வி – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விக்கிட 1
விசும்பில் 3
விசும்பினில் 1
விசும்புற 1
விசைந்து 1
விசையினில் 1
விசையினின் 1
விட்டத்து 1
விட்டு 2
விட 1
விடம் 1
விடர்பட 1
விடு 2
விடுத்த 2
விடுத்து 1
விடுப்ப 1
விடும் 3
விடை 5
விடைக்கு 1
விடையவர் 1
விண் 8
விண்ட 3
விண்டு 2
விண்ணம் 1
விண்ணரசு 1
விண்ணவர்கள் 1
விண்ணில் 1
விண்தலம் 1
விண்புலம் 1
வித்திய 1
வித்து 2
வித்துருமத்தில் 1
வித்தே 1
விம்ம 1
விம்மிதமுமாய் 1
விம்மிய 1
விம்மு 1
விமானத்து 1
விமானமும் 1
வியப்ப 1
விரல் 3
விரி 8
விரிக்கும் 1
விரித்து 1
விரிந்த 2
விரிந்தால் 1
விரிந்திடு 1
விரிந்து 2
விரிப்ப 2
விரிய 2
விரியும் 7
விருத்தமாக 1
விருந்திடு 1
விருந்திடும் 5
விருந்து 2
விருந்துசெய 1
விருந்தே 1
விரும்பும் 1
விரை 6
விரைக்கும் 1
வில் 7
வில்லி 10
வில்லியார் 1
வில்லியை 1
வில்லொடு 1
விலங்கின் 1
விலாழி 1
விலாளியை 1
விலும் 1
விழி 3
விழிக்கடை 1
விழிக்கு 1
விழித்து 1
விழியும் 3
விழியொடும் 1
விழு 1
விழுங்கி 1
விழுங்கும் 1
விழுதுபட 1
விழுந்து 1
விளக்கம் 1
விளக்கு 1
விளக்கே 1
விளரி 1
விளிக்கும் 1
விளை 3
விளைக்கும் 1
விளைப்பதும் 1
விளைபுலம் 1
விளையாட்டு 2
விளையாடல் 2
விளையாடியும் 1
விளையாடு 2
விளையாடும் 6
விளையாடுவது 1
விளையும் 1
விளைவே 1

விக்கிட (1)

விண்தலம் பொலிய பொலிந்திடுதியேல் உனது வெம் பணி பகை விழுங்கி விக்கிட கக்கிட தொக்கு இடர்ப்படுதி வெயில் விரியும் சுடர் பரிதியின் – மீனாட்சிபிள்ளை:7 66/1

மேல்

விசும்பில் (3)

மீன் ஒழுகு மா இரு விசும்பில் செலும் கடவுள் வேழத்தின் மத்தகத்து வீற்றிருக்கும் சேயிழைக்கும் பசும் கமுகு வெண் கவரி வீசும் வாச – மீனாட்சிபிள்ளை:6 57/3
பைம் கண் சுரும்பு என விசும்பில் படர்ந்து எழும் பனி மதி மிசை தாவிடும் பருவ மட மான் என என் அம்மனை நின் அம்மனை படை விழி கயல் பாய்ந்து எழ – மீனாட்சிபிள்ளை:8 74/2
அம் கண் விசும்பில் நின் குழல் காட்டு அறுகால் சுரும்பர் எழுந்து ஆர்ப்பது ஐயன் திருமேனியில் அம்மை அருள் கண் சுரும்பு ஆர்த்து எழல் மான – மீனாட்சிபிள்ளை:9 88/2

மேல்

விசும்பினில் (1)

ஒளி தூங்கு தெளி விசும்பினில் நின்னொடு ஒத்தவன் ஒருத்தன் கரத்தின் வாரி உண்டு ஒதுக்கிய மிச்சில் நள் இருளில் அள்ளி உண்டு ஓடுகின்றாய் என் செய்தாய் – மீனாட்சிபிள்ளை:7 70/3

மேல்

விசும்புற (1)

கள் அவிழ் கோதை விசும்புற வீசுவ கண்_நுதல்-பால் செல நின் கையில் வளர்த்த பசும் கிளியும் வளர் காமர் கரும் குயிலும் – மீனாட்சிபிள்ளை:8 82/2

மேல்

விசைந்து (1)

வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு – மீனாட்சிபிள்ளை:10 99/2

மேல்

விசையினில் (1)

வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு – மீனாட்சிபிள்ளை:10 99/2

மேல்

விசையினின் (1)

விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின் விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழு குலை நெக்கு உகவும் – மீனாட்சிபிள்ளை:5 51/2

மேல்

விட்டத்து (1)

ஒள் ஒளிய பவள கொழும் கால் மிசை பொங்கும் ஒழுகு ஒளிய வயிர விட்டத்து ஊற்றும் செழும் தண் நிலா கால் விழுந்து அனைய ஒண் தரள வடம் வீக்கியே – மீனாட்சிபிள்ளை:10 93/1

மேல்

விட்டு (2)

போர் குன்று ஏறும் கரு முகிலை வெள் வாய் மள்ளர் பிணையலிடும் பொரு கோட்டு எருமை போத்தினொடும் பூட்டி அடிக்க இடி குரல் விட்டு
ஆர்க்கும் பழன தமிழ் மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள் சூல் கொண்ட அம் கயல் கண் அமுதே தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 27/3,4
நாள வட்ட தளிம நளினத்தொடும் துத்தி நாகணையும் விட்டு ஒர் எட்டு நாட்டத்தனும் பரம வீட்டத்தனும் துஞ்சும் நள் இருளின் நாப்பண் அண்ட – மீனாட்சிபிள்ளை:4 33/1

மேல்

விட (1)

குரு மணி வெயில் விட மரகத நிழல் விரி குன்றே நின்று ஊதும் குழல் இசை பழகிய மழை முகில் எழ எழு கொம்பே வெம் பாசம் – மீனாட்சிபிள்ளை:2 21/1

மேல்

விடம் (1)

குலத்தோடு தெய்வ குழாம் பிழிந்து ஊற்றி குடித்து சுவைத்து உமிழ்ந்த கோது என்றும் அழல் விடம் கொப்பளிக்கின்ற இரு கோளின் உச்சிட்டம் என்றும் – மீனாட்சிபிள்ளை:7 64/1

மேல்

விடர்பட (1)

