த – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 1
தக்கன் 1
தக்கோர் 1
தகிப்பார் 1
தகு 1
தகை 1
தங்கத்தில் 1
தங்கமக 1
தங்கமானது 1
தசரத 1
தஞ்சம் 2
தட 1
தடம் 1
தடிந்து 1
தடுக்கும் 1
தண் 1
தண்டம் 1
தண்டம்-தனக்கும் 1
தண்ணீர் 1
தண்ணீரில் 2
தண்ணீரினுடனே 1
தண்ணீரும் 1
தணீர் 1
தணீர்ப்பந்தலும் 1
ததீசி 1
தந்த 1
தந்திடின் 1
தந்திரம் 1
தந்து 2
தந்தை 3
தந்தையர் 2
தந்தையை 1
தப்பி 1
தபு 1
தபோதனர் 1
தபோதனர்கள் 1
தம் 3
தம்பட்ட 1
தம்பலத்தினோடும் 1
தம்பியோ 1
தமதிடை 1
தமிழ் 2
தமிழாசிரிய 1
தமிழில் 1
தமிழினில் 1
தமையன் 2
தயவுடையர் 1
தயிர் 2
தயிர்கள் 1
தயிரில் 1
தயை 4
தயையாக 2
தயையினால் 1
தர்மம் 1
தரணி-தனில் 1
தரள 1
தராதரம் 1
தராமல் 1
தரிக்கினும் 2
தரித்த 1
தரித்திடில் 1
தரிப்பவர்க்கு 1
தரு 5
தருண 3
தருணத்தில் 1
தருணம் 1
தரும் 5
தருமங்கள் 1
தருமத்திலே 1
தருமம் 2
தருமர் 1
தருமன் 1
தருமனுக்கு 1
தருமோ 1
தருவின் 1
தருவும் 1
தருவோர்கள் 1
தரை 1
தரையதனில் 1
தலத்தினில் 1
தலத்து 1
தலம் 1
தலைக்கு 1
தலையும் 1
தலைவனே 1
தலைவா 2
தவ 1
தவசு 1
தவம் 3
தவம்புரி 1
தவமது 1
தவமும் 1
தவர் 1
தவர்-தமை 1
தவர்க்கு 1
தவளை 1
தவளையும் 1
தவறாது 2
தவறாமல் 2
தவறி 1
தவறிடார்கள் 1
தவறு 1
தவிர் 1
தவிர்த்த 2
தவிர்த்தலாலும் 1
தவிர்த்தவன் 1
தவிர்த்தும் 1
தழலில் 1
தழுவு 1
தழுவும் 2
தழைக்கும் 1
தழைய 1
தள்ளி 1
தள்ளினும் 1
தளகர்த்தரை 1
தளம் 1
தளைகள் 1
தன் 14
தன்னை 3
தன்னோடே 1
தன 1
தனக்கு 4
தனது 6
தனம் 1
தனவான் 1
தனியே 1
தனிவழிக்கு 1
தனை 2

தக்க (1)

தக்க பெரியோர் புத்தி கேளாத பதர் தோழர்-தம்மொடு சலிக்கும் பதர் – குமரேச:30/2
மேல்

தக்கன் (1)

ஏர் அணவு கீசகன் கனதையும் திரிபுரர் எண்ணமும் தக்கன் எழிலும் – குமரேச:49/5
மேல்

தக்கோர் (1)

தக்கோர் பொருள் சுவை நயங்கள் எங்கே என்று தாம் பார்த்து உகந்து கொள்வார் – குமரேச:85/5
மேல்

தகிப்பார் (1)

முறையா நடத்தலால் சகல தீவினைகளையும் முளரி போலே தகிப்பார்
முதன்மை பெறு சிலை செம்பு பிருதுவிகளில் தெய்வ மூர்த்தம் உண்டாக்குவிப்பார் – குமரேச:4/3,4
மேல்

தகு (1)

கூடியே சோதரர்கள் வாழ்தலாலும் தகு குழந்தை பல பெறுதலாலும் – குமரேச:98/1
மேல்

தகை (1)

தகை பெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம் தலத்தினில் சிதம்பர தலம் – குமரேச:26/2
மேல்

தங்கத்தில் (1)

மிக்கான தங்கத்தில் நவமணி உறின் பெருமை வெண்கல் அழுத்தின் என்னாம் – குமரேச:100/4
மேல்

தங்கமக (1)

தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும் சாயல் பொன் மயமே தரும் – குமரேச:45/2
மேல்

