மி – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


மிக்கு (1)

குமரி பொன்னி வைகை பொருநை நல் நதிகள் குதிகொள் விண் நதியின் மிக்கு குலாவவும் குவடு தென்மலையின் நிகரதின்மை சுரர் குடிகொள் பொன்மலை துதித்து பராவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/3

மேல்

மிகை (1)

விழியும் சிவப்ப ஆனந்த வெள்ளம் பொழிந்து நின்றனையால் மீண்டும் பெருக விடுத்து அவற்கு ஓர் வேலை இடுதல் மிகை அன்றே – மீனாட்சிபிள்ளை:9 89/2

மேல்

மிச்சில் (1)

ஒளி தூங்கு தெளி விசும்பினில் நின்னொடு ஒத்தவன் ஒருத்தன் கரத்தின் வாரி உண்டு ஒதுக்கிய மிச்சில் நள் இருளில் அள்ளி உண்டு ஓடுகின்றாய் என் செய்தாய் – மீனாட்சிபிள்ளை:7 70/3

மேல்

மிசை (11)

மகரம் எறி கடல் அமுதை அமுது உகு மழலை பழகிய கிள்ளையை பேட்டு அனம் மடவ நடை பயில் பிடியை விரை செறி வரை செய் புய மிசை வையம் வைத்து ஆற்றிய – மீனாட்சிபிள்ளை:1 3/7
கட களிறு உதவு கபாய் மிசை போர்த்தவள் கவி குவி துறுகலின் வாரியை தூர்த்தவள் கடல் வயிறு எரிய ஒள் வேலினை பார்த்தவள் கடி கமழ் தரு மலர் தார் முடி சேர்த்தவள் – மீனாட்சிபிள்ளை:1 11/1
அமரர்க்கு அதிபதி வெளிறு அ களிறு எதிர் பிளிற குளிறியிடா அண்டம் மிசை பொலி கொண்டல் உகைத்திடும் அமரில் தமரினொடும் – மீனாட்சிபிள்ளை:3 30/1
சிகர பொதிய மிசை தவழும் சிறுதேர் மேலே போய் ஓர் சிவனை பொருத சமர்த்தன் உகந்து அருள் சேல் போல் மாயாமே – மீனாட்சிபிள்ளை:3 32/3
மத்த மதமா கவுட்டு ஒரு நால் மருப்பு பொருப்பு மிசை பொலிந்த வானத்து அரசு கோயில் வளர் சிந்தாமணியும் வடபுலத்தார் – மீனாட்சிபிள்ளை:5 46/1
விண்ணம் பொதிந்த மேக படாம் மிசை தூக்கிய பல் மணி கொத்து விரிந்தால் என கால் நிமிர்ந்து தலை விரியும் குலை நெல் கற்றை பல – மீனாட்சிபிள்ளை:6 59/3
புலத்து ஓடும் உடுமீன் கணத்தோடும் ஓடும் நின் போல்வார்க்கு மா பாதகம் போக்கும் இ தலம் அலது புகல் இல்லை காண் மிசை பொங்கு புனல் கற்பக காடு – மீனாட்சிபிள்ளை:7 64/3
பைம் கண் சுரும்பு என விசும்பில் படர்ந்து எழும் பனி மதி மிசை தாவிடும் பருவ மட மான் என என் அம்மனை நின் அம்மனை படை விழி கயல் பாய்ந்து எழ – மீனாட்சிபிள்ளை:8 74/2
ஒள் ஒளிய பவள கொழும் கால் மிசை பொங்கும் ஒழுகு ஒளிய வயிர விட்டத்து ஊற்றும் செழும் தண் நிலா கால் விழுந்து அனைய ஒண் தரள வடம் வீக்கியே – மீனாட்சிபிள்ளை:10 93/1
வில் பொலிய நிலவு பொழி வெண் நித்திலம் பூண்டு விழுதுபட மழ கதிர்விடும் வெண் தரள ஊசலின் மிசை பொலிவ புண்டரிக வீட்டில் பொலிந்து மதுர – மீனாட்சிபிள்ளை:10 94/1
கார் கொந்தள கோதை மடவியர் குழற்கு ஊட்டு கமழ் நறும் புகை விண் மிசை கை பரந்து எழுவது உரு மாறு இரவி மண்டலம் கைக்கொள இருள் படலம் வான் – மீனாட்சிபிள்ளை:10 97/3