அம் கண் நெடு நிலம் விடர்பட கிழித்து ஓடு வேர் அடியில் பழுத்த பலவின் அளி பொன் சுளை குட கனி உடைந்து ஊற்று தேன் அருவி பிலம் ஏழும் முட்டி – மீனாட்சிபிள்ளை:10 96/3

மேல்

விடு (2)

வெம் சூட்டு நெட்டு உடல் விரிக்கும் பட பாயல் மீமிசை துஞ்சும் நீலமேகத்தின் ஆகத்து விடு சுடர் படலை மணி மென் பரல் உறுத்த நொந்து – மீனாட்சிபிள்ளை:1 8/1
கமலன் முன்னிவிடும் அரச அன்னம் எழுகடலில் அன்னமுடன் நட்பு கை கூடவும் கரிய செம்மலொடும் இளைய செம்மல் விடு கருடன் மஞ்ஞையொடு ஒர் கட்சிக்குள் ஊடவும் – மீனாட்சிபிள்ளை:1 12/5

மேல்

விடுத்த (2)

ஊறும் கரட கடத்து முகந்து ஊற்றும் மத மா மடவியர்-நின்று உதறும் குழல் பூந்துகள் அடங்க ஓட விடுத்த குங்கும செம் – மீனாட்சிபிள்ளை:3 26/1
செழு மறை தெளிய வடித்த தமிழ் பதிகத்தோடே திருவருள் அமுது குழைத்து விடுத்த முலைப்பாலால் – மீனாட்சிபிள்ளை:4 42/1

மேல்

விடுத்து (1)

விழியும் சிவப்ப ஆனந்த வெள்ளம் பொழிந்து நின்றனையால் மீண்டும் பெருக விடுத்து அவற்கு ஓர் வேலை இடுதல் மிகை அன்றே – மீனாட்சிபிள்ளை:9 89/2

மேல்

விடுப்ப (1)

பிள்ளை வெள் ஓதிமமும் முறைமுறையால் பெருகிய காதலை மேல் பேச விடுப்ப கடுப்ப அணைத்து ஒரு பெடையோடு அரச அனம் – மீனாட்சிபிள்ளை:8 82/3

மேல்

விடும் (3)

கங்குல் மதம் கயம் மங்குல் அடங்க விடும் காமன் சேம கயல் குடிபுகும் ஒரு துகிலிகை என நின கண் போலும் சாயல் – மீனாட்சிபிள்ளை:2 22/3
திமிர கடல் புக வருணன் விடும் சுறவு அருணன் விடும் கடவுள் தேரின் உகண்டு எழ வார் வில் வழங்கு கொடும் கோல் செங்கோலா – மீனாட்சிபிள்ளை:4 39/2
திமிர கடல் புக வருணன் விடும் சுறவு அருணன் விடும் கடவுள் தேரின் உகண்டு எழ வார் வில் வழங்கு கொடும் கோல் செங்கோலா – மீனாட்சிபிள்ளை:4 39/2

மேல்

விடை (5)

விளையாடும் வைகை தடம் துறை குடைந்து புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 83/4
விரை பொங்கிட துங்க வேகவதி பொங்கு புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 84/4
விண் ஆறும் அளவளாய் விளையாடு புது வைகை வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 85/4
வீங்கு புனல் வைகை தடம் துறை குடைந்து புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 86/4
விளிக்கும் பெரும் தண் துறை கடவுள் வைகை நெடு வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 87/4

மேல்

விடைக்கு (1)

தார் கோல வேணியர் தம் உள்ளம் எனவே பொன் தடம் சிலையும் உருகி ஓட தண் மதி முடித்ததும் வெள் விடைக்கு ஒள் மணி தரித்ததும் விருத்தமாக – மீனாட்சிபிள்ளை:10 98/2

மேல்

விடையவர் (1)

செம் கண் விடையவர் மனமும் ஒக்க கரைந்து உருகு செய்கை அவர் சித்தமே பொன் திரு ஊசலா இருந்து ஆடுகின்றாய் எனும் செய்தியை எடுத்துரைப்ப – மீனாட்சிபிள்ளை:10 96/2

மேல்

விண் (8)

குமரி பொன்னி வைகை பொருநை நல் நதிகள் குதிகொள் விண் நதியின் மிக்கு குலாவவும் குவடு தென்மலையின் நிகரதின்மை சுரர் குடிகொள் பொன்மலை துதித்து பராவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/3
விண் அறா மதி முயல் கலை கிழிந்து இழி அமுத வெள் அருவி பாய வெடிபோய் மீளும் தகட்டு அகட்டு இளவாளை மோத முகை விண்டு ஒழுகும் முண்டக பூம் – மீனாட்சிபிள்ளை:2 17/3
விண் அளிக்கும் சுடர் விமானமும் பரநாத வெளியில் துவாதசாந்த வீடும் கடம்பு பொதி காடும் தடம் பணை விரிந்த தமிழ்நாடும் நெற்றிக்கண் – மீனாட்சிபிள்ளை:4 36/1
மின்னல் தடித்து கரும் பொன் தொடி கடைசி மெல்லியர் வெரீஇ பெயர வான் மீன் கணம் வெருக்கொள்ள வெடி வரால் குதிகொள்ளும் விண் புலம் விளை புலம் என – மீனாட்சிபிள்ளை:5 49/2
கலை தோடு மூடி களங்கம் பொதிந்திட்ட கயரோகி என்றும் ஒருநாள் கண்கொண்டு பார்க்கவும் கடவது அன்று எனவும் கடல் புவி எடுத்து இகழ விண்
புலத்து ஓடும் உடுமீன் கணத்தோடும் ஓடும் நின் போல்வார்க்கு மா பாதகம் போக்கும் இ தலம் அலது புகல் இல்லை காண் மிசை பொங்கு புனல் கற்பக காடு – மீனாட்சிபிள்ளை:7 64/2,3
விண் ஆறும் அளவளாய் விளையாடு புது வைகை வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 85/4
வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ் வண்ணமா செய்வது அ செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 86/2
கார் கொந்தள கோதை மடவியர் குழற்கு ஊட்டு கமழ் நறும் புகை விண் மிசை கை பரந்து எழுவது உரு மாறு இரவி மண்டலம் கைக்கொள இருள் படலம் வான் – மீனாட்சிபிள்ளை:10 97/3

மேல்

விண்ட (3)

