எ – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எக்கனி 1
எக்காலும் 1
எங்கு 1
எங்கே 11
எச்சில் 1
எச்சிலான 1
எடுத்தலால் 1
எடுத்தால் 1
எடுத்தும் 1
எண்ணத்தினால் 1
எண்ணமுடனே 1
எண்ணமும் 1
எண்ணாத 3
எண்ணாது 1
எண்ணார்கள் 1
எண்ணாள் 1
எண்ணி 1
எண்ணினோர் 1
எத்தனப்படி 1
எத்தனை 6
எதிர் 1
எதிர்பண்ணி 1
எதிராளி 2
எந்நாளும் 1
எப்போதும் 1
எய்தலின் 1
எய்ய 1
எரித்த 1
எரித்து 1
எரு 1
எல்லாம் 6
எல்லோரும் 1
எலாம் 22
எவர்க்கும் 1
எவருக்கும் 3
எவரை 1
எவளாவானாலும் 1
எழிலும் 1
எழு 4
எழுத்து 2
எழுதி 2
எழுது 1
எழுப்பலாம் 1
எழும்பிடில் 1
எள்ளளவு 1
எளியவரை 1
எற்கு 1
எறி 1
எறிய 1
எறியும் 2
என் 3
என்பதை 1
என்பர் 11
என்பார் 2
என்ற 1
என்று 40
என்றும் 8
என்றே 3
என்றோர்க்கு 1
என்ன 47
என்னல் 1
என்னலாம் 2
என்னவே 1
என்னாம் 6
என்னாமலே 1
என்னில் 1
என 27
எனலாம் 2
எனா 1
எனில் 1
எனும் 3
எனும்படி 1

எக்கனி (1)

மிடை கரும் காகங்கள் எக்கனி இருந்தாலும் வேப்பங்கனிக்கு நாடும் – குமரேச:85/2
மேல்

எக்காலும் (1)

எக்காலும் வரி வண்டு பங்கேருகத்தினில் இருக்கின்ற தேனை நாடும் – குமரேச:85/3
மேல்

எங்கு (1)

நீதி மிகு நல்லோர்கள் எங்கு இருந்தாலும் அவர் நிறை பக்ஷம் மறவார்கள் காண் – குமரேச:70/6
மேல்

எங்கே (11)

கதிரவன் உதிப்பது எங்கே நளினம் எங்கே களித்து உளம் மலர்ந்தது என்ன – குமரேச:70/1
கதிரவன் உதிப்பது எங்கே நளினம் எங்கே களித்து உளம் மலர்ந்தது என்ன – குமரேச:70/1
கார் மேகம் எங்கே பசும் தோகை எங்கே கருத்தில் நட்பானது என்ன – குமரேச:70/2
கார் மேகம் எங்கே பசும் தோகை எங்கே கருத்தில் நட்பானது என்ன – குமரேச:70/2
மதியம் எங்கே பெரும் குமுதம் எங்கே முகம் மலர்ந்து மகிழ் கொண்டது என்ன – குமரேச:70/3
மதியம் எங்கே பெரும் குமுதம் எங்கே முகம் மலர்ந்து மகிழ் கொண்டது என்ன – குமரேச:70/3
வல் இரவு விடிவது எங்கே கோழி எங்கே மகிழ்ந்து கூவிடுதல் என்ன – குமரேச:70/4
வல் இரவு விடிவது எங்கே கோழி எங்கே மகிழ்ந்து கூவிடுதல் என்ன – குமரேச:70/4
நிதி அரசர் எங்கே இருந்தாலும் அவர்களொடு நேசம் ஒன்றாய் இருக்கும் – குமரேச:70/5
தக்கோர் பொருள் சுவை நயங்கள் எங்கே என்று தாம் பார்த்து உகந்து கொள்வார் – குமரேச:85/5
தாழ்வான வன்கண்ணர் குற்றம் எங்கே என்று தமிழில் ஆராய்வர் கண்டாய் – குமரேச:85/6
மேல்

எச்சில் (1)

அமிர்த வாய் இதழ் சித்ரசாலை எச்சில் குழி அவர்க்கு ஆசைவைக்கலாமோ – குமரேச:58/6
மேல்

எச்சிலான (1)

புகலரிய வண்டு எச்சிலான தேன் தேவர்_கோன் புனித அபிடேகம் ஆகும் – குமரேச:61/4
மேல்

எடுத்தலால் (1)

மிகு சுமை எடுத்தலால் இளவெயில் காய்தலால் மெய் வாட வேலை செயலால் – குமரேச:32/6
மேல்

எடுத்தால் (1)

சடம் ஒன்று எடுத்தால் புவிக்கு நல்லவன் என்று தன் பேர் விளங்க வேண்டும் – குமரேச:76/1
மேல்

எடுத்தும் (1)

பத்தியொடு சிவசிவா என்று திருநீற்றை பரிந்து கையால் எடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு பருத்த புயம் மீது ஒழுக – குமரேச:90/1,2
மேல்

எண்ணத்தினால் (1)

எண்ணத்தினால் ஒன்றும் வாராது பரமசிவன் எத்தனப்படி முடியுமாம் – குமரேச:46/6
மேல்

எண்ணமுடனே (1)

எண்ணமுடனே லிகித புத்தியொடு சாக்ஷிக்கும் ஏற்க சபா சமதம் ஆம் – குமரேச:63/4
மேல்

எண்ணமும் (1)

ஏர் அணவு கீசகன் கனதையும் திரிபுரர் எண்ணமும் தக்கன் எழிலும் – குமரேச:49/5
மேல்

எண்ணாத (3)

நேயமுடனே தன் சரீரத்தை எண்ணாத நிர்வாகியே சூரனாம் – குமரேச:13/3
தன் உயிரை எண்ணாத சூரனுக்கு எதிராளி தளம் எலாம் ஒரு துரும்பு – குமரேச:15/2
சற்குருவை நிந்தைசெய் காலம் மெய் கடவுளை சற்றும் எண்ணாத காலம் – குமரேச:59/2
மேல்

எண்ணாது (1)

