தோ – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


தோகை (4)

தெள் நிலா விரிய நின்று ஆடும் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 14/4
செம் கயல் கிடக்கும் கரும் கண் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 16/4
வீக்கும் சிறு பைம் துகில் தோகை விரியும் கலாபம் மருங்கு அலைப்ப விளையாட்டு அயரும் மணல் சிற்றில் வீட்டு குடிபுக்கு ஓட்டி இருள் – மீனாட்சிபிள்ளை:3 24/1
சுண்ணம் திமிர்ந்து தேன் அருவி துளைந்து ஆடு அறுகால் தும்பி பசும் தோட்டு கதவம் திறப்ப மலர் தோகை குடிபுக்கு ஓகைசெயும் – மீனாட்சிபிள்ளை:6 59/1

மேல்

தோகையொடும் (1)

துண்டுபடு மதி நுதல் தோகையொடும் அளவில் பல தொல் உரு எடுத்து அமர்செயும் தொடு சிலை என ககன முகடு முட்டி பூம் துணர் தலை வணங்கி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:6 54/3

மேல்

தோட்கு (1)

எழுது தடம் தோட்கு உடைந்த தடம் பணையும் பணை மென் முலைக்கு உடைந்த இணை மா மருப்பும் தரு முத்து உன் திரு முத்து ஒவ்வா இகபரங்கள் – மீனாட்சிபிள்ளை:5 45/3

மேல்

தோட்டினர் (1)

பகரும் இசை திசை பரவ இருவர்கள் பயிலும் இயல் தெரி வெள் வளை தோட்டினர் பசிய அறுகொடு வெளிய நில விரி பவள வனம் அடர் பல் சடை காட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/3

மேல்

தோட்டு (3)

அமுது செய்வித்திட்ட போனகத்தால் சுடர் அடரும் இருட்டு கிரீவம் மட்டு ஆக்கிய அழகிய சொக்கற்கு மால்செய தோட்டு இகல் அமர்செய் கயல் கண் குமாரியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 5/4
பொன் அம் கமல பசும் தோட்டு பொன் தாது ஆடி கற்றை நிலா பொழியும் தரங்கம் பொறை உயிர்த்த பொன் போல் தொடுதோல் அடி பொலன் சூட்டு – மீனாட்சிபிள்ளை:3 23/3
சுண்ணம் திமிர்ந்து தேன் அருவி துளைந்து ஆடு அறுகால் தும்பி பசும் தோட்டு கதவம் திறப்ப மலர் தோகை குடிபுக்கு ஓகைசெயும் – மீனாட்சிபிள்ளை:6 59/1

மேல்

தோடு (1)

கலை தோடு மூடி களங்கம் பொதிந்திட்ட கயரோகி என்றும் ஒருநாள் கண்கொண்டு பார்க்கவும் கடவது அன்று எனவும் கடல் புவி எடுத்து இகழ விண் – மீனாட்சிபிள்ளை:7 64/2

மேல்

தோணியதா (1)

நடக்கும் கதிர் பொன் பரிசிலா நகு வெண் பிறை கை தோணியதா நாள்மீன் பரப்பு சிறு மிதப்பா நாப்பண் மிதப்ப நால் கோட்டு – மீனாட்சிபிள்ளை:6 58/2

மேல்

தோய் (1)

தண் உலாம் மழலை பசுங்குதலை அமுது இனிய தாய் வயிறு குளிர ஊட்டி தட மார்பம் நிறை குங்கும சேறு அளைந்து பொன் தாள் தோய் தட கை பற்றி – மீனாட்சிபிள்ளை:2 14/2

மேல்

தோய்ந்து (1)

கலைப்பட்ட வெண் சுடர் கடவுள் தோய்ந்து ஏக அது கண்டுகொண்டே புழுங்கும் காய் கதிர் கடவுளும் பின்தொடர்வது ஏய்ப்ப கறங்கு அருவி தூங்க ஓங்கும் – மீனாட்சிபிள்ளை:8 76/2

மேல்

தோய (1)

கைம் மலரில் பொலி கதிர் முத்து அம்மனை நகை முத்து ஒளி தோய கண்டவர் நிற்க பிறர் சிலர் செம் கை கமல சுடர் கதுவ – மீனாட்சிபிள்ளை:8 81/1

மேல்

தோயாமே (1)

அதிர பொருது கலி பகைஞன் தமிழ் நீர் நாடு ஆளாமே அகிலத்து உயிர்கள் அயர்த்தும் அறங்கடை நீள்நீர் தோயாமே
சிதைவுற்று அரசியல் நல் தருமம் குடிபோய் மாய்வாகாமே செழியர்க்கு அபயரும் ஒப்பு என நின்று உணராதார் ஓதாமே – மீனாட்சிபிள்ளை:3 31/2,3

மேல்

தோயும் (1)