தங்கமானது (1)

தங்கமானது தழலில் நின்று உருகி மறுகினும் தன் ஒளி மழுங்கிடாது – குமரேச:19/1
மேல்

தசரத (1)

தந்தை தாய் வாக்ய பரிபாலனம் செய்தவன் தசரத குமார ராமன் – குமரேச:47/1
மேல்

தஞ்சம் (2)

தஞ்சம் ஒரு முயலை அடு வென்றி-தனில் யானையொடு சமர்செய்து தோற்றல் நன்று – குமரேச:83/3
தஞ்சம் என வந்திடு புறாவுக்கு முன் சிபி சரீரம்-தனை கொடுத்தான் – குமரேச:99/3
மேல்

தட (1)

தட மலை சிறகு அரிந்தவனை முன் காக்க ததீசி முதுகென்பு அளித்தான் – குமரேச:99/4
மேல்

தடம் (1)

தடம் மேவு கடல் நீரிலே உப்பு விளையினும் சார சர்க்கரை ஆகுமோ – குமரேச:17/6
மேல்

தடிந்து (1)

மா தயையினால் சூர் தடிந்து அருள்புரிந்ததால் வானவர்க்கு தெய்வம் நீ – குமரேச:10/7
மேல்

தடுக்கும் (1)

இன்பம் மிகு பசுவிலே கன்று சென்று ஊட்டுதற்கு இனிய கோன் அது தடுக்கும்
சேனை மன்னவர் என்ன கருமம் நியமிக்கினும் சிறியோர்களால் குறைபடும் – குமரேச:80/4,5
மேல்

தண் (1)

மரு உலாவிய நீப மாலையும் தண் தரள மாலையும் புனை மார்பனே – குமரேச:51/7
மேல்

தண்டம் (1)

ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்குமிடம் அதிக படம் ஆம் மனது கல் – குமரேச:58/5
மேல்

தண்டம்-தனக்கும் (1)

புரவலர் செய் தண்டம்-தனக்கும் வலுவாக புகும் திருடருக்கும் ஈவார் – குமரேச:36/3
மேல்

தண்ணீர் (1)

ஆறு தண்ணீர் வற்றிவிட்டாலும் ஊற்று நீர் அமுத பானம் கொடுக்கும் – குமரேச:81/1
மேல்

தண்ணீரில் (2)

தரை மீதில் ஓடுமோ தண்ணீரில் உறு முதலை-தன் முன்னே கரி நிற்குமோ – குமரேச:72/2
ஆனை தண்ணீரில் நிழல் பார்த்திட தவளை சென்று அங்கே கலக்கி உலவும் – குமரேச:80/1
மேல்

தண்ணீரினுடனே (1)

கூட பிறந்து என்ன தண்ணீரினுடனே கொடும் பாசி உற்றும் என்ன – குமரேச:92/2
மேல்

தண்ணீரும் (1)

விழலுக்கு இறைத்திட்ட தண்ணீரும் முகம் மாய வேசைக்கு அளித்த பொருளும் – குமரேச:95/5
மேல்

தணீர் (1)

பந்தம் மிகு பாலுடன் வளாவிய தணீர் எலாம் பால் போல் நிறம் கொடுக்கும் – குமரேச:45/3
மேல்

தணீர்ப்பந்தலும் (1)

கருணையுடனே வைத்திடும் தணீர்ப்பந்தலும் காவேரி போல் ஊற்றமும் – குமரேச:18/4
மேல்

ததீசி (1)

தட மலை சிறகு அரிந்தவனை முன் காக்க ததீசி முதுகென்பு அளித்தான் – குமரேச:99/4
மேல்

தந்த (1)

மாரனை கண்ணால் எரித்து அருள் சிவன் தந்த வரபுத்ர வடிவேலவா – குமரேச:49/7
மேல்

தந்திடின் (1)

அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும் அவர்க்கு நரகு என்பர் கண்டாய் – குமரேச:89/6
மேல்

தந்திரம் (1)

தந்திரம் மிகுத்த கன சேவகர்-தமக்கு எலாம் சாமி காரியமே பலம் – குமரேச:27/5
மேல்

தந்து (2)

வண்ட புரட்டர் தாம் முறி தந்து பொன் அடகுவைக்கினும் கடன் ஈந்திடார் – குமரேச:6/3
தருணத்தில் உதவி செய்யாத நட்பாளர் பின் தந்து என தராமல் என்ன – குமரேச:28/1
மேல்

