சா – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


சாகரம் (1)

பொங்கும் மதர் நோக்கில் பிறந்த ஆனந்த புது புணரி நீத்தம் ஐயன் புந்தி தடத்தினை நிரப்ப வழி அடியர்-பால் போக சாகரம் அடுப்ப – மீனாட்சிபிள்ளை:2 16/2

மேல்

சாத்த (1)

தார் கொண்ட மதி முடி ஒருத்தன் திருக்கண் மலர் சாத்த கிளர்ந்து பொங்கி தவழும் இளவெயிலும் மழ நிலவும் அளவளவலால் தண்ணென்று வெச்சென்று பொன் – மீனாட்சிபிள்ளை:0 1/3

மேல்

சாத்தி (1)

நீராட்டி ஆட்டு பொன் சுண்ணம் திமிர்ந்து அள்ளி நெற்றியில் தொட்டு இட்ட வெண் நீற்றினொடு புண்டர கீற்றுக்கும் ஏற்றிட ஒர் நித்தில சுட்டி சாத்தி
தார் ஆட்டு சூழிய கொண்டையும் முடித்து தலை பணி திருத்தி முத்தின் தண் ஒளி ததும்பும் குதம்பையொடு காதுக்கு ஒர் தமனிய கொப்பும் இட்டு – மீனாட்சிபிள்ளை:2 13/1,2

மேல்

சாபமும் (2)

முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மா தொடர் சாபமும் மும்மை தமிழ் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இ தலத்தின் – மீனாட்சிபிள்ளை:7 68/1
மன் பெரும் குரவன் பிழைத்த பாவமும் மற்றை மா மடிகள் இடு சாபமும் வளர் இளம் பருவத்து நரை திரையும் முதிர் கூனும் மாற்றிடப்பெறுதி கண்டாய் – மீனாட்சிபிள்ளை:7 68/3

மேல்

சாயல் (1)

கங்குல் மதம் கயம் மங்குல் அடங்க விடும் காமன் சேம கயல் குடிபுகும் ஒரு துகிலிகை என நின கண் போலும் சாயல்
செம் கயல் தங்கு பொலன் கொடி மின்கொடி செங்கோ செங்கீரை தெளி தமிழ் மதுரையில் வளரும் ஒர் இளமயில் செங்கோ செங்கீரை – மீனாட்சிபிள்ளை:2 22/3,4

மேல்

சாயலவர் (1)

மின் செய்த சாயலவர் மேல் தலத்து ஆடிய விரை புனலின் அருவி குடையும் வெள் ஆனை குங்கும செம் சேறு நாற மட மென் பிடியை அஞ்சி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:10 101/3

மேல்

சாயலும் (1)

கிள்ளைக்கு மழலை பசும் குதலை ஒழுகு தீம் கிளவியும் களி மயிற்கு கிளர் இளம் சாயலும் நவ்விக்கு நோக்கும் விரி கிஞ்சுக சூட்டு அரசு அன – மீனாட்சிபிள்ளை:1 9/3

மேல்

சாரல் (1)

ஆடும் பெரும் தண் துறை பொருநை ஆற்றில் படு தெள் நிலா முத்தும் அம் தண் பொதிய தடம் சாரல் அருவி சொரியும் குளிர் முத்தும் – மீனாட்சிபிள்ளை:5 47/2

மேல்

சாரலில் (1)

குமரி இருக்க கலா மயில் கூத்து அயர் குளிர் புனம் மொய்த்திட்ட சாரலில் போய் சிறு குறவர் மகட்கு சலாமிடற்கு ஏக்கறு குமரனை முத்துக்குமாரனை போற்றுதும் – மீனாட்சிபிள்ளை:1 5/2

மேல்