கி – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிஞ்சுக 1
கிடக்கும் 1
கிடத்தி 1
கிடந்த 2
கிடந்ததும் 1
கிடைத்தனை 1
கிடையாத 1
கிண்கிண் 1
கிண்கிணி 2
கிண்கிணியும் 1
கிம்புரி 2
கிரண 1
கிரி 1
கிரியின் 1
கிரீவம் 1
கிழங்கை 1
கிழித்து 2
கிழிதர 1
கிழிந்து 1
கிழிய 1
கிழியும் 1
கிள்ளை 3
கிள்ளைக்கு 1
கிள்ளையாய் 1
கிள்ளையும் 1
கிள்ளையை 1
கிளர் 3
கிளர்ந்து 1
கிளவியும் 1
கிளி 7
கிளியும் 1
கிளியே 2
கிளை 1
கிளைத்த 1
கிளைத்து 1

கிஞ்சுக (1)

கிள்ளைக்கு மழலை பசும் குதலை ஒழுகு தீம் கிளவியும் களி மயிற்கு கிளர் இளம் சாயலும் நவ்விக்கு நோக்கும் விரி கிஞ்சுக சூட்டு அரசு அன – மீனாட்சிபிள்ளை:1 9/3

மேல்

கிடக்கும் (1)

செம் கயல் கிடக்கும் கரும் கண் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 16/4

மேல்

கிடத்தி (1)

கோல் ஆட்டு நின் சிறு கணைக்கால் கிடத்தி குளிப்பாட்டி உச்சி முச்சி குஞ்சிக்கு நெய் போற்றி வெண்காப்பும் இட்டு வளர் கொங்கையில் சங்கு வார்க்கும் – மீனாட்சிபிள்ளை:4 37/2

மேல்

கிடந்த (2)

நாகத்து மீ சுடிகை நடுவண் கிடந்த மட நங்கையை பெற்று மற்று அ நாகணை துஞ்சு தன் தந்தைக்கு உவந்து உதவு நளின குழந்தை காக்க – மீனாட்சிபிள்ளை:1 6/2
சங்கு கிடந்த தடம் கை நெடும் புயல் தங்காய் பங்காய் ஓர் தமனிய மலை படர் கொடி என வடிவு தழைந்தாய் எந்தாய் என்று – மீனாட்சிபிள்ளை:2 22/1

மேல்

கிடந்ததும் (1)

கீற்று மதி என நிலவு தோற்று பருவத்தில் ஒளி கிளர் நுதல் செவ்வி வவ்வி கெண்டை தடம் கணார் எரு இட்டு இறைஞ்ச கிடந்ததும் உடைந்து அமுதம் விண்டு – மீனாட்சிபிள்ளை:7 65/1

மேல்

கிடைத்தனை (1)

வெண் நிலவு பொழிவது கிடைத்தனை மடுத்து இவள் விழிக்கடை கொழித்த கருணை வெள்ளம் திளைத்து ஆடு பெற்றியால் தண் அளி விளைப்பதும் பெற்றனை-கொலாம் – மீனாட்சிபிள்ளை:7 67/2

மேல்

கிடையாத (1)

கிளை ஆடு நின் திரு கேசபாரத்தினொடு கிளர் சைவல கொத்து எழ கிடையாத புது விருந்து எதிர்கொண்டு தத்தம் இல் கேளிர்கள் தழீஇக்கொண்டு என – மீனாட்சிபிள்ளை:9 83/2

மேல்

கிண்கிண் (1)

இகல் விழி மகரமும் அ மகரம் பொரும் இரு மகரமும் ஆட இடு நூபுர அடி பெயர கிண்கிண் எனும் கிண்கிணி ஆட – மீனாட்சிபிள்ளை:2 18/2

மேல்

கிண்கிணி (2)