தந்தை (3)

பெற்ற தாய் தந்தை துயர்பட வாழ்ந்திருந்த பதர் பெண்புத்தி கேட்கும் பதர் – குமரேச:30/4
தந்தை தாய் வாக்ய பரிபாலனம் செய்தவன் தசரத குமார ராமன் – குமரேச:47/1
சொன்ன மொழி தவறாது செய்திடுதல் தாய் தந்தை துணை அடி அருச்சனைசெயல் – குமரேச:101/3
மேல்

தந்தையர் (2)

ஓதரிய பிள்ளைகட்கு அன்னை தந்தையர் தெய்வம் உயர்சாதி மாந்தர் யார்க்கும் – குமரேச:10/5
அன்னை தந்தையர் புத்தி கேளாத பிள்ளையோ அட்டம சனி ஆகுவான் – குமரேச:44/1
மேல்

தந்தையை (1)

தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம் உயர் தந்தையை சீறு காலம் – குமரேச:59/1
மேல்

தப்பி (1)

அடு பகைவரில் தப்பி வந்த ஒரு வேந்தனையும் அன்பான பெரியோரையும் – குமரேச:96/2
மேல்

தபு (1)

ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டு பின் அற்பரை அடுத்த பேரும் – குமரேச:97/2
மேல்

தபோதனர் (1)

அரசர் பகையும் தவம்புரி தபோதனர் பகையும் அரிய கருணீகர் பகையும் – குமரேச:24/1
மேல்

தபோதனர்கள் (1)

நாடிய தபோதனர்கள் மா தவம் புரிவதும் நவில் வேத வேதியர் எலாம் – குமரேச:7/2
மேல்

தம் (3)

தம் தாரம் அன்றியே பரதாரம் மேல் நினைவு-தனை வைத்த காமுகர்க்கு – குமரேச:67/1
தேடி தம் வீட்டில் பணக்காரர் வந்திடின் தேக சீவன் போலவே – குமரேச:77/1
இனிய தம் சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி ரட்சிப்பர் அன்றோ – குமரேச:99/6
மேல்

தம்பட்ட (1)

தாருவில் கொடி தொனிகள் பல கூடினாலும் ஒரு தம்பட்ட ஓசை ஆமோ – குமரேச:55/2
மேல்

தம்பலத்தினோடும் (1)

செங்கை ஒன்றாலும் விரல் மூன்றாலும் வாங்கினும் திகழ் தம்பலத்தினோடும்
அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும் அசுத்த நிலமான அதினும் – குமரேச:89/4,5
மேல்

தம்பியோ (1)

தன் பங்கு தா என்று சபை ஏறு தம்பியோ சார்ந்த சன்ம சூரியன் – குமரேச:44/4
மேல்

தமதிடை (1)

பற்று_அலார் தமதிடை வருந்து விசுவாசமும் பழைய தாயாதி நிணறும் – குமரேச:84/3
மேல்

தமிழ் (2)

சீரிய தமிழ் புலவர் வாக்கில் எழு கவியையும் சித்தர்-தமது உள்ளத்தையும் – குமரேச:66/5
வாடி மனம் நொந்து தமிழ் சொன்ன நக்கீரன் முன் வந்து உதவி செய்த முருகா – குமரேச:98/7
மேல்

தமிழாசிரிய (1)

பாங்கான தமிழாசிரிய விருத்தத்தின் அறை பாடல் ஒரு நூறும் நாடி – குமரேச:102/6
மேல்

தமிழில் (1)

தாழ்வான வன்கண்ணர் குற்றம் எங்கே என்று தமிழில் ஆராய்வர் கண்டாய் – குமரேச:85/6
மேல்

தமிழினில் (1)

பேசில் ஐராவதம் தமிழினில் அகத்தியம் பிரணவம் மந்திரத்தில் – குமரேச:26/6
மேல்

தமையன் (2)

நன்னயம் இலாத வஞ்சனைசெய்த தமையன் மூன்றாம் இடத்தே வியாழம் – குமரேச:44/5
தமையன் அருள் வாக்கிய பரிபாலனம் செய்தோர்கள் தருமனுக்கு இளைய நால்வர் – குமரேச:47/2
மேல்

தயவுடையர் (1)

இன்சொலுடனே பூத தயவுடையர் ஆயினோர் எவருக்கும் ஆபத்திலே – குமரேச:99/5
மேல்

தயிர் (2)

