மி – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 8
மிக்கான 4
மிக 4
மிகவும் 1
மிகவே 2
மிகு 21
மிகுத்த 1
மிகுந்த 6
மிகுந்து 2
மிகும் 3
மிசை 2
மிசையில் 1
மிஞ்சவிடல் 1
மிஞ்சி 1
மிஞ்சு 1
மிடித்திடுவர் 1
மிடியர்க்கு 1
மிடியாளருக்கு 1
மிடியான 1
மிடியோர் 1
மிடை 1
மிருகங்களையும் 1
மிருகம் 1
மிலேச்சற்கு 1
மின்மினி 1
மின்னல் 1
மினார்களுடன் 1

மிக்க (8)

தேம் மிக்க அரி அர பிரமாதிகட்கும் செகுக்க முடியா அசுரனை – குமரேச:3/3
மா மிக்க தேன் பருகு பூம் கடம்பு அணியும் மணி_மார்பனே வள்ளி_கணவா – குமரேச:3/7
மிக்க அதிகாரமும் தொழிலாளர் சீவனமும் வீர ரண சூர வலியும் – குமரேச:7/6
காதல் உறு கற்புடைய மங்கையர்-தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம் – குமரேச:10/3
வீம்புடன் செல்லாத விவகாரம் அது கொண்டு மிக்க சபை ஏறும் அசடர் – குமரேச:34/6
கருணையொடு மிக்க நாணயமுளோர் கையினில் கடனிட்டு வைத்த முதலும் – குமரேச:51/3
மிக்க மொழி நீர் மேல் எழுத்து அதிக மோகம் ஒரு மின்னல் இரு துடை சர்ப்பமாம் – குமரேச:58/4
வன் பகைஞர் என்றும் அயலோர் என்றும் மிக்க தனவான் என்றும் ஏழை என்றும் – குமரேச:63/2
மேல்

மிக்கான (4)

விண்டுவின் களை பூண்டிருக்கும் இடம்-தனில் மிக்கான தயை இருக்கும் – குமரேச:9/4
மிக்கான அறிவுளோர் வரு தருண காலத்தில் மிடியாளருக்கு உதவுவார் – குமரேச:71/4
மிக்கான சோலையில் குயில் சென்று மாங்கனி விருப்பமொடு தேடி நாடும் – குமரேச:85/1
மிக்கான தங்கத்தில் நவமணி உறின் பெருமை வெண்கல் அழுத்தின் என்னாம் – குமரேச:100/4
மேல்

மிக (4)

பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடம்-தனில் பகர் தருமம் மிக இருக்கும் – குமரேச:9/5
மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மை இல்லாத கழுதை – குமரேச:42/4
வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும் மிக நாடி வருபவர்க்கு – குமரேச:81/5
நாடியே தாழ்வாய் வணங்கிடுதலாலும் மிக நல் வார்த்தை சொல்லலாலும் – குமரேச:98/5
மேல்

மிகவும் (1)

வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் – குமரேச:69/7
மேல்

மிகவே (2)

ஓடம் இடும் இடமது மணல் சுடும் சுடும் இடமும் ஓடம் மிகவே நடக்கும் – குமரேச:75/1
பரி-தனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர் பலகையில் இருந்தும் மிகவே
பாங்கான அம்பலம்-தனிலே இருந்தும் பருத்த திண்ணையில் இருந்தும் – குமரேச:89/1,2
மேல்

மிகு (21)