இடர் இலா நல்லோர்கள் பெரியோர்களை சற்றும் எண்ணாது உரைத்த பேயும் – குமரேச:25/5
மேல்

எண்ணார்கள் (1)

அர்ச்சித்து முத்திபெறல் வேண்டும் என்று எண்ணார்கள் ஆசை வலையில் சுழலுவார் – குமரேச:73/6
மேல்

எண்ணாள் (1)

வறுமைதான் வந்திடின் தாய் பழுது சொல்லுவாள் மனையாட்டி சற்றும் எண்ணாள்
வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும் – குமரேச:79/1,2
மேல்

எண்ணி (1)

பார் மீதில் இன்னும் வெகு நாள் இருப்போம் என்று பல் கோடி நினைவை எண்ணி
அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல் அன்பாக நின் பதத்தை – குமரேச:73/4,5
மேல்

எண்ணினோர் (1)

அன்னம் கொடுத்தபேருக்கு அழிவை எண்ணினோர் அரசு அடக்கிய அமைச்சர் – குமரேச:20/3
மேல்

எத்தனப்படி (1)

எண்ணத்தினால் ஒன்றும் வாராது பரமசிவன் எத்தனப்படி முடியுமாம் – குமரேச:46/6
மேல்

எத்தனை (6)

கொங்கை இல்லாதவட்கு எத்தனை பணியுடைமை கூடினும் பெண்மை இல்லை – குமரேச:65/1
கூறு நிறை கல்வி இல்லாமல் எத்தனை கவிதை கூறினும் புலமை இல்லை – குமரேச:65/2
சங்கை இல்லாதவர்க்கு எத்தனை விவேகம் தரிக்கினும் கனதை இல்லை – குமரேச:65/3
பங்கயம் இலாமல் எத்தனை மலர்கள் வாவியில் பாரித்தும் மேன்மை இல்லை – குமரேச:65/5
மங்கையர் இலா மனைக்கு எத்தனை அரும் செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை – குமரேச:65/7
எத்தனை சுகந்த வகை உற்றாலும் உருள் வண்டு இனம் துர்மலத்தை நாடும் – குமரேச:85/4
மேல்

எதிர் (1)

அஞ்சாமல் எதிர் பேசி நிற்கும் மனையாள் வாக்கில் அங்காரக சன்மமாம் – குமரேச:44/2
மேல்

எதிர்பண்ணி (1)

வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்கும் ஒரு வெறியர் குரை ஞமலி ஆவர் – குமரேச:42/3
மேல்

எதிராளி (2)

தன் உயிரை எண்ணாத சூரனுக்கு எதிராளி தளம் எலாம் ஒரு துரும்பு – குமரேச:15/2
துர்க்குணம் இலாதவர்க்கு எதிராளி ஏது இடர் செய் துட்டருக்கு இரக்கம் ஏது – குமரேச:82/6
மேல்

எந்நாளும் (1)

தரணி-தனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத தருமங்கள் செய்த பேர்கள் – குமரேச:33/4
மேல்

எப்போதும் (1)

பகர் முடிவிலே ரவுரவாதி நரகத்து அனுபவிப்பர் எப்போதும் என்பார் – குமரேச:64/6
மேல்

எய்தலின் (1)

பஞ்சரித்து அருமை அறியார் பொருளை எய்தலின் பலர் மனை பிச்சை நன்று – குமரேச:83/1
மேல்

எய்ய (1)

தோலாமல் அவை எய்ய வேண்டும் என்று ஒரு கணை தொடுத்து வில் வாங்கி நிற்க – குமரேச:87/2
மேல்

எரித்த (1)

சொல்லரிய காட்டுக்கு எரித்த நிலவும் கடல் சுழிக்குளே விடு கப்பலும் – குமரேச:95/4
மேல்

எரித்து (1)

மாரனை கண்ணால் எரித்து அருள் சிவன் தந்த வரபுத்ர வடிவேலவா – குமரேச:49/7
மேல்

எரு (1)

கட்டி எரு இட்டு செழும் தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்பு விடுமோ – குமரேச:39/1
மேல்

எல்லாம் (6)

கண்டவர்கள் எல்லாம் வரும் பெரும் சந்தியில் கனி பல பழுத்த மரமும் – குமரேச:18/3
அடர் கழுதை லத்தி நிலம் எல்லாம் குவிந்து என்ன அரிய குணம் இல்லாத பெண் – குமரேச:29/3
அண்டர் எல்லாம் அமிர்தம் உண்டிட பரமனுக்கு ஆலம் லபித்தது என்ன – குமரேச:46/2
சுகியமாய் உண்டு என்று இருப்பது எல்லாம் தருண துரிதத்தில் உதவாது காண் – குமரேச:52/6
சென்ற வழி எல்லாம் பெரும் பாதை ஆய்விடும் செல்லாத வார்த்தை செல்லும் – குமரேச:69/2
குயில் முட்டை தனது என்று காக்கை அடைகாக்கும் குணம் போலும் ஈக்கள் எல்லாம்
கூடியே தாம் உண்ண வேண்டும் என்றே தினம் கூடு உய்த்த நறவு போலும் – குமரேச:94/1,2
மேல்

எல்லோரும் (1)

மனு நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லோரும் மண் மேல் இருந்து வாழ்ந்து – குமரேச:73/1
மேல்

எலாம் (22)