இகல் விழி மகரமும் அ மகரம் பொரும் இரு மகரமும் ஆட இடு நூபுர அடி பெயர கிண்கிண் எனும் கிண்கிணி ஆட – மீனாட்சிபிள்ளை:2 18/2
அம் சிலம்பு ஓலிட அரி குரல் கிண்கிணி அரற்று செம் சீறடி பெயர்த்து அடியிடும்-தொறும் நின் அலத்தக சுவடு பட்டு அம்புவி அரம்பையர்கள்-தம் – மீனாட்சிபிள்ளை:6 53/1

மேல்

கிண்கிணியும் (1)

இரு பதமும் மென் குரல் கிண்கிணியும் முறையிட்டு இரைத்திடும் அரி சிலம்பும் இறும் இறும் மருங்கு என்று இரங்குமே கலையும் பொன் எழுது செம்பட்டு வீக்கும் – மீனாட்சிபிள்ளை:10 102/1

மேல்

கிம்புரி (2)

அடிபட்ட திருமேனி குழைய குழைத்திட்ட அணி மணி கிம்புரி கோடு ஆகத்தது ஆக கடம்பாடவிக்குள் விளையாடும் ஒர் மட பிடியையே – மீனாட்சிபிள்ளை:1 10/4
வடம் பட்ட நின் துணை கொங்கை குடம் கொட்டு மதுர அமுது உண்டு கடைவாய் வழியும் வெள் அருவி என நிலவு பொழி கிம்புரி மருப்பில் பொருப்பு இடித்து – மீனாட்சிபிள்ளை:6 56/1

மேல்

கிரண (1)

அள்ளிட வழிந்து செற்று ஒளி துளும்பும் கிரண அருண ரத்ன பலகை புக்கு ஆடும் நின் தோற்றம் அ பரிதி மண்டலம் வளர் அரும் பெரும் சுடரை ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:10 93/2

மேல்

கிரி (1)

சுழியும் கரும் கண் குண்டு அகழி சுவற்றும் சுடர் வேல் கிரி திரித்த தோன்றற்கு அளித்து சுறவு உயர்த்த சொக்கப்பெருமான் செக்கர் முடி – மீனாட்சிபிள்ளை:1 7/1

மேல்

கிரியின் (1)

நின்றிலன் ஓடலும் முன்னழகும் அவன் பின்னழகும் காணா நிலவு விரிந்திடு குறுநகை கொண்டு நெடும் கயிலை கிரியின்
முன்றிலின் ஆடல் மறந்து அமராடி ஒர் மூரி சிலை குனியா முரி புருவ சிலை கடை குனிய சில முளரி கணை தொட்டு – மீனாட்சிபிள்ளை:4 40/2,3

மேல்

கிரீவம் (1)

அமுது செய்வித்திட்ட போனகத்தால் சுடர் அடரும் இருட்டு கிரீவம் மட்டு ஆக்கிய அழகிய சொக்கற்கு மால்செய தோட்டு இகல் அமர்செய் கயல் கண் குமாரியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 5/4

மேல்

கிழங்கை (1)

தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறை பழுத்த துறை தீம் தமிழின் ஒழுகு நறும் சுவையே அகந்தை கிழங்கை அகழ்ந்து – மீனாட்சிபிள்ளை:6 61/1

மேல்

கிழித்து (2)

பை வைத்த துத்தி பரூஉ சுடிகை முன்றில் பசும் கொடி உடுக்கை கிழிய பாய் இருள் படலம் கிழித்து எழு சுடர் பரிதி பரிதி கொடிஞ்சி மான் தேர் – மீனாட்சிபிள்ளை:5 48/1
அம் கண் நெடு நிலம் விடர்பட கிழித்து ஓடு வேர் அடியில் பழுத்த பலவின் அளி பொன் சுளை குட கனி உடைந்து ஊற்று தேன் அருவி பிலம் ஏழும் முட்டி – மீனாட்சிபிள்ளை:10 96/3

மேல்

கிழிதர (1)

புதை இருள் கிழிதர எழுதரு பரிதி வளைத்த கடல் புவியில் பொது அற அடிமைசெய்திடு வழி அடியர் பொருட்டு அலர் வட்டணையில் – மீனாட்சிபிள்ளை:5 52/1

மேல்

கிழிந்து (1)