பூ மரு வெடிப்ப முகை விண்ட தண்டலை ஈன்ற புனை நறும் தளிர்கள் கொய்தும் பொய்தல் பிணாக்களொடு வண்டல் கலம் பெய்து புழுதி விளையாட்டு அயர்ந்தும் – மீனாட்சிபிள்ளை:4 35/1
வண்டு படு முண்டக மனை குடிபுக சிவ மணம் கமழ விண்ட தொண்டர் மானத தட மலர் பொன் கோயில் குடிகொண்ட மாணிக்கவல்லி வில் வேள் – மீனாட்சிபிள்ளை:6 54/2
வெம் கண் கடும் கொலைய வேழ குழாம் இது என மேக குழாத்தை முட்டி விளையாடு மழ களிறு கடைவாய் குதட்ட முகை விண்ட அம்பு ஐந்து கோத்த – மீனாட்சிபிள்ளை:8 74/3

மேல்

விண்டு (2)

விண் அறா மதி முயல் கலை கிழிந்து இழி அமுத வெள் அருவி பாய வெடிபோய் மீளும் தகட்டு அகட்டு இளவாளை மோத முகை விண்டு ஒழுகும் முண்டக பூம் – மீனாட்சிபிள்ளை:2 17/3
கீற்று மதி என நிலவு தோற்று பருவத்தில் ஒளி கிளர் நுதல் செவ்வி வவ்வி கெண்டை தடம் கணார் எரு இட்டு இறைஞ்ச கிடந்ததும் உடைந்து அமுதம் விண்டு
ஊற்று புது வெண் கலை உடுத்து முழுமதி என உதித்த அமையத்தும் அம்மை ஒண் முகத்து ஒழுகு திரு அழகை கவர்ந்துகொண்டு ஓடினது நிற்க மற்றை – மீனாட்சிபிள்ளை:7 65/1,2

மேல்

விண்ணம் (1)

விண்ணம் பொதிந்த மேக படாம் மிசை தூக்கிய பல் மணி கொத்து விரிந்தால் என கால் நிமிர்ந்து தலை விரியும் குலை நெல் கற்றை பல – மீனாட்சிபிள்ளை:6 59/3

மேல்

விண்ணரசு (1)

கடவி விண்ணரசு நடவும் வெம் முனைய களிறு கைம்மலை செல் கொப்பத்து வீழவும் கனக மன்னு தட நளினி துன்னி இரு கமல மின்னும் ஒரு பத்மத்துள் மேவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/6

மேல்

விண்ணவர்கள் (1)

எழில் செய் தென்மதுரை தழைய மும் முலையொடு எழும் என் அம்மனை வனப்புக்கு ஒர் காவலர் இருவர் எண்மர் பதினொருவர் பன்னிருவர் எனும் அவ் விண்ணவர்கள் முப்பத்துமூவரே – மீனாட்சிபிள்ளை:1 12/8

மேல்

விண்ணில் (1)

விளரி மிழற்று அளி குமிறு குழல் கொடி வீசிய அம்மனை போய் விண்ணில் நிரைத்து எழுவது ககனம் திருமேனியது ஆனவருக்கு – மீனாட்சிபிள்ளை:8 80/1

மேல்

விண்தலம் (1)

விண்தலம் பொலிய பொலிந்திடுதியேல் உனது வெம் பணி பகை விழுங்கி விக்கிட கக்கிட தொக்கு இடர்ப்படுதி வெயில் விரியும் சுடர் பரிதியின் – மீனாட்சிபிள்ளை:7 66/1

மேல்

விண்புலம் (1)

மேக பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும் விண்புலம் விருந்து அரவும் வெள் அமுதம் வீசும் கரும் திரை பைம் துகில் விரித்து உடுத்து உத்தி விரியும் – மீனாட்சிபிள்ளை:1 6/1

மேல்

வித்திய (1)

அம் கண் நெடு ஞாலத்து வித்து இன்றி வித்திய அனைத்து உயிர்களும் தளிர்ப்ப அருள் மடை திறந்து கடை வெள்ளம் பெருக்கெடுத்து அலை எறிந்து உகள உகளும் – மீனாட்சிபிள்ளை:2 16/3

மேல்

வித்து (2)

அம் கண் நெடு ஞாலத்து வித்து இன்றி வித்திய அனைத்து உயிர்களும் தளிர்ப்ப அருள் மடை திறந்து கடை வெள்ளம் பெருக்கெடுத்து அலை எறிந்து உகள உகளும் – மீனாட்சிபிள்ளை:2 16/3
விருந்தே வருக மும்முதற்கும் வித்தே வருக வித்து இன்றி விளைக்கும் பரமானந்தத்தின் விளைவே வருக பழ மறையின் – மீனாட்சிபிள்ளை:6 62/2

மேல்

வித்துருமத்தில் (1)

வித்துருமத்தில் இழைத்தவும் நின் கை விரல் பவள தளிரின் விளை தரும் ஒள் ஒளி திருட போவதும் மீள்வதுமாய் திரிய – மீனாட்சிபிள்ளை:8 79/3

மேல்

வித்தே (1)

விருந்தே வருக மும்முதற்கும் வித்தே வருக வித்து இன்றி விளைக்கும் பரமானந்தத்தின் விளைவே வருக பழ மறையின் – மீனாட்சிபிள்ளை:6 62/2

மேல்

விம்ம (1)

குமரர் முன் இருவர் அமரர் அன்னை இவள் குமரி இன்னமும் என சித்தர் பாடவும் குரவை விம்ம அரமகளிர் மண்ணில் எழில் குலவு கன்னியர்கள் கைக்கு ஒக்க ஆடவும் – மீனாட்சிபிள்ளை:1 12/4

மேல்

விம்மிதமுமாய் (1)

மெய்வந்த நாணினொடு நுதல் வந்து எழும் குறுவெயர்ப்பினொடு உயிர்ப்பு வீங்கும் விம்மிதமுமாய் நின்ற உயிர் ஓவம் என ஊன்று வில் கடை விரல் கடை தழீஇ – மீனாட்சிபிள்ளை:4 34/3

மேல்

விம்மிய (1)

வளர் ஒளி விம்மிய அம்மனை செல்வது வானவில் ஒத்திடவும் மனன் நெக்கு உருக பரமானந்தம் மடுத்த திருத்தொண்டர்க்கு – மீனாட்சிபிள்ளை:8 80/3

