ஓ – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஓகைசெயும் (1)

சுண்ணம் திமிர்ந்து தேன் அருவி துளைந்து ஆடு அறுகால் தும்பி பசும் தோட்டு கதவம் திறப்ப மலர் தோகை குடிபுக்கு ஓகைசெயும்
தண் அம் கமல கோயில் பல சமைத்த மருத தச்சன் முழு தாற்று கமுகு நாற்றியிடும் தடம் கா வண பந்தரில் வீக்கும் – மீனாட்சிபிள்ளை:6 59/1,2

மேல்

ஓங்கும் (1)

கலைப்பட்ட வெண் சுடர் கடவுள் தோய்ந்து ஏக அது கண்டுகொண்டே புழுங்கும் காய் கதிர் கடவுளும் பின்தொடர்வது ஏய்ப்ப கறங்கு அருவி தூங்க ஓங்கும்
மலை பட்ட ஆரமும் வயிரமும் பிறவுமாம் மா மணி திரளை வாரி மறி திரை கையால் எடுத்து எறிய நால் கோட்டு மத களிறு பிளிறி ஓடும் – மீனாட்சிபிள்ளை:8 76/2,3

மேல்

ஓட்டி (1)

வீக்கும் சிறு பைம் துகில் தோகை விரியும் கலாபம் மருங்கு அலைப்ப விளையாட்டு அயரும் மணல் சிற்றில் வீட்டு குடிபுக்கு ஓட்டி இருள் – மீனாட்சிபிள்ளை:3 24/1

மேல்

ஓட்டு (1)

சேறு வழுக்கி ஓட்டு அறுக்கும் திரு மா மறுகில் அரசர் பெரும் திண் தேர் ஒதுங்க கொடுஞ்சி நெடும் சிறுதேர் உருட்டும் செம் கண் மழ – மீனாட்சிபிள்ளை:3 26/2

மேல்

ஓட (3)

ஊறும் கரட கடத்து முகந்து ஊற்றும் மத மா மடவியர்-நின்று உதறும் குழல் பூந்துகள் அடங்க ஓட விடுத்த குங்கும செம் – மீனாட்சிபிள்ளை:3 26/1
மை வைத்த செம் சிலையும் அம்புலியும் ஓட நெடு வான் மீன் மணந்து உகந்த வடவரை முகந்த நின் வய கொடி என பொலியும் மஞ்சு இவர் வளாக நொச்சி – மீனாட்சிபிள்ளை:5 48/3
தார் கோல வேணியர் தம் உள்ளம் எனவே பொன் தடம் சிலையும் உருகி ஓட தண் மதி முடித்ததும் வெள் விடைக்கு ஒள் மணி தரித்ததும் விருத்தமாக – மீனாட்சிபிள்ளை:10 98/2

மேல்

ஓடலும் (1)

நின்றிலன் ஓடலும் முன்னழகும் அவன் பின்னழகும் காணா நிலவு விரிந்திடு குறுநகை கொண்டு நெடும் கயிலை கிரியின் – மீனாட்சிபிள்ளை:4 40/2

மேல்

ஓடவும் (1)

அமரில் வெந்இடும் அவ் உதியர் பின் இடும் ஒர் அபயர் முன்னிடு வனத்து ஒக்க ஓடவும் அளவும் எம்முடைய திறை இது என்ன முடி அரசர் எண்ணிலர் ஒர் முற்றத்து வாடவும் – மீனாட்சிபிள்ளை:1 12/1

மேல்

ஓடா (1)

நிகரிட்டு அமர்செய் கணத்தவர் நந்திபிரானோடே ஓடா நிலைகெட்டு உலைய உடற்ற உடைந்து ஒர் ஆன் ஏறு ஆகாமே – மீனாட்சிபிள்ளை:3 32/2

மேல்

ஓடி (6)