விண் அறா மதி முயல் கலை கிழிந்து இழி அமுத வெள் அருவி பாய வெடிபோய் மீளும் தகட்டு அகட்டு இளவாளை மோத முகை விண்டு ஒழுகும் முண்டக பூம் – மீனாட்சிபிள்ளை:2 17/3

மேல்

கிழிய (1)

பை வைத்த துத்தி பரூஉ சுடிகை முன்றில் பசும் கொடி உடுக்கை கிழிய பாய் இருள் படலம் கிழித்து எழு சுடர் பரிதி பரிதி கொடிஞ்சி மான் தேர் – மீனாட்சிபிள்ளை:5 48/1

மேல்

கிழியும் (1)

கிழியும் கலை திங்கள் அமுது அருவி தூங்குவ கிளைத்த வண்டு உழு பைம் துழாய் கேசவன் கால் வீச அண்ட கோளகை முகடு கீண்டு வெள் அருவி பொங்கி – மீனாட்சிபிள்ளை:10 99/3

மேல்

கிள்ளை (3)

தே மரு பசும் கிள்ளை வைத்து முத்தாடியும் திரள் பொன் கழங்கு ஆடியும் செயற்கையான் அன்றியும் இயற்கை சிவப்பு ஊறு சே இதழ் விரிந்த தெய்வ – மீனாட்சிபிள்ளை:4 35/3
புரிவது கடுக்கும் மதுராபுரி மட கிள்ளை பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 95/4
போர்க்கின்றது ஒக்கும் மதுராபுரி மட கிள்ளை பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 97/4

மேல்

கிள்ளைக்கு (1)

கிள்ளைக்கு மழலை பசும் குதலை ஒழுகு தீம் கிளவியும் களி மயிற்கு கிளர் இளம் சாயலும் நவ்விக்கு நோக்கும் விரி கிஞ்சுக சூட்டு அரசு அன – மீனாட்சிபிள்ளை:1 9/3

மேல்

கிள்ளையாய் (1)

தென் செய்த மழலை சுரும்பராய் மங்கை நின் செம் கை பசும் கிள்ளையாய் தேவதேவன் பொலிவதும் எவ் உருவுமாம் அவன் திருவுருவின் முறை தெரிப்ப – மீனாட்சிபிள்ளை:10 101/2

மேல்

கிள்ளையும் (1)

திரு இடையும் உடைதாரமும் ஒட்டியாணமும் செம் கை பசும் கிள்ளையும் திரு முலை தரள உத்தரியமும் மங்கல திருநாணும் அழகு ஒழுக நின்று – மீனாட்சிபிள்ளை:10 102/2

மேல்

கிள்ளையை (1)

மகரம் எறி கடல் அமுதை அமுது உகு மழலை பழகிய கிள்ளையை பேட்டு அனம் மடவ நடை பயில் பிடியை விரை செறி வரை செய் புய மிசை வையம் வைத்து ஆற்றிய – மீனாட்சிபிள்ளை:1 3/7

மேல்

கிளர் (3)

கிள்ளைக்கு மழலை பசும் குதலை ஒழுகு தீம் கிளவியும் களி மயிற்கு கிளர் இளம் சாயலும் நவ்விக்கு நோக்கும் விரி கிஞ்சுக சூட்டு அரசு அன – மீனாட்சிபிள்ளை:1 9/3
கீற்று மதி என நிலவு தோற்று பருவத்தில் ஒளி கிளர் நுதல் செவ்வி வவ்வி கெண்டை தடம் கணார் எரு இட்டு இறைஞ்ச கிடந்ததும் உடைந்து அமுதம் விண்டு – மீனாட்சிபிள்ளை:7 65/1
கிளை ஆடு நின் திரு கேசபாரத்தினொடு கிளர் சைவல கொத்து எழ கிடையாத புது விருந்து எதிர்கொண்டு தத்தம் இல் கேளிர்கள் தழீஇக்கொண்டு என – மீனாட்சிபிள்ளை:9 83/2

மேல்

கிளர்ந்து (1)