முற்று தயிர் காய்ச்சு பால் நீர்மோர் உருக்கு நெய் முதிரா வழுக்கை இளநீர் – குமரேச:21/4
விருந்துகள் சமைத்து நெய் பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் – குமரேச:74/2
மேல்

தயிர்கள் (1)

வல் இரவிலே தயிர்கள் சருகாதி உண்ணலால் வன் பிணிக்கு இடம் என்பர் காண் – குமரேச:32/7
மேல்

தயிரில் (1)

ஈரம் இல்லா களர் நிலத்தினில் இரா தயிரில் இழியும் மதுபானர் பாலில் – குமரேச:38/5
மேல்

தயை (4)

விண்டுவின் களை பூண்டிருக்கும் இடம்-தனில் மிக்கான தயை இருக்கும் – குமரேச:9/4
பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடம்-தனில் பகர் தருமம் மிக இருக்கும் – குமரேச:9/5
தயை இல்லை நிசம் இல்லை வெட்கம் இலை சமரினில் தைரியம் சற்றும் இல்லை – குமரேச:67/2
தயை இலாதவர்-தமக்கு உறவு ஏது பணம் இலாதார்க்கு ஏது வேசை உறவு – குமரேச:82/2
மேல்

தயையாக (2)

தயையாக வித்தையை சாற்றினவன் ஒரு பிதா சார்ந்த சற்குரு ஒரு பிதா – குமரேச:8/2
தயையாக உண்ட பின் உலாவல் இவை மேலவர் சரீர சுகம் ஆம் என்பர் காண் – குமரேச:21/6
மேல்

தயையினால் (1)

மா தயையினால் சூர் தடிந்து அருள்புரிந்ததால் வானவர்க்கு தெய்வம் நீ – குமரேச:10/7
மேல்

தர்மம் (1)

முந்த இரு தலையும் சமன்செய்த கோல் போல் மொழிந்திடின் தர்மம் அது காண் – குமரேச:63/5
மேல்

தரணி-தனில் (1)

தரணி-தனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத தருமங்கள் செய்த பேர்கள் – குமரேச:33/4
மேல்

தரள (1)

மரு உலாவிய நீப மாலையும் தண் தரள மாலையும் புனை மார்பனே – குமரேச:51/7
மேல்

தராதரம் (1)

தராதரம் அறிந்து முறை செய்யாத மன்னரை சார்ந்து என்ன நீங்கில் என்ன – குமரேச:28/2
மேல்

தராமல் (1)

தருணத்தில் உதவி செய்யாத நட்பாளர் பின் தந்து என தராமல் என்ன – குமரேச:28/1
மேல்

தரிக்கினும் (2)

சங்கை இல்லாதவர்க்கு எத்தனை விவேகம் தரிக்கினும் கனதை இல்லை – குமரேச:65/3
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும் அவர்க்கு நரகு என்பர் கண்டாய் – குமரேச:89/6
மேல்

தரித்த (1)

மாலிகை தரித்த மணி மார்பனே தெய்வானை வள்ளிக்கு வாய்த்த கணவா – குமரேச:100/7
மேல்

தரித்திடில் (1)

அந்தம் மிகு மரகத கல்லை தரித்திடில் அடுத்ததும் பசுமை ஆகும் – குமரேச:45/5
மேல்

தரிப்பவர்க்கு (1)

நித்தம் மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற நினைவாய் தரிப்பவர்க்கு
நீடு வினை அணுகாது தேக பரிசுத்தம் ஆம் நீங்காமல் நிமலன் அங்கே – குமரேச:90/3,4
மேல்

தரு (5)

தரு கல்வி மேல் நினைவு வேசியர்க்கு இனிய பொருள் தருவோர்கள் மீது நினைவு – குமரேச:11/6
தொன்மை தரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது தூய நிறை தவறு ஆகுமோ – குமரேச:19/6
அலர் தரு கடப்ப மலர்-தனிலும் இரதத்திலும் அதிக குணமான ரூப – குமரேச:37/6
தரு நீதி கேள்வியால் அறியலாம் பிணிகளை தாதுக்களால் அறியலாம் – குமரேச:40/6
மழலை பசும்கிள்ளை முன்கை மலை_மங்கை தரு வண்ண குழந்தை முருகா – குமரேச:95/7
மேல்

தருண (3)