பல்லுயிர் எலாம் தன் உயிர்க்கு நிகர் என்றே பரித்தல் குற்றங்கள் களைதல் – குமரேச:5/4
மருவு நாணயமுளோர் கேட்டு அனுப்புகினும் அவர் வார்த்தையில் எலாம் கொடுப்பார் – குமரேச:6/4
நாடிய தபோதனர்கள் மா தவம் புரிவதும் நவில் வேத வேதியர் எலாம்
சொல் அரிய யாகாதி கருமங்கள் செய்வதும் தொல் புவி செழிக்கும் நலமும் – குமரேச:7/2,3
காதல் உறு கற்புடைய மங்கையர்-தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம் – குமரேச:10/3
காசினியில் மன்னுயிர்-தமக்கு எலாம் குடிமரபு காக்கும் மன்னவர் தெய்வமாம் – குமரேச:10/4
தானம் மிகு குடியாளருக்கு எலாம் வேளாண்மை-தனில் நினைவு கற்பவர்க்கு – குமரேச:11/5
தன் உயிரை எண்ணாத சூரனுக்கு எதிராளி தளம் எலாம் ஒரு துரும்பு – குமரேச:15/2
பெரிதான மோக்ஷ சிந்தனையுள்ளவர்க்கு எலாம் பெண் போகம் ஒரு துரும்பு – குமரேச:15/4
செய்ய கலை நாமகள் கடாக்ஷம் உள்ளோர்க்கு எலாம் செந்தமிழ் கவி துரும்பாம் – குமரேச:15/6
தந்திரம் மிகுத்த கன சேவகர்-தமக்கு எலாம் சாமி காரியமே பலம் – குமரேச:27/5
செறிவாகி நீண்டு என்ன வஸ்த்ர பூஷணம் எலாம் சித்திரத்து உற்றும் என்ன – குமரேச:29/6
வரவு காணாத செலவு இவை எலாம் புவி மீதில் வாழ்வு காணா இளமையாம் – குமரேச:31/7
மாறாக இவர் எலாம் உயிருடன் செத்த சவம் ஆகி ஒளி மாய்வர் கண்டாய் – குமரேச:34/7
மனத்தில் கடும் பகை முகத்தினால் அறியலாம் மாநில பூடுகள் எலாம்
மழையினால் அறியலாம் நல்லார் பொலார்-தமை மக்களால் அறியலாகும் – குமரேச:40/1,2
பந்தம் மிகு பாலுடன் வளாவிய தணீர் எலாம் பால் போல் நிறம் கொடுக்கும் – குமரேச:45/3
வீண் அல்ல இவை எலாம் கைப்பலனதாக அபிவிர்த்தியாய் வரும் என்பர் காண் – குமரேச:51/6
விருந்துகள் சமைத்து நெய் பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் – குமரேச:74/2
உற்றதோர் ஆற்றின் நடு மேடு ஆகும் மேடு எலாம் உறு புனல் கொள் மடு ஆயிடும் – குமரேச:75/2
வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும் – குமரேச:79/2
வாடாமல் இவை எலாம் சிவன் செயல்கள் அல்லாது மன செயலினாலும் வருமோ – குமரேச:87/7
கோடாலி-தன் உளே மரமது நுழைந்து தன் கோத்திரம் எலாம் அழிக்கும் – குமரேச:93/2
மருவு நீர் என உறுதல் இவை எலாம் மேலவர்-தம் மாண்பு என்று உரைப்பர் அன்றோ – குமரேச:101/6
மேல்

எவர்க்கும் (1)

திருமகள் கடாக்ஷம் உண்டானால் எவர்க்கும் சிறப்பு உண்டு கனதை உண்டு – குமரேச:69/1
மேல்

எவருக்கும் (3)

மடம் மிகுந்து எவருக்கும் உபகாரம் இல்லாத வம்பர் வாழ்வுக்கு நிகராம் – குமரேச:29/7
நந்தாத சனம் இல்லை இனம் இல்லை எவருக்கும் நட்பு இல்லை கனதை இல்லை – குமரேச:67/5
இன்சொலுடனே பூத தயவுடையர் ஆயினோர் எவருக்கும் ஆபத்திலே – குமரேச:99/5
மேல்

எவரை (1)

அவரவர்கள் அனுபோகம் அனுபவித்திடல் வேண்டும் அல்லால் வெறுப்பது எவரை
வாசவனும் உம்பரனை வரும் விசய சய என்று வந்து தொழுது ஏத்து சரணா – குமரேச:22/6,7
மேல்

எவளாவானாலும் (1)

சாதத்தில் எவளாவானாலும் புசித்த பின் தாகம்-தனக்கு வாங்கல் – குமரேச:21/5
மேல்

எழிலும் (1)

ஏர் அணவு கீசகன் கனதையும் திரிபுரர் எண்ணமும் தக்கன் எழிலும்
இவர்களது சம்பத்தும் நின்றவோ அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ – குமரேச:49/5,6
மேல்

எழு (4)

தாரணியில் இவர்கள் கிளை நெல்லியிலை போல் உகும் சமானமா எழு பிறப்பும் – குமரேச:64/3
பாரில் எழு மணலையும் பல பிராணிகளையும் படி ஆண்ட மன்னவரையும் – குமரேச:66/3
சீரிய தமிழ் புலவர் வாக்கில் எழு கவியையும் சித்தர்-தமது உள்ளத்தையும் – குமரேச:66/5
வட குவடு கிடுகிடென எழு கடலும் அலை எறிய மணி உரகன் முடிகள் நெரிய – குமரேச:76/7
மேல்

எழுத்து (2)

மிக்க மொழி நீர் மேல் எழுத்து அதிக மோகம் ஒரு மின்னல் இரு துடை சர்ப்பமாம் – குமரேச:58/4
எழுத்து அசைகள் சீர் தளைகள் அடி தொடைகள் சிதையாது இருக்கவே வேண்டும் அப்பா – குமரேச:88/1
மேல்

எழுதி (2)

கல்லாது புத்தகம்-தனில் எழுதி வீட்டினில் கட்டிவைத்திடு கல்வியும் – குமரேச:52/1
வாரமுடன் அருணகிரிநாதருக்கு அனுபூதி வைத்து எழுதி அருள் குருபரா – குமரேச:64/7
மேல்

எழுது (1)

கண்டு எழுது பற்றுவரவினில் மயிர் பிளந்தே கணக்கில் அணுவாகிலும் விடார் – குமரேச:6/5
மேல்

எழுப்பலாம் (1)

பிணமதை எழுப்பலாம் அக்கினி சுடாமல் பெரும் புனல் என செய்யலாம் – குமரேச:41/5
மேல்

எழும்பிடில் (1)

