கூ – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


கூட்டினர் (1)

சிகர வடவரை குனிய நிமிர்தரு செருவில் ஒரு பொரு வில் என கோட்டினர் செடி கொள் பறி தலை அமணர் எதிரெதிர் செல ஒர் மதலை சொல் வைகையில் கூட்டினர்
திருவும் இமையவர் தருவும் அர ஒலி செய வலவர் கொள நல்குகை தீட்டினர் சிறிய எனது புன்மொழியும் வடி தமிழ் தெரியும் அவர் முது சொல் என சூட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/1,2

மேல்

கூட்டுணும் (1)

தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் – மீனாட்சிபிள்ளை:1 9/2

மேல்

கூட (1)

மூடும் ககன வெளி கூட முகடு திறந்து புறம் கோத்த முந்நீர் உழக்கி சின வாளை மூரி சுறவினோடும் விளையாடும் – மீனாட்சிபிள்ளை:3 25/3

மேல்

கூடப்பிறந்தது (1)

குண்டு படு பாற்கடல் வரும் திருச்சேடியொடு கூடப்பிறந்தது ஓர்ந்தோ கோமாட்டி இவள் நின்னை வம் என கொம் என கூவிட பெற்றாய் உனக்கு – மீனாட்சிபிள்ளை:7 63/3

மேல்

கூடம் (1)

முற்ற வெளியில் திரியும் மத்த பெரும் பித்தன் முன் நின்று தொந்தம் இடவும் முனியாது வைகலும் எடுத்து அடுக்கி பெரிய மூது அண்ட கூடம் மூடும் – மீனாட்சிபிள்ளை:2 15/3

மேல்

கூடல் (4)

தெய்வ தமிழ் கூடல் தழைய தழைத்தவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 48/4
கண்டு படும் கன்னல் பைம் காடு படு கூடல் கலாப மா மயில் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 54/4
கான் ஒழுகு தட மலர் கடி பொழில் கூடல் வளர் கவுரியன் மகள் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 57/4
பொன் செய்த மாடம் மலி கூடல் பெரும் செல்வி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 101/4

மேல்

கூடலில் (1)

பொழியும் பொழில் கூடலில் பொலிவாய் புது நீர் ஆடி அருளுகவே பொருநை துறைவன் பொன் பாவாய் புது நீர் ஆடி அருளுகவே – மீனாட்சிபிள்ளை:9 89/4

மேல்

கூடலும் (1)

கஞ்சமும் செம் சொல் தமிழ் கூடலும் கொண்ட காமர் பூங்கொடி வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 53/4

மேல்

கூடவும் (1)

கமலன் முன்னிவிடும் அரச அன்னம் எழுகடலில் அன்னமுடன் நட்பு கை கூடவும் கரிய செம்மலொடும் இளைய செம்மல் விடு கருடன் மஞ்ஞையொடு ஒர் கட்சிக்குள் ஊடவும் – மீனாட்சிபிள்ளை:1 12/5

மேல்

கூடா (1)

குறிக்கும் இடத்தில் தடம் தூ நீர் குடையப்பெறின் அ கங்கை திரு கோடீரத்து குடியிருப்பும் கூடா போலும் பொலன் குவட்டு – மீனாட்சிபிள்ளை:9 90/3

மேல்

கூடை (1)

மறிக்கும் திரை தண் புனல் வைகை வண்டலிடும் மண் கூடை கட்டி வாரி சுமந்தோர் அம்மை துணை மணி பொன் குடத்தில் கரைத்து ஊற்றும் – மீனாட்சிபிள்ளை:9 90/1

மேல்

கூத்து (1)

குமரி இருக்க கலா மயில் கூத்து அயர் குளிர் புனம் மொய்த்திட்ட சாரலில் போய் சிறு குறவர் மகட்கு சலாமிடற்கு ஏக்கறு குமரனை முத்துக்குமாரனை போற்றுதும் – மீனாட்சிபிள்ளை:1 5/2

மேல்

கூதிர்க்கு (1)

பில்கும் குறும் பனி கூதிர்க்கு உடைந்து என பிரசம் நாறு ஐம்பாற்கு இளம் பேதையர்கள் ஊட்டும் கொழும் புகை மடுத்து மென் பெடையொடு வரி சுரும்பர் – மீனாட்சிபிள்ளை:10 100/3

மேல்

கூந்தல் (7)

