வெ – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெகுளில் 1
வெச்சென்று 1
வெடி 1
வெடிப்ப 1
வெடிபோய் 2
வெண் 22
வெண்காப்பும் 1
வெண்பொடி 1
வெண்மதியின் 1
வெந்இடு 1
வெந்இடும் 1
வெப்பத்து 1
வெப்பொடு 1
வெம் 7
வெயர்வு 1
வெயர்வும் 1
வெயரா 1
வெயில் 3
வெயிலொடு 1
வெரீஇ 2
வெருக்கொள்ள 1
வெவ்வேறு 1
வெள் 17
வெள்ள 12
வெள்ளம் 5
வெள்ளமும் 1
வெள்ளி 1
வெளி 2
வெளிக்கே 1
வெளிய 1
வெளியிட 1
வெளியில் 2
வெளியும் 1
வெளியே 1
வெளிற 1
வெளிறி 1
வெளிறு 1
வெற்பு 2
வெறி 1
வெறு 1
வென்ற 1

வெகுளில் (1)

இழைக்கும்-கொல் பின்தொடர்ந்து என அஞ்சியோ தாழ்த்து இருந்தனன் போலும் என யாம் இத்துணையும் ஒருவாறு தப்புவித்தோம் வெகுளில் இனி ஒரு பிழைப்பு இல்லை காண் – மீனாட்சிபிள்ளை:7 71/2

மேல்

வெச்சென்று (1)

தார் கொண்ட மதி முடி ஒருத்தன் திருக்கண் மலர் சாத்த கிளர்ந்து பொங்கி தவழும் இளவெயிலும் மழ நிலவும் அளவளவலால் தண்ணென்று வெச்சென்று பொன் – மீனாட்சிபிள்ளை:0 1/3

மேல்

வெடி (1)

மின்னல் தடித்து கரும் பொன் தொடி கடைசி மெல்லியர் வெரீஇ பெயர வான் மீன் கணம் வெருக்கொள்ள வெடி வரால் குதிகொள்ளும் விண் புலம் விளை புலம் என – மீனாட்சிபிள்ளை:5 49/2

மேல்

வெடிப்ப (1)

பூ மரு வெடிப்ப முகை விண்ட தண்டலை ஈன்ற புனை நறும் தளிர்கள் கொய்தும் பொய்தல் பிணாக்களொடு வண்டல் கலம் பெய்து புழுதி விளையாட்டு அயர்ந்தும் – மீனாட்சிபிள்ளை:4 35/1

மேல்

வெடிபோய் (2)

விண் அறா மதி முயல் கலை கிழிந்து இழி அமுத வெள் அருவி பாய வெடிபோய் மீளும் தகட்டு அகட்டு இளவாளை மோத முகை விண்டு ஒழுகும் முண்டக பூம் – மீனாட்சிபிள்ளை:2 17/3
செயல் பாய் கடல் தானை செங்களம் கொள அம்மை திக்குவிசயம் கொண்ட நாள் தெய்வ கயல் கொடிகள் திசைதிசை எடுத்து என திக்கு எட்டும் முட்ட வெடிபோய்
கயல் பாய் குரம்பு அணை பெரும் பணை தமிழ் மதுரை காவலன் மகள் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 55/3,4

மேல்

வெண் (22)

