியோர் சொல் வழி நிற்றல் ஆபத்தில் வந்த பேர்க்கு – குமரேச:101/1
மேல்

சொல்லரிய (1)

சொல்லரிய காட்டுக்கு எரித்த நிலவும் கடல் சுழிக்குளே விடு கப்பலும் – குமரேச:95/4
மேல்

சொல்லலாலும் (1)

நாடியே தாழ்வாய் வணங்கிடுதலாலும் மிக நல் வார்த்தை சொல்லலாலும்
நன்மையே தரும் அலால் தாழ்ச்சிகள் வரா இவை நல்லோர்கள் செயும் முறைமை காண் – குமரேச:98/5,6
மேல்

சொல்லாத (1)

நடமாடு பரியிலும் பொய் வார்த்தை சொல்லாத நல்லோரிடம்-தன்னிலும் – குமரேச:37/3
மேல்

சொல்லால் (1)

தனது அகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம் சாதி சொல்லால் அறியலாம் – குமரேச:40/5
மேல்

சொல்லானது (1)

சொல்லானது ஒன்றும் அவர் மனமானது ஒன்றுமா சொல்லும் வஞ்சகர் நேசமும் – குமரேச:52/5
மேல்

சொல்லியும் (1)

புனிதற்கு மந்த்ர உபதேசமொழி சொல்லியும் பாதனை சிறையில் வைத்தும் – குமரேச:3/2
மேல்

சொல்லியே (1)

தன் பெருமை சொல்லியே தன்னை புகழ்ந்த பதர் சமர் கண்டு ஒளிக்கும் பதர் – குமரேச:30/1
மேல்

சொல்லும் (4)

பொன் பணம் இருக்கவே போய் இரக்கின்ற பதர் பொய்ச்சாட்சி சொல்லும் பதர் – குமரேச:30/5
சொல்லானது ஒன்றும் அவர் மனமானது ஒன்றுமா சொல்லும் வஞ்சகர் நேசமும் – குமரேச:52/5
சடுதியில் பக்குவம் சொல்லும் கொடைக்கு இங்கு சற்றும் இலை என்னல் நன்று – குமரேச:54/5
தொல் வளம் மிகுந்த நூல் கரை தெரிந்து உறுதிமொழி சொல்லும் அவனே குரவன் ஆம் – குமரேச:60/5
மேல்

சொல்லுவாள் (1)

வறுமைதான் வந்திடின் தாய் பழுது சொல்லுவாள் மனையாட்டி சற்றும் எண்ணாள் – குமரேச:79/1
மேல்

சொல்லுவோர் (1)

முற்று சிவ பத்தரை நடுங்க சினந்தவர்கள் முழுதும் பொய் உரை சொல்லுவோர்
மன் ஒருவர் வைத்த பொருள் அபகரித்தோர் இவர்கள் மா நரகில் வீழ்வர் அன்றோ – குமரேச:20/6,7
மேல்

சொல்வாள் (1)

நகை செய்வர் மைத்துனர்கள் அலுவல் பார் போ என்று நாணாமல் மாமி சொல்வாள்
வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் அவன் மட்டியிலும் மட்டி அன்றோ – குமரேச:74/6,7
மேல்

சொலலாம் (1)

பிணியையும் அகற்றலாம் காலதூதுவரையும் பின்பு வருக என்று சொலலாம்
மணலையும் கயிறா திரிக்கலாம் கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ – குமரேச:41/6,7
மேல்

சொலா (1)

என்றும் ஒரு பொய் சொலா மன்னவன் விலைபோனது என்ன காண் வல்லமையினால் – குமரேச:46/5
மேல்

சொலாமை (1)

கன வேள்வி ஆயிரம் செய்வதில் பொய்யுரை கருத்தொடு சொலாமை நன்று – குமரேச:54/2
மேல்

சொலார் (1)

மறு வசனமும் சொலார் துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய் – குமரேச:79/7
மேல்

சொலும் (2)

நிலைபெறும் இலக்கணம் இலக்கியம் அறிந்து சொலும் நிபுண கவியே கவிஞனாம் – குமரேச:13/4
உளவன் இல்லாமல் ஊர் அழியாது என சொலும் உலகமொழி நிசம் அல்லவோ – குமரேச:93/6
மேல்

சொற்கு (2)

கன்னியர்-தமக்கு உறுதி கற்புடைமை சொற்கு உறுதி கண்டிடில் சத்ய வசனம் – குமரேச:78/2
ஈரைம் பொருத்தமொடு மதுரமாய் பளபளப்பு இனிய சொற்கு அமைய வேண்டும் – குமரேச:88/2
மேல்

சொன்ன (6)

விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என மிகு செட்டி சொன்ன கதை போல் – குமரேச:36/6
தன்னை மிஞ்சி சொன்ன வார்த்தை கேளா அடிமை சந்திராஷ்டகம் என்னலாம் – குமரேச:44/3
சொன்ன நெறி தவறாமல் வழிபாடுசெய்து வரு துய்யனே இனிய சீடன் – குமரேச:60/6
துணை கண்டு சேரிடம் அறிந்து சேர் என்று ஔவை சொன்ன கதை பொய் அல்லவே – குமரேச:72/6
வாடி மனம் நொந்து தமிழ் சொன்ன நக்கீரன் முன் வந்து உதவி செய்த முருகா – குமரேச:98/7
சொன்ன மொழி தவறாது செய்திடுதல் தாய் தந்தை துணை அடி அருச்சனைசெயல் – குமரேச:101/3
மேல்

சொன்னது (1)

முனை வீமன் உடல் பாதி மிருகம் தனக்கு என்று முன் தருமர் சொன்னது அலவோ – குமரேச:63/6
மேல்

சொன்னால் (2)

தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம் உயர் தந்தையை சீறு காலம் – குமரேச:59/1
உலகம் பழித்திடும் பெருமையோர் முன்பு சென்று ஒருவர் ஒரு செய்தி சொன்னால்
மறு வசனமும் சொலார் துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய் – குமரேச:79/6,7
மேல்

சொன்னாலும் (2)

மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ – குமரேச:39/7
விற்பனம் மிகுந்த பெரியோர் செய்தி சொன்னாலும் வெடுவெடுத்து ஏசி நிற்பார் – குமரேச:43/5
மேல்