வர நதியின் மதலை என இனிய சரவணம் மிசையில் வரு தருண சிறு குழவியே – குமரேச:24/7
சுகியமாய் உண்டு என்று இருப்பது எல்லாம் தருண துரிதத்தில் உதவாது காண் – குமரேச:52/6
மிக்கான அறிவுளோர் வரு தருண காலத்தில் மிடியாளருக்கு உதவுவார் – குமரேச:71/4
மேல்

தருணத்தில் (1)

தருணத்தில் உதவி செய்யாத நட்பாளர் பின் தந்து என தராமல் என்ன – குமரேச:28/1
மேல்

தருணம் (1)

தருணம் இது என்று நல் ஆபத்து வேளையில் சரணம்புகுந்தோரையும் – குமரேச:96/4
மேல்

தரும் (5)

சந்தன விருக்ஷத்தை அண்டி நிற்கின்ற பல தருவும் அவ் வாசனை தரும்
தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும் சாயல் பொன் மயமே தரும் – குமரேச:45/1,2
தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும் சாயல் பொன் மயமே தரும்
பந்தம் மிகு பாலுடன் வளாவிய தணீர் எலாம் பால் போல் நிறம் கொடுக்கும் – குமரேச:45/2,3
தீனானது இனிது என்று மீதூண் விரும்பினால் தேக பீடைகளே தரும்
செகராசர் சூனு என ஏலாத காரியம் செய்தால் மனம் பொறார் காண் – குமரேச:62/5,6
பெருமையொடு சாதியில் உயர்ச்சி தரும் அனுதினம் பேரும் ப்ரதிஷ்டை உண்டாம் – குமரேச:69/5
நன்மையே தரும் அலால் தாழ்ச்சிகள் வரா இவை நல்லோர்கள் செயும் முறைமை காண் – குமரேச:98/6
மேல்

தருமங்கள் (1)

தரணி-தனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத தருமங்கள் செய்த பேர்கள் – குமரேச:33/4
மேல்

தருமத்திலே (1)

நாள்-தோறும் தருமத்திலே நினைவு மன்னர்க்கு இராச்சியம்-தன்னில் நினைவு – குமரேச:11/2
மேல்

தருமம் (2)

பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடம்-தனில் பகர் தருமம் மிக இருக்கும் – குமரேச:9/5
பகர் தருமம் உள்ளவர் இடம்-தனில் சத்துரு பலாயன திறல் இருக்கும் – குமரேச:9/6
மேல்

தருமர் (1)

முனை வீமன் உடல் பாதி மிருகம் தனக்கு என்று முன் தருமர் சொன்னது அலவோ – குமரேச:63/6
மேல்

தருமன் (1)

அஞ்சல் என நாயின் உடல் தருமன் சுமந்து முன் ஆற்றை கடத்துவித்தான் – குமரேச:99/1
மேல்

தருமனுக்கு (1)

தமையன் அருள் வாக்கிய பரிபாலனம் செய்தோர்கள் தருமனுக்கு இளைய நால்வர் – குமரேச:47/2
மேல்

தருமோ (1)

குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடு விடம் அலாது தருமோ
குக்கல் நெடு வாலுக்கு மட்டையை கட்டினும் கோணாமலே நிற்குமோ – குமரேச:39/3,4
மேல்

தருவின் (1)

கூட்டமிடும் அம்பலத்து உறு தருவின் நீழலும் குடியாளர் விவசாயமும் – குமரேச:18/2
மேல்

தருவும் (1)

சந்தன விருக்ஷத்தை அண்டி நிற்கின்ற பல தருவும் அவ் வாசனை தரும் – குமரேச:45/1
மேல்

தருவோர்கள் (1)

தரு கல்வி மேல் நினைவு வேசியர்க்கு இனிய பொருள் தருவோர்கள் மீது நினைவு – குமரேச:11/6
மேல்

தரை (1)

தரை மீதில் ஓடுமோ தண்ணீரில் உறு முதலை-தன் முன்னே கரி நிற்குமோ – குமரேச:72/2
மேல்

தரையதனில் (1)

தரையதனில் ஓடு தேர் நீள் கடலில் ஓடுமோ சலதி மிசை ஓடு கப்பல் – குமரேச:72/1
மேல்

தலத்தினில் (1)

தகை பெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம் தலத்தினில் சிதம்பர தலம் – குமரேச:26/2
மேல்

தலத்து (1)

விண் தலத்து உறை சந்திராதித்த கிரணமும் வீசும் மாருத சீதமும் – குமரேச:18/5
மேல்

தலம் (1)