மேல்

விம்மு (1)

மாற்றவளொடும் கேள்வர் மௌலியில் உறைந்ததும் மறந்து உனை அழைத்த பொழுதே மற்று இவள் பெரும் கருணை சொற்றிட கடவதோ மண் முழுதும் விம்மு புயம் வைத்து – மீனாட்சிபிள்ளை:7 65/3

மேல்

விமானத்து (1)

மணி கொண்ட நெடு நேமி வலயம் சுமந்து ஆற்று மாசுண சூட்டு மோட்டு மால் களிறு பிடர் வைத்த வளர் ஒளி விமானத்து வால் உளை மடங்கல் தாங்கும் – மீனாட்சிபிள்ளை:1 2/1

மேல்

விமானமும் (1)

விண் அளிக்கும் சுடர் விமானமும் பரநாத வெளியில் துவாதசாந்த வீடும் கடம்பு பொதி காடும் தடம் பணை விரிந்த தமிழ்நாடும் நெற்றிக்கண் – மீனாட்சிபிள்ளை:4 36/1

மேல்

வியப்ப (1)

வெயரா மனம் புழுங்கிடும் அமரர் தச்சனும் வியப்ப செயும் தவள மா மேடையும் தண் தரள மாடமும் தெள் நிலா வீச திசைக்களிறு எலாம் – மீனாட்சிபிள்ளை:8 78/3

மேல்

விரல் (3)

மெய்வந்த நாணினொடு நுதல் வந்து எழும் குறுவெயர்ப்பினொடு உயிர்ப்பு வீங்கும் விம்மிதமுமாய் நின்ற உயிர் ஓவம் என ஊன்று வில் கடை விரல் கடை தழீஇ – மீனாட்சிபிள்ளை:4 34/3
வித்துருமத்தில் இழைத்தவும் நின் கை விரல் பவள தளிரின் விளை தரும் ஒள் ஒளி திருட போவதும் மீள்வதுமாய் திரிய – மீனாட்சிபிள்ளை:8 79/3
வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு – மீனாட்சிபிள்ளை:10 99/2

மேல்

விரி (8)

பகரும் இசை திசை பரவ இருவர்கள் பயிலும் இயல் தெரி வெள் வளை தோட்டினர் பசிய அறுகொடு வெளிய நில விரி பவள வனம் அடர் பல் சடை காட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/3
பொழியும் தரங்க கங்கை விரை புனல் கால் பாய்ச்ச தழைந்து விரி புவனம் தனி பூத்து அருள் பழுத்த பொன் அம் கொடியை புரக்க வழிந்து – மீனாட்சிபிள்ளை:1 7/2
பஞ்சு ஊட்டு சீறடி பதைத்தும் அதன் வெம் கதிர் படும் இளவெயிற்கு உடைந்தும் பைம் துழாய் காடு விரி தண் நிழல் ஒதுங்கும் ஒர் பசுங்கொடியை அஞ்சலிப்பாம் – மீனாட்சிபிள்ளை:1 8/2
கிள்ளைக்கு மழலை பசும் குதலை ஒழுகு தீம் கிளவியும் களி மயிற்கு கிளர் இளம் சாயலும் நவ்விக்கு நோக்கும் விரி கிஞ்சுக சூட்டு அரசு அன – மீனாட்சிபிள்ளை:1 9/3
குரு மணி வெயில் விட மரகத நிழல் விரி குன்றே நின்று ஊதும் குழல் இசை பழகிய மழை முகில் எழ எழு கொம்பே வெம் பாசம் – மீனாட்சிபிள்ளை:2 21/1
காரில் பொழி மழை நீரில் சுழி எறி கழியில் சிறு குழியில் கரையில் கரை பொரு திரையில் தலை விரி கண்டலில் வண்டலின் நெற்போரில் – மீனாட்சிபிள்ளை:3 28/1
விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின் விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழு குலை நெக்கு உகவும் – மீனாட்சிபிள்ளை:5 51/2
நிரை பொங்கிடும் செம் கை வெள் வளை கலிப்ப நகை நிலவு விரி பவளம் வெளிற நீல கருங்குவளை செங்குவளை பூப்ப அறல் நெறி குழல் கற்றை சரிய – மீனாட்சிபிள்ளை:9 84/1

மேல்

விரிக்கும் (1)

வெம் சூட்டு நெட்டு உடல் விரிக்கும் பட பாயல் மீமிசை துஞ்சும் நீலமேகத்தின் ஆகத்து விடு சுடர் படலை மணி மென் பரல் உறுத்த நொந்து – மீனாட்சிபிள்ளை:1 8/1

மேல்

விரித்து (1)

மேக பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும் விண்புலம் விருந்து அரவும் வெள் அமுதம் வீசும் கரும் திரை பைம் துகில் விரித்து உடுத்து உத்தி விரியும் – மீனாட்சிபிள்ளை:1 6/1

மேல்

விரிந்த (2)

தே மரு பசும் கிள்ளை வைத்து முத்தாடியும் திரள் பொன் கழங்கு ஆடியும் செயற்கையான் அன்றியும் இயற்கை சிவப்பு ஊறு சே இதழ் விரிந்த தெய்வ – மீனாட்சிபிள்ளை:4 35/3
விண் அளிக்கும் சுடர் விமானமும் பரநாத வெளியில் துவாதசாந்த வீடும் கடம்பு பொதி காடும் தடம் பணை விரிந்த தமிழ்நாடும் நெற்றிக்கண் – மீனாட்சிபிள்ளை:4 36/1

மேல்

விரிந்தால் (1)

விண்ணம் பொதிந்த மேக படாம் மிசை தூக்கிய பல் மணி கொத்து விரிந்தால் என கால் நிமிர்ந்து தலை விரியும் குலை நெல் கற்றை பல – மீனாட்சிபிள்ளை:6 59/3

மேல்

விரிந்திடு (1)

நின்றிலன் ஓடலும் முன்னழகும் அவன் பின்னழகும் காணா நிலவு விரிந்திடு குறுநகை கொண்டு நெடும் கயிலை கிரியின் – மீனாட்சிபிள்ளை:4 40/2

மேல்

விரிந்து (2)

