கை – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


கை (29)

கணி கொண்ட தண் துழாய் காடு அலைத்து ஓடு தேம் கலுழி பாய்ந்து அளறுசெய்ய கழனி படு நடவையில் கமலத்து அணங்கு அரசு ஒர் கை அணை முகந்து செல்ல – மீனாட்சிபிள்ளை:1 2/3
குழியும் சிறு கண் ஏற்று உருமு குரல் வெண் புயலும் கரும் புயலும் குன்றம் குலைய உகைத்து ஏறும் குலிச தட கை புத்தேளே – மீனாட்சிபிள்ளை:1 7/4
குடமொடு குடவியர் பாணி கை கோத்திடு குரவையும் அலது ஒர் பணா முடி சூட்டு அருள் குதிகொள நடமிடும் ஆடலுக்கு ஏற்ப ஒர் குழல் இசை பழகு அளி பாடிட கேட்டு உடை – மீனாட்சிபிள்ளை:1 11/3
கமலன் முன்னிவிடும் அரச அன்னம் எழுகடலில் அன்னமுடன் நட்பு கை கூடவும் கரிய செம்மலொடும் இளைய செம்மல் விடு கருடன் மஞ்ஞையொடு ஒர் கட்சிக்குள் ஊடவும் – மீனாட்சிபிள்ளை:1 12/5
தண் உலாம் மழலை பசுங்குதலை அமுது இனிய தாய் வயிறு குளிர ஊட்டி தட மார்பம் நிறை குங்கும சேறு அளைந்து பொன் தாள் தோய் தட கை பற்றி – மீனாட்சிபிள்ளை:2 14/2
சங்கு கிடந்த தடம் கை நெடும் புயல் தங்காய் பங்காய் ஓர் தமனிய மலை படர் கொடி என வடிவு தழைந்தாய் எந்தாய் என்று – மீனாட்சிபிள்ளை:2 22/1
தைவந்த நாணினொடு தவழ்தந்த செம் கை கொடு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 34/4
தாமரை பழுத்த கை தளிர் ஒளி துளும்ப ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 35/4
பண் அளிக்கும் குதலை அமுது ஒழுகு குமுத பசும் தேறல் ஊறல் ஆடும் பைங்குழவி பெருவிரல் சுவைத்து நீ பருகிட பைம் தேறல் ஊறு வண் கை
தண் அளி கமலம் சிவப்பூற அம்மை ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 36/3,4
தாலாட்டி ஆட்டு கை தாமரை முகிழ்த்து அம்மை சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 37/4
பின்னல் திரை கடல் மது குடம் அற தேக்கு பெய் முகில் கார் உடல வெண் பிறை மதி கூன் குய கை கடைஞரொடு புடைபெயர்ந்து இடை நுடங்க ஒல்கு – மீனாட்சிபிள்ளை:5 49/1
கொங்கு ஓலிடும் கை கொடும் கோலொடும் திரி குறும்பன் கொடி சுறவும் நின் கொற்ற பதாகை குழாத்தினொடும் இரசத குன்றினும் சென்று உலாவ – மீனாட்சிபிள்ளை:5 50/2
முடம்பட்ட மதி அங்குச படை என ககன முகடு கை தடவி உடுமீன் முத்தம் பதித்திட்ட முகபடாம் என எழு முகில் படாம் நெற்றி சுற்றும் – மீனாட்சிபிள்ளை:6 56/3
நடக்கும் கதிர் பொன் பரிசிலா நகு வெண் பிறை கை தோணியதா நாள்மீன் பரப்பு சிறு மிதப்பா நாப்பண் மிதப்ப நால் கோட்டு – மீனாட்சிபிள்ளை:6 58/2