குழியும் சிறு கண் ஏற்று உருமு குரல் வெண் புயலும் கரும் புயலும் குன்றம் குலைய உகைத்து ஏறும் குலிச தட கை புத்தேளே – மீனாட்சிபிள்ளை:1 7/4
நீராட்டி ஆட்டு பொன் சுண்ணம் திமிர்ந்து அள்ளி நெற்றியில் தொட்டு இட்ட வெண் நீற்றினொடு புண்டர கீற்றுக்கும் ஏற்றிட ஒர் நித்தில சுட்டி சாத்தி – மீனாட்சிபிள்ளை:2 13/1
பரிமளம் ஊறிய உச்சியின் முச்சி பதிந்து ஆட சுடர் பொன் பட்டமுடன் சிறு சுட்டியும் வெயிலொடு பனி வெண் நிலவு ஆட – மீனாட்சிபிள்ளை:2 20/1
கருவிளை நாறு குதம்பை ததும்பிய காது தழைந்து ஆட கதிர் வெண் முறுவல் அரும்ப மலர்ந்திடு கமல திருமுகம் நின் – மீனாட்சிபிள்ளை:2 20/3
கருணையின் முழுகிய கயல் திரி பசிய கரும்பே வெண் சோதி கலை மதி மரபில் ஒர் இளமயில் என வளர் கன்றே என்று ஓதும் – மீனாட்சிபிள்ளை:2 21/3
காடும் தரங்க கங்கை நெடும் கழியும் நீந்தி அமுது இறைக்கும் கலை வெண் மதியின் முயல் தடவி கதிர் மீன் கற்றை திரைத்து உதறி – மீனாட்சிபிள்ளை:3 25/2
சேல் ஆட்டு வாள் கண் கரும் கடல் கடைமடை திறந்து அமுதம் ஊற்று கருணை தெள் திரை கொழித்து எறிய வெண் திரை நெருப்பூட்டு தெய்வ குழந்தையை செம் – மீனாட்சிபிள்ளை:4 37/1
சமரில் பிறகிடும் உதியரும் அபயரும் எதிரிட்டு அமராட தண்டதரன் செல் கரும் பகடு இந்திரன் வெண் பகடோடு உடையா – மீனாட்சிபிள்ளை:4 39/1
பின்னல் திரை கடல் மது குடம் அற தேக்கு பெய் முகில் கார் உடல வெண் பிறை மதி கூன் குய கை கடைஞரொடு புடைபெயர்ந்து இடை நுடங்க ஒல்கு – மீனாட்சிபிள்ளை:5 49/1
தேன் ஒழுகு கஞ்ச பொலன் சீறடிக்கு ஊட்டு செம்பஞ்சியின் குழம்பால் தெள் அமுது இறைக்கும் பசுங்குழவி வெண் திங்கள் செக்கர் மதியா கரை பொரும் – மீனாட்சிபிள்ளை:6 57/1
மீன் ஒழுகு மா இரு விசும்பில் செலும் கடவுள் வேழத்தின் மத்தகத்து வீற்றிருக்கும் சேயிழைக்கும் பசும் கமுகு வெண் கவரி வீசும் வாச – மீனாட்சிபிள்ளை:6 57/3
நடக்கும் கதிர் பொன் பரிசிலா நகு வெண் பிறை கை தோணியதா நாள்மீன் பரப்பு சிறு மிதப்பா நாப்பண் மிதப்ப நால் கோட்டு – மீனாட்சிபிள்ளை:6 58/2
முகர களி வண்டு அடைகிடக்கும் முளரி கொடிக்கும் கலை கொடிக்கும் முருந்து முறுவல் விருந்திடு புன்மூரல் நெடு வெண் நிலவு எறிப்ப – மீனாட்சிபிள்ளை:6 60/3
ஊற்று புது வெண் கலை உடுத்து முழுமதி என உதித்த அமையத்தும் அம்மை ஒண் முகத்து ஒழுகு திரு அழகை கவர்ந்துகொண்டு ஓடினது நிற்க மற்றை – மீனாட்சிபிள்ளை:7 65/2
வெண் நிலவு பொழிவது கிடைத்தனை மடுத்து இவள் விழிக்கடை கொழித்த கருணை வெள்ளம் திளைத்து ஆடு பெற்றியால் தண் அளி விளைப்பதும் பெற்றனை-கொலாம் – மீனாட்சிபிள்ளை:7 67/2
திங்கள்_கொழுந்தை கொழுந்துபடு படர் சடை செருகு திரு மணவாளன் மேல் செழு மண பந்தரில் எடுத்து எறியும் அமுத வெண் திரளையில் புரளும் அறுகால் – மீனாட்சிபிள்ளை:8 74/1
நள் ஊறு மறு ஊறு அகற்று முக மதியில் வெண் நகை ஊறு நிலவு ஊறியும் நல் தரள அம்மனை ஒர் சிற்குணத்தினை மூன்று நற்குணம் கதுவல் காட்ட – மீனாட்சிபிள்ளை:8 75/2
கலைப்பட்ட வெண் சுடர் கடவுள் தோய்ந்து ஏக அது கண்டுகொண்டே புழுங்கும் காய் கதிர் கடவுளும் பின்தொடர்வது ஏய்ப்ப கறங்கு அருவி தூங்க ஓங்கும் – மீனாட்சிபிள்ளை:8 76/2
இழியும் புனல் தண் துறை முன்றில் இது எம்பெருமான் மண் சுமந்த இடம் என்று அலர் வெண் கமல பெண் இசைப்ப கசிந்து உள் உருகி இரு – மீனாட்சிபிள்ளை:9 89/1
வெறி குங்கும சேறு எக்கரிடும் விரை பூம் துறை மண் பெறின் ஒருத்தி வெண் பிட்டு இடவும் அடித்து ஒருவன் வேலை கொளவும் வேண்டும் என – மீனாட்சிபிள்ளை:9 90/2
வில் பொலிய நிலவு பொழி வெண் நித்திலம் பூண்டு விழுதுபட மழ கதிர்விடும் வெண் தரள ஊசலின் மிசை பொலிவ புண்டரிக வீட்டில் பொலிந்து மதுர – மீனாட்சிபிள்ளை:10 94/1
வில் பொலிய நிலவு பொழி வெண் நித்திலம் பூண்டு விழுதுபட மழ கதிர்விடும் வெண் தரள ஊசலின் மிசை பொலிவ புண்டரிக வீட்டில் பொலிந்து மதுர – மீனாட்சிபிள்ளை:10 94/1