பண் அறா வரி மிடற்று அறுகால் மடுப்ப பசும் தேறல் ஆறு அலைக்கும் பதும பீடிகையும் முது பழ மறை விரிந்து ஒளி பழுத்த செம் நாவும் இமையா – மீனாட்சிபிள்ளை:2 17/1
திருநுதல் மீது எழுகுறு வெயர்வு ஆட தெய்வ மணம் கமழும் திருமேனியின் முழு மரகத ஒளி எண் திக்கும் விரிந்து ஆட – மீனாட்சிபிள்ளை:2 20/2

மேல்

விரிப்ப (2)

பண் நாறு கிளி மொழி பாவை நின் திருமேனி பாசொளி விரிப்ப அம் தண் பவள கொடி காமர் பச்சிளம் கொடியதாய் பரு முத்தம் மரகதமதாய் – மீனாட்சிபிள்ளை:9 85/1
சொல் பொலி பழம் பாடல் சொல்லுகின்றவளும் நின் சொருபம் என்பதும் இளநிலா தூற்று மதி மண்டலத்து அமுதமாய் அம்மை நீ தோன்றுகின்றதும் விரிப்ப
எல் பொலிய ஒழுகு முழு மாணிக்க மணி முகப்பு ஏறி மழை முகில் தவழ்வது அவ் எறி சுடர் கடவுள் திருமடியில் அவன் மட மகள் இருந்து விளையாடல் ஏய்க்கும் – மீனாட்சிபிள்ளை:10 94/2,3

மேல்

விரிய (2)

தெள் நிலா விரிய நின்று ஆடும் பசும் தோகை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 14/4
கொள்ளை வெள் அருவி படிந்திடும் இமய கூந்தல் மட பிடி போல் கொற்கை துறையில் சிறை விரிய புனல் குடையும் அன பெடை போல் – மீனாட்சிபிள்ளை:9 92/1

மேல்

விரியும் (7)

மேக பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும் விண்புலம் விருந்து அரவும் வெள் அமுதம் வீசும் கரும் திரை பைம் துகில் விரித்து உடுத்து உத்தி விரியும்
நாகத்து மீ சுடிகை நடுவண் கிடந்த மட நங்கையை பெற்று மற்று அ நாகணை துஞ்சு தன் தந்தைக்கு உவந்து உதவு நளின குழந்தை காக்க – மீனாட்சிபிள்ளை:1 6/1,2
மஞ்சு ஊட்டு அகட்டு நெடு வான் முகடு துருவும் ஒரு மறை ஓதிமம் சலிக்க மறி திரை சிறை விரியும் ஆயிர முக கடவுள் மந்தாகினி பெயர்த்த – மீனாட்சிபிள்ளை:1 8/3
பண் உலாம் வடி தமிழ் பைம் தாமம் விரியும் பணை தோள் எருத்தம் ஏறி பாசொளிய மரகத திருமேனி பச்சை பசும் கதிர் ததும்ப மணி வாய் – மீனாட்சிபிள்ளை:2 14/3
வீக்கும் சிறு பைம் துகில் தோகை விரியும் கலாபம் மருங்கு அலைப்ப விளையாட்டு அயரும் மணல் சிற்றில் வீட்டு குடிபுக்கு ஓட்டி இருள் – மீனாட்சிபிள்ளை:3 24/1
முருகு விரியும் செம் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 44/4
விண்ணம் பொதிந்த மேக படாம் மிசை தூக்கிய பல் மணி கொத்து விரிந்தால் என கால் நிமிர்ந்து தலை விரியும் குலை நெல் கற்றை பல – மீனாட்சிபிள்ளை:6 59/3
விண்தலம் பொலிய பொலிந்திடுதியேல் உனது வெம் பணி பகை விழுங்கி விக்கிட கக்கிட தொக்கு இடர்ப்படுதி வெயில் விரியும் சுடர் பரிதியின் – மீனாட்சிபிள்ளை:7 66/1

மேல்

விருத்தமாக (1)

தார் கோல வேணியர் தம் உள்ளம் எனவே பொன் தடம் சிலையும் உருகி ஓட தண் மதி முடித்ததும் வெள் விடைக்கு ஒள் மணி தரித்ததும் விருத்தமாக
கார் கோல நீல கரும் களத்தோடு ஒருவர் செங்களத்து ஏற்று அலமர கண் கணை துரக்கும் கரும் புருவ வில்லொடு ஒரு கை வில் குனித்து நின்ற – மீனாட்சிபிள்ளை:10 98/2,3

மேல்

விருந்திடு (1)

முகர களி வண்டு அடைகிடக்கும் முளரி கொடிக்கும் கலை கொடிக்கும் முருந்து முறுவல் விருந்திடு புன்மூரல் நெடு வெண் நிலவு எறிப்ப – மீனாட்சிபிள்ளை:6 60/3

மேல்

விருந்திடும் (5)

மூல தலத்து முளைத்த முழுமுதலே முத்தம் தருகவே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 43/4
முருகு விரியும் செம் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 44/4
முழுதும் தருவாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 45/4
முத்தம் உகந்த நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 46/4
மூடும் குழலாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 47/4

மேல்

விருந்து (2)

மேக பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும் விண்புலம் விருந்து அரவும் வெள் அமுதம் வீசும் கரும் திரை பைம் துகில் விரித்து உடுத்து உத்தி விரியும் – மீனாட்சிபிள்ளை:1 6/1
கிளை ஆடு நின் திரு கேசபாரத்தினொடு கிளர் சைவல கொத்து எழ கிடையாத புது விருந்து எதிர்கொண்டு தத்தம் இல் கேளிர்கள் தழீஇக்கொண்டு என – மீனாட்சிபிள்ளை:9 83/2

மேல்

விருந்துசெய (1)

வில் கொடி கோட்டிய குங்குமமும் குடை வெள்ளம் கொள்ளைகொள வெளியே கண்டு நின் வடிவழகு ஐயன் விழிக்கு விருந்துசெய
இல்_கொடியோடு கயல் கொடி வீரன் எடுத்த கருப்பு விலும் இந்திர தனுவும் வணங்க வணங்கும் இணை புருவ கொடி சேர் – மீனாட்சிபிள்ளை:9 91/2,3

மேல்

விருந்தே (1)

விருந்தே வருக மும்முதற்கும் வித்தே வருக வித்து இன்றி விளைக்கும் பரமானந்தத்தின் விளைவே வருக பழ மறையின் – மீனாட்சிபிள்ளை:6 62/2

