நு – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்

நுசுப்பிற்கு (1)

துடிபட்ட கொடி நுண் நுசுப்பிற்கு உடைந்து என சுடு கடைக்கனலி தூண்டும் சுழல் கண் முடங்கு உளை மடங்கலை உகைத்து ஏறு சூர் அரி பிணவு காக்க – மீனாட்சிபிள்ளை:1 10/2

மேல்

நுசுப்பு (2)

பெருகு பரமானந்த வெள்ள பெருக்கே சிறியேம் பெற்ற பெரும் பேறே ஊறு நறை கூந்தல் பிடியே கொடி நுண் நுசுப்பு ஒசிய – மீனாட்சிபிள்ளை:5 44/2
வாடும் கொடி நுண் நுசுப்பு ஒசிய மடவ மகளிருடன் ஆடும் வண்டல் துறைக்கு வைத்து நெய்த்து மணம் தாழ் நறு மென் புகை படலம் – மீனாட்சிபிள்ளை:5 47/3

மேல்

நுடங்க (2)

பொய்வந்த நுண் இடை நுடங்க கொடிஞ்சி பொலம் தேரொடு அமரகத்து பொன் மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்று அம்மை பொம்மல் முலை மூன்றில் ஒன்று – மீனாட்சிபிள்ளை:4 34/1
பின்னல் திரை கடல் மது குடம் அற தேக்கு பெய் முகில் கார் உடல வெண் பிறை மதி கூன் குய கை கடைஞரொடு புடைபெயர்ந்து இடை நுடங்க ஒல்கு – மீனாட்சிபிள்ளை:5 49/1

மேல்

நுடங்கிய (1)

பசைந்திடு ஞாலம் மலர்ந்தமை வெளிறி ஒர் பச்சுடல் சொல்லவும் ஒர் பைம் கொடி ஒல்கவும் ஒல்கி நுடங்கிய பண்டி சரிந்து ஆட – மீனாட்சிபிள்ளை:2 19/2

மேல்

நுண் (8)

துடிபட்ட கொடி நுண் நுசுப்பிற்கு உடைந்து என சுடு கடைக்கனலி தூண்டும் சுழல் கண் முடங்கு உளை மடங்கலை உகைத்து ஏறு சூர் அரி பிணவு காக்க – மீனாட்சிபிள்ளை:1 10/2
துகிலொடு சோர்தரு கொடி நுண் மருங்குல் துவண்டுதுவண்டு ஆட தொந்தி சரிந்திட உந்தி கரந்து ஒளிர் சூலுடை ஆல் அடை மற்று – மீனாட்சிபிள்ளை:2 18/3
பொய்வந்த நுண் இடை நுடங்க கொடிஞ்சி பொலம் தேரொடு அமரகத்து பொன் மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்று அம்மை பொம்மல் முலை மூன்றில் ஒன்று – மீனாட்சிபிள்ளை:4 34/1
பெருகு பரமானந்த வெள்ள பெருக்கே சிறியேம் பெற்ற பெரும் பேறே ஊறு நறை கூந்தல் பிடியே கொடி நுண் நுசுப்பு ஒசிய – மீனாட்சிபிள்ளை:5 44/2
வாடும் கொடி நுண் நுசுப்பு ஒசிய மடவ மகளிருடன் ஆடும் வண்டல் துறைக்கு வைத்து நெய்த்து மணம் தாழ் நறு மென் புகை படலம் – மீனாட்சிபிள்ளை:5 47/3
தகர குழலின் நறையும் நறை தரு தீம் புகையும் திசைக்களிற்றின் தட கை நாசி புழை மடுப்ப தளரும் சிறு நுண் மருங்குல் பெரும் – மீனாட்சிபிள்ளை:6 60/1
மாடக கடை திரித்து இன் நரம்பு ஆர்த்து உகிர் வடிம்பு தைவரும் அம் நலார் மகரயாழ் மழலைக்கும் மரவங்கள் நுண் துகில் வழங்க கொழும் கோங்கு தூங்கு – மீனாட்சிபிள்ளை:7 72/3
திரை பொங்கு தண் அம் துறை குடைந்து ஆடுவ செழும் தரங்க கங்கை நுண் சிறு திவலையா பொங்கும் ஆனந்த மா கடல் திளைத்து ஆடுகின்றது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 84/2

மேல்

நுதல் (5)

முக மதி ஊடு எழு நகை நிலவு ஆட முடி சூழியம் ஆட முரி புருவ கொடி நுதல் இடு சுட்டி முரிப்பொடு அசைந்து ஆட – மீனாட்சிபிள்ளை:2 18/1
மெய்வந்த நாணினொடு நுதல் வந்து எழும் குறுவெயர்ப்பினொடு உயிர்ப்பு வீங்கும் விம்மிதமுமாய் நின்ற உயிர் ஓவம் என ஊன்று வில் கடை விரல் கடை தழீஇ – மீனாட்சிபிள்ளை:4 34/3
துண்டுபடு மதி நுதல் தோகையொடும் அளவில் பல தொல் உரு எடுத்து அமர்செயும் தொடு சிலை என ககன முகடு முட்டி பூம் துணர் தலை வணங்கி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:6 54/3
கீற்று மதி என நிலவு தோற்று பருவத்தில் ஒளி கிளர் நுதல் செவ்வி வவ்வி கெண்டை தடம் கணார் எரு இட்டு இறைஞ்ச கிடந்ததும் உடைந்து அமுதம் விண்டு – மீனாட்சிபிள்ளை:7 65/1
தழைக்கும் துகில் கொடி முகில் கொடி திரைத்து மேல் தலம் வளர் நகில் கொடிகளை தாழ் குழலும் நீவி நுதல் வெயர்வும் துடைத்து அம்மை சமயம் இது என்று அலுவலிட்டு – மீனாட்சிபிள்ளை:7 71/3

மேல்

நுதல்-பால் (1)

கள் அவிழ் கோதை விசும்புற வீசுவ கண்_நுதல்-பால் செல நின் கையில் வளர்த்த பசும் கிளியும் வளர் காமர் கரும் குயிலும் – மீனாட்சிபிள்ளை:8 82/2

மேல்

நுதலொடு (1)

பதுமமொடு ஒழுகு ஒளி வளையும் நின் நளின முகத்தும் மிடற்றும் உற பனி மதியொடு சுவை அமுதமும் நுதலொடு சொல் குதலைக்-கண் நிறீஇ – மீனாட்சிபிள்ளை:5 52/3

மேல்

நுரை (1)

பெயராது இருந்து விளையாடுவது கண்டு எந்தை பிறை முடி துளக்க முடி மேல் பெருகு சுர கங்கை நுரை பொங்கல் அம்மானை அ பெண்கொடியும் ஆடல் மான – மீனாட்சிபிள்ளை:8 78/2

மேல்

நுரைத்து (1)

ஏறு பொரு வேல் இளைஞர் கடவு இவுளி கடைவாய் குதட்ட வழிந்து இழியும் விலாழி குமிழி எறிந்து இரைத்து திரைத்து நுரைத்து ஒரு பேர் – மீனாட்சிபிள்ளை:3 26/3

மேல்