உள் நிலா உவகை பெரும் களி துளும்ப நின்று உன் திருத்தாதை நின்னை ஒரு முறை கரம் பொத்தி வருக என அழைத்திடும் முன் ஓடி தவழ்ந்து சென்று – மீனாட்சிபிள்ளை:2 14/1
ஒழுகிய கருணை உவட்டெழவைத்த அருள் பார்வைக்கு உளம் நெகிழ் அடியர் பவ கடல் வற்ற அலைத்து ஓடி
குழையொடு பொருது கொலை கணையை பிணையை சீறீ குமிழொடு பழகி மதர்த்த கயல் கண் மட பாவாய் – மீனாட்சிபிள்ளை:4 41/1,2
உயிராய் இருக்கின்ற சேடியரில் மலர் மீது உதித்தவள் எதிர்த்து நின்னோடு ஒட்டி எட்டி பிடித்திட்ட அம்மனை தேடி ஓடி ஆடி திரிய நீ – மீனாட்சிபிள்ளை:8 78/1
கள் நாறு குழலியர் குட கொங்கை பொங்கு செம் களபமும் கத்தூரியும் கப்புரமும் ஒக்க கரைத்து ஓடி வாணியும் காளிந்தியும் கங்கையாம் – மீனாட்சிபிள்ளை:9 85/3
தூங்கு சிறை அறுகால் உறங்கு குழல் நின் துணை தோழியர்கள் மேல் குங்குமம் தோயும் பனி துறை சிவிறி வீச குறும் துளி எம்மருங்கும் ஓடி
வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ் வண்ணமா செய்வது அ செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 86/1,2
ஒளிக்கும் பதத்து மற்றவள் என அன பேடை ஓடி பிடிப்பது அம்மை ஒண் பரிபுர தொனியும் மட நடையும் வௌவினது உணர்ந்து பின்தொடர்வது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 87/2

மேல்

ஓடினது (1)

ஊற்று புது வெண் கலை உடுத்து முழுமதி என உதித்த அமையத்தும் அம்மை ஒண் முகத்து ஒழுகு திரு அழகை கவர்ந்துகொண்டு ஓடினது நிற்க மற்றை – மீனாட்சிபிள்ளை:7 65/2

மேல்

ஓடு (4)

கணி கொண்ட தண் துழாய் காடு அலைத்து ஓடு தேம் கலுழி பாய்ந்து அளறுசெய்ய கழனி படு நடவையில் கமலத்து அணங்கு அரசு ஒர் கை அணை முகந்து செல்ல – மீனாட்சிபிள்ளை:1 2/3
அலைத்து ஓடு வைகை துறைப்படி மட பிடியொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 64/4
அம் கண் நெடு நிலம் விடர்பட கிழித்து ஓடு வேர் அடியில் பழுத்த பலவின் அளி பொன் சுளை குட கனி உடைந்து ஊற்று தேன் அருவி பிலம் ஏழும் முட்டி – மீனாட்சிபிள்ளை:10 96/3
அருள் பொழியும் மதி முகமும் முக மதியின் நெடு நிலவு அரும்பு குறுநகையும் ஞானானந்த மா கடல் குடைந்து குழை மகரத்தொடு அமராடும் ஓடு அரி கண் – மீனாட்சிபிள்ளை:10 102/3

மேல்

ஓடுகின்றாய் (1)

ஒளி தூங்கு தெளி விசும்பினில் நின்னொடு ஒத்தவன் ஒருத்தன் கரத்தின் வாரி உண்டு ஒதுக்கிய மிச்சில் நள் இருளில் அள்ளி உண்டு ஓடுகின்றாய் என் செய்தாய் – மீனாட்சிபிள்ளை:7 70/3

மேல்

ஓடும் (4)

ஓடும் படலை முகில் படலம் உவர் நீத்து உவரி மேய்ந்து கரு ஊறும் கமம் சூல் வயிறு உடைய உகைத்து கடவுள் கற்பக பூம் – மீனாட்சிபிள்ளை:3 25/1
புலத்து ஓடும் உடுமீன் கணத்தோடும் ஓடும் நின் போல்வார்க்கு மா பாதகம் போக்கும் இ தலம் அலது புகல் இல்லை காண் மிசை பொங்கு புனல் கற்பக காடு – மீனாட்சிபிள்ளை:7 64/3
புலத்து ஓடும் உடுமீன் கணத்தோடும் ஓடும் நின் போல்வார்க்கு மா பாதகம் போக்கும் இ தலம் அலது புகல் இல்லை காண் மிசை பொங்கு புனல் கற்பக காடு – மீனாட்சிபிள்ளை:7 64/3
மலை பட்ட ஆரமும் வயிரமும் பிறவுமாம் மா மணி திரளை வாரி மறி திரை கையால் எடுத்து எறிய நால் கோட்டு மத களிறு பிளிறி ஓடும்
அலை பட்ட வைகை துறை சிறை அன பேடை அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 76/3,4

மேல்

ஓதா (1)

தகர கரிய குழல் சிறு பெண்பிள்ளை நீயோ தூயோன் வாழ் சயிலத்து எயிலை வளைப்பவள் என்று எதிர் சீறா வீறு ஓதா
நிகரிட்டு அமர்செய் கணத்தவர் நந்திபிரானோடே ஓடா நிலைகெட்டு உலைய உடற்ற உடைந்து ஒர் ஆன் ஏறு ஆகாமே – மீனாட்சிபிள்ளை:3 32/1,2

மேல்

ஓதாமே (1)

