வா – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்

வாக்கும் (1)

வாக்கும் குட கூன் குழிசியில் அம் மது வார்த்து அரித்த நித்திலத்தின் வல்சி புகட்டி வடித்து எடுத்து வயல் மா மகளிர் குழாம் சிறுசோறு – மீனாட்சிபிள்ளை:3 24/3

மேல்

வாங்கு (1)

வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ் வண்ணமா செய்வது அ செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 86/2

மேல்

வாங்கும் (1)

வடிபட்ட மு குடுமி வடி வேல் திரித்திட்டு வளை கரும் கோட்டு மோட்டு மகிடம் கவிழ்த்து கடாம் கவிழ்க்கும் சிறு கண் மால் யானை வீங்க வாங்கும்
துடிபட்ட கொடி நுண் நுசுப்பிற்கு உடைந்து என சுடு கடைக்கனலி தூண்டும் சுழல் கண் முடங்கு உளை மடங்கலை உகைத்து ஏறு சூர் அரி பிணவு காக்க – மீனாட்சிபிள்ளை:1 10/1,2

மேல்

வாச (1)

மீன் ஒழுகு மா இரு விசும்பில் செலும் கடவுள் வேழத்தின் மத்தகத்து வீற்றிருக்கும் சேயிழைக்கும் பசும் கமுகு வெண் கவரி வீசும் வாச
கான் ஒழுகு தட மலர் கடி பொழில் கூடல் வளர் கவுரியன் மகள் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 57/3,4

மேல்

வாடவும் (1)

அமரில் வெந்இடும் அவ் உதியர் பின் இடும் ஒர் அபயர் முன்னிடு வனத்து ஒக்க ஓடவும் அளவும் எம்முடைய திறை இது என்ன முடி அரசர் எண்ணிலர் ஒர் முற்றத்து வாடவும்
அகில மன்னர் அவர் திசையின் மன்னர் இவர் அமரர் என்னும் உரை திக்கு எட்டும் மூடவும் அமுத வெண்மதியின் மரபை உன்னிஉனி அலரி அண்ணல் முழு வெப்பத்து மூழ்கவும் – மீனாட்சிபிள்ளை:1 12/1,2

மேல்

வாடும் (1)

வாடும் கொடி நுண் நுசுப்பு ஒசிய மடவ மகளிருடன் ஆடும் வண்டல் துறைக்கு வைத்து நெய்த்து மணம் தாழ் நறு மென் புகை படலம் – மீனாட்சிபிள்ளை:5 47/3

மேல்

வாணி (2)

வான் ஒழுகு துங்க தரங்க பெரும் கங்கை வாணி நதியா சிவபிரான் மகுட கோடீரத்து அடிச்சுவடு அழுத்தியிடு மரகத கொம்பு கதிர் கால் – மீனாட்சிபிள்ளை:6 57/2
மல்கும் சுவட்டினை வலம்புரி கீற்று இது-கொல் வாணி என் அசதியாடி மணி முறுவல் கோட்ட நின் வணங்கா முடிக்கு ஒரு வணக்கம் நெடு நாண் வழங்க – மீனாட்சிபிள்ளை:10 100/2

மேல்

வாணியும் (1)

கள் நாறு குழலியர் குட கொங்கை பொங்கு செம் களபமும் கத்தூரியும் கப்புரமும் ஒக்க கரைத்து ஓடி வாணியும் காளிந்தியும் கங்கையாம் – மீனாட்சிபிள்ளை:9 85/3

மேல்

வாய் (10)

பண் உலாம் வடி தமிழ் பைம் தாமம் விரியும் பணை தோள் எருத்தம் ஏறி பாசொளிய மரகத திருமேனி பச்சை பசும் கதிர் ததும்ப மணி வாய்
தெள் நிலா விரிய நின்று ஆடும் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 14/3,4
தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் அரும்ப தீ அரும்பும் தேமா நிழல்-கண் துஞ்சும் இளம் செம் கண் கய வாய் புனிற்று எருமை – மீனாட்சிபிள்ளை:3 23/1
போர் குன்று ஏறும் கரு முகிலை வெள் வாய் மள்ளர் பிணையலிடும் பொரு கோட்டு எருமை போத்தினொடும் பூட்டி அடிக்க இடி குரல் விட்டு – மீனாட்சிபிள்ளை:3 27/3
பால் ஆட்டி வாய் இதழ் நெரித்து ஊட்டி உடலில் பசும் சுண்ணமும் திமிர்ந்து பைம்பொன் குறங்கினில் கண்வளர்த்தி சிறு பரூஉ மணி தொட்டில் ஏற்றி – மீனாட்சிபிள்ளை:4 37/3
முருகு விரியும் செம் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 44/4
முழுதும் தருவாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 45/4
முத்தம் உகந்த நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 46/4
மூடும் குழலாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 47/4
மகர கரும் கண் செம் கனி வாய் மட மான் கன்று வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே – மீனாட்சிபிள்ளை:6 60/4
உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திரு உள்ளத்தில் அழகு ஒழுக எழுதி பார்த்திருக்கும் உயிர் ஓவியமே மதுகரம் வாய்
மடுக்கும் குழல் காடு ஏந்தும் இள வஞ்சி கொடியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே – மீனாட்சிபிள்ளை:6 61/3,4