தானம் மிகு குடியாளருக்கு எலாம் வேளாண்மை-தனில் நினைவு கற்பவர்க்கு – குமரேச:11/5
பொங்கம் மிகு சங்கு செந்தழலில் வெந்தாலுமே பொலி வெண்மை குறைவுறாது – குமரேச:19/3
விரகு மிகும் ஊரிலுள்ளோருடன் பகையும் மிகு விகட ப்ரசங்கி பகையும் – குமரேச:24/3
மா தவர்க்கு தவசு பலம் மடவியர்க்கு நிறை மானம் மிகு கற்பே பலம் – குமரேச:27/4
மிகு சுமை எடுத்தலால் இளவெயில் காய்தலால் மெய் வாட வேலை செயலால் – குமரேச:32/6
கதம் மிகு கடா என்னில் உழுது புவி காக்கும் வன் கழுதையும் பொதி சுமக்கும் – குமரேச:35/3
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என மிகு செட்டி சொன்ன கதை போல் – குமரேச:36/6
பந்தம் மிகு பாலுடன் வளாவிய தணீர் எலாம் பால் போல் நிறம் கொடுக்கும் – குமரேச:45/3
அந்தம் மிகு மரகத கல்லை தரித்திடில் அடுத்ததும் பசுமை ஆகும் – குமரேச:45/5
பாரம் மிகு துரியோதனாதி நூற்றுவரது பராக்ரமும் மதுகைடவர் – குமரேச:49/3
கோரம் மிகு பன்றியின் குட்டி பல கூடின் ஒரு குஞ்சர கன்று ஆகுமோ – குமரேச:55/3
பாரம் மிகு மா மலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மக மேரு ஆமோ – குமரேச:55/5
தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம் மிகு சிறியவன் பெருகு காலம் – குமரேச:59/5
செல்வம் மிகு கணவனே தெய்வம் என்று அனுதினம் சிந்தைசெய்பவள் மனைவியாம் – குமரேச:60/3
நீதி மிகு நல்லோர்கள் எங்கு இருந்தாலும் அவர் நிறை பக்ஷம் மறவார்கள் காண் – குமரேச:70/6
விரை மலர் முடி பரமர் வேணி அரவினை வெல்ல மிகு கருடனால் ஆகுமோ – குமரேச:72/3
ஊட்டம் மிகு வர்க்க வகை செய்திடுவர் தைலம் இட்டு உறுதியாய் முழுகுவிப்பார் – குமரேச:74/3
இன்பம் மிகு பசுவிலே கன்று சென்று ஊட்டுதற்கு இனிய கோன் அது தடுக்கும் – குமரேச:80/4
அழுத்தம் மிகு குறளினுக்கு ஒப்பாகவே பொருள் அடக்கமும் இருக்க வேண்டும் – குமரேச:88/3
பாகம் மிகு செந்நெலொடு பதர்தான் பிறந்து என்ன பன்னும் ஒரு தாய் வயிற்றில் – குமரேச:92/5
கூறு சற்பாத்திரம் இருக்க மிகு தானமது குணம் இலார்க்கு ஈந்த பேரும் – குமரேச:97/4
மேல்

மிகுத்த (1)

தந்திரம் மிகுத்த கன சேவகர்-தமக்கு எலாம் சாமி காரியமே பலம் – குமரேச:27/5
மேல்

மிகுந்த (6)

வைத்து இசை மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன்னுயிர் சிறக்கும் அன்றோ – குமரேச:9/7
கற்பினில் மிகுந்த ஒரு பத்தினி மடந்தையை கடிமணம் செய்தோர்கள் இம் – குமரேச:33/6
நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும் – குமரேச:37/4
விற்பனம் மிகுந்த பெரியோர் செய்தி சொன்னாலும் வெடுவெடுத்து ஏசி நிற்பார் – குமரேச:43/5
நிந்தை தவிர் வாக்ய பரிபாலனம் செய்தவன் நீள் பலம் மிகுந்த அனுமான் – குமரேச:47/5
தொல் வளம் மிகுந்த நூல் கரை தெரிந்து உறுதிமொழி சொல்லும் அவனே குரவன் ஆம் – குமரேச:60/5
மேல்

மிகுந்து (2)

கடல் நீர் மிகுந்து என்ன ஒதிதான் பருத்து என்ன காட்டு இலவு மலரில் என்ன – குமரேச:29/1
மடம் மிகுந்து எவருக்கும் உபகாரம் இல்லாத வம்பர் வாழ்வுக்கு நிகராம் – குமரேச:29/7
மேல்