மேல்

விரும்பும் (1)

வெள்ளி தகட்டு நெட்டு ஏடு அவிழ்த்து இன் இசை விரும்பும் சுரும்பர் பாட விளை நறவு கக்கும் பொலன் பொகுட்டு அலர் கமல வீட்டு கொழித்து எடுத்து – மீனாட்சிபிள்ளை:1 9/1

மேல்

விரை (6)

மகரம் எறி கடல் அமுதை அமுது உகு மழலை பழகிய கிள்ளையை பேட்டு அனம் மடவ நடை பயில் பிடியை விரை செறி வரை செய் புய மிசை வையம் வைத்து ஆற்றிய – மீனாட்சிபிள்ளை:1 3/7
பொழியும் தரங்க கங்கை விரை புனல் கால் பாய்ச்ச தழைந்து விரி புவனம் தனி பூத்து அருள் பழுத்த பொன் அம் கொடியை புரக்க வழிந்து – மீனாட்சிபிள்ளை:1 7/2
விரை பொங்கிட துங்க வேகவதி பொங்கு புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 84/4
வெறி குங்கும சேறு எக்கரிடும் விரை பூம் துறை மண் பெறின் ஒருத்தி வெண் பிட்டு இடவும் அடித்து ஒருவன் வேலை கொளவும் வேண்டும் என – மீனாட்சிபிள்ளை:9 90/2
சொல்_கொடியோடு மலர்_கொடி கொய்து தொடுத்த விரை தொடையும் சுந்தரி தீட்டிய சிந்துரமும் இரு துங்க கொங்கைகளின் – மீனாட்சிபிள்ளை:9 91/1
மின் செய்த சாயலவர் மேல் தலத்து ஆடிய விரை புனலின் அருவி குடையும் வெள் ஆனை குங்கும செம் சேறு நாற மட மென் பிடியை அஞ்சி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:10 101/3

மேல்

விரைக்கும் (1)

விரைக்கும் தளிர் கை கொழும் தாமரை துஞ்சி மீது எழுந்து ஆர்த்த பிள்ளை வெள் ஓதிம திரள் இது எனவும் கரும் பாறை மீமிசை செஞ்சாந்து வைத்து – மீனாட்சிபிள்ளை:8 73/3

மேல்

வில் (7)

சிகர வடவரை குனிய நிமிர்தரு செருவில் ஒரு பொரு வில் என கோட்டினர் செடி கொள் பறி தலை அமணர் எதிரெதிர் செல ஒர் மதலை சொல் வைகையில் கூட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/1
மெய்வந்த நாணினொடு நுதல் வந்து எழும் குறுவெயர்ப்பினொடு உயிர்ப்பு வீங்கும் விம்மிதமுமாய் நின்ற உயிர் ஓவம் என ஊன்று வில் கடை விரல் கடை தழீஇ – மீனாட்சிபிள்ளை:4 34/3
திமிர கடல் புக வருணன் விடும் சுறவு அருணன் விடும் கடவுள் தேரின் உகண்டு எழ வார் வில் வழங்கு கொடும் கோல் செங்கோலா – மீனாட்சிபிள்ளை:4 39/2
வண்டு படு முண்டக மனை குடிபுக சிவ மணம் கமழ விண்ட தொண்டர் மானத தட மலர் பொன் கோயில் குடிகொண்ட மாணிக்கவல்லி வில் வேள் – மீனாட்சிபிள்ளை:6 54/2
வில் கொடி கோட்டிய குங்குமமும் குடை வெள்ளம் கொள்ளைகொள வெளியே கண்டு நின் வடிவழகு ஐயன் விழிக்கு விருந்துசெய – மீனாட்சிபிள்ளை:9 91/2
வில் பொலிய நிலவு பொழி வெண் நித்திலம் பூண்டு விழுதுபட மழ கதிர்விடும் வெண் தரள ஊசலின் மிசை பொலிவ புண்டரிக வீட்டில் பொலிந்து மதுர – மீனாட்சிபிள்ளை:10 94/1
கார் கோல நீல கரும் களத்தோடு ஒருவர் செங்களத்து ஏற்று அலமர கண் கணை துரக்கும் கரும் புருவ வில்லொடு ஒரு கை வில் குனித்து நின்ற – மீனாட்சிபிள்ளை:10 98/3

மேல்

வில்லி (10)

அண்டு படு சீர் இது அன்று ஆதலால் இவளுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 63/4
அலைத்து ஓடு வைகை துறைப்படி மட பிடியொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 64/4
ஆற்று முடி அரசு உதவும் அரசிளங்குமரியுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 65/4
அண்ட பகிரண்டமும் அகண்டமும் பெறுதியால் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 66/4
அண்ணல் அம் களி யானை அரசர் கோமகளுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 67/4
அன்பர் என்பு உருக கசிந்திடு பசும் தேனொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 68/4
அம்பு அஞ்சுடன் கொண்ட மகர கொடி கொடியொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 69/4
அளி தூங்கு ஞிமிறு எழுந்து ஆர்க்கும் குழல் திருவொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 70/4
அழைக்கும் தடம் புரிசை மதுரை துரைப்பெணுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 71/4
ஆடக பொற்கிழி அவிழ்க்கும் மதுரை திருவொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 72/4

மேல்

வில்லியார் (1)

வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ் வண்ணமா செய்வது அ செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 86/2

மேல்

வில்லியை (1)

பொய்வந்த நுண் இடை நுடங்க கொடிஞ்சி பொலம் தேரொடு அமரகத்து பொன் மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்று அம்மை பொம்மல் முலை மூன்றில் ஒன்று – மீனாட்சிபிள்ளை:4 34/1

மேல்

வில்லொடு (1)

கார் கோல நீல கரும் களத்தோடு ஒருவர் செங்களத்து ஏற்று அலமர கண் கணை துரக்கும் கரும் புருவ வில்லொடு ஒரு கை வில் குனித்து நின்ற – மீனாட்சிபிள்ளை:10 98/3

மேல்

விலங்கின் (1)

தம்பம் சுமந்து ஈன்ற மானுட விலங்கின் தனி புதல்வனுக்கு வட்ட தண் குடை நிழற்று நினை வம் என அழைத்தனள் தழைத்திடு கழை கரும்பு ஒன்று – மீனாட்சிபிள்ளை:7 69/3