தகை பெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம் தலத்தினில் சிதம்பர தலம்
சீர் உலவு ரிஷிகளில் வசிட்டர் பசுவில் காமதேனு முனிவரில் நாரதன் – குமரேச:26/2,3
மேல்

தலைக்கு (1)

வருடத்து இரண்டு விசை தைலம் தலைக்கு இடுதல் வாரத்து இரண்டு விசையாம் – குமரேச:21/2
மேல்

தலையும் (1)

முந்த இரு தலையும் சமன்செய்த கோல் போல் மொழிந்திடின் தர்மம் அது காண் – குமரேச:63/5
மேல்

தலைவனே (1)

மைக்கு உறுதி ஆகிய விழி குற மடந்தை சுரமங்கை மருவும் தலைவனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:78/7,8
மேல்

தலைவா (2)

மை காவி விழி மாது தெய்வானையும் குறவர் வள்ளியும் தழுவு தலைவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:85/7,8
வயிரமொடு சூரனை சங்காரமே செய்து வானவர்க்கு உதவு தலைவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:94/7,8
மேல்

தவ (1)

மா தவ குமாரி சாரங்கத்து உதித்த குற வள்ளிக்கு உகந்த சரசா – குமரேச:21/7
மேல்

தவசு (1)

மா தவர்க்கு தவசு பலம் மடவியர்க்கு நிறை மானம் மிகு கற்பே பலம் – குமரேச:27/4
மேல்

தவம் (3)

நாடிய தபோதனர்கள் மா தவம் புரிவதும் நவில் வேத வேதியர் எலாம் – குமரேச:7/2
புகழ் விளக்குவது கொடை தவம் விளக்குவது அறிவு பூ விளக்குவது வாசம் – குமரேச:16/5
திரு இலா மெய் திறமை பொறை இலா மா தவம் தியானம் இல்லாத நிட்டை – குமரேச:23/3
மேல்

தவம்புரி (1)

அரசர் பகையும் தவம்புரி தபோதனர் பகையும் அரிய கருணீகர் பகையும் – குமரேச:24/1
மேல்

தவமது (1)

தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதல் பிதா தனை வளர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/1
மேல்

தவமும் (1)

நிலமது செழிப்பதும் அரசர் செங்கோல் புரியும் நிலையும் மா தவர் செய் தவமும்
மறையோர்களாலே விளங்கும் இவ் உலகத்தின் மானிட தெய்வம் இவர் காண் – குமரேச:4/6,7
மேல்

தவர் (1)

நிலமது செழிப்பதும் அரசர் செங்கோல் புரியும் நிலையும் மா தவர் செய் தவமும் – குமரேச:4/6
மேல்

தவர்-தமை (1)

ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர் அரும் தவர்-தமை பழித்தோர் – குமரேச:20/4
மேல்

தவர்க்கு (1)

மா தவர்க்கு தவசு பலம் மடவியர்க்கு நிறை மானம் மிகு கற்பே பலம் – குமரேச:27/4
மேல்

தவளை (1)

ஆனை தண்ணீரில் நிழல் பார்த்திட தவளை சென்று அங்கே கலக்கி உலவும் – குமரேச:80/1
மேல்

தவளையும் (1)

ஆடு அரவின் வாயினில் அகப்பட்ட தவளையும் ஆனை வாயில் கரும்பும் – குமரேச:53/1
மேல்

தவறாது (2)

சத்தியம் தவறாது இருப்பவரிடத்தினில் சார்ந்து திருமாது இருக்கும் – குமரேச:9/1
சொன்ன மொழி தவறாது செய்திடுதல் தாய் தந்தை துணை அடி அருச்சனைசெயல் – குமரேச:101/3
மேல்

தவறாமல் (2)

ராய நெறி தவறாமல் உலக பரிபாலனம் நடத்துபவனே அரசனாம் – குமரேச:13/1
சொன்ன நெறி தவறாமல் வழிபாடுசெய்து வரு துய்யனே இனிய சீடன் – குமரேச:60/6
மேல்

தவறி (1)

வாராத ஆபத்து வருகினும் கற்புடைய மாது நிறை தவறி நடவாள் – குமரேச:68/6
மேல்

தவறிடார்கள் (1)

திரமான பெரியோர்கள் சரீரங்கள் போகினும் செப்பும் முறை தவறிடார்கள்
வனம் ஏறு கவரிமான் உயிர் போகும் அளவும் தன் மயிரின் ஒன்றும் கொடாது – குமரேச:68/4,5
மேல்