மேல்

வாய்மடுத்து (1)

மேக பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும் விண்புலம் விருந்து அரவும் வெள் அமுதம் வீசும் கரும் திரை பைம் துகில் விரித்து உடுத்து உத்தி விரியும் – மீனாட்சிபிள்ளை:1 6/1

மேல்

வார் (3)

வார் கொண்டு அணிந்த முலை மலைவல்லி கர்ப்பூரவல்லி அபிராமவல்லி மாணிக்கவல்லி மரகதவல்லி அபிடேகவல்லி சொல் தமிழ் தழையவே – மீனாட்சிபிள்ளை:0 1/4
வார் குன்று இரண்டு சுமந்து ஒசியும் மலர் கொம்பு_அனையார் குழல் துஞ்சும் மழலை சுரும்பர் புகுந்து உழக்க மலர் தாது உகுத்து வான் நதியை – மீனாட்சிபிள்ளை:3 27/1
திமிர கடல் புக வருணன் விடும் சுறவு அருணன் விடும் கடவுள் தேரின் உகண்டு எழ வார் வில் வழங்கு கொடும் கோல் செங்கோலா – மீனாட்சிபிள்ளை:4 39/2

மேல்

வார்க்கும் (1)

கோல் ஆட்டு நின் சிறு கணைக்கால் கிடத்தி குளிப்பாட்டி உச்சி முச்சி குஞ்சிக்கு நெய் போற்றி வெண்காப்பும் இட்டு வளர் கொங்கையில் சங்கு வார்க்கும்
பால் ஆட்டி வாய் இதழ் நெரித்து ஊட்டி உடலில் பசும் சுண்ணமும் திமிர்ந்து பைம்பொன் குறங்கினில் கண்வளர்த்தி சிறு பரூஉ மணி தொட்டில் ஏற்றி – மீனாட்சிபிள்ளை:4 37/2,3

மேல்

வார்த்து (1)

வாக்கும் குட கூன் குழிசியில் அம் மது வார்த்து அரித்த நித்திலத்தின் வல்சி புகட்டி வடித்து எடுத்து வயல் மா மகளிர் குழாம் சிறுசோறு – மீனாட்சிபிள்ளை:3 24/3

மேல்

வாரி (4)

வட குங்கும குன்று இரண்டு ஏந்தும் வண்டல் மகளிர் சிறு முற்றில் வாரி குவித்த மணி குப்பை வான் ஆறு அடைப்ப வழி பிழைத்து – மீனாட்சிபிள்ளை:6 58/1
ஒளி தூங்கு தெளி விசும்பினில் நின்னொடு ஒத்தவன் ஒருத்தன் கரத்தின் வாரி உண்டு ஒதுக்கிய மிச்சில் நள் இருளில் அள்ளி உண்டு ஓடுகின்றாய் என் செய்தாய் – மீனாட்சிபிள்ளை:7 70/3
மலை பட்ட ஆரமும் வயிரமும் பிறவுமாம் மா மணி திரளை வாரி மறி திரை கையால் எடுத்து எறிய நால் கோட்டு மத களிறு பிளிறி ஓடும் – மீனாட்சிபிள்ளை:8 76/3
மறிக்கும் திரை தண் புனல் வைகை வண்டலிடும் மண் கூடை கட்டி வாரி சுமந்தோர் அம்மை துணை மணி பொன் குடத்தில் கரைத்து ஊற்றும் – மீனாட்சிபிள்ளை:9 90/1

மேல்

வாரியை (1)