மேல்

மிடற்று (2)

செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடை கரு மிடற்று தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலை திருவை புரக்க என்றே – மீனாட்சிபிள்ளை:1 8/4
பண் அறா வரி மிடற்று அறுகால் மடுப்ப பசும் தேறல் ஆறு அலைக்கும் பதும பீடிகையும் முது பழ மறை விரிந்து ஒளி பழுத்த செம் நாவும் இமையா – மீனாட்சிபிள்ளை:2 17/1

மேல்

மிடற்றும் (1)

பதுமமொடு ஒழுகு ஒளி வளையும் நின் நளின முகத்தும் மிடற்றும் உற பனி மதியொடு சுவை அமுதமும் நுதலொடு சொல் குதலைக்-கண் நிறீஇ – மீனாட்சிபிள்ளை:5 52/3

மேல்

மிடறு (1)

விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின் விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழு குலை நெக்கு உகவும் – மீனாட்சிபிள்ளை:5 51/2

மேல்

மிதப்ப (1)

நடக்கும் கதிர் பொன் பரிசிலா நகு வெண் பிறை கை தோணியதா நாள்மீன் பரப்பு சிறு மிதப்பா நாப்பண் மிதப்ப நால் கோட்டு – மீனாட்சிபிள்ளை:6 58/2

மேல்

மிதப்பா (1)

நடக்கும் கதிர் பொன் பரிசிலா நகு வெண் பிறை கை தோணியதா நாள்மீன் பரப்பு சிறு மிதப்பா நாப்பண் மிதப்ப நால் கோட்டு – மீனாட்சிபிள்ளை:6 58/2

மேல்

மிலையப்படு (1)

பமர தரு மலர் மிலையப்படு முடி தொலைய கொடுமுடி தாழ் பைம்பொன் தட வரை திரிய கடல் வயிறெரிய படை திரியா – மீனாட்சிபிள்ளை:3 30/3

மேல்

மிழற்றிய (1)

கொத்து மணி திரளில் செயும் அம்மனை குயிலின் மிழற்றிய நின் குழலின் இசைக்கு உருகி பனி தூங்கு குறும் துளி சிந்தியிட – மீனாட்சிபிள்ளை:8 79/2

மேல்

மிழற்று (1)

விளரி மிழற்று அளி குமிறு குழல் கொடி வீசிய அம்மனை போய் விண்ணில் நிரைத்து எழுவது ககனம் திருமேனியது ஆனவருக்கு – மீனாட்சிபிள்ளை:8 80/1

மேல்

மின் (1)

மின் செய்த சாயலவர் மேல் தலத்து ஆடிய விரை புனலின் அருவி குடையும் வெள் ஆனை குங்கும செம் சேறு நாற மட மென் பிடியை அஞ்சி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:10 101/3

மேல்

மின்கொடி (1)

செம் கயல் தங்கு பொலன் கொடி மின்கொடி செங்கோ செங்கீரை தெளி தமிழ் மதுரையில் வளரும் ஒர் இளமயில் செங்கோ செங்கீரை – மீனாட்சிபிள்ளை:2 22/4

மேல்

மின்னல் (1)

மின்னல் தடித்து கரும் பொன் தொடி கடைசி மெல்லியர் வெரீஇ பெயர வான் மீன் கணம் வெருக்கொள்ள வெடி வரால் குதிகொள்ளும் விண் புலம் விளை புலம் என – மீனாட்சிபிள்ளை:5 49/2

மேல்

மின்னும் (1)

கடவி விண்ணரசு நடவும் வெம் முனைய களிறு கைம்மலை செல் கொப்பத்து வீழவும் கனக மன்னு தட நளினி துன்னி இரு கமல மின்னும் ஒரு பத்மத்துள் மேவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/6

மேல்