தே – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


தே (2)

வழுதியுடைய கண்மணியொடு உலவு பெண்மணியை அணி திகழ் செல்வியை தே கமழ் மதுரம் ஒழுகிய தமிழின் இயல் பயில் மதுரை மரகதவல்லியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 3/8
தே மரு பசும் கிள்ளை வைத்து முத்தாடியும் திரள் பொன் கழங்கு ஆடியும் செயற்கையான் அன்றியும் இயற்கை சிவப்பு ஊறு சே இதழ் விரிந்த தெய்வ – மீனாட்சிபிள்ளை:4 35/3

மேல்

தேக்கு (1)

பின்னல் திரை கடல் மது குடம் அற தேக்கு பெய் முகில் கார் உடல வெண் பிறை மதி கூன் குய கை கடைஞரொடு புடைபெயர்ந்து இடை நுடங்க ஒல்கு – மீனாட்சிபிள்ளை:5 49/1

மேல்

தேங்கு (1)

தேங்கு மலை அருவி நெடு நீத்தத்து மாசுண திரள் புறம் சுற்றி ஈர்ப்ப சின வேழம் ஒன்று ஒரு சுழி சுழலல் மந்தரம் திரை கடல் மதித்தல் மானும் – மீனாட்சிபிள்ளை:9 86/3

மேல்

தேடி (1)

உயிராய் இருக்கின்ற சேடியரில் மலர் மீது உதித்தவள் எதிர்த்து நின்னோடு ஒட்டி எட்டி பிடித்திட்ட அம்மனை தேடி ஓடி ஆடி திரிய நீ – மீனாட்சிபிள்ளை:8 78/1

மேல்

தேடிவைத்த (1)

காலத்தொடு கற்பனை கடந்த கருவூலத்து பழம் பாடல் கலை மா செல்வர் தேடிவைத்த கடவுள் மணியே உயிர் ஆலவாலத்து – மீனாட்சிபிள்ளை:5 43/1

மேல்

தேம் (1)

கணி கொண்ட தண் துழாய் காடு அலைத்து ஓடு தேம் கலுழி பாய்ந்து அளறுசெய்ய கழனி படு நடவையில் கமலத்து அணங்கு அரசு ஒர் கை அணை முகந்து செல்ல – மீனாட்சிபிள்ளை:1 2/3

மேல்

தேமா (1)

தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் அரும்ப தீ அரும்பும் தேமா நிழல்-கண் துஞ்சும் இளம் செம் கண் கய வாய் புனிற்று எருமை – மீனாட்சிபிள்ளை:3 23/1

மேல்

தேர் (3)

சேறு வழுக்கி ஓட்டு அறுக்கும் திரு மா மறுகில் அரசர் பெரும் திண் தேர் ஒதுங்க கொடுஞ்சி நெடும் சிறுதேர் உருட்டும் செம் கண் மழ – மீனாட்சிபிள்ளை:3 26/2
பை வைத்த துத்தி பரூஉ சுடிகை முன்றில் பசும் கொடி உடுக்கை கிழிய பாய் இருள் படலம் கிழித்து எழு சுடர் பரிதி பரிதி கொடிஞ்சி மான் தேர்
மொய் வைத்த கொய் உளை வய புரவி-வாய் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான் முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனை கணை வடிம்பு நக்கா – மீனாட்சிபிள்ளை:5 48/1,2
தேர் கோலமொடு நின் திரு கோலமும் கண்டு சிந்தனை புழுங்கு கோப தீ அவிய மூண்டு எழும் காமானலம் கான்ற சிகை என எழுந்து பொங்கும் – மீனாட்சிபிள்ளை:10 98/1

மேல்

தேர்தரு (1)

முத்தமிழ் தேர்தரு மதுரை தலத்து உறை மு தனம் மேவு பெண் அரசை புரக்கவே – மீனாட்சிபிள்ளை:1 4/4

மேல்

தேரில் (2)

தேரில் குமரர்கள் மார்பில் பொலிதரு திருவில் பொரு_இல் வரி சிலையில் திரள் புய மலையில் புலவி திருத்திட ஊழ்த்த முடி – மீனாட்சிபிள்ளை:3 28/3
சேனை தலைவர்கள் திசையில் தலைவர்கள் செருவில் தலைவர்களால் சிலையில் தட முடி தேரில் கொடியொடு சிந்த சிந்தியிடும் – மீனாட்சிபிள்ளை:3 29/1

மேல்

தேரின் (1)

திமிர கடல் புக வருணன் விடும் சுறவு அருணன் விடும் கடவுள் தேரின் உகண்டு எழ வார் வில் வழங்கு கொடும் கோல் செங்கோலா – மீனாட்சிபிள்ளை:4 39/2

மேல்

தேரொடு (1)

பொய்வந்த நுண் இடை நுடங்க கொடிஞ்சி பொலம் தேரொடு அமரகத்து பொன் மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்று அம்மை பொம்மல் முலை மூன்றில் ஒன்று – மீனாட்சிபிள்ளை:4 34/1

மேல்

தேவதேவன் (1)

