தெ – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


தெய்வ (10)

திருநுதல் மீது எழுகுறு வெயர்வு ஆட தெய்வ மணம் கமழும் திருமேனியின் முழு மரகத ஒளி எண் திக்கும் விரிந்து ஆட – மீனாட்சிபிள்ளை:2 20/2
தே மரு பசும் கிள்ளை வைத்து முத்தாடியும் திரள் பொன் கழங்கு ஆடியும் செயற்கையான் அன்றியும் இயற்கை சிவப்பு ஊறு சே இதழ் விரிந்த தெய்வ
தாமரை பழுத்த கை தளிர் ஒளி துளும்ப ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 35/3,4
சேல் ஆட்டு வாள் கண் கரும் கடல் கடைமடை திறந்து அமுதம் ஊற்று கருணை தெள் திரை கொழித்து எறிய வெண் திரை நெருப்பூட்டு தெய்வ குழந்தையை செம் – மீனாட்சிபிள்ளை:4 37/1
தெய்வ தமிழ் கூடல் தழைய தழைத்தவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 48/4
செம் சிலம்பு அடி பற்று தெய்வ குழாத்தினொடு சிறை ஓதிமம் பின் செல சிற்றிடைக்கு ஒல்கி மணிமேகலை இரங்க திருக்கோயில் என என் நெஞ்ச – மீனாட்சிபிள்ளை:6 53/3
செயல் பாய் கடல் தானை செங்களம் கொள அம்மை திக்குவிசயம் கொண்ட நாள் தெய்வ கயல் கொடிகள் திசைதிசை எடுத்து என திக்கு எட்டும் முட்ட வெடிபோய் – மீனாட்சிபிள்ளை:6 55/3
சிகர களப பொம்மல் முலை தெய்வ மகளிர் புடை இரட்டும் செம் கை கவரி முகந்து எறியும் சிறுகாற்கு ஒசிந்து குடிவாங்க – மீனாட்சிபிள்ளை:6 60/2
குலத்தோடு தெய்வ குழாம் பிழிந்து ஊற்றி குடித்து சுவைத்து உமிழ்ந்த கோது என்றும் அழல் விடம் கொப்பளிக்கின்ற இரு கோளின் உச்சிட்டம் என்றும் – மீனாட்சிபிள்ளை:7 64/1
நாடகத்து ஐந்தொழில் நடிக்கும் பிரான் தெய்வ நதியொடு முடித்தல் பெற்றாய் நங்கை இவள் திருவுளம் மகிழ்ச்சிபெறில் இது போல் ஒர் நல் தவ பேறு இல்லை காண் – மீனாட்சிபிள்ளை:7 72/2
தெள் அமுத கடல் நடுவில் தோன்று செழும் கமல குயில் போல் தெய்வ கங்கை திரையூடு எழும் ஒரு செம்பவள கொடி போல் – மீனாட்சிபிள்ளை:9 92/2

மேல்

தெய்வத்தை (1)

செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடை கரு மிடற்று தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலை திருவை புரக்க என்றே – மீனாட்சிபிள்ளை:1 8/4

மேல்

தெரி (2)

பகரும் இசை திசை பரவ இருவர்கள் பயிலும் இயல் தெரி வெள் வளை தோட்டினர் பசிய அறுகொடு வெளிய நில விரி பவள வனம் அடர் பல் சடை காட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/3
திருமுன் உருவம் கரந்து எந்தையார் நிற்பது தெரிந்திட நமக்கு இது எனா செம் சிலை கள்வன் ஒருவன் தொடை மடக்காது தெரி கணைகள் சொரிவது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:10 95/2

மேல்

தெரிந்திட (1)

திருமுன் உருவம் கரந்து எந்தையார் நிற்பது தெரிந்திட நமக்கு இது எனா செம் சிலை கள்வன் ஒருவன் தொடை மடக்காது தெரி கணைகள் சொரிவது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:10 95/2

மேல்

தெரிந்தோ (1)