ஊடாடி மேலே எழும்பிடில் அடிப்பதற்கு உலவு ராசாளி கூட – குமரேச:87/3
மேல்

எள்ளளவு (1)

இந்த வகையை குறித்து ஒரு பக்ஷபாதம் ஓர் எள்ளளவு உரைத்திடாமல் – குமரேச:63/3
மேல்

எளியவரை (1)

வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்கும் ஒரு வெறியர் குரை ஞமலி ஆவர் – குமரேச:42/3
மேல்

எற்கு (1)

மான பரனுக்கு மரியாதை மேல் நினைவு எற்கு மாறாது உன் மீது நினைவு – குமரேச:11/7
மேல்

எறி (1)

வன்ன மயில் எறி வரு வேலாயுத கடவுள் மலை மேல் உகந்த முருகன் – குமரேச:102/1
மேல்

எறிய (1)

வட குவடு கிடுகிடென எழு கடலும் அலை எறிய மணி உரகன் முடிகள் நெரிய – குமரேச:76/7
மேல்

எறியும் (2)

திரை எறியும் வாவியில் பூத்தாலுமே கொட்டி செங்கஞ்ச மலர் ஆகுமோ – குமரேச:17/2
வாரி ஆழத்தையும் புனல் எறியும் அலைகளையும் மானிடர்கள் சனனத்தையும் – குமரேச:66/1
மேல்

என் (3)

மரு இலா வண்ண மலர் பெரியோர் இலாத சபை வையத்து இருந்து என் பயன் – குமரேச:23/7
கூடி சுகிப்பர் என் ஆசை உன் மேல் என்று கூசாமல் ஆணையிடுவார் – குமரேச:77/3
விமலனை வணங்காத சென்னி என் சென்னி பணிவிடை செயா கை என்ன கை – குமரேச:91/4
மேல்

என்பதை (1)

கருதும் ஒருசந்தியின் பாண்டம் என்பதை வரும் களவான நாய் அறியுமோ – குமரேச:56/4
மேல்

என்பர் (11)

தயையாக உண்ட பின் உலாவல் இவை மேலவர் சரீர சுகம் ஆம் என்பர் காண் – குமரேச:21/6
மன் புணரும் வேசையுடன் விபசரிக்கின்ற பதர் மனிதரில் பதர் என்பர் காண் – குமரேச:30/7
வல் இரவிலே தயிர்கள் சருகாதி உண்ணலால் வன் பிணிக்கு இடம் என்பர் காண் – குமரேச:32/7
வாரிய முற தூள் பெருக்கு தூள் மூதேவி மாறாது இருப்பள் என்பர்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:38/7,8
ஆன பெரியோர்களொடு சகவாசம் அது செயின் அவர்கள் குணம் வரும் என்பர் காண் – குமரேச:45/6
வீண் அல்ல இவை எலாம் கைப்பலனதாக அபிவிர்த்தியாய் வரும் என்பர் காண் – குமரேச:51/6
திரள் கொடுங்கோல் அரசர் கைக்கு ஏறு பொருளும் திரும்பி வாரா என்பர் காண் – குமரேச:53/6
நயம் இல்லை இளமை-தனில் வலிமை இலை முத்தி பெறும் ஞானம் இலை என்பர் கண்டாய் – குமரேச:67/6
பாங்காக இன்னவை பொருந்திட சொல் கவிதை பாடில் சிறப்பு என்பர் காண் – குமரேச:88/6
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும் அவர்க்கு நரகு என்பர் கண்டாய் – குமரேச:89/6
வீணருக்கே செய்த நன்றியும் பலன் இல்லை விருதா இது என்பர் கண்டாய் – குமரேச:95/6
மேல்

என்பார் (2)

விருதா மகத்துவ பேயது சவுக்கடி விழும் போது தீரும் என்பார்
மல் புயம்-தனில் நீப மாலை அணி லோலனே மார்பனே வடிவேலவா – குமரேச:43/6,7
பகர் முடிவிலே ரவுரவாதி நரகத்து அனுபவிப்பர் எப்போதும் என்பார்
வாரமுடன் அருணகிரிநாதருக்கு அனுபூதி வைத்து எழுதி அருள் குருபரா – குமரேச:64/6,7
மேல்

என்ற (1)

மனதார உனது அடைக்கலம் என்ற கீரற்கு வன் சிறை தவிர்த்த முருகா – குமரேச:68/7
மேல்

என்று (40)