மேல்

வெண்காப்பும் (1)

கோல் ஆட்டு நின் சிறு கணைக்கால் கிடத்தி குளிப்பாட்டி உச்சி முச்சி குஞ்சிக்கு நெய் போற்றி வெண்காப்பும் இட்டு வளர் கொங்கையில் சங்கு வார்க்கும் – மீனாட்சிபிள்ளை:4 37/2

மேல்

வெண்பொடி (1)

போர் கொண்ட எண் தோள் பொலன் குவடு பொதியும் வெண்பொடி துடி அடி துவைத்து புழுதி ஆட்டு அயரா ஒர் அயிராவணத்து உலவு போர் களிற்றை துதிப்பாம் – மீனாட்சிபிள்ளை:0 1/2

மேல்

வெண்மதியின் (1)

அகில மன்னர் அவர் திசையின் மன்னர் இவர் அமரர் என்னும் உரை திக்கு எட்டும் மூடவும் அமுத வெண்மதியின் மரபை உன்னிஉனி அலரி அண்ணல் முழு வெப்பத்து மூழ்கவும் – மீனாட்சிபிள்ளை:1 12/2

மேல்

வெந்இடு (1)

சங்கு ஓலிடும் கடல் தானைக்கு வெந்இடு தராபதிகள் முன்றில் தூர்த்த தமனிய குப்பையும் திசை_முதல்வர் தட முடி தாமமும் தலைமயங்க – மீனாட்சிபிள்ளை:5 50/1

மேல்

வெந்இடும் (1)

அமரில் வெந்இடும் அவ் உதியர் பின் இடும் ஒர் அபயர் முன்னிடு வனத்து ஒக்க ஓடவும் அளவும் எம்முடைய திறை இது என்ன முடி அரசர் எண்ணிலர் ஒர் முற்றத்து வாடவும் – மீனாட்சிபிள்ளை:1 12/1

மேல்

வெப்பத்து (1)