தார் கொண்ட மதி முடி ஒருத்தன் திருக்கண் மலர் சாத்த கிளர்ந்து பொங்கி தவழும் இளவெயிலும் மழ நிலவும் அளவளவலால் தண்ணென்று வெச்சென்று பொன் – மீனாட்சிபிள்ளை:0 1/3

மேல்

கிளவியும் (1)

கிள்ளைக்கு மழலை பசும் குதலை ஒழுகு தீம் கிளவியும் களி மயிற்கு கிளர் இளம் சாயலும் நவ்விக்கு நோக்கும் விரி கிஞ்சுக சூட்டு அரசு அன – மீனாட்சிபிள்ளை:1 9/3

மேல்

கிளி (7)

மதுரை பதி தழைய தழையும் கொடி தாலோ தாலேலோ மலயத்துவசன் வளர்த்த பசும் கிளி தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 31/4
மகர துவசம் உயர்த்த பொலன் கொடி தாலோ தாலேலோ மலயத்துவசன் வளர்த்த பசும் கிளி தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 32/4
மழலையின் அமுது உகு சொல் கிளி கொட்டுக சப்பாணி மதுரையில் வளரும் மட பிடி கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 42/4
கொழுதி மதர் வண்டு உழக்கு குழல் கோதைக்கு உடைந்த கொண்டலும் நின் குதலை கிளி மென் மொழிக்கு உடைந்த குறும் கண் கரும்பும் கூன் பிறை கோடு – மீனாட்சிபிள்ளை:5 45/1
முரசு அதிர் கடி நகர் மதுரையில் வளர் கிளி முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே – மீனாட்சிபிள்ளை:5 51/4
கண்டு படு குதலை பசும் கிளி இவட்கு ஒரு கலாபேதம் என்ன நின்னை கலை மறைகள் முறையிடுவ கண்டோ அலாது ஒண் கலாநிதி என தெரிந்தோ – மீனாட்சிபிள்ளை:7 63/1
பண் நாறு கிளி மொழி பாவை நின் திருமேனி பாசொளி விரிப்ப அம் தண் பவள கொடி காமர் பச்சிளம் கொடியதாய் பரு முத்தம் மரகதமதாய் – மீனாட்சிபிள்ளை:9 85/1

மேல்

கிளியும் (1)

கள் அவிழ் கோதை விசும்புற வீசுவ கண்_நுதல்-பால் செல நின் கையில் வளர்த்த பசும் கிளியும் வளர் காமர் கரும் குயிலும் – மீனாட்சிபிள்ளை:8 82/2

மேல்

கிளியே (2)

சோலை கிளியே உயிர் துணையாம் தோன்றாத்துணைக்கு ஓர் துணையாகி துவாதசாந்த பெருவெளியில் துரியம் கடந்த பரநாத – மீனாட்சிபிள்ளை:5 43/3
மருந்தே வருக பசுங்குதலை மழலை கிளியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே – மீனாட்சிபிள்ளை:6 62/4

மேல்

கிளை (1)

கிளை ஆடு நின் திரு கேசபாரத்தினொடு கிளர் சைவல கொத்து எழ கிடையாத புது விருந்து எதிர்கொண்டு தத்தம் இல் கேளிர்கள் தழீஇக்கொண்டு என – மீனாட்சிபிள்ளை:9 83/2

மேல்

கிளைத்த (1)

கிழியும் கலை திங்கள் அமுது அருவி தூங்குவ கிளைத்த வண்டு உழு பைம் துழாய் கேசவன் கால் வீச அண்ட கோளகை முகடு கீண்டு வெள் அருவி பொங்கி – மீனாட்சிபிள்ளை:10 99/3

மேல்

கிளைத்து (1)

பாகத்து மரகத குன்று ஒன்று ஒர் தமனிய குன்றொடு கிளைத்து நின்ற பவள தடம் குன்று உளக்-கண்ணது என்று அ பரஞ்சுடர் முடிக்கு முடி மூன்று – மீனாட்சிபிள்ளை:1 6/3

மேல்