மாரிக்கு நிகர் என்று பனி சொரிதல் போலவும் மனைக்கு நிகர் என்று சிறுபெண் – குமரேச:2/1
மாரிக்கு நிகர் என்று பனி சொரிதல் போலவும் மனைக்கு நிகர் என்று சிறுபெண் – குமரேச:2/1
பச்சை மயில் ஆடுதற்கு இணை என்று வான்கோழி பாரில் ஆடுதல் போலவும் – குமரேச:2/4
பூரிக்கும் இனிய காவேரிக்கு நிகர் என்று போது வாய்க்கால் போலவும் – குமரேச:2/5
அஞ்சல் என்று உற்ற துயர்தீர்த்துளோன் ஒரு பிதா அன்பு உள முனோன் ஒரு பிதா – குமரேச:8/4
காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதி ஆகும் – குமரேச:8/6
வாசவனும் உம்பரனை வரும் விசய சய என்று வந்து தொழுது ஏத்து சரணா – குமரேச:22/7
பிணியையும் அகற்றலாம் காலதூதுவரையும் பின்பு வருக என்று சொலலாம் – குமரேச:41/6
தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளி செய்வோர் குரங்கு – குமரேச:42/1
தன் பங்கு தா என்று சபை ஏறு தம்பியோ சார்ந்த சன்ம சூரியன் – குமரேச:44/4
காலங்களுக்கு உதவ வேண்டும் என்று அன்னியன் கையில் கொடுத்த பொருளும் – குமரேச:52/2
இல்லாளை நீங்கியே பிறர் பாரி சதம் என்று இருக்கின்ற குடி வாழ்க்கையும் – குமரேச:52/3
சுகியமாய் உண்டு என்று இருப்பது எல்லாம் தருண துரிதத்தில் உதவாது காண் – குமரேச:52/6
மணவாளன் நீ என்று குற வள்ளி பின்தொடர வனமூடு தழுவும் அழகா – குமரேச:56/7
பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம் புரட்டருக்கு ஏற்ற காலம் – குமரேச:59/3
செல்வம் மிகு கணவனே தெய்வம் என்று அனுதினம் சிந்தைசெய்பவள் மனைவியாம் – குமரேச:60/3
போற்றி இடு பூச்சியின் வாயின் நூல் பட்டு என்று பூசைக்கு நேசம் ஆகும் – குமரேச:61/3
தான் ஆசரித்து வரு தெய்வம் இது என்று பொய்ச்சத்தியம் செயின் விடாது – குமரேச:62/1
தன் வீட்டில் ஏற்றிய விளக்கு என்று முத்தம்-தனை கொடுத்தால் அது சுடும் – குமரேச:62/2
ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனது என்று அடாது செய்யில் கெடுதியாம் – குமரேச:62/3
தீனானது இனிது என்று மீதூண் விரும்பினால் தேக பீடைகளே தரும் – குமரேச:62/5
முனை வீமன் உடல் பாதி மிருகம் தனக்கு என்று முன் தருமர் சொன்னது அலவோ – குமரேச:63/6
பாரம் இவர் என்று புவி மங்கையும் நடுங்குவாள் பழித்த துர்மரணம் ஆவார் – குமரேச:64/5
நாகரிகம் உறு குயில் வசந்த காலத்திலே நலம் என்று உகந்து கூவும் – குமரேச:71/5
துணை கண்டு சேரிடம் அறிந்து சேர் என்று ஔவை சொன்ன கதை பொய் அல்லவே – குமரேச:72/6
பார் மீதில் இன்னும் வெகு நாள் இருப்போம் என்று பல் கோடி நினைவை எண்ணி – குமரேச:73/4
அர்ச்சித்து முத்திபெறல் வேண்டும் என்று எண்ணார்கள் ஆசை வலையில் சுழலுவார் – குமரேச:73/6
நகை செய்வர் மைத்துனர்கள் அலுவல் பார் போ என்று நாணாமல் மாமி சொல்வாள் – குமரேச:74/6
சடம் ஒன்று எடுத்தால் புவிக்கு நல்லவன் என்று தன் பேர் விளங்க வேண்டும் – குமரேச:76/1
சதிருடன் இது அல்லாது மெய்ஞ்ஞானி என்று அவதரிக்கவே வேண்டும் அல்லால் – குமரேச:76/2
கூடி சுகிப்பர் என் ஆசை உன் மேல் என்று கூசாமல் ஆணையிடுவார் – குமரேச:77/3
வேறு வகை இல்லை என்று உரையாது இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான் – குமரேச:81/6
தக்கோர் பொருள் சுவை நயங்கள் எங்கே என்று தாம் பார்த்து உகந்து கொள்வார் – குமரேச:85/5
தாழ்வான வன்கண்ணர் குற்றம் எங்கே என்று தமிழில் ஆராய்வர் கண்டாய் – குமரேச:85/6
தோலாமல் அவை எய்ய வேண்டும் என்று ஒரு கணை தொடுத்து வில் வாங்கி நிற்க – குமரேச:87/2
பத்தியொடு சிவசிவா என்று திருநீற்றை பரிந்து கையால் எடுத்தும் – குமரேச:90/1
குயில் முட்டை தனது என்று காக்கை அடைகாக்கும் குணம் போலும் ஈக்கள் எல்லாம் – குமரேச:94/1
பயில் சோரருக்கு பிறந்திட தாம் பெற்ற பாலன் என்று உட்கருதியே – குமரேச:94/3
தருணம் இது என்று நல் ஆபத்து வேளையில் சரணம்புகுந்தோரையும் – குமரேச:96/4
மருவு நீர் என உறுதல் இவை எலாம் மேலவர்-தம் மாண்பு என்று உரைப்பர் அன்றோ – குமரேச:101/6
மேல்

என்றும் (8)

புல்லனுக்கு என்றும் முசிதான் உசிதம் இல்லை வரு புலையற்கு இரக்கம் இல்லை – குமரேச:12/6
என்றும் ஒரு பொய் சொலா மன்னவன் விலைபோனது என்ன காண் வல்லமையினால் – குமரேச:46/5
வந்த விவகாரத்தில் இனிய பரிதானங்கள் வரும் என்றும் நேசர் என்றும் – குமரேச:63/1
வந்த விவகாரத்தில் இனிய பரிதானங்கள் வரும் என்றும் நேசர் என்றும்
வன் பகைஞர் என்றும் அயலோர் என்றும் மிக்க தனவான் என்றும் ஏழை என்றும் – குமரேச:63/1,2
வன் பகைஞர் என்றும் அயலோர் என்றும் மிக்க தனவான் என்றும் ஏழை என்றும் – குமரேச:63/2
வன் பகைஞர் என்றும் அயலோர் என்றும் மிக்க தனவான் என்றும் ஏழை என்றும் – குமரேச:63/2
வன் பகைஞர் என்றும் அயலோர் என்றும் மிக்க தனவான் என்றும் ஏழை என்றும் – குமரேச:63/2
வன் பகைஞர் என்றும் அயலோர் என்றும் மிக்க தனவான் என்றும் ஏழை என்றும்
இந்த வகையை குறித்து ஒரு பக்ஷபாதம் ஓர் எள்ளளவு உரைத்திடாமல் – குமரேச:63/2,3
மேல்

என்றே (3)

பல்லுயிர் எலாம் தன் உயிர்க்கு நிகர் என்றே பரித்தல் குற்றங்கள் களைதல் – குமரேச:5/4
சிநேகித்த உம்மை ஒரு பொழுது காணாவிடின் செல்லுறாது அன்னம் என்றே
கூடி சுகிப்பர் என் ஆசை உன் மேல் என்று கூசாமல் ஆணையிடுவார் – குமரேச:77/2,3
கூடியே தாம் உண்ண வேண்டும் என்றே தினம் கூடு உய்த்த நறவு போலும் – குமரேச:94/2
மேல்