சிதைவுற்று அரசியல் நல் தருமம் குடிபோய் மாய்வாகாமே செழியர்க்கு அபயரும் ஒப்பு என நின்று உணராதார் ஓதாமே
மதுரை பதி தழைய தழையும் கொடி தாலோ தாலேலோ மலயத்துவசன் வளர்த்த பசும் கிளி தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 31/3,4

மேல்

ஓதி (1)

ஒல்கும் கொடி சிறு மருங்குற்கு இரங்கி மெல் ஓதி வண்டு ஆர்த்து எழ பொன் ஊசலை உதைந்து ஆடும் அளவின் மலர்_மகள் அம்மை உள் அடி கூன் பிறை தழீஇ – மீனாட்சிபிள்ளை:10 100/1

மேல்

ஓதிம (1)

விரைக்கும் தளிர் கை கொழும் தாமரை துஞ்சி மீது எழுந்து ஆர்த்த பிள்ளை வெள் ஓதிம திரள் இது எனவும் கரும் பாறை மீமிசை செஞ்சாந்து வைத்து – மீனாட்சிபிள்ளை:8 73/3

மேல்

ஓதிமத்தின் (1)

தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் – மீனாட்சிபிள்ளை:1 9/2

மேல்

ஓதிமம் (3)

மஞ்சு ஊட்டு அகட்டு நெடு வான் முகடு துருவும் ஒரு மறை ஓதிமம் சலிக்க மறி திரை சிறை விரியும் ஆயிர முக கடவுள் மந்தாகினி பெயர்த்த – மீனாட்சிபிள்ளை:1 8/3
செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடை கரு மிடற்று தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலை திருவை புரக்க என்றே – மீனாட்சிபிள்ளை:1 8/4
செம் சிலம்பு அடி பற்று தெய்வ குழாத்தினொடு சிறை ஓதிமம் பின் செல சிற்றிடைக்கு ஒல்கி மணிமேகலை இரங்க திருக்கோயில் என என் நெஞ்ச – மீனாட்சிபிள்ளை:6 53/3

மேல்

ஓதிமமும் (1)

பிள்ளை வெள் ஓதிமமும் முறைமுறையால் பெருகிய காதலை மேல் பேச விடுப்ப கடுப்ப அணைத்து ஒரு பெடையோடு அரச அனம் – மீனாட்சிபிள்ளை:8 82/3

மேல்

ஓதும் (2)

கருணையின் முழுகிய கயல் திரி பசிய கரும்பே வெண் சோதி கலை மதி மரபில் ஒர் இளமயில் என வளர் கன்றே என்று ஓதும்
திருமகள் கலைமகள் தலைமகள் மலைமகள் செங்கோ செங்கீரை தெளி தமிழ் மதுரையில் வளரும் ஒர் இளமயில் செங்கோ செங்கீரை – மீனாட்சிபிள்ளை:2 21/3,4
அம் கண் நெடும் புவனங்கள் தொழும்-தொறும் அஞ்சேல் என்று ஓதும் அபயமும் வரதமும் உபயமும் உடைய அணங்கே வெம் கோப – மீனாட்சிபிள்ளை:2 22/2

மேல்

ஓர் (10)

பமரம் அடுப்ப கடாம் எடுத்து ஊற்றும் ஓர் பகடு நடத்தி புலோமசை சூல் புயல் பருகியிட கற்பகாடவிப்-பால் பொலி பரவையிடை பத்ம மாது என தோற்றிய – மீனாட்சிபிள்ளை:1 5/1
தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் – மீனாட்சிபிள்ளை:1 9/2
எற்று புனலில் கழுவு புவன பழம் கலம் எடுத்து அடுக்கி புது கூழ் இன் அமுதமும் சமைத்து அன்னை நீ பல் முறை இழைத்திட அழித்துஅழித்து ஓர்
முற்ற வெளியில் திரியும் மத்த பெரும் பித்தன் முன் நின்று தொந்தம் இடவும் முனியாது வைகலும் எடுத்து அடுக்கி பெரிய மூது அண்ட கூடம் மூடும் – மீனாட்சிபிள்ளை:2 15/2,3
சங்கு கிடந்த தடம் கை நெடும் புயல் தங்காய் பங்காய் ஓர் தமனிய மலை படர் கொடி என வடிவு தழைந்தாய் எந்தாய் என்று – மீனாட்சிபிள்ளை:2 22/1
சிகர பொதிய மிசை தவழும் சிறுதேர் மேலே போய் ஓர் சிவனை பொருத சமர்த்தன் உகந்து அருள் சேல் போல் மாயாமே – மீனாட்சிபிள்ளை:3 32/3
வட்டம் சுழல மட்டித்து நட்டமிடு மதுமத்தர் சுத்த நித்த வட்டத்தினுக்கு இசைய ஒற்றி கனத்த தன வட்டத்தை ஒத்திட்டது ஓர்
தாள வட்டம் கொட்டு கைப்பாணி ஒப்ப ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 33/3,4
சோலை கிளியே உயிர் துணையாம் தோன்றாத்துணைக்கு ஓர் துணையாகி துவாதசாந்த பெருவெளியில் துரியம் கடந்த பரநாத – மீனாட்சிபிள்ளை:5 43/3
நத்தம் வளர அளகையர்_கோன் நகரில் வளரும் வான் மணியும் நளின பொகுட்டில் வீற்றிருக்கும் நங்கை மனைக்கு ஓர் விளக்கம் என – மீனாட்சிபிள்ளை:5 46/2
குருந்தே வருக அருள் பழுத்த கொம்பே வருக திரு கடைக்கண் கொழித்த கருணை பெரு வெள்ளம் குடைவார் பிறவி பெரும் பிணிக்கு ஓர்
மருந்தே வருக பசுங்குதலை மழலை கிளியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே – மீனாட்சிபிள்ளை:6 62/3,4
விழியும் சிவப்ப ஆனந்த வெள்ளம் பொழிந்து நின்றனையால் மீண்டும் பெருக விடுத்து அவற்கு ஓர் வேலை இடுதல் மிகை அன்றே – மீனாட்சிபிள்ளை:9 89/2