தவறு (1)

தொன்மை தரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது தூய நிறை தவறு ஆகுமோ – குமரேச:19/6
மேல்

தவிர் (1)

நிந்தை தவிர் வாக்ய பரிபாலனம் செய்தவன் நீள் பலம் மிகுந்த அனுமான் – குமரேச:47/5
மேல்

தவிர்த்த (2)

மாசை தவிர்த்த மதி முக தெய்வயானையொடு வள்ளிக்கு இசைந்த அழகா – குமரேச:12/7
மனதார உனது அடைக்கலம் என்ற கீரற்கு வன் சிறை தவிர்த்த முருகா – குமரேச:68/7
மேல்

தவிர்த்தலாலும் (1)

சிறியோர்கள் செய்திடும் பிழையை பொறுத்து சினத்தை தவிர்த்தலாலும்
நாடியே தாழ்வாய் வணங்கிடுதலாலும் மிக நல் வார்த்தை சொல்லலாலும் – குமரேச:98/4,5
மேல்

தவிர்த்தவன் (1)

கவளம் இடு மனைவியை பெற்றுளோன் ஒரு பிதா கலி தவிர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/5
மேல்

தவிர்த்தும் (1)

தேகம் கிழித்து வடிவேலினால் இரு கூறுசெய்து அமரர் சிறை தவிர்த்தும்
நேமிக்குள் அன்பர் இடருற்ற சமயம்-தனில் நினைக்கும் முன் வந்து உதவியும் – குமரேச:3/4,5
மேல்

தழலில் (1)

தங்கமானது தழலில் நின்று உருகி மறுகினும் தன் ஒளி மழுங்கிடாது – குமரேச:19/1
மேல்

தழுவு (1)

மை காவி விழி மாது தெய்வானையும் குறவர் வள்ளியும் தழுவு தலைவா – குமரேச:85/7
மேல்

தழுவும் (2)

மணவாளன் நீ என்று குற வள்ளி பின்தொடர வனமூடு தழுவும் அழகா – குமரேச:56/7
மானையும் திகழ் தெய்வயானையும் தழுவும் மணி மார்பனே அருளாளனே – குமரேச:80/7
மேல்

தழைக்கும் (1)

பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும் பொங்கு காலம் தழைக்கும்
புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும் போது உதயம் ஆகில் மலரும் – குமரேச:50/3,4
மேல்

தழைய (1)

வானாடு புகழும் ஒரு சோணாடு தழைய இவண் வந்து அவதரித்த முதலே – குமரேச:62/7
மேல்

தள்ளி (1)

தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளி செய்வோர் குரங்கு – குமரேச:42/1
மேல்

தள்ளினும் (1)

அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும் அவர்க்கு நரகு என்பர் கண்டாய் – குமரேச:89/6
மேல்

தளகர்த்தரை (1)

படி விசாரணையொடு ப்ரதானி தளகர்த்தரை பண்பு அறிந்தே அமைத்தல் – குமரேச:5/3
மேல்

தளம் (1)

தன் உயிரை எண்ணாத சூரனுக்கு எதிராளி தளம் எலாம் ஒரு துரும்பு – குமரேச:15/2
மேல்

தளைகள் (1)

எழுத்து அசைகள் சீர் தளைகள் அடி தொடைகள் சிதையாது இருக்கவே வேண்டும் அப்பா – குமரேச:88/1
மேல்

தன் (14)