கட களிறு உதவு கபாய் மிசை போர்த்தவள் கவி குவி துறுகலின் வாரியை தூர்த்தவள் கடல் வயிறு எரிய ஒள் வேலினை பார்த்தவள் கடி கமழ் தரு மலர் தார் முடி சேர்த்தவள் – மீனாட்சிபிள்ளை:1 11/1

மேல்

வால் (1)

மணி கொண்ட நெடு நேமி வலயம் சுமந்து ஆற்று மாசுண சூட்டு மோட்டு மால் களிறு பிடர் வைத்த வளர் ஒளி விமானத்து வால் உளை மடங்கல் தாங்கும் – மீனாட்சிபிள்ளை:1 2/1

மேல்

வாவே (20)

அண்டு படு சீர் இது அன்று ஆதலால் இவளுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 63/4
அண்டு படு சீர் இது அன்று ஆதலால் இவளுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 63/4
அலைத்து ஓடு வைகை துறைப்படி மட பிடியொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 64/4
அலைத்து ஓடு வைகை துறைப்படி மட பிடியொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 64/4
ஆற்று முடி அரசு உதவும் அரசிளங்குமரியுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 65/4
ஆற்று முடி அரசு உதவும் அரசிளங்குமரியுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 65/4
அண்ட பகிரண்டமும் அகண்டமும் பெறுதியால் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 66/4
அண்ட பகிரண்டமும் அகண்டமும் பெறுதியால் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 66/4
அண்ணல் அம் களி யானை அரசர் கோமகளுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 67/4
அண்ணல் அம் களி யானை அரசர் கோமகளுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 67/4
அன்பர் என்பு உருக கசிந்திடு பசும் தேனொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 68/4
அன்பர் என்பு உருக கசிந்திடு பசும் தேனொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 68/4
அம்பு அஞ்சுடன் கொண்ட மகர கொடி கொடியொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 69/4
அம்பு அஞ்சுடன் கொண்ட மகர கொடி கொடியொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 69/4
அளி தூங்கு ஞிமிறு எழுந்து ஆர்க்கும் குழல் திருவொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 70/4
அளி தூங்கு ஞிமிறு எழுந்து ஆர்க்கும் குழல் திருவொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 70/4
அழைக்கும் தடம் புரிசை மதுரை துரைப்பெணுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 71/4
அழைக்கும் தடம் புரிசை மதுரை துரைப்பெணுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 71/4
ஆடக பொற்கிழி அவிழ்க்கும் மதுரை திருவொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 72/4
ஆடக பொற்கிழி அவிழ்க்கும் மதுரை திருவொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 72/4

மேல்

வாழ் (1)

தகர கரிய குழல் சிறு பெண்பிள்ளை நீயோ தூயோன் வாழ் சயிலத்து எயிலை வளைப்பவள் என்று எதிர் சீறா வீறு ஓதா – மீனாட்சிபிள்ளை:3 32/1

மேல்

வாழவும் (1)

இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு என பெற்று வாழவும் எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு என தட்டுமாறவும் – மீனாட்சிபிள்ளை:1 12/7

மேல்

வாழாமல் (1)

களி தூங்க அளவளாய் வாழாமல் உண் அமுது கலையொடும் இழந்து வெறு மண்கலத்திடு புது கூழினுக்கு இரவு பூண்டு ஒரு களங்கம் வைத்தாய் இது அலால் – மீனாட்சிபிள்ளை:7 70/2

மேல்

வாழி (1)

பைத்த சுடிகை பட பாயல் பதுமநாபன் மார்பில் வளர் பரிதி மணியும் எமக்கு அம்மை பணியல் வாழி வேய் ஈன்ற – மீனாட்சிபிள்ளை:5 46/3

மேல்

வாள் (3)

மங்குல் படு கந்தர சுந்தர கடவுட்கு மழ கதிர் கற்றை சுற்றும் வாள் நயனம் மூன்றும் குளிர்ந்து அமுத கலை தலைமடுப்ப கடைக்கண் நோக்கும் – மீனாட்சிபிள்ளை:2 16/1
சேல் ஆட்டு வாள் கண் கரும் கடல் கடைமடை திறந்து அமுதம் ஊற்று கருணை தெள் திரை கொழித்து எறிய வெண் திரை நெருப்பூட்டு தெய்வ குழந்தையை செம் – மீனாட்சிபிள்ளை:4 37/1
மழை கொந்தள கோதை வம்-மின் என்றளவில் நீ வந்திலை என கடுகலும் வாள் முக செவ்விக்கு உடைந்து ஒதுங்கின் அவன் எதிர்வர ஒல்கியோ பணிகள் கோள் – மீனாட்சிபிள்ளை:7 71/1

