வே – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


வேகவதி (1)

விரை பொங்கிட துங்க வேகவதி பொங்கு புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 84/4

மேல்

வேட்டு (1)

எரி மணி குயின்ற பொன் செய் குன்று மழ கதிர் எறிப்ப எழு செம் சோதியூடு இளமதி இமைப்பது உன் திருமுக செவ்வி வேட்டு எழுநாத்-தலை தவம் அவன் – மீனாட்சிபிள்ளை:10 95/3

மேல்

வேண்டும் (1)

வெறி குங்கும சேறு எக்கரிடும் விரை பூம் துறை மண் பெறின் ஒருத்தி வெண் பிட்டு இடவும் அடித்து ஒருவன் வேலை கொளவும் வேண்டும் என – மீனாட்சிபிள்ளை:9 90/2

மேல்

வேணியர் (1)

தார் கோல வேணியர் தம் உள்ளம் எனவே பொன் தடம் சிலையும் உருகி ஓட தண் மதி முடித்ததும் வெள் விடைக்கு ஒள் மணி தரித்ததும் விருத்தமாக – மீனாட்சிபிள்ளை:10 98/2

மேல்

வேத (1)

ஏடகத்து எழுதாத வேத சிரத்து அரசு இருக்கும் இவள் சீறடிகள் நின் இதய தடத்தும் பொலிந்தவா திருவுளத்து எண்ணி அன்றே கபடமா – மீனாட்சிபிள்ளை:7 72/1

மேல்

வேதண்ட (1)

கோள வட்டம் பழைய நேமி வட்டத்தினொடு குப்புற்று வெற்பு எட்டும் ஏழ் குட்டத்தினில் கவிழ மூது அண்ட வேதண்ட கோதண்டமோடு சக்ரவாள – மீனாட்சிபிள்ளை:4 33/2

மேல்

வேய் (1)

பைத்த சுடிகை பட பாயல் பதுமநாபன் மார்பில் வளர் பரிதி மணியும் எமக்கு அம்மை பணியல் வாழி வேய் ஈன்ற – மீனாட்சிபிள்ளை:5 46/3

மேல்

வேர் (1)

அம் கண் நெடு நிலம் விடர்பட கிழித்து ஓடு வேர் அடியில் பழுத்த பலவின் அளி பொன் சுளை குட கனி உடைந்து ஊற்று தேன் அருவி பிலம் ஏழும் முட்டி – மீனாட்சிபிள்ளை:10 96/3

மேல்

வேல் (3)

சுழியும் கரும் கண் குண்டு அகழி சுவற்றும் சுடர் வேல் கிரி திரித்த தோன்றற்கு அளித்து சுறவு உயர்த்த சொக்கப்பெருமான் செக்கர் முடி – மீனாட்சிபிள்ளை:1 7/1
வடிபட்ட மு குடுமி வடி வேல் திரித்திட்டு வளை கரும் கோட்டு மோட்டு மகிடம் கவிழ்த்து கடாம் கவிழ்க்கும் சிறு கண் மால் யானை வீங்க வாங்கும் – மீனாட்சிபிள்ளை:1 10/1
ஏறு பொரு வேல் இளைஞர் கடவு இவுளி கடைவாய் குதட்ட வழிந்து இழியும் விலாழி குமிழி எறிந்து இரைத்து திரைத்து நுரைத்து ஒரு பேர் – மீனாட்சிபிள்ளை:3 26/3

மேல்

வேலினை (1)

கட களிறு உதவு கபாய் மிசை போர்த்தவள் கவி குவி துறுகலின் வாரியை தூர்த்தவள் கடல் வயிறு எரிய ஒள் வேலினை பார்த்தவள் கடி கமழ் தரு மலர் தார் முடி சேர்த்தவள் – மீனாட்சிபிள்ளை:1 11/1

மேல்

வேலை (3)

பொங்கு ஓல வேலை புறத்தினொடு அகத்தின் நிமிர் போர் ஆழி பரிதி இரத பொங்கு ஆழி மற்ற பொருப்பு ஆழியில் திரி புலம்பை புலம்புசெய்ய – மீனாட்சிபிள்ளை:5 50/3
விழியும் சிவப்ப ஆனந்த வெள்ளம் பொழிந்து நின்றனையால் மீண்டும் பெருக விடுத்து அவற்கு ஓர் வேலை இடுதல் மிகை அன்றே – மீனாட்சிபிள்ளை:9 89/2
வெறி குங்கும சேறு எக்கரிடும் விரை பூம் துறை மண் பெறின் ஒருத்தி வெண் பிட்டு இடவும் அடித்து ஒருவன் வேலை கொளவும் வேண்டும் என – மீனாட்சிபிள்ளை:9 90/2

மேல்

வேழ (1)

வெம் கண் கடும் கொலைய வேழ குழாம் இது என மேக குழாத்தை முட்டி விளையாடு மழ களிறு கடைவாய் குதட்ட முகை விண்ட அம்பு ஐந்து கோத்த – மீனாட்சிபிள்ளை:8 74/3

மேல்

வேழத்தின் (1)

மீன் ஒழுகு மா இரு விசும்பில் செலும் கடவுள் வேழத்தின் மத்தகத்து வீற்றிருக்கும் சேயிழைக்கும் பசும் கமுகு வெண் கவரி வீசும் வாச – மீனாட்சிபிள்ளை:6 57/3

மேல்

வேழம் (1)

தேங்கு மலை அருவி நெடு நீத்தத்து மாசுண திரள் புறம் சுற்றி ஈர்ப்ப சின வேழம் ஒன்று ஒரு சுழி சுழலல் மந்தரம் திரை கடல் மதித்தல் மானும் – மீனாட்சிபிள்ளை:9 86/3

மேல்

வேள் (1)

வண்டு படு முண்டக மனை குடிபுக சிவ மணம் கமழ விண்ட தொண்டர் மானத தட மலர் பொன் கோயில் குடிகொண்ட மாணிக்கவல்லி வில் வேள்
துண்டுபடு மதி நுதல் தோகையொடும் அளவில் பல தொல் உரு எடுத்து அமர்செயும் தொடு சிலை என ககன முகடு முட்டி பூம் துணர் தலை வணங்கி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:6 54/2,3

மேல்