பல்லுயிர் எலாம் தன் உயிர்க்கு நிகர் என்றே பரித்தல் குற்றங்கள் களைதல் – குமரேச:5/4
நேயமுடனே தன் சரீரத்தை எண்ணாத நிர்வாகியே சூரனாம் – குமரேச:13/3
தன் உயிரை எண்ணாத சூரனுக்கு எதிராளி தளம் எலாம் ஒரு துரும்பு – குமரேச:15/2
தங்கமானது தழலில் நின்று உருகி மறுகினும் தன் ஒளி மழுங்கிடாது – குமரேச:19/1
சந்தன குறடுதான் மெலிந்து தேய்ந்தாலுமே தன் மணம் குன்றிடாது – குமரேச:19/2
தன் பெருமை சொல்லியே தன்னை புகழ்ந்த பதர் சமர் கண்டு ஒளிக்கும் பதர் – குமரேச:30/1
புவியோர் நடத்தையை இகழ்ந்த பதர் தன் மனைவி புணர்தல் வெளியாக்கும் பதர் – குமரேச:30/6
தன் பங்கு தா என்று சபை ஏறு தம்பியோ சார்ந்த சன்ம சூரியன் – குமரேச:44/4
ஐங்காதம் ஓடினும் தன் பாவம் தன்னோடே அடையாமல் நீங்கிவிடுமோ – குமரேச:48/5
தன் வீட்டில் ஏற்றிய விளக்கு என்று முத்தம்-தனை கொடுத்தால் அது சுடும் – குமரேச:62/2
வனம் ஏறு கவரிமான் உயிர் போகும் அளவும் தன் மயிரின் ஒன்றும் கொடாது – குமரேச:68/5
சடம் ஒன்று எடுத்தால் புவிக்கு நல்லவன் என்று தன் பேர் விளங்க வேண்டும் – குமரேச:76/1
கோடாலி-தன் உளே மரமது நுழைந்து தன் கோத்திரம் எலாம் அழிக்கும் – குமரேச:93/2
நட்புடன் வளர்த்த கலைமான் ஒன்று சென்று தன் நவில் சாதி-தனை இழுக்கும் – குமரேச:93/4
மேல்

தன்னை (3)

தன் பெருமை சொல்லியே தன்னை புகழ்ந்த பதர் சமர் கண்டு ஒளிக்கும் பதர் – குமரேச:30/1
தன்னை மிஞ்சி சொன்ன வார்த்தை கேளா அடிமை சந்திராஷ்டகம் என்னலாம் – குமரேச:44/3
தன்னை நம்பினவரையும் ஏழையானவரையும் சார்ந்த மறையோர்-தம்மையும் – குமரேச:96/3
மேல்

தன்னோடே (1)

ஐங்காதம் ஓடினும் தன் பாவம் தன்னோடே அடையாமல் நீங்கிவிடுமோ – குமரேச:48/5
மேல்

தன (1)

அனுதினம் களவிலே நினைவு தன வணிகருக்கு ஆதாயம் மீது நினைவு – குமரேச:11/4
மேல்

தனக்கு (4)

துடி பெறு தனக்கு உறுதியான நட்பு அகமின்மை சுகுணமொடு கல்வி அறிவு – குமரேச:5/5
காலமது நேரில் தனக்கு உறுதியாக முன் கற்று உணர்ந்திடு கல்வியும் – குமரேச:51/4
முனை வீமன் உடல் பாதி மிருகம் தனக்கு என்று முன் தருமர் சொன்னது அலவோ – குமரேச:63/6
நன்னயமதாக முன் உதவிசெய்தோரையும் நாளும் தனக்கு உறுதியாய் – குமரேச:96/5
மேல்

தனது (6)

சந்ததம் திருமாது இருக்கும் இடம்-தனில் தனது பாக்கியம் இருக்கும் – குமரேச:9/2
மூதறிவினொடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்_குழலுடன் சையோகம் – குமரேச:21/3
தனது அகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம் சாதி சொல்லால் அறியலாம் – குமரேச:40/5
கற்று உணர்ந்தே தனது புகழால் பிதாவை ப்ரகாசம் செய்வோன் புத்திரன் – குமரேச:60/2
ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனது என்று அடாது செய்யில் கெடுதியாம் – குமரேச:62/3
குயில் முட்டை தனது என்று காக்கை அடைகாக்கும் குணம் போலும் ஈக்கள் எல்லாம் – குமரேச:94/1
மேல்

தனம் (1)

கனம் மருவு பெரிய தனம் வந்தவுடன் இறுமாந்து கண் விழிக்காத பேயும் – குமரேச:25/2
மேல்

தனவான் (1)

வன் பகைஞர் என்றும் அயலோர் என்றும் மிக்க தனவான் என்றும் ஏழை என்றும் – குமரேச:63/2
மேல்

தனியே (1)

வஞ்சகருடன் கூடி வாழ்தலில் தனியே வருந்திடும் சிறுமை நன்று – குமரேச:83/7
மேல்

தனிவழிக்கு (1)

அறம் இல்லை நிதி இல்லை இரவினில் தனிவழிக்கு அச்சமோ மனதில் இல்லை – குமரேச:67/4
மேல்

தனை (2)

தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதல் பிதா தனை வளர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/1
தனை ஒப்பிலா புதல்வனை பெற்ற பேர் பொருது சமர் வென்ற சுத்த வீரர் – குமரேச:33/3
மேல்