சோ – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோதி 1
சோதியூடு 1
சோர்தரு 1
சோலை 1
சோனை 1

சோதி (1)

கருணையின் முழுகிய கயல் திரி பசிய கரும்பே வெண் சோதி கலை மதி மரபில் ஒர் இளமயில் என வளர் கன்றே என்று ஓதும் – மீனாட்சிபிள்ளை:2 21/3

மேல்

சோதியூடு (1)

எரி மணி குயின்ற பொன் செய் குன்று மழ கதிர் எறிப்ப எழு செம் சோதியூடு இளமதி இமைப்பது உன் திருமுக செவ்வி வேட்டு எழுநாத்-தலை தவம் அவன் – மீனாட்சிபிள்ளை:10 95/3

மேல்

சோர்தரு (1)

துகிலொடு சோர்தரு கொடி நுண் மருங்குல் துவண்டுதுவண்டு ஆட தொந்தி சரிந்திட உந்தி கரந்து ஒளிர் சூலுடை ஆல் அடை மற்று – மீனாட்சிபிள்ளை:2 18/3

மேல்

சோலை (1)

சோலை கிளியே உயிர் துணையாம் தோன்றாத்துணைக்கு ஓர் துணையாகி துவாதசாந்த பெருவெளியில் துரியம் கடந்த பரநாத – மீனாட்சிபிள்ளை:5 43/3

மேல்

சோனை (1)

சோனை கணை மழை சொரிய பெருகிய குருதி கடலிடையே தொந்தமிடும் பல் கவந்தம் நிவந்து ஒரு சுழியில் பவுரிகொள – மீனாட்சிபிள்ளை:3 29/2

மேல்