மேல்

வாளிகள் (1)

சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியின் ஆளி என செரு மலை செம்மலை முதலியர் சிந்த சிந்திட நந்திபிரான் – மீனாட்சிபிள்ளை:4 40/1

மேல்

வாளின் (1)

வானத்து உருமொடு உடு திரள் சிந்த மலைந்த பறந்தலையில் மண்ணவர் பண்ணவர் வாளின் மறிந்தவர் மற்றவர் பொன் தொடியார் – மீனாட்சிபிள்ளை:4 38/1

மேல்

வாளை (1)

மூடும் ககன வெளி கூட முகடு திறந்து புறம் கோத்த முந்நீர் உழக்கி சின வாளை மூரி சுறவினோடும் விளையாடும் – மீனாட்சிபிள்ளை:3 25/3

மேல்

வான் (9)

மஞ்சு ஊட்டு அகட்டு நெடு வான் முகடு துருவும் ஒரு மறை ஓதிமம் சலிக்க மறி திரை சிறை விரியும் ஆயிர முக கடவுள் மந்தாகினி பெயர்த்த – மீனாட்சிபிள்ளை:1 8/3
வார் குன்று இரண்டு சுமந்து ஒசியும் மலர் கொம்பு_அனையார் குழல் துஞ்சும் மழலை சுரும்பர் புகுந்து உழக்க மலர் தாது உகுத்து வான் நதியை – மீனாட்சிபிள்ளை:3 27/1
நத்தம் வளர அளகையர்_கோன் நகரில் வளரும் வான் மணியும் நளின பொகுட்டில் வீற்றிருக்கும் நங்கை மனைக்கு ஓர் விளக்கம் என – மீனாட்சிபிள்ளை:5 46/2
மொய் வைத்த கொய் உளை வய புரவி-வாய் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான் முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனை கணை வடிம்பு நக்கா – மீனாட்சிபிள்ளை:5 48/2
மை வைத்த செம் சிலையும் அம்புலியும் ஓட நெடு வான் மீன் மணந்து உகந்த வடவரை முகந்த நின் வய கொடி என பொலியும் மஞ்சு இவர் வளாக நொச்சி – மீனாட்சிபிள்ளை:5 48/3
மின்னல் தடித்து கரும் பொன் தொடி கடைசி மெல்லியர் வெரீஇ பெயர வான் மீன் கணம் வெருக்கொள்ள வெடி வரால் குதிகொள்ளும் விண் புலம் விளை புலம் என – மீனாட்சிபிள்ளை:5 49/2
வான் ஒழுகு துங்க தரங்க பெரும் கங்கை வாணி நதியா சிவபிரான் மகுட கோடீரத்து அடிச்சுவடு அழுத்தியிடு மரகத கொம்பு கதிர் கால் – மீனாட்சிபிள்ளை:6 57/2
வட குங்கும குன்று இரண்டு ஏந்தும் வண்டல் மகளிர் சிறு முற்றில் வாரி குவித்த மணி குப்பை வான் ஆறு அடைப்ப வழி பிழைத்து – மீனாட்சிபிள்ளை:6 58/1
கார் கொந்தள கோதை மடவியர் குழற்கு ஊட்டு கமழ் நறும் புகை விண் மிசை கை பரந்து எழுவது உரு மாறு இரவி மண்டலம் கைக்கொள இருள் படலம் வான்
போர்க்கின்றது ஒக்கும் மதுராபுரி மட கிள்ளை பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 97/3,4

மேல்

வானத்து (2)

வானத்து உருமொடு உடு திரள் சிந்த மலைந்த பறந்தலையில் மண்ணவர் பண்ணவர் வாளின் மறிந்தவர் மற்றவர் பொன் தொடியார் – மீனாட்சிபிள்ளை:4 38/1
மத்த மதமா கவுட்டு ஒரு நால் மருப்பு பொருப்பு மிசை பொலிந்த வானத்து அரசு கோயில் வளர் சிந்தாமணியும் வடபுலத்தார் – மீனாட்சிபிள்ளை:5 46/1

மேல்

வானவில் (1)

வளர் ஒளி விம்மிய அம்மனை செல்வது வானவில் ஒத்திடவும் மனன் நெக்கு உருக பரமானந்தம் மடுத்த திருத்தொண்டர்க்கு – மீனாட்சிபிள்ளை:8 80/3

மேல்