பிடி பட்ட மட நடைக்கு ஏக்கற்ற கூந்தல் பிடி குழாம் சுற்ற ஒற்றை பிறை மருப்பு உடையது ஒர் களிற்றினை பெற்று எந்தை பிட்டு உண்டு கட்டுண்டு நின்று – மீனாட்சிபிள்ளை:1 10/3
பெருகு பரமானந்த வெள்ள பெருக்கே சிறியேம் பெற்ற பெரும் பேறே ஊறு நறை கூந்தல் பிடியே கொடி நுண் நுசுப்பு ஒசிய – மீனாட்சிபிள்ளை:5 44/2
குண்டுபடு பேர் அகழி வயிறு உளைந்து ஈன்ற பைங்கோதையும் மதுரம் ஒழுகும் கொழி தமிழ் பனுவல் துறை படியும் மட நடை கூந்தல் அம் பிடியும் அறுகால் – மீனாட்சிபிள்ளை:6 54/1
பெரும் தேன் இறைக்கும் நறை கூந்தல் பிடியே வருக முழு ஞான பெருக்கே வருக பிறை மௌலி பெம்மான் முக்கண் சுடர்க்கு இடு நல் – மீனாட்சிபிள்ளை:6 62/1
பிழியும் நறை கற்பகம் மலர்ந்த பிரச மலர் பூந்துகள் மூழ்கும் பிறை கோட்டு அயிராவதம் கூந்தல் பிடியோடு ஆட தேன் அருவி – மீனாட்சிபிள்ளை:9 89/3
கொள்ளை வெள் அருவி படிந்திடும் இமய கூந்தல் மட பிடி போல் கொற்கை துறையில் சிறை விரிய புனல் குடையும் அன பெடை போல் – மீனாட்சிபிள்ளை:9 92/1
கொன் செய்த செழு மணி திரு ஊசல் அரமகளிர் கொண்டாட ஆடும்-தொறும் குறுமுறுவல் நெடு நிலவு அருந்தும் சகோரமாய் கூந்தல் அம் கற்றை சுற்றும் – மீனாட்சிபிள்ளை:10 101/1

மேல்

கூர்த்தவள் (1)

இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் – மீனாட்சிபிள்ளை:1 11/2

மேல்

கூவிட (1)

குண்டு படு பாற்கடல் வரும் திருச்சேடியொடு கூடப்பிறந்தது ஓர்ந்தோ கோமாட்டி இவள் நின்னை வம் என கொம் என கூவிட பெற்றாய் உனக்கு – மீனாட்சிபிள்ளை:7 63/3

மேல்

கூழ் (2)

எற்று புனலில் கழுவு புவன பழம் கலம் எடுத்து அடுக்கி புது கூழ் இன் அமுதமும் சமைத்து அன்னை நீ பல் முறை இழைத்திட அழித்துஅழித்து ஓர் – மீனாட்சிபிள்ளை:2 15/2
மண்ணில் ஒண் பைம் கூழ் வளர்ப்பது உன்னிடத்து அம்மை வைத்திடும் சத்தியே காண் மற்று ஒரு சுதந்தரம் நினக்கு என இலை கலை மதி கடவுள் நீயும் உணர்வாய் – மீனாட்சிபிள்ளை:7 67/3

மேல்

கூழினுக்கு (1)

களி தூங்க அளவளாய் வாழாமல் உண் அமுது கலையொடும் இழந்து வெறு மண்கலத்திடு புது கூழினுக்கு இரவு பூண்டு ஒரு களங்கம் வைத்தாய் இது அலால் – மீனாட்சிபிள்ளை:7 70/2

மேல்

கூளிகள் (1)

சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியின் ஆளி என செரு மலை செம்மலை முதலியர் சிந்த சிந்திட நந்திபிரான் – மீனாட்சிபிள்ளை:4 40/1

மேல்

கூன் (5)

வாக்கும் குட கூன் குழிசியில் அம் மது வார்த்து அரித்த நித்திலத்தின் வல்சி புகட்டி வடித்து எடுத்து வயல் மா மகளிர் குழாம் சிறுசோறு – மீனாட்சிபிள்ளை:3 24/3
கொழுதி மதர் வண்டு உழக்கு குழல் கோதைக்கு உடைந்த கொண்டலும் நின் குதலை கிளி மென் மொழிக்கு உடைந்த குறும் கண் கரும்பும் கூன் பிறை கோடு – மீனாட்சிபிள்ளை:5 45/1
பின்னல் திரை கடல் மது குடம் அற தேக்கு பெய் முகில் கார் உடல வெண் பிறை மதி கூன் குய கை கடைஞரொடு புடைபெயர்ந்து இடை நுடங்க ஒல்கு – மீனாட்சிபிள்ளை:5 49/1
வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு – மீனாட்சிபிள்ளை:10 99/2
ஒல்கும் கொடி சிறு மருங்குற்கு இரங்கி மெல் ஓதி வண்டு ஆர்த்து எழ பொன் ஊசலை உதைந்து ஆடும் அளவின் மலர்_மகள் அம்மை உள் அடி கூன் பிறை தழீஇ – மீனாட்சிபிள்ளை:10 100/1

மேல்

கூனல் (1)

கூனல் சிலையின் நெடும் கணை தொட்டவள் கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 38/4

மேல்

கூனும் (2)

முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மா தொடர் சாபமும் மும்மை தமிழ் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இ தலத்தின் – மீனாட்சிபிள்ளை:7 68/1
மன் பெரும் குரவன் பிழைத்த பாவமும் மற்றை மா மடிகள் இடு சாபமும் வளர் இளம் பருவத்து நரை திரையும் முதிர் கூனும் மாற்றிடப்பெறுதி கண்டாய் – மீனாட்சிபிள்ளை:7 68/3

மேல்