மெ – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெய்வந்த 1
மெல் 1
மெல்லியர் 1
மெள்ள 1
மென் 10

மெய்வந்த (1)

மெய்வந்த நாணினொடு நுதல் வந்து எழும் குறுவெயர்ப்பினொடு உயிர்ப்பு வீங்கும் விம்மிதமுமாய் நின்ற உயிர் ஓவம் என ஊன்று வில் கடை விரல் கடை தழீஇ – மீனாட்சிபிள்ளை:4 34/3

மேல்

மெல் (1)

ஒல்கும் கொடி சிறு மருங்குற்கு இரங்கி மெல் ஓதி வண்டு ஆர்த்து எழ பொன் ஊசலை உதைந்து ஆடும் அளவின் மலர்_மகள் அம்மை உள் அடி கூன் பிறை தழீஇ – மீனாட்சிபிள்ளை:10 100/1

மேல்

மெல்லியர் (1)

மின்னல் தடித்து கரும் பொன் தொடி கடைசி மெல்லியர் வெரீஇ பெயர வான் மீன் கணம் வெருக்கொள்ள வெடி வரால் குதிகொள்ளும் விண் புலம் விளை புலம் என – மீனாட்சிபிள்ளை:5 49/2

மேல்

மெள்ள (1)

எண்_இல் பல புவன பெரும் தட்டை ஊடுருவி இவள் பெரும் புகழ் நெடு நிலா எங்கணும் நிறைந்திடுவது அங்கு அதனில் மெள்ள நீ எள்ளளவு மொண்டுகொண்டு – மீனாட்சிபிள்ளை:7 67/1

மேல்

மென் (10)

வெம் சூட்டு நெட்டு உடல் விரிக்கும் பட பாயல் மீமிசை துஞ்சும் நீலமேகத்தின் ஆகத்து விடு சுடர் படலை மணி மென் பரல் உறுத்த நொந்து – மீனாட்சிபிள்ளை:1 8/1
கொழுதி மதர் வண்டு உழக்கு குழல் கோதைக்கு உடைந்த கொண்டலும் நின் குதலை கிளி மென் மொழிக்கு உடைந்த குறும் கண் கரும்பும் கூன் பிறை கோடு – மீனாட்சிபிள்ளை:5 45/1
எழுது தடம் தோட்கு உடைந்த தடம் பணையும் பணை மென் முலைக்கு உடைந்த இணை மா மருப்பும் தரு முத்து உன் திரு முத்து ஒவ்வா இகபரங்கள் – மீனாட்சிபிள்ளை:5 45/3
வாடும் கொடி நுண் நுசுப்பு ஒசிய மடவ மகளிருடன் ஆடும் வண்டல் துறைக்கு வைத்து நெய்த்து மணம் தாழ் நறு மென் புகை படலம் – மீனாட்சிபிள்ளை:5 47/3
மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தை முடி வளர் இளம்பிறையும் நாற மணி நூபுரத்து அவிழும் மென் குரற்கோ அசையும் மட நடைக்கோ தொடர்ந்து உன் – மீனாட்சிபிள்ளை:6 53/2
எடுக்கும் தொழும்பர் உள கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர் சிமய இமய பொருப்பில் விளையாடும் இள மென் பிடியே எறி தரங்கம் – மீனாட்சிபிள்ளை:6 61/2
செம் கண் இளைஞர் களி காம தீ மூண்டிட கண்டு இளமகளிர் செழு மென் குழற்கு ஊட்டு அகில் புகையால் திரள் காய் கதலி பழுத்து நறை – மீனாட்சிபிள்ளை:9 88/3
பில்கும் குறும் பனி கூதிர்க்கு உடைந்து என பிரசம் நாறு ஐம்பாற்கு இளம் பேதையர்கள் ஊட்டும் கொழும் புகை மடுத்து மென் பெடையொடு வரி சுரும்பர் – மீனாட்சிபிள்ளை:10 100/3
மின் செய்த சாயலவர் மேல் தலத்து ஆடிய விரை புனலின் அருவி குடையும் வெள் ஆனை குங்கும செம் சேறு நாற மட மென் பிடியை அஞ்சி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:10 101/3
இரு பதமும் மென் குரல் கிண்கிணியும் முறையிட்டு இரைத்திடும் அரி சிலம்பும் இறும் இறும் மருங்கு என்று இரங்குமே கலையும் பொன் எழுது செம்பட்டு வீக்கும் – மீனாட்சிபிள்ளை:10 102/1

மேல்