கண்டு படு குதலை பசும் கிளி இவட்கு ஒரு கலாபேதம் என்ன நின்னை கலை மறைகள் முறையிடுவ கண்டோ அலாது ஒண் கலாநிதி என தெரிந்தோ
வண்டு படு தெரியல் திரு தாதையார் மரபின் வழிமுதல் என குறித்தோ வளர் சடை முடிக்கு எந்தை தண் நறும் கண்ணியா வைத்தது கடைப்பிடித்தோ – மீனாட்சிபிள்ளை:7 63/1,2

மேல்

தெரிப்ப (1)

தென் செய்த மழலை சுரும்பராய் மங்கை நின் செம் கை பசும் கிள்ளையாய் தேவதேவன் பொலிவதும் எவ் உருவுமாம் அவன் திருவுருவின் முறை தெரிப்ப
மின் செய்த சாயலவர் மேல் தலத்து ஆடிய விரை புனலின் அருவி குடையும் வெள் ஆனை குங்கும செம் சேறு நாற மட மென் பிடியை அஞ்சி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:10 101/2,3

மேல்

தெரியல் (1)

வண்டு படு தெரியல் திரு தாதையார் மரபின் வழிமுதல் என குறித்தோ வளர் சடை முடிக்கு எந்தை தண் நறும் கண்ணியா வைத்தது கடைப்பிடித்தோ – மீனாட்சிபிள்ளை:7 63/2

மேல்

தெரியும் (1)

திருவும் இமையவர் தருவும் அர ஒலி செய வலவர் கொள நல்குகை தீட்டினர் சிறிய எனது புன்மொழியும் வடி தமிழ் தெரியும் அவர் முது சொல் என சூட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/2

மேல்

தெள் (9)

தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் – மீனாட்சிபிள்ளை:1 9/2
தெள் நிலா விரிய நின்று ஆடும் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 14/4
தெள் நறா அருவி பாய் மதுரை மரகதவல்லி செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 17/4
சேல் ஆட்டு வாள் கண் கரும் கடல் கடைமடை திறந்து அமுதம் ஊற்று கருணை தெள் திரை கொழித்து எறிய வெண் திரை நெருப்பூட்டு தெய்வ குழந்தையை செம் – மீனாட்சிபிள்ளை:4 37/1
ஆடும் பெரும் தண் துறை பொருநை ஆற்றில் படு தெள் நிலா முத்தும் அம் தண் பொதிய தடம் சாரல் அருவி சொரியும் குளிர் முத்தும் – மீனாட்சிபிள்ளை:5 47/2
தேன் ஒழுகு கஞ்ச பொலன் சீறடிக்கு ஊட்டு செம்பஞ்சியின் குழம்பால் தெள் அமுது இறைக்கும் பசுங்குழவி வெண் திங்கள் செக்கர் மதியா கரை பொரும் – மீனாட்சிபிள்ளை:6 57/1
துளி தூங்கு தெள் அமுத வெள் அருவி பொழியும் நின் தொல் மரபு தழைய வந்து தோன்றிடும் கௌரியர் குலக்கொழுந்தை கண்டு துணை விழியும் மனமும் நின்று – மீனாட்சிபிள்ளை:7 70/1
வெயரா மனம் புழுங்கிடும் அமரர் தச்சனும் வியப்ப செயும் தவள மா மேடையும் தண் தரள மாடமும் தெள் நிலா வீச திசைக்களிறு எலாம் – மீனாட்சிபிள்ளை:8 78/3
தெள் அமுத கடல் நடுவில் தோன்று செழும் கமல குயில் போல் தெய்வ கங்கை திரையூடு எழும் ஒரு செம்பவள கொடி போல் – மீனாட்சிபிள்ளை:9 92/2

மேல்

தெள்ளி (1)

தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் – மீனாட்சிபிள்ளை:1 9/2

மேல்

தெள்ளு (1)

தெள்ளு சுவை அமுதம் கனிந்த ஆனந்த திரை கடல் மடுத்து உழக்கும் செல்வ செருக்கர்கள் மன கமலம் நெக்க பூம் சேக்கையில் பழைய பாடல் – மீனாட்சிபிள்ளை:10 93/3

மேல்

தெளி (3)