என்றோர்க்கு (1)

தேகி என்றோர்க்கு இல்லை எனா வாக்ய பாலனம் செய்தவன் தான கன்னன் – குமரேச:47/4
மேல்

என்ன (47)

தருணத்தில் உதவி செய்யாத நட்பாளர் பின் தந்து என தராமல் என்ன
தராதரம் அறிந்து முறை செய்யாத மன்னரை சார்ந்து என்ன நீங்கில் என்ன – குமரேச:28/1,2
தராதரம் அறிந்து முறை செய்யாத மன்னரை சார்ந்து என்ன நீங்கில் என்ன – குமரேச:28/2
தராதரம் அறிந்து முறை செய்யாத மன்னரை சார்ந்து என்ன நீங்கில் என்ன
பெருமையுடன் ஆண்மை இல்லாத ஒரு பிள்ளையை பெற்று என பெறாமல் என்ன – குமரேச:28/2,3
பெருமையுடன் ஆண்மை இல்லாத ஒரு பிள்ளையை பெற்று என பெறாமல் என்ன
பிரியமாய் உள்ளன்பு இலாதவர்கள் நேசம் பிடித்து என விடுக்கில் என்ன – குமரேச:28/3,4
பிரியமாய் உள்ளன்பு இலாதவர்கள் நேசம் பிடித்து என விடுக்கில் என்ன
தெருளாக மானம் இல்லாத இரு சீவனம் செய்து என செயாமல் என்ன – குமரேச:28/4,5
தெருளாக மானம் இல்லாத இரு சீவனம் செய்து என செயாமல் என்ன
தேகி என வருபவர்க்கு ஈயாத செல்வம் சிறந்து என முறிந்தும் என்ன – குமரேச:28/5,6
தேகி என வருபவர்க்கு ஈயாத செல்வம் சிறந்து என முறிந்தும் என்ன
மருவு இளமை-தன்னில் இல்லாத கன்னிகை பின்பு வந்து என வராமல் என்ன – குமரேச:28/6,7
மருவு இளமை-தன்னில் இல்லாத கன்னிகை பின்பு வந்து என வராமல் என்ன
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:28/7,8
கடல் நீர் மிகுந்து என்ன ஒதிதான் பருத்து என்ன காட்டு இலவு மலரில் என்ன – குமரேச:29/1
கடல் நீர் மிகுந்து என்ன ஒதிதான் பருத்து என்ன காட்டு இலவு மலரில் என்ன – குமரேச:29/1
கடல் நீர் மிகுந்து என்ன ஒதிதான் பருத்து என்ன காட்டு இலவு மலரில் என்ன
கருவேல் பழுத்து என்ன நாய்ப்பால் சுரந்து என்ன கானில் மழை பெய்தும் என்ன – குமரேச:29/1,2
கருவேல் பழுத்து என்ன நாய்ப்பால் சுரந்து என்ன கானில் மழை பெய்தும் என்ன – குமரேச:29/2
கருவேல் பழுத்து என்ன நாய்ப்பால் சுரந்து என்ன கானில் மழை பெய்தும் என்ன – குமரேச:29/2
கருவேல் பழுத்து என்ன நாய்ப்பால் சுரந்து என்ன கானில் மழை பெய்தும் என்ன
அடர் கழுதை லத்தி நிலம் எல்லாம் குவிந்து என்ன அரிய குணம் இல்லாத பெண் – குமரேச:29/2,3
அடர் கழுதை லத்தி நிலம் எல்லாம் குவிந்து என்ன அரிய குணம் இல்லாத பெண் – குமரேச:29/3
அழகாய் இருந்து என்ன ஆஸ்தான கோழை பல அரிய நூல் ஓதி என்ன – குமரேச:29/4
அழகாய் இருந்து என்ன ஆஸ்தான கோழை பல அரிய நூல் ஓதி என்ன
திடம் இனிய பூதம் வெகு பொன் காத்து இருந்து என்ன திறல் மிகும் கரடிமயிர்தான் – குமரேச:29/4,5
திடம் இனிய பூதம் வெகு பொன் காத்து இருந்து என்ன திறல் மிகும் கரடிமயிர்தான் – குமரேச:29/5
செறிவாகி நீண்டு என்ன வஸ்த்ர பூஷணம் எலாம் சித்திரத்து உற்றும் என்ன – குமரேச:29/6
செறிவாகி நீண்டு என்ன வஸ்த்ர பூஷணம் எலாம் சித்திரத்து உற்றும் என்ன
மடம் மிகுந்து எவருக்கும் உபகாரம் இல்லாத வம்பர் வாழ்வுக்கு நிகராம் – குமரேச:29/6,7
அன்று முடிசூடுவது இருக்க ரகுராமன் முன் அரும் காடு அடைந்தது என்ன
அண்டர் எல்லாம் அமிர்தம் உண்டிட பரமனுக்கு ஆலம் லபித்தது என்ன – குமரேச:46/1,2
அண்டர் எல்லாம் அமிர்தம் உண்டிட பரமனுக்கு ஆலம் லபித்தது என்ன
வென்றி வரு தேவர் சிறை மீட்ட நீ களவில் வேடிச்சியை சேர்ந்தது என்ன – குமரேச:46/2,3
வென்றி வரு தேவர் சிறை மீட்ட நீ களவில் வேடிச்சியை சேர்ந்தது என்ன
மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி வெம் சிறையில் உற்றது என்ன – குமரேச:46/3,4
மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி வெம் சிறையில் உற்றது என்ன
என்றும் ஒரு பொய் சொலா மன்னவன் விலைபோனது என்ன காண் வல்லமையினால் – குமரேச:46/4,5
என்றும் ஒரு பொய் சொலா மன்னவன் விலைபோனது என்ன காண் வல்லமையினால் – குமரேச:46/5
மடுவினில் கரி ஓலம் என்ன வந்து அருள்செய்த மால் மருகன் ஆன முதல்வா – குமரேச:54/7
கதிரவன் உதிப்பது எங்கே நளினம் எங்கே களித்து உளம் மலர்ந்தது என்ன
கார் மேகம் எங்கே பசும் தோகை எங்கே கருத்தில் நட்பானது என்ன – குமரேச:70/1,2
கார் மேகம் எங்கே பசும் தோகை எங்கே கருத்தில் நட்பானது என்ன
மதியம் எங்கே பெரும் குமுதம் எங்கே முகம் மலர்ந்து மகிழ் கொண்டது என்ன – குமரேச:70/2,3
மதியம் எங்கே பெரும் குமுதம் எங்கே முகம் மலர்ந்து மகிழ் கொண்டது என்ன
வல் இரவு விடிவது எங்கே கோழி எங்கே மகிழ்ந்து கூவிடுதல் என்ன – குமரேச:70/3,4
வல் இரவு விடிவது எங்கே கோழி எங்கே மகிழ்ந்து கூவிடுதல் என்ன
நிதி அரசர் எங்கே இருந்தாலும் அவர்களொடு நேசம் ஒன்றாய் இருக்கும் – குமரேச:70/4,5
துரைகளை பெரியோரை அண்டி வாழ்வோர்-தமை துஷ்டர் பகை என்ன செய்யும் – குமரேச:72/5
சேனை மன்னவர் என்ன கருமம் நியமிக்கினும் சிறியோர்களால் குறைபடும் – குமரேச:80/5
தேவாலயம் சுற்றிடாத கால் என்ன கால் தெரிசியா கண் என்ன கண் – குமரேச:91/1
தேவாலயம் சுற்றிடாத கால் என்ன கால் தெரிசியா கண் என்ன கண் – குமரேச:91/1
தினமுமே நின் கமல பாதத்தை நினையாத சிந்தைதான் என்ன சிந்தை – குமரேச:91/2
மேவு ஆகமம் சிவபுராணம் அவை கேளாமல் விட்ட செவி என்ன செவிகள் – குமரேச:91/3
விமலனை வணங்காத சென்னி என் சென்னி பணிவிடை செயா கை என்ன கை – குமரேச:91/4
நாவார நினை ஏத்திடாத வாய் என்ன வாய் நல் தீர்த்தம் மூழ்கா உடல் – குமரேச:91/5
நானிலத்து என்ன உடல் பாவியாகிய சனனம் நண்ணினால் பலன் ஏது காண் – குமரேச:91/6
கோகனக_மங்கையுடன் மூத்தவள் பிறந்து என்ன குலவும் ஆட்டின்-கண் அதர்தான் – குமரேச:92/1
கூட பிறந்து என்ன தண்ணீரினுடனே கொடும் பாசி உற்றும் என்ன – குமரேச:92/2
கூட பிறந்து என்ன தண்ணீரினுடனே கொடும் பாசி உற்றும் என்ன
மாகர் உணும் அமுதினொடு நஞ்சம் பிறந்து என்ன வல் இரும்பில் துருத்தான் – குமரேச:92/2,3
மாகர் உணும் அமுதினொடு நஞ்சம் பிறந்து என்ன வல் இரும்பில் துருத்தான் – குமரேச:92/3
வந்தே பிறந்து என்ன நெடு மரம்-தனில் மொக்குள் வளமொடு பிறந்து என்ன உண் – குமரேச:92/4
வந்தே பிறந்து என்ன நெடு மரம்-தனில் மொக்குள் வளமொடு பிறந்து என்ன உண் – குமரேச:92/4
பாகம் மிகு செந்நெலொடு பதர்தான் பிறந்து என்ன பன்னும் ஒரு தாய் வயிற்றில் – குமரேச:92/5
பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்து என்ன பலன் ஏதும் இல்லை அன்றோ – குமரேச:92/6
மேல்