அகில மன்னர் அவர் திசையின் மன்னர் இவர் அமரர் என்னும் உரை திக்கு எட்டும் மூடவும் அமுத வெண்மதியின் மரபை உன்னிஉனி அலரி அண்ணல் முழு வெப்பத்து மூழ்கவும் – மீனாட்சிபிள்ளை:1 12/2

மேல்

வெப்பொடு (1)

முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மா தொடர் சாபமும் மும்மை தமிழ் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இ தலத்தின் – மீனாட்சிபிள்ளை:7 68/1

மேல்

வெம் (7)

வெம் சூட்டு நெட்டு உடல் விரிக்கும் பட பாயல் மீமிசை துஞ்சும் நீலமேகத்தின் ஆகத்து விடு சுடர் படலை மணி மென் பரல் உறுத்த நொந்து – மீனாட்சிபிள்ளை:1 8/1
பஞ்சு ஊட்டு சீறடி பதைத்தும் அதன் வெம் கதிர் படும் இளவெயிற்கு உடைந்தும் பைம் துழாய் காடு விரி தண் நிழல் ஒதுங்கும் ஒர் பசுங்கொடியை அஞ்சலிப்பாம் – மீனாட்சிபிள்ளை:1 8/2
கடவி விண்ணரசு நடவும் வெம் முனைய களிறு கைம்மலை செல் கொப்பத்து வீழவும் கனக மன்னு தட நளினி துன்னி இரு கமல மின்னும் ஒரு பத்மத்துள் மேவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/6
குரு மணி வெயில் விட மரகத நிழல் விரி குன்றே நின்று ஊதும் குழல் இசை பழகிய மழை முகில் எழ எழு கொம்பே வெம் பாசம் – மீனாட்சிபிள்ளை:2 21/1
அம் கண் நெடும் புவனங்கள் தொழும்-தொறும் அஞ்சேல் என்று ஓதும் அபயமும் வரதமும் உபயமும் உடைய அணங்கே வெம் கோப – மீனாட்சிபிள்ளை:2 22/2
விண்தலம் பொலிய பொலிந்திடுதியேல் உனது வெம் பணி பகை விழுங்கி விக்கிட கக்கிட தொக்கு இடர்ப்படுதி வெயில் விரியும் சுடர் பரிதியின் – மீனாட்சிபிள்ளை:7 66/1
வெம் கண் கடும் கொலைய வேழ குழாம் இது என மேக குழாத்தை முட்டி விளையாடு மழ களிறு கடைவாய் குதட்ட முகை விண்ட அம்பு ஐந்து கோத்த – மீனாட்சிபிள்ளை:8 74/3

மேல்

வெயர்வு (1)

திருநுதல் மீது எழுகுறு வெயர்வு ஆட தெய்வ மணம் கமழும் திருமேனியின் முழு மரகத ஒளி எண் திக்கும் விரிந்து ஆட – மீனாட்சிபிள்ளை:2 20/2

மேல்

வெயர்வும் (1)

தழைக்கும் துகில் கொடி முகில் கொடி திரைத்து மேல் தலம் வளர் நகில் கொடிகளை தாழ் குழலும் நீவி நுதல் வெயர்வும் துடைத்து அம்மை சமயம் இது என்று அலுவலிட்டு – மீனாட்சிபிள்ளை:7 71/3

மேல்

வெயரா (1)

வெயரா மனம் புழுங்கிடும் அமரர் தச்சனும் வியப்ப செயும் தவள மா மேடையும் தண் தரள மாடமும் தெள் நிலா வீச திசைக்களிறு எலாம் – மீனாட்சிபிள்ளை:8 78/3

மேல்

வெயில் (3)