மேல்

விலாழி (1)

ஏறு பொரு வேல் இளைஞர் கடவு இவுளி கடைவாய் குதட்ட வழிந்து இழியும் விலாழி குமிழி எறிந்து இரைத்து திரைத்து நுரைத்து ஒரு பேர் – மீனாட்சிபிள்ளை:3 26/3

மேல்

விலாளியை (1)

குன்ற_விலாளியை வென்ற தடாதகை கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 40/4

மேல்

விலும் (1)

இல்_கொடியோடு கயல் கொடி வீரன் எடுத்த கருப்பு விலும் இந்திர தனுவும் வணங்க வணங்கும் இணை புருவ கொடி சேர் – மீனாட்சிபிள்ளை:9 91/3

மேல்

விழி (3)

இகல் விழி மகரமும் அ மகரம் பொரும் இரு மகரமும் ஆட இடு நூபுர அடி பெயர கிண்கிண் எனும் கிண்கிணி ஆட – மீனாட்சிபிள்ளை:2 18/2
பைம் கண் சுரும்பு என விசும்பில் படர்ந்து எழும் பனி மதி மிசை தாவிடும் பருவ மட மான் என என் அம்மனை நின் அம்மனை படை விழி கயல் பாய்ந்து எழ – மீனாட்சிபிள்ளை:8 74/2
முத்தம் அழுத்திய அம்மனை கைம் மலர் முளரி மணம் கமழ மொய் குழல் வண்டு நின் மை விழி வண்டின் முயங்கி மயங்கியிட – மீனாட்சிபிள்ளை:8 79/1

மேல்

விழிக்கடை (1)

வெண் நிலவு பொழிவது கிடைத்தனை மடுத்து இவள் விழிக்கடை கொழித்த கருணை வெள்ளம் திளைத்து ஆடு பெற்றியால் தண் அளி விளைப்பதும் பெற்றனை-கொலாம் – மீனாட்சிபிள்ளை:7 67/2

மேல்

விழிக்கு (1)

வில் கொடி கோட்டிய குங்குமமும் குடை வெள்ளம் கொள்ளைகொள வெளியே கண்டு நின் வடிவழகு ஐயன் விழிக்கு விருந்துசெய – மீனாட்சிபிள்ளை:9 91/2

மேல்

விழித்து (1)

உள் ஊறு களி துளும்ப குரவர் இருவீரும் உற்றிடு துவாதசாந்தத்து ஒரு பெரு வெளிக்கே விழித்து உறங்கும் தொண்டர் உழுவல் அன்பு என்பு உருக நெக்கு – மீனாட்சிபிள்ளை:8 75/3

மேல்

விழியும் (3)

தகரம் ஒழுகிய குழலும் நிலவு உமிழ் தரள நகையும் எம் ஐயனை பார்த்து எதிர் சருவி அமர் பொரு விழியும் மறுகு இடை தளர வளர்வது ஒர் செவ்வி முற்றா கன – மீனாட்சிபிள்ளை:1 3/5
துளி தூங்கு தெள் அமுத வெள் அருவி பொழியும் நின் தொல் மரபு தழைய வந்து தோன்றிடும் கௌரியர் குலக்கொழுந்தை கண்டு துணை விழியும் மனமும் நின்று – மீனாட்சிபிள்ளை:7 70/1
விழியும் சிவப்ப ஆனந்த வெள்ளம் பொழிந்து நின்றனையால் மீண்டும் பெருக விடுத்து அவற்கு ஓர் வேலை இடுதல் மிகை அன்றே – மீனாட்சிபிள்ளை:9 89/2

மேல்

விழியொடும் (1)

அருள் விழியொடும் வளர் கருணை பொழிந்திட ஆடுக செங்கீரை அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை – மீனாட்சிபிள்ளை:2 20/4

மேல்

விழு (1)

விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின் விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழு குலை நெக்கு உகவும் – மீனாட்சிபிள்ளை:5 51/2

மேல்

விழுங்கி (1)

விண்தலம் பொலிய பொலிந்திடுதியேல் உனது வெம் பணி பகை விழுங்கி விக்கிட கக்கிட தொக்கு இடர்ப்படுதி வெயில் விரியும் சுடர் பரிதியின் – மீனாட்சிபிள்ளை:7 66/1

மேல்

விழுங்கும் (1)

மொய் வைத்த கொய் உளை வய புரவி-வாய் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான் முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனை கணை வடிம்பு நக்கா – மீனாட்சிபிள்ளை:5 48/2

மேல்

விழுதுபட (1)

வில் பொலிய நிலவு பொழி வெண் நித்திலம் பூண்டு விழுதுபட மழ கதிர்விடும் வெண் தரள ஊசலின் மிசை பொலிவ புண்டரிக வீட்டில் பொலிந்து மதுர – மீனாட்சிபிள்ளை:10 94/1

மேல்

விழுந்து (1)

ஒள் ஒளிய பவள கொழும் கால் மிசை பொங்கும் ஒழுகு ஒளிய வயிர விட்டத்து ஊற்றும் செழும் தண் நிலா கால் விழுந்து அனைய ஒண் தரள வடம் வீக்கியே – மீனாட்சிபிள்ளை:10 93/1

மேல்

விளக்கம் (1)

நத்தம் வளர அளகையர்_கோன் நகரில் வளரும் வான் மணியும் நளின பொகுட்டில் வீற்றிருக்கும் நங்கை மனைக்கு ஓர் விளக்கம் என – மீனாட்சிபிள்ளை:5 46/2

மேல்

விளக்கு (1)

சுற்று நெடு நேமி சுவர்க்கு இசைய எட்டு சுவர்க்கால் நிறுத்தி மேரு தூண் ஒன்று நடு நட்டு வெளி முகடு மூடி இரு சுடர் விளக்கு இட்டு முற்ற – மீனாட்சிபிள்ளை:2 15/1

மேல்

விளக்கே (1)

எடுக்கும் தொழும்பர் உள கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர் சிமய இமய பொருப்பில் விளையாடும் இள மென் பிடியே எறி தரங்கம் – மீனாட்சிபிள்ளை:6 61/2

மேல்

விளரி (1)

விளரி மிழற்று அளி குமிறு குழல் கொடி வீசிய அம்மனை போய் விண்ணில் நிரைத்து எழுவது ககனம் திருமேனியது ஆனவருக்கு – மீனாட்சிபிள்ளை:8 80/1