என்னல் (1)

சடுதியில் பக்குவம் சொல்லும் கொடைக்கு இங்கு சற்றும் இலை என்னல் நன்று – குமரேச:54/5
மேல்

என்னலாம் (2)

தன்னை மிஞ்சி சொன்ன வார்த்தை கேளா அடிமை சந்திராஷ்டகம் என்னலாம்
தன் பங்கு தா என்று சபை ஏறு தம்பியோ சார்ந்த சன்ம சூரியன் – குமரேச:44/3,4
சஞ்சலம் வராது பரகதி உதவும் இவரையே சத்தியும் சிவனும் என்னலாம்
மத்து இனிய மேரு என வைத்து அமுதினை கடையும் மால் மருகன் ஆன முருகா – குமரேச:90/6,7
மேல்

என்னவே (1)

திடம் இனிய ரண சூர வீரன் இவன் என்னவே திசை மெச்ச வேண்டும் அல்லால் – குமரேச:76/3
மேல்

என்னாம் (6)

பாலினொடு தேன் வந்து சேரில் ருசி அதிகமாம் பருகு நீர் சேரின் என்னாம்
பவளத்தினிடை முத்தை வைத்திடில் சோபிதம் படிக மணி கோக்கின் என்னாம் – குமரேச:100/1,2
பவளத்தினிடை முத்தை வைத்திடில் சோபிதம் படிக மணி கோக்கின் என்னாம்
மேல் இனிய மன்னர்-பால் யானை சேர்வது கனதை மேடமது சேரின் என்னாம் – குமரேச:100/2,3
மேல் இனிய மன்னர்-பால் யானை சேர்வது கனதை மேடமது சேரின் என்னாம்
மிக்கான தங்கத்தில் நவமணி உறின் பெருமை வெண்கல் அழுத்தின் என்னாம் – குமரேச:100/3,4
மிக்கான தங்கத்தில் நவமணி உறின் பெருமை வெண்கல் அழுத்தின் என்னாம்
வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின் நலம் வளை கிழவர் சேரின் என்னாம் – குமரேச:100/4,5
வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின் நலம் வளை கிழவர் சேரின் என்னாம்
மருவு நல்லோரிடம் பெரியோர் வரின் பிரியம் வரு கயவர் சேரின் என்னாம் – குமரேச:100/5,6
மருவு நல்லோரிடம் பெரியோர் வரின் பிரியம் வரு கயவர் சேரின் என்னாம்
மாலிகை தரித்த மணி மார்பனே தெய்வானை வள்ளிக்கு வாய்த்த கணவா – குமரேச:100/6,7
மேல்