குரு மணி வெயில் விட மரகத நிழல் விரி குன்றே நின்று ஊதும் குழல் இசை பழகிய மழை முகில் எழ எழு கொம்பே வெம் பாசம் – மீனாட்சிபிள்ளை:2 21/1
விண்தலம் பொலிய பொலிந்திடுதியேல் உனது வெம் பணி பகை விழுங்கி விக்கிட கக்கிட தொக்கு இடர்ப்படுதி வெயில் விரியும் சுடர் பரிதியின் – மீனாட்சிபிள்ளை:7 66/1
உருகிய பசும்பொன் அசும்ப வெயில் வீசு பொன் ஊசலை உதைந்து ஆடலும் ஒண் தளிர் அடிச்சுவடு உற பெறும் அசோகு நறவு ஒழுகு மலர் பூத்து உதிர்வது உன் – மீனாட்சிபிள்ளை:10 95/1

மேல்

வெயிலொடு (1)

பரிமளம் ஊறிய உச்சியின் முச்சி பதிந்து ஆட சுடர் பொன் பட்டமுடன் சிறு சுட்டியும் வெயிலொடு பனி வெண் நிலவு ஆட – மீனாட்சிபிள்ளை:2 20/1

மேல்

வெரீஇ (2)

மின்னல் தடித்து கரும் பொன் தொடி கடைசி மெல்லியர் வெரீஇ பெயர வான் மீன் கணம் வெருக்கொள்ள வெடி வரால் குதிகொள்ளும் விண் புலம் விளை புலம் என – மீனாட்சிபிள்ளை:5 49/2
குழியும் பசும் கண் முசுக்கலை வெரீஇ சிறு குறும் பலவின் நெடிய பார கொம்பு ஒடிபட தூங்கு முள் புற கனியின் குடம் கொண்டு நீந்த மடைவாய் – மீனாட்சிபிள்ளை:10 99/1

மேல்

வெருக்கொள்ள (1)

மின்னல் தடித்து கரும் பொன் தொடி கடைசி மெல்லியர் வெரீஇ பெயர வான் மீன் கணம் வெருக்கொள்ள வெடி வரால் குதிகொள்ளும் விண் புலம் விளை புலம் என – மீனாட்சிபிள்ளை:5 49/2

மேல்

வெவ்வேறு (1)

இரைக்கும் பெரும் தேவர் புன்கண் துடைத்திட எடுத்த அமுத கலசம் வெவ்வேறு ஈந்திடுவது எனவும் முழு முத்து இட்டு இழைத்திட்ட எறிபந்தின் நிரை என்னவும் – மீனாட்சிபிள்ளை:8 73/2

மேல்

வெள் (17)