திருமகள் கலைமகள் தலைமகள் மலைமகள் செங்கோ செங்கீரை தெளி தமிழ் மதுரையில் வளரும் ஒர் இளமயில் செங்கோ செங்கீரை – மீனாட்சிபிள்ளை:2 21/4
செம் கயல் தங்கு பொலன் கொடி மின்கொடி செங்கோ செங்கீரை தெளி தமிழ் மதுரையில் வளரும் ஒர் இளமயில் செங்கோ செங்கீரை – மீனாட்சிபிள்ளை:2 22/4
ஒளி தூங்கு தெளி விசும்பினில் நின்னொடு ஒத்தவன் ஒருத்தன் கரத்தின் வாரி உண்டு ஒதுக்கிய மிச்சில் நள் இருளில் அள்ளி உண்டு ஓடுகின்றாய் என் செய்தாய் – மீனாட்சிபிள்ளை:7 70/3

மேல்

தெளிக்கும் (3)

தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் – மீனாட்சிபிள்ளை:1 9/2
சீக்கும் சுடர் தூங்கு அழல் மணியின் செம் தீ மடுத்த சூட்டு அடுப்பில் செழும் தாள் பவள துவர் அடுக்கி தெளிக்கும் நறும் தண் தேறல் உலை – மீனாட்சிபிள்ளை:3 24/2
துளிக்கும் பனி திவலை சிதறி குடைந்து ஆடு துறையில் துறை தமிழொடும் தொல் மறை தெளிக்கும் கலை கொடி எனும் துணை தோழி மூழ்கி புனல் மடுத்து – மீனாட்சிபிள்ளை:9 87/1

மேல்

தெளித்த (1)

முதுசொல் புலவர் தெளித்த பசும் தமிழ் நூல் பாழ்போகாமே முளரி கடவுள் படைத்த வசுந்தரை கீழ்மேல் ஆகாமே – மீனாட்சிபிள்ளை:3 31/1

மேல்

தெளிய (1)

செழு மறை தெளிய வடித்த தமிழ் பதிகத்தோடே திருவருள் அமுது குழைத்து விடுத்த முலைப்பாலால் – மீனாட்சிபிள்ளை:4 42/1

மேல்

தென் (2)

இமயத்தொடும் வளர் குல வெற்பு எட்டையும் எல்லைக்கல்லின் நிறீஇ எண் திசையும் தனி கொண்டு புரந்து வடாது கடல் துறை தென்
குமரி துறை என ஆடும் மட பிடி கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 39/3,4
தென் செய்த மழலை சுரும்பராய் மங்கை நின் செம் கை பசும் கிள்ளையாய் தேவதேவன் பொலிவதும் எவ் உருவுமாம் அவன் திருவுருவின் முறை தெரிப்ப – மீனாட்சிபிள்ளை:10 101/2

மேல்

தென்மதுரை (1)

எழில் செய் தென்மதுரை தழைய மும் முலையொடு எழும் என் அம்மனை வனப்புக்கு ஒர் காவலர் இருவர் எண்மர் பதினொருவர் பன்னிருவர் எனும் அவ் விண்ணவர்கள் முப்பத்துமூவரே – மீனாட்சிபிள்ளை:1 12/8

மேல்

தென்மலையின் (1)

குமரி பொன்னி வைகை பொருநை நல் நதிகள் குதிகொள் விண் நதியின் மிக்கு குலாவவும் குவடு தென்மலையின் நிகரதின்மை சுரர் குடிகொள் பொன்மலை துதித்து பராவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/3

மேல்

தென்னரும் (1)

இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு என பெற்று வாழவும் எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு என தட்டுமாறவும் – மீனாட்சிபிள்ளை:1 12/7

மேல்

தென்னற்கும் (5)

சீராட்டி வைத்து முத்தாடும் பசுங்கிள்ளை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 13/4
தெள் நிலா விரிய நின்று ஆடும் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 14/4
சிற்றில் விளையாடும் ஒரு பச்சிளம் பெண்பிள்ளை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 15/4
செம் கயல் கிடக்கும் கரும் கண் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 16/4
தெள் நறா அருவி பாய் மதுரை மரகதவல்லி செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 17/4

மேல்

தென்னன் (1)

தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் அரும்ப தீ அரும்பும் தேமா நிழல்-கண் துஞ்சும் இளம் செம் கண் கய வாய் புனிற்று எருமை – மீனாட்சிபிள்ளை:3 23/1

மேல்