மேல்

விளிக்கும் (1)

விளிக்கும் பெரும் தண் துறை கடவுள் வைகை நெடு வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 87/4

மேல்

விளை (3)

வெள்ளி தகட்டு நெட்டு ஏடு அவிழ்த்து இன் இசை விரும்பும் சுரும்பர் பாட விளை நறவு கக்கும் பொலன் பொகுட்டு அலர் கமல வீட்டு கொழித்து எடுத்து – மீனாட்சிபிள்ளை:1 9/1
மின்னல் தடித்து கரும் பொன் தொடி கடைசி மெல்லியர் வெரீஇ பெயர வான் மீன் கணம் வெருக்கொள்ள வெடி வரால் குதிகொள்ளும் விண் புலம் விளை புலம் என – மீனாட்சிபிள்ளை:5 49/2
வித்துருமத்தில் இழைத்தவும் நின் கை விரல் பவள தளிரின் விளை தரும் ஒள் ஒளி திருட போவதும் மீள்வதுமாய் திரிய – மீனாட்சிபிள்ளை:8 79/3

மேல்

விளைக்கும் (1)

விருந்தே வருக மும்முதற்கும் வித்தே வருக வித்து இன்றி விளைக்கும் பரமானந்தத்தின் விளைவே வருக பழ மறையின் – மீனாட்சிபிள்ளை:6 62/2

மேல்

விளைப்பதும் (1)

வெண் நிலவு பொழிவது கிடைத்தனை மடுத்து இவள் விழிக்கடை கொழித்த கருணை வெள்ளம் திளைத்து ஆடு பெற்றியால் தண் அளி விளைப்பதும் பெற்றனை-கொலாம் – மீனாட்சிபிள்ளை:7 67/2

மேல்

விளைபுலம் (1)

விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின் விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழு குலை நெக்கு உகவும் – மீனாட்சிபிள்ளை:5 51/2

மேல்

விளையாட்டு (2)

வீக்கும் சிறு பைம் துகில் தோகை விரியும் கலாபம் மருங்கு அலைப்ப விளையாட்டு அயரும் மணல் சிற்றில் வீட்டு குடிபுக்கு ஓட்டி இருள் – மீனாட்சிபிள்ளை:3 24/1
பூ மரு வெடிப்ப முகை விண்ட தண்டலை ஈன்ற புனை நறும் தளிர்கள் கொய்தும் பொய்தல் பிணாக்களொடு வண்டல் கலம் பெய்து புழுதி விளையாட்டு அயர்ந்தும் – மீனாட்சிபிள்ளை:4 35/1

மேல்

விளையாடல் (2)

வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ் வண்ணமா செய்வது அ செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 86/2
எல் பொலிய ஒழுகு முழு மாணிக்க மணி முகப்பு ஏறி மழை முகில் தவழ்வது அவ் எறி சுடர் கடவுள் திருமடியில் அவன் மட மகள் இருந்து விளையாடல் ஏய்க்கும் – மீனாட்சிபிள்ளை:10 94/3

மேல்

விளையாடியும் (1)

காமரு மயில் குஞ்சு மட அன பார்ப்பினொடு புறவு பிறவும் வளர்த்தும் காந்தள் செங்கமலத்த கழுநீர் மணந்து என கண் பொத்தி விளையாடியும்
தே மரு பசும் கிள்ளை வைத்து முத்தாடியும் திரள் பொன் கழங்கு ஆடியும் செயற்கையான் அன்றியும் இயற்கை சிவப்பு ஊறு சே இதழ் விரிந்த தெய்வ – மீனாட்சிபிள்ளை:4 35/2,3

மேல்

விளையாடு (2)

வெம் கண் கடும் கொலைய வேழ குழாம் இது என மேக குழாத்தை முட்டி விளையாடு மழ களிறு கடைவாய் குதட்ட முகை விண்ட அம்பு ஐந்து கோத்த – மீனாட்சிபிள்ளை:8 74/3
விண் ஆறும் அளவளாய் விளையாடு புது வைகை வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 85/4

மேல்

விளையாடும் (6)

அடிபட்ட திருமேனி குழைய குழைத்திட்ட அணி மணி கிம்புரி கோடு ஆகத்தது ஆக கடம்பாடவிக்குள் விளையாடும் ஒர் மட பிடியையே – மீனாட்சிபிள்ளை:1 10/4
சிற்றில் விளையாடும் ஒரு பச்சிளம் பெண்பிள்ளை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 15/4
மூடும் ககன வெளி கூட முகடு திறந்து புறம் கோத்த முந்நீர் உழக்கி சின வாளை மூரி சுறவினோடும் விளையாடும்
பழன தமிழ் மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள் சூல் கொண்ட அம் கயல் கண் அமுதே தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 25/3,4
எடுக்கும் தொழும்பர் உள கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர் சிமய இமய பொருப்பில் விளையாடும் இள மென் பிடியே எறி தரங்கம் – மீனாட்சிபிள்ளை:6 61/2
விளையாடும் வைகை தடம் துறை குடைந்து புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 83/4
துங்க முலை பொன் குடம் கொண்டு தூ நீர் நீந்தி விளையாடும் துணை சேடியர்கள் மேல் பசும்பொன் சுண்ணம் எறிய அற சேந்த – மீனாட்சிபிள்ளை:9 88/1

மேல்

விளையாடுவது (1)

பெயராது இருந்து விளையாடுவது கண்டு எந்தை பிறை முடி துளக்க முடி மேல் பெருகு சுர கங்கை நுரை பொங்கல் அம்மானை அ பெண்கொடியும் ஆடல் மான – மீனாட்சிபிள்ளை:8 78/2

மேல்

விளையும் (1)

கன்னல் பெரும் காடு கற்பக காட்டு வளர் கடவுள் மா கவளம் கொள காமதேனுவும் நின்று கடைவாய் குதட்ட கதிர் குலை முதிர்ந்து விளையும்
செந்நெல் படப்பை மதுரை பதி புரப்பவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 49/3,4

மேல்

விளைவே (1)

விருந்தே வருக மும்முதற்கும் வித்தே வருக வித்து இன்றி விளைக்கும் பரமானந்தத்தின் விளைவே வருக பழ மறையின் – மீனாட்சிபிள்ளை:6 62/2

மேல்