பகரும் இசை திசை பரவ இருவர்கள் பயிலும் இயல் தெரி வெள் வளை தோட்டினர் பசிய அறுகொடு வெளிய நில விரி பவள வனம் அடர் பல் சடை காட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/3
மேக பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும் விண்புலம் விருந்து அரவும் வெள் அமுதம் வீசும் கரும் திரை பைம் துகில் விரித்து உடுத்து உத்தி விரியும் – மீனாட்சிபிள்ளை:1 6/1
செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடை கரு மிடற்று தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலை திருவை புரக்க என்றே – மீனாட்சிபிள்ளை:1 8/4
தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் – மீனாட்சிபிள்ளை:1 9/2
கண் அறா மரகத கற்றை கலாம் மஞ்ஞை கண முகில் ததும்ப ஏங்கும் கார் வரையும் வெள் என ஒர் கன்னிமாடத்து வளர் கற்பூரவல்லி கதிர் கால் – மீனாட்சிபிள்ளை:2 17/2
விண் அறா மதி முயல் கலை கிழிந்து இழி அமுத வெள் அருவி பாய வெடிபோய் மீளும் தகட்டு அகட்டு இளவாளை மோத முகை விண்டு ஒழுகும் முண்டக பூம் – மீனாட்சிபிள்ளை:2 17/3
போர் குன்று ஏறும் கரு முகிலை வெள் வாய் மள்ளர் பிணையலிடும் பொரு கோட்டு எருமை போத்தினொடும் பூட்டி அடிக்க இடி குரல் விட்டு – மீனாட்சிபிள்ளை:3 27/3
வடம் பட்ட நின் துணை கொங்கை குடம் கொட்டு மதுர அமுது உண்டு கடைவாய் வழியும் வெள் அருவி என நிலவு பொழி கிம்புரி மருப்பில் பொருப்பு இடித்து – மீனாட்சிபிள்ளை:6 56/1
துளி தூங்கு தெள் அமுத வெள் அருவி பொழியும் நின் தொல் மரபு தழைய வந்து தோன்றிடும் கௌரியர் குலக்கொழுந்தை கண்டு துணை விழியும் மனமும் நின்று – மீனாட்சிபிள்ளை:7 70/1
விரைக்கும் தளிர் கை கொழும் தாமரை துஞ்சி மீது எழுந்து ஆர்த்த பிள்ளை வெள் ஓதிம திரள் இது எனவும் கரும் பாறை மீமிசை செஞ்சாந்து வைத்து – மீனாட்சிபிள்ளை:8 73/3
அரைக்கும் திரை கை வெள் அருவி வைகை துறைவி அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 73/4
பிள்ளை வெள் ஓதிமமும் முறைமுறையால் பெருகிய காதலை மேல் பேச விடுப்ப கடுப்ப அணைத்து ஒரு பெடையோடு அரச அனம் – மீனாட்சிபிள்ளை:8 82/3
நிரை பொங்கிடும் செம் கை வெள் வளை கலிப்ப நகை நிலவு விரி பவளம் வெளிற நீல கருங்குவளை செங்குவளை பூப்ப அறல் நெறி குழல் கற்றை சரிய – மீனாட்சிபிள்ளை:9 84/1
கொள்ளை வெள் அருவி படிந்திடும் இமய கூந்தல் மட பிடி போல் கொற்கை துறையில் சிறை விரிய புனல் குடையும் அன பெடை போல் – மீனாட்சிபிள்ளை:9 92/1
தார் கோல வேணியர் தம் உள்ளம் எனவே பொன் தடம் சிலையும் உருகி ஓட தண் மதி முடித்ததும் வெள் விடைக்கு ஒள் மணி தரித்ததும் விருத்தமாக – மீனாட்சிபிள்ளை:10 98/2
கிழியும் கலை திங்கள் அமுது அருவி தூங்குவ கிளைத்த வண்டு உழு பைம் துழாய் கேசவன் கால் வீச அண்ட கோளகை முகடு கீண்டு வெள் அருவி பொங்கி – மீனாட்சிபிள்ளை:10 99/3
மின் செய்த சாயலவர் மேல் தலத்து ஆடிய விரை புனலின் அருவி குடையும் வெள் ஆனை குங்கும செம் சேறு நாற மட மென் பிடியை அஞ்சி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:10 101/3

மேல்

வெள்ள (12)

பெருகு பரமானந்த வெள்ள பெருக்கே சிறியேம் பெற்ற பெரும் பேறே ஊறு நறை கூந்தல் பிடியே கொடி நுண் நுசுப்பு ஒசிய – மீனாட்சிபிள்ளை:5 44/2
கும்பம் சுமந்த மத வெள்ள நீர் கொட்டும் கொடும் களிறு இடும் போர்வையான் குடில கோடீரத்து இருந்துகொண்டு அம் நலார் கொய் தளிர் கை வருடவும் – மீனாட்சிபிள்ளை:7 69/1
விளையாடும் வைகை தடம் துறை குடைந்து புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 83/4
விளையாடும் வைகை தடம் துறை குடைந்து புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 83/4
விரை பொங்கிட துங்க வேகவதி பொங்கு புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 84/4
விரை பொங்கிட துங்க வேகவதி பொங்கு புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 84/4
விண் ஆறும் அளவளாய் விளையாடு புது வைகை வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 85/4
விண் ஆறும் அளவளாய் விளையாடு புது வைகை வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 85/4
வீங்கு புனல் வைகை தடம் துறை குடைந்து புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 86/4
வீங்கு புனல் வைகை தடம் துறை குடைந்து புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 86/4
விளிக்கும் பெரும் தண் துறை கடவுள் வைகை நெடு வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 87/4
விளிக்கும் பெரும் தண் துறை கடவுள் வைகை நெடு வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 87/4