மிகும் (3)

விரகு மிகும் ஊரிலுள்ளோருடன் பகையும் மிகு விகட ப்ரசங்கி பகையும் – குமரேச:24/3
திடம் இனிய பூதம் வெகு பொன் காத்து இருந்து என்ன திறல் மிகும் கரடிமயிர்தான் – குமரேச:29/5
மதமது மிகும் பரம லோபரால் உபகாரம் மற்றொருவருக்கும் உண்டோ – குமரேச:35/7
மேல்

மிசை (2)

மாடம் மிசை அன்னக்கொடி திரள் கொள் சோணாடு வாழ வந்திடு முதல்வனே – குமரேச:53/7
தரையதனில் ஓடு தேர் நீள் கடலில் ஓடுமோ சலதி மிசை ஓடு கப்பல் – குமரேச:72/1
மேல்

மிசையில் (1)

வர நதியின் மதலை என இனிய சரவணம் மிசையில் வரு தருண சிறு குழவியே – குமரேச:24/7
மேல்

மிஞ்சவிடல் (1)

விடம் ஏறு கோரத்தை அன்று அடக்குவது அலால் மிஞ்சவிடல் ஆகாது காண் – குமரேச:14/6
மேல்

மிஞ்சி (1)

தன்னை மிஞ்சி சொன்ன வார்த்தை கேளா அடிமை சந்திராஷ்டகம் என்னலாம் – குமரேச:44/3
மேல்

மிஞ்சு (1)

வல் விரகம் மிஞ்சு சுரகுஞ்சரியுடன் குறவர் வஞ்சியை மணந்த கணவா – குமரேச:60/7
மேல்

மிடித்திடுவர் (1)

நிதியோர் மிடித்திடுவர் மிடியோர் செழித்திடுவர் நிசம் அல்ல வாழ்வு கண்டாய் – குமரேச:75/6
மேல்

மிடியர்க்கு (1)

மிடியர்க்கு விலைமாதர் மீது வங்கணம் இலை மிலேச்சற்கு நிறையது இல்லை – குமரேச:12/2
மேல்

மிடியாளருக்கு (1)

மிக்கான அறிவுளோர் வரு தருண காலத்தில் மிடியாளருக்கு உதவுவார் – குமரேச:71/4
மேல்

மிடியான (1)

வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும் மிக நாடி வருபவர்க்கு – குமரேச:81/5
மேல்

மிடியோர் (1)

நிதியோர் மிடித்திடுவர் மிடியோர் செழித்திடுவர் நிசம் அல்ல வாழ்வு கண்டாய் – குமரேச:75/6
மேல்

மிடை (1)

மிடை கரும் காகங்கள் எக்கனி இருந்தாலும் வேப்பங்கனிக்கு நாடும் – குமரேச:85/2
மேல்

மிருகங்களையும் (1)

குணம் இலா துட்ட மிருகங்களையும் நய குணம் கொண்டு உட்படுத்திவிடலாம் – குமரேச:41/1
மேல்

மிருகம் (1)

முனை வீமன் உடல் பாதி மிருகம் தனக்கு என்று முன் தருமர் சொன்னது அலவோ – குமரேச:63/6
மேல்

மிலேச்சற்கு (1)

மிடியர்க்கு விலைமாதர் மீது வங்கணம் இலை மிலேச்சற்கு நிறையது இல்லை – குமரேச:12/2
மேல்

மின்மினி (1)

மணல்வீடு கட்டுவது போலவும் சந்திரன் முன் மருவும் மின்மினி போலவும் – குமரேச:2/2
மேல்

மின்னல் (1)

மிக்க மொழி நீர் மேல் எழுத்து அதிக மோகம் ஒரு மின்னல் இரு துடை சர்ப்பமாம் – குமரேச:58/4
மேல்

மினார்களுடன் (1)

வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின் நலம் வளை கிழவர் சேரின் என்னாம் – குமரேச:100/5
மேல்