தென் செய்த மழலை சுரும்பராய் மங்கை நின் செம் கை பசும் கிள்ளையாய் தேவதேவன் பொலிவதும் எவ் உருவுமாம் அவன் திருவுருவின் முறை தெரிப்ப – மீனாட்சிபிள்ளை:10 101/2

மேல்

தேவர் (1)

இரைக்கும் பெரும் தேவர் புன்கண் துடைத்திட எடுத்த அமுத கலசம் வெவ்வேறு ஈந்திடுவது எனவும் முழு முத்து இட்டு இழைத்திட்ட எறிபந்தின் நிரை என்னவும் – மீனாட்சிபிள்ளை:8 73/2

மேல்

தேவுக்கு (1)

செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடை கரு மிடற்று தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலை திருவை புரக்க என்றே – மீனாட்சிபிள்ளை:1 8/4

மேல்

தேவை (1)

இசைந்திடு தேவை நினைந்தன என்ன இரங்கிடு மேகலையோடு இடுகு இடை ஆட இயற்கை மணம் பொதி இதழ் வழி தேறலினோடு – மீனாட்சிபிள்ளை:2 19/3

மேல்

தேறல் (6)

பாராட்டு பாண்டி பெருந்தேவி திருமுலை பால் அமுதம் ஊட்டி ஒரு நின் பால் நாறு குமுதம் கனிந்து ஊறு தேறல் தன் பட்டாடை மடி நனைப்ப – மீனாட்சிபிள்ளை:2 13/3
பண் அறா வரி மிடற்று அறுகால் மடுப்ப பசும் தேறல் ஆறு அலைக்கும் பதும பீடிகையும் முது பழ மறை விரிந்து ஒளி பழுத்த செம் நாவும் இமையா – மீனாட்சிபிள்ளை:2 17/1
சீக்கும் சுடர் தூங்கு அழல் மணியின் செம் தீ மடுத்த சூட்டு அடுப்பில் செழும் தாள் பவள துவர் அடுக்கி தெளிக்கும் நறும் தண் தேறல் உலை – மீனாட்சிபிள்ளை:3 24/2
பண் அளிக்கும் குதலை அமுது ஒழுகு குமுத பசும் தேறல் ஊறல் ஆடும் பைங்குழவி பெருவிரல் சுவைத்து நீ பருகிட பைம் தேறல் ஊறு வண் கை – மீனாட்சிபிள்ளை:4 36/3
பண் அளிக்கும் குதலை அமுது ஒழுகு குமுத பசும் தேறல் ஊறல் ஆடும் பைங்குழவி பெருவிரல் சுவைத்து நீ பருகிட பைம் தேறல் ஊறு வண் கை – மீனாட்சிபிள்ளை:4 36/3
அள் ஊற உள்ளே கசிந்து ஊறு பைம் தேறல் அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 75/4

மேல்

தேறலினோடு (1)

இசைந்திடு தேவை நினைந்தன என்ன இரங்கிடு மேகலையோடு இடுகு இடை ஆட இயற்கை மணம் பொதி இதழ் வழி தேறலினோடு
அசைந்து ஒசிகின்ற பசும் கொடி என இனிது ஆடுக செங்கீரை அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை – மீனாட்சிபிள்ளை:2 19/3,4

மேல்

தேன் (7)

இழியும் துணர் கற்பகத்தின் நறவு இதழ் தேன் குடித்து குமட்டி எதிர் எடுக்கு சிறை வண்டு உவட்டுற உண்டு இரைக்க கரைக்கும் மத கலுழி – மீனாட்சிபிள்ளை:1 7/3
தேன் ஒழுகு கஞ்ச பொலன் சீறடிக்கு ஊட்டு செம்பஞ்சியின் குழம்பால் தெள் அமுது இறைக்கும் பசுங்குழவி வெண் திங்கள் செக்கர் மதியா கரை பொரும் – மீனாட்சிபிள்ளை:6 57/1
சுண்ணம் திமிர்ந்து தேன் அருவி துளைந்து ஆடு அறுகால் தும்பி பசும் தோட்டு கதவம் திறப்ப மலர் தோகை குடிபுக்கு ஓகைசெயும் – மீனாட்சிபிள்ளை:6 59/1
பெரும் தேன் இறைக்கும் நறை கூந்தல் பிடியே வருக முழு ஞான பெருக்கே வருக பிறை மௌலி பெம்மான் முக்கண் சுடர்க்கு இடு நல் – மீனாட்சிபிள்ளை:6 62/1
பிழியும் நறை கற்பகம் மலர்ந்த பிரச மலர் பூந்துகள் மூழ்கும் பிறை கோட்டு அயிராவதம் கூந்தல் பிடியோடு ஆட தேன் அருவி – மீனாட்சிபிள்ளை:9 89/3
அம் கண் நெடு நிலம் விடர்பட கிழித்து ஓடு வேர் அடியில் பழுத்த பலவின் அளி பொன் சுளை குட கனி உடைந்து ஊற்று தேன் அருவி பிலம் ஏழும் முட்டி – மீனாட்சிபிள்ளை:10 96/3
வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு – மீனாட்சிபிள்ளை:10 99/2

மேல்

தேனொடு (1)

அன்பர் என்பு உருக கசிந்திடு பசும் தேனொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 68/4

மேல்