மேல்

வெள்ளம் (5)

அம் கண் நெடு ஞாலத்து வித்து இன்றி வித்திய அனைத்து உயிர்களும் தளிர்ப்ப அருள் மடை திறந்து கடை வெள்ளம் பெருக்கெடுத்து அலை எறிந்து உகள உகளும் – மீனாட்சிபிள்ளை:2 16/3
குருந்தே வருக அருள் பழுத்த கொம்பே வருக திரு கடைக்கண் கொழித்த கருணை பெரு வெள்ளம் குடைவார் பிறவி பெரும் பிணிக்கு ஓர் – மீனாட்சிபிள்ளை:6 62/3
வெண் நிலவு பொழிவது கிடைத்தனை மடுத்து இவள் விழிக்கடை கொழித்த கருணை வெள்ளம் திளைத்து ஆடு பெற்றியால் தண் அளி விளைப்பதும் பெற்றனை-கொலாம் – மீனாட்சிபிள்ளை:7 67/2
விழியும் சிவப்ப ஆனந்த வெள்ளம் பொழிந்து நின்றனையால் மீண்டும் பெருக விடுத்து அவற்கு ஓர் வேலை இடுதல் மிகை அன்றே – மீனாட்சிபிள்ளை:9 89/2
வில் கொடி கோட்டிய குங்குமமும் குடை வெள்ளம் கொள்ளைகொள வெளியே கண்டு நின் வடிவழகு ஐயன் விழிக்கு விருந்துசெய – மீனாட்சிபிள்ளை:9 91/2

மேல்

வெள்ளமும் (1)

கார் கொண்ட கவுள் மத கடை வெள்ளமும் கண் கடை கடைக்கனலும் எல்லை கடவாது தடவு குழை செவி முகந்து எறி கடைக்கால் திரட்ட எம் கோன் – மீனாட்சிபிள்ளை:0 1/1

மேல்

வெள்ளி (1)

வெள்ளி தகட்டு நெட்டு ஏடு அவிழ்த்து இன் இசை விரும்பும் சுரும்பர் பாட விளை நறவு கக்கும் பொலன் பொகுட்டு அலர் கமல வீட்டு கொழித்து எடுத்து – மீனாட்சிபிள்ளை:1 9/1

மேல்

வெளி (2)

சுற்று நெடு நேமி சுவர்க்கு இசைய எட்டு சுவர்க்கால் நிறுத்தி மேரு தூண் ஒன்று நடு நட்டு வெளி முகடு மூடி இரு சுடர் விளக்கு இட்டு முற்ற – மீனாட்சிபிள்ளை:2 15/1
மூடும் ககன வெளி கூட முகடு திறந்து புறம் கோத்த முந்நீர் உழக்கி சின வாளை மூரி சுறவினோடும் விளையாடும் – மீனாட்சிபிள்ளை:3 25/3

மேல்

வெளிக்கே (1)

உள் ஊறு களி துளும்ப குரவர் இருவீரும் உற்றிடு துவாதசாந்தத்து ஒரு பெரு வெளிக்கே விழித்து உறங்கும் தொண்டர் உழுவல் அன்பு என்பு உருக நெக்கு – மீனாட்சிபிள்ளை:8 75/3

மேல்

வெளிய (1)

பகரும் இசை திசை பரவ இருவர்கள் பயிலும் இயல் தெரி வெள் வளை தோட்டினர் பசிய அறுகொடு வெளிய நில விரி பவள வனம் அடர் பல் சடை காட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/3

மேல்

வெளியிட (1)