என்னாமலே (1)

தேகி என வருபவர்க்கு இல்லை என்னாமலே செய்யவே வேண்டும் அல்லால் – குமரேச:76/4
மேல்

என்னில் (1)

கதம் மிகு கடா என்னில் உழுது புவி காக்கும் வன் கழுதையும் பொதி சுமக்கும் – குமரேச:35/3
மேல்

என (27)

மவுலி-தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா – குமரேச:8/7
வர நதியின் மதலை என இனிய சரவணம் மிசையில் வரு தருண சிறு குழவியே – குமரேச:24/7
தருணத்தில் உதவி செய்யாத நட்பாளர் பின் தந்து என தராமல் என்ன – குமரேச:28/1
பெருமையுடன் ஆண்மை இல்லாத ஒரு பிள்ளையை பெற்று என பெறாமல் என்ன – குமரேச:28/3
பிரியமாய் உள்ளன்பு இலாதவர்கள் நேசம் பிடித்து என விடுக்கில் என்ன – குமரேச:28/4
தெருளாக மானம் இல்லாத இரு சீவனம் செய்து என செயாமல் என்ன – குமரேச:28/5
தேகி என வருபவர்க்கு ஈயாத செல்வம் சிறந்து என முறிந்தும் என்ன – குமரேச:28/6
தேகி என வருபவர்க்கு ஈயாத செல்வம் சிறந்து என முறிந்தும் என்ன – குமரேச:28/6
மருவு இளமை-தன்னில் இல்லாத கன்னிகை பின்பு வந்து என வராமல் என்ன – குமரேச:28/7
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என மிகு செட்டி சொன்ன கதை போல் – குமரேச:36/6
பிணமதை எழுப்பலாம் அக்கினி சுடாமல் பெரும் புனல் என செய்யலாம் – குமரேச:41/5
முன் பக்ஷம் ஆன பேர் வருகினும் வாரும் என மொழியவும் வாய் வராது – குமரேச:43/3
செகராசர் சூனு என ஏலாத காரியம் செய்தால் மனம் பொறார் காண் – குமரேச:62/6
மைந்தன் என அன்று உமை முலைப்பால் கொடுத்திட வளர்ந்து அருள் குழந்தை வடிவே – குமரேச:63/7
வாரிச மடந்தை குடிகொண்ட நெடுமாலுக்கு மருகன் என வந்த முருகா – குமரேச:66/7
வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் – குமரேச:69/7
பனியதனை நம்பியே ஏர் பூட்டு கதை என பாழான உடலை நம்பி – குமரேச:73/3
தேகி என வருபவர்க்கு இல்லை என்னாமலே செய்யவே வேண்டும் அல்லால் – குமரேச:76/4
மற்றும் ஒரு துணை இல்லை நீ துணை என பரவும் வானவர்கள் சிறை மீட்டவா – குமரேச:84/7
மழு தினம் செங்கை-தனில் வைத்த கங்காளன் அருள் மைந்தன் என வந்த முருகா – குமரேச:88/7
மத்து இனிய மேரு என வைத்து அமுதினை கடையும் மால் மருகன் ஆன முருகா – குமரேச:90/7
மா கனக மேருவை சிலை என வளைத்த சிவன் மைந்தன் என வந்த முருகா – குமரேச:92/7
மா கனக மேருவை சிலை என வளைத்த சிவன் மைந்தன் என வந்த முருகா – குமரேச:92/7
உளவன் இல்லாமல் ஊர் அழியாது என சொலும் உலகமொழி நிசம் அல்லவோ – குமரேச:93/6
அஞ்சல் என நாயின் உடல் தருமன் சுமந்து முன் ஆற்றை கடத்துவித்தான் – குமரேச:99/1
தஞ்சம் என வந்திடு புறாவுக்கு முன் சிபி சரீரம்-தனை கொடுத்தான் – குமரேச:99/3
மருவு நீர் என உறுதல் இவை எலாம் மேலவர்-தம் மாண்பு என்று உரைப்பர் அன்றோ – குமரேச:101/6
மேல்

எனலாம் (2)

அகம் இன்றி மெய் உணர்ந்து ஐம்புலன் ஒழித்துவிட்டவனே மெய்ஞ்ஞானி எனலாம்
மாயவர் சகோதரி மனோன்மணிக்கு அன்பான வரபுத்ர வடிவேலவா – குமரேச:13/6,7
நாள்-தொறும் விரோதமிடு கொண்டோன் கொடுத்துளோன் ராகு கேதுக்கள் எனலாம்
மன் அயனை அன்று சிறை-தனில் இட்டு நம்பற்கு மந்திரம் உரைத்த குருவே – குமரேச:44/6,7
மேல்

எனா (1)

தேகி என்றோர்க்கு இல்லை எனா வாக்ய பாலனம் செய்தவன் தான கன்னன் – குமரேச:47/4
மேல்

எனில் (1)

கல் எனில் தேவர்களும் ஆலயமும் ஆம் பெரும் கான் புற்று அரவ மனை ஆம் – குமரேச:35/4
மேல்

எனும் (3)

விவேகி எனும் நல்லோரிடத்தில் உறு செல்வமும் வெகுசனர்க்கு உபகாரமாம் – குமரேச:18/6
வாகு அனைய காலை கல் மாலை புல் எனும் உலக வாடிக்கை நிசம் அல்லவோ – குமரேச:71/7
அடைக்கலம் எனும் கயற்காக நெடுமாலுடன் அருச்சுனன் சமர்புரிந்தான் – குமரேச:99/2
மேல்

எனும்படி (1)

தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிட கூடுமோ – குமரேச:66/6
மேல்