தகர குழலின் நறையும் நறை தரு தீம் புகையும் திசைக்களிற்றின் தட கை நாசி புழை மடுப்ப தளரும் சிறு நுண் மருங்குல் பெரும் – மீனாட்சிபிள்ளை:6 60/1
சிகர களப பொம்மல் முலை தெய்வ மகளிர் புடை இரட்டும் செம் கை கவரி முகந்து எறியும் சிறுகாற்கு ஒசிந்து குடிவாங்க – மீனாட்சிபிள்ளை:6 60/2
கும்பம் சுமந்த மத வெள்ள நீர் கொட்டும் கொடும் களிறு இடும் போர்வையான் குடில கோடீரத்து இருந்துகொண்டு அம் நலார் கொய் தளிர் கை வருடவும் – மீனாட்சிபிள்ளை:7 69/1
விரைக்கும் தளிர் கை கொழும் தாமரை துஞ்சி மீது எழுந்து ஆர்த்த பிள்ளை வெள் ஓதிம திரள் இது எனவும் கரும் பாறை மீமிசை செஞ்சாந்து வைத்து – மீனாட்சிபிள்ளை:8 73/3
அரைக்கும் திரை கை வெள் அருவி வைகை துறைவி அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 73/4
வித்துருமத்தில் இழைத்தவும் நின் கை விரல் பவள தளிரின் விளை தரும் ஒள் ஒளி திருட போவதும் மீள்வதுமாய் திரிய – மீனாட்சிபிள்ளை:8 79/3
கைம் மலரில் பொலி கதிர் முத்து அம்மனை நகை முத்து ஒளி தோய கண்டவர் நிற்க பிறர் சிலர் செம் கை கமல சுடர் கதுவ – மீனாட்சிபிள்ளை:8 81/1
வளை ஆடு வண் கை பொலன் சங்கொடும் பொங்கு மறி திரை சங்கு ஓலிட மதர் அரி கண் கயல் வரி கயலொடும் புரள மகரந்தம் உண்டு வண்டின் – மீனாட்சிபிள்ளை:9 83/1
தளை ஆடு கறை அடி சிறு கண் பெரும் கை தடம் களிறு எடுத்து மற்று அ தவள களிற்றினொடு முட்டவிட்டு எட்டு மத தந்தியும் பந்து அடித்து – மீனாட்சிபிள்ளை:9 83/3
நிரை பொங்கிடும் செம் கை வெள் வளை கலிப்ப நகை நிலவு விரி பவளம் வெளிற நீல கருங்குவளை செங்குவளை பூப்ப அறல் நெறி குழல் கற்றை சரிய – மீனாட்சிபிள்ளை:9 84/1
நெளிக்கும் தரங்க தடம் கங்கையுடன் ஒட்டி நித்தில பந்து ஆடவும் நிரை மணி திரளின் கழங்கு ஆடவும் தன் நெடும் திரை கை எடுத்து – மீனாட்சிபிள்ளை:9 87/3
கார் கொந்தள கோதை மடவியர் குழற்கு ஊட்டு கமழ் நறும் புகை விண் மிசை கை பரந்து எழுவது உரு மாறு இரவி மண்டலம் கைக்கொள இருள் படலம் வான் – மீனாட்சிபிள்ளை:10 97/3
கார் கோல நீல கரும் களத்தோடு ஒருவர் செங்களத்து ஏற்று அலமர கண் கணை துரக்கும் கரும் புருவ வில்லொடு ஒரு கை வில் குனித்து நின்ற – மீனாட்சிபிள்ளை:10 98/3
தென் செய்த மழலை சுரும்பராய் மங்கை நின் செம் கை பசும் கிள்ளையாய் தேவதேவன் பொலிவதும் எவ் உருவுமாம் அவன் திருவுருவின் முறை தெரிப்ப – மீனாட்சிபிள்ளை:10 101/2
திரு இடையும் உடைதாரமும் ஒட்டியாணமும் செம் கை பசும் கிள்ளையும் திரு முலை தரள உத்தரியமும் மங்கல திருநாணும் அழகு ஒழுக நின்று – மீனாட்சிபிள்ளை:10 102/2