தண் நாறும் மல்லல் துறை சிறை அனம் களி தழைக்கும் கலா மஞ்ஞையாய் சகலமும் நின் திரு சொருபம் என்று ஓலிடும் சதுர்மறை பொருள் வெளியிட
கள் நாறு குழலியர் குட கொங்கை பொங்கு செம் களபமும் கத்தூரியும் கப்புரமும் ஒக்க கரைத்து ஓடி வாணியும் காளிந்தியும் கங்கையாம் – மீனாட்சிபிள்ளை:9 85/2,3

மேல்

வெளியில் (2)

முற்ற வெளியில் திரியும் மத்த பெரும் பித்தன் முன் நின்று தொந்தம் இடவும் முனியாது வைகலும் எடுத்து அடுக்கி பெரிய மூது அண்ட கூடம் மூடும் – மீனாட்சிபிள்ளை:2 15/3
விண் அளிக்கும் சுடர் விமானமும் பரநாத வெளியில் துவாதசாந்த வீடும் கடம்பு பொதி காடும் தடம் பணை விரிந்த தமிழ்நாடும் நெற்றிக்கண் – மீனாட்சிபிள்ளை:4 36/1

மேல்

வெளியும் (1)

கட குஞ்சரத்தின் மத நதியும் கங்கா நதியும் எதிர்கொள்ள ககன வெளியும் கற்பக பூங்காடும் கடந்து கடல் சுருங்க – மீனாட்சிபிள்ளை:6 58/3

மேல்

வெளியே (1)

வில் கொடி கோட்டிய குங்குமமும் குடை வெள்ளம் கொள்ளைகொள வெளியே கண்டு நின் வடிவழகு ஐயன் விழிக்கு விருந்துசெய – மீனாட்சிபிள்ளை:9 91/2

மேல்

வெளிற (1)

நிரை பொங்கிடும் செம் கை வெள் வளை கலிப்ப நகை நிலவு விரி பவளம் வெளிற நீல கருங்குவளை செங்குவளை பூப்ப அறல் நெறி குழல் கற்றை சரிய – மீனாட்சிபிள்ளை:9 84/1

மேல்

வெளிறி (1)

பசைந்திடு ஞாலம் மலர்ந்தமை வெளிறி ஒர் பச்சுடல் சொல்லவும் ஒர் பைம் கொடி ஒல்கவும் ஒல்கி நுடங்கிய பண்டி சரிந்து ஆட – மீனாட்சிபிள்ளை:2 19/2

மேல்

வெளிறு (1)

அமரர்க்கு அதிபதி வெளிறு அ களிறு எதிர் பிளிற குளிறியிடா அண்டம் மிசை பொலி கொண்டல் உகைத்திடும் அமரில் தமரினொடும் – மீனாட்சிபிள்ளை:3 30/1

மேல்

வெற்பு (2)

கோள வட்டம் பழைய நேமி வட்டத்தினொடு குப்புற்று வெற்பு எட்டும் ஏழ் குட்டத்தினில் கவிழ மூது அண்ட வேதண்ட கோதண்டமோடு சக்ரவாள – மீனாட்சிபிள்ளை:4 33/2
இமயத்தொடும் வளர் குல வெற்பு எட்டையும் எல்லைக்கல்லின் நிறீஇ எண் திசையும் தனி கொண்டு புரந்து வடாது கடல் துறை தென் – மீனாட்சிபிள்ளை:4 39/3

மேல்

வெறி (1)

வெறி குங்கும சேறு எக்கரிடும் விரை பூம் துறை மண் பெறின் ஒருத்தி வெண் பிட்டு இடவும் அடித்து ஒருவன் வேலை கொளவும் வேண்டும் என – மீனாட்சிபிள்ளை:9 90/2

மேல்

வெறு (1)

களி தூங்க அளவளாய் வாழாமல் உண் அமுது கலையொடும் இழந்து வெறு மண்கலத்திடு புது கூழினுக்கு இரவு பூண்டு ஒரு களங்கம் வைத்தாய் இது அலால் – மீனாட்சிபிள்ளை:7 70/2

மேல்

வென்ற (1)

குன்ற_விலாளியை வென்ற தடாதகை கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 40/4

மேல்