மேல்

ஓர்ந்தோ (1)

குண்டு படு பாற்கடல் வரும் திருச்சேடியொடு கூடப்பிறந்தது ஓர்ந்தோ கோமாட்டி இவள் நின்னை வம் என கொம் என கூவிட பெற்றாய் உனக்கு – மீனாட்சிபிள்ளை:7 63/3

மேல்

ஓல (1)

பொங்கு ஓல வேலை புறத்தினொடு அகத்தின் நிமிர் போர் ஆழி பரிதி இரத பொங்கு ஆழி மற்ற பொருப்பு ஆழியில் திரி புலம்பை புலம்புசெய்ய – மீனாட்சிபிள்ளை:5 50/3

மேல்

ஓலிட (2)

அம் சிலம்பு ஓலிட அரி குரல் கிண்கிணி அரற்று செம் சீறடி பெயர்த்து அடியிடும்-தொறும் நின் அலத்தக சுவடு பட்டு அம்புவி அரம்பையர்கள்-தம் – மீனாட்சிபிள்ளை:6 53/1
வளை ஆடு வண் கை பொலன் சங்கொடும் பொங்கு மறி திரை சங்கு ஓலிட மதர் அரி கண் கயல் வரி கயலொடும் புரள மகரந்தம் உண்டு வண்டின் – மீனாட்சிபிள்ளை:9 83/1

மேல்

ஓலிடும் (3)

சங்கு ஓலிடும் கடல் தானைக்கு வெந்இடு தராபதிகள் முன்றில் தூர்த்த தமனிய குப்பையும் திசை_முதல்வர் தட முடி தாமமும் தலைமயங்க – மீனாட்சிபிள்ளை:5 50/1
கொங்கு ஓலிடும் கை கொடும் கோலொடும் திரி குறும்பன் கொடி சுறவும் நின் கொற்ற பதாகை குழாத்தினொடும் இரசத குன்றினும் சென்று உலாவ – மீனாட்சிபிள்ளை:5 50/2
தண் நாறும் மல்லல் துறை சிறை அனம் களி தழைக்கும் கலா மஞ்ஞையாய் சகலமும் நின் திரு சொருபம் என்று ஓலிடும் சதுர்மறை பொருள் வெளியிட – மீனாட்சிபிள்ளை:9 85/2

மேல்

ஓவம் (1)

மெய்வந்த நாணினொடு நுதல் வந்து எழும் குறுவெயர்ப்பினொடு உயிர்ப்பு வீங்கும் விம்மிதமுமாய் நின்ற உயிர் ஓவம் என ஊன்று வில் கடை விரல் கடை தழீஇ – மீனாட்சிபிள்ளை:4 34/3

மேல்

ஓவியம் (1)

அத்தன் மனத்து எழுதிய உயிர் ஓவியம் ஆடுக அம்மனையே அழகு தழைந்த கல்யாண சவுந்தரி ஆடுக அம்மனையே – மீனாட்சிபிள்ளை:8 79/4

மேல்

ஓவியமே (1)

உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திரு உள்ளத்தில் அழகு ஒழுக எழுதி பார்த்திருக்கும் உயிர் ஓவியமே மதுகரம் வாய் – மீனாட்சிபிள்ளை:6 61/3

மேல்