மேல்

கைக்கு (1)

குமரர் முன் இருவர் அமரர் அன்னை இவள் குமரி இன்னமும் என சித்தர் பாடவும் குரவை விம்ம அரமகளிர் மண்ணில் எழில் குலவு கன்னியர்கள் கைக்கு ஒக்க ஆடவும் – மீனாட்சிபிள்ளை:1 12/4

மேல்

கைக்கொள (1)

கார் கொந்தள கோதை மடவியர் குழற்கு ஊட்டு கமழ் நறும் புகை விண் மிசை கை பரந்து எழுவது உரு மாறு இரவி மண்டலம் கைக்கொள இருள் படலம் வான் – மீனாட்சிபிள்ளை:10 97/3

மேல்

கைத்தலமோடு (1)

கைத்தலமோடு இரு கரட கரை திரை கக்கு கடாம் உடை கடலில் குளித்து எமர் – மீனாட்சிபிள்ளை:1 4/1

மேல்

கைப்பாணி (1)

தாள வட்டம் கொட்டு கைப்பாணி ஒப்ப ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 33/4

மேல்

கைம் (2)

முத்தம் அழுத்திய அம்மனை கைம் மலர் முளரி மணம் கமழ மொய் குழல் வண்டு நின் மை விழி வண்டின் முயங்கி மயங்கியிட – மீனாட்சிபிள்ளை:8 79/1
கைம் மலரில் பொலி கதிர் முத்து அம்மனை நகை முத்து ஒளி தோய கண்டவர் நிற்க பிறர் சிலர் செம் கை கமல சுடர் கதுவ – மீனாட்சிபிள்ளை:8 81/1

மேல்

கைம்மலை (1)

கடவி விண்ணரசு நடவும் வெம் முனைய களிறு கைம்மலை செல் கொப்பத்து வீழவும் கனக மன்னு தட நளினி துன்னி இரு கமல மின்னும் ஒரு பத்மத்துள் மேவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/6

மேல்

கையால் (2)

மலை பட்ட ஆரமும் வயிரமும் பிறவுமாம் மா மணி திரளை வாரி மறி திரை கையால் எடுத்து எறிய நால் கோட்டு மத களிறு பிளிறி ஓடும் – மீனாட்சிபிள்ளை:8 76/3
கரை பொங்கு மறி திரை கையால் தடம் பணை கழனியில் கன்னியர் முலை களப குழம்பை கரைத்துவிட்டு அள்ளல் கரும் சேறு செம் சேறதாய் – மீனாட்சிபிள்ளை:9 84/3

மேல்

கையில் (3)

தடம் பட்ட பொன் தாது சிந்துரம் கும்ப தலத்து அணிவது ஒப்ப அப்பி சலராசி ஏழும் தட கையில் முகந்து பின் தான நீரால் நிரப்பி – மீனாட்சிபிள்ளை:6 56/2
குலைப்பட்ட காந்தள் தளிர் கையில் செம் மணி குயின்ற அம்மனை நித்திலம் கோத்த அம்மனை முன் செல பின் செலும் தன்மை கோகனக மனையாட்டி-பால் – மீனாட்சிபிள்ளை:8 76/1
கள் அவிழ் கோதை விசும்புற வீசுவ கண்_நுதல்-பால் செல நின் கையில் வளர்த்த பசும் கிளியும் வளர் காமர் கரும் குயிலும் – மீனாட்சிபிள்ளை:8 82/2

மேல்

கையின் (1)

தமரான நின் துணை சேடியரில் ஒருசிலர் தட கையின் எடுத்து ஆடும் நின் தரள அம்மனை பிடித்து எதிர் வீசிவீசி இடசாரி வலசாரி திரியா – மீனாட்சிபிள்ளை:8 77/1

மேல்

கைவந்த (1)

கைவந்த கொழுநரொடும் உள்ள புணர்ச்சி கருத்தான் அகத்து ஒடுங்க கவிழ் தலை வணக்கொடு முலைக்கண் வைத்திடும் ஒரு கடைக்கண் நோக்கு அமுதம் ஊற்ற – மீனாட்சிபிள்ளை:4 34/2

மேல்