தூங்கு சிறை அறுகால் உறங்கு குழல் நின் துணை தோழியர்கள் மேல் குங்குமம் தோயும் பனி துறை சிவிறி வீச குறும் துளி எம்மருங்கும் ஓடி – மீனாட்சிபிள்ளை:9 86/1

மேல்

தோழி (1)

துளிக்கும் பனி திவலை சிதறி குடைந்து ஆடு துறையில் துறை தமிழொடும் தொல் மறை தெளிக்கும் கலை கொடி எனும் துணை தோழி மூழ்கி புனல் மடுத்து – மீனாட்சிபிள்ளை:9 87/1

மேல்

தோழியர்கள் (1)

தூங்கு சிறை அறுகால் உறங்கு குழல் நின் துணை தோழியர்கள் மேல் குங்குமம் தோயும் பனி துறை சிவிறி வீச குறும் துளி எம்மருங்கும் ஓடி – மீனாட்சிபிள்ளை:9 86/1

மேல்

தோள் (3)

போர் கொண்ட எண் தோள் பொலன் குவடு பொதியும் வெண்பொடி துடி அடி துவைத்து புழுதி ஆட்டு அயரா ஒர் அயிராவணத்து உலவு போர் களிற்றை துதிப்பாம் – மீனாட்சிபிள்ளை:0 1/2
பணி கொண்ட முடவு பட பாய் சுருட்டு பணை தோள் எருத்து அலைப்ப பழ மறைகள் முறையிட பைந்தமிழ் பின் சென்ற பச்சை பசும் கொண்டலே – மீனாட்சிபிள்ளை:1 2/4
பண் உலாம் வடி தமிழ் பைம் தாமம் விரியும் பணை தோள் எருத்தம் ஏறி பாசொளிய மரகத திருமேனி பச்சை பசும் கதிர் ததும்ப மணி வாய் – மீனாட்சிபிள்ளை:2 14/3

மேல்

தோற்றம் (1)

அள்ளிட வழிந்து செற்று ஒளி துளும்பும் கிரண அருண ரத்ன பலகை புக்கு ஆடும் நின் தோற்றம் அ பரிதி மண்டலம் வளர் அரும் பெரும் சுடரை ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:10 93/2

மேல்

தோற்றிய (1)

பமரம் அடுப்ப கடாம் எடுத்து ஊற்றும் ஓர் பகடு நடத்தி புலோமசை சூல் புயல் பருகியிட கற்பகாடவிப்-பால் பொலி பரவையிடை பத்ம மாது என தோற்றிய
குமரி இருக்க கலா மயில் கூத்து அயர் குளிர் புனம் மொய்த்திட்ட சாரலில் போய் சிறு குறவர் மகட்கு சலாமிடற்கு ஏக்கறு குமரனை முத்துக்குமாரனை போற்றுதும் – மீனாட்சிபிள்ளை:1 5/1,2

மேல்

தோற்று (1)

கீற்று மதி என நிலவு தோற்று பருவத்தில் ஒளி கிளர் நுதல் செவ்வி வவ்வி கெண்டை தடம் கணார் எரு இட்டு இறைஞ்ச கிடந்ததும் உடைந்து அமுதம் விண்டு – மீனாட்சிபிள்ளை:7 65/1

மேல்

தோன்றற்கு (1)

சுழியும் கரும் கண் குண்டு அகழி சுவற்றும் சுடர் வேல் கிரி திரித்த தோன்றற்கு அளித்து சுறவு உயர்த்த சொக்கப்பெருமான் செக்கர் முடி – மீனாட்சிபிள்ளை:1 7/1

மேல்

தோன்றாத்துணைக்கு (1)

சோலை கிளியே உயிர் துணையாம் தோன்றாத்துணைக்கு ஓர் துணையாகி துவாதசாந்த பெருவெளியில் துரியம் கடந்த பரநாத – மீனாட்சிபிள்ளை:5 43/3

மேல்

தோன்றிடும் (1)

துளி தூங்கு தெள் அமுத வெள் அருவி பொழியும் நின் தொல் மரபு தழைய வந்து தோன்றிடும் கௌரியர் குலக்கொழுந்தை கண்டு துணை விழியும் மனமும் நின்று – மீனாட்சிபிள்ளை:7 70/1

மேல்

தோன்று (1)

தெள் அமுத கடல் நடுவில் தோன்று செழும் கமல குயில் போல் தெய்வ கங்கை திரையூடு எழும் ஒரு செம்பவள கொடி போல் – மீனாட்சிபிள்ளை:9 92/2

மேல்

தோன்றுகின்றதும் (1)

சொல் பொலி பழம் பாடல் சொல்லுகின்றவளும் நின் சொருபம் என்பதும் இளநிலா தூற்று மதி மண்டலத்து அமுதமாய் அம்மை நீ தோன்றுகின்றதும் விரிப்ப – மீனாட்சிபிள்ளை:10 94/2

மேல்